என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்!

செல் ஃபோன் திருடப்பட்டால், 
இனி கவலையில்லையாம்!


செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்! என்பது இனிய செய்தி தானே! அதைப்பற்றி எனக்கு சமீபத்தில் கிடைத்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

செல் ஃபோன் என்பது இன்று நமக்கு இன்றியமையாத ஒரு [அத்யாவஸ்யமானப்] பொருளாகி விட்டது. அது இல்லாமல் இனி உயிர்வாழவே முடியாது என்ற நிலைமைக்குத் தான் அநேகமாக நாம் எல்லோரும் வந்துவிட்டோம்.

இந்த அத்யாவஸ்யமான பொருள் அடிக்கடி திருட்டுப்போகவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பதும் நம்மால் மறுக்க முடியாத ஒன்று தான். 

அவ்வாறு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ நம் மனம் மிகவும் வருத்தமடையத்தானே செய்யும். 

இதனால் பல தொல்லைகள் நமக்கு ஏற்படுவதும் இயற்கையே.  கையும் ஓடாது காலும் ஓடாது. பல நண்பர்களின், உறவினர்களின் தொடர்பு எண்கள் நமக்குத் தெரியாமல் போகும். திருடப்பட்ட அது திருடப்பட்டவரால் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த தொல்லைகள் இனி இல்லை என்று சொல்லி, காதுக்கு இனிமையான செய்தி ஒன்று வந்துள்ளது.

கவனமாகப் படியுங்கள். அதன்படி உடனடியாக செயல்படுங்கள். மிகவும் எளிது தான்.

உங்கள் செல்போனை இப்போது கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பேசுவதற்குத் தயாராக Switch On செய்துகொள்ளுங்கள்.

*#06#  டயல் செய்யுங்கள்.

இப்போது IMEI எண் என்ற 15 ஸ்தான எண் ஒன்று வரும்.

இதை மிகவும் ரகசியமாக எங்காவது தனியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதை எக்காரணம் கொண்டும் உங்கள் செல் ஃபோனிலேயே பதிவு செய்து வைக்காதீர்கள். அது மீண்டும் ஆபத்தையே விளைவிக்கும்.

இதை உங்கள் மின்னஞ்சலுக்குப்போய் [Compose Mail க்குப்போய்] உங்கள் மெயில் விலாசத்திற்கே அனுப்பிக்கொள்ளுங்கள்.  முடிந்தால் அந்த மெயில் அனுப்பப்படும் நாள், உங்கள் பிறந்த நாளோ, திருமண நாளோ, குழந்தைகளின் பிறந்த நாளோ ஏதாவது ஒன்றில் அனுப்பி வைத்தீர்களானால், அது மறக்காமல் பிறகு அவசர ஆத்திரத்திற்கு தேடிக் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். 

தங்கள் செல்ஃபோன் துரதிஷ்டவசமாக தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ, உடனடியாக இந்த 15 ஸ்தான IMEI எண்ணை மேலும் சில தகவல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்:

மின்னஞ்சல் முகவரி: cop@vsnl.net

மின்னஞ்சலில் மேலும் தரவேண்டிய தகவல்கள்:

Name:
Full Postal Address:
Phone Model:
Make:
Last used Number:
E-mail for communication:
Missed Date:
IMEI Number [15 digit]

போலீஸில் புகார் அளிக்க வேண்டியது இல்லை. 

இந்த தங்களின் மெயில் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், GPRS & INTERNET SYSTEM மூலம் தங்களின் செல் ஃபோன் எங்கு யாரிடம் உள்ளது என்ற தகவல் சுலபமாகக் கண்டு பிடித்துத் தந்து விடுவார்களாம். 

திருடியவர் ஒருவேளை ஏற்கனவே உள்ள தங்களின் செல் ஃபோன் நம்பரையே மாற்றி, பயன்படுத்தி வந்தாலும், கண்டுபிடித்து விடுவார்களாம்.

இது உங்களுக்கு உபயோகமான, மகிழ்ச்சியளிக்கும் நல்லதொரு தகவல் தானே!

நமது செல் ஃபோன் அடுத்த நிமிடமே கூட காணாமல் போய்விடக்கூடும் அல்லவா? அதனால் மேலும் தாமதிக்காமல் IMEI எண்ணை உடனடியாகக் கண்டு பிடித்து அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்புடன்
vgk

49 கருத்துகள்:

 1. #06# - I tried 3 times. Every time, the cell gives me a single word reply: "Rejected" !!!!

  பதிலளிநீக்கு
 2. kg gouthaman said...
  #06# - I tried 3 times. Every time, the cell gives me a single word reply: "Rejected" !!!!

  முதலில் ஸ்டார் பட்டனைப் போட்டீர்களா?

  *#06#

  பதிலளிநீக்கு
 3. *06# இது நோக்கியா க்கு மட்டும் என நினைக்கிறன் .. மொபைல் வாங்கிய பாக்ஸ் ல அந்த நம்பர் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. நமது செல் ஃபோன் அடுத்த நிமிடமே கூட காணாமல் போய்விடக்கூடும் அல்லவா? அதனால் மேலும் தாமதிக்காமல் IMEI எண்ணை உடனடியாகக் கண்டு பிடித்து அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.//

  அனுபவம் தான் பாடம் கற்றுத் தரும் என்பார்கள். என் செல் போன் காணாமல் போனவுடன் எல்லோரும் கேட்டது IMEI எண்ணை குறித்து வைத்து இருக்கிறீர்களா? என்று தான். ஆனால் நான் குறித்து வைக்காததால் செல் போன் போயே போய் விட்டது.


  இதை நானும் இப்போது எல்லோருக்கும் சொல்வது இது தான்.
  உங்கள் பதிவு எல்லோருக்கும் உதவும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உண்மையில் பயனுள்ள பதிவுதான்..


  தகவலுக்கு நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. திருடியவர் ஒருவேளை ஏற்கனவே உள்ள தங்களின் செல் ஃபோன் நம்பரையே மாற்றி, பயன்படுத்தி வந்தாலும், கண்டுபிடித்து விடுவார்களாம்.

  வியப்பாகத்தான் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 7. நன்றி! மிக பயனுள்ள பதிவு!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வை.கோ- அரிய தகல - பகிர்வினிற்கு நன்றி - எனது அலை பேசியில் 16 இலக்க எண் வருகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ளதொரு பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 10. மிக்க நன்றி கோபால் சார். நல்ல பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 11. இது உங்களுக்கு உபயோகமான, மகிழ்ச்சியளிக்கும் நல்லதொரு தகவல் தானே!
  ///
  மிகவும் பயனுள்ள பகிர்வு.பகிர்தலுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. வை.கோபாலகிருஷ்ணன் said...
  kg gouthaman said...
  #06# - I tried 3 times. Every time, the cell gives me a single word reply: "Rejected" !!!!

  முதலில் ஸ்டார் பட்டனைப் போட்டீர்களா?

  *#06#

  தாங்கள் அனுப்பியுள்ள மெயில் தகவலுக்கு நன்றி. இப்போது சரியாக வந்துள்ளது என்பது கேட்க மகிழ்ச்சி.vgk

  பதிலளிநீக்கு
 13. மிக பயனுள்ள பகிர்வு பாஸ்
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 14. இது பயனுள்ள தகவல் சார். இன்றே 16 இலக்க எண்ணை பதிந்து வைத்துக் கொள்கிறோம்...

  பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 15. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
  அருமையான பயனுள்ள தகவல்
  தெளிவாக பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 16. மிகவும் பயனுள்ள தகவல்,வை.கோ சார். நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 17. மிகவும் பயனுள்ள தகவல் .பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 19. பயனுள்ள இடுகை. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
 20. Sir,

  Welcome back.

  It is really useful information.

  Thanks for your effors.

  My best wishes.

  பதிலளிநீக்கு
 21. ░░░░░░▓▓▓░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░▓▓▓▓░░
  ░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░▓░
  ▓░░░░▓▓░░▓░░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓░░░░▓▓▓▓░▓▓▓▓▓░░▓▓░▓▓▓░░▓░
  ▓░░░▓░░▓░▓░░░▓░░▓░░░░░░▓░░▓░░░░░░▓░░▓░░░░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
  ▓░░░▓░░▓░▓░▓▓▓▓▓▓▓▓░░▓▓▓▓▓▓▓▓░░░░▓░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
  ▓░░░▓░░▓░▓░▓░░░░▓░░▓░▓░░░░▓░░▓░░░▓░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
  ▓▓▓▓▓▓▓▓░▓░░▓▓▓▓░░▓░░░▓▓▓▓░░▓░░░░▓░░▓░░▓░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
  ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░
  ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░▓▓▓░░░░░

  பதிலளிநீக்கு
 22. அப்பாடா, ஒரு வழியாக செல்போன் திருட்டுக்களைக் கண்டுபிடிக்கும் வழியைக் கண்டுபிடித்தாகிவிட்டது. எல்லோருக்கும் பயன்படும் தகவல்.. மிகவும் நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 23. நல்ல தகவல் சார்.... நிறைய பேருக்கு உபயோகப்படும்...

  பதிலளிநீக்கு
 24. பயனுல்ல விஷயம் உங்கள் கைவண்ணத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. செல்லை தொலைச்சுடலாம்னு பார்த்தா, இப்படி சொல்றீங்களே?

  ஹி..ஹி..பழைய செல்லைச் சொன்னேன்!

  பதிலளிநீக்கு
 26. பயனுள்ள தகவல் அய்யா
  நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள். ந‌ன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 28. மிகவும் உபயோகமான தகவலைத் தந்ததற்கு மனமார்ந்த நன்றி!!

  பதிலளிநீக்கு
 29. பயனுள்ள தகவல்.நானும் செய்து பார்க்க முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. மிக்க நன்றி.....பயனுள்ள தகவல்

  பதிலளிநீக்கு
 31. இதைப் பற்றி முன்பும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இதை வைத்து செல் போன் இருக்கும் இடம் தெரியுமே தவிர அதை எப்படி கைப்பற்றுவது என்று தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 32. ப்யனுள்ள தகவல்.

  ஆனால் இப்போதெல்லாம் செல்ஃபோன் தொலைந்து போய் யாரேனும் எடுத்துவிட்டால் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் அதை அப்படியே வைத்து நாம் அடிக்கும் போது தெரிந்து கொண்டு தந்துவிடுவார்கள். ஆனால் நல்லவர்கள் இல்லை என்றால் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகின்றார்கள். திரும்பக் கிடைப்பதில்லை.

  ருடியவர் ஒருவேளை ஏற்கனவே உள்ள தங்களின் செல் ஃபோன் நம்பரையே மாற்றி, பயன்படுத்தி வந்தாலும், கண்டுபிடித்து விடுவார்களாம்.// இதைப் படித்த போது அப்போ கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றுகின்றது....ம்ம் அந்த நம்பரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu May 16, 2015 at 8:15 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பயனுள்ள தகவல். இதைப் படித்த போது அப்போ கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றுகின்றது....ம்ம் அந்த நம்பரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...//

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. எதற்கும் அந்த நம்பரைக் எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ஐயா.

   நீக்கு
 33. எல்லாருக்குமே பயன் படக்கூடிய தவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 27, 2015 at 6:28 PM

   வாங்கோ ... வணக்கம்மா !

   //எல்லாருக்குமே பயன் படக்கூடிய தவலுக்கு நன்றி//

   உங்களுடையதையும் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்கோ :)

   2012 புத்தாண்டுப் பதிவினில் முதன்முதலாக பூந்தளிர் பூத்துள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

   நீக்கு
 34. மிகவும் பயனுள்ள தகவல்.

  செல்போனை ஜாக்கிரதையா வெச்சுக்கோங்க.

  தப்பித்தவறி தொலைஞ்சு போச்சுன்னா மேலே சொன்னபடி செய்யுங்க.

  சூப்பர் பதிவு.

  பதிலளிநீக்கு
 35. இந்த வெசயம் அல்லா கம்பனி மொபைலுக்குமா சரிவருமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 14, 2015 at 3:10 PM

   //இந்த வெசயம் அல்லா கம்பனி மொபைலுக்குமா சரிவருமா//

   மேலே சொன்னபடி ஒருமுறை செய்துபார்த்து நீங்க வைத்திருக்கும் கம்பெனி போனுக்கும் அது ஒர்க்-அவுட் ஆகுதான்னு பாருங்க !

   நீக்கு
 36. இது பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கேன்னு நினைக்கிறேன் ட்ரை பண்ணி பார்த்ததில்ல. அனைவருக்குமே பயன் படும் தகவல் பகிர்வுக்கு நன்றி. இப்ப மொபைல் பயன் படுத்தாதவங்களே கிடையாதே.

  பதிலளிநீக்கு
 37. பயனுள்ள பதிவு. நான் வாங்கிய முதல் மொபைல் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. அப்ப இது தெரியாம போச்சே...பயனுள்ள பதிவு..

  பதிலளிநீக்கு