About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, April 17, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]



ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-3]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-3


[கோயில் வாசலில் முரசு கொட்டி, தெருவெங்கும் தண்டோரா போட்டு,  செய்தி சொல்கிறார்கள். ஜனங்கள் கூடி நின்று கேட்கிறார்கள்.]





  


காலடி வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய நற்செய்தி!


இன்று திருவாதிரை நக்ஷத்திரம். 


நம் சிவகுரு ஐயாவுக்கும், ஆர்யாம்பாள் அம்மாவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


குழந்தை மிகவும் தெய்வாம்சம் பொருந்தியதாக உள்ளது.


அழகோ அழகாக உள்ளது.


மிகவும் பக்தியுடன் பகவானை வேண்டி வந்த, இந்த உத்தம தம்பதியைக் கைவிடாமல் பகவான் கண் திறந்து விட்டார்.


குழந்தையைப் பார்த்தால் அந்த பகவானையே நேரில் பார்ப்பதுபோல உள்ளத்தில் பரவஸம் ஏற்படுகிறது.


குழந்தைக்கு சங்கரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்தக்குழந்தை நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யத்துடனும், அறிவுடனும் திகழ நாம் கூட்டுப்பிரார்த்தனை செய்வோமாக!


சிவாய நம ஓம்!  சிவாய நம ஓம்!  சிவாய நம ஓம்!  


[அனைவரும் ஒரே குரலில் கூறுதல்]  


சிவாய நம ஓம்!”  


ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo



காட்சி-4

[குழந்தை சங்கரனுக்கு இப்போது நான்கு வயது] 

பட்டாபி: 

என்னப்பா கிட்டு! 

குழந்தை சங்கரனைப் பார்க்க வந்தாயா? பார்த்தாயா? எப்படியிருக்கிறான்?

கிருஷ்ணமூர்த்தி: 

பட்டு! குழந்தை சங்கரன் ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறான். அவனை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல ஆசையாக உள்ளது. 

சங்கரனை ஒரு நாள் பார்க்கா விட்டாலும் எனக்கு மனஸு தாங்க மாட்டேன் என்கிறது. அவனைப்பார்த்தால் தான் என் மனம் குளிர்கிறது. அன்றையபொழுது அப்போது தான் நல்ல பொழுதாகப் போகிறது. 

பாவம் அவன் அப்பா சிவகுரு தான், படுத்த படுக்கையாக உள்ளார். இன்னும் ஒரு நாளோ இரண்டு நாளோன்னு வைத்தியர் சொல்லிவிட்டார்.

பட்டு:

சிவகுருவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நாம் தான் சங்கரனுக்கு கூடமாட ஒத்தாசையாக இருந்து உதவணும்.

கிட்டு:

நாம் மட்டுமல்ல. இந்த ஊரே சங்கரனுக்கு உதவிட ஓடோடி வந்துவிடும், பட்டு.

பட்டு:

போன வருஷம் தான், சங்கரனுக்கு மூன்று வயதாகி விட்டது என்று வித்யாப்யாசம் செய்து வைத்தார் சிவகுரு. ஐந்து வயதானதும், அடுத்த வருஷம் சங்கரனுக்கு உபநயனம் செய்யணும்னு என்னிடம் ஆசையாகச் சொன்னார் சிவகுரு. என்ன செய்வது? பிராப்தம் எப்படி இருக்கோ!

சரி நேரம் ஆகிவிட்டது; நான் புறப்படுகிறேன் கிட்டு; நாளைக்கு மீண்டும் சந்திப்போம்.


[இதன் தொடர்ச்சி தினமும் இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

27 comments:

  1. ஆதி சங்கரர் அவதாரம் நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. அருமையாகச் சொல்கின்றீர்கள்! தொட்ர்வேன்

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  3. பொருத்தமான படமும் உரையாடலும் சூப்பர்.

    ReplyDelete
  4. அருமையாகச் சென்று கொண்டு இருக்கிறது பகிர்வு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. இந்தக்குழந்தை நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யத்துடனும், அறிவுடனும் திகழ நாம் கூட்டுப்பிரார்த்தனை செய்வோமாக!


    சிவாய நம ஓம்! சிவாய நம ஓம்! சிவாய நம ஓம்!

    ReplyDelete
  6. குழந்தை சங்கரன் ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறான். அவனை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கணும் போல ஆசையாக உள்ளது.
    சங்கரனை ஒரு நாள் பார்க்கா விட்டாலும் எனக்கு மனஸு தாங்க மாட்டேன் என்கிறது. அவனைப்பார்த்தால் தான் என் மனம் குளிர்கிறது. அன்றையபொழுது அப்போது தான் நல்ல பொழுதாகப் போகிறது.

    மிக அருமையாக தெளிவான நாடக ஆக்கம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. சங்கரர் அவதரித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது..
    நாடகநடை மிக அற்புதம் ஐயா....

    ReplyDelete
  8. சுவாரசியமாக உள்ளது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  9. இந்தக்குழந்தை நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யத்துடனும், அறிவுடனும் திகழ நாம் கூட்டுப்பிரார்த்தனை செய்வோமாக!//

    கூட்டுப் பிரார்த்தனையின் மகிமையை நாடகத்தில் புகுத்தி விட்டீர்கள் அருமை.
    சிவாய நம ஓம்! சிவாய நம ஓம்! சிவாய நம ஓம்!

    ReplyDelete
  10. அருமையாகச் சென்று கொண்டு இருக்கிறது பகிர்வு!

    ReplyDelete
  11. அருமையாக செல்கிறது காட்சிகள். நானும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  12. Aha fine.
    I am happily reading.
    Pranams to our Great GURU.
    viji

    ReplyDelete
  13. நல்ல சூட்டுடன் கதை நகர்கிறது...பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

    “பறக்கலாம் வாங்க!”

    என்றப் பதிவுக்குப் போங்க!!

    இணைப்பு இதோ:-

    http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

    அன்புடன் vgk

    ReplyDelete
  15. பொருத்தமான படங்கள்.

    அருமையான வர்ணனை

    இதெல்லாம் உங்களுக்குக் கை வந்த கலை.

    எங்களுக்கு படிக்கப் படிக்க ஆனந்தம்.

    ReplyDelete
  16. குழந்தையில்லை என்று இறைவனை வேண்டி வரம்பெற்று வந்தவர் அக்குழந்தை அருமைபெருமையுடன் வளர்வதைக் காண முடியாமல் இப்படி ஆகிவிட்டதே.. வருத்தம் மேலிடுகிறது.

    ReplyDelete
  17. ஆதி சங்கரர் அவதாரமும் பட்டு கிட்டு உரையாடலும் சிலிர்க் வைக்கிறது.

    ReplyDelete
  18. ஓ... ஓ... ஒரு தெய்வீக கொளந்த பொறந்திசோ. பொறந்த கொளந்தய கண்டுகிட எத்தினி பேரு வாராக.

    ReplyDelete
    Replies
    1. :) ஆமாம். ஏராளமானவங்க வாராங்கோ. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

      Delete
  19. ஓ...சிவனின் அவதாரம் ஆதலால் அவருடைய திருவாதிரை நட்சத்திரமோ. பட்டு கிட்டு உரையாடல்களும் அடுத்த பகுதியை எதிர் பார்க்க வைக்கிறது.

    ReplyDelete
  20. ஆஹா...இந்தப் படமல்லவா நமது அறிமுகத்தை துவக்கிவைத்தது...நல்ல காட்சி அமைப்பு...

    ReplyDelete
  21. Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail

    -=-=-=-=-

    Mama, Namaskarams. Wish you a very happy new year.

    Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids.

    Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.

    Thank you very much for sharing the skit, mama

    -=-=-=-=-

    ReplyDelete
  22. WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019
    FROM Mr. RAJU alias S. NAGARAJAN, M.Com.,

    -=-=-=-=-=-=-=-=-
    My sincere namaskarams to Gopu mama (BHEL) for depicting the life history of Sri Adi Shankara in dramatic form with beautiful but simple style of words. I have the opportunity to read all the episodes today and stunned voiceless, how much knowledge he has. I pray Lord Sankara on his Jayanthi day, to give Gopu Mama hundreds of years of peaceful life to give numerous stories of dharma to uplift our life. Crores of pranams to his lotus feet.
    -=-=-=-=-=-=-=-=-

    Thanks a Lot, My Dear Raju.
    அன்புடன் கோபு

    ReplyDelete
  23. Whats-app message received today (18.5.2021) from one Mr. Libya Vasudevan (9442157457), Retired Senior Manager, BHEL, now residing at T.V.KOIL. 
    -=-=-=-=-=-=-=-=-

    Gopu Ji,

    Your Adhi Shankarar Tamil Drama was forwarded to one of my friends, who is a Music Teacher working in Kothagiri, near Ooty.

    He liked very much your presentation and the compilation of Adhi Shankara's life history.

    He wants to use it 'as it is' without any change for enacting a drama by his students.

    I need your clearance cum acceptance as well permission  to conduct a drama in school stage in the near future.

    Hope you will approve. Please confirm.

    My brothers and sisters have well received this Drama and eagerly to read further and other creations by you. 

    --oOo--

    My Dear Vasu,

    Thanks for your Comments. As discussed over phone, I have no objection in using my script for School Stage Drama or Radio Audio Drama or in any other form by school children.

    All the Best. - vgk - 19.05.2021

    ReplyDelete