ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.
நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.
அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.
தொடரும்....
பல்லை கழட்டிய விதி அவர் பல்செட்டோடும் விளையாடிவிட்டதா? அச்சச்சோ.... அப்புறம்...
பதிலளிநீக்குடியர் வெங்கட்,
பதிலளிநீக்குமேலே படத்தில் உங்கள் பெயருக்கு அருகில் உள்ள பெண் குழந்தை, துபாயிலிருக்கும் என் பேத்தி பவித்ரா போலவே இருக்கிறாள். அவளும் அடிக்கடி என்னிடம் கதை கேட்கும் போது ‘அச்சச்சோ.... அப்புறம் என்னாச்சு தாத்தா......’ என்பாள். அந்த ஞாபகம் தான் எனக்கு வந்தது.
மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
பதிலளிநீக்குஒரு வழியாய் பல்வேறு கஷ்டங்களுடன் பலமாய் பாடம்கற்றுக்கொண்ட பஞ்சாமி!
மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது. தொடரும்....
பதிலளிநீக்குவிதியே தொடர் கதை தானே !
பட்ட காலிலே படும் !
பட்ட பல்லே மீண்டும் பிரச்சினை தரும்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குஅடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
ஒரு வழியாய் பல்வேறு கஷ்டங்களுடன் பலமாய் பாடம் கற்றுக்கொண்ட பஞ்சாமி!//
ஆமாங்க, அவரும் மஹா கஷ்டப்பட்டு விட்டாருங்க, பாவம்.
எல்லா கஷ்டங்களையுமே ஒரு பாடமாகத்தான் உணரமுடிகிறது.
அருமையாகவே சொல்லியுள்ளீர்கள்.
;))))) நன்றி!
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குமீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது. தொடரும்....
விதியே தொடர் கதை தானே !
பட்ட காலிலே படும் !
பட்ட பல்லே மீண்டும் பிரச்சினை தரும்.//
உங்களைப்போன்ற சிலர் விதியை மதியால் [மதியுள்ளதால்] வென்று விடுகிறீர்கள்.
ஆனால் நானும் பஞ்சாமியும்.. ? ;(
//அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.//
பதிலளிநீக்குஇது பல்செட்டுக்கு மாத்திரமல்ல, தொடர் கஷ்டங்கள் வரும்போது அக்கஷ்டங்கள் எமக்கு பழகிவிடும் என்பதையும் உணர்த்துகிறது இவ்வரிகள்.
****அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.****
பதிலளிநீக்கு//இது பல்செட்டுக்கு மாத்திரமல்ல, தொடர் கஷ்டங்கள் வரும்போது அக்கஷ்டங்கள் எமக்கு பழகிவிடும் என்பதையும் உணர்த்துகிறது இவ்வரிகள்.//
ஆஹா, வெகு அழகாகவே சொல்லிவிட்டீர்கள்.
அதே அதே அதே அதே சகோதரி. மிக்க நன்றி.
அன்புடன்,
VGK
மாற்ற முடியாதவற்றைச் சகித்துத் தானாகவேண்டும் என்பதை பல் செட் எவ்வளவு அழகாக சொல்லிக்கொடுக்கிறது பார்த்தீர்களா?
பதிலளிநீக்குவிதி பஞ்சாமியோட பல்லோட ரொம்ப விளையாடிடுத்து.
பதிலளிநீக்கு//அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.//
என்ன செய்ய. பழக்கப் படுத்திண்டு தானே ஆகணும்.
பஞ்சாமியோட பல் "செட் " ரொம்பவே ஆட்டம் காட்டுகிறதோ!!!
பதிலளிநீக்குஐய்யோ மறுபடி என்ன பிரச்சினைல மாட்டிக்கிட்டார் பல் செட்லாம் தான் வச்சிண்டாச்சே அப்புரமும் என்ன?
பதிலளிநீக்குபல்லு செட வச்சி கூட மருக்காவும் இன்னாச்சி?
பதிலளிநீக்குஅடப் பாவமே
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு
அனேகமாக இது கடைசிப் பதிவுக்கு
முந்தியப் பதிவாகத்தான் இருக்கும்
என என் திரைக்கதை குறித்த அறிவு
கண் சிமிட்டுகிறது
பார்ப்போம்..
பல் ஸெட் பொறுத்திண்டவா எல்லாருமே கொஞ்ச நாளைக்கு புலம்பிக்கொண்டேதானிர்ப்பா. அவங்க முக அமைப்பே கூட மாறிட்டாப்போல தோணும். மறுபடி என்ன சிக்கலில் மாட்டினார் நம்ம ஹீரோ...
பதிலளிநீக்குவிதி... அதுதான் முதல் பகுதிலயே தன் விளையாட்ட தொடங்கிடுச்சே...கிளைமாக்ஸ் என்னன்னு பாக்கலாம்...
பதிலளிநீக்கு//ன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.
பதிலளிநீக்குஅடுத்து என்ன? அறிய ஆவல்!
தினசரி பல்செட்ட தனியா கழட்டி க்ளீன் செய்வதே போரான வேலைதான் ஜோசியக்காரா சொல்வது போல முதல் 6- மாசம் கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிப்போயிடும்னு ஆயிடுத்து பஞ்சாமியின் பல் ப்ராப்ளம். குதிரை கீழே தள்ளியதுமில்லாம குழியும் பறிச்சுதாம்னு சொல்வது போல மறுபடி என்னாச்சி அவருக்கு
பதிலளிநீக்குபஞ்சாமிக்கும் பல்லுக்கும் ராசியே இல்லை போல இருக்கு. பாவம் மனுஷர் எவ்வளவு மாசமா அவஸ்தை படறார்.
ஸ்ரத்தா, ஸபுரி... January 18, 2016 at 11:11 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தினசரி பல்செட்ட தனியா கழட்டி க்ளீன் செய்வதே போரான வேலைதான். ஜோசியக்காரா சொல்வது போல முதல் 6- மாசம் கஷ்டமாக இருக்கும். பிறகு அதுவே பழகிப்போயிடும்னு ஆயிடுத்து பஞ்சாமியின் பல் ப்ராப்ளம். குதிரை கீழே தள்ளியதுமில்லாம குழியும் பறிச்சுதாம்னு சொல்வது போல மறுபடி என்னாச்சி அவருக்கு//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அடுத்த இறுதிப்பகுதியில் உறுதியாகத் தெரிந்துவிடும். :)
//பஞ்சாமிக்கும் பல்லுக்கும் ராசியே இல்லை போல இருக்கு. பாவம் மனுஷர் எவ்வளவு மாசமா அவஸ்தை படறார்.//
அதானே .... பாவம் என அவர் மீது இரக்கம்கொண்ட தங்களுக்கு பஞ்சாமி சார்பில் என் ஸ்பெஷல் நன்றிகள்.
தங்களின் அன்பான தொடர் வருகையும், அழகான வித்யாசமான கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றன.