என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]


குழந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதோ என்று பயந்து ஓடிப் போய்ப் பார்த்தோம்.

கட்டிலின் ஒரு ஓரமாக சுவற்றை ஒட்டி வைக்கப்பட்டிருந்த லாப்டாப் குழந்தையால் இழுத்து கீழே தள்ளிவிடப் பட்டிருந்தது.
சுளையாக நாற்பதாயிரம் ரூபாய் போட்டு புதிதாக அவர் சமீபத்தில் வாங்கியது. அவரைத் தவிர, வீட்டுக்கு வரும் யாரையும் தொடவிட மாட்டர். ஒரே ஒரு முறை என்னை விட்டு ஓபன் செய்யச் சொன்னார். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. டெஸ்க் டாபில் ஏதோ கொஞ்சம் பழக்கமுண்டு. அதுவும் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி. அது கூட இவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது தான்.

இந்தப் பழக்கமில்லாத புது சமாச்சாரங்களில் நான் கையை வைத்து ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்ற பயத்தில், நான் அதிகமாக எதுவும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.


லாப்டாப்பை கீழே தள்ளிவிட்டு, கீழே விழுந்த அது என்னாச்சு !
என்ற மிகுந்த ஆவலுடன், தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, கட்டிலின் விளிம்பில் குனிந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

குழந்தையை ஓங்கி அடிப்பது போல, தன் கையை மட்டும் ஓங்கி விட்டு, கோபமாக இரண்டு திட்டு திட்டிவிட்டு என்னைப் பார்த்து “ஸாரிடி... உன் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வரும் நேரமாச்சு, நான் புறப்பட்டுப் போகிறேன்”, என்றபடி நைஸாக கிளம்பி விட்டாள் ரேவதி.


என் வீட்டுக்காரரிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த லாப்டாப்பை பழையபடி கட்டிலில் சுவற்று ஓரமாக நகர்த்தி வைத்தேன். அதில் என்ன கோளாறு ஆகியுள்ளதோ, இனிமேல் அது வேலை செய்யுமோ செய்யாதோ, எல்லாம் அவர் வந்து பார்த்து சொன்னால் தான் உண்டு. நடந்தது நடந்து விட்டது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.


ஒரு அரை மணி நேரம் ஆனதும் என் வீட்டுக்காரரும் ஆபீஸிலிருந்து வந்து விட்டார். வழக்கம் போல பாத்ரூம் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்தார்.

நான் சூடாக சுவையாக கொடுத்த காஃபியை அவர் ரசித்து ருசித்து குடிக்கும் போது, நானும் மெதுவாக அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.


“ஏதோ சொல்லத் துடிக்கிறாயே! என்ன....சொல்லு” என்றார்.
“அடிக்கடி நம் ரேவதியின் நாத்தனார் குழந்தைகள், நம் வீட்டுக்கு வந்து பாடாய்ப் படுத்துகின்றன” என்று ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தேன்.

“ஒரு மூன்று மாதக் குழந்தைகளாக இருந்த போது, நானும் நீயும் ரேவதி வீட்டுக்குப் போய், குழந்தைகளின் விரல்களில் சின்ன தங்க மோதிரங்கள் போட்டு விட்டு வந்தோமே, அந்தக் குழந்தைகளா!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“ஆமாம் அதே குழந்தைகள் தான். இப்போது ஒரே ஓட்டமும் நடையுமாக ஒரு இடத்தில் நிற்காமல் லூட்டி அடிக்கின்றன. அன்று ஒரு நாள் ரிமோட்டை எடுத்து டி.வி. மேல் விட்டெறிந்து, மயிரிழையில் மானிட்டர் உடையாமல் தப்பியது. மற்றொரு நாள் பந்தை விட்டெறிந்ததில், ஷோகேஸ் கண்ணாடி உடையாமல் தப்பியது” என்றேன்.

”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான். விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” என்றபடியே என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஏதோ ஒரு குற்ற உணர்வில், பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டது போல முகத்தை வைத்துக் கொண்டு, நெற்றியைக் கைவிரல்களால் லேசாகத் தட்டிக் கொண்டார்.
இவருக்கு வாழ்க்கைப் பட்ட என்னை என் அக்கம்பக்கத்தாரும், ஒரு சில உறவினர்களும் கூட ஜாடை மாடையாக மலடி என்றும், தரிசு நிலம் என்றும் கூறக் கேட்டுள்ளேன்.

சென்ற மாதம் என் வீட்டுக்கு இவரின் ஒன்று விட்ட அத்தை என்று சொல்லி கொழுப்பெடுத்தவள் ஒருத்தி வந்திருந்தாள்.
காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, “கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.

ஊர் வாயை மூடமுடியாது என்று எனக்கும் தெரியும்.
மற்றவர்கள் போல ஜாடைமாடையாக மறைமுகமாகப் பேசாமல், “குழந்தைகளின் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்” என்று நேரிடையாகவே, என் கணவர் இன்று என்னைப் பார்த்து கேட்டு விட்டார். இதை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டேன்.

“தயவு செய்து உங்கள் லாப்டாப் வேலை செய்கிறதா என்று பாருங்கள். இன்று நம் வீட்டுக்கு வந்த அந்தக் குழந்தை, கட்டிலிலிருந்து உங்கள் லாப்டாப்பைக் கீழே தள்ளி விட்டு விட்டது. உடைந்து போய் இருக்குமோ என்று நான் பதறிப்போய் விட்டேன். ரேவதியும், தான் ஏன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வந்தோம், என்று மிகவும் வேதனைப் பட்டுப் போய் விட்டாள்” என்றேன்.


பெட் ரூமுக்குச் சென்றவர், லாப்டாப்பைத் தன் மடியில் ஒரு கைக்குழந்தை போல வைத்துக்கொண்டு, எல்லாப் பக்கமும் நன்கு தடவிப் பார்த்து விட்டு, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்தார். மானிடர் ஸ்க்ரீன் சேவரில் அந்தக் கஷ்குமுஷ்குக் குழந்தை தோன்றி சிரிக்கத் துவங்கியதும் தான், எனக்கு பாதி உயிர் வந்தது போலத் தோன்றியது.


நேராக பூஜா ரூமுக்குப் போய், விளக்கேற்றி நமஸ்கரித்து நான் திரும்பி வருவதற்குள், ஏதேதோ ப்ரொக்ராம்களில் புகுந்து விளையாடிப் பார்த்து விட்டு, ரேவதிக்கும் தானே போன் செய்து லாப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.


ரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல ஒரு வித பிரகாசம் அடைவதைக் கதவிடுக்கு வழியாக நான் சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு, பிறகு அவர்கள் பேசி முடிக்கும் சமயம், தொண்டையைக் கனைத்தபடி, பெட் ரூம் உள்ளே போனேன் .


என்னைப் பார்த்து விட்ட அவர் “கவலைப்படாதே ... லாப்டாப் உடையவில்லை” என்றார்.

“நல்ல வேளை, அதுவாவது உடையாமல் போனதே” என்றேன் மனம் உடைந்த நான்.


“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல.

“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.


ooooooooooo


[இந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]

44 கருத்துகள்:

  1. இரண்டு பகுதிகளையும் ஒன்றாய் படித்து விட்டேன். அற்புதமான சிறுகதை. குழந்தை இல்லாது போவது கூட ஒரு குறையில்லை. அதை மற்றவர்கள் கிண்டல் பண்ணுவது கூட தாங்கிக்கொள்ளலாம், கட்டிய கணவனே சுட்டிக்காட்டுவது மிகவும் வருத்தம் தரக்கூடியது. அழகாய்ச் சொன்ன உங்களுக்கு நன்றி. தேவியில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. to be read by everyone.conclusion part is so very moving and touching.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிறுகதை. இரண்டு பகுதியையும் ஒரே மூச்சாக படித்து விட்டேன். குழந்தை வரம் கிடைக்காத பெண்களை ஒவ்வொருவரும் பேசும் பேச்சு இருக்கே! தேவியில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  4. உணர்வுகளைச் சொல்லிப் போன விதத்தில் கதை அப்படியே மனதில் பதிந்து விட்டது.

    திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு நடத்திய போட்டியில் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அபாரம் கோபு சார்.

    குழந்தையில்லாதவர்கள் குழந்தைகளின் சேட்டைகளை எப்படி எதிகொள்வார்களோ அதைத் தத்ரூபமாக எழுதிவிட்டீர்கள்.

    இரு பகுதியையும் சேர்த்துப் படிக்க வாய்த்தது சந்தோஷம்.

    குழந்தையில்லா மனமும் கணவன் மணக்கத் தவறிய பெண்ணுடன் தொடரும் உறவும் சித்தரிக்கப்பட்ட விதத்துக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

    பதிலளிநீக்கு
  6. குழந்தை இல்லா பெண்ணின் மனநிலையை படம் பிடித்து காட்டி விட்டது சிறுகதை. அருமை.
    என் "எட்டி உதை" படித்திருக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  7. வெங்கட் க்கு நன்றி
    கிரிஜாவுக்கு நன்றி
    ஆருயிர் நண்பர் இராமமூர்த்திக்கு நன்றி
    கோவை2தில்லிக்கு நன்றி

    மரியாதைக்குரிய சுந்தர்ஜி சார் அவர்களின் வருகைக்கும், வித்யாசமானதொரு, வியப்பளிக்கக்கூடிய பாராட்டுக்கும்
    மிக்க நன்றி

    பிரியமுள்ள என் எழுத்துலக குருநாதர் ரிஷபன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
    அர்ஜுனனுக்கு கண்ணன் போல, என்னை வழி நடத்திச்செல்ல தாங்கள் இருக்கையில் பரிசுகளுக்கென்ன பஞ்சம். உங்கள் அன்பை விட இந்தப் பரிசுகள் பெரிதாகத் தோன்றவில்லை எனக்கு. இருப்பினும் தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    திரு. சிவகுமாரன் அவர்களுக்கு, நன்றி
    தங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.
    எப்படி சார் இவ்வளவு அழகாக எழுதினீர்கள்?
    பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் உணர்ச்சிப் பிரவாகமாக உள்ளது.
    ஒவ்வொரு வரியின் ஆழ்ந்த கருத்துக்களும் அபாரம்.
    தங்களை என்ன சொல்லி எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.
    அந்த [எட்டி உதைப்பது போன்ற] பாதச்சுவடு தெரியும் படத்தை எப்படித்தான் பொருத்தமாகப் பிடித்தீர்களோ ! மனமார்ந்த பாராட்டுக்கள்

    (தங்களின் varatharajsiva@gmail.com என்ற ஈ.மெயிலுக்கு தனியாக ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால் அது எனக்கே திரும்பி வந்து விட்டது. சரிபாக்கவும்]

    பதிலளிநீக்கு
  8. சிறுகதை மிக அருமை! ஒரு பெண்ணின் தவிப்பை அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தாய்மையடையாத தவிப்பு எத்தனையோ பெண்களுக்கு இதயத்தில் ரத்தம் கசிகிற‌ மாதிரி மெளனமான நரக வேதனை. மனதிற்குள்லேயே மருகும் இந்த வேதனையை ஒரு சில வரிகளிலேயே அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்! இந்த தேவியை இங்கு தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இப்போது உங்கள் பதிவிலேயே படிக்க முடிந்தது மகிழ்வைத் தருகிறது!

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பகுதிகளையும் ஒன்றாய் படித்து விட்டேன். மிக அருமையாக இருக்கு கதை எதார்த்தங்களோடு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    அன்புடன் மலிக்கா அவர்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அழகான பதிவுங்க... பத்திரிக்கையில் பிரசுரம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  12. அப்பாவி தங்கமணி said...
    //அழகான பதிவுங்க... பத்திரிக்கையில் பிரசுரம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி...//

    தங்களின் அபூர்வ வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    [இன்று 17.05.2011 அதிகாலை தான் இந்த தங்களின் பின்னூட்டத்தை அகஸ்மாத்தாகப்பார்க்க நேர்ந்தது]

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  13. இந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]

    இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு./

    உடைந்தது லேப்டாப் அல்லவே !

    பதிலளிநீக்கு
  15. "”நா” வினால் சுட்ட வடு

    //பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” //

    ஆற்றமுடியாத ஆறாத வடு !

    பதிலளிநீக்கு
  16. இராஜராஜேஸ்வரி said...
    இந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]

    இனிய வாழ்த்துகள்..//

    இனிய தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க மேடம்.

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி said...
    உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு./

    //உடைந்தது லேப்டாப் அல்லவே !//

    உங்கள் கவலை உங்களுக்கு. அவாஅவா கவலை அவாஅவாளுக்கு ;)))))

    உடைந்து விட்டது;
    நொறுங்கி விட்டது;
    பெரிய கீறல் விழுந்து விட்டது,
    என் மனசு”
    என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல்
    இ ரு க் கு து
    எனக்கும்.

    However Thanks for your kind entry, Madam.

    பதிலளிநீக்கு
  18. இராஜராஜேஸ்வரி said...
    "”நா” வினால் சுட்ட வடு

    //பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” //

    //ஆற்றமுடியாத ஆறாத வடு !//

    மாவடு போன்று நச்சென்ற கருத்து.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. முழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது. இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன். ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம்.

    ரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம். அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை.

    பாவம் இவளும் என்ன செய்வாள்? கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள். மனதை மிகவும் நெகிழ்த்திய கதை. என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  20. கீதமஞ்சரி said...
    முழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது.

    இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன்.

    ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம்.

    ரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம்.

    அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை.

    பாவம் இவளும் என்ன செய்வாள்? கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள்.

    மனதை மிகவும் நெகிழ்த்திய கதை.

    என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விபரமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    தாங்கள் 27.05.2012 அன்று வெளியிட்டுள்ள ”காய்க்காத மரம்” சிறுகதையின் நடையழகு என்னை மிகவும் கவந்தது.

    வெகு அழகாகவே, அந்த அணில் குட்டிகள் போலவே, மிக மென்மையாக, அதே சமயம் துடிப்புடன் வார்த்தைகளைக் கையாண்டுள்ள விதமும், இடையே அந்தப்பாடல் வரிகளும் மிகச்சிறப்பாகவே உள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. ”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது.
    இதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.

    // “உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” //
    கண்ணீரை வரவைத்த வசனங்கள்.
    உங்களின் அபாரமான நல்ல கற்பனை. யதார்த்தமான கதை.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. இளமதி September 28, 2012 8:47 AM

    //”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது. இதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.//

    ஆமாம் சகோதரி, மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

    தாய்மைப்பேறு என்பது பெண்களுக்குத் துன்பத்தில் கிடைக்கும் இன்பம். அந்தத்துன்பத்தில் கிடைக்கும் இன்பம் கிடைக்காது போனால், அவர்களுக்கு அதுவே ஒரு துன்பமோ துன்பம்.

    இதுபோன்ற எல்லாத் துன்பங்களையும் மிகப்பொறுமையுடன் முழுவதும் அனுபவிப்பவர்கள் நம் பெண்களே தான்.

    பெண்கள் என்றுமே போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் தான்.

    ****“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு”****

    //கண்ணீரை வரவைத்த வசனங்கள்.
    உங்களின் அபாரமான நல்ல கற்பனை.
    யதார்த்தமான கதை.
    வாழ்த்துக்கள்!//

    தங்களின் அன்பு வருகைக்கும், அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  23. நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை .
    அழகிய கதை அண்ணா ..இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள நிர்மலா, வாங்க, வணக்கம்.

      //நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை.//

      ஆமாம் நிர்மலா, பாவம் இத்தகைய ஒரு பாவமும் அறியாத பெண்கள். ;(

      //அழகிய கதை அண்ணா ..//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..//

      அதானே; ஆனால் அவ்வாறு ஆகியிருந்தால் தன் கணவர் அதற்காக ஏதும் தன்னைக் கோபித்துக் கொள்வாரோ திட்டுவாரோ என உள்ளூர பயமாகவும் இருந்திருக்கும் அவளுக்கு!

      //ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..//

      ஆமாமில்லே..

      இதைக்கூட உன்னிப்பாக கவனித்துள்ளீர்களே, சபாஷ் ..... நிர்மலா. You are so Great! ;)

      //ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..//

      நிர்மலா மனதில் நிற்கும் அந்தக்கதாநாயகிக்கு ஒரு ஜே!

      //பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  24. மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....

    குழந்தை இல்லை என்பதைப்பற்றி எப்போதும் ஒரு பெண் தான் நினைத்து நினைத்து மறுகுகிறது.. அப்படி மறுகும்படி இந்த சமுதாயமும் குடும்பமும் செய்துவிடுகிறது, நெருங்கிய பந்துக்களே இப்படி செய்யும்போது மூன்றாம் மனிதர் சொல்வதில் என்ன பெரிய துக்கம் வந்துவிடப்போகிறது...

    அண்ணா ரொம்ப அருமையாக தன் மனம் நொறுங்கினதை கணவன் கண்டுக்கொள்ளாத்தனத்தை எழுதி இருக்கீங்க அண்ணா....

    மனிதர்களின் மனதை படிக்கும் சூட்சுமம் ஒரு சிலருக்கே வரும்... அதன்பிரகாரம் பார்த்தால் கதையின் நாயகியின் துயரத்தை அவள் மனம் படும் வேதனையை மிக அற்புதமாக அவள் துடித்த துடிப்பை எழுத்தில் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கீங்க அண்ணா....

    என்ன தான் எப்பவோ பார்த்த பெண்ணாக இருந்தாலும் இப்ப ரேவதி இன்னொருத்தருடைய பாரியா அல்லவா? இப்படி ரேவதியிடம் பேசும்போது முகம் பிரகாசம் அடைவதும் குழந்தைகள் செய்த விஷமத்தினால் லேப்டாப்புக்கு ஒன்னும் ஆகலை என்பதை எத்தனை துரிதமா ரேவதிக்கு கால் செய்யத்தோணித்து இவருக்கு பார்த்தீர்களா??

    இதுபோன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு விடிவும் இல்லை மோக்‌ஷமும் இல்லை குழந்தைப்பேறும் இல்லை...

    உயிருள்ள மனைவியின் மனம் என்ன பாடுபடுகிறது என்பதில் துளிகூட அக்கறைக்காண்பிக்காத நிலையை மிக அருமையாக விளக்கி இருக்கீங்க அண்ணா....

    ஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....

    கடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....

    அருமையான கதை பகிர்வுக்கும் தேவி வார இதழில் இந்த கதை வெளிவந்தமைக்கும் அன்பு வாழ்த்துகள் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி December 9, 2012 9:50 PM
      //மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....

      வாங்கோ மஞ்சு, வணக்கம்.

      //ஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....

      கடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....//

      தாங்கள் முழு ஈடுபாட்டுடன் இந்தக் கதையினை மிகவும் ரஸித்துப்படித்து, தாங்கள் ரஸித்து வியந்த பல்வேறு இடங்களையும் அழகாகச் சுட்டிக்காட்டி, அந்தக்கதாநாயகியின் மனநிலையையும் நன்கு உணர்ந்து வெகுவாகப் பாராட்டியுள்ளது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, மஞ்சு.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  25. குறும்பு செய்தால்தான் குழந்தை. நல்ல தத்துவம்தான். ஆனால் தனக்கு குழந்தையில்லாதபோது இந்த தத்துவத்தை எப்படி புரிந்து ரசிக்கமுடியும்?

    பதிலளிநீக்கு
  26. கொண்டவன் தூத்தினா கூரையும் தூத்தும்ன்னு சொல்லுவா.

    மன வலிகளை உள்ளே அடக்கிக் கொண்டு வாழும் பெண்கள் இங்கு ஏராளம். என்ன செய்ய எல்லாருக்கும் வாழ்க்கை விரும்பியது போல் கிடைப்பதில்லையே.

    அருமையான கதைக்கரு, அருமையான கற்பனை, அருமையான சொல்லாடல்கள்.

    பதிலளிநீக்கு
  27. முடிவு அருமை! ஊரே என்ன சொன்னாலும், கணவனின் வார்த்தைகள் தான் முக்கியம். அது அவளது மனதை உடைத்துவிட்டதே!

    பதிலளிநீக்கு
  28. கணவர் யதார்த்தமா சொன்னதை ஏன இவ பெரிசு பண்ணிக்கணும் கத்தரிக்காய்க்கூட வயத்தில பூச்சி வச்சிருக்கு. குழந்தை இல்லாதவங்க மனசை இது போல வார்த்தைகள் எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்

    பதிலளிநீக்கு
  29. பக்கத்து வூட்டு குஞ்சு குளுவானுக எங்கூட்லயும் வந்து இப்பூடில்லா சேட்டக பண்ணும். அம்மி ஏதுமே கூவாது.

    பதிலளிநீக்கு
  30. பழனி கந்தசாமி அவர்களின்
    கருத்துத்தான் என் கருத்தும்
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  31. இந்த எபிஸோட்லயும் நிறய விஷயங்கள். குழந்தைகளனா அப்படித்தான் குறும்பு செய்வாங்க. அப்பதான் அவங்க குழந்தைகளா இரப்பாங்க. லாப்டாப் எதுவும் ரிப்பேர் ஆகலை. அத அவ கணவனே போன் பண்ணி சொன்னது இவளுக்கு பிடிக்கல.மனிதர்களின் மன உணர்வுகளை அழகாக சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. “கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
    “பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.// கண்ணாலே கண்டது போலல்லவா இருக்கிறது காட்சி அமைப்பும் வசனமும். அருமை...பிள்ளை பெறாத பெண்ணின் மன நிலையை அப்பட்டமாக சித்தரிக்கும் கதை...

    பதிலளிநீக்கு
  33. //“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல. //
    உடைந்தழும் மனதின் வலி உணராமல்!

    பதிலளிநீக்கு
  34. முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள்.


    மொத்தமாக கதையை ரசித்து பெனிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல.

    ஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:24 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள்.//

      :) தங்களின் புரிதல் + ரசனை + வாசித்தலில் முழு ஈடுபாடு + அவற்றை ஹை-லைட் செய்து சொல்வது முதலியன எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)

      //மொத்தமாக கதையை ரசித்து பெரிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல. //

      தாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. நானும் இதனை அப்படியேதான் சிந்தித்து, பலருக்கும் சின்னச்சின்னதாக நிறைய பின்னூட்டங்கள் கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

      அதுதான் கஷ்டப்பட்டுப் போடும் எனக்கும் மனதுக்குத் திருப்தியாக உள்ளது. போடப்பட்டவருக்கும் இதனால் முழுத்திருப்தி கிடைத்து வருகிறது என்று அவ்வப்போது கேள்விப்பட்டுள்ளேன். :)

      //ஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே???//

      ஒரு ப்ராப்ளமும் இல்லை. தங்கள் செளகர்யப்படியே எப்படிப்போட விருப்பமே அப்படியே போடவும். :)

      சின்னச் சின்னதாக நிறையமுறை தொடர்ந்து போட்டுக்கொண்டே இருந்தால் அதில் ஒரு தனி மகிழ்ச்சியும் சுகமும் இருக்கத்தான் இருக்கும். :)

      டயர்ட் ஆகாமலும் இருக்கக்கூடும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், போடுவது பற்றிய தங்களின் நியாயமான சந்தேகங்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  35. குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும். குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும் கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மன் நிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:30 AM

      //குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும்.//

      :)

      //குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும்//

      :))

      //கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மனநிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றது//

      :)))

      நீக்கு
  36. சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா????? குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும. கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான். மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன். ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி ஆச்சு. அப்பாடா தப்பிச்சா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:38 AM

      //சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா????? குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான்.//

      :)

      //மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன்.//

      :))

      //ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்க்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி
      ஆச்சு. அப்பாடா தப்பிச்சா....//

      :)))

      நீக்கு
  37. ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு........... பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு.... நுல்ல வேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:43 AM

      //ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு...........//

      :) 1000 Times :)

      //பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு....//

      :))

      //நல்லவேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.//

      கதையில் தாங்கள் ரசித்த இடங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது, என் மனதுக்கும் மிகவும் டச்சிங்கான வார்த்தைகளாகவே உள்ளன. மிக்க நன்றி.

      நீக்கு