About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 23, 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-12]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-16/1/2


[பட்டுவும் கிட்டுவும் சங்கரனின் தாயுடன் சங்கரன் வீட்டில்]


பட்டு:


கிட்டு அண்ணா, சங்கரனைப்பற்றி ஏதும் புது விஷயங்கள் உண்டா?


சொல்லும் ஓய், கேட்போம்.


கிட்டு:


சொல்றேன், சொல்றேன். கேளுங்கோ!


அதுக்குத்தானே இங்கே நான் வந்திருக்கேன்!


80 வயது கிழவர் ஒருவரை நம் சங்கரன் சந்தித்து உள்ளார்.


அந்தக்கிழவர் சங்கரனைப் பார்த்து 


“16 வயதுப் பொடியன் நீ; 


பிரும்மசூத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியுள்ளாய்; 


நீ எழுதியது தான் சரியென்று என்னிடம் கடந்த 4-5 நாட்களாக வாக்குவாதம் செய்கின்றாய்.


இது நியாயமா?  


என்றாராம்.


பட்டு: 


அடடா! அப்புறம் என்ன ஆச்சு?


ஆர்யா: 


வயசானவரிடம் இவன் பணிந்து போகக்கூடாதோ?


எதற்கு அனாவஸ்யமாக வாக்குவாதம் பண்ணனும்?


கிட்டு:


முழுசா நடந்ததைக்கேளுங்கோ மாமி.


நம் சங்கரன் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபிறகு தான், அவர் சாதாரண மனிதர் இல்லை; பிரும்மசூத்ரத்தையே படைத்த “வ்யாஸ பகவான்” னு புரிந்து, வ்யாஸருடன் போய் அதிகப் பிரஸங்கித்தனமாக வாதப்பிரதிவாதம் செய்து விட்டோமே என மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளான்.வேத வ்யாஸர்


பட்டு:


ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கே! 


வியாஸர் என்ன சொன்னார்னு சீக்கரம் சொல்லு கிட்டு; 


எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.


கிட்டு:


“சங்கரா! நீ எழுதியுள்ள, ப்ரும்மசூத்ர பாஷ்யங்கள் யாவும் முற்றிலும் சரியானதே.


நானும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.


உன்னுடைய பாண்டித்யத்தை சோதித்து உலகிற்கு எடுத்துச்சொல்லி, உன் புகழை நிலை நாட்டவே இவ்வாறு உன்னுடன் வாதம் செய்தேன்.


நீ மேலும் 16 ஆண்டுகள் வாழ உன் ஆயுளை நீட்டித்து அருள் புரிகிறேன்.


உன் வாழ்நாள் முடிவதற்குள் அத்வைத கருத்துக்களை அனைவரும் ஏற்குமாறு செயல்படப் புறப்படு.


உனக்கு என் ஆசிகள். ஆயுஷ்மான் பவ! “  என்றாராம்.

[இதைக்கேட்டதும் ஆர்யாம்பாள் சந்தோஷ முகத்துடன் கைகூப்பி வ்யாஸரை மானஸீகமாக வழிபடுகிறாள்.] 
பட்டு:


இதையெல்லாம் கேட்டாலே மெய் சிலிர்க்கிறது எனக்கு.


வேறு ஏதாவது தகவல் உண்டா கிட்டண்ணா?

கிட்டு:


சொல்றேன் கேளுங்கோ பட்டண்ணா! 


மாமி நீங்களும் கவனமாக் கேட்டுக்கோங்கோ!


மகிஷ்மதி என்ற ஓர் இடம். 


அங்கே கர்ம மீமாம்ஸை என்னும் வழியில் இறை வழிபாடு செய்துவந்தார் ஒருவர். 


அவர் பெயர் “மண்டல மிஷ்ரா”.


சங்கரர் அவரைக்காணச் சென்ற சமயம், தன் வீட்டுக்கதவைச் சாத்திவிட்டு, அவர் ஏதோ நித்ய கர்மாக்களில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார்.


தன் அபூர்வ சக்தியால் வீட்டினுள் நுழைந்து விட்ட சங்கரரைக் கண்டு மண்டல மிஷ்ராவுக்கு கோபம் வந்து விட்டது.


கோபமாக உள்ள அவரைக் கண்டு புன்னகைத்த சங்கரர், “பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.


சங்கரரின் அறிவுக்கூர்மை மற்றும் பாண்டித்யத்தை உணர்ந்த மண்டல மிஷ்ரா தனது கர்மாக்கள் முடிந்தபின், சங்கரருடன் தன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார்.


காட்சி 16 தொடரும்   

[இதன் தொடர்ச்சி பகுதி-13 [காட்சி-16/2/2]
இன்று திங்கட்கிழமை 23.04.2012 
இரவு சுமார் 7 மணிக்கு வெளியிடப்படும்]

24 comments:

 1. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் கவனித்து வருகிறேன்.

  உங்கள் எழுத்தின் மேல் நான் கொண்டிருந்த காதல் வார்த்தைகளைக் கடந்தது.

  ஆனால் சமீப காலமாக நீங்கள் தொட்டுவரும் ஆன்மீக தத்வ விசாரங்கள் உங்கள் எழுத்தின் மேல் பெரிய மரியாதையை உண்டுபண்ணிவிட்டன.

  இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் மனிதகுலத்துக்கு வழிகாட்டியாய் இருக்கக்கூடிய போதனைகளும், ஞானமும் நிரம்பித்ததும்பும் சுனையாய் உங்கள் எழுத்தை நான் பார்க்கிறேன்.

  வணங்குகிறேன் விஜிகே.

  ReplyDelete
 2. இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் மனிதகுலத்துக்கு வழிகாட்டியாய் இருக்கக்கூடிய போதனைகளும், ஞானமும் நிரம்பித்ததும்பும் சுனையாய் உங்கள் எழுத்தை நான் பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. உன்னுடைய பாண்டித்யத்தை சோதித்து உலகிற்கு எடுத்துச்சொல்லி, உன் புகழை நிலை நாட்டவே இவ்வாறு உன்னுடன் வாதம் செய்தேன்.


  நீ மேலும் 16 ஆண்டுகள் வாழ உன் ஆயுளை நீட்டித்து அருள் புரிகிறேன்.

  விஷ்ணு ரூபமான வியாசரின் ஆசிகள்
  சிவாம்சமான சங்கருக்கு வர்ஷித்தது சிலிர்ப்பூட்டும் வைபவம்..

  ReplyDelete
 4. So nice. I am reading continuously.
  waiting.
  viji

  ReplyDelete
 5. , “பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.


  பக்தியில்லாத கர்மாவாலோ

  ஞானமில்லாத கர்மாவாலோ , பலன் ஏதும் இல்லைதான் ---

  ReplyDelete
 6. ஒரே மூச்சில் எல்லா அத்தியாயங்களையும் படித்து விட்டேன். ஆன்ம்மிகப் பதிவுகள் எழுதினால் நிச்சயம் வரவேற்பு இருக்கும். அதுவும் சுவை குன்றாமல் சிறிய பகுதிகளாக எழுதி, எல்லோருக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருகிறேன்.

  ReplyDelete
 7. சிறிய சிறிய பகுதிகளாய்ப் படிப்பது சுலபமாக இருக்கிறது. நல்ல விஷயங்களைத் தொடர்ந்து தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 8. “பக்தியில்லாத இதுபோன்ற கர்மாக்களால் பலன் ஏதும் ஏற்படாது” என எடுத்துரைத்துள்ளார்.//

  உண்மையான விளக்கம்.
  அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன். தொடர்கிறேன்.

  ReplyDelete
 10. தொடர்ந்து வருகிறேன்! அருமையாக உள்ளது!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 11. வியாசர் புதிய தகவல். மிக்க நன்றி.

  ReplyDelete
 12. மனதுக்கு இதமான பதிவு...

  ReplyDelete
 13. மனதுக்கு இதமான பதிவு...

  ReplyDelete
 14. மனதுக்கு இதமான பதிவு...

  ReplyDelete
 15. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து

  “பறக்கலாம் வாங்க!”

  என்றப் பதிவுக்குப் போங்க!!

  இணைப்பு இதோ:-

  http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

  அன்புடன் vgk

  ReplyDelete
 16. சங்கர லீலைகள் கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 17. உங்கள் ஆன்மீகப் பதிவுகள்

  அருமையான பதிவுகள்.

  // சங்கரரின் அறிவுக்கூர்மை மற்றும் பாண்டித்யத்தை உணர்ந்த மண்டல மிஷ்ரா தனது கர்மாக்கள் முடிந்தபின், சங்கரருடன் தன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார்.//

  அதைப் படிக்க அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

  ReplyDelete
 18. தாயிடம் சொல்வது போல் சங்கரரின் பெருமைகளை நாடக நேயர்கள் அறியச்செய்யும் உத்தி பிரமாதம்.

  ReplyDelete
 19. சங்கரரின மேன்மைகளை படிப்படியாகபடிப்பவர்களுக்கு புரிய வைக்கிறீர்கள்

  ReplyDelete
 20. Replies
  1. mru October 20, 2015 at 4:16 PM

   ?????-------//

   சரி .... சரி ! :) ஓக்கே ..... நோ ப்ராப்ளம் அட் ஆல். :)

   Delete
 21. வயசானவாளிடம் இவன் பணிந்து போகக்கூடாதோ ஏன் வீண் வாக்குவாதம்? பாசமுள்ள தாயின் மனத்தாங்கல்

  ReplyDelete
 22. நிறைய கிளைக் கதைகள்...சுவாரசியமாகத்தான் போகிறது.

  ReplyDelete