என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 30 ஜனவரி, 2012

மஹா கணேசா! மங்கள மூர்த்தி !!2

மஹா கணேசா! 
மங்கள மூர்த்தி !!

அன்புடையீர்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.


முழுமுதற் கடவுளாம் விநாயகர் பற்றி நடமாடும் தெய்வமாக நம்மிடையே விளங்கிய ஸ்ரீ மஹா பெரியவா, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் [அதாவது 1941 இல்], கூறியுள்ள சில தகவல்களை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புப்பெற்றேன். 

அதிலிருந்த விஷயங்களை அப்படியே இங்கு தங்களுடன் பகிர்வதன் மூலம் நம் எல்லோருக்குமே குருவருளும் திருவருளும் சேர்ந்தே கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இங்கு பதிவிட்டுள்ளேன்.

என்றும் அன்புடன் தங்கள்
vgk


-oOo-
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறைய தத்வங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? 

விக்நேஸ்வரர், தன் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத்தியாகம் பண்ணினால்தான் மஹாகணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது.

அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் ஸ்ருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈஸ்வரன் அனுக்கிரஹித்திருக்கிறார். 


சிதறு தேங்காய் என்று தேங்காயை உடைக்கிற பழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்களில் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகப்பட்டிணத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தேன். அங்கே வாயிலில் பிள்ளையாருக்கு நிறைய சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்கு குழந்தைகள் ஒரே நெரிசலாய்ச் சேர்ந்துவிடும். 


திபுதிபுவென்று அவை ஓடி வருவதில் என் மேல் விழுந்துவிடப்போகின்றனவே என்று என் கூட வந்தவர்களுக்கு பயம். அவர்கள் அந்தக்குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப்போங்கள்” என்று கண்டித்தார்கள்.


அப்போது ஒரு பையன் டாண் என்று பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு “எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்யதை?” என்று கேட்டான். அப்போது தான் இந்த உண்மை தெரிந்தது.


அஹங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.


கணபதியைக்காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரஸ் யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு, அவருக்கு ஸ்தூலகாயர் என்றே ஒரு பெயர். மலைபோல இருக்கிறார். 


ஆனாலும் அவர் சின்னக்குழந்தை. சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப்பருவத்தில் நிறைய சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம் கூட இளைக்கக்கூடாது. 


ஒரு ஸன்யாஸி நிறைய சாப்பிட்டுக்கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாஸம் இருப்பார்கள். 


குழந்தை அப்படியிருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாக கொழு கொழுவென்று இருந்தால் தான் அழகு. குழந்தை நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக்குழந்தை ஸ்வாமியே காட்டிக்கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.


இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமாக சின்னஞ்சிறு ஆக்ருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தன் வாஹனமாக வைத்துக்கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பக்ஷி என்று வாஹனம் இருக்கிறது


இவரோ தான் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாஹனமாக வைத்துக்கொண்டாலும், வாஹனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாஹனத்திற்கு கெளரவம். 


வாஹனத்திற்கு கெளரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி, நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கெளரவம் எல்லாம் உண்டாகும்படியாகத் தம் உடம்பை வைத்துக்கொண்டிருக்கிறார்.  

ஸ்தூலகாயரான போதிலும், பக்தர்கள் இதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன் என்று காட்டுகிறார்.  


ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் விசேஷமுண்டு. மயிலுக்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரக்ஷிக்கும். யானை எதை ரக்ஷிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். 


ஆனால் இந்த யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக்கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மஹாபாரதத்தையே எழுதிற்று. தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக்காட்டிலும் தர்மத்தைச் சொல்கிற ஒன்று, நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்யைக்காக எதையும் த்யாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் த்யாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது.

ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக்கொள்வார் என்பதற்கு இது உதாரணம். ஒரு ஸமயம் தந்தத்தாலேயே அஸுரனைக்கொன்றார். அப்போது அது ஆயுதம். இப்போது அதுவே பேனா.

நமக்குப்பார்க்கப்பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், ஸமுத்ரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும், அலுப்பு சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும்.

அதனால் தான் குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். 


அது ஆனந்த தத்துவம்! அடங்காத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில் தான்!

பண்டாஸுரன் விக்ன மந்த்ரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேஸ்வரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தபோது, அவளும் ஆனந்தமாக இந்தப்பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்ன யந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு ஸகாயம் செய்தார். அவர் சாக்ஷாத் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிறந்த அருமைப் பிள்ளை.

இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர் பவித்ததனால், அவரை நாம் பிள்ளையார் என்றே விசேஷித்து அழைக்கிறோம். எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அனுக்கிரஹத்தைப் பெற்றுக்கொண்டால் தான் அந்தக் காரியம் விக்னம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக ப்ரதான மூர்த்தியாக வைத்து உபாஸிக்கிற மதத்துக்கு காணபத்யம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. 

ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்ரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக்கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலமுள்ளவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது.

ஆனால் அவரைச் சிரிக்க வைத்து சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்ரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதும், உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக்கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்ரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக்கொண்டு விட்டார். 

தோ3ர்பி4: கர்ணம் என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. தோ3ர்பி4: என்றால் கைகளினால் என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது. தோ3ர்பி4: கர்ணம் என்றால் கைகளால் காதைப்பிடித்து கொள்வது. விக்னேஸ்வரருடைய அனுக்கிரஹம் இருந்தால் தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். 

தடைகளை நீக்கிப் பூரண அனுக்ரஹம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்னங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக!  


அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்!
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!!


மிகுந்த கருணை உள்ளவரும், 
சாந்த ஸ்வரூபியும், 
ஞானக்கடலுமாகிய 
ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கின்றேன்.


நன்றி:
 श्री कामकोटि प्रदीपः  

  
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

-oooOooo-


[அடுத்த பதிவொன்றில் நாளை மீண்டும் சந்திப்போம் ]

34 கருத்துகள்:

 1. குருவருளும் திருவருளும் சேர்ந்தே கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இங்கு பதிவிட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 2. தடைகளை நீக்கிப் பூரண அனுக்ரஹம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்னங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக!//

  பிள்ளையாரை போற்றி வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

  நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பிள்ளையார் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 3. குருவருளும் திருவருளும் இணைந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. அஹங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.


  அஹங்கார மமகாரங்களே பல பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனவே!
  அவை சிதறும் தத்துவத்தை அழ்காக உணர்த்திய பகிர்வு..

  பதிலளிநீக்கு
 5. தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக்காட்டிலும் தர்மத்தைச் சொல்கிற ஒன்று, நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்யைக்காக எதையும் த்யாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் த்யாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது.

  அருமையான தியாக சரித்திரம்..

  பதிலளிநீக்கு
 6. குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக யானை உருவத்தோடு இருக்கிறார்.

  படிக்கப் படிக்க ஆனந்தம் பொங்கித்ததும்பும் ஆனந்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்ரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக்கொண்டு விட்டார்.

  சந்தோஷமாக சிரிக்கவைக்கும் மங்களகரமான சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
 8. விக்னேஸ்வரருடைய அனுக்கிரஹம் இருந்தால் தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும்.
  தடைகளை நீக்கிப் பூரண அனுக்ரஹம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்னங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக!

  அனுக்கிரஹிக்கும் அழகான பகிர்வுகள் அளித்து சிறப்பிதமைக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. சில செயல்களின் உள் அர்த்தங்களைப் பெரியவர் சொல்ல அதை வெளியிட்ட உமக்கு நன்றி. நல்ல தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 10. பிள்ளையாரை பற்றிய நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  தொடர்ந்து இது போல் தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. தோப்புகரணத்திற்கு மூலமே அந்த ஆதிமூலம் என்றறிந்து ஆச்சர்யமும் ஆனந்தமும் ஒரு சேர பெற்றேன் அய்யா, அருமையான ஆன்மீக பதிவு
  நன்றி பல அறிய தகவல்களுக்கு

  பதிலளிநீக்கு
 12. அது ஆனந்த தத்துவம்! அடங்காத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில் தான்!

  ஆனந்தமாய் படித்து ஆனந்தித்தேன்.

  பதிலளிநீக்கு
 13. முதல் படத்தில் விநாயகர் விஸ்வரூப தரிசனம் அட....பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண் சிமிட்டுகிறார்!

  பதிலளிநீக்கு
 14. Looks that some coincidences are not explainable by laymen like us. Just yesterday, while talking on phone with my elder brother in Chennai, he asked me to locate in 'google image' Periava's picture(the exact one that you have shown in your post)and to email it to him. He said the picture is a rare one. Of course, I duly complied with my brother's request.

  பதிலளிநீக்கு
 15. நல்ல பகிர்வு... நிறைய விஷயங்கள் தெரிந்தது.... தொடர்ந்து எழுதுங்கள் இது போன்ற தகவல்களை...

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு.
  நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 17. அருமையான, ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பதிவு!
  நன்றி!

  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 18. நல்ல நீண்ட விவரங்கள் நிறைந்துள்ள பதிவிற்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. அன்பின் வை.கோ - மஹா கணேசா ! மங்கள மூர்த்தி - பதிவு அருமை - படங்களும் அருமை - மஹாப் பெரியவாளின் அறிவுரைகள் - எழுபது ஆண்டுகலூக்கு முன்னர் - கூறிய குருவுரைகள் - படித்து மகிழ்ந்தத்துடன் - பகிர வேண்டும் - அனைவரும் படித்து இரு அருளும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்தமை நன்று.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  ஆனை முகனைப் பற்றிய பரமாச்சாரியாரின் கருத்துகள் பகிர்வினிற்கு நன்றி. தேங்காய் உடைப்பது ஏன், சிதறு தேங்காய் உடைப்பது ஏன் - ஒரு சிறுவன் கேட்ட கேள்விக்கு எவ்வளவு விளக்கங்கள் - கணேசரின் உருவம் - அவரது வாகனம் - அவரது உடைந்த கொம்பு - உடல் கொழு கொழுவென் - குண்டாக - இருப்பதின் காரணம் - கையில் மோதகம் ஏன் - யானையினைத் தூக்க மூஞ்சூறா - ஏன் - அத்தனைக்கும் விளக்கம் அளித்த காஞ்சி காமகோடி பீடம் பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - அவர்களீன் சிந்தனைகள் - நன்று நன்றி - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. // மிகுந்த கருணை உள்ளவரும்,
  சாந்த ஸ்வரூபியும்,
  ஞானக்கடலுமாகிய
  ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கின்றேன்.//

  அன்பின் வை.கோ - நானும் நமஸ்கரிக்கின்றேன்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. மிக சுவாரஸ்யமான தகவல்கள்...3 கண் தேங்காய் உடையதை...தோப்பிகரணம்...மட்டற்ற விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தன...நர்த்தன கணபதி படம் அருமை...
  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 23. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து ஆதரவாக கருத்துக்கள் கூறி சிறப்பித்து உற்சாகப்படுத்தியுள்ள அன்பு உள்ளங்களான

  திருவாளர்கள்:
  --------------
  அவர்கள் உண்மைகள் அவர்கள்
  சமுத்ரா அவர்கள்
  GMB Sir அவர்கள்
  A R Rajagopalan அவர்கள்
  ரிஷபன் Sir அவர்கள்
  ஸ்ரீராம் அவர்கள்
  D Chandramouli அவர்கள்
  வெங்கட் நாகராஜ் அவர்கள் ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
  ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்கள்
  பழனி கந்தசாமி அவர்கள்
  சீனா ஐயா அவர்கள் ***

  மற்றும்

  திருமதிகள்:
  -----------
  கோமதி அரசு அவர்கள்
  இராஜராஜேஸ்வரி அவர்கள் ******
  கோவை2தில்லி அவர்கள்
  ஷக்திப்ரபா அவர்கள்
  உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ******
  ஆறு முறைகள் பின்னூட்டமிட்டு தாமரையால் மஹாகணபதியை அர்சித்துள்ளது, இந்தப்பதிவினை மிகவும் சிறப்பித்ததாக அமைந்துள்ளது. தங்களுக்கு என்
  நன்றி நன்றி நன்றி
  நன்றி நன்றி நன்றி

  ******

  ***
  என் பிரியமுள்ள திரு சீனா ஐயா அவர்கள் மும்முறை வருகை தந்துள்ளது என்னை வியப்படையச் செய்துள்ளது, அவர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றி, நன்றி, நன்றி.
  ***

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 24. வினாயகர் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 27, 2015 at 6:23 PM

   //வினாயகர் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி//

   இப்போது தான் விநாயகரில் ஆரம்பம். போகப்போகப்பாருங்கோ; என் மூலம் :) [அதாவது என் பதிவுகள் மூலம்] மேலும் பல புதுப்புது விஷயங்கள் தங்களுக்குத் தெரியவரும்.

   இப்போது நான் அறிவித்திருக்கும் புதுப்போட்டியின் அடிப்படை நோக்கமே, தங்களைப்போன்று நடுவில் எங்கோ காணாமல் போய்விட்ட என் ஆத்மார்த்தமான நட்புகள், என் அனைத்துப் பதிவுகளையும் படித்து மகிழவேண்டும் ... பயனடைய வேண்டும் என்பது மட்டுமே.

   பிரியமுள்ள நட்புடன்
   கோபு

   நீக்கு
 25. ஆஹாஹா! அற்புதம்.


  தொப்பையப்பனைப் பற்றிய அருமையான விவரங்கள்.

  ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே

  படித்த எங்களுக்கும் பேரானந்தம்.

  பதிலளிநீக்கு
 26. பிள்ளையாரைப்பற்றிய அறிய பெரிய விஷயங்கள் முக்ண்ணுடைய தேங்காயின் விளக்கம் சிதறுகாய் குழந்தைகளுகே சொந்தம் தோபிகர்ணம் பிறந்தகதை மூஞ்சூரு வாகன தத்துவம் எல்லாமே சிறப்பாக சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 27. முழு முதற் கடவுள் குறித்து முழுமையான பதிவு...வாத்யாரே நீங்கள் நாகப்பட்டினத்தில் இருந்திருக்கிறீர்களா.. எந்தத் தெருவில்? நான் அங்கே 10 வருஷம் இருந்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI December 1, 2015 at 11:31 PM

   //வாத்யாரே நீங்கள் நாகப்பட்டினத்தில் இருந்திருக்கிறீர்களா.. எந்தத் தெருவில்? நான் அங்கே 10 வருஷம் இருந்திருக்கிறேன்..//

   இல்லை. நான் நாகைப்பட்டினம் போனதே இல்லை. பாண்டிச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு மட்டுமே சென்று வந்துள்ளேன்.

   **அப்போது (1941) நான் நாகப்பட்டிணத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தேன்.**

   இது 1941இல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து சொல்லியுள்ள ஸ்டேட்மெண்ட்.

   இது நடந்தபோது நான் பிறக்கவே இல்லை. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்தே நான் பிறந்துள்ளேன். :)

   அன்புடன் VGK

   நீக்கு
  2. To Mr Raviji Ravi Sir,

   http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html
   இந்த மேற்படி பதிவினில் நான் காட்டியுள்ள நம் பதிவர் தோழி திருமதி BS Sridhar (ஆச்சி) அவர்கள் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஆனால் இப்போ அவங்க இருப்பது டெல்லிக்கு அருகே ஹரியானாவில்.

   இது சும்மா உங்கள் தகவலுக்காக மட்டுமே .... அதாவது எல்லா ஊர்களிலும் நம் வலைத்தள் பதிவுலக நட்புகள் பரவி இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காக. :)

   நீக்கு