தன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தன் தாய் மரணப்படுக்கையில் அவஸ்தைப் படுவதைப் பார்க்க சகிக்காமல் மிகவும் வருந்தினான் ராஜேஷ். தாயின் கைகளை தன் கைகளால் ஆதரவுடன் பற்றினான். ஏதோ சொல்ல வருகிறாள். தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. அருகிலேயே அவன் தந்தை மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்துள்ளார். தலையணிக்கு அடியிலிருந்து ஒரு பதிவு செய்த ஒலிநாடாவை எடுத்து ராஜேஷிடம் கொடுத்து, போட்டு கேட்கச் சொல்லுகிறாள், அந்தத் தாய். ஒலி நாடாவில் அவன் தாயின் குரல் மிகத் தெளிவாக ஒலிக்க ஆரம்பிக்கிறது.
அன்புள்ள ராஜேஷ்,
“எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ” என்பது போல உன் அப்பாவுக்கு முன்பாக நான் இந்த உலகை விட்டு இன்னுள் சில நாட்களுக்குள் போய் விடுவேன் என்று தோன்றுகிறது. என்னால் இப்போது சுத்தமாகப் பேச முடியவில்லை. இதுபோல ஒரு நாள் என் நிலைமை முற்றிவிடும் என்று எதிர்பார்த்த நான், இதுவரை உன்னிடம் நேரடியாக பேசத்தயங்கிய பல விஷயங்களை, மனம் விட்டுப் பேசி பதிவு செய்திருக்கிறேன்.
நான் சுமங்கலியாக பூவுடனும், பொட்டுடனும் போய்ச் சேர்ந்து விட்டதாக இந்த உலகம் நாளை பேசும். ஆனால் சூதுவாது தெரியாத அப்பாவியான குழந்தை மனம் கொண்ட உன் அப்பாவைத் தவிக்க விட்டுச்செல்கிறேனே என்ற ஒரே கவலை தான் என் மனதை வாட்டி வருகிறது.
எங்களின் ஒரே பிள்ளையான நீ, வயதான எங்களுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்துள்ளாய். நிறைமாத கர்ப்பிணியாகிய உன் மனைவியும் எங்களின் சொந்த மகளைப்போலவே, எங்களிடம் அன்பு செலுத்தி வருகிறாள்.
இருப்பினும், வயதான எங்களிடம் நீ சில சமயங்களில் கடுகடுத்த முகத்துடன், எரிந்து விழுந்து, கோபமாக பேசிவிடுகிறாய். உன் சுபாவம் தெரிந்த நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அது போன்ற சமயங்களில் உன் அப்பாவின் குழந்தை மனம் உடைந்து நொறுங்கிப் போனது உண்டு. இதை பலமுறை உணர்ந்த நான் அவருடன் ஆறுதலாகப் பேசி சமாதானம் செய்துள்ளேன்.
உன் கடமைகளைச் செவ்வனே செய்துவரும் நீ, உன் அப்பாவின் உண்மையான, நியாயமான எதிர்பார்ப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உனக்கு எடுத்துச் சொல்வதே இந்த ஒலிநாடாவின் நோக்கம்.
செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட், வாஷிங் மெஷின், ஏ.ஸி போன்ற நவீன தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றி புரிந்து கொண்டு இயக்கத் தெரியவில்லை என்று எங்களிடம் கோபப்படுகிறாய். வயதான எங்களுக்குப் புரியும் படியாக விளக்க உனக்குக் கொஞ்சமும் பொறுமை இருப்பதில்லை.
நீ சின்னக் குழந்தையாய் இருந்தபோது உன் அப்பா உன் பாடங்களில் உனக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை உன் மனதில் பதியும் வரை எவ்வளவு பொறுமையாக, அழகான கதைகள் மூலமும், படங்கள் மூலமும் தகுந்த உதாரணங்களுடன் விளக்கிப் புரிய வைத்தார் என்பது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
வயதான அவரைப்போய், உங்கள் சாப்பிடும் கைகள் அழுக்காக உள்ளன; சுத்தமான சுகாதாரமான நாகரீக உடைகள் அணிவதில்லை; யாராவது வீட்டுக்கு வந்தால் அமைதியாக இருப்பதோ, நாகரீகமாக ஒரு சில வார்த்தைகளுடன் பேசி முடித்துக் கொள்வதோ இல்லை என்றெல்லாம் குறை கூறுகிறாய்.
உன் குழந்தைப் பருவத்தில், குளிக்க வரவே, அடம் பிடித்த உன்னைத் தாஜா செய்து, பாத் ரூம் அழைத்துப்போய், சோப்புப் போட்டுத் தேய்த்து குளிப்பாட்டி, நீயாகவே எப்படி தினமும் ஆசையாகக் குளிக்க வேண்டும், எப்படி அழகாக உடை அணிய வேண்டும், எப்படி தலைக்கு எண்ணெய் தடவி சீப்பினால் சீவி அலங்கரித்துக்கொள்ள வேண்டும், பிறரிடம் எப்படி நாகரீகமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று உனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தவரே உன் அப்பா தானே! என்பதை மறந்து விட்டு, இன்று அவரின் முடியாத வயோதிக நிலைமையில், அவரை உன் விருப்பதிற்கு கட்டுப்படுத்த முயல்வது எப்படி நியாயமாகும்? அடிக்கும் காற்றில், மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப் பார்த்து, துளிர் விடும் பச்சை இலை கேலி செய்யலாமா?
வயதாக வயதாக ஐம்புலன்களும், உடலும், உள்ளமும் சோர்வடைந்து எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஞாபக மறதி ஏற்படுகிறது. காது சரிவர கேட்பதில்லை. கண்களில் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எதையுமே மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஞாபகப் படுத்திக்கொள்ள நீண்ட நேரம் ஆகின்றது. கால்களில் உறுதி குறைந்து நடக்கவே கஷ்டமாக உள்ளது. தடிக்குச்சி ஊன்றி நடக்க வேண்டியுள்ள எங்களை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
நீ, குப்பறித்து நீந்தி, தவழ்ந்து, பிறகு பிடித்துக்கொண்டு நிற்க ஆரம்பித்து, அதன் பின் ஒரு நாள் திடீரென்று தத்தித்தத்தி முதல் அடி எடுத்து வைத்த அந்த பொன்னான நாட்களில், நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் உன்னைக்கீழே விழாமல் தாங்கித் தடுத்திருப்போம். வயதான நாங்களும் இன்று அது போன்ற ஒரு குழந்தையே என்பதை நீ உணர வேண்டும், ராஜேஷ்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வயதான பழமான நாங்களும், மேலும் மேலும் வாழ விரும்புவதில்லை. ஏதோ இறுதி மூச்சை எதிர்பார்த்து, நாட்களைக் கடத்தி வருபவர்களே, நாங்கள். எங்களையும் அறியாமல், நாங்களும் தலைமுறை இடைவெளியால் உங்களுடன் ஒத்துப்போக முடியாமல், ஏதாவது தவறாகவே கூட நடந்து கொண்டாலும், நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும், என்பதே எங்களின் மனப்பூர்வமான விருப்பமும், வேண்டுதலும் ஆகும்.
எங்கள் மரணம் கூட, உன் பார்வையிலேயே, நீ எங்கள் அருகில் இருக்கும் போதே, உன் மடியிலேயே நிகழ வேண்டும் என்பதே எங்களின் ப்ரார்த்தனை.
உனக்கு ஒரு மகனோ அல்லது மகளோ பிறந்த பின்பு தான், அதாவது நீயும் ஒரு அப்பா ஆன பிறகுதான், உனக்கு உன் அப்பா அம்மாவின் அருமையும், பெருமையும், பொறுமையும் விளங்கி புரிய ஆரம்பிக்கும், ராஜேஷ்.
எங்களுக்கு எப்போதும் உன் அன்பு வேண்டும்; உன் ஆதரவு வேண்டும்; உன் கனிவான பேச்சு வேண்டும். எங்களின் ஒரே மகனான உன்னிடம் பேசாமல் நாங்கள் வேறு யாரிடம் பேசி, அந்த உண்மையான அன்பை உரிமையுடன் பெற முடியும்? புரிந்து கொள்.....ராஜேஷ்.
இறுதி வரை புன் சிரிப்புடன் நீ எங்கள் மேல் அன்பு செலுத்தி, எங்க்ளின் மன அமைதியுடன் கூடிய இறுதிப்பயணத்திற்கு உதவி செய். முதலில் நான் புறப்படுகிறேன். உன் அப்பாவாவது தன் பேரனையோ பேத்தியையோ ஆசை தீரக் கொஞ்சி விட்டு வேறு ஒரு நாள், என்னிடம் பத்திரமாக வந்து சேர உதவி செய். செய்வாயா? ............ ராஜேஷ்.”
ஒலி நாடா இத்துடன் ஒலித்து ஓயந்தது.
மகனிடம் பேச வேண்டியதெல்லாம் தயக்கம் இன்றி பேசிவிட்டோம் ‘இனி துயரம் இல்லை’ என்று நினைத்தபடி, அந்தத் தாயின் உயிரும் பிரிந்திருக்கும் அல்லவா?
-------------------------------------------------------------
இந்தச் சிறுகதை, நாகர்கோவிலிலிருந்து வெளிவந்த “மனம் ஒளிர்ந்திட”என்ற மாதாந்திர சிற்றிதழில், ஜூலை 2007 இல் வெளியிடப்பட்டு, முதல் பரிசினை வென்றது.
இந்தக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் படும் துயரத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்க்கை அன்பால் மட்டுமே மதிப்பிடப்பட்டது ஒரு காலம்! இன்றைய வாழ்க்கை பெரும்பாலானவர் இல்லங்களில் சுயநலத்தாலும் பணத்தாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறது!
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், தங்கள் அன்பான கருத்துக்கும் நன்றி மேடம்.
பதிலளிநீக்கு[ I have retyped the story, as I am unable to make "copy & paste" from my word documents & pdf file, storage ]
அற்புதமான கதை சார்! உண்மைக்கு மிக அருகில்! கதை எழுத முயற்ச்சிக்கலாம் என்று நினைத்த போது , you have set the bar so high! I will still try, someday!
பதிலளிநீக்கு//bandhu said...
பதிலளிநீக்குஅற்புதமான கதை சார்! உண்மைக்கு மிக அருகில்! கதை எழுத முயற்ச்சிக்கலாம் என்று நினைத்த போது , you have set the bar so high! I will still try, someday!//
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் என் ம்னமார்ந்த நன்றிகள்.
தாங்கள் கதை எழுத முயற்சிக்கலாம் என்று நினைப்பதே வெற்றியின் முதல் படி.
அதற்கு நான் எழுதிய இந்தக் கதை ஒரு தூண்டுகோலாக உங்களுக்குத் தோன்றுவது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.
கட்டாயமாக இன்றே இப்போதே எழுத ஆரம்பிக்கவும்.
தாங்கள் மிகச் சிறந்த எழுத்தாளராக விரைவில் உருவாக, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் தொடர்ந்து சந்திப்போம்.
இறுதி வரை புன் சிரிப்புடன் நீ எங்கள் மேல் அன்பு செலுத்தி, எங்க்ளின் மன அமைதியுடன் கூடிய இறுதிப்பயணத்திற்கு உதவி செய். முதலில் நான் புறப்படுகிறேன். உன் அப்பாவாவது தன் பேரனையோ பேத்தியையோ ஆசை தீரக் கொஞ்சி விட்டு வேறு ஒரு நாள், என்னிடம் பத்திரமாக வந்து சேர உதவி செய். செய்வாயா? ............ ராஜேஷ்.”//
பதிலளிநீக்குபெற்றோர்களுடன் பேச நேரமில்லாமல் பேசினாலும் தங்கள் டென்ஷ்னை பெற்றோர்கள் மேல் காட்டும் குழந்தைகளுக்கு நல்லதொரு பாடம் இந்த கதை.
தனக்கு பின் தன் கணவரை நன்குப் பார்த்து கொள்ள சொல்லும் தாய்.
கண்களில் நீரை வரவழைத்து விட்டது.
கதையாக நினைத்து படிக்கமுடியவில்லை என்னால் :(
பதிலளிநீக்குஒவ்வொருவரின் வாழ்க்கையில் இதுபோன்ற கட்டத்தை தாண்டாமல் மரணிப்பதில்லை....
இது நிதர்சனம்....
குழந்தை கரு உண்டாவதில் இருந்து தரும் எல்லா அவஸ்தைகளையும் பொறுமையாக அமைதியாக ஆசையாக காத்திருந்து குழந்தை பிறந்ததும் அதனுடனே சிரித்து அதனுடனே அழுது, தவழ்ந்து, உண்டு, உடல் முடியாதபோது தானும் அந்த வலிகளை அவஸ்தைகளை மனதால் உணர்ந்து இப்படி எல்லாம் காக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வளர்ந்து கல்யாணம் ஆனதும் தனக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் சட்டென இத்தனை நாள் தன் உடலின் ஒரு பாகமாக இருந்து காத்த பெற்றோரை கடுமையாக பேசவும் நிந்திக்கவும் ஒதுக்கவும் அசூயை பார்க்கவும் எப்படி மனம் வருகிறது....
எங்கள் காலம் எப்படியோ என்ற பய நிழல் கண்முன் தெரிகிறது....
எத்தனை அருமையான கதை இது....
முதல் பரிசு பெற்றதற்காக என் அன்பு வாழ்த்துகள் கோபாலக்ருஷ்ணன் சார்..
கதை தான் எழுதினீர்களா?
இல்லை அந்த கதையாகவே ஆழ்ந்துவிட்டீர்களா?
அந்த ராஜேஷுக்கு அறிவுரை அன்புடன் சொல்லி புரியவைக்கும் தாயாகவே தன்னை உருவகப்படுத்திக்கொண்டீர்களா?
இந்த கதை படிக்கும் ஒவ்வொருவரும் நான் பெற்ற இந்த உணர்வுகளை பெறுவார்கள் என்று உறுதியுடன் சொல்லமுடிகிறது கோபாலக்ருஷ்ணன் சார்....
அருமையான வாழ்வியல் கதை பகிர்வு...
படிக்க தந்தமைக்கு அன்பு நன்றிகள் சார்....
அன்பால் கூடு கட்டி குருவிக்குஞ்சுகளை வளர்த்து அதே அன்பை வயோதிகத்தில் எதிர்ப்பார்க்குமுன்னரே கிடைக்கவேண்டும்...
ஆனால் அந்த அன்பை ஆதரவை கொடுக்க தவறும்போது ஏக்கமாக தன் எதிர்ப்பார்ப்பை பெற்றோர் கைநீட்டி யாசகமாக கேட்கும் அவலநிலை :(
கதை படிக்கும்போதே மனம் என்னவோ செய்கிறது...
அருமையான கதை சார்....
என் அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும் பகிர்வுக்கு....
அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...
உனக்கு ஒரு மகனோ அல்லது மகளோ பிறந்த பின்பு தான், அதாவது நீயும் ஒரு அப்பா ஆன பிறகுதான், உனக்கு உன் அப்பா அம்மாவின் அருமையும், பெருமையும், பொறுமையும் விளங்கி புரிய ஆரம்பிக்கும், ராஜேஷ்.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துலகப் பிரவேசம் பரிசுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது
தொடரட்டும் சந்தோஷங்கள்.
எங்கள் மரணம் கூட, உன் பார்வையிலேயே, நீ எங்கள் அருகில் இருக்கும் போதே, உன் மடியிலேயே நிகழ வேண்டும் என்பதே எங்களின் ப்ரார்த்தனை/
பதிலளிநீக்குபெற்றவர்களின் பிரார்த்தனையை அருமையாக சிறுகதையாகத் தந்து சிரப்பித்தமைக்கு நிறைவான பாராட்டுக்கள்..
30.12.2011 அன்று வெளியிடப்பட்ட, என் 2011 ஆண்டுக்கான 200 ஆவது பதிவில்,என் இந்த முதல் பதிவினைப்பற்றி குறிப்பிட்டுள்ளதைப் படித்து விட்டு, புதிதாக வருகை புரிந்துள்ள
பதிலளிநீக்குதிருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள்
திரு ரிஷபன் அவர்கள் +
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இதே கதையை மீள் பதிவாக ஆகஸ்டு 2011 இல் வெளியிட்ட போது
http://gopu1949.blogspot.com/2011/08/blog-post_15.html
உங்களில் பலரும், உங்களைத்தவிர பலரும் வருகை தந்து சிறப்பித்துள்ளீர்கள் என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.
எனக்கு அப்பா இல்லை,என்நிணைவுக்கு முன்னமே சேர்ந்துவிட்டார்.அதனால் அப்பாவின் பெருமை தெரியவில்லை.
பதிலளிநீக்குதோழர் வலிப்போக்கன் said...
பதிலளிநீக்கு//எனக்கு அப்பா இல்லை,என்நிணைவுக்கு முன்னமே சேர்ந்துவிட்டார்.அதனால் அப்பாவின் பெருமை தெரியவில்லை.//
த்ங்க்ளின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள், நண்பரே.
அண்ணா! உங்களின் வலைத்தளத்திற்கு இப்பதான் வந்தமையால் ஆரம்பம் முதல் படிப்படியாக படித்துவருவோமே என்றெண்ணி இச்சிறுகதையை படித்த எனக்கு, என்னைச் சுதாகரிக்க ரொம்ப நேரமாகியது. இது கதை அல்ல. பல குடும்பங்களில் இன்னும் நடந்துகொண்டிருக்கிற மனதை உலுக்குகின்ற நிஜம்.
பதிலளிநீக்குஇன்றைய காலகட்டத்தில் வாழும் இளைய தலைமுறையினருக்கு மிக அவசியமான நல்லதொரு விஷயத்தை கூறியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா!
மிக்க நன்றி!
அன்பின் இளமதி, வாருங்கள்.
பதிலளிநீக்குஎன் எழுத்துக்களின் மீது பிரியம் வைத்து, என் வலைத்தளத்திலிருந்து ஒவ்வொரு படைப்பாகப் படித்துப் பார்க்க தாங்கள் ஆர்வம் காட்டி ஆரம்பித்துள்ளது எனக்கு உண்மையிலேயே ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.
தினமும் நேரம் கிடைக்கும் போது ஒன்று அல்லது இரண்டு வீதம் படித்துப் பாருங்கள். மறக்காமல் கருத்து எழுதி பின்னூட்டமாக அனுப்புங்கோ.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள, என் முன்னூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் பல சிறப்பான சிறுகதைகள் உள்ளன. அவசியமாகப் படியுங்கோ.
பெரும்பாலும் நகைச்சுவை கலந்த கதைகளாகவும், பல திடீர் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடியவையாகவும் இருக்கும்.
பலராலும் பாராட்டுப்பெற்ற ஒருசில காதல் கதைகளும், அவற்றில் உண்டு. பெரும்பாலும் முடிவுகள் சுபமாகவே இருக்கும்.
தங்களின் வலைத்தளத்திற்குள் என்னால் செல்ல முடியவில்லையே? இன்னும் ஆரம்பிக்கவில்லையோ? ஏதாவது எழுத ஆரம்பித்தபிறகு தகவல் கொடுங்கோ.
இங்கு அன்புடன் வருகைதந்து அழகாக கருத்துக்கள் கூறியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது, இளமதி. மிக்க சந்தோஷம் + நன்றிகள்.
தினமும் தங்களின் கருத்துக்களை அன்புடன் அடுத்தடுத்த படைப்புக்களில் எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே ஒரே ஒருவர் மட்டும் என் அனைத்துப் படைப்புக்களையும், ஒன்று விடாமல் படித்துவிட்டு,
கருத்து அளித்துள்ளார்கள். அவர் பெயர் கீழ்க்கண்ட இணைப்பில் என்னால் கெளரவிக்கப்பட்டுள்ளது.
http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html
தங்களின் ஆர்வத்தைப் பார்த்தால் அதுபோலவே தாங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன்.
பிரியமுள்ள,
VGK
[You may just note My e-mail ID : valambal@gmail.com ]
இனி துயரம் இல்லை" உண்மையா அண்ணா எனக்கு நெஞ்சடைத்து, கண்ணீரே வந்துவிட்டது. சூப்பர் அண்ணா. அதில் நீங்க கொடுத்த "எரியும் விளக்கில் திரி முந்தியோ,எண்ணேய் முந்தியோ,"அடிக்கும் காற்றில் மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப்பார்த்து துளிர்விடும் பச்சை இலை கேலி செய்யலாமா" சூப்பர் உவமானம். இக்கதைக்கு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி Ms. Ammulu Madam அவர்களே,
பதிலளிநீக்குவாருங்கள். வணக்கம்.
// ......... சூப்பர் உவமானம்.
இக்கதைக்கு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் வாழ்த்துகளும் என்னை மிகவும் மகிழ்வளிக்கிறது, மேடம்.
நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
அண்ணா என்னை மேடம் என்று அழைக்கத்தீர்கள். தங்கை அல்லது சகோதரி என்றோ, பெயர்சொல்லியோ அழையுங்கள்.மேடம் என்று சொல்லுமளவு பெரியவள் இல்லை.நன்றி.
பதிலளிநீக்குOK Madam, Sorry OK அம்முலு. NOTED YOUR REQUEST.
நீக்குஆனால் தினமும் உங்களிடமிருந்து குறைந்த பக்ஷம் ஒரு பின்னூட்டமோ அல்லது ஏதாவது ஒரு மெயிலோ எனக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான் தாங்கள் சொன்ன இந்த பாய்ண்ட் எனக்கு நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அதுபோல உறவுகள் சொல்லியோ பெயர் சொல்லியோ எழுத எனக்கு ஞாபகமாக கை வரும்.
இதுபோல அடிக்கடி தொடர்பில் இல்லாது போனால், நானும் மறந்து போய், மீண்டும் மேடம் என்றே அழைக்கத் தொடங்கி விடுவேன்.
OK தானே தங்கச்சி! Very Good.
Have a very Nice Day.
All the Best.
Thank you very much.
பிரியமுள்ள
அண்ணா VGK
அன்பின் வை.கோ - 2007ல் இந்தச் சிறுகதை, நாகர்கோவிலிலிருந்து வெளிவந்த “மனம் ஒளிர்ந்திட”என்ற மாதாந்திர சிற்றிதழில், ஜூலை 2007 இல் வெளியிடப்பட்டு, முதல் பரிசினை வென்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஓர் மகிழ்ச்சியான செய்தி:
பதிலளிநீக்குநான் எழுதியுள்ள இந்த என் சிறுகதை நேற்று 10.08.2014 தேதியிட்ட ‘ஹம் லோக்’ என்ற பிரபல ஹிந்தி இதழில் எட்டாம் பக்கத்தில், ‘அப் துக் நஹி ஹை’ என்ற தலைப்பினில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோல என் தமிழ் கதைகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது, எனக்குத் தெரிந்து மூன்றாவது முறையாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழியாக்கம் செய்துள்ளவர்: திருமதி. பாக்யம் ஷர்மா அவர்கள்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளவர். இவர் தமிழும், ஹிந்தியும் தெரிந்த ஓர் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
ரயில் வேகம் எடுத்து விட்டது. இனி பதிவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒவ்வொன்றையும் படிக்க நேரம் தேவைப்படுகின்றது.
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி April 11, 2015 at 7:05 AM
நீக்கு//ரயில் வேகம் எடுத்து விட்டது. இனி பதிவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒவ்வொன்றையும் படிக்க நேரம் தேவைப்படுகின்றது.//
வாங்கோ, வணக்கம்.
WELCOME TO YOU Sir !
ALL THE BEST !!
அன்புடன் VGK
சொல்லப்பட்ட அறிவுரைகள் அத்தனை வீட்டிலுள்ள எல்லா மனிதருக்கும் பொருந்தும். அதை சிறுகதை வடிவில் உருக்கமாக வரைந்து விட்டீர்களே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குShakthiprabha April 14, 2015 at 2:42 PM
நீக்கு//சொல்லப்பட்ட அறிவுரைகள் அத்தனை வீட்டிலுள்ள எல்லா மனிதருக்கும் பொருந்தும். அதை சிறுகதை வடிவில் உருக்கமாக வரைந்து விட்டீர்களே! வாழ்த்துக்கள்!//
வாங்கோ, வணக்கம்.
WELCOME TO YOU Shakthi !
ALL THE BEST !!
அன்புடன் கோபு
தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்சனைகளுக்கு தலைமுறை இடைவெளி மட்டுமே காரணமல்ல, இந்த இயந்திர உலகத்தில் பொறுமை கூட இல்லாமல் போய்விடுகிறது.
பதிலளிநீக்குபெற்ற தாய் தகப்பனுக்கு நேரத்தை செலவழிக்க மனமில்லாதவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நேரத்தை செலவழிப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. தன்னையும் அப்படிதானே தன் பெற்றோர் வளர்த்திருப்பார்கள் என்று ஒரு நொடி நினைத்துப் பார்த்தாலும் போதும். மனம் மாறிவிடும்.
இந்தக் கதையில் வரும் தாயின் நிலை எவ்வளவு பரிதாபம். மரணத்தருவாயிலும் கணவரைப் பற்றிய கவலை. குழந்தை போன்ற தன் கணவரை சிடுசிடுக்கும் மகனின் பொறுப்பில் விட்டுப்போகவேண்டிய கவலை.. தானில்லாமல் அவர் படும் துயரை நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை அத்தாய்.
தாயின் முன்யோசனையை எண்ணி வியக்கிறேன். தனக்குப் பின் கணவரின் நிலை பற்றிய யோசனை மட்டுமல்ல, தன்னால் பேச இயலாமல் போகும் என்று அறிந்து முன்யோசனையாக தான் பேசவேண்டியவற்றைப் பதிவு செய்து மகனிடம் ஒப்படைத்த விதம் மனம் தொட்டது.
தாயின் இழப்பும், வரவிருக்கும் குழந்தையின் பிறப்பும் நிச்சயம் மகனை மாற்றி தந்தையை அரவணைக்கவைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
சிற்றிதழில் வெளியானதற்கும் முதல் பரிசு பெற்றதற்கும் இனிய பாராட்டுகள் கோபு சார்.
கீத மஞ்சரி April 15, 2015 at 1:09 PM
நீக்குதந்தைக்கும் பிள்ளைகளுக்குமான ..................................... தாயின் இழப்பும், வரவிருக்கும் குழந்தையின் பிறப்பும் நிச்சயம் மகனை மாற்றி தந்தையை அரவணைக்கவைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. //
//சிற்றிதழில் வெளியானதற்கும் முதல் பரிசு பெற்றதற்கும் இனிய பாராட்டுகள் கோபு சார்.//
வாங்கோ, வணக்கம்.
WELCOME TO YOU Madam !
ALL THE BEST !!
அன்புடன் கோபு
ராஜேஷின் தாய் மனதில் உள்ளதை கொட்டி விட்டாள். இது போல் எத்தனையோ தாயார்கள் மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமலும், மெல்ல முடியாமலும் தவிக்கிறார்கள். அவர்களின் தவிப்பை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். காலத்தின் கோலம் என்ன செய்ய.
பதிலளிநீக்குஒரு சர்வே சொல்கிறது, கணவனை இழந்த மனைவிகளை விட மனைவியை இழந்த கணவனால் அவள் இழப்பை தாங்கவே முடிவதில்லை என்று. உண்மைதான். பெண்கள் வீட்டு வேலை செய்வதிலும், பேரன், பேத்திகளுடன் பொழுதைக் கழித்து விடுகிறாள். ஆனால் ஆணுக்கு அது கஷ்டம்தான்
பதிலளிநீக்குமறந்து விட்டேனே.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
இந்த மணியான சிறுகதை ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Jayanthi Jaya April 16, 2015 at 10:33 AM
நீக்கு//மறந்து விட்டேனே. முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த மணியான சிறுகதை ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
வாங்கோ, வணக்கம்.
WELCOME TO YOU MY DEAR JAYA !
ALL THE BEST !!
அன்புடன் கோபு
மனத்தை உலுக்கிய கதை. ஆம்! இதுதானே நிதர்சனமான உண்மை. உண்மை வலிக்கத்தானே செய்யும்! அருமை!
பதிலளிநீக்குசிற்றிதழில் வெளியாகி முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள் சார்!
Thulasidharan V Thillaiakathu April 16, 2015 at 3:40 PM
நீக்கு//மனத்தை உலுக்கிய கதை. ஆம்! இதுதானே நிதர்சனமான உண்மை. உண்மை வலிக்கத்தானே செய்யும்! அருமை!
சிற்றிதழில் வெளியாகி முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள் சார்!//
வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி.
WELCOME TO YOU Sir !
ALL THE BEST !!
அன்புடன் VGK
வயதானவர் களின் மன உணர்வு களை அவ்ளவு தத்ரூபமா சொல்லி இருக்கூங்க. கதை படிப்பது போல் இல்லாமல் அந்த வூட்டில நாமும இருப்பது போலவே நினைக்க வைக்கும எழுத்துக்களால் எல்லார் மனதையும் கட்டி போட்டுடிங்க
பதிலளிநீக்குபூந்தளிர் April 24, 2015 at 6:35 PM
நீக்கு//வயதானவர்களின் மன உணர்வுகளை அவ்வளவு தத்ரூபமா சொல்லி இருக்கீங்க. கதை படிப்பது போல் இல்லாமல் அந்த வூட்டில நாமும இருப்பது போலவே நினைக்க வைக்கும் எழுத்துக்களால் எல்லார் மனதையும் கட்டி போட்டுடிங்க//
வாங்கோ, வணக்கம்.
WELCOME TO YOU MY DEAR SIVAKAMI !
ALL THE BEST !!
அன்புடன் கோபு
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஏற்கனவே என்னுடைய மறுமொழி - கருத்து பின்னூட்டமாக இங்கு வெளி வந்திருக்கிறது. இருப்பினும் மீண்ட்சும் ஒரு பின்னூட்டம் அளிக்க விரும்புகிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குதாங்கள் எழுதியுள்ள இந்த தங்களீன் சிறுகதை நேற்று 10.08.2014 தேதியிட்ட ‘ஹம் லோக்’ என்ற பிரபல ஹிந்தி இதழில் எட்டாம் பக்கத்தில், ‘அப் துக் நஹி ஹை’ என்ற தலைப்பினில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறித்து மிக்க மகிழ்ச்சி .
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இதுபோல என் தமிழ் கதைகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது, எனக்குத் தெரிந்து மூன்றாவது முறையாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஇப்பதிவினில் என்னுடைய மூன்று மறுமொழிகள் இடம் பெற்றிருக்கின்றன.
பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
cheena (சீனா) May 5, 2015 at 5:49 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//அன்பின் வை.கோ., இப்பதிவினில் என்னுடைய மூன்று மறுமொழிகள் இடம் பெற்றிருக்கின்றன. பாராட்டுகள். நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா //
ஐயா, என் பதிவுகள் பலவற்றிலும், தங்களின் மறுமொழிகள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன என்பதை நானும் அறிவேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.
அவ்வாறு ஏற்கனவே பின்னூட்டம் இடப்பட்டுள்ள பதிவுகளுக்கு மீண்டும் பின்னூட்டம் இடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை, ஐயா.
அவ்வாறான பதிவுகளுக்கு மட்டும் ஜஸ்ட் :) ஓர் ஸ்மைலி குறியினை மட்டும் புதிய பின்னூட்டமாகக் கொடுத்துவிட்டு அடுத்தப்பதிவுக்கு சென்று விடுங்கள், ஐயா.
அந்த :) ஸ்மைலி குறியின் மூலம் நான் புரிந்துகொள்வேன், ஐயா.
என்றும் அன்புடன் தங்கள் VGK
நான் ஏற்கனவே இந்த கதையை படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமனம் கனத்துப்போய் பிண்ணுட்டம் எழுதாமல் நகர்ந்து இருக்கிறேன்.
இன்று மீண்டும் படித்தேன்.
அதே மனநிலைதான் இன்றும்.
ஆனாலும் என்ன செய்ய.
எதையும் மாற்றி அமைக்கும் சூழ்நிலை இன்று வயதானவர்களுக்கு இயலவில்லை.இயலாமையை பொறுமை என்ற பெயரில் சகிக்க பழக வேண்டும்.அதுதான் நிதர்சனம்.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
செரியான தேர்ந்தெடுப்பு.
விஜயலட்சுமி
குருஜி கத படிச்சிட்டிருக்கேல அம்மி அளுகுது. எங்க வாப்பா நெனப்பு வந்திச்சாம். எனக்கு5- வயசுலியே வாப்பா மவுத் ஆகி போச்சி. மொகம்கூட நெனப்பில்ல. அண்ணனுக்கும் எனக்கும் அம்மிதான் எல்லாம். பாதி படிக்கேலயே மேக்கொண்டு படிக்கேணாம்னுட்டு. அவ்ளவ் தத்ரூபமான எளுத்து. மனசே கனத்து போச்சி.
பதிலளிநீக்குmru October 7, 2015 at 1:31 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//குருஜி கத படிச்சிட்டிருக்கேல அம்மி அளுகுது.//
அச்சுச்சோ ...... அம்மியை இப்படி அழ விடலாமா? வேறு ஏதேனும் என் சிரிப்புக்கதைகளை படிச்சுச்சொல்லி, சிரிக்க வையுங்கோ, ப்ளீஸ்.
//எங்க வாப்பா நெனப்பு வந்திச்சாம். எனக்கு 5-வயசுலியே வாப்பா மவுத் ஆகி போச்சி. மொகம்கூட நெனப்பில்ல. அண்ணனுக்கும் எனக்கும் அம்மிதான் எல்லாம். பாதி படிக்கேலயே மேக்கொண்டு படிக்கேணாம்னுட்டு.//
வெரி வெரி ...... ஸாரிம்மா.
//அவ்ளவ் தத்ரூபமான எளுத்து. மனசே கனத்து போச்சி. //
தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-=-=-=-=-=-=-
ஒருவேளை நான் அறிவித்துள்ள லேடஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளீர்களோ?
Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html
போட்டி முடிய, போட்டியின் இறுதி நாளுக்கு (31.12.2015) இன்னும் 86 நாட்கள் மட்டுமே உள்ளன. தினமும் 10 பதிவுகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டால் மட்டுமே, சுலபமாக முடிக்க முடியும். 2016 புத்தாண்டு ஆரம்பத்தில் ரூ. 1000 ரொக்கப்பரிசு பெற முடியும். இது ஓர் தகவலுக்காக மட்டுமே.
இதில் கட்டாயம் ஏதும் இல்லை. தங்கள் விருப்பம்போல மட்டுமே. ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ள பதிவுகளுக்கு மீண்டும் பின்னூட்டம் இட வேண்டிய அவசியம் இல்லை.
பிரியமுள்ள குருஜி ..... கோபு
குருஜி போட்டில கலக்க மனசு பூராக்கும் ஆச இருக்குது. 1000--ரூவா எனக்கு ரொம்ப பெரிய தொக. பரிசு பணத்துல என்னலாமோ வாங்க ஆச. ஆச இருக்கு தாசில் பண்ண சொலவடதா நெனப்புக்கு வருது. பல பதிவு படிக்கோணம்னுதா நெனச்சிருக்கேன். இப்ப கூட ஏணி தோணி படிச்சுகிட்டுதா இருக்கேன். அம்மியும் பொறத்தால குந்திகிட்டு இருக்கு.
நீக்குmru October 8, 2015 at 2:25 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்.
//குருஜி போட்டில கலக்க மனசு பூராக்கும் ஆச இருக்குது.//
மிகவும் சந்தோஷம். இதைக்கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது. :)
//1000--ரூவா எனக்கு ரொம்ப பெரிய தொக. பரிசு பணத்துல என்னலாமோ வாங்க ஆச. ஆச இருக்கு தாசில் பண்ண சொலவடதா நெனப்புக்கு வருது.//
:)))))
750 பதிவுகளையும் படித்து பின்னூட்டமிட வேண்டுமானால் தினமும் 10 பதிவுகள் வீதம் வைத்துக்கொண்டாலே எப்படியும் அடுத்த 75 நாட்கள் ஆகும்.
இதுவரை இதில் ஆர்வமாகக் கலந்துகொண்டுவரும் நான்கு பேர்களுக்கு மட்டுமே பரிசு கிடைக்கப்போவது இன்றைய தேதியில் உறுதியாகத் தெரிகிறது.
இப்போதைக்குத் தங்களின் கல்லூரிப் படிப்புதான் முக்கியம். அதில் முழுவதுமாக கவனம் செலுத்துங்கோ. படிப்பு சம்பந்தமாக ஏதேனும் உதவிகள் தேவையென்றால் எனக்கு மெயில் மூலம் தயங்காமல் தெரியப்படுத்தவும்.
//பல பதிவு படிக்கோணம்னுதா நெனச்சிருக்கேன். இப்ப கூட ஏணி தோணி படிச்சுகிட்டுதா இருக்கேன். அம்மியும் பொறத்தால குந்திகிட்டு இருக்கு. //
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
குருஜி மொதக கொஞ்சமா லிங்க் அனுப்பிதார முடியுமா (மெயில்ல) மிடியாதுன்னுகிட்டு நெனப்பத வுட்டு முயற்சி செய்து பாத்துபொடலாம்ல. ஆரம்பத்திலந்து தாங்க.
பதிலளிநீக்குmru October 8, 2015 at 3:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//குருஜி மொதக கொஞ்சமா லிங்க் அனுப்பிதார முடியுமா (மெயில்ல) மிடியாதுன்னுகிட்டு நெனப்பத வுட்டு முயற்சி செய்து பாத்துபொடலாம்ல. ஆரம்பத்திலந்து தாங்க.//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2011 ஜனவரி மாதப்பதிவுகளின் லிங்க்ஸ் - மொத்தம் 22 மட்டும் மெயில் மூலம் இன்று இப்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிலேயே க்ளிக் செய்து அந்தந்த இணைப்புகளுக்குச் சென்று பின்னூட்டமிட முடியும்.
அதைத் தாங்கள் முழுவதுமாக முடித்ததும், அதே போல அடுத்தடுத்த ஒவ்வொரு மாத லிங்க்ஸ்களும் மெயில் மூலம் என்னால் அனுப்பி வைக்கப்படும்.
தினமும் ஒரு மாதப்பதிவுகள் என தாங்கள் முடிக்க முயற்சி செய்தால், அடுத்த 51 நாட்களிலேயே முழுவதுமாகத் தாங்கள் முடித்து விடலாம்.
போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவும், இறுதியில் வெற்றிபெறவும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். :)
ALL THE BEST !
குருஜி இவ்வள வெரசா லிங்க அனுப்பினிங்க. தாங்கூவெரி வெரிமச்.
பதிலளிநீக்குmru October 8, 2015 at 4:07 PM
நீக்கு//குருஜி இவ்வள வெரசா லிங்க அனுப்பினிங்க. தாங்கூவெரி வெரிமச்.//
உங்கள் ‘குருஜி’க்கு அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ’ஸ்பீடு கிங்’ என்ற பெயரே உண்டாக்கும். :)))))
எப்படி இந்தக் கதை படிக்காமல்
பதிலளிநீக்குவிட்டுப்போனதெனத் தெரியவில்லை
குழந்தைப் பருவத்திற்குரிய அதே நிலை
வயதான்பின்பு வந்து விடுகிறது
அதை அனைவரும் புரிந்து நடக்கவேண்டும் எனும்
கருத்தை அற்புதமாகச் சொல்லிப் போகும்
படைப்பு (கதையெனச் சொல்ல மனம் வரவில்லை )
அருமையிலும் அருமை
வாழ்த்துக்களுடன்...
Ramani S October 16, 2015 at 9:03 PM
நீக்கு//எப்படி இந்தக் கதை படிக்காமல் விட்டுப்போனதெனத் தெரியவில்லை. குழந்தைப் பருவத்திற்குரிய அதே நிலை
வயதான பின்பு வந்து விடுகிறது. அதை அனைவரும் புரிந்து நடக்கவேண்டும் எனும் கருத்தை அற்புதமாகச் சொல்லிப் போகும் படைப்பு (கதையெனச் சொல்ல மனம் வரவில்லை ) அருமையிலும் அருமை//
வாங்கோ Mr. S Ramani Sir. வணக்கம்.
என் ‘சிறுகதை விமர்சனப்போட்டி - 2014’ இன் ஆரம்ப காலக்கட்டத்தில் மட்டும் தாங்கள் கலந்துகொண்டு விமர்சனச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து ‘ஜீவீ..வீஜீ விருது' பெற்ற http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html தாங்களே, இந்த என் முதல் பதிவுக்கு வருகை தந்து இன்று கருத்துச்சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இப்போதும் என் வலைத்தளத்தில் ஓர் மிகச்சுலபமான போட்டியொன்று மிகவும் அமைதியாக நடந்து வருகிறது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
மேற்படி போட்டிக்கான விபரங்கள் இதோ இந்தப்பதிவினில் உள்ளன. http://gopu1949.blogspot.in/2015/03/120404.html
மேலும் சில மகிழ்ச்சியான செய்திகள் இன்று நம் ’மன அலைகள்’ பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:
http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html
மேற்படி போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதித்தேதியான 31.12.2015க்கு இன்னும் சுமார் 75 நாட்கள் மட்டுமே உள்ளன.
தாங்களும் இந்தப்போட்டியினில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தால், எனக்கும், என் வலைப்பதிவுக்கும், என் புதிய போட்டிக்கும் ஓர் தனிப்பெருமையாக இருக்கக்கூடும் என நான் நம்புகிறேன் + எதிர்பார்க்கிறேன்.
தங்களுக்கு இதற்கான நேரம் + இதர சூழ்நிலைகள் ஒருவேளை சாதகமாக அமைந்திருப்பின், தயவுசெய்து இந்தப்போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பித்துத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் VGK
முதல் அடி எடுத்து வச்சுட்டேன். போட்டிக்கான முதல் கதை இதுதானே.? மனதை தொட்ட கதை. சின்ன வயசுலயாவது கஷ்டங்களையும் வறுமை நிலமையையும் தாங்கி கொள்வதற்கு மனதில் ஒரு தைரியமும் உடம்பில் தெம்பும் இருக்கும் முதுமையில் அதெல்லாமே சொல்லிக்காம காணாம போயிடும். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும்தான் துணை. அதுவும் நிரந்தரம் இல்லியே. திரி முந்தியா எண்ணை முந்தியான்னுதான் றனது பரிதவிக்கும். செம்மையான எழுத்துக்களில் சொல்லி இருக்கீங்க.
பதிலளிநீக்குசரணாகதி. November 15, 2015 at 1:13 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//முதல் அடி எடுத்து வச்சுட்டேன். போட்டிக்கான முதல் கதை இதுதானே.? //
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள். போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)
நன்றியுடன்,
VGK
நெஞ்சைத் தொடும் எதார்த்தமான கதை! இதை படிக்கும் நிறைய ராஜேஷ்கள் யோசிப்பார்கள். மாறவும் கூடும். ஒலி நாடா ஓய்ந்ததும் என்ன நடந்தது என்பதை வாசிப்பாளரின் கற்பனைக்கே விட்ட விதம் அருமை...
பதிலளிநீக்கு//உனக்கு ஒரு மகனோ அல்லது மகளோ பிறந்த பின்பு தான், அதாவது நீயும் ஒரு அப்பா ஆன பிறகுதான், உனக்கு உன் அப்பா அம்மாவின் அருமையும், பெருமையும், பொறுமையும் விளங்கி புரிய ஆரம்பிக்கும்/யதார்த்தமான வரிகள். நெஞ்சம் நெகிழ்ந்தது!
பதிலளிநீக்குகதை படிக்கறோம்னே தோணல. அந்த அம்மா நேரில் மகனுடன் பேசியிருந்தா கூட இவ்வளவு விஷயங்களை தெளிவா பேசியிருக்க முடியாது பேசமுடியாம தொண்டை அடைக்கும். முன் யோசனையுடன் பேச்சை பதிவு பண்ணியது புத்திசாலித்தனம். ஒருகுழந்தையை எபற்று எப்படி எல்லாம் பாராட்டி சீராட்டி வளர்த்தாங்கன்னு அந்த அம்மா சொல்லி மகன்கள் புரிந்து கொள்ள வேண்டி இருக்கு. தனக்கு பிறகு கணவர் எந்த விதத்திலும் கஷ்டங்களை அநுபவித்து விடக்கூடாதே என்கிர மனைவியின் தவிப்பு .சின்ன வயதில் அந்த தந்தை மகனுக்கு ஆசை ஆசையாக என்னவெல்லாம் செய்தார் என்று சொல்வது யதார்த்தம். கணவர் முதலில் இறந்துவிட்டால் மனைவி வீட்டு வேலைகளிலோ பேரக்குழந்தைகளுடன் விளையாடியோ மறுமகளுக்கு சமையல் வேலைகளில் உதவிகள் செய்தோ தங்களை டைவர்ட் பண்ணிக்கறாங்க. அதே மனைவியை இழந்த கணவன்மார்கள் எதிலயுமே தன்னை ஈடு படுத்திக்கொள்ள முடியாமல் தவித்துதான் போவார்கள். ஏன் என்றால் எல்லாவற்றிற்குமே மனைவியின் கையை எதிர்பார்த்தே பழகி இருப்பாங்க. அதான். பத்திரிகையில இந்த கதை வெளி வந்ததற்கு வாழ்த்துகள். ஒருகதைய படிச்சோம் போனோம்னு இல்லாம என்னல்லாம் யோசிக்க வைக்குது இந்த கதை. இதுதான் உங்க திறமையான எழுத்துக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துகள் . சார். வரிசையாக வரேன்.....
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி...January 8, 2016 at 10:53 AM
நீக்குகதை படிக்கறோம்னே தோணல. அந்த அம்மா நேரில் மகனுடன் பேசியிருந்தா கூட இவ்வளவு விஷயங்களை தெளிவா பேசியிருக்க முடியாது பேசமுடியாம தொண்டை அடைக்கும். முன் யோசனையுடன் பேச்சை பதிவு பண்ணியது புத்திசாலித்தனம். ............. .......................................................
பத்திரிகையில இந்த கதை வெளி வந்ததற்கு வாழ்த்துகள். ஒருகதைய படிச்சோம் போனோம்னு இல்லாம என்னல்லாம் யோசிக்க வைக்குது இந்த கதை. இதுதான் உங்க திறமையான எழுத்துக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துகள். சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
//வரிசையாக வரேன்.....//
இதுபோல மேதுவாகவே தினமும் ஒன்று அல்லது இரண்டு வீதம் வாங்கோ, போதும். மிக்க நன்றி.
முதல் அடி பலமாகவே விழுந்திடிச்சு... பெற்றவன் பெற்றவள் மன உளைச்சல் உருக்கமா பதிவு பண்ணி இருக்கீங்க.. பெற்றவர்களையே அறியாத பிள்ளைகளின் மன உணர்வுகள் இதைவிட ரொம்பவே உருக்கமானது. வார்த்தைகளில் அடக்கி விட முடியாது..கதை பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியமா இருக்கு...
பதிலளிநீக்குப்ராப்தம் May 29, 2016 at 10:44 AM
நீக்குவாங்கோ திருமதி. சாரூஊஊஊ அவர்களே, வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவினில் தங்களை சந்திக்கும் ப்ராப்தம் கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.
தங்களின் புதிய இல்வாழ்க்கை ’ஸ்மூத்லி கோயிங்’ ஆக இருக்கும் என நினைத்து மகிழ்கிறேன். :)
//முதல் அடி பலமாகவே விழுந்திடிச்சு... பெற்றவன் பெற்றவள் மன உளைச்சல் உருக்கமா பதிவு பண்ணி இருக்கீங்க..//
அப்படியா!!!! சந்தோஷம்.
//பெற்றவர்களையே அறியாத பிள்ளைகளின் மன உணர்வுகள் இதைவிட ரொம்பவே உருக்கமானது. வார்த்தைகளில் அடக்கி விட முடியாது..//
அது மிகவும் கொடுமையான விஷயம்தான். எந்த ஒரு குழந்தைக்கும் அதுபோன்றதோர் நிலை வரவே கூடாது.
//கதை பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியமா இருக்கு...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ஆல் தி பெஸ்டு...டா, சாரூஊஊஊ. இன்பமுடன் இன்றுபோல என்றும் இனிதே வாழ என் இனிய நல்லாசிகள். :)))))
எங்கட கோபூஜிய கலகலப்பா ஜாலியான ஆளாகத்தான் தெரியும்.. அவங்க கிட்டேந்து இப்படி ஒரு சோகமான உருக்கமான கதையா... எதைப்பத்தி வேணாலும் சூப்ரா எழுத கோபூஜியால மட்டுமே முடியும்.பின்னூட்டங்களிலும் கதையை எல்லாரும் ரசித்தவிதம் பற்றி சொல்லி இருக்காங்க
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. May 29, 2016 at 10:51 AM
நீக்குவாங்கோ முன்னா, வணக்கம்மா.
//எங்கட கோபூஜிய கலகலப்பா ஜாலியான ஆளாகத்தான் தெரியும்..//
அப்படியா !!!!! மிகவும் சந்தோஷம்மா. :)
//அவங்க கிட்டேந்து இப்படி ஒரு சோகமான உருக்கமான கதையா... எதைப்பத்தி வேணாலும் சூப்ரா எழுத கோபூஜியால மட்டுமே முடியும்.//
‘இனி துயரம் இல்லை’ எனக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பில், ஓர் போட்டிக்காக என்னால் எழுதி அனுப்பப்பட்ட கதை இது. அதனால் இதுவரை அவளுக்கு அவள் மனதில் இருந்துவந்த துயரத்தைப் பற்றி நானும் கொஞ்சம் சுட்டிக்காட்டி எழுதும்படி ஆகிவிட்டது.
மற்றபடி நான் எழுதி வெளியிட்டுள்ள கதைகளில் சுமார் 99% சுபமான சுகமான ஜாலியான கதைகளாக மட்டுமே, அதுவும் நகைச்சுவை சற்றே தூக்கலாக உள்ள கதைகளாகவே இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
//பின்னூட்டங்களிலும் கதையை எல்லாரும் ரசித்தவிதம் பற்றி சொல்லி இருக்காங்க//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முன்னாக்குட்டி.
இதுதான் உங்க முதல் கதையா..என்ன வீரியமான எழுத்து. படிக்கறவங்க மனச பதம் பார்க்குது.மனதை தொட் கலங்க வைத்த உருக்கமான கதை. கமெண்டுல நெறய பேர் பாராட்டி சொல்லி இருக்காங்க. என் பாராட்டுகளையும் தெரிவிச்சுக்கறேன்..
பதிலளிநீக்கு@ Happy 11.08.2016
நீக்குஎன்னுடைய முதல் பதிவுக்கான தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இதைத் தொடர்ந்து என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கு வருகை தாருங்கள் + கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
WELCOME TO YOU HAPPY !
I TOO FEEL VERY VERY HAPPY !! :)
இது கதையல்ல. ஒவ்வொரு 60+ ஆன பெற்றோர்களும் சந்திக்கும் நிஜம். அதை எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதே...
பதிலளிநீக்குஎன்னுடைய பெரியப்பா என் சிறிய வயதில் ஒன்றைச் சொன்னார். "அன்பு என்பது மலையிலிருந்து வரும் தண்ணீர் மாதிரி. அது மேலிருந்து கீழ் நோக்கித்தான் பாயும். கீழிருந்து மேலே பாயாது" என்று. இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு மறக்கவில்லை.
சிறுபான்மையரைத் தவிர, சிடு சிடுக்காமல், பெற்றோரை, அவர்களின் வயதான காலத்தில் அன்போடு அரவணைப்பவர்கள் மிகவும் குறைவு. இதை எத்தனை சொல்லியும் மாற்றுவது ரொம்பக் கடினம்.
நல்ல கருத்துள்ள கதை. பரிசுக்கு முற்றிலும் தகுதியானது.
"அன்பு என்பது மலையிலிருந்து வரும் தண்ணீர் மாதிரி. அது மேலிருந்து கீழ் நோக்கித்தான் பாயும். கீழிருந்து மேலே பாயாது"
நீக்குஉண்மையை மிகவும் அனுபவித்துச் சொல்லியுள்ளார்கள்.
தங்களின் வருகைக்கும் ’நல்ல கருத்துள்ள கதை. பரிசுக்கு முற்றிலும் தகுதியானது’ என்ற பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.