என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 17 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 2 of 5]
தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 2 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
முன்கதை முடிந்த இடம்:

“காஃபி, டீ, பூஸ்டு, போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ்,  க்ரேப் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் ...... என்ன சாப்பிடுகிறீர்கள்?” தூத்பேடாக்கள், வறுத்த முந்திரிகள், ஸ்பெஷல் மிக்சர், ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கட்டுகள் முதலியன நிறைந்த தட்டொன்றை டீப்பாயுடன் சுமதி அருகில் நகர்த்தியவாறு கேட்டான், சுந்தர்.

“நோ ... தாங்க்ஸ் .... குடிக்க தண்ணீர் மட்டும் போதும்”

ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்து சுமதியிடம் சுந்தர் நீட்ட இருவர் மனதிலும் ஏதோ ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது.

=====================================

தொடர்ச்சி இப்போது இங்கே ......


“வாம்மா; நான் தான் மரகதம் ..... என் வீட்டுக்காரர் நாடுநாடாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய பிஸினஸ்மேன். குடும்ப விஷயங்களிலெல்லாம் தலையிட அவருக்கு நேரமே கிடையாது. இவன் என் ஒரே மகன் சுந்தர் ..... இவன் தான் எனக்கே தெரியாமல், அந்த விளம்பரம் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி, முரட்டு நாற்காலி ஒன்று நிரம்பி வழியுமாறு கும்மென்று உட்கார்ந்து கொண்டாள் மரகதம். 

மரகதத்தைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து கைகூப்பி நின்ற சுமதியின் செயலால் மனதுக்குள் மகிழ்ந்த மரகதம் ”பரவாயில்லை ..... நீ உட்கார்ந்து கொள்” என்று சொல்லிவிட்டு, சுந்தரையும் வேறு ஒரு நாற்காலியில், வாயைத்திறக்காமல் அமைதியாக உட்காரும்படி, தன் ஒருமாதிரியான கண் அசைவுகளாலேயே உத்தரவு பிறப்பித்தாள், மரகதம்.

“உங்களுக்குப் பூர்வீகம் எந்த ஊரும்மா? சென்னையில் எவ்வளவு நாளா இருக்கீங்க?” சுமதியைப்பார்த்து மரகதம் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“எங்க அப்பா அம்மாவின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி பக்கம். ’ஆங்கரை’ கிராமம். ஆனால் நாங்கள் சென்னை வந்து 25 வருஷங்களுக்கு மேல் இருக்கும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், இதே சென்னையில் தான்” என்றாள் சுமதி.

இவள் பெற்றோர்களின் பூர்வீகம் திருச்சி என்று கேள்விப்பட்டதும் மரகதத்திற்கு சற்றே மகிழ்ச்சி ஏற்பட்டது. மரகதத்தின் பிறந்த வீடும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ’மணக்கால்’ என்ற கிராமம். 


திருச்சியிலிருந்து சுமதி சொன்ன ’ஆங்கரை’ என்ற கிராமத்தைத் தாண்டித்தான் ’லால்குடி’ வழியாக ‘மணக்கால்’ போக வேண்டும். 

சுமதி மேலும் தாமதிக்கவில்லை. தன்னைப்பற்றியும், தன் உத்யோகம் பற்றியும், தன் குடும்ப சூழ்நிலை பற்றியும், தாய், தந்தை, நான்கு தங்கைகள் முதலிய எல்லா விபரங்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தாள். 

“என் மகன், எனக்கே தெரியாமல், இப்படி ஒரு கேவலமான விளம்பரம் கொடுத்திருந்தும், ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்துள்ள நீ, எந்த தைர்யத்தில் இங்கே புறப்பட்டு வந்தாய்?” மரகதம் தன் முதல் அம்பைத் தொடுத்தாள்.

இவரைப்போன்ற சிலர், இன்றுள்ள சாதகமான சூழ்நிலையில், உண்மையை முழுவதுமாக மறைத்துக்கூட, மிகச்சுலபமாகத் திருமணம் செய்து கொள்ள நினைக்கலாம்; 


எந்தவொரு மருத்துவப் பரிசோதனைகளோ, மருத்துவச் சான்றிதழ்களோ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லாமலேயே, நம் நாட்டில் ஜாதகப் பொருத்தத்தையும், ஜோஸ்யர்கள் சொல்லும் பலன்களையும், கல்யாணத் தரகர்களின் வாய்ச்சவடால்களையும் மட்டுமே நம்பி, நிறைய திருமணங்கள் மிகச்சுலபமாக நடந்து முடிந்து விடுகின்றன;    


இதுபோன்ற ஏமாற்றும் உலகத்தில், இவர் தன் விளம்பரத்தில் உண்மையை உண்மையாக மறைக்காமல் ஒத்துக்கொண்டு கூறியிருந்தது, முதலில் என்னை மிகவும் கவர்ந்தது;  


மேலும் எயிட்ஸ் என்பது மிகவும் மெதுவாகப் பரவும் ஒரு ஆட்கொல்லி நோய். இன்றோ அல்லது நாளையோ கூட அதைப் பூரணமாக குணப்படுத்த நம் மருத்துவ விஞ்ஞானிகளால் மருந்து கண்டுபிடித்து விடக்கூடும். அந்த நம்பிக்கை எனக்கிருப்பதால், புறப்பட்டு வந்தேன்” என்றாள் சுமதி.

