About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, April 24, 2012

குரு வந்தனம்

26 04 2012 வியாழக்கிழமை
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்திகுருப்ரும்மா குரு விஷ்ணு 
குரு தேவோ மஹேஷ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரும்ம 
தஸ்மை ஸ்ரீ குரவே நம: 


கலியுகம் ஆரம்பித்து சுமார் 2500 ஆண்டுகள் சென்றதும், இந்த நம் பாரத நாட்டில் பல்வேறு போலிச்சமயங்கள் தோன்றின. பல்வேறு அயல் நாட்டவர்கள் படையெடுத்து வந்து மக்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை விளைவித்தார்கள். வர்ணாச்ரம தர்மங்களும் வேத நெறிகளும் மங்கின. பெளத்தம், சமணம், நாத்திகம் போன்ற லோகாயத மதங்கள் பரவின.

இவைகளால் பாரதநாடு தத்தளித்துக் கொண்டிருந்த இந்தத் தருணத்தில் கருணைக்கடலாம் சிவபெருமான், சேர நாட்டில் 'காலடி' என்னும் சிற்றூரில், சங்கரர் என்னும் திருநாமத்துடன், தன் தந்தை சிவகுரு என்ற அந்தண சீலருக்கோர் அரும் புதல்வனாக அவதரித்தார்.      

சிறு பிராயத்திலேயே தான் தெய்வத் தன்மையுள்ளவர் என்பதை பலவித லீலைகளால் உலகத்தாருக்கு உணர்த்தினார். 

  

 

எட்டு வயதில் ஸகல கலைகளையும் பயின்று, நர்மதை ஆற்றங்கரையில், யோக நிஷ்டையிலிருந்த ஸ்ரீகோவிந்த பகவத்பாதரை, தன் குருவாக வணங்கி, விதிப்படி ஸன்யாஸம், மஹா வாக்யோபதேசங்களைப் பெற்றார். 

அவரது அனுமதியின் பெயரில், காசி மாநகரம் சென்று, தன் 16 ஆவது வயதிற்குள், பிரஸ்தானத்ரய பாஷ்யங்களையும், கணக்கற்ற நூல்களையும் இயற்றி, ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கு (அத்வைத) தத்வோபதேசங்களைச் செய்தார்.

ஸ்ரீ விஸ்வநாதரையும், வியாஸ முனிவரையும் கண்டு, அவர்கள் அருளையும் பெற்று, மன்னர்களான ஸுதன்வா, ஹாலன் முதலியோர் சூழ இப்பாரத நாட்டை மூன்று தடவை திக்விஜயம் செய்து, ஆங்காங்குள்ள புலவர்களோடு வாதங்கள் புரிந்து 72 துர்மதங்களை ஒழித்து, ஷண்மதங்களை நிலைநாட்டினார். 

வைதீக நெறி வழக்கங்களை பரவச்செய்தார். போலிச்சமயங்களையும், நாஸ்திகத்தையும் நாட்டை விட்டே வெளியேறச்செய்தார்.

பிற்காலத்திலும், நமது பாரத நாட்டின் தனிப்பெருமை பொருந்திய அரும்பெரும் பண்பின் ஒளியாய் விளங்கும் அத்வைத தன்மையை, ம்க்கள் பெற்று உயர் நிலையை அடைய வேண்டி சில ஏற்பாடுகள் செய்தார்.

அதன்படி தன் சிஷ்யர்களில் மிகவும் சிறந்தவர்களும், தெய்வத்தன்மை பெற்றவர்களுமான ஸுரேஸ்வரர், பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர் என்பவர்களை முறையே சிருங்கேரி, துவாரகை, பத்ரி, பூரி என்ற இடங்களில் [ஆம்னாய் பீடங்களாகிய மடங்களில்] ஆச்சார்யர்களாக நியமித்தார். பிறகு மோக்ஷ க்ஷேத்ரமாகிய காஞ்சிபுரத்தில் சோழ மன்னரான ராஜஸேனனைக்கொண்டு,  காமாக்ஷி, ஏகாம்பரேஸ்வரர், வரதராஜருக்கு ஆலயங்கள் நிர்மாணிக்கச்செய்தார்.


\
\

ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன்


ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்

 
ஸ்ரீ வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம்ஸ்ரீ வரதராஜ பெருமாள் + உபய நாச்சியார்.காமாக்ஷி அம்பிகையின் ஆலயத்தில் ஸ்ரீகாமகோடி ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனம் செய்து ஸர்வக்ஞபீடம் ஏறினா 

இந்த்ரன் சரஸ்வதி ஆகியோரை ஜபித்து, உலகமே வணங்கிடும் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக சிலகாலம் பிரகாசித்து வந்தார்.

பிற்காலத்தில் தன் ஆத்ம பூஜையான யோக லிங்கத்தையும், ஸ்ரீ காமகோடியையும், ஸர்வஞாத்மேந்த்ர ஸரஸ்வதி என்ற சிஷ்யரிடம் ஒப்புவித்து விட்டு, தனது 32 ஆம் வயதில் தன் அவதார கார்யம் முடிந்து, ராஜயோக மஹா ஸமாதியிலிருந்து, மானிட வடிவம் நீங்கப்பெற்று, அகண்டாகார பிரம்ம சைதன்யமாய் வியாபித்து, இன்றும் தன்னை வணங்கும் ஆஸ்திகர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் வண்ணம் ஜ்வலித்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் கலி 2625 க்குச் சரியான ரக்தாக்ஷி வருஷம் வைகாசி மாதம் சுக்லபக்ஷம் ஏகாதஸி பகலில் ஸித்தி பெற்றார். 

ஸ்ரீ ஆதிசங்கரரின் ஜயந்தியானது (அவதரித்த நாள்) சித்திரை மாத சுக்லபக்ஷ பஞ்சமியன்று [வரும் 26.04.2012 வியாழக்கிழமை] ஸ்ரீசிருங்கேரி, ஸ்ரீகாஞ்சிபுரம், ஸ்ரீசகடபுரம் போன்ற அனைத்து சங்கர மடங்களிலும் மற்றும் பல இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.ஓம் ஸ்ரீ ஸத்குருப்யோ நம:

oOoOoOoOo


http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_23.html

நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தெய்வீகப் பதிவர் 
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
மேற்படி இணைப்பில் 
”வளம் வழங்கும் குபேர பூஜை” 
என்ற தலைப்பில் வெகு அழகான தகவல்களை 
நேற்று இரவு அக்ஷயமாகத் தந்து வெளியிட்டுள்ளார்கள். 

அதில் ஸ்ரீ லக்ஷ்மிதேவியின் அருளும் செல்வமும் நமக்குக் கிடைத்திட குபேரனை எப்படி நாம் பூஜிக்க வேண்டும் என்பதை வெகு அழகாக விளக்கியுள்ளார்கள்.


அதில் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் :

யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சததி மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவர். 


இதனாலேயே சகல சக்திகளையும் தன் வசம் கொண்டு, பக்தர்களுக்கு ‘இல்லை’ யென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொண்டுள்ளார். 


ஸ்ரீ ஆதிசங்கரரும் “ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்” என்பதை நமக்காகவே இயற்றி அருளியுள்ளார்கள். 

ஒரே ஒருமுறை நிறுத்தி அதிலுள்ள அம்பாள் நாமாக்களைச் சொல்லிப்பார்த்தால் அதில் உள்ள ருசியை நாம் நன்கு உணரலாம். 

சகல ஐஸ்வர்யங்களயும், சம்பத்துக்களையும் மிகச்சுலபமாக நாம் நம் வாழ்க்கையில் பெற்றிடலாம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்

 

[ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது]1
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

2
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


3
அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !
வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


4
அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!
சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

 

5
அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !
மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!6
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !
ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

 

7
அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !
யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

 

8
அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !
அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


  

[விளக்கேற்றி வைத்து  
வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது 
ஆதிசங்கரர் அருளிய இந்த வெகு அழகான 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தைச் 
சொல்லி வந்தால் 
ஸர்வ மங்களமும் கிட்டுவது நிச்சயம்]


ஸ்ரீ ஆதி சங்கரர் குரு ஸ்துதி

காலடியில் அவதரித்த கருணைப் பெருங் கடலே; நின்
காலடியே தஞ்சமென்று காலம் கழிக்கலானேன்
காலபயம் தீர்த்துக் கடுகியே வந்து எந்தன்
காலடி ஓயுமுன்னே நின் காலடி சேர்ப்பிப்பாயே.

 சுபம்       அறிவிப்பு

”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” 
என்ற நாடகத்தின் பகுதி-14 
”சங்கர ஜயந்தி” தினமான 26.04.2012 
குருவாரம் [வியாழக்கிழமை] முதல் மீண்டும் ஆரம்பிக்கும்.

தினமும் ஒரு பகுதி வீதம் 
காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.

30.04.2012 திங்கட்கிழமை 
இறுதிப் பகுதி-18 உடன் நாடகம் நிறைவுபெறும்.

நாடகத்தின் பழைய மிகச்சிறிய 
பகுதிகளைப் படிக்க இதோ இணைப்புகள்:

பகுதி-02
பகுதி-03
பகுதி-04
பகுதி-05
பகுதி-06
பகுதி-07
பகுதி-08
பகுதி-09
பகுதி-10
பகுதி-11

பகுதி-12
பகுதி-13

என்றும் அன்புடன் தங்கள்,
vgk 

32 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
  ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கரா

  ReplyDelete
 2. குரு வந்தனம்"

  நான்கு திசைகளிலும் ஸ்தாபித்த பீடங்கள் அரணாக நின்று உலகத்தைக் காக்கும் அத்வைத குருவுக்கு வந்தனம்...

  ReplyDelete
 3. காமாக்ஷி அம்பிகையின் ஆலயத்தில் ஸ்ரீகாமகோடி ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டாபனம் செய்து ஸர்வக்ஞபீடம் ஏறினா

  ஸ்ர்வக்ஞரான ஞானக்கொழுந்து பிரகாசித்த பெருமை மிக்கது பாரத பூமி.

  ReplyDelete
 4. அகண்டாகார பிரம்ம சைதன்யமாய் வியாபித்து, இன்றும் தன்னை வணங்கும் ஆஸ்திகர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் வண்ணம் ஜ்வலித்துக்கொண்டிருக்கிறார்

  ஜாஜ்வல்யமாய் ஜொலிக்கும் அனுக்ரஹ தகவல்கள்.. பாராட்டுக்கள்.. நன்றிகள்..

  ReplyDelete
 5. ”வளம் வழங்கும் குபேர பூஜை” என்ற தலைப்பில் வெகு அழகான தகவல்களை நேற்று இரவு அக்ஷயமாகத் தந்து வெளியிட்டுள்ளார்கள்.

  எமது தளத்தின் லிங்க் அளித்து பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

  ReplyDelete
 6. குரு ஸ்துதி
  காலடியில் அவதரித்த கருணைப் பெருங் கடலே;
  நின் காலடியே தஞ்சமென்று காலம் கழிக்கலானேன்
  காலபயம் தீர்த்துக் கடுகியே வந்து எந்தன் காலடி ஓயுமுன்னே நின்
  காலடி சேர்ப்பிப்பாயே.

  உயர்வான நெகிழ்வான பிரார்த்தனை..

  ReplyDelete
 7. பக்தி மணம் கமழ்கிறது.ராஜராஜேஸ்வரி அஷ்டகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 8. நல்லதோர் பகிர்வு.

  ReplyDelete
 9. வணங்குகின்றோம்.

  ReplyDelete
 10. தெய்வீக நாட்களைத் தெரிவித்து பக்தர்களுக்கு உதவும் உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 11. // போலிச்சமயங்களையும், நாஸ்திகத்தையும் நாட்டை விட்டே வெளியேறச்செய்தார். //

  இன்று இவர்களை வெளியேற்ற யார் வரப் போகிறார்களோ

  அருமையான பதிவு நன்றி

  ReplyDelete
 12. சுருக்கமாகச் சொல்லிப் போனாலும் அனைத்து தகவல்களையும்
  அறியாதவர்கள் அறியும்படி பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 13. சகல ஐஸ்வர்யங்களயும், சம்பத்துக்களையும் மிகச்சுலபமாக நாம் நம் வாழ்க்கையில் பெற்றிடலாம்.//

  ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் படித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் உண்மைதான்.

  படங்கள், குரு தியானம், எல்லாம் அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பக்திமணம் கமழ்கிறது. அழகான படங்களுடன் ரசிக்கும்படி ஒரு பக்தி தொடரை எழுதுகிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

  திருமதிகள்:
  ===========

  01. லக்ஷ்மி MADAM அவர்கள்
  02. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்
  03. கோவை2தில்லி MADAM அவர்கள்
  04. மாதேவி MADAM அவர்கள்
  05. கோமதி அரசு MADAM அவர்கள்

  மற்றும்

  திருவாளர்கள்:
  =============

  01. சென்னை பித்தன் SIR அவர்கள்
  02. கே.பி.ஜனா SIR அவர்கள்
  03. சீனுகுரு SIR அவர்கள்
  04. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்
  05. ரமணி SIR அவர்கள்
  06. விச்சு SIR அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 16. Aha,
  Raja Rajeswari astakam...
  Oru astaskathukku oru Thamarai.
  Padithu archanai saithathu pol irrukku.
  viji

  ReplyDelete
 17. viji said...
  //Aha,
  Raja Rajeswari astakam...
  Oru astaskathukku oru Thamarai.
  Padithu archanai saithathu pol irrukku.
  viji//

  தங்களின் அன்பான வருகைக்கும், மிக அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  ;)))))

  ReplyDelete
 18. very nice post gopu sir. The lotus photo with each sloka of raja rajeshwari ashtakam is beautiful also symbolises the divine thoughts blooming through our each step towards puri devotion

  ReplyDelete
 19. Mira said...
  //very nice post gopu sir. The lotus photo with each sloka of raja rajeshwari ashtakam is beautiful also symbolises the divine thoughts blooming through our each step towards puri devotion
  May 17, 2012 2:25 AM //

  Mira,
  Thank you very much for your kind entry & valuable comments, please.
  Anbudan,
  Gopu

  ReplyDelete
 20. Mira said...
  //very nice post gopu sir. The lotus photo with each sloka of raja rajeshwari ashtakam is beautiful also symbolises the divine thoughts blooming through our each step towards puri devotion//


  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  ;)))))

  Thanks for quoting this special LOTUS in your comments.

  ReplyDelete
 21. Mira said...
  //very nice post gopu sir. The lotus photo with each sloka of raja rajeshwari ashtakam is beautiful also symbolises the divine thoughts blooming through our each step towards puri devotion//


  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  ;)))))

  Thanks for quoting this special LOTUS in your comments.

  ReplyDelete
 22. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!


  பதிவின் தாமரையை பெருமைப்படுத்தியதற்கு மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 23. இராஜராஜேஸ்வரி said...
  ***ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!***


  //பதிவின் தாமரையை பெருமைப்படுத்தியதற்கு மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா!//

  தக்க நேரத்தில், தங்கத் தாமரைகளை தந்து உதவிய, தாமரை நெஞ்சத்திற்கு, தலை வணங்கி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ;)

  ReplyDelete
 24. ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாராயணம் செய்து உய்வுற்றேன்.

  ReplyDelete
 25. இந்தப்பதிவிற்கு ஏற்கனவே பின்னூட்டம் அனுப்பி இருந்தேன்.
  சில நேரங்களில் அனுப்பிய பின்னூட்டங்கள் என்ன ஆகிறதென்றே தெரிவதில்லை. வழியிலயே காணாம போயிடறது.

  இந்த இராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் எல்லாம் மனப்பாடம் ஆனதற்கு என் அம்மாவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சின்ன வயதிலிருந்தே கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து.

  ***ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாமரை வீதம் அர்ச்சனை செய்யத் தந்து உதவியவரும் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!***//

  எல்லாம் உலகாளும் அன்னை ஸ்ரீ இராஜராஜேஸ்வரியின் அருள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைவு பகுதி படித்ததும் மனசுக்குள்ள சொல்ல முடியாத அமைதி நன்றி பகிர்வுககு

   Delete
 26. படங்கலா நல்லாகீது. அதுலயும் ரோஸுகலர் தாமரைபூவு கண்ணுக்குள்ளியே நிக்கிது

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 4:20 PM

   வாங்கோ முருகு ..... வணக்கம்மா.

   //படங்கலா நல்லாகீது. அதுலயும் ரோஸுகலர் தாமரைபூவு கண்ணுக்குள்ளியே நிக்கிது.//

   அப்படியா மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அந்த செந்தாமரைப் பூவினை எனக்கும் மிகவும் பிடிக்குமாக்கும்.

   Delete
 27. ஸ்ரீராஜராஜேஸ்வரிஅஷ்டகம் அற்புதமான தாமரை மலர்களுடன் கண்ணுக்கும் மனதுக்கும் தெவிட்டாத விருந்துதான்.

  ReplyDelete
 28. அருமை.. அருமை...படம் வணங்க வைக்கிறது..

  ReplyDelete
 29. அற்புதமான பதிவு!

  ReplyDelete