என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 31 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 3 / 8 ]

முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


முன்கதை....................... பகுதி 2
தொடர்ச்சி [ பகுதி 3 ] இப்போது .........................


”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?
தொடரும்

38 கருத்துகள்:

  1. செறிவான நடையில் உங்கள் கதை செல்கிறது. மலைக்குப் போய் வந்தேன்.அலுவலின் பளுவில் வலைக்கு வர இயலவில்லை. இன்று தான் மீண்டும் வலையேறி இருக்கிறேன்..
    உங்கள் கதைகளை எல்லாம் பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ!என்ன சொன்னார்னு சொல்லாம விட்டுடீங்களே சார்,
    மண்டை வெடிக்கறதே எனக்கு

    பதிலளிநீக்கு
  3. விறுவிறுப்பாகச் செல்கிறது, அடுத்த பகுதி எப்போ?

    பதிலளிநீக்கு
  4. அச்சச்சோ, இந்த பட்டாபி என்ன சுடுசொல் சொல்லி அந்த நபரை காயப்படுத்தினாரோ பாவம். ம்..

    பதிலளிநீக்கு
  5. பட்டாபி என்ன சொன்னாரோ? அந்த மனுஷன் என்ன பாடுபட்டாரோ தெரியலியே? சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்கோ சார்.

    பதிலளிநீக்கு
  6. மோகன்ஜி said...// செறிவான நடையில் உங்கள் கதை செல்கிறது. மலைக்குப் போய் வந்தேன்.அலுவலின் பளுவில் வலைக்கு வர இயலவில்லை. இன்று தான் மீண்டும் வலையேறி இருக்கிறேன்.. உங்கள் கதைகளை எல்லாம் பதிவிடுங்கள்.//

    மலையேறி வந்தபின் மீண்டும் தாங்கள் வலையேறியுள்ளதில் மகிழ்ச்சி தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும், ’செறிவான நடை’ என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் அனைத்துக் கதைகளையும் பதிவிடத் தான் ஆசை. முயற்ச்சிக்கிறேன். தெய்வானுக்கிரஹம் & பிராப்தம் இருப்பின் நிச்சயம் நடக்கும்.

    அடிக்கடி [நேரம் கிடைத்தால்] வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. திருமதி ராஜி
    திருமதி மிடில் க்ளாஸ் மாதவி
    திருமதி கோவை2தில்லி &
    திரு, வெங்கட்
    தங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    நீங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக இதன் அடுத்தடுத்த பகுதிகளை படிக்க விரும்புவதால், 2 அல்லது 3 மூன்று நாட்களுக்கு ஒரு பகுதி வீதம் வெளியிட்டு வரும் 10 ஆம் தேதிக்குள், முழுக் கதையையும் வெளியிட்டு விட முயற்சி செய்கிறேன். தாங்கள் தொடந்து அளித்து வரும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி.

    [யார் மண்டையும் வெடித்துவிட, என் தொடர் கதை, ஒரு காரணமாகி விடக்கூடாது ... அதனால் தான் இந்த திடீர் முடிவு]

    பதிலளிநீக்கு
  8. கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகளுடன், அவர் வாய் பிளந்து பெரியதாகச் சிரித்தது, எல்லோருக்குமே பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது.

    பலாப்பழமாக இனிய கனிந்த மனம் கொண்டவருக்கு கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகள் !

    பதிலளிநீக்கு
  9. உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.

    தலைப்புக்குப் பொருத்தமான தோற்றம் !

    பதிலளிநீக்கு
  10. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.

    நினைப்பிற்குத் தகுந்தமாதிரியே உருவம் !

    பதிலளிநீக்கு
  11. இராஜராஜேஸ்வரி said...
    கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகளுடன், அவர் வாய் பிளந்து பெரியதாகச் சிரித்தது, எல்லோருக்குமே பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது.

    //பலாப்பழமாக இனிய கனிந்த மனம் கொண்டவருக்கு கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகள் !//

    Thanks for your kind entry & valuable comments, Madam.

    பதிலளிநீக்கு
  12. இராஜராஜேஸ்வரி said...
    உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.

    //தலைப்புக்குப் பொருத்தமான தோற்றம் !//

    Thanks for your kind entry & valuable comments, Madam.

    பதிலளிநீக்கு
  13. இராஜராஜேஸ்வரி said...
    காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.

    //நினைப்பிற்குத் தகுந்தமாதிரியே உருவம் !//

    Thanks for your kind entry & valuable comments, Madam.

    பதிலளிநீக்கு
  14. மனிதனின் வெளிப்புறத்தோற்றத்தில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தி அதனால் அந்த மனிதரையும் தரக்குறைவாக பேசிடுவாரோ பட்டாபியும் பங்கஜமும் என்று நான் பயந்தது போலவே ஆகிவிட்டதே.. :( எதிராளிக்கு கோபம் என்றால் நமக்கு இரட்டை லாபம்... ரவிக்கு இரட்டை ஐஸ் கிடைத்ததே... விமலா அப்படியே பங்கஜத்தின் குணம் போல ஒரேடியா மறுத்துட்டாளே...

    ஆனால் இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டி இருக்கு பட்டாபியும் பங்கஜமும் எந்த காரணத்துனால அவரிடம் எதையும் வாங்கி சாப்பிட விரும்பலையோ தெரியாது. ஆனால் முகம் தெரியாதவரிடம் எதுவும் வாங்கி சாப்பிடாமல் இருப்பது நலம்...

    சாப்பிடலாமான்னு பங்கஜம் கேட்டதும் பட்டாபிக்கு ஏன் இத்தனை கோபம் வருது? பிபி இருக்குமோ? பாவம் அந்த எதிர்சீட்டு ம்னிதர்... அவரை பார்த்தால் குமட்டிக்கிட்டு வருதா பட்டாபிக்கு? தன்னை இறைவன் அழகா படைச்சிட்டார் என்ற எண்ணம் போலவா?

    இந்த மனிதருக்கு தரவேண்டிய உப்புசீடையை பட்டாபிக்கு கடவுள் கொடுத்திருந்தால் பங்கஜம் என்ன செய்திருப்பார்? பட்டாபியும் தான் என்ன செய்திருப்பார்?

    வெளிப்புறத்தோற்றம் பார்த்து மனிதரை எடைபோடாதீங்கோ என்ற கருத்து உங்க கதையில் ஒரு நல்ல மெசெஜ் அண்ணா....

    அருமையான கதை நடை....

    பார்ப்போம் அடுத்து என்ன ஆகிறது என்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விமலா அப்படியே பங்கஜத்தின் குணம் போல ஒரேடியா மறுத்துட்டாளே... //

      தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்று சொல்லுவாங்களே ... அது போலவா, மஞ்சு.

      //ஆனால் முகம் தெரியாதவரிடம் எதுவும் வாங்கி சாப்பிடாமல் இருப்பது நலம்... //

      அப்போ நான் மஞ்சுவிடம் எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாதா? ;(((((

      ஆனால் எனக்குத்தான் மஞ்சுவின் முகம் தெரியுமே, அப்போ எனக்கு ஜாலி தான். ;)))))

      //வெளிப்புறத்தோற்றம் பார்த்து மனிதரை எடைபோடாதீங்கோ என்ற கருத்து உங்க கதையில் ஒரு நல்ல மெசெஜ் அண்ணா....

      அருமையான கதை நடை....//

      சந்தோஷம் மஞ்சு ;)))))

      //பார்ப்போம் அடுத்து என்ன ஆகிறது என்று....//

      அது சரி, பார்த்திடுவோம்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா


      நீக்கு
  15. அனுபவம்தான் மனிதனை புடம் போடும். பட்டாபிக்கும், அவர் மனைவி பங்கஜத்துக்கும் காசிக்குச் சென்று திரும்புவதற்குள் கண்டிப்பாக இது போல் ஒரு அனுபவம் காத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

    கதையின் போக்கும், தெளிந்த நீரோடை போன்ற உங்கள் நடையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIFebruary 4, 2013 at 12:52 AM
      //அனுபவம்தான் மனிதனை புடம் போடும். பட்டாபிக்கும், அவர் மனைவி பங்கஜத்துக்கும் காசிக்குச் சென்று திரும்புவதற்குள் கண்டிப்பாக இது போல் ஒரு அனுபவம் காத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.//

      நினையுங்கோ நினையுங்கோ. உங்கள் அனுபவம் உங்களைப் புடம் போட்ட தங்கமாக ஆக்கி இதுபோல கருத்த்ளிக்க வைத்துள்ளதூஊ.

      //கதையின் போக்கும், தெளிந்த நீரோடை போன்ற உங்கள் நடையும் அருமை.//

      ஹைய்ய்ய்ய்ய்யா! கேட்கவே ஜாலியாக மனதுக்கு ஜில்லுன்னு இருக்குதூஊஊ.

      நீக்கு
  16. கதாசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றிக்கொண்டு போகிறார். எது எங்கே எப்படி வெடிக்கப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா

      அன்புடையீர்,
      வணக்கம்.
      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக .வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
    2. அன்புள்ள ஜெயா,

      வணக்கம்மா !

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக .வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  17. பாவம் ஸார் அந்த ஆள். அருவெறுப்பா பிறந்தது அவர் மிஸ்டேக்கா?எவ்வளவு பேரோட முகச்சுளிப்பை தாங்கிட்டு இருப்பார் குழந்தைகள் ஆசையா அவருடன் பேசுவதை எவ்வளவு ரசிக்கிறார.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சிவகாமி (பூந்தளிர்),

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  18. ஏற்கனவே பலருடைய அருவறுப்புக்கும் கோபத்துக்கும் எள்ளலுக்கும் ஆளாகியிருக்கும் அவர், இப்போது பட்டாபியின் கோபத்துக்கும் ஆளாகிவிட்டார். என்னென்ன வார்த்தைகளை கேட்க வேண்டியிருக்குமோ? பாவம்.

    பதிலளிநீக்கு
  19. ரயிலுவண்டில புது ஆளுக எத கொடுத்தாலும் வாங்கி கிட கூடாதுதா. அந்த பெரியவரு நல்ல ஆளுபோலதானே தெரியுது. எவ்ள ஆசயா வாங்கி கொடுக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

      அன்புள்ள (mru) முருகு,

      வணக்கம்மா !

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி மாதம் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

      நீக்கு
  20. குழந்தைகள் இருவரும் அந்த பெரியவரிடம் எந்தவிதமான அருவெறுப்பும் காட்டாமல் விகல்பமில்லாமல் பேசி பழகுவதை நன்றாக சொல்ஸி வருகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள ’சரணாகதி’ அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி மாதம் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  22. ஹீரோ தனது தோற்றத்தைப்பற்றி சிறிதும் தாழ்வுணர்ச்சி கொண்டவராக தொன்றவில்லை. சூழ்நிலையில் இயல்பாக பொருந்தியிருப்பதான அவரது பாத்திரப்படைப்பு...ரசிக்கத்தக்கது...

    பதிலளிநீக்கு
  23. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் என்னால் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
    திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் என்னால் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  25. ரயில்வே ஸ்டேஷனில் இருப்பது போலவே முதல் பத்தியில் உணர முடிகிறது. சமோசா கட்லெட் போண்டா வடைதானே அந்தபக்கம் கூவிக்கூவி விப்பாங்க. நம்ம பக்கம்தானே இட்லி தோசை வரும்......
    ரவி ஜஸ்க்ரீமை ஆசையாக பார்ப்பதை உணர்ந்த பெரியவர் வாங்கி கொடுத்ததை ஆசையுடன் சாப்பிடும் ரவியின் குழந்தை மனது.... பெற்றவர்களின் தவிப்பு. ரயிலில் யாரு எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாதுங்கற விழிப்புணர்வு... எல்லாவற்றையும் நன்கு யோசித்து அழகாக கதை போகுது. அந்த பெண் ஜஸ்க்ரீம் வேண்டாம்னு மறுத்தது சிறு வயதிலேயே பெண்களுக்கு ஜாக்கிரதை உணர்வு வந்து விடும்போலன்னு நினைக்க தோணுது. எல்லாருடைய மன உணர்வுகளும் புரியும்படியான எழுத்து. ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ரயில்வே ஸ்டேஷனில் இருப்பது போலவே முதல் பத்தியில் உணர முடிகிறது.//

      சந்தோஷம்.

      //சமோசா கட்லெட் போண்டா வடைதானே அந்தபக்கம் கூவிக்கூவி விப்பாங்க. நம்ம பக்கம்தானே இட்லி தோசை வரும்......//

      இல்லை நான் வடக்கே இரயிலில் பயணம் செய்த போதெல்லாம் ஒரு விஷயம் நன்கு கவனித்து ஆச்சர்யப்பட்டுள்ளேன். தோஸா, வடா, இட்லி என்ற பெயரில் தோசையும், வடையும், இட்லியும் எங்கும் பரவலாக விற்கப்பட்டன. இவை நம் இந்திய தேசிய சிற்றுண்டிகளாக இருக்கும் போல என எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்.

      //ரவி ஜஸ்க்ரீமை ஆசையாக பார்ப்பதை உணர்ந்த பெரியவர் வாங்கி கொடுத்ததை ஆசையுடன் சாப்பிடும் ரவியின் குழந்தை மனது.... பெற்றவர்களின் தவிப்பு. ரயிலில் யாரு எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாதுங்கற விழிப்புணர்வு... எல்லாவற்றையும் நன்கு யோசித்து அழகாக கதை போகுது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அந்த பெண் ஜஸ்க்ரீம் வேண்டாம்னு மறுத்தது சிறு வயதிலேயே பெண்களுக்கு ஜாக்கிரதை உணர்வு வந்து விடும்போலன்னு நினைக்க தோணுது.//

      கரெக்ட்டு :)

      //எல்லாருடைய மன உணர்வுகளும் புரியும்படியான எழுத்து. ரொம்ப நல்லா இருக்கு.//

      ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  26. இந்த தொடரை கன்டினியூவா போடாம ஏன் மிடில் மிடில்ல வேர கதையை இடைச்செருகலா போடுறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:23 AM

      //இந்த தொடரை கன்டினியூவா போடாம ஏன் மிடில் மிடில்ல வேற கதையை இடைச்செருகலா போடுறீங்க.//

      நல்லதொரு நியாயமான கேள்வி இது. இவைகளை நான் வெளியிடும் ஜனவரி 2011 நான் பதிவுலகில் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களாகும்.

      நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து ஒரு மாதம்கூட ஆகாத ‘L' Board Days ! அவைகள் :)

      அப்போது எனக்கு எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. ஏதோ ஓர் ஆர்வக்கோளாறினால் மட்டுமே நான் பதிவுகள் கொடுத்து வந்தேன்.

      [தங்களின் தற்போதைய வெளியீடான ’ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகங்கள் போல என்றும் வைத்துக்கொள்ளலாம். அதையே தொடராகக் கொடுக்காமல் இடைஇடையே வேறு சில பதிவுகளும் கொடுத்துள்ளீர்கள் அல்லவா ! :) ]

      மேலும் நம் ’ஸ்ரத்தா, ஸபுரி’ போல யார் கர்ம ஸ்ரத்தையாக தொடர்கதையெல்லாம் விரும்பிப் படிக்கப்போகிறார்கள் என்ற ஓர் எண்ணமும் எனக்கு இருந்தது, அப்போது.

      அதுபோன்று தொடர்கதை படிக்க விரும்பாதவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க, குட்டிக்குட்டிக் கதைகளாக இந்தத் தொடர் கதைக்கு நடு நடுவே என் பதிவுகளில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

      இதே கதையை மேலும் வெவ்வேறு காரணங்களுக்காக 2011 நவம்பரிலும், 2014 பிப்ரவரியிலும் மீள் பதிவாக முழுநீளக்கதையாக ஒரே பகுதியாகவும் கொடுத்துள்ளேன்.

      தங்களின் வருகைக்கும், என் அன்றைய நிலையைக் கொஞ்சம் விளக்க/விளங்க வைக்க உதவியதற்கும் என் நன்றிகள். - VGK

      நீக்கு
    2. My Dear ஸ்ரத்தா ஸபுரி,

      ஒரு சின்ன சந்தேகம் ....... எனக்கல்ல ............ என் நெருங்கிய பதிவுலகத் தோழி ஒருத்திக்கு வந்துள்ளது. பின்னூடங்கள் ஏதும் தராவிட்டாலும்கூட தங்கள் பதிவுகள் பக்கமும் அவர் வந்து அவ்வப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்துள்ளார் என்பதும் எனக்குத் தெரியும்.

      அவர் தற்சமயம் வட இந்தியாவில் எங்கோ வசித்து வருபவர். தமிழைத்தவிர பல வட இந்திய மொழிகள் அவருக்குத் தெரியும்.

      ’ஸ்ரத்தா ஸபுரி’ என்ற பெயரில் எனக்கு அவ்வப்போது பின்னூட்டங்கள் கொடுத்துவரும் தாங்கள் ஒரு ஆணா அல்லது பெண்ணா என்பது அவரின் முதல் சந்தேகம்.

      இரண்டாவது தாங்கள் இந்தப்பெயரினைத் தேர்ந்தெடுத்துள்ளது ஏன்? இந்தத் தங்களின் பெயர் எந்த மொழியைச் சேர்ந்தது? அதற்கு என்ன அர்த்தம்?

      பலமொழி தெரிந்த அவர் ஹிந்தியில் இதற்கான அர்த்தம் என்று ஆங்கிலத்தில் என்னிடம் சொல்லியுள்ளது: "INTEREST INVOLVEMENT" என்பதாகும். அதாவது தமிழில் சொல்ல வேண்டுமானால் ’ஈடுபாட்டுடன் கூடிய ஆர்வம்’ என்றும் நாம் வைத்துக்கொள்ளலாம்.

      ஓர் பெண் பெயரில் ஆண் பதிவு எழுதுவதும், ஒரு ஆண் பெயரில் ஓர் பெண் பதிவு எழுதுவதும், ஆணா பெண்ணா என யாருமே சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாத பெயர்களில் சிலர் பதிவுகள் எழுதுவதும் உண்டுதான். பார்த்திருக்கிறேன்.

      தாங்கள் இதில் எந்த ரகமோ எனக்குத் தெரியாது. தெரிய வேண்டும் என்ற கட்டாயமும் ஏதும் இல்லைதான்.

      தாங்கள் விருப்பப்பட்டால், என் நெருங்கிய தோழிக்காகவாவது இது சம்பந்தமாக சில விளக்கங்கள் அளித்தால் நானும் மகிழ்வேன்.

      வெளிப்படையாகச் சொல்ல விரும்பாவிட்டாலும் எனக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும்.

      My Mail ID : valambal@gmail.com

      அன்புடன் VGK

      நீக்கு
  27. ஸ்ரத்தா ஸபுரிக்கு தங்களின் சிநேகிதி அவர்கள் சொல்லி இருந்த அர்த்தம் கரெக்ட்தான். தமிழ்லகூட" சிரத்தை" என்பது சிரத்தையுடன் ஒரு விஷயத்தில் ஈடுபடவேண்டும் என்று வருமே. ஸபுரி க்கு இன்னொரு அர்த்தமும் சொல்லலாம். முழு அர்ப்பணிப்பு. பூரண சரணாகதி.
    ஒருமுறை ஷீரடி போயிருந்தப்போ பாபாவின் இருபக்கங்களிலும் இந்த வார்த்தைகளை பார்க்க கிடைத்தது. அங்க கேட்டப்போ இது மராட்டி வார்த்தை. பாபா விடம் நாம் நம்மை பூரணமாக ஒப்படைத்து விட்டால் அவர் நம் கூடவே இருப்பார். நமக்கு ஏற்படுகிறற கவலைகளோ துன்பங்களோ நம்மை பாதிக்காது. என்றார்கள் அந்த பெயர் பிடித்ததால அதையே வச்சேன். வலைப்பதிவு எழுதும் நினைப்பெல்லாம் இருந்ததே இல்ல. இப்ப கொஞ்ச நாட்களாகத்தான் ஆன்மீகம் பக்கம் கவனம் திரும்பி இருக்கு. யதேச்சயா ராஜேஸ்வரி அம்மா பதிவு பாக்க கிடைத்தது. ஸ்லோகங்கள் படிச்சு ஆன்மிக விஷயங்கள் படிக்கும்போது மனது அமைதி அடைகிற ஃபீலிங்க். அங்க பின்னூட்டத்தில் உங்க பெயர் பார்த்து உங்க பக்கம் வந்தேன். இப்ப உங்க நட்பு வட்டத்துக்குள்ள நானும் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எந்த நேனத்திலும் எந்த நிலையிலும் உங்க நட்பு வட்டத்தை விட்டு போயிடக்கூடாதுன்னு ஒரு தவிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 7, 2016 at 9:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      என் சிநேகிதிக்கான சந்தேகங்களில் ஒன்றுக்கு மட்டும் மிகவும் விரிவாக பதில் அளித்து மகிழ்வித்துள்ளீர்கள். என் சார்பிலும் என் சினேகிதி சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //இப்ப உங்க நட்பு வட்டத்துக்குள்ள நானும் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.//

      எனக்கும் அதே சந்தோஷம் மட்டுமே

      //எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் உங்க நட்பு வட்டத்தை விட்டு போயிடக்கூடாதுன்னு ஒரு தவிப்பு.//

      முடிந்தவரை நட்பு வட்டத்திற்கும் நம்மை நாமே கட்டிப்போட்டுக்கொண்டு இருந்துவர முயற்சிப்போம். இதுபோல எவ்வளவோ பேர்கள் என்னுடன் மிகவும் நட்புடன் இருந்தார்கள். இப்போது அவர்களில் சிலரைக் காணவே காணோம். இந்த வலையுலகில் எதுவுமே (யாருடைய நட்புமே) சாஸ்வதம் இல்லை என்பதை நான் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளேன்.

      அன்புடன் VGK

      நீக்கு