About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, April 13, 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ நிறைவுப்பகுதி 3 of 3 ]


கடவுள் இருக்கிறாரா? 
அல்லது
கடவுள் இல்லையா?

[விவாதப் பகுதி 3 of 3]பகுதி 1 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

பகுதி-2 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/2-of-3.html


மாணவர்: 


ஐயா, உங்களின் ஆய்வுக்கொள்கைகளின் அடித்தளம் யாவுமே இருமையைப்பற்றியே [இரண்டு பொருட்களை சம்பந்தப்படுத்தியே] உள்ளன.

உங்கள் வாதத்தில் பிறப்பு,  இறப்பு; வாழ்வது, சாவது; நன்மை செய்யும் கடவுள், தீமை செய்யும் கடவுள் ஆக, இதுவரை எல்லாமே இரட்டை இரட்டையாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.


கடவுளையே ஒரு எல்லைக்கு உட்பட்டவராக , ஏதோவொரு அளவுக்கு உட்பட்டவராக, நம்மால் அவரை வெகு சுலபமாக அளந்துவிட முடியும் என்பதாகவே உள்ளன.


ஐயா,  ”எண்ணங்கள்” என்பது என்ன என்பதையே கூட,  விஞ்ஞானத்தால் இன்றுவரை விவரிக்க முடியாதபடியே தான் உள்ளது.  


விஞ்ஞானம் மின்சாரத்தையும் காந்த சக்தியையும் பயன் படுத்தி வருகின்றனவே தவிர, ஆனால் இதுவரை அதைக் கண்களால் கண்டது இல்லை. இவை இரண்டினில் ஒன்றைப்பற்றி விஞ்ஞானம் இதுவரை ஏதோ கொஞ்சமாக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது என்பதே உண்மை. 

இறப்பை பிறப்பின் எதிர்பதமாகப் பார்ப்பதே முதலில் அறியாமையின் வெளிப்பாடாகும்.  


வாழ்வின் எதிர்பதம் சாவு என்பதே தவறு.  


ஒருவரின் சாவினில் அவரின் வாழ்வு என்பது மறைந்துள்ளது என்பதே சரியான பொருள்.

இப்போது கூறுங்கள் பேராசிரியரே!  


குரங்கிலிருந்து படிப்படியாக பலவித பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டு மாறியவர்களே மனிதர்கள் என்று நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த முடியும் அல்லவா?

பேராசிரியர்: 

இயற்கையில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பு வரும்போது, ஆமாம் எங்களால் அது போல பாடம் நடத்த முடியும் தான். நானும் நடத்தக்கூடும் தான்.

மாணவர்: 


இயற்கையின் இந்தப் பரிணாம வளர்ச்சியினை நீங்கள் உங்கள் கண்களால் இதுவரை கண்டு உணர முடிந்துள்ளதா, ஐயா.

[பேராசிரியர் அவர்கள் புன்னகை புரிந்த முகத்துடன், தன் தலையை லேஸாக ஆட்டிக்கொண்டார்.  அவருக்கு இந்த மாணவரின் விவாதம் தன்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதும் புரியலானது]


மாணவர்: 


ஆகையால் பரிணாம வளர்ச்சி பற்றி போதிக்கும் யாரும் இதுவரை  எதையும் தங்கள் கண்களால் பார்த்து உணரவில்லை. 


தாங்களே சோதனை செய்ததும் இல்லை. 


எதையும் நிரூபித்ததும் இல்லை.


செய்முறைக்காகவும் சோதனைகளுக்காகவும் யாரும் தன்னை மிகவும் வருத்திக்கொண்டதும் இல்லை. 


தொடர்ந்து கஷ்டப்பட்டு பிரயத்தனம் செய்து எதையும், தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்ததும் இல்லை.
இதுபோலெல்லாம் இருக்கும் போது நீங்கள் எப்படி ஐயா, உங்களுக்கு மனதில் தோன்றியதை எங்களுக்குப் பாடமாக போதிக்கலாம்? 


எப்படி எங்கள் மேல் உங்கள் கருத்துக்களைத் திணிக்கலாம்?

நீங்கள் பாடம் போதிக்கும் ஒரு ஆசிரியரா? அல்லது விஞ்ஞானியா? அல்லது மத போதகரா?  சொல்லுங்கள், ஐயா.

[இந்த சூடான விவாதத்தால் வகுப்பறையில் 
அப்போது மிகுந்த கூச்சலும் குழப்புமாக அமளி ஏற்பட்டது]

மாணவர்: 


[மற்ற சக மாணவர்களைப் பார்த்து கேட்கிறார்]

நண்பர்களே! 


இந்த நம் வகுப்பறையில் உள்ள நம் பேராசிரியர் அவர்களின் மூளையை யாராவது உங்களில் ஒருவராவது இதுவரை பார்த்திருக்கிறீர்களா?
[இதைக் கேட்டதும், மாணவர்கள் அனைவரும் 
பலக்கச் சிரித்து விட்டனர் ]
மாணவர்: 

[தொடர்ந்து வகுப்பறை நண்பர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்]:

”பேராசிரியரின் மூளையின் ஓசையை இதுவரை யாராவது தங்கள் காதால் கேட்டுள்ளீர்களா?”

அவரது மூளையை யாராவது இதுவரை உணர்ந்தாவது உள்ளீர்களா?

அவரது மூளையை யாராவது இதுவரை தொட்டுப்பார்த்து உள்ளீர்களா?

அவரது மூளையின் வாசனையையாவது யாராவது இதுவரை நுகர்ந்து பார்த்து உள்ளீர்களா?! ! ! ! ! 

உங்கள் அனைவரின் மெளனத்திலிருந்து, யாரும் அதுபோல இதுவரை  செய்யவில்லை என்பது, இப்போது என்னால் நன்கு உணர முடிவதால், நான் கீழ்க்கண்ட முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

அதாவது ......

அநுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப்பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், விஞ்ஞான பூர்வமாக, நமது பேராசிரியர் அவர்களுக்கு மூளை என்ற ஒன்றே இல்லை! இல்லை!! இல்லை!!! என்பதைத் தானே நாம் இப்போது தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது?

மாணவர் பேராசிரியரை நோக்கி:

என் பெரும் மதிப்புக்குரிய ஐயா, நாங்கள் இப்போது செய்த மிகச்சிறிய சோதனைகளின் அடிப்படையிலான, விஞ்ஞானபூர்வமான முடிவு இவ்வாறு இருக்கும் போது, நாங்கள் எவ்வாறு நீங்கள் நடத்தும் பாடங்களை நம்ப முடியும், ஐயா?

[இந்த நேரம் அந்த வகுப்பறையில் பெரிய அமைதி நிலவியது] 

[பேராசிரியர் அந்த மாணவரை உற்று நோக்கினார். அந்த மாணவரின் முகத்தில் தோன்றிய அறிவின் ஆழம் அவரை ஸ்தம்பிக்கச்செய்தது] 

பேராசிரியர்: 

எதையுமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன், என் அன்புக்குரிய மகனே!

மாணவர்: 


அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா. 

அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. 


அந்த நம்பிக்கை என்பது மட்டுமே  எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.
oooooooooooooo
முற்றும்
oooooooooooooo

எனக்கு மிகவும் பிடித்தமான, இந்த அழகான உரையாடலை,  நீங்களும் நன்கு படித்து, புரிந்துகொண்டு.  ரஸித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இது உண்மையில் நடந்த உரையாடல் சம்பவம் தானாம்.


இதில் பங்கு பெற்ற மாணவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் அனைவரும் அவரை அவசியமாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  

அவர் வேறு யாரும் அல்ல

பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நம்

திரு A P J அப்துல் கலாம் அவர்கள்.

[நம் இந்தியத் திருநாட்டின் 
முன்னாள் குடியரசுத்தலைவர் அவர்கள்] 


-oOo-

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உரையாடல், பல நாட்கள் முன்பு, எனக்கு என் நண்பர் ஒருவரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்ப்ட்டது.

என்னால் முடிந்தவரை ஓரளவு தமிழாக்கம் மட்டும் செய்து தங்களுக்குத் தந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன் 
vgk


50 comments:

 1. நம்பிக்கையே வாழ்க்கை என்பது நம்பிக்கொண்டிருக்கிறோம்...

  நம்பிக்கையே கடவுள் என்பதை அழகாக உணர்த்திய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே

  மனிதனின் பலமும் நம்பிக்கையில்தானே ஐயா உள்ளது!

  நம்பினார் கெடுவதில்லை!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 3. பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நம்
  திரு A P J அப்துல் கலாம் அவர்கள்.
  [நம் இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் அவர்கள்] பங்கு பெற்ற மாணவர் என்பதை அறிந்ததில் பெருமிதம் கொள்கிறோம்..

  ReplyDelete
 4. நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.

  உயிரோட்டமான வரிகள் சிந்தையைக் கவர்ந்தன..

  ReplyDelete
 5. அருமையான விளக்கம்
  அருமையான மொழிபெயர்ப்பு
  அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை
  அழகான தெளிவான பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அருமையான விதத்தில் மொழிபெயர்த்துத் தந்தமைக்கு நன்றிகள்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 7. கோபு சார், இந்த உரையாடல் எங்கோ படித்திருக்கிறேனே என்று நினைவு படுத்திக் கொள்ள முயன்றும் நினைவுக்கு வரவில்லை. கடைசியில் தெளிவு படுத்தியதற்கு என் நன்றி. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 8. வை.கோ சார் நல்ல மொழி பெயர்ப்பு.படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 9. சார் நான் இதனை படித்தது இல்லை. அருமையாக இருந்தது. நம்பிக்கைதான் எல்லாமும் (கடவுள் உட்பட) சுவராஸ்யமாக படைத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 10. வாதத் திறமை இருந்தால் எதை வேண்டுமானாலும் நிறுவலாம்! வாதங்கள் நன்றாக இருந்தன. குறிப்பாக பரிணாமத் தத்துவம்... மூளை பற்றிப் பேசியது வாதத்துக்குச் சரி என்றாலும் குரு ஸ்தானத்தில் உள்ளவரைப் பார்த்து அப்துல் கலாம் போன்ற மனப் பக்குவம் உடையவர்கள் பேசியிருப்பார்களா, அதுவும் சக மாணவர்கள் மத்தியில், என்றும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை! எனினும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அருமையான கட்டுரை.

  ReplyDelete
 13. அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா.

  அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.


  அந்த நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது

  எவ்வளவு தெளிவான விளக்கம் அருமையா இருக்கு.

  ReplyDelete
 14. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நம்பிக்கை தானே வாழ்க்கை....

  ஆங்கிலத்தில் படித்ததை விட தமிழில் இன்னும் சுவையாக இருந்தது!

  மூன்று பகுதிகளுமே மிக அருமை... பகிர்வுக்கு நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய நந்தன வருட நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா.

  அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.


  அந்த நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.//

  நம்பிக்கை தான் வாழ்க்கை, நம்பிக்கைதான் மனிதனை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.

  நல்ல பகிர்வு.


  உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. இந்த என் விவாதப்பகுதிகள் மூன்றிலும் அவ்வப்போது அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, மகிழ்வளித்து உற்சாகப்படுத்தியுள்ள

  திருமதிகள்:
  ===========

  01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்*

  02. கோவை2தில்லை MADAM அவர்கள்

  03. கோமதி அரசு MADAM அவர்கள்*

  04. லக்ஷ்மி MADAM அவர்கள்*

  05. ராஜி MADAM அவர்கள்*

  06. சந்திரவம்சம் MADAM அவர்கள்

  07. மிடில் கிளாஸ் மாதவி MADAM அவர்கள்

  08. ஸாதிகா MADAM அவர்கள்

  09. ஆசியா உமர் MADAM அவர்கள்

  10. மாதேவி MADAM அவர்கள்

  11. கோவைக்கவி வேதா இலங்காதிலகம் MADAM அவர்கள்

  மற்றும்

  திருவாளர்கள்:
  ==============

  01. சுந்தர்ஜி SIR அவர்கள்

  02. அப்பாதுரை SIR அவர்கள்

  03. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்*

  04. ஈ.எஸ். சேஷாத்ரி SIR அவர்கள்

  05. கே.பி.ஜனா SIR அவர்கள்

  06. ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி SIR அவர்கள்

  07. அட்ஷயா SIR அவர்கள்

  08. சீனி SIR அவர்கள்

  09. ரமணி SIR அவர்கள்

  10. தி.தமிழ் இளங்கோ SIR அவர்கள்

  11. சென்னை பித்தன் SIR அவர்கள்

  12. ஸ்ரீராம் SIR அவர்கள்

  13. G.M.B. SIR அவர்கள்

  14. விச்சு SIR அவர்கள்

  15. KRISHY தமிழ்போஸ்ட் SIR அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  * தொடரின் மூன்று பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள ஐவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள்,

  vgk

  ReplyDelete
 19. பகுதி-2

  ஸ்ரீராம். said...

  *****இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா....*****

  //அருமை.
  வாதங்கள் தொடரட்டும்//

  அன்புள்ள ஸ்ரீராம்!

  இந்த உரையாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளும் “இருட்டை மேலும் இருடாக்க முடியுமா” என்பது தான்.

  அதையே தாங்களும் சுட்டிக் காட்டியுள்ள எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

  நம் இருவர் ரசனைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது, ஆச்சர்யமாக உள்ளது.

  =============================

  பகுதி-3

  ஸ்ரீராம். said...

  //வாதத் திறமை இருந்தால் எதை வேண்டுமானாலும் நிறுவலாம்! வாதங்கள் நன்றாக இருந்தன. குறிப்பாக பரிணாமத் தத்துவம்... மூளை பற்றிப் பேசியது வாதத்துக்குச் சரி என்றாலும் குரு ஸ்தானத்தில் உள்ளவரைப் பார்த்து அப்துல் கலாம் போன்ற மனப் பக்குவம் உடையவர்கள் பேசியிருப்பார்களா, அதுவும் சக மாணவர்கள் மத்தியில், என்றும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை! எனினும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.//

  அன்புள்ள ஸ்ரீராம்!

  எனக்கும் இதே எண்ணங்களே, மின்னஞ்சலில் வந்த இந்த உரையாடல் பகுதியினை ஆங்கிலத்தில் முதன் முதலாகப்
  படித்தபோது ஏற்பட்டது.

  இது நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய முன்னால் குடியரசுத்தலைவர் திரு APJ அப்துல் கலாம் அவர்கள்,
  தன் கல்லூரி நாட்களில் சொன்னது தானா என்பது இன்னும் எனக்கு சந்தேகமாகவே உள்ளது.

  Forward செய்யப்பட்டுள்ள அந்த மெயிலில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

  ஏதோ ஓர் நம்பிக்கையின் பேரில் தான், நாம் இந்த மெயிலில் வந்த தகவலையும் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

  இந்த மெயில் எனக்கு 17.10.2011 அன்று Forward செய்யப்பட்டு கிடைக்கப்பெற்றது.

  ஆறு மாதங்கள் கழித்து, தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, அதுவும் மிகுந்த தயக்கத்துடன் தான் வெளியிட்டேன்.

  தாங்கள் சொல்வதை நானும் அப்படியே ஆமோதிக்கிறேன்.

  யார் யாரிடம் சொல்லியிருந்தாலும், அதில் உள்ள வாதங்கள் மட்டும் பாராட்டி மகிழக்கூடியதாக உள்ளன.

  நம்மையும் சற்றே சிந்திக்க வைக்கின்றன.

  தங்களின் மாறுபட்ட கருத்தினை நானும் மிகவும் வரவேற்று மகிழ்கிறேன். மிக்க நன்றி, ஸ்ரீராம்!

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !!

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 20. அருமையான மொழிபெயர்ப்புக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 21. 'இதை அப்துல் கலாம் சொல்லியிருந்தால் அவர் மேலிருக்கும் மதிப்பே போகும்' என்ற ரீதியில் எழுதியிருந்தக் காட்டமானப் பின்னூட்டத்தை நீக்கியிருந்தேன். அப்படியே விட்டிருக்கலாமோ? :-)

  ReplyDelete
 22. VGK அவர்களுக்கு வணக்கம்! நமக்கும் மேல் ஏதோ ஒன்று எல்லோரையும், எல்லாவற்றையும் இணைத்து இயக்கிக் கொண்டு இருக்கிறது. விண்வெளியில் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

  உங்கள் வாசகர்களை நன்கு சிந்திக்க வைத்து விட்டீர்கள். அவர்களது விமர்சனங்களே சொல்லுகின்றன.

  உங்கள் மொழி பெயர்ப்பு பணி தொடரட்டும்.

  ReplyDelete
 23. middleclassmadhavi said...
  //அருமையான மொழிபெயர்ப்புக்கு பாராட்டுக்கள்!//

  தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  [கூடுதல் போனஸ் நன்றிகளும் கூட, மேடம்]

  அன்புடன் vgk

  ReplyDelete
 24. அப்பாதுரை said...
  //'இதை அப்துல் கலாம் சொல்லியிருந்தால் அவர் மேலிருக்கும் மதிப்பே போகும்' என்ற ரீதியில் எழுதியிருந்தக் காட்டமானப் பின்னூட்டத்தை நீக்கியிருந்தேன். அப்படியே விட்டிருக்கலாமோ? :-)//

  எனக்கு Forward செய்யப்பட்ட மெயிலில் அதுபோன்ற தகவல் உள்ளது சார். அது உண்மையா பொய்யா என எனக்கு இப்போதும் சந்தேகமே உள்ளது.

  பட்டிமன்ற பேச்சுகள் போல இந்தக் கலந்துரையாடல் விவாதம் சூடாகவும் சுவையாகவும் இருப்பதாக நான் நினைத்ததால் தமிழாக்கம் செய்து, சற்றே தயங்கத்துடன் தான், நானே வெளியிட்டேன்.

  அதைத் தான் நான் நம் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் பதிலில் சொல்லியிருக்கிறேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்தும் நன்றி, சார்.

  ReplyDelete
 25. தி.தமிழ் இளங்கோ said...
  //VGK அவர்களுக்கு வணக்கம்! நமக்கும் மேல் ஏதோ ஒன்று எல்லோரையும், எல்லாவற்றையும் இணைத்து இயக்கிக் கொண்டு இருக்கிறது. விண்வெளியில் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

  உங்கள் வாசகர்களை நன்கு சிந்திக்க வைத்து விட்டீர்கள். அவர்களது விமர்சனங்களே சொல்லுகின்றன.

  உங்கள் மொழி பெயர்ப்பு பணி தொடரட்டும்.//

  ஐயா, தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

  தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.
  உற்சாகம் கொடுக்கின்றன.

  நன்றி, நன்றி, நன்றி.

  ReplyDelete
 26. அருமையான உரையாடல். பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 27. கோவை2தில்லி said...
  //அருமையான உரையாடல். பகிர்வுக்கு நன்றி சார்.//

  அன்பான வருகை + கருத்து இரண்டுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 28. எண்ணங்கள் என்பது எமது மூளையில் சேகரித்து வைத்திருக்கும் விடயங்களின் தொகுப்பே. நாம் கேள்விப்படாத வாசிக்காத பார்க்காத எது பற்றியாவது உங்களால் சொல்லமுடியுமா .இல்லவே இல்லை ஏனென்றால் அது எமதுமூளையில் இல்லை .சாவில் வாழ்வு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.இறப்பு வந்துவிட்டால் எல்லாமே முடிந்து விடும். முற்பிறப்பு வாழ்க்கையை எந்த வகையிலாவது உரிமை பாராட்ட யாராலும் முடியுமா
  விஞ்ஞானத்தில் எதையாவது காட்டிப் புரிய வைக்கின்றார்கள் . நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு கோயில்கள் சடங்குகள் பல கேளிக்கைகள் புரிவதுதான் சகிக்க முடியாமல் இருக்கின்றது .

  பதிவுக்கு நன்றி . இன்றுதான் அனைத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது

  ReplyDelete
 29. சந்திரகௌரி said...

  3 பகுதிக்ளுக்கும் அன்புடன் வ்ருகை தந்து தங்கள் கருத்துக்களைக் கூறி சிறப்பித்துள்ளர்தற்கு மிக்க நன்றி,மேடம். vgk

  ReplyDelete
 30. மூன்று பகுதிகளையும் படித்து இன்புற்றேன். நீங்கள் கூறியது போல் நானும் கேட்ட கதை தான். இருந்தும் தங்கள் எழுத்துகளில் படிக்கும் போது இன்னும் தனித்துவம் பெற்றதாகவே உணர்கிறேன். வணக்கங்கள்

  ReplyDelete
 31. seenuguru said...
  மூன்று பகுதிகளையும் படித்து இன்புற்றேன். நீங்கள் கூறியது போல் நானும் கேட்ட கதை தான். இருந்தும் தங்கள் எழுத்துகளில் படிக்கும் போது இன்னும் தனித்துவம் பெற்றதாகவே உணர்கிறேன். வணக்கங்கள்//

  மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
 32. இம்மடலை முன்பு ஆங்கிலத்தில் நான் படித்திருக்கிறேன். நன்கு மொழிபெயர்த்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 33. நம்பிக்கையே கடவுள் எனறு மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.மிகவும் நல்ல பதிவு.தமிழாக்கம் மிகச் சிறப்பாக இருக்கு சார். சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 34. Shakthiprabha said...
  //இம்மடலை முன்பு ஆங்கிலத்தில் நான் படித்திருக்கிறேன். நன்கு மொழி பெயர்த்துள்ளீர்கள். நன்றி.//

  அன்பான வருகைக்கும், மொழிபெயர்ப்பைப் பாராட்டியுள்ளதற்கும் மிக்க நன்றி, ஷக்தி.

  ReplyDelete
 35. RAMVI said...
  //நம்பிக்கையே கடவுள் எனறு மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.மிகவும் நல்ல பதிவு.தமிழாக்கம் மிகச் சிறப்பாக இருக்கு சார். சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி.//

  அன்பான வருகைக்கும், மொழிபெயர்ப்பைப் பாராட்டியுள்ளதற்கும் மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 36. நம்பிக்கை என்பதை மிக அழமான சிந்திக்க வைத்து பதிய வைத்த மாணவர் யாராக இருந்தாலும் (அப்துல் காலமா என்று சந்தேகம் உள்ளதால் ) என் மாநாசிக நன்றிகள் கோடி ....

  இதை இவ்வளவு சுவையுடன் மொழிபெயர்த்து கொடுத்த உங்களை எப்படி பாராட்டுவது ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா .......

  எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது ஐயா ...
  என் முதலாளிக்கும் அவரது சக வயது நண்பருக்கும் இடையே நடந்த உரையாடல் இது ..
  நண்பர் : ஏன்டா இப்படி ஐந்து நேரம் தொழுது,நோன்பு நோற்று ஒழுக்கமாக வாழ்த்து செத்த பிறகு கடவுள் இல்லைன்னு தெரிந்தால் என்ன செய்வீங்க ! மது மாது என்று எவ்வளவு விசயத்தை இழந்து இருப்போம் ...ஒன்னும் புரியலைப்பா

  முதலாளி : அப்படி கடவுள் இல்லைன்னு ஒருவேளை உனக்கு தெரிந்தால் அப்ப அது இழப்புன்னு ஒனக்கு நினைப்பு வருமா நீ மண்ணோட மண் ஆயிஇருப்பே ஒரு நினைப்பும் வராது ..ஆனால் இறைவன் இருந்து நீ ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்த்து இருந்தால் என்ன ஆகும் ? அப்ப தான் அது இழப்பு ! நம்பிக்கை என்பதை சிம்பிள் ஆக சொல்லுறேன் அவ்வளவுதான் கூடிய சீக்கிரம் திருந்த பாரு என்று சொன்னார் ...

  இதை அருகில் இருந்து பார்த்தேன் நான்!அந்த நாள் ஞாபகம் வந்தது !நன்றி !நீங்கள் கொடுத்ததும் அழமான அதே சமயம் எல்லோரும் ஏற்றுகொள்ளும் எளிய விளக்கமே ...

  if we go more philosophical ,it may not give perfect understanding!becoz its not their cup of tea !

  நம்பிக்கைக்கு கை கொடுத்த கைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி ...

  ReplyDelete
 37. ரியாஸ் அஹமது January 10, 2013 2:24 AM

  //நம்பிக்கை என்பதை மிக அழமான சிந்திக்க வைத்து பதிய வைத்த மாணவர் யாராக இருந்தாலும் (அப்துல் கலாமா என்று சந்தேகம் உள்ளதால்) என் மானஸீக நன்றிகள் கோடி ....

  இதை இவ்வளவு சுவையுடன் மொழிபெயர்த்து கொடுத்த உங்களை எப்படி பாராட்டுவது ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா .......

  நம்பிக்கைக்கு கை கொடுத்த கைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி.//

  தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

  தங்களின் முதலாளி அவரின் நண்பருக்குச் சொன்ன தகவலும், அறிவுரைகளும் நன்று. அதை தாங்கள் இங்கு பகிர்ந்து கொண்டதும் சிறப்பு. அதற்கும் என் நன்றிகள், நண்பரே.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 38. வலையுலகின் களஞ்சியமாய் உங்கள் பதிவுகள்!

  ReplyDelete
 39. வக்கீல்கள் இப்படிப் பேசித்தான் நீதியை நிலை நிறுத்துகிறார்களோ?

  ReplyDelete
 40. வாவ்!!!அப்துல்கலாம் த க்ரேட்!!!

  ReplyDelete
 41. அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா.
  அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.
  அந்த நம்பிக்கை என்பது மட்டுமே எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.

  நம்பிக்கையே வாழ்க்கை.

  ReplyDelete
 42. சுவையான, அருமையான பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 43. Replies
  1. பூந்தளிர் June 11, 2015 at 3:19 PM
   வாவ்!!!அப்துல்கலாம் த க்ரேட்!!!

   பூந்தளிர் July 24, 2015 at 4:14 PM
   :))) //

   :))))))))))))))))))))))))))))))))))))))))))))

   Delete
 44. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  நல்ல பதிவு.

  கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
  எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் ...!

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  ReplyDelete
 45. வாவ் சூப்பரோ சூப்பர். கலாம் ஐயாவுக்கு ஒரு ஜே போடலாமே

  ReplyDelete
  Replies
  1. mru October 20, 2015 at 1:57 PM

   //வாவ் சூப்பரோ சூப்பர். கலாம் ஐயாவுக்கு ஒரு ஜே போடலாமே//

   ஜே! ..... ஜே!! ..... ஜே!!! ..... ஜே!!! ..... :)

   மிக்க நன்றிம்மா.

   Delete
 46. நம்பிக்கையே கடவுள் என்பதை தெளிவான விவாதங்கள் மூலமாக சொன்னது அருமை கவாம்ஐயா வுக்கு நன்றி.

  ReplyDelete
 47. அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா.

  அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. /// சரியான விளக்கம்...முடிவு...

  ReplyDelete