என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 7 ஜூன், 2013

6] ஆசையை அடக்க ஆசைப்படு.

2
ஸ்ரீராமஜயம்வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது. 

எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் மட்டும் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும். 

நாம் செய்யும் பாபத்திற்கு உடம்பு தண்டனை.

பாபத்திற்கு மூலம் கெட்டகாரியம்.

கெட்ட காரியத்திற்கு மூலம் ஆசை.

ஆகையால் நம் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணமாகிய ஆசையைப் போக்கினால் தான், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.

ஜாதியில் உயர்வுதாழ்வு நிச்சயமாக இல்லை. 

மஹான்களான அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் எந்த ஜாதியிலும் தான் தோன்றியிருக்கிறார்கள்.


சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது, எந்த காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது.


oooooOoooooஅன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.


05.06.2013 புதன்கிழமையன்று ஒரு நெருங்கிய சொந்தக்காரக் குழந்தையின் முதலாம் ஆண்டு ‘ஆயுஷ்ஹோமம்’ + 'காதுகுத்துதல்' நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 


அங்கு என்னிடம் பேசிக்கொண்டிருந்த உறவினர் ஒருவர், ”இந்தாங்கோ, இதைப் படித்துப் பாருங்கோ” என ஒரு ஆன்மிக மலரின் 17ம் பக்கத்தைச்  சுட்டிகாட்டினார். 


நானும் படித்தேன், மகிழ்ந்தேன். அவரிடம் நன்றிகூறி அந்த இதழைத் திரும்பக் கொடுக்கச்சென்றேன். ”அது உங்களிடம் தான் இருக்க வேண்டும், நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” எனக்கூறிவிட்டார். அதில் உள்ள செய்தியினை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்:’தினமலர்’ [மதுரை வெளியீடு]
ஆன்மிக மலர்’ 25.05.2013 பக்கம் 17ல் 
வெளியாகியுள்ளதோர் அதிஅற்புத நிகழ்ச்சி. 

-oOo-

”இதயக்கனி” 

இன்று வைகாசி அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக்கேளுங்கள்.

1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார்.

ஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர். 

ஸ்ரீ மஹாபெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார்? என்று விசாரி” என்றார்கள்.

ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.

“ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு தேதியும் குறித்தாயிற்று. 

நம் பெரியவாளிடம் குழந்தையைக் காண்பித்து, அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால், குழந்தை குணமாகி விடும் என நம்பி வந்துள்ளேன். ஒருவேளை என் குழந்தைக்கு ஆபத்து என்றால், ஆபரேஷன் செய்து அது இறப்பதைவிட, பெரியவரின் பாதார விந்தங்களை அது அடையட்டுமே என கருதுகிறேன்” என்றார்.

இந்த விஷயத்தை ஸ்ரீகண்டன் ஸ்ரீ மஹா பெரியவரிடம் தெரிவித்தார்.

ஸ்ரீ மஹா பெரியவா உடனே குழந்தையைக் கொண்டுவரும்படிச் சொன்னார்கள். அதை ஆசீர்வதித்தார்கள். 

அருகிலிருந்த சந்திரமெளலியிடம் ஓர் மாம்பழத்தைக் கொடுத்து, ”இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்குக் கொடுக்கச்சொல், சரியாகிவிடும். ஆபரேஷன் தேவையிராது” என்று சொல்லி அந்த பக்தரை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். அதன்பின், தன் குழந்தையை டாக்டர் குறிப்பிட்ட நாளில் அழைத்துச் சென்றார் அந்தக்குழந்தையின் தந்தை. டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, ஆச்சர்யம் அடைந்தனர். 

”இருதயத்தில் துவாரமா! இந்தக்குழந்தைக்கா!! இல்லையே!!!! ” என்றார்கள்.

“அன்று இருந்த துவாரம் இன்று மறைந்தது எப்படி?” என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டார்கள். நடந்ததை விளக்கினார் அந்தத்தந்தை.

டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பின், ஸ்ரீ மஹாபெரியவரிடம் வந்து நடந்ததைச்சொல்லி மகிழ்ச்சியுடன் ஆசிபெற்றுச் சென்றார்கள்.;

இதன்பின் 1994ல் மஹாபெரியவா முக்தியடைந்து விட்டார்கள்.  

2006ல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஒருவர் ஸ்ரீ மஹாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு [பிருந்தாவனத்திற்கு] வந்தார்.  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானம்
[பிருந்தாவனம்]


அங்கு பூஜை செய்துகொண்டிருந்த சந்திரமெளலியிடம் திருமணப்பத்திரிகை ஒன்றைக்கொடுத்து,  ”ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் அதை வைத்து, பிரஸாதம் தாருங்கள்” எனக்கேட்டார். 

சந்திரமெளலியும் அவருக்கு மாம்பழம், துளசி, கற்கண்டு கொடுத்தார், வந்தவர் கண்களில் கண்ணீர்.

“இவர் ஏன் அழுகின்றார்? ஒருவேளை புளிக்கிற மாம்பழத்தைக் கொடுத்து விட்டோம் என நினைத்து வருத்தப்படுகிறாரோ?” என சந்திரமெளலி நினைத்து, அவரிடமே காரணம் கேட்டார்.

“ஸ்வாமி, நினைவிருக்கிறதா? 20 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் தான் ஸ்ரீ மஹாபெரியவா, ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, இருதய நோயால் பாதிக்கப்பட்ட என் மகளுக்குக் கொடுக்கச்சொல்லி குணமாக்கினார். 

அந்தக் குழந்தைக்குத்தான் இப்போது திருமணம்.  இன்றும் அதே போல மாம்பழத்தை நீங்கள் தருகிறீர்கள். இதை மஹாபெரியவா மீண்டும் உங்கள் மூலம் தரும் பிரஸாதம் என்றே நினைக்கிறேன். குழந்தையை ஆசீர்வதியுங்கள்” என்றார்.   

வாழும் தெய்வமான ஸ்ரீ மஹாபெரியவர் நம் அனைவரது  மனதிலும் ‘இதயக்கனி’யாக இன்றும் விளங்குகிறார்.


oooooOooooo


அன்புடையீர்,

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.


இந்த என் தொடர்பதிவுக்கு அடிக்கடி வருகை தந்து தங்களின் மதிப்பு வாய்ந்த கருத்துக்களைப் பதிவு செய்து உற்சாகமூட்டிவரும் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.  

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பதிவுக்கும், ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும், வழக்கம்போல பதில் தரவேண்டும் என நான் என் மனதில் நினைத்தும்கூட, அடுத்தடுத்து இந்தத் தொடர்பதிவின் பகுதிகளை வடிவமைக்க வேண்டிய வேலைகளில் நான் ஈடுபட வேண்டியிருப்பதால், அதுபோல என்னால் இந்த ஒரு தொடருக்கு மட்டும், அவ்வப்போது பதில் அளிக்க இயலவில்லை.  

இந்தத்தொடர் மேலும் எவ்வளவு நாட்களுக்கு என்னால் தொடர்ந்து வெளியிடப் பிராப்தம் இருக்கும் என்பது எனக்கே தெரியாத விஷயமாக உள்ளது.  

ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவா அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ? இது விஷயத்தில் அவர்களின் அனுக்ரஹம் எனக்குத் தொடரும்வரை, இந்தத்தொடர் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மட்டும் இப்போது அடியேன் தங்களுக்குத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ அமுதம் சம்பந்தமான இந்த என் தொடரினைத் தொடர்ந்து பார்க்கவும், படிக்கவும், கருத்துச்சொல்லவும், அனுக்ரஹ அமுத மழையில் நனையவும், உண்மையிலேயே ஓர் கொடுப்பினை வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

அந்தக் கொடுப்பினை எல்லோருக்கும்,  எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாதுதான்.  அதனால் நான் யாரையும் ”இந்த என் பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தாருங்கள், கருத்துச்சொல்லுங்கள்” என கேட்டுக்கொள்ளவில்லை. விருப்பமுள்ளவர்கள், ருசியுள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து கருத்தளித்தால் மகிழ்ச்சியடைவேன்.

இருப்பினும் அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் மட்டும் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் அனைவருக்கும், இந்தத் தொடர்பதிவு முடிந்தபிறகு, தனியொரு பதிவினில் நன்றி கூறிக்கொள்வேன்.  என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்


[இதன் தொடர்ச்சி 09.06.2013 ஞாயிறு வெளியாகும்]
44 கருத்துகள்:

 1. ஜாதியில் உயர்வுதாழ்வு நிச்சயமாக இல்லை. //

  நூத்துக்கு நூறு உண்மை.

  ரொம்ப வருடங்களுக்கு முன் படித்தது.

  ஒரு சின்னப் பையன், அவர்கள் வீட்டு பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டானாம். வீட்டில் இருந்தவர்கள் பதறி ஓடி வந்து குழந்தையை தூக்கினார்களாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு ஒரு சின்ன அடி கூட படவில்லையாம். எப்படி சின்ன அடி கூட படவில்லை என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்களாம். அப்பொழுது அந்தக் குழந்தை அவர்களை வீட்டு பூஜை அறைக்கு அழைத்து வந்து மழலைக் குரலில், ’நான் கீழே விழுந்தப்போ இந்த தாத்தாதான் என்னை கீழ விழாம புடிச்சுண்டார்’ன்னு மகா பெரியவளோட படத்தை காமிச்சுதாம்.

  இன்றும் நம் கண்ணுக்குத் தெரியாமல் நெஞ்சுருகி வேண்டுபவர்களுக்கு நேரத்தில் வந்து அருள் செய்யும் மகா பெரியவாளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

  பதிலளிநீக்கு
 2. காஞ்சிப்பெரியவர் பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் கோபால் சார்! இப்போ உங்க தொடர்மூலமாக அவர் பற்றி அறியக் கிடைப்பது மகிழ்ச்சியே!

  தொடருங்கள் சார்!!

  பதிலளிநீக்கு
 3. அருமையான தொடர்... மிகவும் சிறப்பாக செல்கிறது... நண்பர் கொடுத்த தகவலும் அதிஅற்புத நிகழ்ச்சி... அதையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  இந்தத்தொடர் எவ்வித இடையூறு இல்லாமல் தொடர வேண்டும்... தொடர்வீர்கள்... கொடுப்பினை எங்களுக்கும் உண்டு... நன்றிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 4. மாம்பழ புராணம்

  மாம்பழத்திற்கு
  அவ்வளவு சக்தி உண்டு

  ஏனென்றால்
  அது நாரதருக்கு கிடைத்த கனி

  அவர் கையிலிருந்து
  பரமேஸ்வரன் கைக்கு போன கனி

  அவர் கையிலிருந்து
  அதை பெற்றிட போட்டி
  போட்டவர்கள் இரண்டு பேர்.

  ஆனால் அதுவோ
  வியாயகப்பெருமானின்
  கைக்குதான் போய் சேர்ந்தது

  முருகனுக்கு கிடைக்கவில்லை.
  அதனால் அவர் மனம் தளரவில்லை.
  பூமிக்கு வந்து நிறைய
  மாமரங்களை நட்டுவைத்தார்
  உலகில் உள்ள எல்லோருக்கும்
  அந்த மாங்கனிகள் கிடைத்திட.

  விநாயகரோ கேட்டதையெல்லாம்
  தரும் கற்பக விருட்ஷம் போல்
  கற்பக வினாயகராய்
  மாமரத்தடியில் வந்து
  அமர்ந்துகொண்டார்
  பக்தர்களுக்கு அருள் செய்ய.

  எனவே மாம்பழம்
  என்ன வேண்டுமானாலும் செய்யும்.!

  பாமரன் கையில் கிடைத்தால்
  அவன் வயிற்றுக்குள் போகும்.

  பெரியவா போன்ற மகான்களின்
  கையில் கிடைத்தால்
  அற்புதங்களை நிகழ்த்தும்.

  அருமையான நெஞ்சை
  நெகிழ வைக்கும் பதிவு
  நிறைய மாம்பழங்களை தாருங்கள்
  சுவைக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. மஹா பெரியவர் தொடர்பான அனுக்கிரக சம்பவங்கள் வார/மாத இதழ்களில் படிக்கும்போது உள்ளூர சிலிர்க்கும். எத்தனை முறை படித்தாலும் அலுப்பு தட்டாது. தெய்வீக ஆனந்தமே உண்டாகும். இப்போதும் இந்த மாம்பழ சமபவமும் படிக்கும் போது சிலிர்ப்பு. இன்னும் நிறைய தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் தொடரை தொடர்ந்து படித்து மகிழும் பாக்கியம் எல்லோருக்கும் அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 7. Aha!!!!!!!
  Ethu tanoo amutha malai?

  Praptham erunthal mattume PERIYAVA anugagam ketaikum.
  Enge entha posti padikavam angugragam vendum.
  Santhosham.
  waiting to read further.
  viji

  பதிலளிநீக்கு
 8. மாம்பழப் பிரஸாத நிகழ்ச்சி மெய்சிலிர்க்கிறது. தானாக விசாரித்து
  மாங்கனி கொடுத்ததும், அதே பிரஸாதமாக ,ஆசிகளாக தெய்வமாகியும் அளிப்பதென்பது ஸம்பந்தப்பட்டவர்களின் பாக்கியமே. நேராக தரிசனம் கொடுப்பதற்கும், இதற்கும் என்ன வித்தியாஸம். நம்பினவர்கள் கெடுவதில்லை.
  ஆசையை அடக்கினால் யாவும் தானாக அடங்கி நல்லதையே அடைவோம்.
  கருத்துகள் அழகானவை. உண்மையானதும் கூட. கடைபிடித்தால்
  நல்லது நடக்கும். படித்து நலன் பெறுவோம்.நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 9. சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது, எந்த காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது.

  அனுக்ரஹ அமுதமழைக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 10. அருமையான தொடர்... மிகவும் சிறப்பாக செல்கிறது... நண்பர் கொடுத்த தகவலும் அதிஅற்புத நிகழ்ச்சி... அதையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 11. பெரியவரின் அனுக்ரக நிகழ்வுகளை உங்கள் தொடர் மூலம் கண்டு வியந்தேன். அந்த அற்புதத்தை என்னால் உணர முடிந்தது. என் உறவுக்கார பெண்ணிற்கு திருமணம் தள்ளி கொண்டு போனதும், உங்க தொடரை படித்து அவங்க ஜாதகத்தை பெரியவரிடம் பூஜிக்க அனுப்பினேன். இத்தனை விரைவில் அந்த பெண்ணிற்கு திருமணம் கூடி வந்ததுள்ளது. அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டில் நிச்சயிக்க வருகிறார்கள் நிச்சயம் இது பெரியவரின் ஆசிதான்! அந்த பெண்ணின் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றியை கூறிக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 12. Mango as a prashad was simply superb, and thank you very much sir for sharing that article with us. Sometimes, certain incidents are so astonishing and very very surprising and this is one among them.
  Thank you very much sir for sharing it with all of us. Waiting for more of your post and interesting incidents and information.

  பதிலளிநீக்கு
 13. பெரியவர் மீது தாங்கள் வைத்து இருக்கும் அளவற்ற அன்பு என்னும் சக்தி. நீங்கள் எழுத நினைக்கும் வரை இந்த தொடரை எழுத வைக்கும்! மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. சிறு குழந்தைகளுக்கு இதயத்தில் சிறு ஓட்டை மிகச் சாதாரணமாக உருவாகி தானே அடைபடும் தன்மையது. இதற்கு heart murmur என்று சொல்வார்கள். ஏழு வயதுக்குள் இந்த நிலை அடங்கிவிடும்.. வெகு சிலரே இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பதின்ம வயதிலும் சிறு heart murmurடன் வளர்ந்தவர்களை நானறிவேன். மாம்பழம் சாப்பிடுவதால் குணமாகாது. மந்திர மாம்பழமாக இருந்தாலும் சரி.

  இதுபோன்ற கதைகள் அவரை மந்திரவாதியாகக் காட்டுமே தவிர ஞானியாகக் காட்டுவதாகத் தோன்றவில்லையே?

  பதிலளிநீக்கு
 15. My eyes swelled with tears when reading this amazing incident.Thank you Gopu for writing such noble and soul searching articles on PERIYAVAL.
  M J Raman (from Kolkata in daughter`s house)

  பதிலளிநீக்கு
 16. மாம்பழத்திற்கு இவ்வளவு பெரிய மகிமையா ?
  படித்து மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 17. இதயக்கனி கதை அற்புதம். அக்காலத்தில் இப்படி எல்லாம் நிகழ்ந்தது உண்மைதான்.. ஆனா இக்காலத்தில் எதுவும் நடக்குதில்லையே இப்படி...

  அழகிய தொடர் கோபு அண்ணன்... பின்னூடங்களுக்குப் பதில் போடாவிட்டாலும் பறவாயில்லை.. நீங்கள் தொடர்ந்து தொடரை முடியுங்கோ...

  பதிலளிநீக்கு
 18. ஐந்து வயதுக் குழந்தையின் கண்ணீர் ஸ்வமிகள் கை மாம்பழத்தினால் நிறை வானது.
  அந்தத் தந்தையின் வலி எத்துணை பெரிதாக இருக்கும் என்று யூகிக்க உணர முடிகிறது.

  முன்பே சொல்லி இருப்பேனோ என்னவோ 1979இல் மெட்ராஸ் ஐ என்பது வீட்டில் அனைவருக்கும் வந்துவிட்டது. என்னைத் தவிர. சின்ந்த் தம்பி கொடுத்த பெரியவா படம் ஒன்றே எங்கள் அறையில் வைத்துக் கொள்ளமுடியும்.
  சங்கரரின் தியானம் மூன்று குழந்தைகளையும் என் கணவரையும்,மாமியாரையும் கவனித்துக் கொள்ள தெம்பு கொடுத்தது.மாடிக்கும் கீழுக்கும் ஓடி ஓடி ட்ராப்ஸ் போடுவதோ, சாப்படை ஊட்டுவதோ இந்த உடலுக்கு உரம் கொடுத்தது மஹாபெரியவாளின் சரணங்களே.நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
 19. எல்லாமே படிச்சது தான் என்றாலும் மீண்டும் படிக்கச் சுவை.

  பதிலளிநீக்கு
 20. படிக்கும்போதே மாம்பழம் போல இனிக்கிறது...தொடருங்கள் ஐயா,படிக்க காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 21. வியப்போடு நெகிழவும் வைத்த சம்பவம். பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 22. இதயக்கனி..... படிக்கும்போதே மாம்பழம் போலவே பதிவும் இனித்தது.....

  பதிலளிநீக்கு
 23. //சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது, எந்த காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது// உண்மைதான்.
  பத்திரிகைச்செய்தியை பகிர்ந்தமையும் சிறப்பு. போகுமிடத்திலும் ஏதோவொரு வழியில் சில நிகழ்வுகள் இதுதொடர்பா உங்களுக்கு ஏற்படுகிறது. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 24. இதயக்கனியின் அற்புதம் படித்து நெகிழ்ந்துபோனோம்.

  "அழவுடன் ஆசைப்படு " துன்பம் இல்லை என அழகாக சொல்லி விட்டார்கள்..

  பதிலளிநீக்கு
 25. மஹா பெரியவரின் அற்புதங்களை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. இவையெல்லாம் என்னைப் போன்றவர்களுக்காகவே நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.இது கூட அவரின் லீலையும் விருப்பமுமாகிறதோ?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 26. அருமையான தொடர் ஐயா!நல்ல விடயங்களை இவ்வளவு சிறப்பாக கையடக்கமாக சுருக்கி செய்தியை மனதில் பதியும்படி அழகுற எழுதி பதிவுசெய்வதே பெரிய செயல்தான்.

  மிகவும் நல்லதே. வாழ்த்துக்கள், மனமார்ந்த நன்றிகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 27. அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த தொடர்! மஹா பெரியவாளின் அனுக்கிரஹத்தோடு தொடர்வீர்கள்! தங்களைத் தொடரும் பாக்கியத்தை எங்களுக்கும் அருள்வீர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 28. எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் மட்டும் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும். //

  ஆம், உண்மை. அனைவரும் இறைவனின் குழந்தைகள் தானே!

  அற்புதங்கள் நிறைந்த தொடரை படிக்கும் போது நம்பிக்கை என்றும் வீண் போகாது என்ற உண்மையை சொல்கிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. வியப்பான சம்பவங்கள்!!பகிர்ந்துள்ளவற்றை அறிந்துகொள்ள கொடுப்பனை வேண்டும்தான்.

  பதிலளிநீக்கு
 30. மனதை சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்...தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. அன்பின் வை.கோ - ஆசையை அடக்க ஆசைப்படு - பதிவு அருமை - எழுதத் துவங்கும் போதெல்லாம் தகவலகள் வருகின்றனவே | கொடுத்து வைத்தவரைய்யா - உலகில் ஒருவரும் ஆசைப்படக் கூடாதென ஆசைப்பட்டவன் புத்தன் - பத்தாம் திருமறையில் , திருமூலர் திரு மந்திரத்தில் , எட்டம் மந்திரத்தில், மூன்றாம் பாடல் இதோ :

  ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
  ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
  ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
  ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

  ஆசையை அடக்க ஆசைப்படு - அழகான தலைப்பு.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணை மழை பொழிந்து - இதயத்தில் துளையுடன் இருந்த பெண் சிறு மாம்பழத்துண்டினை உண்டு பூரண நலமடைந்த அற்புதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளினால் மட்டுமே நடத்த இயன்ற ஒன்று. அக்குழந்தை பெரியவளாகிய பின் - மணமுடிக்க - அவளின் தந்தை மடத்திற்கு வந்தபோது அதிஷ்டானத்துப் பிரசாதமாக மாம்பழமே கிடைத்தது எவ்வளவு பெரிய செயல். பதிவு படிக்கும் போது - உணரும் போது - மகிழும் போது நெகிழும் போது -மறுமொழிகள் இட இயலவில்லை. அமுத மழை தொடர்ட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 32. அன்பின் வை.கோ

  //அனுக்ரஹ அமுத மழையில் நனைய, உண்மையிலேயே ஓர் கொடுப்பினை வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். //

  உண்மை உண்மை - ஐயமே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 33. நம்பிக்கை பல ஜாலங்களைச் செய்ய வல்லது.

  பதிலளிநீக்கு
 34. ஜாதியில் உயர்வு தாழ்வு கிடையாதுதான் பெரியவாளின் அற்புத மகிமைகளை உங்க பதிவின் மூலம் நாங்களும் ரசிக்க கொடுத்து வச்சிருக்கோம் வேர என்ன சொல்ல

  பதிலளிநீக்கு
 35. நல்ல குருசாமிதா ஒரு மாம்பளத்த கொடுத்துபிட்டு அந்த கொளந்தயேட நோவே இல்லாம பண்ணிபோட்டாங்களே.

  பதிலளிநீக்கு
 36. சில கடவுளர்கள் கேட்ட பின்பு கொடுப்பார்கள் நம் காஞ்சி மஹானோ கேளாமலேயே அருளை அள்ளி வழங்கி விடுகிறார். பக்தர்களும் அதை மறக்காமல் நன்றி கூற வருவது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 37. மேலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ அமுதம் சம்பந்தமான இந்த என் தொடரினைத் தொடர்ந்து பார்க்கவும், படிக்கவும், கருத்துச்சொல்லவும், அனுக்ரஹ அமுத மழையில் நனையவும், உண்மையிலேயே ஓர் கொடுப்பினை வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். // உங்களால் அது எனக்கும் வாய்த்தது...நன்றி

  பதிலளிநீக்கு
 38. காஞ்சி ஸ்ரீ..ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அற்புதங்கள் படிக்க படிக்க உடம்பே புல்லரிக்குது...அந்த பெண் குழந்தை புண்ணியம் பண்ணின அதிர்ஷ்ட சாலி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy October 23, 2016 at 9:38 AM

   வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

   //காஞ்சி ஸ்ரீ..ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அற்புதங்கள் படிக்க படிக்க உடம்பே புல்லரிக்குது...//

   எதற்கும் கை வசம் ஒரு சீப்பு வைத்துக்கொண்டே படிக்கவும். (புல்)அரிக்கும் போது, அரிக்கும் இடங்களையெல்லாம் சீப்பால் வருடிக்கொண்டே படித்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். :)

   //அந்த பெண் குழந்தை புண்ணியம் பண்ணின அதிர்ஷ்ட சாலி..//

   ஆமாம். எங்கட ஹாப்பி போலவே, அந்தப் பெண் குழந்தையும் புண்ணியம் பண்ணின அதிர்ஷ்ட சாலிதான். :)))))

   அன்பான உன் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்....டா.

   நீக்கு
 39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.04.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1247963142005277

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (12.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/398225217346845/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு