என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

அக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை




24.04.2012 செவ்வாய்க்கிழமை


அக்ஷய த்ருதீயை
தண்ணீர் பந்தல்
தர்ம கட தானம்
உதக [ஜல] தானம்



அக்ஷயம் என்றால் குறைவற்றது என்று பொருள். மஹாபாரதத்தில் இதற்கு இரண்டு கதைகள் வருகின்றன.

வறுமையில் வாடிய குசேலர், தன் மனைவியின் விருப்பப்படி ஸ்ரீகிருஷ்ணரைக் காணச் செல்கிறார். 



தான் கொண்டுசென்ற ஒரு கைப்பிடி அவலை தன் நண்பனான ஸ்ரீகிருஷ்ணருக்கு எப்படிக் கொடுப்பது என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஸ்ரீகிருஷ்ணர் ”அக்ஷயம்” என்று சொல்லி அந்த அவலை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார். 

வீடு திரும்பிய குசேலர் வியப்படைகிறார். அவருடைய வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு செல்வச்செழுப்புடன் இருப்பதைக் கண்டு களிக்கிறார்.

அதேபோல பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு நாள் துர்வாஸ முனிவர் தன் சீடர்களுடன் அங்கு வருகை புரிகிறார். தாம் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், ஆற்றில் குளித்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வருவதாகவும் சொல்லிச் செல்கிறார்.

பாண்டவர்களோ ஏற்கனவே சாப்பிட்டு விட்டபடியால் சமையல் அறையில் உண்வேதும் மீதியில்லை. துர்வாஸ முனிவரின் கோபத்திற்கு அஞ்சிய திரெளபதி கண்ணனை வேண்டுகிறாள். 

கண்ணன் அவளுடைய நிலைக்கு மனமிறங்கி ஸூர்ய பகவான் மூலம் அக்ஷய பாத்திரத்தை அளித்தார்.  




பாத்திரத்தில் மீதியிருந்த ஒரே ஒரு பருக்கை சாதம், பன்மடங்காகப் பெருகி, உணவு வகைகள் யாவும் நிரம்பி வழிந்தன.  ஆனால் துர்வாஸ முனிவர் ஆற்றிலிருந்து வரும்போதே, தமக்குப் பசியாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டதாகக் கூறினார்.

வைசாகமாத [சித்திரை மாத] சுக்லபக்ஷ திருதீயை திதியானது அக்ஷயத்திருதீயை என அழைக்கப்படுகிறது. 

இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும். 

குறிப்பாக இன்று பகலில் [யாராவது 10 நபர்களுக்காவது] குடிக்க ஜலம் தருவதும், காய்ந்து போன ஐந்து செடி, கொடி, மரங்களுக்காவது ஜலம் விடுவதும் சாலச்சிறந்தது. 

இன்று க்ருதயுகம் ஆரம்பித்த நாள் என்பதால் [ஷண்ணவதி தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட] முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இன்று ஸமுத்திரத்தில் முறைப்படி ஸ்நானம் செய்வது என்பது நமது அனைத்து பாபங்களையும் போக்கி கங்கை முதலிய அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலனைப் பெற்றுத் தரும்.    

 தண்ணீர் பந்தல்
உதக [ஜல] தானம்.

நாம் கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் சேமித்த திரவியத்தை [பணம் பொருள் ஆகியவற்றை] மற்றவருக்குத் தகுந்த நேரத்தில் கொடுப்பதே தானம் எனப்படும். 

தானத்திலும் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது உதக தானம் என்னும் ஜல [தீர்த்த] தானம். அதுவும் கடும் கோடை காலமான சித்திரை, வைகாசி மாதங்களில், தண்ணீர் பந்தல் அமைத்து, தாகத்திற்கு ஜலம் தருவது மிகப்பெரிய புண்ணியம்.




இதற்கு ப்ரபா தாநம் [தண்ணீர் பந்தல்] எனப்பெயர். வசதியிருக்கும் ஒவ்வொருவரும் அவரவர் வஸிக்கும் தெருவிலோ அல்லது தன் வீட்டு வாசலிலோ ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்துக்கொண்டு, தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு குடிக்க ஜலம் தர வேண்டும். இது அனைத்துப் பாபங்களையும் போக்குவதுடன், நமது குழந்தைகளுக்கும் நன்மையைத்தரும்.



ஜாதி மத இன மொழி பேதமில்லாமல் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துமாறு என்னால் இந்தத் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எனது தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலிய முன்னோர்கள் ஸந்தோஷமடையட்டும் என்னும் பொருளுள்ள கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும்.

ப்ரபேயம் ஸர்வ ஸாமான்யா பூ4தேப்4ய: ப்ரதிபாதி3தா
அஸ்யா: ப்ரதா3நாத் பிதர: த்ருப்யந்து ஹி பிதாமஹா: 




தர்ம கட தானம்

தண்ணீர்பந்தல் அமைக்க செளகர்யப்படாதவர்கள் ஒருகுடம் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்து 

ஏஷ த4ர்ம க4டோ த3த்த: ப்ருஹ்ம விஷ்ணு சிவாத்மக:!
அஸ்ய ப்ரதா நாத் ஸகலா: மம ஸந்து மனோரதா2:

தர்ம கடம் என்கிற இந்த ஜலம் நிரம்பிய குடத்தை ப்ருஹ்ம விஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதியாக தானம் செய்கிறேன். இதனால் என் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும் என்று சொல்லி குடத்துடன் ஜலத்தை தானம் செய்து விட வேண்டும்.



 



இவ்வாறு சித்திரை மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடம் வீதம் ஜலத்துடன் தானம் செய்யலாம். முடியாவிட்டால் ஜன்ம [பிறந்த] நக்ஷத்திரத்தன்று ஒரு நாளாவது 12 அல்லது 6 அல்லது 3 குடங்கள் [மண் பானைகளோ அல்லது ப்ளாஸ்டிக் குடமானாலும் கூட பரவாயில்லை] ஜலத்துடன் ஏழைகளுக்குத் தரலாம். 



  



இதனால் மிகப்பெரிய புண்ணியமும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருளும் கிட்டும்.


  


[ஒரு 40 வருஷங்களுக்கு முன்பு கூட, ஊருக்கு ஊர் தெருவுக்குத்தெரு இத்தகைய தண்ணீர் பந்தல்கள் நிறைய அமைக்கப்பட்டு குடிதண்ணீரும், நீர் மோரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தன. 

இப்போதும் ஆங்காங்கே சிற்சில இடங்களில் இந்த தர்மங்கள் யாரோ ஒரு சிலராலும், ஒருசில இளைஞர் மன்றங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன என்பது சற்றே மகிழ்ச்சியளிக்கின்றது.  

முன்பெல்லாம் மனிதர்கள் தவிர கால்நடைகளான ஆடு மாடுகள், குதிரைகள் போன்றவைகள் தண்ணீர் அருந்த எங்கள் ஊரில் தெருவுக்குத்தெரு, தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் நீர் நிரப்பி வைத்திருப்பார்கள். நானே இவற்றை என் சிறு வயதில் பார்த்துள்ளேன். 

இப்போது அது போல எதுவும் காணப்படவில்லை.சாலைகள் விஸ்தரிப்புக்காக ஒருவேளை அவைகள் நாளடைவில் அகற்றப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.]


சுபம்


28 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. தர்மத்தை வலியுறுத்தும் ஒரு நன்னாளை விளம்பரதாரர்கள் வேறுவிதமாக தங்கம், வெள்ளி விற்பனையை அதிகரிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள் தற்போது.

    பதிலளிநீக்கு
  2. அக்‌ஷய திருதியைக்கு இவ்வளவு பெருமைகள் இருக்கு. ஆனா இப்போ எல்லாரையும் நகைக்கடைகளில் தான் பார்க்கமுடிகிரது. ஒரு பொட்டு தங்கமாவது வாங்கிடனும்னு நினைப்பு.

    பதிலளிநீக்கு
  3. அக்ஷயத்திருதீயை அன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும்.

    தானத்திருநாளை சிறப்பாக பதிந்ததற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. இன்று பகலில் [யாராவது 10 நபர்களுக்காவது] குடிக்க ஜலம் தருவதும், காய்ந்து போன ஐந்து செடி, கொடி, மரங்களுக்காவது ஜலம் விடுவதும் சாலச்சிறந்தது.

    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  5. ப்ரபேயம் ஸர்வ ஸாமான்யா பூ4தேப்4ய: ப்ரதிபாதி3தா அஸ்யா: ப்ரதா3நாத் பிதர: த்ருப்யந்து ஹி பிதாமஹா:

    பலன் தரும் அரிய ஸ்லோகப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும்.//

    ஆம் உண்மை, முன்னோர்கள் இந்த நல்ல நாளில் தானம்,தர்மம்செய்ய சொன்னதை தவறாக புரிந்து கொண்டு தங்களுக்கு பொருள் சேரும் நாளாக நினைத்துக் கொண்டு பொருள் வாங்குவதும், வியாபாரிகள் இந்த நாளை தங்களுக்கு சாதகமாய் விளம்பரம் செய்வதும் நடக்கிறது.

    நல்ல கருத்துக்களையும், பொறுத்தமான படங்களையும் அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்லோகங்களும், தகவல்களும் பயனுள்ளது. தானம் செய்ய வேண்டிய நாளை எல்லோரும் தவறாக எண்ணி தங்கமும், வெள்ளியும் வாங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்?

    இப்போதெல்லாம் மனிதர்களுக்கே தண்ணீர்ப் பந்தல் அமைக்க யோசிக்கிறார்கள்...விலங்குகளுக்கே எங்கே...?!!

    பதிலளிநீக்கு
  9. அட்சயத் திருதியைத்தான் இப்போது வியாபாரிகள் எப்படி உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்?

    இப்போதெல்லாம் மனிதர்களுக்கே தண்ணீர்ப் பந்தல் அமைக்க யோசிக்கிறார்கள்...விலங்குகளுக்கே எங்கே...?!!

    பதிலளிநீக்கு
  10. இப்படி நல்ல பல விஷயங்கள் இருக்க, அவற்றையெல்லாம் தனக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

    பழைய தில்லி பகுதிகளில் ஆங்காங்கே ”பியாவு” என்று எழுதி ஒரு கூடம் இருக்கும். அதன் உள்ளே ஒருவர் அமர்ந்து வருவோருக்கு எல்லாம் தண்ணீர் கொடுத்துக் கொண்டு இருப்பார்.

    நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. தானம் செய்ய சிறந்த நாள் அட்சயட் திருதியை அனைவரும் பின்பற்றுவோம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. அறியாதன பல அறிந்தேன்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. சிறந்த பதிவு .


    இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரியவந்துள்ளது .


    சரியான சமயத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இன்ஃப்ர்மெட்டிவ் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள

    திருமதிகள்:
    ===========

    01 ராமலக்ஷ்மி Madam அவர்கள்
    02 லக்ஷ்மி Madam அவர்கள்
    03 இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்
    04 கோமதி அரசு Madam அவர்கள்
    05 கோவை2தில்லை Madam அவர்கள்
    06 பவித்ரா நந்தகுமார் Madam அவர்கள்
    07 விஜி Madam அவர்கள்
    08 ஷக்தி ப்ரபா Madam அவர்கள்

    மற்றும்

    திருவாளர்கள்:
    =============

    01. ஸ்ரீராம் Sir அவர்கள்
    02. வெக்கட் நாகராஜ் Sir அவர்கள்
    03. ரமணி Sir அவர்கள்
    04. G, க்ணேஷ்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  16. மிகவும் நல்ல தகவல்...
    தானம் செய்து புண்ணியங்களை பெருக்குவதை விட்டு இன்று
    தங்கம் வாங்கி சொத்தைப்பெருக்க ஓடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  17. Usha Srikumar said...
    //மிகவும் நல்ல தகவல்...
    தானம் செய்து புண்ணியங்களை பெருக்குவதை விட்டு இன்று
    தங்கம் வாங்கி சொத்தைப்பெருக்க ஓடுகிறோம்!//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  18. அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங்களை அள்ளித்தந்திருக்கிறீர்கள்.

    இதுவே உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும்.

    பதிலளிநீக்கு
  19. VENKAT said...
    அக்ஷய த்ருதியைப் பற்றி இத்தனை விஷயங்களை அள்ளித்தந்திருக்கிறீர்கள்.

    இதுவே உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும்.//

    Thank you very much, Sir.

    பதிலளிநீக்கு
  20. தண்ணீர்ப் பந்தல் வைப்பதில் இவ்வளவு புண்ணியம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  21. அக்‌ஷய திருதி அன்று செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தானங்கள் [உதவிகள்] ஆகிய அனைத்தும் அக்ஷயமாக [குறைவற்ற] பலனைத்தரும்.//

    இதை அப்படியே தலைகீழாக மாற்றி ஒரு பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று ஏற்படுத்தியது யார்? வியாபார நோக்குடன் ஏதோ ஒரு நகைக் கடைக்காரர்தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

    மக்களிடையே சுய நல எண்ணத்தை அதிகப் படுத்தி உள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  22. இவ்வளவு அற்புதமான அட்சய திருதியை நாளை இப்ப இப்படி வியாபார மாக்கிடுடாங்களே.

    பதிலளிநீக்கு
  23. படங்கலா நல்லாகீது. எங்கூட்லகூட அதுபோல செப்பு கொடம். மண்ணு கொடம்லாகீது. அதுலதா தண்ணி பூடிச்சிகிடுவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 3:57 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //படங்கலா நல்லாகீது. எங்கூட்லகூட அதுபோல செப்பு கொடம். மண்ணு கொடம்லாகீது. அதுலதா தண்ணி பூடிச்சிகிடுவம்//

      அப்படியா, மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நல்லது. நம்முள் பெரும்பாலோர் வீடுகளில் இதுபோலத்தான் குடி தண்ணீர் பிடித்து சேமித்துக்கொள்வது உண்டு. இப்போ கொஞ்சம் நாகரீகம் வந்துவிட்டதாலும் சுத்தமான குடிநீர் வேண்டும் என்பதாலும், ஆரோக்யம் கருதியும் ஒருசில மாற்றங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

      நீக்கு
  24. கிருஷ்ண குசேலர் அவல் பரிவர்த்தனை பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் என்று பலவித விஷயங்கள் அடங்கிய அட்சய திருதியை நாளை இன்று வியாபாரமாக்கிட்டாங்களே.

    பதிலளிநீக்கு
  25. கொடுப்பது பன்மடங்காகத் திரும்பி வரும்...குசேலர் பெற்றது போல.

    பதிலளிநீக்கு
  26. அக்‌ஷய த்ருதியை பற்றிய அருமையான விளக்கங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு