என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 5 ஜூன், 2013

5] கட்டறுத்த பசு

2
ஸ்ரீராமஜயம்



’கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது.




அந்தக்கயிறு தான் பாசம்.

இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே, சுற்றிச்சுற்றி வரும்படி செய்கிறது. 

‘மனம்’ என்கிற ’கத்தி’ அந்தக்கயிறைத் துண்டித்து ஜீவாத்மப்பசுவை பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து அருளுகிறது. 

அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.






நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். 





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

[இதன் தொடர்ச்சி 07.06.2013 வெள்ளிக்கிழமை வெளியாகும்]






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

47 கருத்துகள்:

  1. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். //

    ஆனால் இன்றைய கல்வி என்னவோ மதிப்பெண்களைத் தேடுவதிலேயே கழிந்து விடுகிறது.

    ஒரு பையன் +2 தேர்வில் 75% எடுத்திருந்தான். அவன் அம்மாவின் கவலை அந்தப் பையன் 75% எடுத்ததற்காக இல்லை. ஆனால் அவர்களுடைய உறவுக்காரப் பெண் 85% க்கு மேல் வாங்கிவிட்டதுதான் அவள் கவலை.

    பெற்றோரும் மதிப்பெண் தான் வாழ்க்கை என்று இல்லாமல் நற்குணங்களும் தம் பிள்ளைக்கு வேண்டும் என்று எண்ண வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே, சுற்றிச்சுற்றி வரும்படி செய்கிறது. //

    ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான தத்துவம் ஐயா...

    நிஜமான கல்வி - பெற்றோர்களும் முதலில் உணர வேண்டும்...நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஆசை பற்றிய நல்ல தத்துவம்.
    மிக அருமையானதும் அவசியமானதும்.

    நுணுக்கமான அழுத்தமான உண்மை.
    புரிந்து நடந்திட்டால் மேன்மை!

    ஆசையை அறுமின் ஆசையை அறுமின்
    ஈசனோடாயினும் ஆசையை அறுமின்!
    என்றே சொல்லப்பட்டிருக்கிறதே!

    எதுவாகிலும் வருவதை ஏற்று வாழ்வினை வாழ்ந்து முடித்திடலே சிறப்பு.
    கல்வி விளக்கமும் அருமை...
    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.

    அமுத மழைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. ’கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது.
    அந்தக்கயிறு தான் பாசம்.

    இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே, சுற்றிச்சுற்றி வரும்படி செய்கிறது.

    ‘மனம்’ என்கிற ’கத்தி’ அந்தக்கயிறைத் துண்டித்து ஜீவாத்மப்பசுவை பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து அருளுகிறது. //

    ஆனானப்பட்ட மகரிஷிகளையே ஆட்டி வைத்த பாசம். நம்மைப் போல் சாதாரண மனிதர்களால் வெல்ல முடியுமா?

    மானை வளர்த்து, மானாகப் பிறந்த முனிவர்:

    ஒருநாள் பரத மகாராசன் நதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறியவருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.
    பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம் அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது க்‌ஷேமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்யபோகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார்.


    பதிலளிநீக்கு
  7. கர்மா,பசு,பிறவி எல்லாம் வயதாக ஆக புரிந்த மாதிரி தோன்றுகிறதே
    தவிர இம்மாதிரி பதிவுகளைப் பார்க்கும் போது சிந்திக்கத் தோன்றுகிறது. பாசமோ,கர்மாவோ செய்து கொண்டேதான் இருக்கிரோம். சிந்திக்கத் தூண்டுகிறது உங்களின் பதிவு.நல்ல விஷயங்களைத் தெறிந்து கொள்கிறோம். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. .

    Nice post Sir. Waiting to read further.
    நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்
    Not only the teachers, parents and students must realise this. But how, when........
    viji


    பதிலளிநீக்கு
  9. நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு கர்மாவைப் பற்றிச் சிந்திப்பதற்கும் நம் பூர்வ கர்மாவே காரணம். சத்சங்கம் ஏற்படவேண்டும் என்று மஹாபெரிவா நினைத்துவிட்டார். உங்கள் பதிவுகளோடு கட்டிப் போட்டுவிட்டார்.நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பொருள் பொதிந்த பதிவு
    பாராட்டுக்கள்

    பதி -பசு-பாசம்

    பதி என்றால் தலைவன்,
    பரமேஸ்வரன் என்று பொருள்

    பசு என்றால் ஆன்மா
    பாசம் என்றால் தளை அல்லது
    கட்டு அல்லது கர்ம வினைகள் எனப்படும்


    உலகில் அனைத்து உயிர்களுக்கும்
    ஆன்மாவாய் விளங்குபவன்
    கண்ணன் என்னும் வாசுதேவன்

    அனைத்து ஆன்மாக்களுக்கும்
    தலைவனாய் விளங்குபவன் பரமேஸ்வரன்.

