என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 13 ஜனவரி, 2011

”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 1 of 2 ]


ரேவதி என் வீட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். கலகலப்பாக மனம் விட்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்போம்.

இப்போதெல்லாம் அவள் வருகிறாள் என்றாலே என் அடி வயிற்றைக் கலக்குகிறது. அவள் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. இலவச இணைப்பு போல நண்டு சிண்டுகளாக அவளுடைய நாத்தனார் குழந்தைகளைக் கூட்டி வந்து விடுகிறாள்.
அந்த இரண்டும் ரெண்டுங்கெட்டான்கள். இரண்டு வயது கூட ஆகாத இரட்டைக் குழந்தைகள். வீட்டில் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் உட்காராதுகள். வெள்ளையான டைல்ஸ் தரையில் இங்கும் அங்கும் ஓடும். ஆங்காங்கே தரையை ஈரமாக்கிவிடும். பிறகு அதிலேயே வழுக்கி விழுந்து விடும். கைக்கு எட்டும் எல்லா சாமான்களையும் எடுத்து வாரி இறைக்கும். ராக்கில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக விட்டெறிந்து கொண்டே இருக்கும். பேப்பர், புத்தகம் என்று எது கிடைத்தாலும் அதை கசக்கி கிழித்துப் போட்டு விடும்.

போன வாரம் வந்த போது, பெரிய சைஸ் இருமல் ஸிரப் பாட்டில் ஒன்றை கீழே போட்டு உடைத்து விட்டது, அந்தக்குழந்தகள். ஸிரப் வீணாகிப் போனதோடு மட்டுமல்லாமல், உடைந்த பாட்டில் சிதறல்கள், கை கால்களில் பட்டு காயம் படாமல், திரட்டி எடுத்து சுத்தம் செய்வதற்குள், போதும் போதும் என்று ஆகி விட்டது, எனக்கு.

அந்தக்குழந்தைகள் அழுதால் கொடுக்க ஏதாவது பிஸ்கட், பால், இட்லி, நெய்யுடன் பருப்பு அல்லது தெளிவான காரமில்லாத ரஸம் சாதம் என ஆகாரம் ஏதாவது நான் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.


அவள் வரும்போதெல்லாம், என் வீட்டில் இப்படி பலவிதமான அலங்கோலங்கள் இந்தக் குழந்தைகளால் நடந்து வருவதால், எனக்கே தர்ம சங்கடமாக இருந்து வருகிறது. என்ன செய்வது, வரவேண்டாம் என்றோ, அவ்வாறு வந்தால் இதுகளைக் கூட்டி வரவேண்டாம் என்றோ, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தர்ம சங்கடமாக இருந்து வந்தேன்.


என் வீட்டுக்கு இன்று வரப்போவதாக போன் செய்து விட்டாள்., ரேவதி. “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.
அவள் வீடும் என் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து ஒரு பத்து கட்டிடங்கள் மட்டும் தள்ளியிருப்பதால், சரியாக இரண்டரை மணி எப்போது ஆகும் என்று காத்திருந்து 2.35 க்கு ஆஜர் ஆகிவிடுவாள். இன்று எனக்கு மத்தியானத் தூக்கம் கிடையாது என்பது புரிந்துவிட்டது.
வாசலில் காலிங் பெல் அடித்தது. திறந்தேன். வாயெல்லாம் பல்லாக ரேவதி வந்து விட்டாள். நல்ல வேளையாக இலவச இணைப்பு இன்று, ஒன்று மட்டுமே அவளுடன் வந்திருக்கிறது. பாவம் அந்த மற்றொன்று வீட்டிலேயே தூங்கி விட்டதாக துக்கத்துடன் கூறிக் கொண்டாள். இன்று ஒற்றைத் தலைவலி மட்டும் தான் என்று நினைத்துக்கொண்டு, அவளை வரவேற்றேன்.

