என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 1 ஜூன், 2013

3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... !


2
ஸ்ரீராமஜயம்





”எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி” என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே ! 

தெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான் !! 

ஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது !!!

அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் !!!!

’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.  


 




அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திபடுத்த முடியும். 

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டான். 

அன்னம் போடுகிறபோது, ஒருத்தன் என்னதான் வயிறு முட்டமுட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு மேல் அவனால் சாப்பிடமுடியாது. “போதும் ... போதும்” என்று முழுமனதுடன் முழுத்திருப்தியாக சொல்லிவிடுவான். 





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

[இதன் தொடர்ச்சி 03.06.2013 திங்கட்கிழமை வெளியாகும்]





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


51 கருத்துகள்:

  1. திருப்தியான 'போதும்' உண்மை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. ”எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி” என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே !

    தெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான் !!

    ஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது !!!

    அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் !!!!

    ஆமாம். ‘அகம் பிரம்மாஸ்மி’ நம் உள்ளே (மனதுக்குள்) கடந்து சென்றால் கடவுளைப் பார்க்கலாம்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    நூத்துக்கு நூறு உண்மை.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை விளக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சி . பூமாரி பொழிய கர்ணன் சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டான் .அங்கு அவனுக்கு கடும் பசி ஏற்பட்டது . காரணம் புரியாமல் தவித்தான் .சுவர்க்கத்தில் பசி, தூக்கம்,தாகம் எதுவும் இருக்காது என்று கேள்விப்பட்டு இருந்து அவன் குழப்பம் மேலிட இந்திரனிடம் காரணம் வினவினான் . ஒரு நிமிடம் சிந்தித்து இந்திரன் கர்ணனிடம் அவன் ஆட்காட்டி விரலை உறிஞ்ச சொன்னான் . என்ன ஆச்சர்யம் . பசி பறந்து விட்டது. காரணத்தை விளக்கினான் இந்திரன் ." கர்ணா பூவுலகில் இருந்தமட்டும் நீ பொன்னும்,பொருளும்,பூமியும் தானம் செய்தாய் ; ஆனால் ஒரு முறை கூட அன்ன தானம் செய்ததில்லை .ஆனால் ஒரு முறை ஒரு வழிப்போக்கன் பசியால் துடித்த வண்ணம் அன்ன சத்திரத்தை அடைய வழி கேட்க உன் ஆட்காட்டி விரலால் வழியை சுட்டி காட்டினாய். அதன பலனாக ஆட்காட்டி விரலை உறிஞ்ச உன் பசி அடங்கியது !"

    அன்ன சத்திரத்திற்கு வழி காட்டியதிற்கே இப்பலன் என்றால் அன்னதானத்தின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.

    பகிர்விற்கு மிக்க நன்றி கோபு அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
    ’அமுத மழை ’ பகிர்வுக்கு மிக நன்றி. கல்கியில்
    தெய்வத்தின் குரல் என்று கொஞ்சம் படித்து இருக்கிறேன்.

    அன்னம் ஒன்றுதான் போதும் என்று சொல்ல வைக்கும் உண்மை.




    பதிலளிநீக்கு
  4. ஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது !!!
    அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் !!!!
    ’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.

    எத்தனை எளிமையாய் சொல்லி விட்டார்!

    பதிலளிநீக்கு
  5. எளிமையான சொற்களால் எத்தனை பெரிய உண்மையை தெளிவாகச் சொல்லிவிட்டார் மஹா பெரியவா. அதனால் தான் அவரை மஹா பெரியவா என்று சொல்கிறோம் இல்லையா?

    எத்தனை முறை படித்தாலும் பரவசமே!

    பதிலளிநீக்கு
  6. அருகில் இருக்கும் இறைவனை அடையாளம்காட்டிக் கொடுக்கும் இறைவன் மஹா பெரியவா.

    பதிலளிநீக்கு
  7. ’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.

    மஹா பெரியவாளின் அணுக்கமான வரிகள்..

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. எளிமையான செர்ற்கள், எவ்வளவு பெரிய உண்மை

    பதிலளிநீக்கு
  9. Yes. There is no equal Dhanam to Anna dhanam.
    So the person giving anna is called Anna dada........
    Nice post. Waiting to read further.
    viji

    பதிலளிநீக்கு
  10. உண்மை. அருமை. படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. பசியை போக்கும் அன்னதானம் சிறந்ததுதான். தானமாக கிடைத்தாலும் போதுமென்று சொல்வதும் அதுதான். சிறப்பான விஷயங்களை சொல்லி வருகிறீர்கள்.. தொடர்க!

    பதிலளிநீக்கு
  12. தேடலில் வீணாக்காமல் வாழ்வதில் மனதைச் செலுத்து எனும் எளிய நெறி.. யார் சொன்னாலும் ஏற்க வேண்டியது தான். யார் சொன்னாலும் நாம் ஏற்பதில்லை என்பது வேறு விஷயம் :)

    அன்னதானம் என்றைக்குமே நெஞ்சையள்ளும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  13. Nijamthaan...saappaadu mattumthaan oru alavukku mel yeduththukka mudiyaathu! Anna daanaththai vida sirantha daanam kidaiyaathu!

    Thanks for sharing, Gopalakrishnan sir!

    பதிலளிநீக்கு
  14. அன்னத்தால்தான்
    உடல் வளர்கிறது
    உடல் வளர்வதால்தான்
    உயிரும் வளர்கிறது
    உயிர் வளர்ந்தால்தான்
    உடலுக்குள் கோயில் கொண்டுள்ள
    உத்தமனை அறிந்து உய்ய முடியும்.

    அதனால்தான் அன்ன தானம்
    அனைத்து தானங்களிலும்
    உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    அதிலும் பசியால் துடிக்கும்
    ஒருஜீவனுக்கு வழங்கப்படும்
    உணவு பெறுபவனுக்கு
    உயிரை தருகிறது

    உணவை வழங்குபவனுக்கோ
    அது மன நிறைவை தருகிறது.

    உணவை பாழடிப்பவனின் வாழ்வு
    விரைவில் வறுமையில் சிக்கும்,
    அவனும் நோயில் வீழ்வான்.

    கோபத்தில் உணவை வீசி எறிபவன்
    விரைவில் ஒருவேளைக்கு கூட
    உணவின்றி அலைவான்.

    உபநிஷதம் அன்னத்தை பிரம்மம்
    என்று சொல்கிறது எனவே
    அதை மதித்து போற்றவேண்டும். .


    பதிலளிநீக்கு
  15. ஒரு பெரிய விஷயத்தினை இவ்வளவு சுலபமாய் விளக்குவது அவருக்கு மட்டுமே முடிந்த விஷயம்.....

    அன்னதானம் - அதில் கிடைக்கும் மனதிருப்தி வேறு எதில்.....

    பதிலளிநீக்கு
  16. enakku aanmeegathil athiga eedupaadu irunthathillai..aanal nalla seyalgalil kadavul iruppatai nambubavan..nanri iya...

    பதிலளிநீக்கு
  17. அன்ன தானம் செய்திடல், பெரியோர் சொல்வழி நிற்றல்.
    எவ்வளவு எளிமையாக அன்னதானத்தின் மகிமை. கடவுள் தூரத்தில்
    எங்கும் இல்லை.நினைக்க நினைக்க அருகிலேயே இருக்கிரார். யாராவது சொன்னால்தானே அப்படி நினைப்போம். அதுவும் மஹாப் பெரியவா சொன்னதை மனதால் நினைத்தாலே போதும். எண்ணங்களிலேயே கடவுளை அருகில் மனதால் பார்க்கலாம்.
    எவ்வளவு மகத்தான உண்மை. தேடிக்கிடைக்கும் பதிவுகள். அருமையாக, மனதிற்கு ஆரோக்யமாக இருக்கிரது.
    உள்ளத்தில் உள்ளார். உணரவேண்டும். அன்னதானம் செய்தல்.
    அருமையான காரியம்.

    பதிலளிநீக்கு
  18. ..ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு சொல்றாங்களே?

    பதிலளிநீக்கு
  19. வாழை இலையையும் சாப்பிடுவதையும் பார்க்க, ஊர்க் கலியாண வீடெல்லாம் கண்ணில வந்து போகுது. சின்னாட்களாக இருந்த காலத்தில் அன்ரியாட்களின் கல்யாணத்துக்கு.... கடைசியாக சனம் குறைந்து போய், கடும் சொந்த பந்தம் சாப்பிட உட்காரும் சபைக்கு, எம்மைப் போன்ற குட்டீஷைப் பரிமாற விடுவினம்.. என்னா ஒரு சந்தோசம் ஓடி ஓடிக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவோம்ம்...

    பதிலளிநீக்கு
  20. பதிவை விட்டுப் போட்டு எதையோ சொல்றாவே அதிரா எனச் சொல்வது கேட்குது.. சோட் அண்ட் சுவீட்டான பதிவு...

    அன்னதானம் பற்றிய கடசி 3 கருத்துக்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு


  21. [இதன் தொடர்ச்சி 03.06.2013 திங்கட்கிழமை வெளியாகும்]
    ///



    http://2.bp.blogspot.com/-R7amqQ2d9fA/UXYImlxCblI/AAAAAAAALbw/KdgazlehYrA/s1600/RunningCat.jpg

    பதிலளிநீக்கு
  22. அன்பின் வை.கோ - அருமையான அமுத மழை - போதும் என்ற குணமே பொன் செய்யும் மருந்து - தானங்களில் சிறந்த தானம் அன்ன தானம் - மஹாப் பெரியவரின் அமுத மழை தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. அன்னதானத்தின் மகத்துவத்தை அழகாக எடுத்துரைத்த பதிவு. தொடரும் அமுதமழையில் நனையக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. அன்னதானத்தை விடச் சிறந்தது வேறில்லை. உண்மை. பெரியவாளின் பொக்கிஷப் பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தானத்தில் சிறந்தது அன்னதானம். ஏன்? என்ற கேள்விக்கு விரிவான விடை தரும் பதிவு

    பதிலளிநீக்கு
  26. தானத்திலே சிறந்தது அன்னதானம்,அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதில் கிடைக்கும்,அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  27. You are absolutely true sir, annadhanam is the best in all the dhanams. Very lovely and excellent post. Thanks for sharing it with us sir...

    பதிலளிநீக்கு
  28. இந்தப் பின்னூட்டங்களிக்குப் பதில் சொல்லாமல், அவசர அவசரமாக அடுத்த பின்னூட்டம் போட்ட கோபு அண்ணனை, உடனடியாக பிரித்தானிய ஹை கோர்ட்டுக்கு வரும்படி:)...
    மேன்மைதங்கிய:)
    பெருமதிப்புக்குரிய:)
    அன்பும்.. பண்பும், பாசமும்.. நிறைந்த:)
    அதி புத்திசாலியான:)
    நீதிபதி அவர்கள்..(அது நாந்தேன்ன்ன்ன்:)))..

    ஆணையிடுகிறார்:))..

    பதிலளிநீக்கு
  29. அன்னதானத்தின் சிறப்பு எளிமையாக அருமையாக விளக்கப்பட்டுள்ளது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  30. பதிவு சின்னதாக இருந்தாலும் சொல்லும் விடயத்தில் அளப்பரியகருத்து பொதிந்திருக்கின்றது. அன்னதானம் பற்றிய கருத்து சிறப்பு. //அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் !!!//தலைப்பு மிகவும் பொருத்தமா இருக்கு.நன்றிகள் & வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. அன்னதானத்தின் தத்துவம் பற்றி அழகாக சொன்னீர்கள். அறிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  32. அதனால் தான் தானத்திலே சிறந்தது அன்ன தானம் ஆகுமோ?
    அருமையான தத்துவ விளக்கம்.

    பதிலளிநீக்கு
  33. அன்னதான மகிமை அத்தனை உண்மை.
    பெரியவாளின் பொக்கிஷப் பகிர்வுகள் அருமை!
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  34. //அன்னம் போடுகிறபோது, ஒருத்தன் என்னதான் வயிறு முட்டமுட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு மேல் அவனால் சாப்பிடமுடியாது. “போதும் ... போதும்” என்று முழுமனதுடன் முழுத்திருப்தியாக சொல்லிவிடுவான். // migachchari.
    thanks fr sharing

    பதிலளிநீக்கு
  35. சரிதான் போதுமென்று உணவு விசயத்தில் மட்டுமே சொல்ல முடியும்.(ஆனால் நிரம்பாத குழி இந்த வயிறு)

    பதிலளிநீக்கு
  36. அன்னதானத்தின் சிறப்பை விளக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு
  37. அன்பின் வை.கோ - மறு மொழி ஏற்கனவே 02.06.2013ல் போட்டிருக்கிறேன் - நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  38. அன்பின் வை.கோ - தங்களின் பதிவுகளீலேயே இதுதான் சிறிய பதிவோ - மிக்கச் சுருக்கமாக இரத்தினைச் சுருக்கமாக - எழுதி முடித்து விட்டீர்களே ! - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  39. ipozhuthu thaan (15 nimidangaLuku mun) idhanai (anna dhaana mahimai) 'aruL urai'yil padithen. inge meendum. nandri. jaya jaya shankara hara hara shankara.

    பதிலளிநீக்கு
  40. தானத்தில் சிறந்தது அன்னதானம்.

    பதிலளிநீக்கு
  41. ஆமாங்க அன்னதானத்தில் மட்டும் தான் வயிறும் மனதும் நிறைந்து போதும் என்று சொல்ல முடிகிறது

    பதிலளிநீக்கு
  42. ரொம்ப நெசமான வார்த்த.. அதுவும் கர்ண மகாராசா கைய காட்டினதுக்கே இன்னா ஒரு பலன் கெடச்சிச்சி

    பதிலளிநீக்கு
  43. அன்னதானத்தில்தான் வயிறும் மனசும் நிறைந்து போதும் என்று சொல்ல முடியும் உண்மைதான். ஆனா உங்க பதிவு எல்லாம் படித்து ரசிக்க ஆசை ஆசையா வரும் நாங்க போதும்னு சொல்லவே மாட்டோமே. இன்னும் இன்னும் வேணும்னு கேட்டுண்டே இருப்போமே.

    பதிலளிநீக்கு
  44. தானங்களில் சிறந்தது...நிதானம்...அடுத்த இடம் அன்னதானம்..மனிதன் திருப்தி அடையக்கூடிய ஒரே விஷயம்..இதுதான்!!!

    பதிலளிநீக்கு
  45. எல்லாரும் கமெண்ட்ஸ்ல சொன்னதையேதான் நானும் சொல்ல வேண்டி இருக்கு. அன்னதான போட்டோ ரொம்ப நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 22, 2016 at 3:31 PM

      வாம்மா குழந்தாய் .... ஹாப்பி, வணக்கம்.

      //எல்லாரும் கமெண்ட்ஸ்ல சொன்னதையேதான் நானும் சொல்ல வேண்டி இருக்கு. அன்னதான போட்டோ ரொம்ப நல்லா இருக்கு..//

      சந்தோஷம். போகப்போக ஒரு 10-20 பகுதிகளுக்கு மேல், ஒவ்வொரு பகுதியிலும் நிறைய விஷயங்கள் இடம் பெறும்.

      நீக்கு
  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (08.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/


    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு