இரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.
குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.
முன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.
மேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.
எதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.
சுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது. சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது.
சுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.
பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டிடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும் என்று எடுத்துரைத்தார்.
பஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்ணம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது.
அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.
தொடரும்...
LOOOOOOOOONG LAUGH..Good going ... eagerly waiting for remaining parts.
பதிலளிநீக்கு:)))
வருகைக்கு மிகவும் நன்றி. தினமும் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வரும் (மொத்தம் 8 பகுதிகள்)
பதிலளிநீக்குப்ரமாதம் கோபு சார்.
பதிலளிநீக்குஇந்த சப்ஜெக்டெல்லாம் இப்ப யாரும் எழுதறதில்ல.
உவமைகள் எல்லாம் ஹாஸ்யம் ரொப்பப்பட்டு படு ஜோர்.
தாமதமாய் வாசிக்க வருந்துகிறேன்.
அன்புள்ள திரு சுந்தர்ஜி சார்,
பதிலளிநீக்குதாமதமாகப் படித்தாலும், தவறாமல் படித்து கருத்துக்கள் கூறியதற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மொத்தம் எட்டு பகுதிகளாகப் பிரித்து தினமும் ஒன்று வீதம் வெளியிட்டு வருகிறேன். வரும் சனிக்கிழமையன்று நிறைவு பெறும்.
ஒரேயடியாக பெரிதாக வெளியிட்டால், நேர அவகாசம் இன்மையாலும், சோம்பலினாலும் பலர் படிக்காமல் விட்டு விடுவார்களோ என்பதால் தினம் தினம் கொஞசமாக வெளியிட முடிவு செய்தேன்.
மிகப்பெரிய எழுத்தாளரும், அனுபவசாலியுமான தங்களின் கருத்துக்கள் தாமதமாக கிடைத்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே !
உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைத்தாலும், தயவுசெய்து என்னுடைய வலைபூவுக்கு வந்து ஏதாவது நாலு வரி எழுதினீர்கள் ஆனால் அது என்னை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.
நன்றியுடன் ....கோபு
பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,
பதிலளிநீக்குபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் பல்லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..
பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,
பதிலளிநீக்குபல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் பல்லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..
காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./
பதிலளிநீக்குபஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்....
காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./
பதிலளிநீக்குபஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்....
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,
பல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் ப(ல்)லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..//
பஞ்சாமியின் மாமனாரும் கூட அனுபவசாலி+புத்திசாலி தானே! ;)))))
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குபஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி,
பல்லைப் பற்றி பல்வேறு அனுபவங்கள் பெற்ற அனுபவசாலியின் அறிவுரைகள் ப(ல்)லன் நிறைந்தவை.. பாராட்டுக்கள்..//
பஞ்சாமியின் மாமனாரும் கூட அனுபவசாலி+புத்திசாலி தானே! ;)))))
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குகாலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது./
பஞ்சாமி .. அழகிய பல்வேறு கனிகளை நினைவு படுத்தும் பல்லழகர்..../
அவர் பல்லழகர் ....
ஆனால் நீங்கள்?
கருத்துச் சொல்லழகர். ;))))) vgk
//தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.//
பதிலளிநீக்குதிரும்ப வாசித்து ரசித்தேன்.:)
அன்புச்சகோதரி, வாருங்கள், வாருங்கள். வணக்கம்.
பதிலளிநீக்கு****கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.****
திரும்ப வாசித்து ரசித்தேன்.:)
நன்றியோ நன்றிகள், சகோதரி.
என் நகைச்சுவை எழுத்துக்களின் ரஸிகையாக தாங்கள் வந்திருப்பது நான் செய்த பாக்யமாக எண்ணி மகிழ்கிறேன்.
பிரியமுள்ள
VGK
பல் வைத்தியம் நானும் செய்திருக்கிறேன். அந்த அவஸ்தைகளை தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள்.நானும் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். வேறு வழியில்லை.
பதிலளிநீக்குபொய்ப் பல்லெல்லாம்
பதிலளிநீக்குஒரிஜினல் பல்லாகுமா?
பல் டாக்டரிடம் பல்லைக் காமிச்சவனுக்குத்தானே அந்த சிரமம் தெரியும்.
நல்ல மாமனார் - பஞ்சாமிக்கு சொன்னேன்.
காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது.// ஹஹஹஹ
பதிலளிநீக்குபல் டாக்டரிடம் போனேன் பல் செட்டும் வாங்கி வந்தேன்..கெட்டப் மாறிப் போச்சே கிட்ட வந்து பார்த்தா - பஞ்சாமி...
எப்படில்லாம் உதாரணம் சொல்ரீங்க. காலி ஜிப பேக கமலாரஞ்சு தோல் .உங்களுக்கு ஸென்ஸ் ஆஃப ஹ்யூமர் ரொம்பவே அதிகம்தான்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குஎன் பற்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பல் வைத்தியர்களின் கை பட்டது தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் பல் வைத்திய நண்பர்களை மறந்து விட்டேன். அவர்களீடம் செல்வதில்லை. ஓரளவிற்கு பிரச்னை இல்லை.
தங்களீன் கதா நாயகன் பஞ்சாமி சூப்பர்ஸ்டார்.
பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஎன் பற்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பல் வைத்தியர்களின் கை பட்டது தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் பல் வைத்திய நண்பர்களை மறந்து விட்டேன். அவர்களீடம் செல்வதில்லை. ஓரளவிற்கு பிரச்னை இல்லை.
தங்களீன் கதா நாயகன் பஞ்சாமி சூப்பர்ஸ்டார்.
பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பற்களை எடுத்த பிறகு விழுந்த குழிகளை நாவால் தடவுவது தன்னிச்சையான செயலை தற்குறிப்பேற்ற அணியாக்கி மறைந்த பற்கள் வசித்த இடத்தில் நன்றி மறவாத நாக்கு நினைவஞ்சலி செய்வதாகக் குறிப்பிட்டிருப்பதொன்றே தங்கள் எழுத்தாளுமைக்கு சான்று.
பதிலளிநீக்குகாலிசெய்யப்பட்ட ஜிப் பேக் போல பஞ்சாமியின் வாயைக் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. அவ்வளவு நேர்த்தியான விலாவாரியான வர்ணனைகள். பாராட்டுகள் கோபு சார்.
பாவங்க பஞ்சாமி சாரு. பல்லு போனா சொல்லு போவும்னுவாங்கல்ல. காமெடியான விவரணைலாம் படிக்க படிக்க சிரிப்பாணி பொத்துகிடுது.
பதிலளிநீக்குகடைசிப்பத்தி உவமைகள்
பதிலளிநீக்குவெகு வெகு யதார்த்தம்
மிகவும் இரசித்தேன்
வாழ்த்துக்களுடன்...
குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கினது போலவா??))))காலி தோல் ஜிப் பேக் கமலாரஞ்சு தோலு. ஹையோ சிரிச்ச சிரிச்சு பல்லெல்லலாமே சுளுக்கிடும்போல இருக்கே
பதிலளிநீக்கு//குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது.// பல்ல புடுங்குன வலிய இத விட யாராச்சும் நல்லா புரிய வக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாக டொக்கடிக்கப் போறதுக்கு கட்டியம் சொல்லுற மாதிரி...
பதிலளிநீக்கு//அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது. // எப்படி சார்? இப்படியெல்லாம் வர்ணனை? இரசித்தேன்!
பதிலளிநீக்குஇந்த பல்லு படாத பாடு படுத்துதே.பால் கஞ்சி ஐஸ்க்ரீம் என்று எவ்வளவு நாளைக்கு தாக்கு பிடிக்க முடியுப் கிளிப் போட்ட பற்களை நாக்கு வருடிக்கொண்டேதான் இருக்கும் அது வேர அவஸ்தை அவர் மாமனார் 80- வயசுக்கு மேலும் புது பல் செட் கட்டிக்கொண்டு முறுக்கு மிக்சர் எல்லாம் கர கரன்னு கடித்து சாப்பிடுவதை ஏக்கமாக பார்த்து தானும் அதுபோல எல்லா பற்களையும் பிடுங்கிட்டு புதுபல் செட் கட்டிக்கொள் நினைத்து டாக்டரிடம் சொன்னதில் பற்களை பிடுங்கவே 4- மாசமானதென்றால் புது செட் கட்ட இன்னும் எவ்வளவு மாதங்கள் காத்திருக்கணுமோ. அதுவும் காலியான ஜிப-பேக வாயுடனும் உரித்து போட்ட கமலாரஞ்சு தோல் போன்ற கன்னங்களுடனும். படிக்கும்போது ரசித்து சிரிக்க முடிகிறது. எப்படில்லாம் கற்பனை செய்யுறீங்க. நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 14, 2016 at 6:28 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த பல்லு படாத பாடு படுத்துதே.பால் கஞ்சி ஐஸ்க்ரீம் என்று எவ்வளவு நாளைக்கு தாக்கு பிடிக்க முடியும் .. கிளிப் போட்ட பற்களை நாக்கு வருடிக்கொண்டேதான் இருக்கும் .. அது வேற அவஸ்தை .. அவர் மாமனார் 80- வயசுக்கு மேலும் புது பல் செட் கட்டிக்கொண்டு முறுக்கு மிக்சர் எல்லாம் கர கரன்னு கடித்து சாப்பிடுவதை ஏக்கமாக பார்த்து தானும் அதுபோல எல்லா பற்களையும் பிடுங்கிட்டு புதுபல் செட் கட்டிக்கொள் நினைத்து டாக்டரிடம் சொன்னதில் பற்களை பிடுங்கவே 4- மாசமானதென்றால் புது செட் கட்ட இன்னும் எவ்வளவு மாதங்கள் காத்திருக்கணுமோ. //
:) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதானே !!
//அதுவும் காலியான ஜிப்-பேக் வாயுடனும் உரித்து போட்ட கமலாரஞ்சு தோல் போன்ற கன்னங்களுடனும். படிக்கும்போது ரசித்து சிரிக்க முடிகிறது. எப்படில்லாம் கற்பனை செய்யுறீங்க. நல்லா இருக்கு.//
:) மிக்க மகிழ்ச்சி :)
தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவை உணர்வுடன் தாங்கள் சிரித்து ரஸித்த இடங்களை குறிப்பிட்டுச் சொல்லி மகிழ்ந்துள்ளதற்கும் என் இனிய அன்பு நன்றிகள்.