உள்ளே நுழைந்தவன் மிகவும் சாதுவாக படுக்கை அறைக்குள் தட்டுத்தடுமாறி சென்றான். கண் சொக்கியபடி கட்டிலில் தாவி ஏறி படுத்துக் கொண்டான். கூட்டாளி இல்லாததால் லூட்டி அடிக்க விருப்பம் இல்லையோ என்னவோ! ரேவதியும் கட்டிலில் அமர்ந்து இரண்டு தட்டு தட்டியவுடன் தூங்கிப் போனான்.


பெட்ரூம் கதவை லேசாக சாத்தி விட்டு ஹாலில் உட்கார்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு எங்களால் மனம் விட்டு நிம்மதியாகப் பேச முடிந்தது. தன் நாத்தனார் அடுத்த வாரம் ரெயிலேறி தன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போக இருக்கிறாள் என்றாள். இதைக் கேட்டதும் என் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல சமாசாரங்கள் பேசிக்கொண்டே போனதில் பொழுது போனதே தெரியவில்லை. சூடாக ரேவதிக்குக் காஃபி கலந்து கொடுத்து விட்டு நானும் குடித்தேன்.


இந்த ரேவதி என் கல்லூரித் தோழி மட்டுமல்ல. நான் இருக்கும் இடத்தில் எனக்கு பதிலாக என் கணவருக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவள். ஜாதகப் பொருத்தம் இல்லை என்று என் மாமியாரால் தட்டிக் கழிக்கப்பட்டவள்.
பிறகு அவள் சொல்லித்தான், என் தந்தை என் ஜாதகத்தைக் கொடுத்து, மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொன்னதனால், நான் இங்கு வாழ்க்கைப்பட ஒரு விதத்தில் உதவியவளும் கூட.

வேடிக்கை என்னவென்றால் அவளுக்கும் எனக்கும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடந்ததால் ஒருவர் திருமணத்திற்கு ஒருவர் போக முடியாமல் போனது. வீடியோக்களைப் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டோம்.


இப்போது கூட என் சினேகிதி ரேவதியைப் பார்க்கும் போதெல்லாம் என் கணவருக்கு ஒரு வித உற்சாகமும், விட்டகுறை தொட்டகுறை போல ஒரு வித ஏக்கமும் ஏற்படுவதுண்டு.

திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு இதுவரை தாய்மை அடையும் ப்ராப்தம் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சின்ன அல்ப சந்தோஷம் என் மனதிற்குள் என்னவென்றால், ரேவதியும் என்னைப் போலவே தான், இன்று வரை அரசமரத்தைச் சுதந்திரமாகச் சுற்றி வருபவளாக இருந்து வருகிறாள், என்பது மட்டுமே.


ஒரு வீடு கட்டவே நமக்குப் ப்ராப்தம் வருவதற்குள், சிலர் இரண்டு மூன்று வீடுகளுக்கு சொந்தக் காரர் ஆகி விடுவதுண்டு. அது போல ஒன்றுக்கே தவமாய் தவமிருக்கும் எங்களுக்கு, ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டும் ஆண் குழந்தைகள், என்றதும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.


குழந்தைகளுக்கு தொட்டில் இட்ட அன்று நானும் ரேவதியும் தான் அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்ய பணிக்கப் பட்டோம். அதுபோல செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள், கூடியிருந்த வயதான பெண்மணிகள்.


இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும் கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்.

தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை.
இப்போது இதிலெல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. இப்போது அதுபோல யாராவது அழைத்தாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. அத்தகைய விழாக்களுக்கு செல்வதையே அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டோம்.

இவ்வாறு ஏதேதோ எங்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைப் பற்றி எங்களுக்குள் தனிமையில் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த போது, பெட்ரூமிலிருந்து ஒரு மிகப்பெரிய சப்தம் கேட்டு திடுக்கிட்டு ஓடினோம்.

[இதன் தொடர்ச்சி தனியாக பகுதி-2 இல் இப்போதே வெளியிடப்பட்டுள்ளது]

27 கருத்துகள்:

  1. “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.

    அத்தி பூத்தது போல் அபூர்வமான அனுபவங்கள் !

    பதிலளிநீக்கு
  2. இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும் கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்

    மனதை மிகவும் பாதிக்கச்செய்யும் சாடிஸ்ட்டான சடங்குகள்...

