About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 9, 2013

7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

2
ஸ்ரீராமஜயம்இரண்டு கருத்துக்கள்: 

ஒன்று: தகுதி உள்ளவன் மரியாதையுடன், முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக்கொடுத்தே ஆக வேண்டும். இன்னொன்று : தெரியாதவன் ஒருக்காலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது. 

தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்புறம் அவரிடமேதான் சரணாகதி என்று இருக்க வேண்டும்.

பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.

“நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” என்ற அகம்பாவம்தான், வெறும் படிப்பினால் உண்டாகும்.


oooooOoooooஒரு சிறிய சம்பவம்
ஒருவர் ஒரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அதை எடுத்து மசியல் செய்தாயிற்று. 

சாப்பிட வந்தவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லையே; எப்படி சாப்பிடுவார்கள் ? 

இது ஸ்ரீ மஹா பெரியவாளுக்குத் தெரிய வந்தது.

சமைத்தவர் கையைப் பிசைந்து கொண்டு, “எனக்குத் தெரிந்த வரையில் கழு நீரில் அலம்பி, புளிவிட்டுக் கொதிக்க வெச்சுத் தான் பண்ணினேன்.  அதுக்கெல்லாம் அது  மசியவில்லையே – அதான் மசியல் வீணாகி விட்டது!” என்றார்.


ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். 

அதன்படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும்படி அமைந்தது.

ஸ்ரீ மஹா பெரியவா வேத வேதாந்தம், பாஷ்யம் முதலியன தெரிந்து சொல்வது போலவே, எளிய சமையல் கலையும் தெரிந்து வைத்திருக்கும் சர்வக்ஞன் என்பதற்கு இது ஒரு சான்று.


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்


[இதன் தொடர்ச்சி 11.06.2013 செவ்வாய்க்கிழமை வெளியாகும்]


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

49 comments:

 1. பணிவு இல்லாத படிப்பு, சுவர் இல்லாத சித்திரம், நன்றி அய்யா

  ReplyDelete
 2. உதாரண சம்பவத்துடன் கருத்தும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. “நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” என்ற அகம்பாவம்தான், வெறும் படிப்பினால் உண்டாகும்.//

  கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, இதை நாம் அனைவரும் புரிந்து கொண்டால் போதும்.

  ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். //

  இந்த விஷயம் எத்தனை பெண்மணிகளுக்குத் தெரியுமோ? எனக்குத் தெரியவே தெரியாது.

  குருவே சரணம்

  ஒரு ஊரிலே ஒரு பனங்கொட்டை கிடந்ததாம். அதை அவர்கள் முதன் முறையாகப் பார்க்கிறார்களாம். அது என்னவென்று யாராலேயும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

  சரி சரி, நாம போய் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை கூப்பிடுவோம்ன்னு சொன்னாங்களாம்.

  அந்த ஏகாம்பரம் வந்து அப்படியும் இப்படியும் பார்த்தானாம். அவன் ‘அட இது தெரியாதா? இதுதான் கோணக்க மாணக்க குட்டி’ன்னு சொன்னானாம்.

  இப்படித்தான் சிலர் தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் காட்டிக்கொள்வார்கள்.

  திரு டணால் தங்கவேலு அவர்களின் பூரிக்கதையையும் நினைத்து சிரியுங்கள்.
  ReplyDelete
 4. குருட்டினை நீக்கும்
  குருவினை கொள்ளார்
  குருடும் குருடும்
  குருட்டாட்டமாடி
  குழியில் விழுந்தனரே-திருமூலர்.

  ReplyDelete
 5. Panivu is very important in life, very important lesson for our life. Thank you very much sir, for sharing it with us.

  ReplyDelete
 6. எல்லாம் நமக்குத் தெரியும் என்ற அகம்பாவம் வந்தவர்கள் யார் சொல்வதும் ஸரி என்று ஏற்றுக்கொள்ளாததுடன், அவர்கள் சொல்வதுதான் ஸரி என்ற பிடிவாதம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஸரியான குருவிடம், பணிவுடன் பயின்ரவர்களுக்கு
  அகம்பாவமே தெரியாது.நல்ல குருவும்,அமைந்து பணிவும் இருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்.கருணைக்கிழங்குடன் ஒரு பிடி அவரை இலை
  போடுவார்கள் ,காரல் நீங்க. வாழைத்தண்டு சேர்ப்பது இனி மஹாப்
  பெரியவாளின் அமுத வாக்காக எடுத்துக் கொள்கிறேன்.
  இதெல்லாம் தெரிந்து கொள்வதுகூட ஆசிகளாகவே நினைத்துக் கொள்கிறேன். நன்றி உங்களுக்கு. நல்லநல்ல அமுதங்கள்.

  ReplyDelete
 7. //”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். // - இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தொடரில் நிகழ்வுகளை சொல்வது சுவாரஸ்யமாக இருக்கிறது.

  ReplyDelete
 8. எல்லாம் தெரிந்தவன் எவரும் இல்லை! அருமையான உதாரணத்துடன் அழகான பதிவு! நன்றி!

  ReplyDelete
 9. இந்த விஷயமும், அவரை இலை போடுவதும் இன்றுதான் தெரிந்து கொண்டேன். இந்தப் பகிர்வுக்கு நன்றி. அநேகமா எல்லாமும் முடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 10. கருணைக்கிழங்கும் வாழைத்தண்டுமா.
  எவ்வளவு நல்ல விஷயம்!! பக்குவம் தெரிந்த மஹான் சொல்வது பக்குவமாகத்தான் இருக்கும்.நன்றி.

  ReplyDelete
 11. வாழ்க்கையில் பணிவு ரொம்ப முக்கியம்,அது இல்லாத வாழ்க்கை வீண்...சமையல் டிப்ஸ்க்கு மிக்க நன்றி.பெரியவருக்கு சமையல் கலையும் தெரிந்திருப்பது மிக ஆச்சர்யம்.

  ReplyDelete
 12. பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.

  அமுத மழைக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 13. சமீபத்தில் கல்கியில் பணிவே பத்தியம் என்றொரு மஹா பெரியவாளின் அருளுரை படித்தேன். படிப்பும், பணிவும் ஒருவரிடம் இருந்துவிட்டால் அதைவிட பாக்கியம் உண்டோ?

  கருணைக்கிழங்குடன் வாழைத்தண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும் என்ற சமையல் குறிப்பு வியப்பைக் கொடுத்தது!

  ReplyDelete
 14. தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
  பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.

  சிறப்பான அமுதமழை அனைவரும் வளம்பெறத் தொடரட்டும்
  இங்கே !!.......
  வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 15. பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.
  “நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” என்ற அகம்பாவம்தான், வெறும் படிப்பினால் உண்டாகும்
  What a word Sir.
  Reading about Periyava making me happy. Like to read more and more.
  viji

  ReplyDelete
 16. ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!”
  புதிய தகவல். கனதியான பதிவு.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. பணிவின் கருத்து அருமை ஐயா அதே போல் கருணைக் கிழங்கு மசியலில் வாழைத்தண்டை போடும் புது யுத்தியை கண்டு கொண்டேன் இதை மற்றவருக்கு சொல்கிறேன் நன்றிகள் ஐயா

  ReplyDelete
 18. \\பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.\\

  மிகவும் அற்புதமான அர்த்தம் பொதிந்த வாக்கியம்.

  \\ஸ்ரீ மஹா பெரியவா வேத வேதாந்தம், பாஷ்யம் முதலியன தெரிந்து சொல்வது போலவே, எளிய சமையல் கலையும் தெரிந்து வைத்திருக்கும் சர்வக்ஞன் என்பதற்கு இது ஒரு சான்று.\\

  வியக்கவைக்கும் செய்தி. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 19. நல்ல பகிர்வு.

  சமையல் கலையும் தெரிந்து வைத்திருந்தது ஆச்சரியம்தான்.

  ReplyDelete
 20. தலைப்பும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு.....

  வாழைத்தண்டும், கருணைக்கிழங்கும்..... நல்ல ஐடியா தான்....

  ReplyDelete
 22. விரைவில் வருகிறேன் கோபு அண்ணன், குறை நினைச்சிடாதீங்க:)..

  ReplyDelete
 23. பண்பூட்டும் பாடம்.

