கடவுள் இருக்கிறாரா?
அல்லது
மாணவர்:
ஐயா, உங்களிடம் உஷ்ணமான பொருள் இருக்கலாம். அதை விட அந்தப்பொருளை இன்னும் உஷ்ணமாக்கலாம். சூப்பர் ஹீட், மெகா ஹீட், ஒயிட் ஹீட் என அதிகரித்துக்கொண்டே போகலாம். குறைவான உஷ்ணமாகவும் குறைக்கலாம். உஷ்ணமே இல்லாததாகவும் செய்திடலாம்.
ஆனால் குளிர்ச்சி என்ற பெயரில் உங்களிடம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. நாம் ஒரு பொருளை ஜீரோ டிகிரிக்குக்கீழே 458 டிகிரிக்கு கொண்டுவரும் போது அதில் சுத்தமாக உஷ்ணம் என்பதே இருக்காது. அதற்கு மேல் நம்மால் அதை குளிர்வித்துக் கொண்டு செல்லவும் முடியாது.
அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது.
உஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம்.
நம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது.
உஷ்ணம் என்பது தான் சக்தி.
குளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா.
உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.
[இந்த விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும்,
அந்தக் கல்லூரி வகுப்பு முழுவதுமே மயான அமைதியாகியது.
அனைவரின் கவனமும் இந்த மாணவரின் பேச்சினை
உற்று கவனிப்பதிலேயே இருந்தது]
மாணவர்:
பேராசிரியர்:
அதுபோல இருட்டு என்பது என்ன, பேராசிரியர் அவர்களே ?
இருட்டு என்று ஏதாவது தனியாக உண்டா என்ன?
நிச்சயமாக உண்டே!
இருட்டு என்று ஒன்று இல்லாவிட்டால் பிறகு இரவு என்பதே கிடையாதே!
இருட்டு என்று ஒன்று இல்லாவிட்டால் பிறகு இரவு என்பதே கிடையாதே!
மாணவர்:
இல்லை ஐயா, நீங்கள் மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். இருட்டு என்பதும் வேறொரு பொருளின் மறைவே ஆகும்.
ஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம்.
அகல் விளக்கு, சிம்னி விளக்கு, டார்ச் லைட், மின் விளக்கு, மிகப்பிரகாசமாக எரியும் மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள் என பயன்படுத்தி இருட்டை நம்மால் போக்க முடிகிறது.
ஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம்.
அகல் விளக்கு, சிம்னி விளக்கு, டார்ச் லைட், மின் விளக்கு, மிகப்பிரகாசமாக எரியும் மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள் என பயன்படுத்தி இருட்டை நம்மால் போக்க முடிகிறது.
இது போன்ற வெளிச்சங்கள் ஏதும் இல்லாதபோதும், தொடர்ச்சியாக நம்மால் அந்த வெளிச்சத்தைத் தர முடியாதபோதும் மட்டுமே இருட்டு என்பது ஏற்படுகிறது; இல்லையா ஐயா!
உண்மையில் இருட்டு என்றே எதுவும் கிடையாது, ஐயா.
மற்றொன்றும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் ஐயா!
ஏற்கனவே இருட்டாக உள்ள இடத்தை தாங்கள் மேலும் இருட்டாக்கிக் காட்ட முடியுமா, ஐயா?
பேராசிரியர்:
என் அன்புள்ள இளைஞனே! மொத்தத்தில் நீ என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பதை தயவுசெய்து விளக்கமாகச் சொல்லி விடு.
மாணவர்:
கடவுள் இல்லை என்று தாங்கள் சொல்லிய தத்துவங்களாகிய கட்டடத்தின் அடித்தளத்திலேயே [அஸ்திவாரத்திலேயே] இப்போது விரிசல் கண்டுவிட்டது; குறை உள்ளது; குற்றம் உள்ளது எனச்சொல்ல வருகிறேன், ஐயா.
பேராசிரியர்:
அப்படியா சொல்கிறாய் நீ!
அது எப்படி என்று விளக்க முடியுமா உன்னால்?
அது எப்படி என்று விளக்க முடியுமா உன்னால்?
அசையும் நீரும்
பதிலளிநீக்குகொழுந்துவிட்டெறியும் நெருப்புமாக
பதிவு மிளிர்கிறது..
பாராட்டுக்கள் ஐயா..
உஷ்ணம் என்பது தான் சக்தி.
பதிலளிநீக்குகுளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா.
உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது./
ஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம்./
அருமையான வாதம்..
கடவுள் இல்லை என்று தாங்கள் சொல்லிய தத்துவங்களாகிய கட்டடத்தின் அடித்தளத்திலேயே [அஸ்திவாரத்திலேயே]இப்போது விரிசல் கண்டுவிட்டது; குறை உள்ளது; குற்றம் உள்ளது எனச்சொல்ல வருகிறேன், /
பதிலளிநீக்குதத்துவ மேதை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்தும் அருமையான பகிர்வுகள்..
வாழ்த்துகள்.. நன்றிகள்..
அருமையான வாதம்
பதிலளிநீக்குஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்
VGK அவர்களுக்கு வணக்கம்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ள கேள்வி! நல்ல தொடர்! பதிவு தொடரட்டும்.
பதிலளிநீக்குஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
- சிவவாக்கியர்
அருமையான வாதம்
பதிலளிநீக்குஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம்.
அருமையான விவாதம்... பற்றிக்கொண்டு எரிகிறது விறுவிறுப்பாக...
பதிலளிநீக்குஇரண்டு பகுதிகளையும் இன்றுதான் படித்தேன்.
பதிலளிநீக்குஅருமை வைகோ சார்!
இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா.... அருமை.
பதிலளிநீக்குவாதங்கள் தொடரட்டும்.
மாணவரின் விளக்கம் அருமை
பதிலளிநீக்குநல்ல விளக்கம்... தொடருங்கள்.... தொடர்வேன்.
பதிலளிநீக்குகோபு சார், சுவையான விவாதம். எப்போது மனதுக்கும் மூளைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மனமே வெல்லும். கடவுள் இருக்கிறார் என்பது மனதின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மூளையின் கண்டு பிடிப்பு. அண்டமே இருண்டது. அதில் ஒளி சேர்ப்பவையே சூரியனும் நட்சத்திரங்களும். ஒளி என்பது நம்பிக்கை.இருள் முதலா, ஒளி முதலா என்ற கேள்விக்கு பதில் தேடுவதைப் போலானதே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது. இருக்கிறார் என்பதில் கிடைக்கும் ஆதாயங்கள் இல்லை என்பதில் கிடையாது. இருக்கிறார் என்பது ஒரு பற்றுகோல் போல. பற்றிக் கொண்டு பலன் அடைவோமே. .
பதிலளிநீக்குகடவுள் இருக்கிறார் என்று சொல்லவரும் மாணவனின் பதில்கள் அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக மிக அருமை.
பதிலளிநீக்குஇந்தப்பகுதிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தனித்தனியே, இதன் கடைசி பகுதியில் நன்றி கூறியுள்ளேன்:
பதிலளிநீக்குஇணைப்பு இதோ:
http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=4775384660439001065&page=1&token=1334391699602
அன்புடன் vgk
அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.
பதிலளிநீக்குஆஹா. அருமையான விவாதங்கள்.
பதிலளிநீக்குபிரச்னைக்கு ஒளியூட்டட்டும்.
நன்றி ஐயா.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.//
Rathnavel Natarajan said...
//ஆஹா. அருமையான விவாதங்கள். பிரச்னைக்கு ஒளியூட்டட்டும்.
நன்றி ஐயா.//
தங்கள் இருவரின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது
பதிலளிநீக்குநேரம்கிடைக்கும் பொது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்
சந்திரகௌரி said...
பதிலளிநீக்கு//இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது//
தங்களின் அன்பான வருகைக்கும், சற்றே வித்யாசமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மேடம்.
//நேரம் கிடைக்கும் போது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்//
OK Madam. நிச்சயமாகப் பார்க்கிறேன்.
very happy to follow your blog page.Thought provoking article,thank you
பதிலளிநீக்குThank you very much Madam, for your kind first visit to my post and offer of valuable comments.
நீக்குWELCOME!
You may make yourself as a follower to my Blog and go through all interesting items one by one. Please give your comments also then & there.
Just now I have also visited your blog & given my comments to your very first post.
With kind regards,
vgk
vgk
மாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை ..இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ...நன்றி நன்றி நன்றி ஐய்யா ...இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு
பதிலளிநீக்குரியாஸ் அஹமது January 10, 2013 1:49 AM
பதிலளிநீக்குமாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை .. இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ... நன்றி நன்றி நன்றி ஐயா ... இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு.//
வாருங்கள் நண்பரே, தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், கிடைக்கும் வாய்ப்பினை நான் பெற்றுள்ளதும், எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி,
VGK
கொஞ்சம் புரிகிறமாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.
பதிலளிநீக்குஇன்றய விவாதமும் நல்லா இருக்கு
பதிலளிநீக்குவிவாதம் கொழுந்து விட்டு எரிகிறது என்று SYMBOLIC ஆக காட்டியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
பூந்தளிர் June 11, 2015 at 3:05 PM
பதிலளிநீக்குஇன்றய விவாதமும் நல்லா இருக்கு
பூந்தளிர் July 24, 2015 at 4:13 PM
:))))
//
:)))))))))))))))))))))))))))))))))))))
மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
நல்ல பதிவு.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் ...!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
இன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்க
பதிலளிநீக்குmru October 20, 2015 at 1:52 PM
பதிலளிநீக்கு//இன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்க//
அது என்ன .... சூல்லுங்க ?
ஓஹோ ’சொல்லுங்க’ வா?
அந்த ‘அதிரா’வே தேவலாம். :))))) .... சும்மா கலக்குங்கோ !
அவர்களின் விவாதத்தால் பயன் பெறுபவர்கள் இதைப்படிக்கும் வாசகர்கள்தான். என்னமாதிரி கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்குசரியான விவாதம்தான்...முடிவு என்ன என்று ஆர்வம் ஏற்படுகிறது.
பதிலளிநீக்கு//அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது.
பதிலளிநீக்குஉஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம்.
நம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது.
உஷ்ணம் என்பது தான் சக்தி. குளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா. உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.//
விவாதம் அருமை! தொடர்கிறேன்!