    பதிலளிநீக்கு
  3. இராஜராஜேஸ்வரி said...
    “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.

    அத்தி பூத்தது போல் அபூர்வமான அனுபவங்கள் !//

    அத்திப்பூத்ததுடன் அத்திப்பூத்தது போலவே இங்கு இன்று இரு தாமரைகள் பூக்கக்கண்டேன். மனதில் பெரு மகிழ்ச்சி கொண்டேன்.

    நன்றி, நன்றி!! ;)))))

    பதிலளிநீக்கு
  4. இராஜராஜேஸ்வரி said...
    இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும் கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்

    மனதை மிகவும் பாதிக்கச்செய்யும் சாடிஸ்ட்டான சடங்குகள்...//

    Yes Madam. They feel very much.

    Thanks for your kind entry & valuable comments. vgk

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை//
    இந்த பாதிப்பை யாருமே இந்த நவீன காலத்திலும் சிந்திப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  6. ammulu September 25, 2012 2:12 AM
    ****தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை****

    //இந்த பாதிப்பை யாருமே இந்த நவீன காலத்திலும் சிந்திப்பதில்லை.//

    ஆமாம், சகோதரி. மிகச்சரியாகவே உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

    மக்கள் இன்னும் நன்கு திருந்தி, இதுபோன்ற பெண்களின் மனம் புண்படாமல் சற்றே நாகரீகமாக நடந்து கொண்டால் நல்லது.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  7. "குழந்தைகளை வரவேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை"
    குழந்தேளு-- என படித்தது நினைவில் வருகிறது
    (தொடரும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம்October 28, 2012 5:38 PM
      ***"குழந்தைகளை வரவேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை"***

      //குழந்தேளு-- என படித்தது நினைவில் வருகிறது//

      ஆஹா, மிகவும் அருமை.

      மிகவும் விஷமம் செய்யும் குழந்தைகளுக்குப்பெயர் :
      ” கு ழ ந் தே ளு ” வா? சூப்பர். ;)))))

      //(தொடரும்)//

      எப்போ??????? ;)

      நீக்கு
  8. கதையின் நாயகி ரேவதிப்பற்றி புலம்பல்களை ஆரம்பித்ததும் கதையின் போக்கு இப்படி இருக்குமோ என்று நினைத்து படித்துக்கொண்டே வந்தால் இல்லை இல்லை... இப்படி இல்லை... இது வேறு என்று வேற ட்ராக்கில் இணைத்துவிட்டீர்கள் அண்ணா... கதை இந்த பாகம் படிக்க ஆரம்பிக்கும்போது கதையின் நாயகி ஏன் இப்படி குழந்தைகளை அதுவும் வீட்டுக்கு வரும் குழந்தைகளை திட்றான்னு பார்த்தேன்... நார்மலா எல்லார் வீட்டிலயும் ஏற்படும் அசௌகர்யம் சின்ன வயசு குழந்தைகள் யார் வீட்டுக்காவது போனால் இதுபோன்று ஏற்படுவது இயல்பு... ஆனால் அப்படி ஏற்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எத்தனை எரிச்சல் அதை வெளியே சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் படும் சங்கடங்களை அப்படியே கதையின் நாயகியின் மன உணர்வுகளை புரிந்த மாதிரியே எழுதி இருப்பது சிறப்பு அண்ணா

    தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 2, 2012 12:29 PM

      வாங்கோ வாங்கோ மஞ்சூஊஊஊஊஊஊ, வணக்கம்.

      //கதையின் நாயகி ரேவதிப்பற்றி புலம்பல்களை ஆரம்பித்ததும் கதையின் போக்கு இப்படி இருக்குமோ என்று நினைத்து படித்துக்கொண்டே வந்தால் இல்லை இல்லை... இப்படி இல்லை... இது வேறு என்று வேற ட்ராக்கில் இணைத்துவிட்டீர்கள் அண்ணா...//

      ஏதோவொரு ட்ராக்கில் [டீரெயில் ஆகாமல்] ஒழுங்காகக் கதையை கொண்டு போகிறேனா இல்லையாப்பா? ;)))))

      //கதை இந்த பாகம் படிக்க ஆரம்பிக்கும்போது கதையின் நாயகி ஏன் இப்படி குழந்தைகளை அதுவும் வீட்டுக்கு வரும் குழந்தைகளை திட்றான்னு பார்த்தேன்...//

      அவளுடைய உணர்வுகள் அப்படி. அவளின் கசப்பான அனுபவங்கள் அப்படி.