தனக்கு வரப்போகும் கணவன் ஒரு ஒழுக்கம் கெட்டவன் என்ற ”ஐ.எஸ்.ஐ.” முத்திரை உன்னை பாதிக்கவில்லையா?” மரகதத்திடமிருந்து பாய்ந்து வந்த இரண்டாவது அஸ்திரம் இது.

வயசுக்கோளாறினாலும், ஏதோவொரு ஆர்வக் கோளாறினாலும், கெட்ட நண்பர்களின் சேர்க்கையினாலும், அவர்களின் தவறான வழிகாட்டுதலாலும், சில ஆண்கள் அவசரப்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ இதுபோல, தவறான போகக்கூடாத இடங்களுக்குப் போய்விட்டு, தவறு என்றே தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, பின்னால் அதற்காக வருந்தி, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, மீண்டும் அதுபோல தவறுகள் செய்யாமல் திருந்தி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்;  


இவர்களின் இத்தகைய செயலை நான் நியாயப்படுத்துவதாக தயவுசெய்து எண்ண வேண்டாம்; 


மழைகாலத்தில் நாம் தெருவில் நடந்து போகும் போது கால் வழுக்கியோ கல் தடுக்கியோ தவறுதலாக சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்து விடுவது இல்லையா? அதுபோலத்தான் இதுவும்; 


தெரிந்தோ தெரியாமலோ நம் கை அல்லது கால் விரல்களால் அசிங்கத்தைத் தொட்டு விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்; 


அதற்காக அந்த அசிங்கத்தின் மேல் பட்ட நம் விரல்களை உடனே நாம் வெட்டி எறிந்து விடுகிறோமா!  ........   இல்லையே;


அதுபோலவே, இவர்களை நாம் ‘ஒழுக்கம் கெட்டவர்கள்’ என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. எதிர்பாராமல் நம்மை மீறி, நடந்து முடிந்து விட்ட இதை, ஒரு சிறிய விபத்து என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; 


இது போன்ற விபத்துக்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில அப்பாவிப் பெண்களுக்கும் கூட திருமணத்திற்கு முன்பே துரதிஷ்டவசமாக ஏற்பட்டு விடுவதுண்டு, அதை நாம் ஒரு கெட்ட கனவு போல மறந்து விடுவதே நல்லது” மிகத்தெளிவாகவே பேசினாள், சுமதி.

“நீ இவனை மணந்தால் உனக்கும், உனக்குப்பிறக்கும் குழந்தைக்கும் கூட இந்த வியாதி பரவக்கூடும் அல்லவா?” இந்தக்கேள்வி அவளை எப்படியும் வீழ்த்தி விடும் என எதிர்பார்த்தாள், மரகதம்.

”பாதுகாப்பாக இருந்தால் அதைப் பரவாமலும் தடுக்கலாம். மருத்துவ விஞ்ஞானம் இன்று நன்கு வளர்ந்து விட்டது. அது மேலும் மேலும் வளரவே செய்யும். எந்தப் பிரச்சனைக்கும் அது நல்லதொரு தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”

பக்குவமாகவும் மிகவும் மென்மையாகவும் அதற்கு விடையளித்தாள், சுமதி.

“இன்றைய சூழ்நிலையில் இவனுடைய ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பது உனக்கே தெரியும். ஒருவேளை, உன்னை மணந்தபின், இவன் அற்ப ஆயுளில் போய் விட்டால், உன் நிலைமையை எண்ணிப் பார்த்தாயா?” மரகதம் தொடர்ந்தாள்.

“அவரைப்பெற்ற தாயாராகிய உங்கள் வாயால் அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள் .... அம்மா! 


நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில்,  நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;  


மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;  


இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.


தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.


தொடரும்
     

[இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் 20.12.2011 
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும்]

61 கருத்துகள்:

 1. அன்பின் வை.கோ - அருமையாகச் செல்கிறது - விவாதம் நேர்மறையான பதில்கள் - எதிர் மறையான கேள்விகள் - யார் வெல்வார் - அனைவருக்குமே தெரியும். நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வை.கோ

  பூர்வீகம் பக்கம் என்றவுடன் ஒரு பாசம் வருகிறதே ! ஒவ்வொரு கேள்விக்கும் அசராமல் அழுத்தம் திருத்தமாக பதில் சொல்லும் அழகே அழகு. கோபமூட்டினால் கூட கோபப் படாமல் இருக்கும் சுமதியின் குண நலன் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர் மற்றும் மரகதத்தின் மனதை மாற்றும். பதில்களூடன் எடுத்துக்காட்டுகள் சேர்வது அழுத்தத்தை அதிகரிக்கிறது. சப்போர்ட்டிங் எக்ஸாம்பிள்ஸ் - தூள் கெளப்புறீங்க வை.கோ. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. ஸ்தம்பித்தது மரகதம் மட்டுமல்ல; படித்துக்கொண்டிருக்கும் எல்லோருமே; எங்கள் ஊர் பெயரை கதையில் கொண்டு வந்ததற்கு நன்றீ.

  பதிலளிநீக்கு
 4. நல்லபடி போகிறது. பாசிடிவாக செல்லும் பதில்களில் ஒரு பாய்ன்ட் குறைகிறது. எய்ட்ஸ் என்கிற ஆட்கொல்லி நோய் இவர்கள் செய்யும் தவறுகளால் மட்டும் பரவுவதில்லை. இவர்களே அறியாமல் சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் ரத்தம் ஏற்றிய வகையில் கூட வந்து விட வாய்ப்பிருக்கிறது. அதையும் சுமதி சேர்த்துச் சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். எனினும் நல்ல மெசேஜ் சொல்லும் கதையாக இருக்கும் இது என்பதில் ஐயமில்லை. வெளிப்படையாகப் பேசும் கேரக்டராக சுமதியைக் காட்டியிருப்பது நன்றாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விளக்கம்
  அத்துடன் இரத்தம் ஏற்றுக் கொள்ளுதல் முதலான
  விஷயங்களால் கூட வந்திருக்க்க் கூடும் அல்லவா
  கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அமைதியாகப் போகிறது. முடிவை இன்னும் யூகிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 7. கதை நல்லவிதமாகப் போகிறது.
  ஆயினும் ஸ்ரீராம் அவர்கள் சொன்னதுபோல் நானும் 'இரத்தம் ஏற்றுவதனாலும் எய்ட்ஸ் வரக்கூடும்,' என்பதைக் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 8. அண்ணே கதை நல்லா போயிட்டு இருக்கு தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 9. கதை களை கட்டத் துவங்கி விட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் எதையும் இக்காலத்தில் செய்வதில்லை. ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதையை நீங்கள் சொல்லும் போக்கிலேயே லயிக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. பூர்வீகமான ஊரின் பெயரைச் சொன்னாலே ஒரு பாசமும் பற்றும் மனதில் ஏற்படுவது இயற்கை. இதைக் கதையில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தவிர எய்ட்ஸ் என்பது கெட்டவர்களுக்கு மட்டுமே வருவதல்ல, சந்தர்ப்ப சூழ்‌நிலை சில நல்லவர்களுக்கும் அதைத் தந்துவிடும் என்ற வாதம் அழுத்தமாக இருந்தது. பிரச்சனைக்குரிய இந்த சப்ஜெக்ட்டை அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள் ஸார்... இனி என்ன நடக்கும் என்றறிய ஆவலுடன் தொடர்கிறேன் தங்களை... (த.ம.3)

  பதிலளிநீக்கு
 11. நளினியின் புகைப்படம் ஆரம்பத்திலே பார்த்துவிட்டதால் அந்த அம்மாவின் உரையாடல்களை நளினி பாவத்திலே பேசுவதாய் என் மனதில்கொண்டேன்.

  இதுவரை வந்த உங்கள் கதைகளில் இது புரட்சிக்கதையாகவே எனக்குத் தோன்றுகிறது.நடைமுறையில் சாத்தியமா என்று தோன்றினாலும் கதைதானே,கதையாசிரியரின் போக்கிலே போவோம்னு நினைத்தேன்.தொடருகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. நன்றாக இருந்தது..தொடர்கிறேன்..

  பதிலளிநீக்கு
 13. பூர்வீக கிராமத்தின் அழகை நல்லா சொல்லி இருக்கீங்க. கதை சுவாரசியமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 14. அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை; /

  விதிக்கப்பட்ட காலம் வரை வாழ்ந்தே தீர வேண்டிய இக்கட்டான கட்டாய்ம்..

  பதிலளிநீக்கு
 15. அருமை!
  தொடர்வோம்!


  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 16. மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; /

  தேடி வந்து தத்துவம் சொல்லி அகக்கண்களை திறக்க முயற்சிக்கும் தேவதை!!!

  பதிலளிநீக்கு
 17. இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி./

  அனுபவம் பேசுகிறது..

  பதிலளிநீக்கு
 18. இவள் பெற்றோர்களின் பூர்வீகம் திருச்சி என்று கேள்விப்பட்டதும் மரகதத்திற்கு சற்றே மகிழ்ச்சி ஏற்பட்டது. மரகதத்தின் பிறந்த வீடும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ’மணக்கால்’ என்ற கிராமம். /

  அவரவர் பிறந்த பூர்வீகம் சேர்ந்தவர்கள் என்றால் மனதில் மகிழ்ச்சி முகிழ்ப்பது தவிக்கமுடிவதில்லைதான்..

  பதிலளிநீக்கு
 19. எதிர்மறையான் கேள்விகளுக்கும் நேர்மறையான பதில்கள் விழிப்புணர்வு தரும் சிந்தனை.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 20. நீரோட்டம் போல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியுடன் அழ்காக கையாளும் கதையின் போக்கு வசீகரிக்கிறது.. பாராட்டுக்கள் ஐயா..

  பதிலளிநீக்கு
 21. //நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில், நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;
  அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;

  மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; //

  சுமதியின் பாத்திர படைப்பு அருமை.அவரது பேச்சை கேட்டு மரகதம் மட்டுமல்ல நாங்களும்தான் அசந்து போனோம்.

  அருமையாக நகர்கிறது கதை.

  பதிலளிநீக்கு
 22. கதை வித்தியாசமாக செல்கிறது .


  infectedஇரத்தம் ஏற்றுவதால் மட்டுமல்ல ,இங்கே லண்டனில் ஒரு நர்ஸ் எழுவருட போராட்டத்தின் பின் இன் நோய்க்கு பலியானார் .
  ஒரு நோயாளியிடமிருந்து பரிசோதனைக்காக இரத்தம் சேகரிக்கும்போது தவறி அந்த ஊசி இவர்மேல் விழுந்து ஆழ குத்தினதால் இவர் இந்நோய்க்கு
  பலியானார் .சம்பவம் 1999 ஆண்டு நடந்தது அவர் இறந்தது 2008

  பதிலளிநீக்கு
 23. கதைக்குள் சொல்லப்படும் கருத்துக்கள், உபயோகமான தகவல்கள் மேலும் மெருகூட்டுகிறது.

  //முரட்டு நாற்காலி ஒன்று நிரம்பி வழியுமாறு கும்மென்று உட்கார்ந்து கொண்டாள் மரகதம்.
  //

  நளினி படம் போட்டதுக்கு பொருத்தமா எழுதிருக்கீங்க. அழகா கும் ன்னு உக்காந்திருக்காங்க மரகதம். :))))

  பதிலளிநீக்கு
 24. //infectedஇரத்தம் ஏற்றுவதால் மட்டுமல்ல ,இங்கே லண்டனில் ஒரு நர்ஸ் எழுவருட போராட்டத்தின் பின் இன் நோய்க்கு பலியானார் .
  ஒரு நோயாளியிடமிருந்து பரிசோதனைக்காக இரத்தம் சேகரிக்கும்போது தவறி அந்த ஊசி இவர்மேல் விழுந்து ஆழ குத்தினதால் இவர் இந்நோய்க்கு
  பலியானார் .சம்பவம் 1999 ஆண்டு நடந்தது அவர் இறந்தது 2008

  //

  :( வருத்தாமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;


  இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.//

  சுமதி மூலம் நல்ல கருத்தை சொல்லி விட்டீர்கள்.

  கதை அருமையாக போகிறது.

  பதிலளிநீக்கு
 26. இருவரும் பேசிக் கொள்வதில் வந்து விழும் டயலாக்ஸ் உங்கள் கை வண்ணத்தில் அருமையாய் விழுகிறது.. டிவி சீரியல்காரர்கள் ஏன் உங்களை இன்னும் கவனிக்கவில்லை?

  பதிலளிநீக்கு
 27. இரண்டு பகுதிகளையும் ஒன்றாக படித்து முடித்தேன்....

  நல்ல விதமாய் சென்று கொண்டு இருக்கிறது கதை... அடுத்த பகுதிகள் என்ன சொல்லப்போகிறது பார்க்கலாம்....

  பதிலளிநீக்கு
 28. மரகதமும் சுமதியும் உரையாடும் வார்த்தைகளில் ஒழிந்திருக்கின்ற சமூக சீர்திருத்தப் பார்வையை உங்கள் எழுத்திலே கொண்டுவந்திருக்கின்ற முறை என்னைக் கவர்ந்தது. பிறருக்காக எம்மை நாமே தியாகம் செய்கின்ற தன்மையில் இருக்கின்ற சந்தோசம் வேறு எதிலுமே கிடைப்பதில்லை. விரைவாக தொடர் தந்தமைக்கும் தரப் போகின்றமைக்கும் மிக்க நன்றி சார்

  பதிலளிநீக்கு
 29. நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில், நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


  அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;


  மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை;//

  :-)

  ஆங்கிலீன் த‌க‌வ‌ல் அதிர்வாயும், அனுதாப‌ம் எழும்ப‌டியும். ச‌க்திபிரியா போல் நானும் 'கும்மென்று நிர‌ம்பிய‌தை' ர‌சித்தேன்.

  பதிலளிநீக்கு
 30. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ - அருமையாகச் செல்கிறது - விவாதம் நேர்மறையான பதில்கள் - எதிர் மறையான கேள்விகள் - யார் வெல்வார் - அனைவருக்குமே தெரியும். நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா//

  வணக்கம் ஐயா,

  இந்தப்பகுதிக்கு தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும்,மனம் திறந்து கூறிடும் நல் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள், ஐயா!

  தொடர்ந்து வாருங்கள், ஐயா!
  பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 31. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ

  பூர்வீகம் பக்கம் என்றவுடன் ஒரு பாசம் வருகிறதே ! ஒவ்வொரு கேள்விக்கும் அசராமல் அழுத்தம் திருத்தமாக பதில் சொல்லும் அழகே அழகு. கோபமூட்டினால் கூட கோபப் படாமல் இருக்கும் சுமதியின் குண நலன் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர் மற்றும் மரகதத்தின் மனதை மாற்றும். பதில்களூடன் எடுத்துக்காட்டுகள் சேர்வது அழுத்தத்தை அதிகரிக்கிறது. சப்போர்ட்டிங் எக்ஸாம்பிள்ஸ் - தூள் கெளப்புறீங்க வை.கோ. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  தங்களின் மீண்டும் வருகைக்கும், கடைசி வரியில் “தூள் கிளப்புறீங்க” என்று சொல்லியுள்ளதற்கும் மிக்க நன்றிகள், ஐயா.

  சப்போர்டிங் எக்ஸாம்பிள்ஸ் எல்லாமே எழுதிவரும் போது திடீரென்று 11th hour இல் என் மனதில் உதித்து தூள் கிளப்பிவிட்டது, ஐயா. எழுதியதும் எனக்கும் மன நிறைவாக இருந்தது. சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள், ஐயா.

  பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 32. @ Manakkal Sir
  @ ஸ்ரீராம்
  @ RAMANI Sir
  @ Dr.P.Kandaswamy Sir
  @ இமா
  @ விக்கியுலகம் Sir
  @ GMB Sir

  அனைவரின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  தொடர்ந்து வருகை தாருங்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 33. கணேஷ் said...
  //பூர்வீகமான ஊரின் பெயரைச் சொன்னாலே ஒரு பாசமும் பற்றும் மனதில் ஏற்படுவது இயற்கை. இதைக் கதையில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தவிர எய்ட்ஸ் என்பது கெட்டவர்களுக்கு மட்டுமே வருவதல்ல, சந்தர்ப்ப சூழ்‌நிலை சில நல்லவர்களுக்கும் அதைத் தந்துவிடும் என்ற வாதம் அழுத்தமாக இருந்தது. பிரச்சனைக்குரிய இந்த சப்ஜெக்ட்டை அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள் ஸார்... இனி என்ன நடக்கும் என்றறிய ஆவலுடன் தொடர்கிறேன் தங்களை... (த.ம.3)//

  அன்புள்ள ஐயா,

  தங்களின் ஆழ்ந்த வாசிப்பும், துல்லியமாக எடை போட்டுக் கூறியுள்ள மறுமொழிகளும் எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளன.

  பிரச்சனைக்குரிய சப்ஜெக்ட் தான் இதுவரை அருமையாக கையாண்டிருக்கிறீர்கள் என்று சொல்வதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, சார்.

  தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளதற்கும் மிக்க நன்றி, சார்.

  தொடர்ந்து வருகை தாருங்கள், சார்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 34. thirumathi bs sridhar said...
  //நளினியின் புகைப்படம் ஆரம்பத்திலே பார்த்துவிட்டதால் அந்த அம்மாவின் உரையாடல்களை நளினி பாவத்திலே பேசுவதாய் என் மனதில்கொண்டேன்.

  இதுவரை வந்த உங்கள் கதைகளில் இது புரட்சிக்கதையாகவே எனக்குத் தோன்றுகிறது.நடைமுறையில் சாத்தியமா என்று தோன்றினாலும் கதைதானே,கதையாசிரியரின் போக்கிலே போவோம்னு நினைத்தேன்.தொடருகிறேன்.//

  இந்தக் கதையில் வரும் கதாபாத்திரமாகிய மரகதம் எப்படியிருப்பார்கள் என்று வாசகர்களுக்கு உடனடியாகப் புரிய வேண்டுமே என்பதற்காகவே, நளினி அவர்களை கொண்டு வந்தேன்.

  [கம்பீரமான தோற்றத்துடனும், அழுத்தம் திருத்தமாகப் பேசியும், அற்புதமாக முகபாவங்கள் காட்டியும் பெரும்பாலும் வில்லியாக நடிக்கும் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.]

  தாங்கள் இதை உணர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 35. @ மதுமதி
  @ Lakshmi
  @ புலவர் சா. இராமான்நுசம் ஐயா
  @ ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி
  @ RAMVI
  @ கோமதி அரசு
  @ வெங்கட் நாகராஜ்
  @ சந்திரகெளரி
  @ நிலாமகள்


  அனைவரின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  தொடர்ந்து வருகை தாருங்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 36. இராஜராஜேஸ்வரி said...

  /விதிக்கப்பட்ட காலம் வரை வாழ்ந்தே தீர வேண்டிய இக்கட்டான கட்டாய்ம்../

  /தேடி வந்து தத்துவம் சொல்லி அகக்கண்களை திறக்க முயற்சிக்கும் தேவதை!!!/

  /அனுபவம் பேசுகிறது../

  /அவரவர் பிறந்த பூர்வீகம் சேர்ந்தவர்கள் என்றால் மனதில் மகிழ்ச்சி முகிழ்ப்பது தவிக்கமுடிவதில்லைதான்../

  /எதிர்மறையான் கேள்விகளுக்கும் நேர்மறையான பதில்கள் விழிப்புணர்வு தரும் சிந்தனை.. பாராட்டுக்கள்../

  /நீரோட்டம் போல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியுடன் அழ்காக கையாளும் கதையின் போக்கு வசீகரிக்கிறது.. பாராட்டுக்கள் ஐயா..//

  தங்களின் ஆறாவதான எனக்கு, ஆறு முறைகள் அடுத்தடுத்து வந்து, அழகிய செந்தாமரைகளை அள்ளித் தந்து, அற்புதமானக் கருத்துக்கள் கூறியுள்ளது, கதையின் போக்கு தங்களை வசீகரித்துள்ளது போலவே என்னையும் வசீகரிக்கத்தான் செய்கிறது.

  நன்றி, நன்றி, நன்றி,
  நன்றி, நன்றி, நன்றி.

  பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 37. Shakthiprabha said...
  //கதைக்குள் சொல்லப்படும் கருத்துக்கள், உபயோகமான தகவல்கள் மேலும் மெருகூட்டுகிறது.

  /முரட்டு நாற்காலி ஒன்று நிரம்பி வழியுமாறு கும்மென்று உட்கார்ந்து கொண்டாள் மரகதம்.
  /

  நளினி படம் போட்டதுக்கு பொருத்தமா எழுதிருக்கீங்க. அழகா கும் ன்னு உக்காந்திருக்காங்க மரகதம். :))))//

  அன்புள்ள ஷக்தி,

  இன்று (19.12.2011) முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  ’கும்’மென்ற என் வார்த்தையை
  ‘ஜம்’மென்று தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளது, என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது.

  உங்களின் தனிப்பட்ட இந்த ரசனை தான், உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்துள்ள விஷயமே. நன்றி.

  பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 38. ரிஷபன் said...
  //இருவரும் பேசிக் கொள்வதில் வந்து விழும் டயலாக்ஸ் உங்கள் கை வண்ணத்தில் அருமையாய் விழுகிறது..//

  மிக்க நன்றி, சார்.
  என் எல்லாப்புகழும் உங்களுக்கே!

  //டிவி சீரியல்காரர்கள் ஏன் உங்களை இன்னும் கவனிக்கவில்லை?//

  அவர்கள் ஜவ்வு மிட்டாய் போல் ஆயிரக்கணக்காக எபிசோட் இழுக்கும் ஆட்களைத்தான் இழுப்பார்கள், சார்.

  நான் எவ்வளவு தான் இழுத்தாலும், இது வரை 8 பாகங்களைத் தாண்டி என்னால் இழுக்க முடிய வில்லையே! அதனால் தானோ என்னவோ!!

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 39. angelin said...
  //கதை வித்தியாசமாக செல்கிறது.//

  மிக்க நன்றி, மேடம்.


  //infectedஇரத்தம் ஏற்றுவதால் மட்டுமல்ல,இங்கே லண்டனில் ஒரு நர்ஸ் எழுவருட போராட்டத்தின் பின் இன் நோய்க்கு பலியானார்.

  ஒரு நோயாளியிடமிருந்து பரிசோதனைக்காக இரத்தம் சேகரிக்கும்போது தவறி அந்த ஊசி இவர்மேல் விழுந்து ஆழ குத்தினதால் இவர் இந்நோய்க்கு
  பலியானார்.

  சம்பவம் 1999 ஆண்டு நடந்தது.
  அவர் இறந்தது 2008//

  கேட்கவே மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, மேடம்.

  அவருக்கு விதி, இப்படியா பாவம் அவர் உயிருடன் விளையாட வேண்டும்? ;(((((((

  பதிலளிநீக்கு
 40. கதை விறுவிறுப்பாக செல்கிறது. ஒருவேளை எய்ட்ஸ் இல்லாமல் நல்ல குணமுள்ள பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக இப்படி சும்மா விளம்பரம் கொடுத்திருப்பாரோ....என்று தோன்றுகிறது. பார்ப்போம் எப்படி கதையை கொண்டு போகிறீர்கள் என்று...
  த.ம - 7
  இண்ட்லி - 6

  பதிலளிநீக்கு
 41. @ கோவை2தில்லி said...
  கதை விறுவிறுப்பாக செல்கிறது.
  த.ம - 7; இண்ட்லி - 6

  அன்பான வருகைக்கும், விறுவிறுப்பான கருத்துக்களுக்கும், வோட் போட்டதற்கும் மிக்க நன்றி, மேடம். vgk

  பதிலளிநீக்கு
 42. அருமையான, பயனுள்ள பதிவு.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 43. Rathnavel said...
  அருமையான, பயனுள்ள பதிவு.
  நன்றி ஐயா./

  அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா. vgk

  பதிலளிநீக்கு
 44. சொந்த ஊர்ப் பாசம் திருச்சி, மணக்கால், ஆங்கரை என்று கதைகளிலும் தலை காட்டுகிறது. நல்லது. கதையின் அடுத்த பகுதிக்குச் செல்லுகிறேன்.

  பதிலளிநீக்கு
 45. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

  நம் இருவருக்குமே சொந்த ஊர் திருச்சி மாவட்டம் அல்லவா!
  அதனால் நம்மிடையேயும், எழுத்துலகில் வலைத்தளம் மூலம் இப்போது பாசம் வளர்ந்துள்ளது அல்லவா!!

  மகிழ்ச்சி!!!

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 46. சுமதியின் பண்புகள் கண்டிப்பா மரகதம் அம்மாளின் மனதை அசைத்திருக்கும்..பூர்வீகம் திருச்சி என்றதுமே மரகதம் அம்மாளின் மனசு கொஞ்சம் இலகுவாகி இருந்திருக்கு... பாசம் தானே? இந்த கதை கண்டிப்பா ஒரு கத்தி மேல் நடப்பது போன்ற கதை.. இதை அழகாக நகர்த்தி சென்ற விதம் அருமை அண்ணா....

  மரகதத்தின் கேள்விகள் ஒன்றொன்றும் சுமதியை வீழ்த்த துடித்த சக்ரவ்யூகம்... ஆனால் சுமதியின் பதில்கள் ஒவ்வொன்றும்...அற்புதம்... இந்த காலத்து பெண்களுக்கு ஏற்ற பாடம்....

  1. கேவலமான விளம்பரம் கொடுத்தும் எப்படி நீ தைரியமா வந்தே??

  அதுக்கு சுமதியின் பதில் எத்தனை அர்த்தம் பொதிந்தவை.. உண்மை தானே.. இப்ப இருக்கும் காலத்தில் எத்தனை பொய் சொல்லி கல்யாணத்தை முடிக்க பார்க்கிறாங்க... பொய் சொன்னாலே கல்யாணத்தில் எத்தனையோ கலாட்டாக்கள் நடக்கிறது... பிரச்சனைகள் வலுக்கிறது... கல்யாணம் நடப்பதே சில இடத்தில் சிம்ம சொப்பனமாகிவிடுகிறது. இந்த உலகத்தில் உண்மையை நேசிக்கும் ஒரு உயிர் கூடவா இருக்காது?? சுந்தரின் நம்பிக்கை வீண் போகலை... தனக்காக இல்லாமல் தன் குடும்பத்திற்காக தன்னை பலி கொடுப்பதாக நினைக்காமல் நிஜம்மாவே ஒரு மனிதனின் உணர்வுகளை அவன் நேர்மையை புரிந்து அவனை திருமணம் செய்ய சம்மதித்தது போல கதையாசிரியர் அமைத்திருப்பது சிறப்பு...

  2. எயிட்ஸ் நோய் என்றாலே ஒழுக்கம் கெட்டவன் என்ற எண்ணம் மரகதம் அம்மாவுக்கு ஏன் வருகிறது? தவறான செயல்கள் செய்வதால் மட்டுமில்லை இந்த எயிட்ஸ் நோய் வருவது... அதற்கு பல காரணங்கள் இருக்கு... இத்தனைக்கும் அவரின் உமிழ்நீரோ அல்லது அவருக்கு போடும் ஊசி பிறருக்கு போடும்போதோ அல்லது இரத்தம் கொடுக்கும்போதோ அல்லது பெறும்போதோ பரிசோதிக்காமல் ஏற்படும் இந்த பிரச்சனையால் கூட இப்படி ஏற்பட காரணம் என்பதை வாசகர்கள் நாம் நினைக்க.... அதுக்கு சுமதியின் பதில் அப்பப்பா இப்படிப்பட்ட ஒரு புதுமைப்பெண் தான் வேணும் நம் பிள்ளைக்கு அப்டின்னு வாசகர்கள் நினைக்கும் அளவுக்கு கதையாசிரியர் சுமதியின் பதில்கள் மூலமா ஜமாய்க்கிறாரே...அட்ரா சக்க.. அட்ரா சக்க அட்ரா சக்க என்பது போல டாண் டாண் என்ற சுமதியின் பதில்... அங்க இங்க கண்ட புக் வாங்கி படிக்கிறது.... வயசு கோளாறுல எதையும் சரியா தெரிஞ்சுக்காத வயசுல அது என்னன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல போகக்கூடாத இடத்துக்கு யாரோ சொன்னாங்கன்னு போய் இப்படி எல்லாம் சிரமப்பட்டு தன் உடல்நலத்தையும் கெடுத்துக்கொண்டு அதனால் உயிரை விடமுடியுமா? மனுஷனா பிறக்கிறவர் தவறு செய்யாதவர் யாரிருக்கா? எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் தப்பு செய்றவங்க இருக்காங்க.. ஆனால் அந்த தப்பை தப்புன்னு தெரிஞ்சு திருத்திக்கிட்டாலும் நோய் ரூபத்துல வந்து சிரமப்படுத்துகிறது.... அதுக்காக அந்த மனிதருக்கு வாழும் உரிமை ஏன் மறுக்கப்படனும். எல்லோரையும் போல வாழ உரிமை இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே, வாருங்கள், வணக்கம்.

   //இந்த கதை கண்டிப்பா ஒரு கத்தி மேல் நடப்பது போன்ற கதை.. இதை அழகாக நகர்த்தி சென்ற விதம் அருமை அண்ணா....//

   மிகவும் சந்தோஷம் மஞ்சு.

   //மரகதத்தின் கேள்விகள் ஒன்றொன்றும் சுமதியை வீழ்த்த துடித்த சக்ரவ்யூகம்... ஆனால் சுமதியின் பதில்கள் ஒவ்வொன்றும்...அற்புதம்... இந்த காலத்து பெண்களுக்கு ஏற்ற பாடம்....//

   அப்படியா! மிக்க நன்றி.

   //தனக்காக இல்லாமல் தன் குடும்பத்திற்காக தன்னை பலி கொடுப்பதாக நினைக்காமல் நிஜம்மாவே ஒரு மனிதனின் உணர்வுகளை அவன் நேர்மையை புரிந்து அவனை திருமணம் செய்ய சம்மதித்தது போல கதையாசிரியர் அமைத்திருப்பது சிறப்பு...//

   தங்களின் சிறப்பான கருத்து என்னை மகிழ்விக்கிறது.

   //இப்படிப்பட்ட ஒரு புதுமைப்பெண் தான் வேணும் நம் பிள்ளைக்கு அப்டின்னு வாசகர்கள் நினைக்கும் அளவுக்கு கதையாசிரியர் சுமதியின் பதில்கள் மூலமா ஜமாய்க்கிறாரே...//

   படைப்புகளுக்குக் கருத்துச்சொல்ல இப்படிப்பட்ட ஒரு புதுமைப்பெண் தான் வேணும் அப்படின்னு கதாசிரியர்களும், படைப்பாளிகளும் நினைக்கும் அளவுக்கு ..... மஞ்சுவும் தன் கருத்துக்களைச் சொல்லி ஜமாய்க்கிறாரே ... ! ;)))))

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 47. நோயாளிக்கு கௌன்சிலிங் தருவதை விட என்னைக்கேட்டால் அவருடன் இருக்கும் உறவுகளுக்கு முதலில் கௌன்சிலிங் கொடுக்கனும்... மரகதம் அம்மாளுக்கான கௌன்சிலிங் ஸ்டார்ட் ஆகிவிட்டது போலிருக்கே சுமதி மூலமாக...

  கதையாசிரியரின் மரகதம் அம்மாள் மூலமாக கேள்விகளும்... அதற்கு சரியான ஆழ்சிந்தனை கருத்துகள் எல்லாமே சுமதியின் மூலமாக நல்ல பதிலாக.. படிக்கும் வாசகர்களுக்கெல்லாம் படிக்க படிக்க திகட்டாத நல்லதொரு விருந்து தான்...

  அடுத்த பாகம் விவாகமா???

  அருமை அண்ணா.. அன்பு வாழ்த்துகள் கதை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிடுவீங்க போல?? அந்த அளவுக்கு அழுத்தமா கருத்துகளை உணர்வுகளை எழுத முடிவது எப்படியாம் பின்னே??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to மஞ்சு ... ;)

   //அருமை அண்ணா.. அன்பு வாழ்த்துகள் கதை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிடுவீங்க போல??

   அருமைத் தங்கச்சி, நின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   //அந்த அளவுக்கு அழுத்தமா கருத்துகளை உணர்வுகளை எழுத முடிவது எப்படியாம் பின்னே??//

   என் அன்புத் தங்கை மஞ்சுவின் அண்ணாவாக இருப்பதாலும், அவளிடமிருந்தே அழுத்தமா கருத்துக்களையும் உணர்வுகளையும் நான் அவ்வப்போது நன்கு கற்றதாலும் மட்டுமே, அந்தந்த கதாபாத்திரமாக மாறி எழுத முடிகிறது என்னால்!! போதுமா? ;)))))

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 48. அவங்கவங்க சொந்த ஊர் வந்துடறதே கதையில.

  ரொம்ப சுவாரசியமாதான் போகுது.

  படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.

  எனக்குத் தெரிஞ்சுடுத்து. முடிவு சுபம்தான்னு.

  பதிலளிநீக்கு
 49. JAYANTHI RAMANI January 4, 2013 1:49 AM

  வாங்கோ மேடம். வணக்கம்.

  //அவங்கவங்க சொந்த ஊர் வந்துடறதே கதையில.//

  ஆமாம். ஆனால் உங்கள் சொந்த ஊர் பற்றிக் கேட்டிருந்தேன். நீங்கள் பல விஷயங்களை என்னுடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டும் சில விஷயங்களை இன்னும் சொல்லவே இல்லை.
  இது இந்த சந்தர்ப்பத்தில் ஓர் சின்ன நினைவூட்டல் மட்டுமே.

  //ரொம்ப சுவாரசியமாதான் போகுது.
  படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.//

  ஆஹா, சுவாரஸ்யமானவரின் கருத்துக்கள் எனக்கும் மிகுந்த சுவாரஸ்யமாகவே உள்ளது. நன்றியோ நன்றிகள், மேடம்.

  //எனக்குத் தெரிஞ்சுடுத்து. முடிவு சுபம்தான்னு.//

  உங்களுக்குத்தெரியாததா என்ன? உங்களின் முடிவு சுபமாகத்தான் இருக்கும். ;)))))

  அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  பிரியமுள்ள
  கோபு

  பதிலளிநீக்கு
 50. மேலும் எயிட்ஸ் என்பது மிகவும் மெதுவாகப் பரவும் ஒரு ஆட்கொல்லி நோய். இன்றோ அல்லது நாளையோ கூட அதைப் பூரணமாக குணப்படுத்த நம் மருத்துவ விஞ்ஞானிகளால் மருந்து கண்டுபிடித்து விடக்கூடும். அந்த நம்பிக்கை எனக்கிருப்பதால், புறப்பட்டு வந்தேன்” என்றாள் சுமதி.”

  என்ன ஒரு தெளிவான பேச்சு.

  பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;

  நல்ல சிந்தனைதான். கதை சொல்லிப்போகும் விதம் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 51. அன்புள்ள பூந்தளிர்,

  தங்களின் அன்பான வருகையும், கதாநாயகி சுமதியைப் போன்றே கூறியுள்ள தெளிவான கருத்துக்களும், நல்ல சிந்தனையுடன் கூடியதாகவே உள்ளன. நன்றி.

  பிரியமுள்ள
  கோபு

  பதிலளிநீக்கு
 52. Palaniappan KandaswamyDecember 17, 2011 at 3:10 PM
  அமைதியாகப் போகிறது. முடிவை இன்னும் யூகிக்க முடியவில்லை.

  இதுவும் நானே! ஏன் இப்படி அடிக்கடி பெயர்களை மாற்றினேன் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 53. மரகதம்மாள் கேட்ட கேள்விக்கு சுமதி சொன்ன பதில்கள் அத்துனையும் அருமை. கதை நகர்வது நல்லா இருக்கு. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலூடன்,,,,,,,

  பதிலளிநீக்கு
 54. அந்தம்மா எப்பூடி மடக்கி மடக்கி கேட்டாலும் டாண டாண்னு தெளிவா பதில்வருது. வெவரமானவதா.

  பதிலளிநீக்கு
 55. பெற்றோரின் பிறந்த ஊர் ஆங்கரை என்றதும் மரகதத்திற்கு மகிழ்ச்சி உண்டானது. ஒரே ஊரு பாசமோ? ஆனாலும் எப்படி கேள்விகளை கேட்டாலும் சுமதியிடம் எல்லாவற்றுக்குமே தெளிவான பதில் இருந்ததே.

  பதிலளிநீக்கு
 56. //தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.// ஏதோ டுவிஸ்ட் தெரியுறாப்பல இருக்கு...

  பதிலளிநீக்கு
 57. சுமதியின் பதில்கள் சமூக சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளன. இன்றைய சமுதாயத்தில் உண்மைகளை மறைத்துவிட்டு செய்யப்படும் திருமணங்களைப்பற்றியும் சுட்டியவிதம் அருமை! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு