என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

அதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்

அதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். 


பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’  சொல்ல வேண்டும்.
ஸமுத்ர வஸனே தேவி 
பர்வதஸ்தன மண்டிதே !

விஷ்ணுபத்நி நமஸ்துப்யம் 
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே !!


[ஸமுத்திரத்தை வஸ்த்ரமாக உடையவளும், பர்வதங்களை ஸ்தன மண்டலங்களாக உடையவளும், விஷ்ணு பத்நியுமான பூமாதேவியே உனக்கு நமஸ்காரம். உன்பேரில் பாதம் வைத்து ஸஞ்சரிப்பதைப் பொருத்தருள்க]

o===========O===========o
பிறகு நமது வலது உள்ளங்கையை விரித்துப் பார்த்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்து விட்டு, வலது உள்ளங்கையை நம் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும். 


கராக்ரே வஸதே லக்ஷ்மீ 
கரமத்யே ஸரஸ்வதீ !

கர மூலே து கெளரீ ஸ்யாத் 
ப்ரபாதே கரதர்சனம் !!


[வலது கையின் நுனியில் லக்ஷ்மியும், மத்யத்தில் ஸரஸ்வதியும், மூலத்தில் கெளரியும் வாசம் செய்வதால் விடியற்காலம் இவ்வாறு செய்யும் கரதர்சனம் மங்களத்தைக் கொடுக்கும்.]  
-o-o-o-O-o-o-o-

[ நாளை மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ]


31 கருத்துகள்:

 1. இவை மூன்றும் நான் தினமும் செய்கிறேன்.
  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

  பதிலளிநீக்கு
 2. பழக வேண்டும். யோசித்துப் பார்க்கும்போது தினமும் இடப் புறமாக எழுகிறேன் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. அதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்"

  இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்தபிறகு வலது உள்ளங்கையில் கண்விழிக்க வேண்டும்..

  விஞ்ஞான முறைப்படி கைகளைத்தேய்ப்பதால் ரத்தஓட்டம் சுறுசுறுப்படைகிறது..

  இன்று புதிதாக நாளைத்துவக்குவதாக
  ஐதீகம்...

  பதிலளிநீக்கு
 4. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான விழிப்புணர்வுப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. இரவில் கெட்டகனவுகள் வராமலிருக்க அனுமனைத்துதித்து பின் உறங்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 6. பகிர்வுக்கு நன்றிங்கன்னே!

  பதிலளிநீக்கு
 7. vaiko sir... ithai avaciyam en pillaikkum pennukkum solkireen. computer problem. sorry.

  பதிலளிநீக்கு
 8. தெரியாத தகவல்கள்.
  பகிர்வுக்கு நன்றிங்க ஐயா

  பதிலளிநீக்கு
 9. இராஜராஜேஸ்வரி said...
  //அதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்"

  இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்ததபிறகு வலது உள்ளங்கையில் கண்விழிக்க வேண்டும்..

  விஞ்ஞான முறைப்படி கைகளைத்தேய்ப்பதால் ரத்தஓட்டம் சுறுசுறுப்படைகிறது..

  இன்று புதிதாக நாளைத்துவக்குவதாக
  ஐதீகம்...//

  ஆம் தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

  இரண்டு உள்ளங்கைகளையும் நன்கு தேய்த்துவிட்டு, பிறகு தான் கண்ணைத் திறந்து வலது உள்ளங்கையைப் பார்த்து விட்டு கண்களில் ஒத்திக்கொள்வது வழக்கம்.

  கூடுதலாக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
  மிக்க நன்றி! ;)))))

  பதிலளிநீக்கு
 10. நல்ல தகவல் சார். மிக்க நன்றி :)
  முக்கிய பழக்கங்கள் விட்டுப்போய்விடாமல் இருக்க இது போன்ற பதிவுகள் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் நல்ல தகவல்கள்.பகிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நாங்க இருக்கும் பகுதியில் அவ்வப்போது பூமாதேவி ஆடிட்டு போகும் நேரத்தில் தகுந்த மந்திரம் சொல்லியுள்ளீர்கள்.

  மந்திரங்களை எழுதிவைத்துக்கொள்கிறேன்.தினமும் சொல்வது கடினம்தான்.

  பதிலளிநீக்கு
 13. கண் விழித்ததும் இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கணும்

  பதிலளிநீக்கு
 14. நன்றி சார். இவற்றையெல்லாம் நான் செய்கிறேன் என்றாலும் அதற்குரிய மந்திரங்கள் இப்போதுதான் சரிவர தெரிந்து கொண்டேன். தொடர்கிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல தகவல்கள் சார்...

  கராக்ரே வஸதே லஷ்மி ஸ்லோகம் ரோஷ்ணியின் பள்ளியில் காலை கடவுள் பிரார்த்தனை... அவளும் சொல்லுவாள்.

  பதிலளிநீக்கு
 16. நல்ல தகவல்கள்... அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.....

  பதிலளிநீக்கு
 17. அனைத்திலும் இறைவனைக் காணுவதே வாழ்வின் ஆதாரம் என்பதை நம் சாஸ்திரங்கள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

  பதிலளிநீக்கு
 18. [//வலது கையின் நுனியில் லக்ஷ்மியும், மத்யத்தில் ஸரஸ்வதியும், மூலத்தில் கெளரியும் வாசம் செய்வதால் விடியற்காலம் இவ்வாறு செய்யும் கரதர்சனம் மங்களத்தைக் கொடுக்கும்.] //

  இது நல்ல விஷயமா இருக்கே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 27, 2015 at 6:19 PM

   **வலது கையின் நுனியில் லக்ஷ்மியும், மத்யத்தில் ஸரஸ்வதியும், மூலத்தில் கெளரியும் வாசம் செய்வதால் விடியற்காலம் இவ்வாறு செய்யும் கரதர்சனம் மங்களத்தைக் கொடுக்கும்.**

   //இது நல்ல விஷயமா இருக்கே. //

   நல்ல விஷயம் தான். நாளை காலையிலிருந்து நீங்களும் செய்யுங்கோ. எனக்காகவும் கொஞ்சம் சேர்த்து வேண்டிக்கொண்டு செய்யுங்கோ. ஏனெனில் நான் தினமும் காலையில் எழுந்திருக்கவே மிகவும் லேட் ஆகும் அல்லவா, அதனால் தான் :) ஓக்கேயா?

   நீக்கு
 19. கராக்ரே வசதே லக்‌ஷ்மி - எப்பொழுதும் காலையில் எழுந்ததும் சொல்வேன்.

  இனி நாளை முதல் பூமாதேவி மந்திரமும் சொல்கிறேன்.

  என் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. [ஸமுத்திரத்தை வஸ்த்ரமாக உடையவளும், பர்வதங்களை ஸ்தன மண்டலங்களாக உடையவளும், விஷ்ணு பத்நியுமான பூமாதேவியே உனக்கு நமஸ்காரம். உன்பேரில் பாதம் வைத்து ஸஞ்சரிப்பதைப் பொருத்தருள்க]///

  கண்டிப்பாக இந்த வரிகளை சொல்ல வேண்டும்.

  பொறுமையின் பூஷணமான அந்த பூமா தேவி எவ்வளவு பாரங்களையும், மனிதன் செய்யும் அக்கிரமங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.

  மிக்க நன்றி அண்ணா.

  இது போன்ற விஷயங்களைப் படிக்கும் போது, இனி மெல்ல நடக்க வேண்டும். அவளை அசிங்கப் படுத்தாமல் போற்றிப் புகழவேண்டும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 21. பூமா தேவிக்கு நான் சமர்ப்பித்த கவிதை.

  http://manammanamviisum.blogspot.in/2012/12/blog-post_17.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Jayanthi Jaya June 16, 2015 at 7:35 PM
   பூமா தேவிக்கு நான் சமர்ப்பித்த கவிதை.
   http://manammanamviisum.blogspot.in/2012/12/blog-post_17.html//

   மீண்டும் இப்போ அங்கு போய் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

   ஜெயா என்னை அண்ணாவாக்கிக்கொள்வதற்கு முன்பு என் அன்பின் ஜெயா எழுதியுள்ள பின்னூட்டம் இதோ :)

   -=-=-=-=-=-=-=-
   JAYANTHI RAMANI17 December 2012 at 21:30
   கோபாலகிருஷ்ணன் சார், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ வானத்தில் பறப்பது போல் இருக்கிறது. சும்மா நல்லா இருக்குன்னு சொல்லாம, என் கவிதையை அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு விமர்சனம் பண்ணிட்டீங்க.

   ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

   உங்கள் விமர்சனம் என்னை மீண்டும், மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

   உங்கள் விமர்சனத்திற்கு தலை வணங்குகிறேன்.

   மிக்க நன்றி.

   -=-=-=-=-=-=-=-

   :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

   நீக்கு
 22. என்னிய விட்டுபோடுங்க. நா போட்டிலேந்தே எஸ்கேப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 14, 2015 at 3:17 PM

   //என்னிய விட்டுபோடுங்க. நா போட்டிலேந்தே எஸ்கேப்பு.//

   அச்சச்சோ ! ஏன் என்ன ஆச்சு? !!

   மொத்தம் 750 பதிவுகளில், சுமார் 150-200 பதிவுகள்வரை ஹிந்துமத ஆன்மீக விஷயங்களாகத்தான் இருக்கும். இதை ஆரம்பத்திலேயே நான் தங்களுக்கு மெயில் மூலம் சொல்லியும் இருக்கிறேன்.

   தங்களுக்கு இதில் விருப்பமிருந்தால் படித்துப்பாருங்கோ. ஏதேனும் முடிந்தவரை பின்னூட்டமிட்டு போட்டியில் தொடருங்கோ. இல்லாவிட்டால் எஸ்கேப் ஆகிக்கோங்கோ.

   இதில் கட்டாயமோ, வற்புருத்தலோ ஏதும் இல்லை. தங்கள் இஷ்டப்படி மட்டுமே. வாழ்த்துகள்.

   அன்புடன் குருஜி.

   நீக்கு
 23. அதிகாலை கண்விழித்தது முதல் குளிக்கும்போது சாப்பிடும்போது சொல்வதற்கென்றே நிறையா ஸ்லோகங்கள் இருக்குதான். நம் மூத்த தலைமுறையினர் அதைக்கடைப்பிடிக்கவும் செய்தனர். இப்ப உள்ளது பாத்ரூம் குளியல்தானே.

  பதிலளிநீக்கு
 24. காலையில் கண்விழித்ததும் வலது உள்ளங்கையை பார்ப்பது உண்டு..ஸ்லோகம் நீங்கள் சொல்லிதான் தெரிகிறது...நன்றி..

  பதிலளிநீக்கு
 25. என் தாத்தா சொல்லிக்கொடுத்தார் கராக்ரே ஸ்லோகத்தை!பயனுள்ள தகவல்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு