இந்த ஒரு மாதமும், பஞ்சாமி வாயைக் கட்ட, வயிற்றைக் கட்ட படாதபாடு பட்டு விட்டார். சாப்பாட்டில் கடுகு போன்ற மிகச்சிறிய கடிக்க வேண்டிய சமாசாரங்களைக் கூட கடிக்க முடியாமல் கடுப்பு வந்தது அவருக்கு.
அவருக்கு மிகவும் பிடித்தமான கரமுரா அயிட்டங்களான பக்கோடா, மிக்சர், காராச்சேவ், கடலை, நேத்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி முதலியவற்றை அவர் கண்ணெதிரிலேயே பிறர் கரமுரா எனக் கடித்துச் சாப்பிடுவதைக் கண்டு கண்ணீர் விடலானார்.
மேற்படி அனைத்து அயிட்டங்களையும் தனித்தனியே மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடிப் பொடியாக்கி பொக்கை வாயில் போட்டு வந்தும் திருப்தியாகவில்லை பஞ்சாமிக்கு. கடிக்க வேண்டியதை கடிக்கணும், சப்ப வேண்டியதைச் சப்பணும், அப்போது தான் முழுத்திருப்தி ஏற்படும், என்ற உண்மை அவருக்கு விளங்கியது.
நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. ”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.
நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. ”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.
வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.
ஆசையில் அன்றொரு நாள் பால் பாயஸத்தைப் பாய்ந்து ஒரு டம்ளர் எடுத்துக் குடித்த அவர், வாயில் மிதந்த முந்திரிப் பருப்புகளை கடிக்க வழியில்லாமல், சாப்பாடுத் தட்டைச் சுற்றி தூ...தூ என்று துப்பியதைப் பார்க்க எனக்கே மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.
பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
ஒரு மாதம் முடிந்து வாய்ப்புண் ஆறியதும் பல் டாக்டரை சந்திக்கச் சென்றார். ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கி உடனடியாக அணிந்து கொள்வது போல, உடனே இன்று தனக்கு பல் செட் கட்டப்பட்டு, அனைத்தையும் கடித்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிச் சென்ற அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.
இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார்.
தொடரும்...
ஓர் முக்கிய அறிவிப்பு
ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்தக்கதையின் பகுதி-5 மட்டும் எங்கோ மறைந்து காணாமல் போய் உள்ளதால், தயவுசெய்து கீழ்க்கணட மீள் பதிவுக்குச் சென்று பகுதி 5 முதல் 8 வரை, ஒரே பதிவினில் படிக்கவும்.
===============================================
நகைச்சுவை ததும்பும் தொடர். “ராவு ராவு என்று ராவி” :) பல் டாக்டர்களை பார்த்தாலே பயமாய்த் தான் இருக்கிறது. அடுத்த பகுதிக்காய் காத்திருப்புடன்....
பதிலளிநீக்கு//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குநகைச்சுவை ததும்பும் தொடர். “ராவு ராவு என்று ராவி” :) பல் டாக்டர்களை பார்த்தாலே பயமாய்த் தான் இருக்கிறது. அடுத்த பகுதிக்காய் காத்திருப்புடன்....//
தங்கள் வருகைக்கும், நகைச்சுவை ததும்புவதாக எழுதியுள்ள கருத்தும் நன்றி.
மொத்தம் எட்டுப் பகுதிகளாகப் பிரித்துள்ளேன். மீதி பகுதிகள் நாளை முதல் [12th to 15th] தினமும் வெளியிட முயற்சிக்கிறேன்.
”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி./
பதிலளிநீக்குஉள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா .............பாவம் பஞ்சாமி !
பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்..
பதிலளிநீக்குபல்லால்
பல்வேறு காவியமாய் ரசிக்கவும் பரிதாபமும் படுகிறாரே
பல்சுவை பஞ்சாமி !
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி./
உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா .............பாவம் பஞ்சாமி !//
நல்லாச்சொன்னீங்க! பாவம் தான்!!
நன்றிங்கோ!!!
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குபல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்..
பல்லால்
பல்வேறு காவியமாய் ரசிக்கவும் பரிதாபமும்
படுகிறாரே
பல்சுவை
பஞ்சாமி !//
கருத்தினில் பல்வரிசைபோல எத்தனைப்
“ப” !
அப்பப்பா!!
ஒரே
பக்திமயமப்பா!!!
//இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார்//
பதிலளிநீக்குசாதாரணமாகவே இங்கு பல் டாக்டரிடம் போக பயம்.லெட்டர் வந்தாபிறகுதான் விழுந்தடித்து ஓடுவோம்.இப்படி ராவுராவினால் போவதெப்படி.
கண்ணிகளிலிருந்து வரும் கண்ணீரை கட்டுப்படுத்த
இயலவில்லை.வாசித்ததால்.
//சாதாரணமாகவே இங்கு பல் டாக்டரிடம் போக பயம்.லெட்டர் வந்தாபிறகுதான் விழுந்தடித்து ஓடுவோம்.//
பதிலளிநீக்குவிழுந்தடித்து ஓடினால் தடுக்கி விழுந்து பற்களில் சில தாறுமாறுமாக உடையக்கூடும். ஜாக்கிரதையாக மெதுவாகவே போங்கோ.
//இப்படி ராவு ராவென்று ராவினால் போவதெப்படி?//
அதானே! நான் ரொம்ப ராவிவிட்டேனோ? ;)))))
//கண்களிலிருந்து வரும் கண்ணீரை கட்டுப்படுத்த
இயலவில்லை...... வாசித்ததால்.//
ஆனந்தக்கண்ணீர் தானே! பயம் வேண்டாம். முழுவதும் எட்டுப் பகுதிகளையும் கவலைப்படாமல் சுவைத்துப் படியுங்கோ.
நடுவில் ஓர் பல் மட்டும் விழுந்துவிட்டது போல ஒரு பகுதி மட்டும் எங்கோ காணாமல் போய் விட்டது. இருப்பினும் கவலை வேண்டாம். 2011 ஆகஸ்டு மாதத்தில், அழகான படங்களுடன் மீள் பதிவாகத் தந்துள்ளேன்.
பகுதி 5 முதல் 8 வரை மீள் பதிவின் இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html
பிரியமுள்ள
VGK
பல் டாக்டர்களின் டெக்னிக்குகளெல்லாம் விநோதமானவை. எலுலா பல்களையும் எடுத்து விட்டு முழுசாக பல செட் கட்டுவது என்பது ஏறக்குறைய இரண்டு வருடப் புராஜெக்ட்.
பதிலளிநீக்குசாப்பாட்டு ராமன் பஞ்சாமியை
பதிலளிநீக்குகூப்பாட்டு ராமனாக்கி விடும் போல இருக்கே இந்த பாழாப் போன பற்கள்.
பஞ்சாமியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கு.
பல் செட்டு மாட்டப் போனேன் ஆனா
பதிலளிநீக்குபல்பு வாங்கி வந்தேன்
சாப்பாட்டுக்குக் கோவிந்தா! உன்னைக்
கூப்பிடவும் கோவிந்தா!!!
தலைவலியும் கால் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும. பாவம் சார் பஞ்சாமி..
பதிலளிநீக்குஎன் அப்பா பல் எடுத்திருந்த சமயத்தில் உப்புமாவுக்கு கடுகு கூட தாளிக்காமல் செய்யச் சொல்வார். ஒரு கடுகு என்ன செய்துவிடப்போகிறது என்று நினைப்பேன். ஆனால் அது படுத்தும் பாடு பல்லிழந்தவர்களுக்குத்தானே தெரியும். இங்கும் பஞ்சாமியின் உணவு விஷயத்தில் அதைக் குறிப்பிட்டிருப்பது பிரச்சனையின் தீவிரத்தைப் புரியவைக்கிறது.
பதிலளிநீக்குரசித்து ருசித்து சாப்பிடவர்களுக்கு அப்படி சாப்பிடமுடியாமல் போவது எவ்வளவு கொடுமை. தானே அனுபவித்தாற்போன்று அவ்வளவு நுணுக்கமாக பஞ்சாமி படும் பாட்டை எழுத்தால் வடித்திருக்கும் சிறப்புக்குப் பாராட்டுகள் கோபு சார்.
வாய்க்கு புடிச்சத சாப்பிட முடியாம என்ன கஸ்டம்ல. பல்லு க்ளீன் பண்ண இனி டாக்குடரு கிட்ட போவவே யாரும் யோசிப்பாய்ங்க போல.
பதிலளிநீக்குநகைச் சுவையாகச் சொல்லிப் போனாலும்
பதிலளிநீக்குஅந்த நிலையை அடைந்து கொண்டிருப்பவர்களுக்கு
இது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
ரொம்ப கரெக்கடு கடிக்க வேண்டியத கடிச்க சப்பவேண்டியத சப்பி சாப்பிட்டாதானே ருசிக்கும். ஆனா பஞ்சாமிக்கு கிடைத்ததோ மோர்களி குழைந்த சாதம் கரைச்ச ரஸம் சாதம். வெரி ஸேட். ஐயோ பாவம் அவரு.
பதிலளிநீக்கு// வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.//
பதிலளிநீக்குஐயோ பாவம்...மிஸ்டர் ஸ்ட்ராங் டீத் ஆக இருந்தவரு மிஸ்டு ஸ்ட்ராங் டீத் ஆகிட்டிருக்காரே...பாவம்தான்...
//வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.//
பதிலளிநீக்குஎன்ன பாடு பட்டிருக்கும் அவர் மனம்! ஐயோ பாவம்!
நல்ல கரமுரா ஐட்டங்களையே வெறுத்து விடும் அளவுக்கு இந்த பல் பஞ்சாமியை பாடா படுத்துதே. பாவம் பல் க்ளீன் பண்ண போயி வேண்டாத வம்பல்லாம் விலைகொடுத்து வாங்கிட்டாரே. பால் பாயச முந்திரி பருப்பைக்கூட ரசித்து கடித்து தின்ன முடியாம ஒரு அவஸ்தை. சீக்கிரமே பல் செட் கட்டிக்கலாம் என நினைத்தவரை டாக்டர் ராவு ராவுன்னு ராவிகிட்டே இருக்காரே. எப்ப பல்லு செட் கட்டி விரும்பியத சாப்பிட முடியுமோ அப்பாவி பஞ்சாமியால. பல் க்ளீன் பண்ண டாக்டரிடம் போக நினைப்பவர்கள் இந்த பதிவைப் படித்தால் வேண்டாமடா சாமி இப்படியே இருந்துட்டு போகட்டும்னு விட்டுடுவாங்க.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 15, 2016 at 1:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நல்ல கரமுரா ஐட்டங்களையே வெறுத்து விடும் அளவுக்கு இந்த பல் பஞ்சாமியை பாடா படுத்துதே. பாவம் பல் க்ளீன் பண்ண போயி வேண்டாத வம்பல்லாம் விலைகொடுத்து வாங்கிட்டாரே. பால் பாயச முந்திரி பருப்பைக்கூட ரசித்து கடித்து தின்ன முடியாம ஒரு அவஸ்தை. சீக்கிரமே பல் செட் கட்டிக்கலாம் என நினைத்தவரை டாக்டர் ராவு ராவுன்னு ராவிகிட்டே இருக்காரே.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ரஸித்துப்படித்து ருசித்து எழுதியுள்ளீர்கள்.
//எப்ப பல்லு செட் கட்டி விரும்பியத சாப்பிட முடியுமோ அப்பாவி பஞ்சாமியால.//
அதானே ! :)
//பல் க்ளீன் பண்ண டாக்டரிடம் போக நினைப்பவர்கள் இந்த பதிவைப் படித்தால் வேண்டாமடா சாமி இப்படியே இருந்துட்டு போகட்டும்னு விட்டுடுவாங்க.//
கரெக்ட்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.