    அதனால்தான் அவரை பசுபதி
    என்று அழைக்கிறோம்.

    ஆன்மாக்களை துன்பத்தில்
    ஆழ்த்தும் பாச வலையிலிருந்து
    மீட்டு நமக்கு விடுதலையை தருபவன் இறைவன்.

    நாம் கர்ம வினைகளிலிருந்து
    விடுபட வேண்டும் என்றால்
    நமக்கு விதிக்கப்பட்ட
    கர்மங்களை செய்துதான்
    விடுதலை அடையமுடியும்.

    அதனால்தான் தன்னை
    உணர்ந்த ஞானிகளும் தங்கள் கர்மம் தீரும் வரை
    இந்த உலகில் மற்ற மனிதர்களைப்போல்
    அவர்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட
    கர்மங்களை செய்து வருவது. ,
    வந்தது கவனிக்கத்தக்கது.

    கர்ம வினைகள் நம்மை ஒட்டாமல்
    இருக்கவேண்டுமென்றால்
    தான் என்ற அகந்தையின்றி
    அவற்றை பலனை எதிர்பாராது
    ஈஸ்வரார்ப்பணமாக செய்யவேண்டும்.

    அவ்வாறு செய்துவந்தால்
    கர்மவினைகளும் நீங்கும்
    ஆன்ம விடுதலையும் சித்திக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் கர்ம வினைகளிலிருந்து
      விடுபட வேண்டும் என்றால்
      நமக்கு விதிக்கப்பட்ட
      கர்மங்களை செய்துதான்
      விடுதலை அடையமுடியும்.

      அதனால்தான் நம் முன்னோர்
      கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று
      கூறியிருக்கிறார்கள் என்று எண்ணுகின்றேன் அய்யா

      நீக்கு
  11. பதில்கள்
    1. மிக்க நன்றி அப்பாதுரை சார்
      ஜெயந்தி ரமணி
      manammanamviisumblogspot.in

      நீக்கு
  12. பசு-பசுபதி மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. பாசத்தை அறுத்துவிட்டால், பசுபதி ஆகிறான். அருமை!

    பதிலளிநீக்கு
  14. Very very interesting post, lovely deer story...
    Eager for the forthcoming post...
    Thank you very much for sharing sir...

    பதிலளிநீக்கு
  15. பதி – பசு – பாசம் (ஆணவம், கன்மம், மாயை). பதி என்பது இறைவன். பசு என்பது ஆன்மா. பாசம் என்பது ஆணவத்தாலும் கர்மவினையாலும் மாயையாலும் சூழப்பட்டது. ஆன்மாவானது பாசத்தில் கட்டுப்பட்டு இருக்கும் போது இறைவனை (பதியை) உணருவதில்லை. பாசத்தை விட்டு விலகும்போது இறைவனை உணருகிறது. “ சின் முத்திரை” சுருக்கமாக விளக்குவது இதனைத்தான்.

    இந்த பதிவில், பதி – பசு – பாசம் ஆகியவற்றிற்கான விளக்கம் சற்று வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  16. ஆஹா கோபு சார் ஆன்மீக கதையில் நீங்கள் இன்னொரு குரு வாழ்க ஆன்மா விடயம் தொடர்க! நன்றி அருமை விடயம் பகிர்வுக்கு!

    பதிலளிநீக்கு
  17. Padikka nandraaga irukkirathu...melum padikka thondrugirathu!

    பதிலளிநீக்கு
  18. ’கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது-/பாசக்கயிறு விளக்கம் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  19. Romba arumaya iruku... want to know near n more good things like this

    பதிலளிநீக்கு
  20. //நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும்// - நல்ல வழிகாட்டுதல்!

    பதிலளிநீக்கு
  21. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். //

    உணர்ந்த ஆசிரியர்கள் குறைவே. :)))))

    பதிலளிநீக்கு
  22. //நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். // மிக உண்மை,இதனை உணர்ந்தவர்கள் மிக குறைவே..

    ஜெ மாமி மான் கதையும் நன்றாக இருக்கு...

    பதிலளிநீக்கு
  23. // நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.
    //

    நல்ல கருத்து......

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. //மனம்’ என்கிற ’கத்தி’ அந்தக்கயிறைத் துண்டித்து ஜீவாத்மப்பசுவை பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து அருளுகிறது.
    அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.// சிறப்பானதொரு கருத்து.
    //நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.// சிந்தித்து செயல்படவேண்டிய விடயம்.
    சிந்தனைக்குரியபதிவு இன்றையது. நன்றிகள்.
    ஜெமாமியின் மான் கதையும் அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  25. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும்.//

    இது உண்மைதான்ன்.. வெளிநாடுகளில் இப்படித்தான் நடக்கிறது படிப்பை மட்டும் புகுத்தாமல்.. எத்தனையோ விஷயங்களை சேர்த்தே புகட்டுகின்றனர். ஆனா எங்கட ஏசியன் பெற்றோர்ருக்கு இது பிடிப்பதில்லை.. படிப்பு போதாது, ஹோம்வேர்க் போதாது என புலம்புகின்றனர். இங்குள்ள பிள்ளைகளுக்கு அதிகம் உலக அறிவைப் புகுத்தியே படிப்பிக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  26. //அப்போது அவன் பசுவே இல்லை. பசுபதியான சிவமே ஆகிறான்.
    //

    எங்கு பார்த்தாலும்.. அதிக ஞானம் பெற்றவர்கள் இதையேதான் சொல்கின்றனர். ஆனா நான் நினைப்பேன்ன், மனிதனாகப் பிறந்ததும் ஒரு மிகப்பெரிய கொடைதானே? அப்போ அப்பிறவியில் இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் எதுக்கு பந்த பாசத்தை அறுத்து, சிவனாக மாற முயற்சி செய்யோணும்?.

    நல்லவர்களாக இருப்போம், நல்லதையே செய்வோம், மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்போம்ம்... கடவுளுக்குப் பயந்து நடப்போம், இப்படித்தான் நினைப்பேன். மனித வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிஃப்ட் ஆம். இன்றிருப்போம் நாளை என்னாகுமோ ஆருக்கு தெரியும்?..

    ஏதோ மனவிருக்தியில்.. பந்தபாசத்தை அறுத்து மரக்கட்டைபோல சிலர் மாறிவிடுவதையும் பார்த்திருக்கிறென்ன்.. அவர்களை எல்லாம் போற்றுகிறார்களா எனில் இல்லை. இப்படி பற்றுப்பசமில்லாமல் மரமாக இருக்கிறாயே உனக்கு உணர்வே இல்லையா எனத்தான் திட்டுகிறார்கள்... எனக்கு ஒண்ணும் புரிவதில்லை.

    எழுதியதில் ஏதும் தப்பெனில், பூங்கொத்து தராமல் விட்டிடக்கூடா சொல்லிட்டேன்ன்ன்:)))

    பதிலளிநீக்கு
  27. //மனம்’ என்கிற ’கத்தி’ அந்தக்கயிறைத் துண்டித்து ஜீவாத்மப்பசுவை பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து அருளுகிறது. //

    என்னுடைய மனம் என்கிற கத்தி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை . அதைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
    திருமதி ஜெயந்தி ரமணி சொல்வது போல் மகரிஷிக்கு கிடைக்காதது எனக்கு கிடைத்து விடுமா என்ன?
    நல்லதொரு தத்துவம்.

    பதிலளிநீக்கு
  28. \\இவனுடைய ஆசை என்பதே தான் இப்படி பாசமாக அவனை சம்சார சக்கரத்திலேயே, சுற்றிச்சுற்றி வரும்படி செய்கிறது.\\

    என் மனமோ ஆவையும் அதன் கன்றையுமே சுற்றி சுற்றி வருகிறது. அருமையான படத்தோடு அற்புதமான தகவலையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  29. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும.// /
    உண்மையான வார்த்தை.
    பசுவும் கன்றும் அழகியபடம்.


    பதிலளிநீக்கு
  30. நல்ல கருத்துக்கள்.திருக்குறளில் பிறவிக் கடலை கடக்க என்று வருமே,இதில் பசுவுடன் தொடர்பு படுத்தியுள்ளதை முதன் முறை அறிந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  31. //நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். //

    அர்த்தமுள்ள வரிகள்.

    பதிலளிநீக்கு
  32. அன்பின் வை.கோ - கர்மா பசு பிறவி -தொடர்பின் விளக்கம் அருமை - படங்கள் அருமை - தொடரட்டும் அமுத மழை -0 நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


    பதிலளிநீக்கு
  33. நற்குணம் இல்லாவிட்டால் ஒருவன் மனிதனே அல்ல. அவனிடம் அறிவு இருந்து ஆகப்போவதென்ன?

    பதிலளிநீக்கு
  34. அற்புதமான கருத்துகள. ஆசை யாரை விட்டது? ஆசையில் சிக்கித் தானே உழன்று கொண்டிருக்கிறோம் பலரும்

    பதிலளிநீக்கு
  35. அப்பூடின்னா எதுக்குமே ஆசயே பட்டுகிட கூடாதோ.. ஜெயந்தி ஆண்டி கத சூப்பரு

    பதிலளிநீக்கு
  36. கர்மா என்னும் கயிறு பசு எனும் மனிதனை பிறவி என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கிறது. இதைவிட சிறப்பாக சொல்லி விட முடியாது.ஜயந்திரமணி மேடம் சொன்ன கதை ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  37. நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். //இன்றைய காலகட்டத்திற்கு பொறுத்தமான வரிகள்!!!

    பதிலளிநீக்கு
  38. //கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது.//

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க பெரிப்பா... உங்க பக்கம் (பதிவு)இப்பதானே வறேன்.. நிறைய நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது... ஜெயந்தி மாமி சொல்லி இருக்கும் கதை சூப்பரா இருக்கு...கமெண்ட்ஸ் எல்லாமே கலக்கலா இருக்கு...

    பதிலளிநீக்கு
  39. happy October 23, 2016 at 9:33 AM

    வாம்மா ... என் செல்லக்குழந்தாய், ஹாப்பி, வணக்கம்.

    **கர்மா’ என்கிற கயிறு ‘பசு’ என்னும் மனிதனை ‘பிறவி’ என்ற முளையோடு கட்டிப்போட்டிருக்கின்றது.**

    //ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க பெரிப்பா...//

    நானாக எதுவும் இதில் சொல்லவில்லை. இது எல்லாமே நான் எங்கோ படித்தது மட்டுமே.

    //உங்க பக்கம் (பதிவு) இப்பதானே வறேன்.. நிறைய நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியறது...//

    சந்தோஷம். இன்னும் என் பதிவுகள் பக்கம் மேலும் மேலும் நெருங்கி வா. நிறைய நிறைய நல்ல நல்ல விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியும். :)

    //ஜெயந்தி மாமி சொல்லி இருக்கும் கதை சூப்பரா இருக்கு...//

    எங்கட ஜெயா எது சொன்னாலும் அது சூப்பராகத்தான் இருக்கும். அவள் ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வந்தபோது, ஓர் மிகப் பெரிய சீர் லாடும், ஒரு பெரிய சீர் முறுக்கும், ஓர் பெரிய சீர் அதிரஸமும் தந்தாள். அந்த நெய் மணம் கமழ்ந்த அதிரஸம் உதிரு உதிராக சூப்பரோ சூப்பாராக இருந்தது. இன்னும், இன்றும் அதன் ருசி என் நாக்கில் அப்படியே படிந்துபோய் உள்ளது. :) உனக்கே தெரியுமே .... என் நாக்குதான் மிகவும் நீளமாச்சே :)))))

    இதோ இந்தப்பதிவுகளில் போய்ப் பாரு தெரியும்.

    http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
    பனை [பண] விசிறி !

    http://gopu1949.blogspot.in/2014/10/9.html
    நேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்

    //கமெண்ட்ஸ் எல்லாமே கலக்கலா இருக்கு...//

    மேற்படி நான் கொடுத்துள்ள இரண்டு இணைப்புகளிலும் உள்ள கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் படி. எல்லாமே கலக்கலாத்தான் இருக்கும். எங்கட ஜெயாவும் உன்னைப் போலவே ஆத்மார்த்தமான பிரியத்துடன் அடிக்கடி என்னைக் கலக்கிக்கொண்டு இருப்பவள்தான்.

    உன் அன்பு வருகைக்கு மிக்க நன்றிடா .... செல்லம்.

    பதிலளிநீக்கு
  40. இந்த பதிவு, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (11.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=397725900730110

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு