About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, April 18, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-4]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-5


[நான்கு வயது சங்கரனை கட்டிப்பிடித்துக்கொண்டு தாயார் ஆர்யாம்பாள் கண் கலங்கி அழுகிறாள்] ஆர்யா: 


சங்கரா! இப்படி நம்மை அனாதையாகத் தவிக்க விட்டுவிட்டு உன் அப்பா போய் விட்டாரேடா!


இனி நாம் என்ன செய்வோம்? 


எப்படித்தனியாக இந்த உலகில் வாழ்வோம்? 


மிகவும் கவலையாக உள்ளதேடா சங்கரா!! 


சங்கரன்:


அம்மா! தங்கள் மனதை திடமாக தைர்யமாக வைத்துக்கொள்ளுங்கள்.


மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. 


வைத்தியம் செய்து இதை சற்று தள்ளிப்போடலாமே தவிர, யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது.


மனிதராகப் பிறந்த எல்லோருமே என்றாவது ஒருநாள், என் தந்தையைப் போலவே, மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும்.


இவையெல்லாமே விதிப்படி நடப்பவை.


கலங்காதீர்கள்.


எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தான் இனி ஆதரவு.


எனக்கு உடனடியாக உபநயனம் செய்து வைத்து, குருகுலத்தில் படிக்க அனுப்புங்கள், தாயே!


ooooooooooooooooooooooooo  

காட்சி-6

[பட்டு, கிட்டு, ஆர்யாம்பாளுடன், சங்கரன் மார்பில் பூணூல், தலையில் சிகை (குடுமி) யுடன் குருகுலம் வருவது. குருவை விழுந்து வணங்குவது]


சங்கரன்: 


ஸ்ரீ குருப்யோ நம:

குரு: 

சங்கரா! உபநயனம் ஆகி குருகுலம் வந்துள்ள நீ இன்று முதல் பிரும்மச்சாரி. 


பிரும்மச்சர்ய தர்மப்படி நீ கிருஹஸ்தர்கள் வீடுகளுக்குப்போய், ஏதாவது கொஞ்சம் பிக்ஷை வாங்கி வந்து, குருவிடம் ஒப்படைத்து விட்டு, வேத பாடங்கள் படித்து முடித்தபின், அதை எல்லோரிடமும் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.

சங்கரன்: ஆகட்டும் குருவே, நான் அவ்வாறே செய்கிறேன்.

பட்டு: 

சங்கரா! பிக்ஷை கேட்டு நீ அங்குமிங்கும் எங்கும் அலைய வேண்டாம்.  

என் வீட்டுக்கும், கிட்டு மாமா வீட்டுக்கும் தினமும் வந்துவிடு. 


நாங்கள் சாப்பாடு தந்து விடுகிறோம்.

குரு: 


அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது சங்கரா. 


தினமும் ஒவ்வொரு வீடாகச் சென்று பிக்ஷை வாங்கி வர வேண்டும்.

சங்கரன்: 


உத்தரவு குருவே! 


நான் தாங்கள் சொல்படியே செய்கிறேன். 


இதோ இன்றைக்கான பிக்ஷைக்கு இப்போதே புறப்படுகிறேன்.

[பிக்ஷா பாத்திரத்துடன் சங்கரன் வெளியே புறப்படுதல்]

ஆர்யாம்பாள்:

குருவே! என் குழந்தை சங்கரனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். 


இனி தாங்கள் தான் அவனுக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாமாக இருந்து அவனை நல்வழிப்படுத்த வேண்டும்.

குரு: 

இயற்கையிலேயே ஞானம் பெற்ற குழந்தை தான் சங்கரன். 


நான் பார்த்துக்கொள்கிறேன். 


நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள்.

[ஆர்யா, பட்டு, கிட்டு மூவரும் விடைபெற்றுச் செல்கின்றனர்][இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

23 comments:

 1. நாடக வடிவில் ஆதிசங்கரரின் வாழ்க்கை,படிக்க மனம் மகிழ்கிறது.மிக நல்ல முயற்சி!

  ReplyDelete
 2. இயற்கையிலேயே ஞானம் பெற்ற குழந்தை தான் சங்கரன். //

  ஞானகுருவல்லவா சங்கரனாய் வந்து இருக்கிறார்.

  வசனம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. மனதை நெகிழவைக்கும் பதிவு!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 4. //மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு.


  வைத்தியம் செய்து இதை சற்று தள்ளிப்போடலாமே தவிர, யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது.
  //

  நிதர்சனம்.....

  நல்ல தொடர். தொடருங்கள்.

  ReplyDelete
 5. Thanks sir for this post.
  Given one chance to read about our great Guru by your post.
  viji

  ReplyDelete
 6. குழந்தை சங்கரரின் பேச்சு அற்புதமாய் உள்ளது. அதோடு உங்கள் எளிமையான எழுத்து நடையும்.

  ReplyDelete
 7. ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க சிலிர்ப்பாக இருக்கு. தொடருங்கள்.

  ReplyDelete
 8. ஒவ்வொரு வரிகளுமே எளிதாய் புரியும் வண்ணம் அருமையாக உள்ளது சார். தொடர்கிறேன்.

  ReplyDelete
 9. /மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு.


  வைத்தியம் செய்து இதை சற்று தள்ளிப்போடலாமே தவிர, யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது.
  /

  சிறுவன் சங்கரன் சொல்வது உண்மை...பெரிய தத்துவம்...
  இதை ஏற்றுக்கொண்டால் நாம் அனைவருமே ஞானிகள் ஆகிவிடுவோமே...

  நல்ல நாடக வடிவம்...

  ReplyDelete
 10. இயற்கையிலேயே ஞானம் பெற்ற குழந்தை தான் சங்கரன்.

  சிவனே சங்கரனாக அவதரித்த ஞானக்குழந்தை..

  ReplyDelete
 11. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 12. very true, death is certain and cannot be postponed unless & otherwise the almighty think so. So in the short life span we should do as much good as possible, that is the path to moksha.

  You have devoted time patiently for writing the dialogues that too so crisp, short & sweet.

  ReplyDelete
 13. Mira,

  Thank you very much for your kind entry & valuable comments to
  Part 2 to 7 & 11 of this drama.

  Affectionately yours,
  Gopu

  ReplyDelete
 14. குருகுல வாசம் செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் ஒருவனை பக்குவப் படுத்துகின்றன.

  ReplyDelete
 15. //மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு.

  வைத்தியம் செய்து இதை சற்று தள்ளிப்போடலாமே தவிர, யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது.//

  நிதர்சனமான உண்மை.

  குருகுலம். என்ன ஒரு அருமையான அமைப்பு அந்நாட்களில்.

  ReplyDelete
 16. தந்தையைப் பிரிந்த வருத்தத்திலும் தாய்க்கு உலக வாழ்க்கை பற்றி எடுத்துரைத்து ஆறுதல் கூறுவது ஆச்சர்யம். குருவின் கையில் ஒப்படைக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும். குருகுலத்தின் மகிமையும் அதுதான் அல்லவா?

  ReplyDelete
 17. பூணூல் போட்டு குருகுலத்தில் சேர்ந்த பிறகு மிகவும் கட்டுப்பாடுகளுடன் வாழ எவ்வளவு மனத் திடம் இருக்க வேண்டும்? அந்த சின்ன வயதிலேயே அவருக்கு அமைந்து விட்டதே.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 5, 2015 at 11:35 AM

   //பூணூல் போட்டு குருகுலத்தில் சேர்ந்த பிறகு மிகவும் கட்டுப்பாடுகளுடன் வாழ எவ்வளவு மனத் திடம் இருக்க வேண்டும்? அந்த சின்ன வயதிலேயே அவருக்கு அமைந்து விட்டதே.//

   அவர் இறைவனின் அவதாரம் ... அதனால் சின்ன வயதிலேயே அவருக்கு அவ்வாறு மனது திடமாக அமைந்துள்ளது.

   நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். எவ்வளவுதான் வயதானாலும் கட்டுப்பாடுகளுடன் வாழ்வதென்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. நாளுக்கு நாள் ஆசையும் சபலங்களும் நமக்குக் கூடத்தான் செய்கின்றன. என்ன செய்வது?

   Delete
 18. எங்கட வாப்பா நெனப்பு வந்திடிச்சி. எங்கட சின்ன வயசிலயே வாப்பா மவுத் ஆயிடிச்சில்ல

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 3:52 PM

   //எங்கட வாப்பா நெனப்பு வந்திடிச்சி. எங்கட சின்ன வயசிலயே வாப்பா மவுத் ஆயிடிச்சில்ல//

   வெரி வெரி ஸாரிம்மா :(

   Delete
 19. நாலு வயதிலேயே தந்தையை இழப்பது எவ்வளவு பெரிய கொடுமை.குருகுலத்திலும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கணும். ஆண்டவனின் அவதாரம் ஆதலால் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்

  ReplyDelete
 20. மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு.


  வைத்தியம் செய்து இதை சற்று தள்ளிப்போடலாமே தவிர, யாரும் இதிலிருந்து தப்பவே முடியாது.// உச்சந்தலையில் ஆணி இறக்குவதைப்போன்ற உண்மை.

  ReplyDelete