என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்

2
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீ ராதாகிருஷ்ண பரப்ரம்ஹனே நம:




அன்புடையீர்,

வணக்கம்.

இப்பவும் திருச்சியில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டுக்கு மிக அருகில் 63 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

அடியேன் பிறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு என் சொந்த அத்தையின் கணவரும் மிகப்பெரிய வேத, சாஸ்திர, பாஷ்ய பண்டிதரும், ஸ்ரீமத் இராமாயண மூல பாராயணமும், பிரவசனமும் தினமுமே செய்தவருமான  கூத்தூர் பிரும்ஹஸ்ரீ வெங்கடராம சாஸ்திரிகள் (ஸ்ரீ இராமாயண சாஸ்திரிகள்) என்பவரால் அன்று மிக எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட, இந்த ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவம் தொடர்ந்து இன்றும் 63 ஆவது ஆண்டாக மிக விமரிசையாக ஏராளமான பிரபல பாகவதர்களைப் பங்கேற்க வைத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்சியாக நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்: 
முதலியார் ஸ்டோர் [முழுவதுமாகப் பந்தலிடப்பட்டு]
வடக்கு ஆண்டார் தெரு, திருச்சிராப்பள்ளி-620 002

தொடர்புக்கு:
ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ கமிட்டி
செல்: 99430 30258



இதில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் நேரில் வந்து கலந்து கொண்டு, ஸத்விஷயங்களான மிக இனிமையான பகவன் நாமாக்களையும், பஜனைப்பாடல்களையும் காதால் கேட்டு மகிழ்ந்து, சகல க்ஷேமங்களையும் அடையலாம்.



   



முக்கிய நிகழ்ச்சிகள்:


27.01.2012 வெள்ளிக்கிழமை 


காலை 6 மணிக்கு:


கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 
தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம்


மாலை 6 மணிக்கு


நாமசங்கீர்த்தனம் - கடையநல்லூர் பிரம்ஹஸ்ரீ ராஜகோபால பாகவதர்


இரவு 10 மணிக்கு


ப்ரார்த்தனா அபங்கம் - நங்கவரம் ஸ்ரீ மணிகண்டேஸ்வர பாகவதர்


28.01.2012 சனிக்கிழமை


காலை 8.45 க்கு 


தோடயமங்களம், ஜெயதேவர் அருளிய 
கீதகோவிந்தம் மஹாகாவ்யம் (அஷ்டபதி) 


ஸ்ரீ வாஞ்சியம் ப்ரம்ஹஸ்ரீ முரளிதர பாகவதர்
சென்னை ப்ரம்ஹஸ்ரீ T N மஹாதேவ பாகவதர்


இரவு 11 மணிக்கு


நாம சங்கீர்த்தனம், தியானங்கள், திவ்ய நாம சங்கீர்த்தனம், டோலோஸ்தவம்


29.01.2012 ஞாயிற்றுகிழமை

காலை 8 மணிக்கு உஞ்சவர்த்தி


காலை 9 மணிக்கு 
கோவை ப்ரம்ஹஸ்ரீ ஜெயராம பாகவதர் தலைமையில்
வாளாடி, நங்கவரம் பஜன் மண்டலி மற்றும் வெளியூர், உள்ளூர் பாகவதர்கள் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள 
ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவம்.


மதியம் 2.30 க்கு தீபாராதனை, சமாராதனை


மாலை 4 மணிக்கு ஸ்வாமி வீதி உலா


மாலை 6.30 க்கு ஸ்ரீ ஆஞ்சநேய மஹோத்ஸவம்.


சுபம்


அடுத்த வாரம் முதல் அவ்வப்போது, மிகச்சிறிய பகுதியாக. நான் இதுவரை படித்தது, அறிந்தது, கேட்டது, உணர்ந்தது, அனுபவித்தது போன்ற ஒரு சில ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன்.  தெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் எனவும் நம்பியுள்ளேன். 

தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்தி, தாங்களும் பயன் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
vgk 



26 கருத்துகள்:

  1. நல்ல விஷயம். படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. ராதா கல்யாண வைபோகமே..
    ஆனந்தமாய்க் காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு..

    சத்விஷயங்கள் எதிர்பார்க்கவைக்கின்றன..

    பதிலளிநீக்கு
  4. எங்கள் இல்லத்திற்கு அருகிலும் ஆலயத்தில் கோ பூஜை, கோடி சகஸ்ரநாம ஜபயக்ஞம்,
    திருவிளக்குப்பூஜை ,
    ராதா கல்யாண மகோற்சவம் ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறுகின்றன..

    பதிலளிநீக்கு
  5. ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடதெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் ...

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு காத்துண்டு இருக்கோம் நல்ல விஷயங்கள் கேட்பதற்கும் படிப்பதற்கும்

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல விஷயம்.... இங்கே தில்லியிலும் அடிக்கடி கல்யாண மஹோத்ஸவம் நடக்கும்.

    நாங்கள் இருக்கும் பகுதியில் கடந்த 8-9 வருடங்களாக பத்மாவதி - ஸ்ரீனிவாச கல்யாண மஹோத்ஸ்வம் கோலாகலமாக நடத்துவார்கள்...

    நல்ல அனுபவம் அது...

    பதிலளிநீக்கு
  8. ராத கல்யாண அழப்பிற்கு மிக்க நன்றி சார்.
    //ஒரு சில ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன். //

    ஸத் விஷயங்களை படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. உங்களின் முத்தான முயற்சிக்கு எனது வணக்கங்கள் அய்யா, எழுதுங்கள் எழுச்சியாக தொடர ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல விஷயம் சார்.&இந்த ஆண்டு தாங்கள் பதிவிடும் விதம் மாறுபடும் என்கிறீர்கள்.பதிவுகளைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விஷயம் சார்.&இந்த ஆண்டு தாங்கள் பதிவிடும் விதம் மாறுபடும் என்கிறீர்கள்.பதிவுகளைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன். தெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் எனவும் நம்பியுள்ளேன்.//

    நிச்சியம் தெயவ அனுக்கிரஹம் உண்டு உங்களுக்கு.

    நல்லவிஷயங்களை கேட்க ஆவலாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. கோவையில் இருந்த வரை என் மாமா வீட்டுக்கு பக்கத்தில் வருடாவருடம் ராதா கல்யாணம் விமர்சையாக நடத்துவார்கள். பஜன்கள் பிரமாதமாக இருக்கும்...கண்டு களித்ததுண்டு.

    நல்ல விஷயங்களை தொடர்ந்து தாருங்கள் சார். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. //அடுத்த வாரம் முதல் அவ்வப்போது, மிகச்சிறிய பகுதியாக. நான் இதுவரை படித்தது, அறிந்தது, கேட்டது, உணர்ந்தது, அனுபவித்தது போன்ற ஒரு சில ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன். தெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் எனவும் நம்பியுள்ளேன்.
    //

    சிறந்த சேவை....மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  15. //இப்பவும் திருச்சியில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டுக்கு மிக அருகில் 63 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.//

    கொடுத்து வைத்தவர்தான். அதை எங்களுக்கும் கிடைக்கச்செய்கிறீர்களே.. மேலும் புண்ணியம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 27, 2015 at 6:26 PM

      **இப்பவும் திருச்சியில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டுக்கு மிக அருகில் 63 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.**

      //கொடுத்து வைத்தவர்தான். அதை எங்களுக்கும் கிடைக்கச்செய்கிறீர்களே.. மேலும் புண்ணியம்தான்.//

      கொடுத்து வைத்தவன் நானே ....... என்ற அந்தக்கால MGR திரைப்படப்பாடல் நினைவுக்கு வந்தது. :) மிக்க நன்றி.

      நீக்கு
  16. ராதா சமேதா கிருஷ்ணா


    //அடுத்த வாரம் முதல் அவ்வப்போது, மிகச்சிறிய பகுதியாக. நான் இதுவரை படித்தது, அறிந்தது, கேட்டது, உணர்ந்தது, அனுபவித்தது போன்ற ஒரு சில ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன். தெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் எனவும் நம்பியுள்ளேன். //

    இது நம்ப ஏரியா. உள்ள வந்துடறேன்.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. mru October 14, 2015 at 3:12 PM

      //நா அப்பாலிக்கா வாரன்.//

      எதற்கு? ராதா கல்யாணத்திற்கா? அது அப்போதே முடிஞ்சு போச்சுதுங்க :)

      நீக்கு
  18. நல்ல விஷயங்களை எடுத்துச்சொல் தங்களைப்போல சிலர் இப்பவும் இருக்கத்தான் செய்யுறாங்க. அதைக் கேட்கவும் படித்து ரசிக்கவும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்யுறாங்க. அந்த ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சிதான். ராதா கல்யாண மஹோத்ஸவம் அழைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பலர் இதன் மூலம் அறிந்து வந்திருக்கக்கூடும்...தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  20. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு