About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 21, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-8]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-12


[காவி வஸ்த்ரத்துடன், கையில் தண்டமும், கமண்டலமும் எடுத்துக்கொண்டு, பட்டை பட்டையாக விபூதி, சந்தனம், குங்குமம் நெற்றியில் இட்டு, கழுத்தினில் ருத்ராட்சம் அணிந்து, சங்கரன் தன் தாயை நமஸ்கரித்து விட்டு எங்கோ புறப்படுதல்]

ஆர்யா: 


சங்கரா! இது என்ன கோலம்?  


என்னை விட்டுவிட்டு எங்கே நீ புறப்படுகிறாய்? 


எங்கே தங்குவாய்? 


எங்கே சாப்பிடுவாய்?


சங்கரன்: 


அம்மா! முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்ற, தாங்கள் தான் என்னைத் துறவரம் மேற்கொள்ளச் சொல்லி உத்தரவு கொடுத்தீர்கள். 


அதற்குள் மறந்து விட்டீர்களா?


இது துறவியின் கோலம்.


இனி துறவியாகிய நான் தங்களுடன் இந்த வீட்டிலேயே தங்கக்கூடாது.


இனியும் நாம், தாய் மகன் என்று உறவாடுவது தர்ம நியாயம் இல்லை, தாயே. 


ஆர்யா: 


சரிடா, சங்கரா! என்னை விட்டுவிட்டு நீ இப்போது எங்கே செல்லப்போகிறாய்?


சங்கரன்: 


இனி நான் செல்லும் இடமெல்லாம் என் வீடு தான் தாயே! 


நான் சந்திக்கும் மக்களெல்லாம் எனக்கு இனி உறவினர்கள் தான், தாயே!  


கால் போனபோக்கில் பல ஊர்களுக்கும் க்ஷேத்ராடனம் செல்லப்போகிறேன், தாயே.


ஆர்யா: உன் பசி அறிந்து இனி உனக்கு யார் சாப்பாடு போடுவார்கள், சங்கரா?


சங்கரன் [புன்னகையுடன்]:


சந்நியாஸிகளை வரவேற்று உபசரித்து பிக்ஷை அளிக்க அனைத்து ஊர்களிலும் ஆங்காங்கே, சில் நல்லவர்களும், தர்ம சிந்தனையுள்ளவர்களும் இருப்பார்கள், தாயே.


நேற்று வரை நீங்கள் மட்டும் தான் எனக்குத் தாய்.  


இன்று முதல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஸ்திரீகளும் எனக்குத் தாய் தான்.


ஆர்யா:


என் அந்திமக்காலத்தில் என் உயிர் பிரியும் போது கூட, உன்னைப் பார்க்காமல் தான், நான் ஏங்கி சாக வேண்டுமா?


இதுதான் உன்னை நான் பிள்ளையாகப் பெற்றதற்கு எனக்குக் கிடைத்திடும் பரிசா, சங்கரா?


சங்கரன்: 


இல்லை தாயே! அது போன்ற ஒரு சூழ்நிலையில் தாங்கள் நினைத்த மாத்திரத்தில், நான் எங்கிருந்தாலும் உங்களிடம் ஓடோடி வந்திடுவேன், தாயே.


அதைப்பற்றிய கவலையை விட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள். 


நான் என் கடமைகளைச் செய்யச் சென்று வருகிறேன்.


[ சங்கரன் தன் தாயாரை நமஸ்கரித்துப் புறப்ப்டுதல் ]   இதன் தொடர்ச்சி நாளை 22.04.2012 ஞாயிறு அன்று 


வெளியிடப்படும் நேரங்கள் பற்றிய அறிவிப்பு
பகுதி-9 [காட்சி-13]  காலை 10 மணிக்கு
பகுதி-10 [காட்சி-14] மதியம் 3 மணிக்கு
பகுதி-11 [காட்சி-15] இரவு 8 மணிக்கு

24 comments:

 1. நாளைக்கு மூன்று பகுதிகள்... படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்.

  ReplyDelete
 2. தாங்கள் நினைத்த மாத்திரத்தில், நான் எங்கிருந்தாலும் உங்களிடம் ஓடோடி வந்திடுவேன், தாயே.

  அம்மாவை மிஞ்சிய தெய்வம் இல்லை.. சன்யாசிக்கும்!

  ReplyDelete
 3. வெளியீட்டு schedule and discipline என்னை மிகவும் கவர்கிறது.
  பதிவும் short and sweet. தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. இல்லை தாயே! அது போன்ற ஒரு சூழ்நிலையில் தாங்கள் நினைத்த மாத்திரத்தில், நான் எங்கிருந்தாலும் உங்களிடம் ஓடோடி வந்திடுவேன், தாயே.//

  தாயின் பாசத்தை எந்த துறவியாலும்
  துறக்க முடியாது.

  சமுதாயத்திற்கு தன் பிள்ளயை கொடுத்த தாய்க்கு இதுகூட செய்யவில்லை என்றால் எப்படி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இனி நான் செல்லும் இடமெல்லாம் என் வீடு தான் தாயே!


  நான் சந்திக்கும் மக்களெல்லாம் எனக்கு இனி உறவினர்கள் தான், தாயே!

  uஉலகத்தையே உறவாக்கி உறவுக்கூட்டில் முதிர்ச்சியுற்று வண்ணத்துப்பூச்சியாய் பறந்த உன்னத அவதாரம் பற்றி அருமையான ஆக்கம்..

  ReplyDelete
 6. இல்லை தாயே! அது போன்ற ஒரு சூழ்நிலையில் தாங்கள் நினைத்த மாத்திரத்தில், நான் எங்கிருந்தாலும் உங்களிடம் ஓடோடி வந்திடுவேன், தாயே.//

  துறவியாலும் துறக்கமுடியாத தாய்ப்பாசம் .. நெகிழ்ச்சியான வரிகள்..

  ReplyDelete
 7. பட்டினத்தார் போன்று முற்றும் துறந்தவர்களையும் கதறி அழுது அரற்ற வைத்து அழியாத பாடல் காவியங்கள் தரவைத்தது தாய்ப்பாசமன்றோ..

  ReplyDelete
 8. ஆதிசங்கரரின் மாத்ரு பஞ்சகம் உள்ளத்தை உருக்கும் பொருள்கொண்டதாயிற்றே !

  அவதாரத்தையே கலங்க வைக்கும் உன்னத உறவு அன்னை!

  ReplyDelete
 9. I felt very emotional on reading this post.
  viji

  ReplyDelete
 10. முழு மூச்சிலே இது வரை எழுதிய அத்தனை பதிவுகளையும் படித்து விட்டேன் அய்யா. சுவாரசியம் குறையாமல் செல்கிறது. படிப்தற்கு ஆனந்தமாக உள்ளது. மிக்க நன்றி. இந்த ஆன்மீகப் பயணத்தை எங்களுக்கு வழங்குவதற்கு

  ReplyDelete
 11. இதில் அந்த தாயின் தவிப்பு நன்றாக புரியவருகிரது.

  ReplyDelete
 12. தாயின் அன்புக்கும், தவிப்புக்கும் ஈடு இணையேது....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. நேற்று வரை நீங்கள் மட்டும் தான் எனக்குத் தாய்.


  இன்று முதல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஸ்திரீகளும் எனக்குத் தாய் தான்.

  -தாயின் தவிப்பும் அதற்காக அளிக்கும் பதிலும் அருமை!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 14. ஆர்யா: உன் பசி அறிந்து இனி உனக்கு யார் சாப்பாடு போடுவார்கள், சங்கரா?


  இது தான் தாய் !
  அருமையான வசனங்கள்!

  ReplyDelete
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 16. சந்நியாசியானாலும் தாய்க்குச் செய்யவேண்டிய கடமைகளைத் துறக்க முடியாது என்பதை துறவி சங்கரன் விளக்குகிறார்.

  ReplyDelete
 17. இல்லை தாயே! அது போன்ற ஒரு சூழ்நிலையில் தாங்கள் நினைத்த மாத்திரத்தில், நான் எங்கிருந்தாலும் உங்களிடம் ஓடோடி வந்திடுவேன், தாயே.
  அதைப்பற்றிய கவலையை விட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள்.
  நான் என் கடமைகளைச் செய்யச் சென்று வருகிறேன்.//

  சந்நியாசியாக ஆக அனுமதி அளித்த அன்னைக்கு மரியாதை.

  ReplyDelete
 18. தாய்மனம் பரிதவித்தாலும் பிள்ளைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றித்தானே ஆகவேண்டும். அதுபோல் பிள்ளையும் தாயின் அந்திம நேரத்தில் எங்கிருந்தாலும் வந்துவிடுவேன் என்று வாக்களித்துள்ளது. நிறைவேறவேண்டும்.

  ReplyDelete
 19. சந்நியாச தர்மத்தை தாய்க்கு விபரமாக சொன்னாலும் தாய் மனதால தாங்கிக்கொள்ள முடியலியே

  ReplyDelete
 20. அப்ப சாமியாரா போன பின்னாடி அம்மினு கூப்ட கூடாதா. அது எப்பூடிங்க.

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 4:03 PM

   //அப்ப சாமியாரா போன பின்னாடி அம்மினு கூப்ட கூடாதா. அது எப்பூடிங்க.//

   சாமியாராகப் போய்விட்டால் உலகில் உள்ள அனைத்துப் பெண்மணிகளும் அந்த சாமியாராகப் போனவருக்கு அம்மி (தாய்) போலத்தானாம்.

   அதனால் அவர் தன்னைப் பெற்றெடுத்த ஒருத்தியை மட்டும் ‘அம்மா’ என்று உறவுமுறையுடன் அழைப்பது நியாயமில்லையாம்.

   துறவரம் மேற்கொண்டதும் அவர் தன் உறவுகளையும் துறந்து விடுகிறார் என்று சொல்லுகிறார்கள்.

   Delete
 21. மனதை உருக்கும் தாய்ப்பாசம் அவதார நோக்கம் நிறைவேர வேண்டுமே.

  ReplyDelete
 22. ஒரு நாடகம் பார்ப்பது போல வசங்களை செவிமடுக்க முடிகிறது.

  ReplyDelete