என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

பங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை



பங்குனி உத்திரம் 
05 04.2012 வியாழக்கிழமை


அன்னை பார்வதி தேவி பரமேஸ்வரனை மணந்துகொண்ட நன்நாள் தான் பங்குனி மாத உத்திர நக்ஷத்திரம் கூடிய இந்த சுபதினம். அதனால் தான் பல க்ஷேத்ரங்களில் இந்த ஸமயம் பிரம்மோத்ஸவம், திருக்கல்யாணம் முதலியன விசேஷமாக நடைபெறுகிறது. பங்குனி உத்த்ரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறாத கோயில்கள் மிகக்குறைவே. 

ஆகவே தான் இன்று ஒருசில வகுப்பினர் நாள், நக்ஷத்திரம் எதுவும் பார்க்காமல் [ஆலயங்களில்] திருமணம் செய்து கொள்கிறார்கள். காஞ்சீபுரம் போன்ற திவ்ய க்ஷேத்ரங்களில் இதை நாம் காணலாம்.

முருகன் தெய்வானை; ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்; ஸ்ரீராமர் ஸீதை; ஆண்டாள் ரங்கநாதர்; ஸாவித்ரி ஸத்தியவான்; கற்பகம்பாள் கபாலீஸ்வரர் முதலிய தெய்வங்களின் விவாஹங்கள் நடைபெற்ற நாள்.








ரதி தேவியின் வேண்டுதலுக்கு இணங்கி, இறந்த மன்மதனை பார்வதி தேவி, ஸ்ரீசிவபெருமானின் அனுமதியுடன் மறுபடியும் உயிர் எழச்செய்த நாள். 


பஞ்ச பாண்டவர்களில் குந்தியின் மகனான அர்ஜுனன் பிறந்த நாள்.

ஐயப்பன் பூமியில் அவதரித்த நன்நாள். இன்று சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படும்.


பங்குனி உத்தரத்தன்று சென்னை மயிலை, திருச்செந்தூர், மதுரை போன்ற பல ஊர்களிலும் ஆலயங்களிலும் பங்குனி உத்திர பிரம்ஹோத்ஸவங்கள் நடைபெறும்.  

இன்று பல ஊர்களில் தெய்வங்கள் ஆலயங்களிலிருந்து அருகிலுள்ள கடல், நதி, குளம் முதலிய இடங்கள் சென்று தீர்த்தவாரித்தருளுகிறார். இன்று அவரோடு நாமும் நீராடினால் பாவங்கள் நசித்து புண்ணியங்கள் சேரும். யாகம் முடிந்து அவபிருத ஸ்நானம் செய்த புண்ணியம் உண்டாகும். 



காவி உடை தரித்து, விரதமிருந்து கால்நடையாகக் காவடி எடுத்து பழனி, ஸ்வாமிமலை போன்ற முருகன் ஸ்தலங்களில் அன்பர்கள் வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திர விரதத்தால் இந்திரன் இந்திராணியையும், பிரம்ஹா ஸரஸ்வதியையும் அடைந்தனர்.

மஹாலக்ஷ்மி இந்த விரதத்தால் திருமாலின் மார்பில் இடம் பெற்றாள்.

  

    சுபம்

[இதிலுள்ள தகவல்கள் பல்வேறு ஆன்மிக 
இதழ்களிலிருந்து தொகுத்து அளிக்கப்பட்டவை ]

29 கருத்துகள்:

  1. பங்குனி உத்திரம் பற்றிய தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஒரு கூடுதல் தகவல் விஜிகே.

    அன்று ஸ்வாமிமலையில் புண்யதீர்த்தத்தில் நீராடி சுவாமிநாதனை வழிபட்டு முழுநாளும் மௌனவிரதம் இருந்து முருகனை தியானித்தால் ஏழேழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் நிவர்த்தி ஆகும்.

    இது நந்திதேவர் அகத்தியருக்கு அருளிய உபதேசத்திலிருந்து.

    மற்ற தகவல்கள் வழக்கம்போல மிகுந்த பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
  3. சுந்தர்ஜி said...
    //ஒரு கூடுதல் தகவல் விஜிகே.

    அன்று ஸ்வாமிமலையில் புண்யதீர்த்தத்தில் நீராடி சுவாமிநாதனை வழிபட்டு முழுநாளும் மௌனவிரதம் இருந்து முருகனை தியானித்தால் ஏழேழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் நிவர்த்தி ஆகும்.

    இது நந்திதேவர் அகத்தியருக்கு அருளிய உபதேசத்திலிருந்து.

    மற்ற தகவல்கள் வழக்கம்போல மிகுந்த பயனுள்ளவை.//

    அன்புள்ள சுந்தர்ஜி,

    தாங்கள் கொடுத்துள்ள கூடுதல் தகவல் அனைவருக்கும் பயனளிப்பதாகவே இருக்கும்.

    அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஜீ. அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  4. அருமையான அரிய தகவலகள்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. பங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை பாங்காய் அளித்த பயனுள்ள தகவல்கள்..

    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. பங்குனி உத்திரம் பதிவு அருமை.மன்மதன் உயிர்த்தெழுந்ததும்,அர்ஜுனன் பிறந்ததும் இந்த நாள் என்பதும்,சபரிமலையில் ருத்ராபிஷேகமும் நான் அறியாதது.
    பகிர்விற்கு நன்றி.

    சுந்தர் ஜி அவர்களின் கூடுதல் தகவலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாயகித்தாயார் நட்சத்திரம் அன்று சேர்த்தி உத்ஸவம் !

    பதிலளிநீக்கு
  8. பங்குனி உத்திரம் பகிர்வு அருமை சார்.

    பதிலளிநீக்கு
  9. ரிஷபன் said...
    //பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாயகித்தாயார் நட்சத்திரம் அன்று சேர்த்தி உத்ஸவம் !//

    தங்களின் அன்பான வருகையும்,

    ஸ்ரீரங்கநாயகித்தாயார் அவர்களின் ஜன்ம நக்ஷத்த்திரமும் பங்குனி உத்திரமே என்ற தகவலும்,

    அதுவே சேர்த்தி உதஸவமாகக் கொண்டாடப்படுகிறது என்ற செய்தியும்,

    மிகுந்த ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது.

    மனமார்ந்த நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் சிறப்பான நாளைப் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன் சார்.

    ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று தான் பெருமாளையும், தாயாரையும் ஒன்றாக தரிசிக்கும் வாய்ப்பைத் தரும் ”சேத்தி” நடைபெறும்.

    நெய்வேலியில் 2007ம் வருடம் பங்குனி உத்திரத்தன்று சென்று காவடிகளை கண்டு களித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல தகவல்.

    ஒரு சந்தேகம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் கை மேலேயும் பையனின் கை கீழேயும் இருப்பதுதானே முறை? பல படங்களில் பார்வதி கல்யாணத்தில் மாறி இருக்கிறதே? அதில் ஏதாவது விசேஷம் உண்டா?

    பதிலளிநீக்கு
  12. பழனி.கந்தசாமி said...
    நல்ல தகவல்.

    //ஒரு சந்தேகம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் கை மேலேயும் பையனின் கை கீழேயும் இருப்பதுதானே முறை? பல படங்களில் பார்வதி கல்யாணத்தில் மாறி இருக்கிறதே? அதில் ஏதாவது விசேஷம் உண்டா?//

    இங்கு காட்டப்பட்டுள்ள முதல் படத்தில் பார்வதியின் கை மேலேயும், பரமசிவனின் கை கீழேயும் தான் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனக்கு.

    அதுச்மயம் மணமகன் மணப்பெண்ணின் ஐந்து விரல்களையும், சேர்த்து பிடித்துக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    ஒரு விரலைக்கூட தனியாக விட்டுவிடாமல் ஒரேயடியாக சேர்த்து பிடித்துக்கொள்ளணும்.

    ஊஞ்சலுக்கு முன்பு மாலைகள் மாற்றிக்கொண்டதும், ஊஞ்சலுக்குச் செல்லும்போதும், பிறகு மணமேடைக்கும் செல்லும்போதும், பிறகு ஸப்தபதி என்று சொல்லி அக்னியைச் சுற்றி வரும்போதும் மணமகன் மணமகளை இவ்வாறு கையைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

    முதன் முதல் ”டச்” ஆக அது அமைவதால் லேசாக அவள் விரல்களை அமுக்கிக் கொண்டே போகலாம்.

    ஒரே த்ரில்லிங்காகவும், படு குஜாலாகவும் இருக்கும், ஸார்.

    உங்களுக்குத் தெரியாததா என்ன?
    ;)))))

    ================================

    இன்னொரு முக்கியமான விஷயம் ஸார்.

    கன்னிகாதானம் ஒன்றில் தான், கன்னிகையை தானமாகக் கொடுப்பவர் [பெண்ணின் தந்தை, தன் மகளைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு] உட்கார்ந்து கொண்டும், தானம் பெறுபவர் நின்றுகொண்டும் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    மீதி எந்த தானம் செய்தாலும் தானம் பெறுபவருக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து, தானம் கொடுப்பவர் நின்று கொண்டு தான் தானம் கொடுக்கப்பட வேண்டும்.

    சில ஆச்சர்யமான விதிவிலக்குகள்.
    அதில் இந்த கன்னிகாதானமும் ஒன்று.

    ==============================
    மேலும் ஒரு தகவல்:

    பெண் வயதுக்கு வருவதற்கு முன் விவாஹம் செய்து தருவதே சாஸ்திரப்படி உண்மையான கன்னிகாதான்ம் ஆகும்.

    இப்போது சட்டப்படி அது தவறு என்பதால், பெண்களுக்கு இன்று எந்த வயதில் விவாஹம் நடைபெற்றாலும்
    கன்னிகாதானம் செய்து தருவதாகவே பத்திரிகையில் அச்சடிக்கப்படுகிறது.

    ==============================

    பதிலளிநீக்கு
  13. பங்குனி உத்திரத்தை பற்றிய பல புது தகவல்களுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  14. பங்குனி உத்திரம் பற்றிய பகிர்வு அருமை...

    எனது மனதும் நெய்வேலியை நாடியது! எத்தனை பங்குனி உத்திரத் திருவிழாக்கள் நெய்வேலியில் பார்த்திருக்கிறேன். எனது அனுபவங்களையும் விரைவில் எழுதத் தூண்டியது உங்கள் பகிர்வு....

    பதிலளிநீக்கு
  15. ஒரு நல்ல நாள் வரும்போது அதைப் பற்றிய தகவல்களை அள்ளி அள்ளி வழங்குவது உங்கள் பதிவும் அதன் பின்னூட்டங்களும் தாம்!

    பதிலளிநீக்கு
  16. எங்க கேடரர் சபரி மலை போறேன்னு சொல்லி மூணு நாள் சாப்பாட்டைக் கட் பண்னிட்டாரு!

    சிறப்பான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  17. பங்குனி உத்திரம் பற்றிய செய்திகள் அருமை.

    எங்கள் பக்கம் குலதெய்வ கோவிலில் பங்குனி உத்திரத்திற்கு நல்ல கூட்டம் இருக்கும். எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வழிபடவருவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. VGK அவர்களுக்கு வணக்கம்! இன்று பங்குனி உத்திரம்! உங்கள் பதிவின் மூலம் பல செய்திகளை, குறிப்பாக காஞ்சிபுரம் போன்ற இடங்களில் நாள், நட்சத்திரம் பார்க்காமல் ( ஆலயங்களில் ) இன்று திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற செய்தினையும் தெரிந்து கொண்டேன். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  19. அருமையான தகவல்கலுடன் உத்திர நாளை சிறப்பாக்கிவிட்டீர்கள் எனக்கு அரங்கனைப்பற்றிதான் சிறிது தெரியும் ஆகவே அரங்கனின் உத்திர நிகழ்வுகளை பதிவிடப்போகிறேன்

    பதிலளிநீக்கு
  20. திருச்சியில் இன்றூ தெப்பக்க்குளத்தில் தெப்பம். நான் 1500 KM தொலைவில் இருக்கிறேன்.

    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    பதிலளிநீக்கு
  21. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து பல்வேறு அழகிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய

    திருமதிகள்:
    ===========

    01. லக்ஷ்மி Madam அவர்கள்

    02. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்

    03. ராஜி Madam அவர்கள்

    04. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்

    05. கோவை2தில்லி Madam அவர்கள்

    06. விஜி Madam அவர்கள்

    07. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்

    08. கோமதி அரசு Madam அவர்கள்

    09. ஷைலஜா Madam அவர்கள்

    மற்றும்

    திருவாளர்கள்:
    =============

    01. சுந்தர்ஜி Sir அவர்கள்

    02. ரமணி Sir அவர்கள்

    03. ரிஷபன் Sir அவர்கள்

    04. பழனி. கந்தசாமி Sir அவர்கள்

    05. அனந்து Sir அவர்கள்

    06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்

    07. கே.பி. ஜனா Sir அவர்கள்

    08. சென்னை பித்தன் Sir அவர்கள்

    09. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள்

    10. மணக்கால் ஜே.ராமன் Sir அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  22. படங்களும் பங்குனி உத்திர பதிவும் ரொம்ப நல்லா இருகுகு

    பதிலளிநீக்கு
  23. அப்பப்பா, ஒரே பதிவில் எவ்வளவு படங்கள், எவ்வளவு அருமையான விஷயங்கள்.

    கலக்கறேள் அண்ணா

    பதிலளிநீக்கு
  24. சாமி படங்களா அல்லாமே நல்லாகீதுங்க.

    பதிலளிநீக்கு
  25. பங்குனி உத்திர மகிமை தெரிந்து கொள்ள முடிந்தது. திரு சுந்தர்ஜியின் தகவல்கள் கூடுதல் சிறப்பு. படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  26. அடேங்கப்பா...பங்குனி உத்திரத்திற்கு இத்தனை சிறப்புகளா??? முருகா!!!

    பதிலளிநீக்கு