      //நார்மலா எல்லார் வீட்டிலயும் ஏற்படும் அசௌகர்யம் சின்ன வயசு குழந்தைகள் யார் வீட்டுக்காவது போனால் இதுபோன்று ஏற்படுவது இயல்பு... ஆனால் அப்படி ஏற்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எத்தனை எரிச்சல் அதை வெளியே சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் படும் சங்கடங்களை அப்படியே .... //

      பெரும்பாலும் எல்லோருக்குமே மனதுக்குள் எரிச்சல் தான் வரும். சிலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பார்கள். குழந்தையைக் கொஞ்சுவது போல சும்மா வெளியே நடிப்பார்கள் என்பதே உண்மை.

      //கதையின் நாயகியின் மன உணர்வுகளை புரிந்த மாதிரியே எழுதி இருப்பது சிறப்பு அண்ணா//

      சிறந்த கதாசிரியரும், அருமையான எழுத்தாளருமான, தங்களின் மன உணர்வுகளையும், இந்தப் பின்னூட்டத்தில் புரிந்து கொண்டேன், மஞ்சு. ரொம்பவும் சந்தோஷம். ;)))))

      //தொடர்கிறேன்..//

      ஆஹா பேஷா! [தொடராவிட்டால் அழுதுடுவேனே! ...]

      நீக்கு
  9. வீட்டுக்கு விருந்தாளி வராங்கன்னா அவங்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உட்கார்ந்து அவங்க கூட பேசும் குணம் நம் ஊர்ல குறைஞ்சு போச்சுப்பா.... ஆமாம் அத்திப்பூக்கள் முடிஞ்சதும் வான்னு சொல்றாளே கதையின் நாயகி.. சரியான சீரியல் கில்லரா இருப்பாளோ?

    ரேவதி கூட்டிண்டு வரது தன் நாத்தனார் பெற்ற குழந்தைகளை தானா? இந்த கதையில் இப்படி ஒரு ட்விஸ்டா?

    ரேவதி தான் கதையின் நாயகியின் கணவருக்கு மனைவியா வந்திருக்கவேண்டியதா? அட ( ஏன் அண்ணா கதையின் நாயகிக்கு பெயர் வைக்கலை நீங்க?? பாருங்க எவ்ளோ சிரமம் எனக்கு எழுதறதுக்கு :-) சரி கோமளா அப்டின்னு வெச்சுப்போமா?

    மாமியார் ஜாதகம் சரி இல்லன்னு சொன்னதால் அவ சொன்னாளேன்னு இந்தம்மாவுக்கு பொருந்தி ரேவதி வீட்டுக்கு வரும்போதெல்லாம் நம்ம ஹீரோ குதியாட்டம் போடுகிறார்னு படிச்சப்ப சிரிப்பு வந்துட்டுது... விட்டக்குறை தொட்டக்குறை என்று உவமை வேறு...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி November 2, 2012 12:33 PM
      //வீட்டுக்கு விருந்தாளி வராங்கன்னா அவங்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உட்கார்ந்து அவங்க கூட பேசும் குணம் நம் ஊர்ல குறைஞ்சு போச்சுப்பா....//

      ஆமாம்மா, அது குறைஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆச்சு.

      //ஆமாம் அத்திப்பூக்கள் முடிஞ்சதும் வான்னு சொல்றாளே கதையின் நாயகி.. சரியான சீரியல் கில்லரா இருப்பாளோ?//

      அத்திப்பூக்களைப்பத்தி உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை போலிருக்கு. இங்கே நம்ம தமிழ்நாட்டிலே மத்யானம் 2 மணி ஆச்சுன்னா போச்சு.

      எல்லாப்பெண்மணிகளும் [மாமியார் + மருமகளாகவே இருந்தாலும்] ஒற்றுமையா உட்கார்ந்துடுவாங்க டீ.வி. முன்னாடி.

      பாழாய்ப்போன கரண்ட் கட் வந்தாப்போச்சு. டி.வி. சீரியல் பார்க்காமலேயே அழ ஆரம்பிச்சுடுவாங்க. [பார்த்தாலும் அழத்தான் போறாங்கோ]

      உங்க குவைத்துல அது காலை 10.30 மணிக்கு டீ.வி யிலே தெரியும். நீங்க அப்போ ஆபீஸில் பிஸியா இருப்பீங்கோ.

      இந்த அத்திப்பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டவன் நான். அது ஒரு பெரிய கதை. இங்கு வேண்டாம் .. மெயில்மூலமோ டெலிஃபோன் மூலமோ அப்புறமாச் சொல்றேன், மஞ்சு.

      //ரேவதி கூட்டிண்டு வரது தன் நாத்தனார் பெற்ற குழந்தைகளை தானா? இந்த கதையில் இப்படி ஒரு ட்விஸ்டா?//

      ஆமாம். ’ட்விஸ்டு’ இல்லை. ரேவதியின் நாத்தனாருக்கு பிறந்த ’டிவின்ஸ்’. ;)))))

      //ரேவதி தான் கதையின் நாயகியின் கணவருக்கு மனைவியா வந்திருக்கவேண்டியதா? அட ( ஏன் அண்ணா கதையின் நாயகிக்கு பெயர் வைக்கலை நீங்க?? பாருங்க எவ்ளோ சிரமம் எனக்கு எழுதறதுக்கு :-) சரி கோமளா அப்டின்னு வெச்சுப்போமா?//

      நீங்க பாத்து எந்தப்பெயர் வைத்துக்கொண்டாலும் ஓ.கே. தான், மஞ்சு.

      நான் ஏதாவது புதுசு புதுசா அதுவும் பொம்மனாட்டிகளுக்கு பெயர் வைக்கப்போய், இங்கே நம் ஆத்திலே மேலிடத்துடன் Internal Politics ஏதாவது ஆகிவிடுமோன்னு ஒரு சின்ன பயத்தினால் பெயர் வைக்க மறந்துட்டேனோ என்னவோ? ;)

      //மாமியார் ஜாதகம் சரி இல்லன்னு சொன்னதால் அவ சொன்னாளேன்னு இந்தம்மாவுக்கு பொருந்தி ரேவதி வீட்டுக்கு வரும்போதெல்லாம் நம்ம ஹீரோ குதியாட்டம் போடுகிறார்னு படிச்சப்ப சிரிப்பு வந்துட்டுது...//

      மஞ்சூஊஊஊஊ, இதைப்படித்ததும் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டதும்மா.... கரெக்டா பாயிண்டை பிடிச்சுட்டீங்க!
      சந்தோஷம்.

      //விட்டக்குறை தொட்டக்குறை என்று உவமை வேறு... //

      இந்தக்குறை பொதுவா எல்லோருக்குமே உள்ளது தானேம்மா... நான் என்ன புதுசா சொல்லிட்டேன். இந்தக்கதை முழுவதுமே உணர்வுகள் தானே.

      //தொடர்கிறேன்...//

      தொடருங்கோ .... தொடருங்கோ.

      நீக்கு
  10. என்னது ரேவதிக்கும் குழந்தைகள் இல்லை நம்ம நாயகிக்கும் குழந்தைகள் இல்லையா.... அது சரி....

    ஆனா இந்த பெரிசுகள் சும்மாவே இருப்பதில்லை.... என்ன தான் சாங்கியமோ அம்மிக்குழவிக்கு பூஜை செய்வது...

    இப்படி எல்லாம் செய்வதை விட டாக்டர் கிட்ட கொண்டு போய் காமிச்சிருந்தா எதுனா நல்லதாவது நடந்திருக்கும்...

    பிள்ளை இல்லாதவர் மனம் புண்படும்படியான பேச்சுகள் செயல்கள் இப்பவும் பத்தாம்பசலித்தனமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது எங்கெங்கோ....

    ரொம்ப அருமையா கதையை கொண்டு போகிறீர்கள் அண்ணா....

    கதையின் கதாபாத்திரங்களான ரேவதியும் ட்வின்ஸ்ல ஒன்னும் வீட்டுக்கு வந்ததும் அன்னிக்கு ஒன்னே ஒன்னு வந்ததால் தான் வீட்டில் அமளிதுமளி குறைந்து ரேவதியும் நம்ம நாயகியும் பேச சமயம் கிடைக்கிறது...

    ஐயோ குழந்தை கீழ விழுந்துட்டானா??

    பதட்டத்துடன் அடுத்த பாகம் தொடர்கிறேன் அண்ணா..

    தெளிவான கதை நடை... அருமையான கதைக்கரு... என்னாகிறதுன்னு தெரிஞ்சுக்க சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்க.. என்னால யூகிக்க முடியலை... என்னாகும்?

    பதிலளிநீக்கு
  11. VGK to மஞ்சு....

    //ரொம்ப அருமையா கதையை கொண்டு போகிறீர்கள் அண்ணா....//

    சந்தோஷம் மஞ்சு ;)))))

    //கதையின் கதாபாத்திரங்களான ரேவதியும் ட்வின்ஸ்ல ஒன்னும் வீட்டுக்கு வந்ததும் அன்னிக்கு ஒன்னே ஒன்னு வந்ததால் தான் வீட்டில் அமளிதுமளி குறைந்து ரேவதியும் நம்ம நாயகியும் பேச சமயம் கிடைக்கிறது...//

    அதே ! அதே!! சபாபதே !!!

    //ஐயோ குழந்தை கீழ விழுந்துட்டானா??//

    தெரியலையே !

    //பதட்டத்துடன் அடுத்த பாகம் தொடர்கிறேன் அண்ணா..//

    மெதுவாபோம்மா ... மஞ்சூஊஊஊஊ
    பதட்டமே கூடாதூஊஊஊஊஊஊஊஊ

    //தெளிவான கதை நடை... அருமையான கதைக்கரு... என்னாகிறதுன்னு தெரிஞ்சுக்க சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்க.. என்னால யூகிக்க முடியலை...//

    அடடா! மஞ்சுவா கொக்கா?

    மிகச்சரியாக தலையிலே பெரிய ஐஸ்கட்டியை உருக வெச்சு, வெல்லாமாப் பேசுவாளாக்கும். நான் உங்க அண்ணனாக்கும்! ;)))))

    //என்னாகும்?//

    தெரியலையே! மேற்கொண்டு படிச்சாத்தான் தெரியும்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  12. கதையின் கரு ஒரு புள்ளியளவு இருந்தாலும் அதைச்சுற்றி கோலம் போடும் அழகே அழகு. இந்தக் கலை எல்லோருக்கும் வந்து விடாது. வைகோவிற்கு வாய்த்துள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு பெண்ணின் மன நிலையை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். இதெல்லாம் எல்லாராலேயும் முடியாது.

    கதையை படிக்க ஆரம்பித்ததும் இப்படித்தான் சிலர் அடுத்த வீட்டிற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவை என்ன செய்தாலும் பேசாமல் இருப்பார்கள் என்று தோன்றியது.

    படிக்கப் படிக்க ஐயோ என்ன ஆச்சோ தெரியலயே என்று மனம் பதறுகிறது.

    பதிலளிநீக்கு
  14. கதை எழுதும் நுணுக்கம், சரளம் அருமை சார்! சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்களே! சரி அடுத்ததுக்குப் போறோம்...

    பதிலளிநீக்கு
  15. நல்ல சிநேகிதிகள் தான். எனக்கும் இந்த டி.வி சீரியல் கள் பற்றி ஏதும் தெரியல. குழந்தை இல்லாதவங்களை இந்த அம்மி குழவி குளிப்பாட்ட சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவ்ர்.

    பதிலளிநீக்கு
  16. கதை என்றாலும் கதைக்குள்ளிருக்கும் நுணுக்கம் மிகவும் கவனிக்கத்தக்கது. குழந்தையில்லாப் பெண்ணின் மனநிலையை மிக அழகாக வடித்துள்ளீர்கள். ஒரு பொருள் கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததைக் கொண்டு திருப்திப் படுவது ஒருவகை. கிடைக்காத பொருளின் மேல் வெறுப்பை வளர்த்து அதை மறக்க முயல்வது இன்னொரு வகை. இந்தக் கதையிலும் ஒருத்தி தனக்கு கிடைக்காத குழந்தைப் பாக்கியத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராமல் நாத்தனார் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைத்துக் கொண்டாடுகிறாள். இன்னொருத்தியோ குழந்தைகளின் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டு தன் வருத்தத்தை மறக்க முனைகிறாள். இரண்டுவிதமான மனநிலையையும் பிரதிபலிக்கும் கதைமாந்தர்கள். அருமை கோபு சார்.

    பதிலளிநீக்கு
  17. இன்னான்னமோ சொல்லிகினீங்க ஏதுமே வெளங்கலியே.

    பதிலளிநீக்கு
  18. உணர்வுப் பூர்வ்மான கதை
    படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை
    படித்தேன்
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  19. ஒரு எபிஸோட்லயே எவ்வளவு விஷயங்கள். அவங்க இருவரும் சனேகிதிகள. அவளுக்கு பதில் இவள் மணமகளானது இருவருக்குமே குழந்தை பாக்கியம் இல்லாதது. குழந்தைகள் அடிக்கும் லூட்டிகளால் இவள்படும் அவஸ்தைகள் எல்லாமே விரிவாக விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  20. அத்திப்பூக்கள் சீரியல், தன்னைப்போலவே பிள்ளைப்பேறில்லாத இன்னும் ஒரு பெண் அதுவும் தன் கணவனுக்கு பார்த்து ஜாதகம் பொருந்தாத பெண்...பாத்திரங்கள் சித்தரிப்பு, ...பாக்யராஜின் திரைக்கதை போலவே இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  21. //தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. இப்போது இதிலெல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. இப்போது அதுபோல யாராவது அழைத்தாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. அத்தகைய விழாக்களுக்கு செல்வதையே அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டோம்.//
    வலியுணர்த்தும் வரிகள்!

    பதிலளிநீக்கு
  22. உங்க கதைகளில் அந்தந்த கதா மாந்தர்களின் மன உணர்வுகளை யதார்த்தமா சொல்லிவிடுவது உங்க திறமையான எழுத்து. ரேவதி குழந்தைகளுடன் வரும் சினேகிதியை நினைத்து எப்படி எல்லாம் கவலைப்படுவான்னு சொல்லி இருப்பது யதார்த்தம். அத்திப்பூக்கள் முடிந்து வாடின்னது அவளின் டி. வி. சீரியல் பார்க்கும் ஆசையை தெளிவாக சொன்னது. அவளின் சினேகிதியை தன் கணவர் முதலில் பெண் பார்த்த விபரத்தையும் ஜாதகம் பொருந்தாததால் தனக்கு கிடைத்த வாழ்க்கையும் நினைத்துக்கொள்கிறாள். குழந்தை இல்லாதவர்களை நம் சமூகம் எப்படி எல்லாம் கேவலப்படுத்துறாங்க என்பதும் ரேவதியின் ஆதங்கத்தின் மூலம் புரிய முடியுது இப்படி ஒரே கதைக்குள்ள்யே பல மன உணர்வுகளை எப்படித்தான் கொண்டு வறீங்க? குழந்தைகள் வந்தால் என்ன மாதிரி சேட்டைகள் பண்ணுவார்கள் என்று சொல்லி இருப்பதும் சரியாதான் இருக்கு.

    நான் போடும் பின்னூட்டங்களையும் மதித்து உடனுக்குடன் நீங்க ரிப்லை பண்ணுவதும் ரொம்ப சந்தோஷமாகவும் என்கரேஜ்மெண்டாகவும் இருக்கு. நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 21, 2016 at 11:19 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்க கதைகளில் அந்தந்த கதா மாந்தர்களின் மன உணர்வுகளை யதார்த்தமா சொல்லிவிடுவது உங்க திறமையான எழுத்து.//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //ரேவதி குழந்தைகளுடன் வரும் சினேகிதியை நினைத்து எப்படி எல்லாம் கவலைப்படுவான்னு சொல்லி இருப்பது யதார்த்தம். அத்திப்பூக்கள் முடிந்து வாடின்னது அவளின் டி. வி. சீரியல் பார்க்கும் ஆசையை தெளிவாக சொன்னது .... அவளின் சினேகிதியை தன் கணவர் முதலில் பெண் பார்த்த விபரத்தையும் ஜாதகம் பொருந்தாததால் தனக்கு கிடைத்த வாழ்க்கையும் நினைத்துக்கொள்கிறாள். குழந்தை இல்லாதவர்களை நம் சமூகம் எப்படி எல்லாம் கேவலப்படுத்துறாங்க என்பதும் ரேவதியின் ஆதங்கத்தின் மூலம் புரிய முடியுது. குழந்தைகள் வந்தால் என்ன மாதிரி சேட்டைகள் பண்ணுவார்கள் என்று சொல்லி இருப்பதும் சரியாதான் இருக்கு. //

      :) சந்தோஷம்.

      //இப்படி ஒரே கதைக்குள்ளேயே பல மன உணர்வுகளை எப்படித்தான் கொண்டு வறீங்க?//

      :) இப்படி ஒரே பின்னூட்டத்திற்கும், தாங்கள் ரஸித்த பல விஷயங்களை பின்னிப்பின்னி மிகச்சுருக்கமாகவும் மிகவும் சுவைபடமும் சொல்லுகிறீர்களே .... அது எப்படி? அதேபோலத்தான் நான் என் கதையில் பல மன உணர்வுகளை ஒரே கதையில் கொண்டு வருவதும் :)

      அன்புடன் VGK

      நீக்கு
    2. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (2)

      //நான் போடும் பின்னூட்டங்களையும் மதித்து உடனுக்குடன் நீங்க ரிப்லை பண்ணுவதும் ரொம்ப சந்தோஷமாகவும் என்கரேஜ்மெண்டாகவும் இருக்கு. நன்றி சார்//

      தங்களின் பின்னூட்டங்கள் மற்றவர்களின் பின்னூட்டங்களிலிருந்து வித்யாசமாகவும், மிகச் சிறப்பாகவும் இருக்கின்றன. அது எனக்கும் மிகவும் சந்தோஷமாகவும், என்கரேஜ்மெண்டாகவும் இருக்குது.

      ஒவ்வொரு பதிவினையும் முழுமையாகப் படித்து மனதில் வாங்கிக்கொண்டு விரிவாகத் தங்களின் கருத்தினை எழுதுகிறீர்கள் என்பது, இங்கு கொடுத்துள்ள தங்களின் பின்னூட்டத்திலிருந்தே என்னால் நன்கு அறிய முடிகிறது.

      இதுபோன்ற வாசகர்களின் பின்னூட்டங்களை மட்டுமே, நான் என் பதிவுகள் பக்கம் மிகவும் எதிர்பார்க்கிறேன்.

      அழையா விருந்தாளிகள் போல சிலர் வருகை தந்து, பதிவினைப் படிக்காமலேயே நுனிப்புல் மேய்ந்துவிட்டு, பதிவுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாமல், ஏனோ தானோவென ஏதாவது இரண்டு வரிகள் எழுதிவிட்டுச் செல்கிறார்கள். அதுபோன்ற அவர்களின் வருகையை நான் எப்போதுமே அடியோடு வெறுக்கிறேன்.

      தாங்கள் நான் சமீபத்தில் (2015-ல்) என் வலைத்தளத்தினில் நடத்திய பின்னூட்டப்போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். ஏனோ அதற்குப் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது என நினைக்கிறேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு