என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 25 ஏப்ரல், 2012

பகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி

27 04 2012 வெள்ளிக்கிழமை 
பகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி ஸ்ரீராமானுஜாச்சார்யர்


கி.பி.1017 ம் ஆண்டு, சித்திரை மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில், திருவாதரை நக்ஷத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூரில் வஸித்து வந்த கேசவ ஸோமயாஜி + காந்திமதி அம்மாள் தம்பதிக்கு புத்திரராக அவதரித்தவர் ஸ்ரீ ராமானுஜர்.  

ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று பதினெட்டாவது முறையாக திருமந்திர உபதேசம் பெற்றார்.

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரிடம் ஐக்யமான ஸ்ரீ ராமானுஜர் இன்றும் [உடலாலும்] வாழ்கிறார். சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் திருக்கோயிலை ஸ்ரீ ராமனுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள்

ஸ்ரீ ராமானுஜருக்கு ஆயுள் 200 ஆண்டுகள் என்றும், ஆனால் அவர் தனது 120 ஆவது வயதில் ஸித்தி அடைந்து விட்டதால், மீதமுள்ள 80 ஆண்டுகளைக் கழிக்க அடுத்த பிறவியில் ஸ்ரீ மணவாள மாமுனிகளாக அவதாரம் எடுத்து 80 ஆண்டு காலம் வாழ்ந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.


ஸ்ரீ மணவாள மாமுனிகள்

ஸ்ரீ ராமானுஜர் அவதாரதினமான இன்று 27.04.2012 வெள்ளிக்கிழமை, நாமும் அவரை பூஜித்து நினைத்து நன்மையடைவோமாக!   


ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்


ooooooooooooooooooooooo

அறிவிப்பு

”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” 

என்ற நாடகத்தின் பகுதி-14 நாளை

”சங்கர ஜயந்தி” தினமான 26.04.2012 

குருவாரம் [வியாழக்கிழமை] முதல் மீண்டும் ஆரம்பிக்கும்.


தினமும் ஒரு பகுதி வீதம் 

காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.


30.04.2012 திங்கட்கிழமை 

இறுதிப் பகுதி-18 உடன் நாடகம் நிறைவுபெறும்.


நாடகத்தின் பழைய மிகச்சிறிய 

பகுதிகளைப் படிக்க இதோ இணைப்புகள்:


பகுதி-02

பகுதி-03

பகுதி-04

பகுதி-05

பகுதி-06

பகுதி-07

பகுதி-08

பகுதி-09

பகுதி-10

பகுதி-11

பகுதி-12

பகுதி-13


என்றும் அன்புடன் தங்கள்,

vgk 

33 கருத்துகள்:

 1. // சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//


  இது உண்மையா அய்யா ?

  பதிலளிநீக்கு
 2. //seenuguru said...
  // சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//

  இது உண்மையா அய்யா ?//

  சமீபத்தில் ஓர் ஆன்மிக மாத இதழில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  எனக்கும் இது ஆச்சர்யமானதொரு செய்தியாகவே உள்ளது.

  இதைப்பற்றி மேலும் விசாரித்து தகவல் கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. /// சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.///

  அப்படியா! இது நான் அறியாத தகவல்.

  திருகோஷ்டியூருக்கு நான் சிறுவயதில் சென்றிருக்கிறேன். அப்போது அங்கு சொன்னார்கள். அந்த கோவிலின் கோபுரத்தின் மேலிருந்து தான் ராமானுஜர் தான் தெரிந்து கொண்ட திருமந்திர உபதேசத்தை பொது மக்களுக்கு சொன்னார் என்று.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீராமானுஜர்தானே வைணவக் கோவில்களின் நித்ய அனுஷ்டானங்களை முறைப்படுத்தியவர்?

  பதிலளிநீக்கு
 5. //பழனி.கந்தசாமி said...
  ஸ்ரீராமானுஜர்தானே வைணவக் கோவில்களின் நித்ய அனுஷ்டானங்களை முறைப்படுத்தியவர்?//

  ஆமாம் ஐயா. ஸ்மார்த்தர்களுக்கு “ஆதி சங்கரர்” எப்படியோ அதே போல வைஷ்ணவர்களுக்கு இந்த ஸ்ரீ இராமானுஜரே குருவாகத் திகழ்ந்தவர்.

  தான் கஷ்டப்பட்டு தெரிந்துகொண்ட திருமந்திரம் என்ற உபதேசத்தை, வெளியே வேறு யாருக்காவது வெளிப்படையாகச் சொன்னால், தன் தலையே வெடித்துவிடும் என்று கேள்விப்பட்டும், தன் தலையே வெடித்தாலும் பரவாயில்லை, திருமந்திரத்தைக் காதால் கேட்டு அனைத்து மக்களுக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் துணிந்து அதைச் சொன்ன புரட்சிகரமானவர் இந்த ஸ்ரீ இராமனுஜர்.

  பதிலளிநீக்கு
 6. // சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//

  கேள்விப் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும்போது ஒவ்வொரு அசௌகர்யங்களால் சரியாகப் பார்க்க வாய்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீ ராமனுஜரைப்பற்றிய அறிய தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்.

  மனதுக்கு ரொம்ப பாந்தமான பதிவு. தங்களின் நாடகத்தையும் தொடர்ந்து படித்துவிடுவேன். படித்துவிட்டு எழுதுகிறேன். படங்கள் மனத்தின் பாரத்தை பறக்கடித்துவிட்டன. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. உடையவரின் திருமேனியை வஸந்த மண்டபத்தில்தான் பள்ளிப் படுத்தினார்கள் (மண்ணுக்குள் புதைத்தார்கள்). கர்ண பரம்பரைக் கதை என்னவென்றால் மறுநாள் போய்ப் பார்த்தபோது சின் முத்திரையுடன் அவரது திருமேனி உட்கார்ந்த நிலையில் இருந்ததாகவும் இன்று வரை பச்சைக்கற்பூரம் குங்குமப்பூ முதலிய கலவையால் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். சாட்சியாய் அவரது தலைப்பகுதி மற்று சின்முத்திரை காட்டும் விரல்களைக் காட்டுகிறார்கள். அந்த (சிலைக்கு) திருமேனிக்கு திருமஞ்சனம் கிடையாது. ஸ்ரீரெங்கநாதர் தமது வஸந்த மண்டபத்தையே ஸ்ரீராமனுஜருக்காக விட்டுக் கொடுத்து விட்டார்.

  பதிலளிநீக்கு
 10. //ரிஷபன் said...
  உடையவரின் திருமேனியை வஸந்த மண்டபத்தில்தான் பள்ளிப் படுத்தினார்கள் (மண்ணுக்குள் புதைத்தார்கள்). கர்ண பரம்பரைக் கதை என்னவென்றால் மறுநாள் போய்ப் பார்த்தபோது சின் முத்திரையுடன் அவரது திருமேனி உட்கார்ந்த நிலையில் இருந்ததாகவும் இன்று வரை பச்சைக்கற்பூரம் குங்குமப்பூ முதலிய கலவையால் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். சாட்சியாய் அவரது தலைப்பகுதி மற்று சின்முத்திரை காட்டும் விரல்களைக் காட்டுகிறார்கள். அந்த (சிலைக்கு) திருமேனிக்கு திருமஞ்சனம் கிடையாது. ஸ்ரீரெங்கநாதர் தமது வஸந்த மண்டபத்தையே ஸ்ரீராமனுஜருக்காக விட்டுக் கொடுத்து விட்டார்.//

  தங்களின் விளக்கம் எங்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் தக்கதொரு பதிலாக அமைந்துள்ளது.

  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 11. நான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவள்... இப்பொழுது வெளிநாட்டில் வாழ்கிறேன், படங்களை பார்த்தவுடன் மிக சந்தோஷமாக இருந்தது... மிக்க நன்றி ஐயா..

  // சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//- இக்கருத்தை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீரங்கம் திருக்கோயிலை ஸ்ரீ ராமனுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 13. / சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//-

  தானுகந்த திருமேனியாக கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீராமானுஜர் ஸன்னதிக்கு வரும் அரங்கனின் திருப்பாதங்களை நீரால் தூய்மைப்படுத்திய பிறகே சந்நிதிக்குள் ஏளப்பண்ணுவார்கள்...

  பதிலளிநீக்கு
 14. ராமானுஜரின் கோயிலொழுகு என்கிற நூலின் நியமப்படியே திருவரங்கத்தின் நிர்வாகம் நடைபெறுகிறது...

  பதிலளிநீக்கு
 15. இராஜராஜேஸ்வரி said...
  ராமானுஜரின் கோயிலொழுகு என்கிற நூலின் நியமப்படியே திருவரங்கத்தின் நிர்வாகம் நடைபெறுகிறது...

  கூடுதல் தகவல் அளித்துச் சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. நல்ல தகவல்கள்.

  சென்ற வாரம் தில்லியில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் உபன்யாசம் இருந்தது. ராமானுஜர் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது உங்கள் பதிவிலும்..... பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. நானும் சில ஆண்டுகளுக்கு முன் வந்த தீபாவளி மலரொன்றில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில்,அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் வைத்துப் பாதுகாக்கப் பட்டு வருகிறது எனும் தகவலைப் படித்துள்ளேன்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 18. அறியாதன பல அறிந்தேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ள

  திருவாளர்கள்:
  ==============

  01. சீனுகுரு SIR அவர்கள்
  02. பழனி. கந்தசாமி SIR அவர்கள்
  03. ஸ்ரீராம் SIR அவர்கள்
  04. ஹரணி SIR அவர்கள்
  05. ரிஷபன் SIR அவர்கள்
  06. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்
  07. ஈ.எஸ்.சேஷாத்ரி SIR அவர்கள்
  08. நம்பிக்கை பாண்டியன் SIR அவர்கள்
  09. ரமணி SIR அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  ===========

  01. கோவை2தில்லி MADAM அவர்கள்
  02. லக்ஷ்மி MADAM அவர்கள்
  03. ஸவிதா MADAM அவர்கள்
  04. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 20. VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பதிவைப் படித்ததும், பி.ஸ்ரீ எழுதிய – “ ஸ்ரீ ராமாநுஜர் “ என்ற நூல் நினைவுக்கு வந்தது. ராமானுஜர் என்ற அந்த மகான் அந்த காலத்தில் செய்த சமூக சீர்திருத்தங்கள் யாரும் செய்ய முடியாதது.

  பதிலளிநீக்கு
 21. தி.தமிழ் இளங்கோ said...
  VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பதிவைப் படித்ததும், பி.ஸ்ரீ எழுதிய – “ ஸ்ரீ ராமாநுஜர் “ என்ற நூல் நினைவுக்கு வந்தது. ராமானுஜர் என்ற அந்த மகான் அந்த காலத்தில் செய்த சமூக சீர்திருத்தங்கள் யாரும் செய்ய முடியாதது.//

  வணக்கம் ஐயா.

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

  பதிலளிநீக்கு
 22. viji said...
  Aha,
  neeraya vishayankal therithukondan.
  viji//

  வாங்க மேடம்.

  //ஆஹா, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்//

  என்று தாங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று பதினெட்டாவது முறையாக திருமந்திர உபதேசம் பெற்றார்.//

  நல் உபதேசம் பெற எத்தனை சென்று வாங்கி இந்த வையகம் வாழ அருள் புரிந்து இருக்கிறார்.

  உடையவர் திருமேனி பற்றி தங்கள் விளக்கம் அருமை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. கோமதி அரசு said...
  *ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று பதினெட்டாவது முறையாக திருமந்திர உபதேசம் பெற்றார்.*

  //நல் உபதேசம் பெற எத்தனை சென்று வாங்கி இந்த வையகம் வாழ அருள் புரிந்து இருக்கிறார்.

  உடையவர் திருமேனி பற்றி தங்கள் விளக்கம் அருமை.

  வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 25. WHAT A COINCIDENCE

  கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜர் தொடர் நடந்து கொண்டிருக்கிறது.

  /// சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//-

  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. ராமானுஜர் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை..உங்க பதிவு மூலமாக தெரிஞ்சுக்கனும்

  பதிலளிநீக்கு
 27. யாராலாச்சிம் 200--- வயசெல்லா இருக்க மிடியுமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 20, 2015 at 4:22 PM

   //யாராலாச்சிம் 200--- வயசெல்லா இருக்க மிடியுமா.//

   இப்போதெல்லாம் 120-125 வரை உலகில் ஆங்காங்கே சிலர் உயிருடன் வாழ்வதாக அடிக்கடி கின்னஸ் ரிகார்டு செய்திகளாக படிக்க முடிகிறது. அதுபோல அந்தக் காலத்தில் இதுபோல ஒருவர் இருந்திருக்கலாமோ என்னவோ ! யாருக்குத் தெரியும்?

   நீக்கு
 28. ஸ்ரீராமானுஜர் பற்றி இதுவரை தெரிந்திராத தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது. மணவாள மாமுனிவரும் இவரேதானா.

  பதிலளிநீக்கு
 29. பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரிடம் ஐக்யமான ஸ்ரீ ராமானுஜர் இன்றும் [உடலாலும்] வாழ்கிறார். சுமார் 865 வருஷங்களாக அவரது ஸ்தூல சரீரம் ஸ்ரீரங்கம் திருக்கோயில் வஸந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள்.//அந்த சன்னிதிக்கு நானும் சென்றிருக்கிறேன்..இதுகுறித்து கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் எதுவும் கிடைத்துள்ளதா??

  பதிலளிநீக்கு