  ReplyDelete
 24. //தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.//தாரமும் குருவும் தலைவிதிப்படிதான். நல்லதொரு குரு அமைந்து விட்டால்,நல்வாழ்வே கிடைக்கும்.
  //பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.// மிகச்சிறந்ததொரு கருத்து.
  வாழைத்தண்டு கருணைக்கிழங்கினுள் போடுவது எனக்கும் புதியவிடயம்.

  ReplyDelete
 25. பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.

  “நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” என்ற அகம்பாவம்தான், வெறும் படிப்பினால் உண்டாகும்.///

  100 வீதம் கரீட்டு. இப்போ அதிக பணமிருப்பினும் ,இப்படியான எண்ணம் பலருக்கு வந்துவிடுகிறது.

  ReplyDelete
 26. //ammuluJune 10, 2013 at 11:22 PM
  //தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.//தாரமும் குருவும் தலைவிதிப்படிதான். நல்லதொரு குரு அமைந்து விட்டால்,நல்வாழ்வே கிடைக்கும்.//

  ஹா..ஹா..ஹா.. இது யூப்பரா இருக்கே .

  இப்போதான் எனக்கும் உறைச்சுது:)) இதுவும் சரிதானே கோபு அண்ணன்... குருவை நாம் அமைக்கிறோமா? இல்லை எம் விதிப்படியேதான் குரு அமைகிறாரா?:)).. நான் விதியை அதிகம் நம்புவேன்.

  ReplyDelete
 27. கரணைக்கிழங்கு கடிக்கும்:)). சந்தடி சாக்கில நானும் சொல்லுறேன் ஒரு சமையல் ரிப்ஸ்ஸ்:)... கருணைக்கிழங்கை தோல் சீவும்போது கைக்கு நிறைய தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு வெட்டினால் சுணைக்காது அல்லது இப்போ எல்லோரும் கிளவுஸ்தானே பாவிக்கிறோம் இப்படியான விஷயங்களுக்கு.

  ReplyDelete
 28. //தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்./ சிறப்பான கருத்து.

  நல்ல டிப்ஸ்.

  ReplyDelete
 29. // ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். //

  எனக்கு கருணைக் கிழங்கு மசியல், அதிலும் உறைப்பும் புளிப்புமாக இருந்தால் ரொம்பவே பிடிக்கும். சிலசமயம் வீட்டில் மடத்தில் செய்ததுபோல் செய்து விடுவார்கள். நாக்கில் லேசாக அரிக்கும். இப்போது பெரியவர் சொன்ன குறிப்பை வீட்டில் சொல்லப் போகிறேன். சுவையான சமையல் குறிப்பு.

  விட்டுப் போன பதிவையும் படிப்பதற்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டியமைக்கு நன்றி!

  ReplyDelete
 30. // ஒன்று: தகுதி உள்ளவன் மரியாதையுடன், முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக்கொடுத்தே ஆக வேண்டும். இன்னொன்று : தெரியாதவன் ஒருக்காலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது. //

  குருவின் தகுதி என்ன என்பதை குறித்து எளிமையான வார்த்தைகள்.  ReplyDelete
 31. படிப்புடன் பணிவும் இருந்தால் தான் படிப்பிற்கே மகத்துவம் என்பதை அழகாய் விளக்கினீர்கள்.
  கருனைகிழங்குடன் வாழைத்தண்டு வேகவைக்கும் டிப்ஸ் அறிந்து கொண்டேன்
  நன்றி.

  ReplyDelete
 32. சரணாகதி, பணிவு பற்றி அருமையான தத்துவம்.
  மனிதனுக்கு பணிவு வந்துவிட்டாலே மற்றையதெல்லாம் கூடவே வந்துவிடும்.

  பெரியவரின் சமையல் கலை பற்றிக் கூறிய விடயமும் அற்புதம்தான்.
  அனைத்துமே அருமை ஐயா! பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 33. //ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். // Will try next time...

  ReplyDelete
 34. கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” // புதிய தகவல்- அருமையான தொடர்! நன்றி ஐயா!

  ReplyDelete
 35. பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.//

  உண்மை . எவ்வளவு கற்றாலும் பணிவு இல்லை என்றால் அந்த படிப்பால் என்ன நன்மை!

  கருணை வேகும் போது தண்டை சேர்க்க சொல்வது புதிய செய்தி. சாப்பிடுபவர்கள் கஷ்டபடகூடாது என்று நினைக்கும்
  ஸ்ரீ மஹா பெரியவர் அவர்களின் கருணை கண்டு வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 36. அவசியமான கருத்துக்கள்,பெரியவர் தந்த டிப்சை செய்து பார்க்க வேண்டும்.(ஆனா எங்க ஊர்ல வாழைத்தண்டும் கிடைகக மாட்டிது,கருனைக் கிழங்கும் கிடைப்பதில்லையே.

  ReplyDelete
 37. கருணைக்கிழங்குடன் வாழைத்தண்டு நல்ல விஷயம்.

  ReplyDelete
 38. அன்பின் வை.கோ - கருணைக் கிழங்கு மசியலுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கொடுத்த் ஆலோசனை - அவருக்குத் தெரியாத ஒன்றுமே கிடையாதென நிரூபிக்கிறது - அமுத மழை அருமை - தொடர்ட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 39. சகல ஞானமும் பெற்றவர்தான் ஞானி.

  ReplyDelete
 40. பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதா? இப்படி கேள்வி கேட்டதே தப்புதான் அவர் மஹா பெரிய மஹான்தான். தன் ஒவ்வொரு செயலின் மூலமும் நிரூபித்து வந்திருக்கிறார்

  ReplyDelete
 41. ஹை குருசாமி அவங்களுக்கு சமயலு பத்திலா கூட தெரிஞ்சிருக்குதே.

  ReplyDelete
 42. கருணைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறுதுண்டு வாழைத்தண்டை வெட்டி போடு கசக்காது. ஆச்சாரியாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதா. இந்த நேரம் உஙகளையும் அப்படித்தான் நினைக்க தோணறது. உங்களுக்கும் தெரியாத விஷயம் என்று எதுவுமே கிடையாதே. ஆச்சார்யாளுடன் உங்களை கம்பேர் பண்றதா நினச்சுடாதேங்கொ. அது அபசாரம்

  ReplyDelete
 43. மனிதர்கள் பலரின் துன்பங்களையே கருணையுடன் துடைத்த மஹானுக்கு..கருணைக்கிழங்கையா சரிசெய்ய இயலாது?? அருமையான பதிவு...

  ReplyDelete
 44. ஸ்ரீ..பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்....
  பெரிப்பா மஹா பெரியவாளின் பதிவு லிங்க் கிடைச்சதிலேந்து ஆத்து காரியங்களை எல்லாம் வேக வேகமா பண்ணிட்டு இங்க படிக்க வந்துடறேன்.. நிறுத்த மனசே வர மாட்றது....

  ReplyDelete
  Replies
  1. happy October 23, 2016 at 9:43 AM

   வாம்மா, ஹாப்பி. வணக்கம்.

   //ஸ்ரீ..பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்....//

   ஆமாம். அவர் ஓர் நடமாடும் தெய்வமாக விளங்கியவர் ஆச்சே!

   //பெரிப்பா மஹா பெரியவாளின் பதிவு லிங்க் கிடைச்சதிலேந்து ஆத்து காரியங்களை எல்லாம் வேக வேகமா பண்ணிட்டு இங்க படிக்க வந்துடறேன்.. நிறுத்த மனசே வர மாட்றது....//

   மிகவும் சந்தோஷம்....டா கண்ணு. போகப்போக ஒவ்வொரு பதிவும் பெரியதாக இருக்கக்கூடும். தினமும் ஒன்று அல்லது இரண்டு வீதம் மட்டுமே உன்னால் படிக்க முடியும். நிறுத்தி நிதானமாக மனதில் வாங்கிக்கொண்டு சிரத்தையாக ஒவ்வொன்றையும் படித்துக்கொண்டே வா. 108 பதிவுகளும் படித்து முடித்ததும், ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியான ஆனந்தம் அளிக்கும் செய்திகளும் கிடைக்கும். என் அன்பான நல்வாழ்த்துகள்....டா செல்லம்.

   Delete
 45. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில்,
  தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.04.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1249439068524351

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 46. இந்த பதிவு, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=399004350602265

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete