About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 23, 2013

14] ஏன் இந்த அகங்காரம்?

2
ஸ்ரீராமஜயம்

ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம்.

அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.

நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். 

பணக்காரன் பணம் தருவதும், ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை.

பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு, மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும். 

ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.

தன் பெண்டாட்டியை, தன் சம்பாத்தியத்திற்கு உள்ளேயே, கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான், புருஷனுக்கு கெளரவம்.


oooooOoooooஅதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10  ..... தங்கள் நினைவுக்காக :  எதிரில் வைத்திருந்த பிரஸாதம் அப்படியே இருந்தது.  ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக்கொள்ளவில்லை. 

“அப்படீன்னா ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ இதை நீ பண்ணலேன்னு தெரியறது” என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத்திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு!  கண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார், “சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?”

“பதினோரு வேத பண்டிதர்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன், பெரியவா!” இது மிராசுதார். 

உடனே ஸ்வாமிகள், “வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ? நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே? என்று விடாப்பிடியாக விசாரித்தார். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு, ’பெரியவா ஏன் இப்படி துருவித்துருவி விசாரணை செய்கிறார்’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார், என்பதையும் புரிந்துகொண்டார்கள். 

மிராசுதார் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

”வாசிக்கிறேன், பெரியவா! திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாஸ கனபாடிகள், ராஜகோபால சிரெளதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்குட்டு வாத்யார் .... அப்புறம் என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், “எல்லாம் நல்ல அயனான  வேதவித்துக்களாகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே. அது சரி ... உன் லிஸ்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கான்னு பாரு”என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, “இருக்கு பெரியவா, இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!” என ஆச்சர்யத்தோடு பதிலளித்தார்.சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம், ’பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப்பற்றி தூண்டித் துருவித்துருவி விசாரிக்கிறார்’ என்ற வியப்பே தவிர,   ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், “பேஷ் ... பேஷ்” வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா? ரொம்ப நல்ல கார்யம். மஹா வேத வித்து. இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு [மூச்சடக்கி] சொல்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூறியதுதான் தாமதம்..... மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது. நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.  ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் ........... பொங்கி விட்டார் ஸ்வாமிகள். 


[பகுதி 4 of 10]


வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், “என்ன சொன்னே ...  என்ன சொன்னே .... நீ? பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ?

”தேபெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகளோட  யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்? 

நேத்திக்கு மஹாலிங்க ஸ்வாமி சந்நதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! 

நேத்திக்கு ஜப நேரத்திலே ...... கனபாடிகள் முடியாம கண் மூடி உட்கார்ந்திருந்த நேரத்திலே ........... நீ அவர்ட்ட போய் கடுமையாக “ஏங்காணும் ... காசு வாங்கல நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா?”  என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப்போனது.

கை-கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக ஸ்ரீமஹாபெரியவா கால்களில் விழுந்தார், நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். 

வாயப்பொத்திக்கொண்டு நடுக்கத்துடன், “தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா!” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை. 

“இரு ... இரு ... நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே? சொல்றேன் கேளு! எல்லோருக்கும் நீ தக்ஷிணை கொடுத்தியோள்யோ ... ஒவ்வொரு வைதீகாளுக்கும்  நீ எவ்வளவு தக்ஷிணை கொடுத்தே?” என்று கேட்டார். 

மிராசுதார், மென்று விழுங்கிய படியே, ”தலைக்குப்பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா” என்றார் ஈனஸ்வரத்தில்.   

ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. “எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப்பத்து ரூவாவா கொடுத்தே! எனக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார். 

மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை. 

தொடரும் 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 25.06.2013 செவ்வாய்க்கிழமை வெளியாகும்]என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
42 comments:

 1. .... பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.

  பொங்கவைத்த நிஷ்டூர வார்த்தைகள்
  அமிலமாக அரித்ததோ!1

  ReplyDelete
 2. ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ செய்யாத எதையும் ஜகத்குரு ஸ்வீகரிப்பதில் அர்த்தமில்லையே..!1

  ReplyDelete
 3. ''..ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம்....''
  அருமையாகச் சொல்லப் பட்டது.
  புனிதப் பதிவிற்கு மிக நன்றி.
  இறையாசி நிறையட்டும்.

  இனிய வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 4. எங்களுக்கும் மேலும் மேலும் வியப்பாக இருக்கிறது...

  நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா...

  ’அகங்காரம்’
  மமதை என்றும் சொல்வார்களே ஆணவத்தின் பிரதி. இதனால்தான் பல இன்னல்கள்.
  நல்ல தத்துவம். அருமை.

  தொடரும் நன்றாகவே இருக்கின்றது. தொடர்கிறேன்....
  பகிர்விற்கு நன்றி!

  வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 6. ஆ... ஒரு காலமும் இல்லாமல் இம்முறை மீ தானாக்கும் 1ஸ்ட் என ஓடி வந்தேன்ன்ன்.. இங்கின பார்த்தால்ல் “கியூவரிசையில்” ஆட்கள்:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மேலே இருக்கும் அல்லோருக்கும்:))...

  படிச்சுட்டு வாறேன் மிகுதிக்கு.

  ReplyDelete
 7. தெரியாதவர்கள்
  தெரிந்துகொள்ளட்டும்.
  தொடருங்கள்.

  ReplyDelete
 8. தன் பெண்டாட்டியை, தன் சம்பாத்தியத்திற்கு உள்ளேயே, கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான், புருஷனுக்கு கெளரவம்.///

  தத்துவம் அழகு. ஆனால் இதில் பெரும்பங்கு மனைவியிடமெல்லோ இருக்கு... கணவனின் உழைப்புக்கேற்ப மனைவிதானே நிர்வகிக்கோணும் குடும்பத்தை.

  ReplyDelete
 9. மகாபெரியவரின் அதிசய நிகழ்வுகள் அத்தனையுமே அதிசயம்தான்ன்ன்.. நன்றாக இருக்கு பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. //பணக்காரன் பணம் தருவதும், ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை.

  பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு, மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்.

  ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.//

  எத்தனை ஆழமுள்ள சொற்கள்!

  ReplyDelete
 11. இன்னும் கொஞ்சம் கூடுதலாய் பதியலாமே.. சஸ்பென்ஸ் தாங்கல !

  ReplyDelete
 12. ஏன் இந்த அஹங்காரம். ஸரியான கேள்வி. தான் எல்லாம் தெரிந்தவன், பணவசதியுள்ளவன், இவர்களிடம்தான் இது அதிகம் குடிபோகும். தர்மபுத்தியும், ஸமத்துவமும் எல்லோருக்கும்
  இருந்து விட்டால் உலகம் எப்படி இருக்கும். நினைக்கவே இனிக்கும்.
  மிகவும் அழகாகப் போய்க்கொண்டிருக்கிரது உங்களின் பதிவுகள்.
  இன்டர்நெட் ஸ்ட்ரைக் இங்கு. எப்படியோ படித்து விட்டேன். தொடருங்கள்.ஆசிகளும், அன்புடனும்

  ReplyDelete
 13. மும்மலத்தில் முதலாவதாயிற்றே ஆணவமெனும் அஹங்காரம்... காரம் வயிற்றுக்கு கெடுதல். இது மனசுக்கு. பெரியவா எத்தனை அற்புதமானவர்!!

  ReplyDelete
 14. //ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம்.

  அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.

  நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம்.

  பணக்காரன் பணம் தருவதும், ஏழை உழைப்பு தருவதும் பெரிய தியாகமில்லை.

  பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு, மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்.

  ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.

  .//எவ்வளவு உண்மையான வரிகள்,அருமை ஐயா!!

  ம்ம்ம் ஒடோடி வந்தால் மௌபடியும் சஸ்பென்ஸ் வைத்துட்டீங்களே...செவ்வாய் வரை காத்திருக்கனுமா??

  ReplyDelete
 15. பெரியவருக்குக் கோபம் வரலாமோ?

  ReplyDelete
 16. அஹங்காரம் எப்படி மனிதனை, மனதினை கடுக்கும் என்று சொல்லும் பதிவு. மகாபெரியவரின் கோபத்திற்கு ஆளான மிராசுதார் என்ன தான் செய்தார் மாட்டிக் கொண்ட பிறகு.
  அறிய ஆவல்....

  ReplyDelete
 17. மிராசு தன் தவறை உணர்ந்து வருந்தினாரா? அடுத்து வரும் பதிவில் அறிந்துகொள்கிறேன். ஆணவம் அழிவுக்கு வழிகோலும் என்று அழகாக உணர்த்திய பதிவு. நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 18. // அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது. //

  அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
  ஆர் இருள் உய்த்துவிடும்

  என்பது திருக்குறள் ( 121 )

  ReplyDelete
 19. அகங்காரம் மிராசுதாரரை அவ்வாறு நடக்கவைத்துவிட்டது. தவறை உணர வைத்து மன்னித்திருப்பார்பெரியவர். அடுத்து.......ஆவலுடன்...

  ReplyDelete
 20. அற்புதமான பதிவு; தங்கள் சொல்வளம் இன்னும் அற்புதம்; ஆன்மீகப்பணீ தொடர்ட்டும்.

  ReplyDelete
 21. அகங்காரத்தைக் குறித்த விளக்கங்கள் கொண்ட பகுதி படிக்கப் படிக்கச் சுவையூட்டுகிறது. பணத்தையே பிரதானமாக நினைக்க ஆரம்பித்ததுமே நம் நாட்டிலிருந்து நல்ல குணங்கள் விடைபெற ஆரம்பித்துவிட்டன. அதுவும் இப்போது பணத்தைத் துரத்துகிறாப்போல் ஒருபோதும் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்து படித்து வருகிறேன்.

  ReplyDelete
 22. அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.//

  உண்மைதான் அகங்காரம் நம் கண்ணை மறைக்கும் போது நல்லது,, கெட்டது, உயர்வு, தாழ்வு தெரியாது.
  பிராசுதாரின் தவறை உணர்த்தி அகங்காரம் என்ற கெட்ட குணத்தை மாற்றி இருப்பார் பெரியவர்.

  ReplyDelete
 23. ஆவலாய் படிக்க ஆரம்பித்தால் உடனே முடிந்து விடுகிற மாதிரி இருக்கு! சஸ்பென்ஸ்....

  ReplyDelete
 24. A very nice and interesting post....

  ReplyDelete
 25. அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.//
  // உண்மைதான் ! அருமையான தொடர்! பகிர்விற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 26. ஆழமான,சிந்திக்கவைக்கும் அமுத மழை.
  தொடர் கதை மிக அருமையாக இருக்கிறது.
  //பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ?// மிராசுதருக்கும் அகங்காரம் தானோ.அப்படி சொல்லவைத்தது.

  ReplyDelete
 27. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு, மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்.

  ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.//

  பணக்காரன் உழைக்கிறானோ இல்லையோ ஏழைகள் தனக்கு இருப்பதையும் எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

  அகங்காரம் - உள்ளுக்குள்ளே நாமளே காரத்தை உண்டாக்கிக்கொள்கிறோம்.

  மறுபடியும் சஸ்பென்சா.

  முடிவில் மிராசுதாரின் அகங்காரம் அழிந்திருக்கும், ஆணவம் ஒழிந்திருக்கும் மகா பெரியவாளின் அருளாலே.

  ReplyDelete
 28. வியப்பு கூடிக் கொண்டே போகிறது அய்யா. தொடருங்கள் தொடர்கிறோம்

  ReplyDelete
 29. மிராசுதார் இன்னும் என்ன செய்தார் எனத் தெரிந்து கொள்ளும் ஆவல்....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 30. //ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக காலணா நன்கொடை கொடுக்க வேண்டும். அதுதான் பெரிது.//

  இதற்கு என்ன அர்த்தம்?கூழும் மிளகாயும் சாப்பிடும் ஏழை நன்கொடை கொடுப்பது அவசியமா?

  இந்த பதிவிலே முடிவு தெரியும்னு பார்த்தேன்,ok going to next post.

  ReplyDelete
 31. பாவம் அந்த பெரியவருக்கு என்ன கொடுத்தாரோ மிராசுதாரர்...

  ReplyDelete
 32. அன்பின் வை.கோ - அகங்காரம் - வழக்கம் போல பதிவின் ஆரம்பத்தில் ஒரு விளக்கம் - அகங்காரம் பற்றிய விளக்கம் - அருமை அருமை - பெரியவா 15 நிமிடம் கண் மூடித் தியானித்து - நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்டு - மிராசுதாரரின் தவறுகளைச் சுட்டிக்காட்டியமை நன்று - விரட்டு விரட்டென்று மிராசுதாரரரை உண்டு இல்லை என ஆக்கி விட்டாரே - தொடர்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 33. பெரியவாளுக்கு ஞான திருஷ்டி இருந்திருக்கிறது.

  ReplyDelete
 34. உக்கார்ந்த இடத்திலேந்தே அனைத்து நிகழ்வுகளையும் ஞானதிருஷ்டியால் தெரிந்து கொள்ளும் பெரியவாளிடமா யயப்பிக்கமுடியும??

  ReplyDelete
 35. அங்கன நடந்த வெசயங்கலா இங்கன இவுகளுக்கு எப்பூடிதா தெரியவருதோ

  ReplyDelete
 36. மிராசுதாரின் ஆணவத்தை அடக்கி அவரை நல் வழியில் திருப்ப ஆச்சாரியா இவ்வளவு கடுமையா நடந்துக்கறாளோ. புரையோடிப்போன புண்ணை ஆபரேஷன் பண்ணித்தானே நீக்க வேண்டும்.

  ReplyDelete
 37. அட்டகாசம்..அந்த காலத்திலயே CCTV வச்சிருந்தாங்களா???
  ஆசைக்கும் வெறுப்பிற்கும் காரணம் அகங்காரம்.

  அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு, தாழ்வு தெரியாது.

  நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். ///தத்துவார்த்தமான வரிகள்.

  ReplyDelete
 38. அந்த வேத ப்ராமணருக்கு இந்த மிராசுதார் ஏதோ அவமானம் பண்ணி மரியாதைக்குறைவாக நடத்தி இருப்பார்னு நினைக்க தோணறது. இல்லைனா பெரியவாளுக்கு இவ்வளவு கோவம் வராது...

  ReplyDelete
  Replies
  1. happy October 28, 2016 at 8:40 AM

   வாம்மா .... ஹாப்பி. வணக்கம்.

   //அந்த வேத ப்ராமணருக்கு இந்த மிராசுதார் ஏதோ அவமானம் பண்ணி மரியாதைக்குறைவாக நடத்தி இருப்பார்னு நினைக்க தோணறது. இல்லைனா பெரியவாளுக்கு இவ்வளவு கோவம் வராது...//

   இருக்கலாம். இருக்கலாம். தொடர்ந்து படித்தால்தான் நமக்கும் பெரியவா ஏன் இப்படி இவ்வளவு கோபப் படுகிறார் என்பதும் நமக்குத் தெரியவரும்.

   Delete
 39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (21.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/402024320300268/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete