About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 9, 2012

நலம் தரும் ”நந்தன” வருஷம்”நந்தன” வருஷப்பிறப்பு 
13.04.2012 வெள்ளிக்கிழமைமேஷ விஷு என்று அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு “நந்தன” வருஷம் சித்திரை மாதம் பிறக்கும் நேரம்:  

13.04.2012 வெள்ளிக்கிழமை

வாக்கியப்பஞ்சாக்கப்படி:29.10 நாழிகைக்குச்
சரியான நேரம் மாலை: 6.40 க்கு.

திருக்கணிகப் பஞ்சாங்கப்படி: 33.09 நாழிகைக்குச்
சரியான நேரம் மாலை: 7.18 க்கு.

சித்திரை மாதம் பிறக்கும் நக்ஷத்திரம்: உத்திராடம்

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்பினால் பரிஹார தானம் செய்யலாம்.

”மேஷ ஸங்க்ரமணே பா4நோர் மேஷதா4னம் மஹாப2லம்” 

என்பதாக ஆடுகள், ஆடுகளுக்குத் தேவையான வஸிக்க இடம், ஆகாரங்கள், ஆடு வளர்க்கும் நபர்களுக்குத் தேவையானவைகள் ஆகியவற்றை தானம் செய்யலாம். 

மேலும் ஸுர்ய ப்ரீதியான கோதுமை தானம், அன்னதானம், வஸ்திர (ஆடை) தானம், விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர்மோர் ஆகியவற்றையும் தானம் செய்யலாம். 

இதனால் சொந்த வீடு, வீட்டில் மாதம் முழுவதும் நிம்மதி, நீண்ட ஆயுள், பணவரவு, நல்லோர் சேர்க்கை, மனஸாந்தி ஆகியவை ஏற்படும். 

-oooooooooooooooooooooo-

ஸூர்யன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் நேரமே நமக்கு மாத [வருஷ]ப் பிறப்பு. 13.04.2012 வெள்ளியன்று வாக்யப் பஞ்சாங்கப்படி மாலை சுமார் 05.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இரவு சுமார் 07.18 மணிக்கும் ஸூர்யன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் பிரவேஸிக்கிறார். இந்த நேரமே புத்தாண்டு பிறக்கும் நேரம், 


ஜோதிஷ சாஸ்திரப்படி ஒவ்வொரு வருஷத்திற்கும் ஓர் பெயர் உண்டு. அதன்படி இந்த வருஷத்துக்கு “நந்தன” வருஷம் என்று பெயர்.

”பிரபவ” முதல் ஆரம்பித்து “அக்ஷய” வரை முடியும் 60 பெயர்கள் கொண்ட தமிழ் வருடங்களில் இந்த “நந்தன” என்பது 26 ஆவதாக இடம் பெறுகிறது. 

”ஆநந்த3தா3 த4ரா நித்யம் ப்ரஜாப்4ய: 
ப2ல ஸஞ்சயை:
நநத3னாப்3தே3 (அ) ஸ்வ ஹாநி: 
ஸ்யாத் கோஸ தா4ந்ய விநாஸக்ருத்”

என்ற இந்த வருஷத்திற்கான பலச்ருதியின் படி, இந்த நந்தன வருஷத்தில் ’தரா’ என்னும் பூமியானது , இவ்வுலகில் வஸிக்கும் மக்களுக்கு நிறைய பழங்களையும், பூக்களையும், உணவு தான்யங்களையும் விளைவித்து ஆனந்தத்தை [மகிழ்ச்சியை] த் தரக்கூடியதாக இருக்கும்.

ஆனால் அஸ்வங்களுக்கு அதாவது வாஹனங்களுக்கும், வாஹனங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறது இந்த வருஷத்தின் பலச்ருதி.

oooooooooooooooooooooooooo  

மேஷ விஷுவ புண்யகாலம் 
13.04.2012 வெள்ளிக்கிழமை

மேஷ விஷுவ புண்யகாலமான இன்று காலையில் [தர்ப்பணம் செய்பவர்கள் தவிர] அனைவரும் எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்து, புதிய ஆடை ஆபரணங்கள் அணிந்து பூஜை செய்து ஸ்தோத்ரம் சொல்லி, பெரியோர்களின் ஆசி பெற்று, உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாகப் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும். 

நிம்ப குஸுமம் என்னும் வேப்பம்பூவை தனியாகவோ சாப்பாட்டில் சேர்த்தோ சாப்பிட வேண்டும். 

மேஷவிஷுவம் என்னும் புண்ணியகாலம் என்பதால் முன்னோர்களுக்கு [பித்ருக்களுக்கு] தர்ப்பணமும் செய்ய வேண்டும். 

ஷண்ணவதி தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் தர்ப்பணத்தை ஆரம்பிக்கலாம்.

இன்று ஆங்காங்கே நடைபெறும் பஞ்சாங்க படன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புது வருஷ பலனைக் கேட்டு பெரியோர்களின் ஆசியைப்பெற வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

oooooooooooooooooooooooo

புத்தாண்டு பஞ்சாங்க படனம்

”ப்ராப்னோதி ஸெளக்2யம் விபுலாம் யஸஸ்ச” என்ற வாக்யப்படி புத்தாண்டு நாளன்று பஞ்சாங்க படனத்தை பக்தி சிரத்தையுடன் கேட்பதால் அந்த வருஷம் முழுவதும் அளவற்ற புகழும் ஸெளக்யமும் கிட்டும். அவரவர்கள் இருக்கும் இடத்தின் அருகில் [ஆலயங்களில்] நடைபெறும் பஞ்சாங்க படன நிகழ்ச்சிக்குச்சென்று வருஷ பலனைக் கேட்டு நன்மையை அடையலாம். 

oooooooooooooooooooooo


நந்தன வருஷத்திய நவக்கிரஹ மந்திரி ஸபை 
1) ராஜா = சுக்ரன் 
    KING = VENUS

2) மந்திரி = சுக்ரன் 
    PRIME MINISTER = VENUS

3) ஸேனாதிபதி = சுக்ரன்
    COMMANDER-IN-CHIEF = VENUS 

4) ஸச்யாதிபதி =சந்திரன்
    LORD OF VEGETATION = MOON

5) தான்யாதிபதி = சூர்யன் 
    LORD OF GRAINS = SUN

6) அர்க்காதிபதி = சுக்ரன்  
    LORD OF PULSES = VENUS 

7) மேகாதிபதி = சுக்ரன் 
    LORD OF CLOUDS = VENUS 

8) ரஸாதிபதி = புதன் 
    LORD OF JUICES = MERCURY 

9) நீரஸாதிபதி = சந்திரன்
    LORD OF DRY MATERIALS = MOON


oooooooooooooooooooooo


விஷுக் கனி 14.04.2012 சனிக்கிழமை

புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாளுக்கு விஷு எனப்பெயர். இன்று அதிகாலையில் எழுந்து கண் விழித்தவுடன் காய்கறிகள், பழ [கனி] வகைகள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், தங்கம், வெள்ளி, முகம் பார்க்கும் கண்ணாடி முதலான மங்களப்பொருட்களை முதன் முதலாகக் காண்பதே விஷுக்கனி எனப்படும்.   மேற்படி மங்களப் பொருட்களை முதல் நாள் இரவே பூஜை அறையில் அழகாக அலங்கரித்து வைத்து விட்டு, காலை கண் விழித்தவுடன் முதலில் இவைகளைக் காண வேண்டும். இதனால் இந்த வருஷம் முழுவதும் வீடு செழிப்புடன் இருக்கும். 

oooooooooooooooo

நந்தன வருஷ கந்தாய பலன்கள் 
[ஒவ்வொருவர் நக்ஷத்திரத்திற்கும் தனித்தனியே]


{பாம்பு பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும், 
அசல் 28 ஆம் நம்பர் வாக்கிய பஞ்சாங்கத்தில் 
10 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் அச்சிடப்பட்டுள்ளன}

அஸ்வினி 0-1-2                  மகம் 3-1-4                  மூலம் 6-1-1
பரணி 3-2-0                          பூரம் 6-2-2                   பூராடம் 1-2-4
கார்த்திகை: 6-0-3                உத்ரம் 1-0-0               உத்ராடம் 4-0-2
ரோஹினி 1-1-1                  ஹஸ்தம் 4-1-3         திருவோணம் 7-1-0 
மிருகசீர்ஷம் 4-2-4             சித்திரை 7-2-1           அவிட்டம் 2-2-3
திருவாதரை 7-0-2             ஸ்வாதி 2-0-4             சதயம் 5-1-1
புனர்பூசம் 2-1-0                   விசாகம் 5-1-2           பூரட்டாதி 0-1-1
பூசம் 5-2-3                            அனுஷம் 0-2-0         உதரட்டாதி 3-2-2
ஆயில்யம் 0-0-1                 கேட்டை 3-0-3          ரேவதி 6-0-0

முதல் 0 க்கு முதல் 4 மாதங்களுக்கு வியாதியும்
இரண்டாவது 0 க்கு அடுத்த 4 மாதங்கள் வரை கடனும்
மூன்றாவது 0 க்கு கடைசி 4 மாதங்கள் சொற்ப பலனும் ஏற்படுமாம்.

ஒற்றைப்படை இலக்கமாயின் தன லாபமாம்.

இரட்டைப்படை இலக்கமாயின் 
லாப நஷ்டங்கள் / வரவு செலவுகள் சமமாக இருக்குமாம்.

மூன்றிலும் பூஜ்யமாகின் நிஷ்பலனாம்.

மூன்றிலும் பூஜ்யம் இல்லாமல் இருப்பது நன்மையாம்.

இதிலிருந்து தெரியவருவது :-

ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய ”நந்தன” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!

மிருகசீர்ஷம், பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், அவிட்டம் + உத்திரட்டாதி ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் நல்ல அதிர்ஷ்டசாலிகளே!!

[மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]

oooooooooooooooகடைசியாகக் கிடைத்த தகவல்

இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இதே “நந்தன” ஆண்டில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1952-54 தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார்.  

சைதாப்பேட்டை அருகே அடையாறு ஆற்றின் கரையோரமாக ‘நவாப் கார்டன்’ என்ற பெயரில் மிகப்பெரிய வெட்டவெளி நிலப்பரப்பு இருந்துள்ளது. இது அன்று மேய்ச்சல் நிலமாகவே இருந்துள்ளது. 

பிறகு இந்த நிலத்தை சீராக வடிவமைத்து, சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறுசிறு மனைகளாகப்பிரித்து, பெட்டிபெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச்சுற்றி நிறைய தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு (!) ஒவ்வொரு குடியிருப்பும் மிகக்குறைந்த விலைக்கு அன்று விற்கப்பட்டதாகத் தெரிகிறது!

தொலை நோக்குடனும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக்குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது. 

அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான “நந்தன” வருஷத்தின் பெயரையே “நந்தனம்” என்று சூட்டினாராம் இராஜாஜி. 

“நந்தன” என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ’யது நந்தன’;  ’ரகு நந்தன’ என்றெல்லாம் பெயர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா?

தலைமுறையாகக் கட்டிக்காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்க தரிஸனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட 

சென்னை நந்தனத்திற்கு இன்று வயது 60.

அனைவருக்கும் என் 
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

ooooOoooo 
     
சுபம்

ooooOoooo 

அன்புடன்
vgk

46 comments:

 1. நந்தன வருஷம் பற்றிய ஆநந்தமான விஷயங்கள் விஜிகே.

  நந்தனம் பற்றிய தகவல் புதிது.நன்றி.

  ReplyDelete
 2. மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]

  கஷ்டமெல்லாம் பழ்கிவிட்டால்
  ஏது சிரமம் !!

  ReplyDelete
 3. இந்த நந்தன வருஷத்தில் ’தரா’ என்னும் பூமியானது , இவ்வுலகில் வஸிக்கும் மக்களுக்கு நிறைய பழங்களையும், பூக்களையும், உணவு தான்யங்களையும் விளைவித்து ஆனந்தத்தை [மகிழ்ச்சியை] த் தரக்கூடியதாக இருக்கும்.

  மகிழ்ச்சியளிக்கும் பலன்...

  ReplyDelete
 4. தீர்க்க தரிஸனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட
  சென்னை நந்தனத்திற்கு இன்று வயது 60./

  சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாடும் நந்தனம் பகுதிக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. "நலம் தரும் ”நந்தன” வருஷம்"

  நலமே நல்கி சிறப்புடன் திகழ பிரார்த்திப்போம்..

  ReplyDelete
 6. //கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.//

  பழகற வரைக்கும்தான் கஷ்டம்.. பழகிட்டா கஷ்டம்ன்னு ஒண்ணுமில்லைதான். பகிர்வுக்கு நன்றி.

  நந்தனம் பற்றிய புதுத்தகவலும் அருமை.

  ReplyDelete
 7. நந்தனவருடம் பற்றிய பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. பஞ்சாங்கத் தகவல்களுக்கு நன்றி சார்.

  கண்ணாடி முன் காய்கள், பழங்கள் போன்றவற்றை வைப்பது, என் அம்மா செய்து இப்போது நானும் அதை தொடர்கிறேன்.

  நந்தனம் தகவல்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 9. [மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]//

  தமிழ் வருடப்பிறப்புக்கு படிக்க வேண்டிய பஞ்சங்கத்தை முன்பே உங்கள் மூலம் படித்து விட்டோம்.
  கஷ்டங்களுக்கு பிறகு சுகம் என்று பெரியவர் நீங்கள் ஆசி கூறிய பிறகு ஏது கவலை!

  விஷுகனி எங்கள் வீட்டிலும் உண்டு. கைநீட்டம் உண்டு(பெரியவர்கள் ஆசியுடன் பணம் கொடுப்பார்கள்)
  நந்தனம் பெயர் விவரம் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....

  நந்தனம் பற்றிய சுவையான தகவல்.

  பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 12. நந்தனம் பற்றிய தகவல் படித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 13. நந்தன வருஷம் பற்றி தகவல்கள் அருமை...

  விஷுக்கனி கண்டுவிட்டேன் இன்றே...

  நந்தனம் பற்றிய தகவல் சுவாரசியம்...

  ReplyDelete
 14. நந்தன ஆண்டைப் பற்றிய முன்னோட்டமும் பஞ்சாங்கத் தகவல்களும் அருமை. நந்தனம் பற்றிய செய்தி எங்களுக்கு புதிய தகவல்! நன்றி!

  ReplyDelete
 15. புது வருடத் தகவல்களை வெளி நாடுகளில் இருப்போருக்கு உபயோகமாக மிக விளக்கமாகத் தந்திருப்பதற்கு நன்றி.

  நந்தனம் பகுதிப் பெயர்க் காரணம் இப்போது தான் தெரிந்தது.

  ReplyDelete
 16. நந்தன வருஷம் பற்றிய பலன் பகிர்விற்கு நன்றி.

  சென்னை நந்தனத்திற்கு அறுபதாவது ஆண்டு.வியப்பான தகவல்.

  //[மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.]//

  தேவகி நந்தன் இருக்க கவலை ஏன்?

  ReplyDelete
 17. ப‌திவில் அறிய‌க் கிடைத்த‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கும் உள்ளார்ந்த‌ ஆசிக‌ளுக்கும் ந‌ன்றி ஐயா!

  ReplyDelete
 18. raji said...
  //நந்தன வருஷம் பற்றிய பலன் பகிர்விற்கு நன்றி.

  சென்னை நந்தனத்திற்கு அறுபதாவது ஆண்டு.வியப்பான தகவல்.//

  *****மற்ற நக்ஷத்திரக்காரர்களுக்கு ஏதாவது ஒரு நாலு மாதமாவது கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம் எனத்தெரிகிறது. பிறகு அதுவே அவர்களுக்கு பழகிவிடலாம். அல்லது அதன் பிறகு சுகம் ஏற்படலாம். அதனால் யாரும் எதற்கும் கவலையே பட வேண்டாம்.*****

  //தேவகி நந்தன் இருக்க கவலை ஏன்?//

  இந்தத் தங்களின் அழகான மறுமொழியினைப் படித்ததும் எனக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம வரிகளே நினைவுக்கு வந்து என் வாய் உடனே முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது.

  **அனுஷ்டுப் ச்சந்த:

  ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா

  அம்ருதாம்சூத்பவோ பாநுரிதி பீஜம்:

  தேவகீநந்தந: ஸ்ரஷ்டேதி சக்தி:

  உத்பவ: க்ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர:

  சங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
  ........ ......... .........

  எனக்கே ஒரு மகள் இருந்து, அவள் தன் கணவர், குழந்தைகளுடன், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட பொறந்தாத்துக்கு [பிறந்த வீட்டுக்கு]
  வந்திருந்து தன் அப்பாவுக்கு ஆறுதல் கூறுவதுபோல கற்பனை செய்து மிகவும் மன மகிழ்ச்சியும் ஆறுதலும் கொண்டேன், தங்களின் இந்த பொருத்தமானதொரு பதிலைப் பார்த்து.

  மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.

  மனதார உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் [வயதில் சிறியோர்களை] ஆசீர்வதிக்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 19. நந்தன வருடம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். வியந்தேன். என் இதயம்நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு!

  ReplyDelete
 20. I was working at Nandanam for the past 35 years.
  But now only knew the reason for the name Nandanam.
  Nice post.
  The vishukani pictures are nice.
  viji

  ReplyDelete
 21. நந்தன வருடம் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். சென்னை நந்தனம் பற்றீய தெரியாத புதிய தகவல் படித்து வியந்தேன். என் இதயம்நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 22. நந்தன வருடம் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். சென்னை நந்தனம் பற்றீய தெரியாத புதிய தகவல் படித்து வியந்தேன். என் இதயம்நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 23. பகிர்வுக்கு நன்றி கோபால் சார். புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரும்.

  ReplyDelete
 24. The origin of 'Nandanam' and Rajaji's contribution to its development are all news to me. Among his various contributions to our society, I rate his 'Chakravarthi Thirumagan' and 'Vyasar Virundhu' as the best. They were beautiful narrations written both in Tamil and English. Rajaji's song 'Kurai ondrum illai' never fails to move me - perhaps this is the only song in which we don't ask any favor from God, and we truly declare that we are not short of anything in life! Only an exalted soul like Rajaji could create this piece.

  ReplyDelete
 25. என் இந்தத் தமிழ்ப் புத்தாண்டுப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தியுள்ள

  திருவாளர்கள்:
  -------------

  01. சுந்தர்ஜி SIR அவர்கள்

  02. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்

  03. கே.பி ஜனா SIR அவர்கள்

  04. டி.என்.முரளிதரன் SIR அவர்கள்

  05. ஜீவி SIR அவர்கள்

  06. கணேஷ் SIR அவர்கள்

  07. மணக்கால் ஜே.ராமன் SIR அவர்கள்

  08. D.சந்திரமெள்லி SIR அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  -----------

  01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்

  02. அமைதிச்சாரல் MADAM அவர்கள்

  03. லக்ஷ்மி MADAM அவர்கள்

  04. கோவை2தில்லி MADAM அவர்கள்

  05. கோமதி அரசு MADAM அவர்கள்

  06. உஷா ஸ்ரீகுமார் MADAM அவர்கள்

  07. ராஜி MADAM அவர்கள்

  08. நிலாமகள் MADAM அவர்கள்

  09. விஜி MADAM அவர்கள்

  10. தேனம்மை லெக்ஷ்மணன் MADAM அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 26. ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய ”நந்தன” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!


  myself-rohini


  santhanam -sadhayam


  let us hope for the best.
  :)

  ReplyDelete
 27. கணேஷ் said...
  //ரோஹிணி + சதயம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தப் புதிய ”நந்தன” ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!
  myself-rohini
  santhanam -sadhayam
  let us hope for the best.
  :)//

  ALL THE BEST GANESH - GOPU MAMA

  ReplyDelete
 28. VGK அவர்களுக்கு வணக்கம்! ” மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் “ என்பார்கள். எனக்கு மூத்தவரான உங்கள் வார்த்தை எனக்கு அமிர்தம்தான்! நந்தன ஆண்டு குறித்த தங்கள் பதிவில் இருக்கும் செய்திகளைத் தொகுப்பதற்கு கடுமையான உழைப்பு செய்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது நாமும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. தி.தமிழ் இளங்கோ said...
  //VGK அவர்களுக்கு வணக்கம்! ” மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் “ என்பார்கள். எனக்கு மூத்தவரான உங்கள் வார்த்தை எனக்கு அமிர்தம்தான்!//

  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, ஐயா. நான் என்ன உங்களைவிட 4 அல்லது 5 வயது மட்டுமே, அதுவும் வயதில் மட்டுமே, சற்றே பெரியவன். மேலும் நான் என்னை எப்போதுமே மிகச்சாதாரணமானவன் என்றே நினைப்பவன்.

  //நந்தன ஆண்டு குறித்த தங்கள் பதிவில் இருக்கும் செய்திகளைத் தொகுப்பதற்கு கடுமையான உழைப்பு செய்து இருக்கிறீர்கள்.//

  ஏதோ என்னால் முடிந்தது. நான் படிக்கும், கேள்விப்படும் நல்ல செய்திகளை, நாமும் மேலும் ஒரு 10 பேர்களுக்காவது அறியச் செய்வொமே என்ற ஒரு சிறிய ஆவலில், சிறுதொண்டு போல் நினைத்து பதிவுகளாகத் தந்து வருகிறேன்.

  இதைப்படிக்கும் அந்த 10 பேர்களும், ஆளுக்குப்பத்து பேர்கள் வீதம் மேலும் இதைச் சொல்லலாம், அறியச்செய்யலாம்.

  நல்ல விஷயங்கள், நம் முன்னோர்களால் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடித்து வரப்பட்ட நல்ல பழக்க வழக்கங்கள், இதுபோல பலரைச் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை.

  எங்கெங்கோ வெளிநாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இன்றுள்ள நம் இளைஞர்களுக்கும் இவையெல்லாம் பற்றி தெரியப்படுத்துவதும், முடிந்தவரை அவர்களும் அவற்றை மறக்காமல் கடைபிடிப்பதும் வளரும் சந்ததிகளுக்கு நல்லது தானே!

  //உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது நாமும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது.//

  எழுதுங்கள் ஐயா! நிறைய எழுதுங்கள். நல்லதையே எழுதுங்கள். படிப்பவர் மனதில் நல்ல பண்பாடுகள் ஏற்படுமாறு சிறப்பாகவே எழுதுங்கள்.

  //தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

  தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 30. புத்தாண்டு தகவல்களும், வாழ்த்துக்களும் மகிழ்வளித்தது!
  நந்தனம் குறித்த தகவல் வியப்பளித்தது!

  நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 31. நலம் தரும் நந்தன வருஷப் பதிவுகள் ,நல்ல தகவல் பகிர்வு.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. Seshadri e.s. said...
  //புத்தாண்டு தகவல்களும், வாழ்த்துக்களும் மகிழ்வளித்தது!
  நந்தனம் குறித்த தகவல் வியப்பளித்தது!

  நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 33. நம்பிக்கைபாண்டியன் said...
  நல்ல தகவல்கள்!//

  வாங்க; மிக்க நன்றி, நண்பரே.

  ReplyDelete
 34. Murugeswari Rajavel said...
  //நலம் தரும் நந்தன வருஷப் பதிவுகள். நல்ல தகவல் பகிர்வு.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான முதல் வருகையும், அழகான கருத்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 35. நந்தன ஆண்டின் பலன்கள் கண்டேன். 12 ராசிகளின் பெயர்களையும் கண்டேன்.

  ReplyDelete
 36. நந்தன ஆண்டின் சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 37. அட! ஒரு பஞ்சாங்கத்தையே படித்த EFFECT வந்துடுத்து.

  விஷூ புகைப்படங்கள் அருமை.

  ReplyDelete
 38. பூந்தளிர் June 11, 2015 at 9:58 AM
  நந்தன ஆண்டின் சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி.

  பூந்தளிர் July 24, 2015 at 4:11 PM
  :)))
  //

  :)))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 39. தமிளுல ஒவ்வொரு வருசத்துக்கும் வேர வேர பெயரு வருமோ.

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 1:45 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா !

   //தமிளுல ஒவ்வொரு வருசத்துக்கும் வேர வேர பெயரு வருமோ.//

   நீங்க இதுவரை பள்ளியில் தமிழ் பாடம் எடுத்துப்படித்ததே இல்லையோ?

   ஏன் எனக்கு இந்த சந்தேகம் என்றால், மேலே காட்டியுள்ள தங்களின் பின்னூட்டம் ......

   “தமிழிலே ஒவ்வொரு ஆண்டுக்கும் வேறு வேறு பெயர்கள் வருமோ?”

   எனக்கேட்டு எழுதப்பட்டிருந்தால் அது தங்கத்தமிழ் மொழி போல மேலும் அழகாக இருந்திருக்கும் என்பதால் மட்டுமே !

   >>>>> தொடரும் >>>>>

   Delete
  2. குருஜி >>>>> முருகு (2)

   ஆம் ... தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டியுள்ளார்கள் நம் முன்னோர்கள். மொத்தம் 60 ஆண்டுகள் .... 60 பெயர்கள்.

   60 ஆண்டுகள் நிறைவு பெற்றதும், மீண்டும் அந்தப் பெயர்களே திரும்பத் திரும்ப வரும்.

   இப்போது நடப்பது: ‘மன்மத’ ஆண்டு

   இதன் ஆரம்பம்: 14.04.2015
   இதன் முடிவு: 13.04.2016

   முதல் ஆண்டின் பெயர்: பிரபவ
   60ம் ஆண்டின் பெயர் : அக்ஷய

   அந்தக்காலத்தில், குழந்தையாய் இருக்கும்போதே, இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களையும் வரிசையாக மனப்பாடம் செய்து ஒப்பிக்கச்சொல்வார்கள். நானும் ஒப்பித்துள்ளேன். இப்போதும்கூட கொஞ்சம் அவை எனக்கு நினைவில் உள்ளன.

   Delete
 40. நந்தன ஆண்டின் சிறப்புகள் சொன்னவிதம் அசத்தல் .60--ஆண்டுகளின் பெயர்களும் நினைவில் வைத்திருப்பது சந்தோஷம்

  ReplyDelete
 41. 'பழைய பஞ்சாங்கம்' என்று நினைத்தால் நந்தனம் பெயர்க்காரணம் வரை பதிவிட்டிருக்கிறீர்கள்...சந்தோஷம்..

  ReplyDelete