About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, June 15, 2013

10] பேதமில்லாத ஞான நிலை

2
ஸ்ரீராமஜயம்
காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. 

ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இல்லை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை என்று வேதமே சொல்கிறது.

oooooOooooo


சுவையானதோர் நிகழ்வு

ஸ்ரீ மஹாபெரியவா இந்த சம்பவத்தில் PIN ஐ வைத்து [சும்மாப்] பின்னி விட்டார் என்று ஹாஸ்யமாகச் சொல்லத்தோன்றினாலும், என்னதொரு வியத்தகு PIN POINT கவனிப்பு! சிறு “பின்” னும் விளக்கத்திற்கு உதவும் எனக் காட்டிவிட்டார் இங்கே!

செகந்திராபாத்தில் ஸ்ரீ பெரியவா முகாம். அப்போது இரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தரிஸிக்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை .... என்னவென்றால் .....

“பெரியவாளுடைய அனுக்ரஹத்தாலே எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம்.  

ஆனா ... இந்த ஊர்லே பூஜை, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் இதெல்லாம் சரியாப்பண்ணி வைக்க, வேதம் படித்த சாஸ்திரிகள் இல்லை! 

ஒரே ஒருத்தர்தான் இருக்கிறார் ..... அவருக்கும் பண்ணி வைக்கும்போது, அவர் சொல்லும் மந்திரங்களுக்கு ... அவருக்கே அர்த்தம் தெரியலை ..... அர்த்தம் தெரியாம கர்மாக்கள் பண்றதை எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா .... இந்தக்காலத்துப் பசங்களாச்சே! 

அதான் ..... பெரியவா தயவுபண்ணி  .... மடத்துலேந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்திரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் கொடுக்கணும்” என்று பிரார்த்தனை பண்ணினார்கள்.

”ஒங்காத்துப் பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு........” என்று ஸ்ரீபெரியவா அவர்கள் ஆரம்பிக்கும் போது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக்கொண்டு, ஒரு போஸ்ட்மேன் வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்து விட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். 

அதில் 'PIN' என்று இருந்த இடத்தை, அந்த அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டி,“ 'PIN' ன்னு போட்டிருக்கே, அதன் அர்த்தம் தெரியுமா?”   

ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

"POSTAL INDEX NUMBER" என்று, தானே விளக்கமும் கொடுத்தார். 

சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப்பார்த்து, ”நீங்கள்ளாம் நெறையப் படிச்சு, பெரிய உத்யோகம் பார்க்கிறவா .....  ஆனா சாதாரணத் தபால்லே வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே .... அவ்வளவு ஏன்? PIN CODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதன் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம்.  

ஆனா ..... PIN CODE ன்னு போட்டிருக்கிற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா ..... அது சரியாப் போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போறா மாதிரி .... பண்ணி வைக்கிற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாவிட்டாலும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ ... அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்! 

அதுலே ஒங்களுக்கு எந்தவிதமான சந்தேஹமும் வேண்டாம். அதுனால இப்போ இருக்கிற புரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!” என்று சொல்லி கையைத்தூக்கி ஆசீர்வதித்தார். 

அதிகாரிகள் விக்கித்துப்போனார்கள். ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN ஐ வைத்தே, எப்பேர்ப்பட்ட பெரிய சந்தேஹத்தைப் போக்கிவிட்டார்.   


[ Thanks to Mr. Srinivasan and Mr. Vishnu Kumar for sharing this incident ]

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்[இதன் தொடர்ச்சி 17.06.2013 திங்கட்கிழமை வெளியாகும்]என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

55 comments:

 1. // எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ, அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்...! //

  PIN : பெரிய விசயம்... நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. //

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ஆனா ..... PIN CODE ன்னு போட்டிருக்கிற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா ..... அது சரியாப் போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போறா மாதிரி .... பண்ணி வைக்கிற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாவிட்டாலும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ ... அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்!

  என ஒரு அருமையான விளக்கம்

  ReplyDelete
 3. Sir, these posts are very interesting and informative. thanks for sharing.

  ReplyDelete
 4. உதாரணம் சொல்வதற்குக்கூட சட்டென ஒரு விஷயம் மனதில் தோன்றுவதற்கு முன் ப்ரத்யக்ஷ உண்மையாக பின் கோட் உதாரணம் முன் வந்து நிற்கிறது. எவ்வளவு எளிய ஆனால் எல்லோருக்குமே தெரியும் என்று சொல்ல முடியாத
  உதாரணம் முன் வந்து நிற்கிரது. இதுவும் அனுக்ரஹ அமுதம்தான். மனதில் ஆழமாக உணரும்படி ஒவ்வொன்றும்.
  நேபாலில் நிறைய வேதம் படித்த ப்ராமணர்கள் உண்டு. பசுபதி,கோவில் போனால், ஒரு சின்ன குறிப்பிட்ட ரூபாய் வாங்கிக் கொண்டு, நம்மிடமிருந்து கோதானம் வாங்கிக் கொண்ட மாதிரி
  மந்திரம் சொல்லி பண்ணி வைத்து விடுவார்கள்.
  கோவிலில் ருத்திரம் ஜபிப்பதற்கு, கொடுக்கும் பணத்தை ஸந்தோஷமாக வாங்கிக்கொண்டு அருமையாக செய்வார்கள். நமக்கும் நல்ல பின்கோட். நல்ல விஷயம். நன்றி உங்களுக்கு.
  அன்புடன் ஆசிகளும்  ReplyDelete
 5. ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN ஐ வைத்தே, எப்பேர்ப்பட்ட பெரிய சந்தேஹத்தைப் போக்கிவிட்டார்.

  அனுக்ரஹ அமுதமழைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. PIN ஐ வைத்து [சும்மாப்] பின்னி விட்டார் என்று ஹாஸ்யமாகச் சொல்லத்தோன்றினாலும், என்னதொரு வியத்தகு PIN POINT கவனிப்பு! சிறு “பின்” னும் விளக்கத்திற்கு உதவும் எனக் காட்டிவிட்டார் இங்கே!

  பின்னூட்டத்திற்கும் சுவை சேர்க்கும்
  பிரமாதமான ஆக்கம் ...!

  ReplyDelete
 7. அதில் 'PIN' என்று இருந்த இடத்தை, அந்த அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டி,“ 'PIN' ன்னு போட்டிருக்கே, அதன் அர்த்தம் தெரியுமா?”

  எத்தனை ஷார்ப்பான ,புத்திசாலித்தனமான கேள்வி ...!!

  ReplyDelete
 8. நேபாலில் நிறைய வேதம் படித்த ப்ராமணர்கள் உண்டு. பசுபதி,கோவில் போனால், ஒரு சின்ன குறிப்பிட்ட ரூபாய் வாங்கிக் கொண்டு, நம்மிடமிருந்து கோதானம் வாங்கிக் கொண்ட மாதிரி
  மந்திரம் சொல்லி பண்ணி வைத்து விடுவார்கள்.
  கோவிலில் ருத்திரம் ஜபிப்பதற்கு, கொடுக்கும் பணத்தை ஸந்தோஷமாக வாங்கிக்கொண்டு அருமையாக செய்வார்கள். நமக்கும் நல்ல பின்கோட்//

  உண்மைதான் அம்மா.. நேரில் சென்று ஆத்மார்த்தமாக உணர்ந்தோம் ...

  தம்பதி , குடும்பசமேதரர்களாக அமரவைத்து அத்தனை அற்புதமாக ருத்ராபிஷேகம் எல்லாம் செய்து , ருத்ராட்சமாலையை மூலவரிடமிருந்து எடுத்துவந்து என் கணவ்ரின் கழுத்தில் அணிவித்தபோது தெய்வீகமண்ம் கமழ்ந்த் அந்த க்ஷணம் எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை ..மிக அருமையாக ஆசீர்வதித்தார்கள்...

  ReplyDelete
 9. ஒவ்வொரு அருளமுதமும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது. PIN - ஐ வைத்து எத்தனை எளிமையாக ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டார். வாத்தியாருக்கு மந்திரங்களின் அர்த்தம் தெரியாது என்று சொல்லி, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் விடக்கூடாது என்றும் வாழைப்பழத்தின் Pin ஏற்றினார்போல சொல்லிவிட்டாரே!

  ReplyDelete
 10. ..// ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இல்லை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை என்று வேதமே சொல்கிறது.//


  பிரும்மம் என்ன என்பதை அறிய ஆவல் கொண்டவன் முதல் படியில் இருக்கிறான்.
  அந்த ஆவல் உந்த உந்த அந்த ஆவலிலே லயித்தவன் , பிரும்மத்தை அறிய முற்பட்டவன் , அதற்கான
  பிரயத்னங்களைச் செய்பவன் இரண்டாவது படியில் இருக்கிறான்.
  தனது தவத்தால் பிரும்மத்தை உணர்ந்தவன் மூன்றாவது படியில் இருக்கிறான்.

  பிரும்மத்தை பற்றிய அறிவைத் தீண்டாதவன் ( தொடாதவன் ) பிராம்ஹணன் இல்லை.

  அடுத்து, ஜிஞ்ஞாசா என்னும் தொடர் பிரகாரம் பிரும்மத்தை அறியும் எண்ணங்களில் ஊறி இருப்பவன்
  தன்னை சுற்றியுள்ள வற்றிலிருந்து விடுபட்டு விடுகிறான்.

  அஹம் பிரும்மாஸ்மி என்று ஒரு நிலை உணரப்படும் நிலையில் , எந்த பிரும்மம் தானோ தன் ஆத்மாவோ,
  அதே ஆத்மா தான் எல்லாவற்றிலும் பரிணமித்து இருக்கிறது , அதை அன்னியில் வேறொரு வஸ்து இருக்க இயலாது,
  இல்லை என்பதே உணர்ந்த நிலை.

  இந்த உணர்ந்த நிலை வருவதற்கு முன்னாலும் அவனுள் பிரும்மன் உள்ளான்.

  ஆக, பிரும்மத்தை உணராத நிலைக்கும் உணர்ந்த நிலைக்கும் உள்ள இடை நிலை, மனுஷ்யனுடைய பஞ்சேந்திரயங்களினால் வஸ்து வாசனைகளால் சூழப்பட்ட மனசு. இந்த மனம் என்பது உடைந்தால், எல்லாம்
  ஒன்றே என்ற நிலை வருகிறது. புத்தி டிஸ்கிரிமேனிடிங் சென்ஸ் தெளிவாகிறது.

  " தான்" என இதுகாறும் நினைத்தது, உண்மையில் என்ன என்று புரிகிறது. அப்போது தான் பிரும்மன் என்ற .
  உணர்வு ஏற்படுகிறது. அந்த நிலையில் தீண்டாதான் என்ற நிலை இருப்பதற்கு ஒரு வாய்ப்பே இல்லை.

  ஒரு கயிற்றினை பாம்பு என நினைப்பதற்கும், அதையே வெளிச்சம் வந்த உடன் கயிறு தான் என சித்தத்தில்
  அமைதி கொள்வதற்கும் உண்டான இடைவெளி தான் , தீண்டாதான், பிராம்மணன் என்பதற்கு இடையே உள்ள
  மன நிலை.

  வித் வேத் டு நோ. சமாஸம்.

  தான் என்பது தனது உடம்பு அல்ல, தனது ஐம்புலன்கள் அல்ல, தனது மனஸ் அல்ல. தனது புத்தி அல்ல.
  என்ற உணர்வு வரும்பொழுது, தீண்டாதவன் , தீண்டத்தக்கவன் என்ற பேதம் எவ்வாறு சாத்யம்?

  வெல் செட்.

  2. கர்மங்களைச் செய்யாதிருப்பவன் அதற்கான பல காரணங்களைக் கற்பிப்பது தன்னையே ஏமாற்றிக்கொள்வது
  போலத்தான்.

  கர்மாக்கள் செய்து தான் தீரவேண்டும் என்று மன நிலை கொண்டவன் புற சாமக்கிரியைகள் இல்லையே என்ற உணர்வு கொள்வதில்லை.

  ஒவ்வொரு கர்மாவுக்கும் சில புற சாமக்கிரியைகள் சொல்லப்பட்டு உள்ளன. அவை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்கும் , அவை செய்யப்படவேண்டிய தருணங்களில் வேறு தடைகள் வந்துவிடின் என்ன செய்வது என்பது பற்றியும் விரிவான விளக்கங்கள் சதாசார நூல்களில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

  ஒவ்வொரு கார்யத்திற்கும் அதன் மூலம் தெரிந்து தான் செய்யவேண்டும் என்றால் எந்த கார்யமும் நடக்காது.
  சென்ட்ரல் கவர்ன்மென்டில் வாங்கும் ஒவ்வொரு ஊழியருக்கும், பே கமிஷன் என்றால் என்ன, அது எப்படி புதிய
  ஊதியங்களை நிர்ணயம் செய்கிறது, டி.ஏ. இன்டெக்ஸ் என்பது என்ன ? அது எப்படி கன்ஸ்ட்ரக்ட் செய்யப்படுகிறது
  என்றெல்லாம் தெரிந்து தான் நாம் சம்பளம் வாங்குகிறோமா என்ன ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 11. இந்த நிகழ்வில் வெளிப்பட்ட
  முக்கியமான ஒரு சிந்தனையை
  யாரும் கவனிக்கவில்லை

  1.எல்லாசாஸ்திரங்களையும்
  கசடறக் கற்றவருக்குதான்
  அது பற்றி கருத்து கூற உரிமையுண்டு.
  அந்த அளவில் பெரியவா
  அவர்களுக்கு அந்த தகுதி உண்டு.

  ஆனால் அவர் அந்த ஊர்
  சாஸ்திரிகளை குறை கூறவில்லை.
  பரிகசிக்கவில்லை,
  அவரை பலபேர் முன்னிலையில்
  கூப்பிட்டு ஏன் மந்திரங்களை சரியாக
  உச்சரிக்கவில்லை என்று சொல்லவில்லை

  அதுதான் அவரின் பெருந்தன்மை.

  யார் மனதையும் புண்படுத்தக்கூடாது
  என்ற பரந்த பெரிய உள்ளம்.
  அந்த உயரிய பண்பை இங்கே நாம் கருத்தில் கொள்ளவேண்டியது.வாழ்க்கையில்
  கைக்கொள்ளவேண்டியது. முக்கியம்.

  இரண்டாவது சாஸ்திரிகள் மீது
  குறை கூறுபவர்கள் ஒன்றும்
  சாஸ்திரங்களை முழுவதுமாக
  கற்றவருமஅல்லர்
  பொருளுணர்ந்து
  அதை செய்பவர்களும் அல்லர்.
  ஏதோ அவருக்கு தட்சிணை கொடுக்கிறோம்
  என்ற மமதையின் காரணமாக என்று
  சாஸ்திரிகள் மீது பெரியவாளிடம்
  புகார் கூறியது சரியல்ல

  அப்படி அவர்களுக்குசாஸ்திர முறைப்படி
  எல்லாம் செய்ய வேண்டும்
  என்று நினைத்தால் ஏன்
  அங்குள்ள ஒருவரை மடத்திற்கு
  அனுப்பிவைத்து நன்றாக அவருக்கு
  நன்றாக் அனைத்தையும் கற்றுவைத்து
  அவரை தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள
  அவர்களில் ஒருவரை கூட
  இந்த ப்ரோஹித தொழிலுக்கு
  அர்ப்பணிக்க தயாரில்லை.
  ஒருவரை கூட தியாகம்
  செய்ய தயாரில்லை.

  பெரியவாளின் பதிலை
  கேட்ட பின்பும் இந்த சமூகம்
  இன்னும் திருந்தாதது வேதனைக்குரிய விஷயம் .
  இன்றும் அப்படிதான் ஒவ்வொருவரும்
  நடந்துகொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இவன் உண்மையைத்தான் எழுதுகிறான்
   இவன் எதற்கு பயப்படவேண்டும்?

   இவன் உண்மையை சொல்லுவதால்
   இவன் மீது பலருக்கு சினம் வரலாம்
   கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு
   கல்லை எறிகிரானே என்று.

   எல்லாவற்றையும் நேரில்
   பார்த்துவிட்டுத்தான்
   எழுதுகிறான் இவன்

   அதனால் சிலருக்கு இவனை பிடிப்பதில்லை.
   ஆனால் இவன் யாரையும் வெறுக்கமாட்டான்.

   இந்த சமூகம் சாத்திரங்களை
   பற்றி வாய் கிழிய பேசும்
   வயிறு நிறைந்தால் போதும் சாத்திரங்களை
   தம் இஷ்டம் போல் வளைக்கும்.

   இன்று சாத்திரங்களில் சொல்லியபடி
   அனைத்தையும் செய்து வைக்க
   புண்ணிய புருஷர்கள் சிலர் உள்ளனர்
   ஆனால் அவர்களின் வயிறு
   நிறைவது கிடையாது
   வறுமையில் வாடுகிறார்கள்.
   .
   அரைகுறைகள்தான் வசதியோடு
   வலம் வருகின்றன
   வளமோடு வாழ்கின்றன.
   மக்களும் இவர்களைத்தான்
   அதிகம் நாடுகிறார்கள். தங்கள் வேலைகளை
   சீக்கிரம் முடித்து தருகிறார்களே என்று.

   மக்களுக்கு சாத்திரங்கள்
   மீது பயம் வந்துள்ளது.
   அதை எப்படியாவது
   கடைபிடிக்க வேண்டும்
   என்ற எண்ணமும் உள்ளது.
   அவர்களுக்கும் ஒன்றும் தெரியாது.
   செய்து வைப்பவர்கள்பலருக்கும்
   ஒன்றும் தெரியாது.
   எப்படியோ இருவரின்
   எண்ணங்களும் நிறைவேறுகிறது.

   முக்கியமாக அபர காரியங்களுக்கு
   ப்ரோஹிதர்களை பிடிப்பதற்கு
   அபார சாதனை செய்ய வேண்டியுள்ளது

   அதற்க்கு ஆகும்செலவில்
   பலநூறு ரூபாய் கைபேசியில்
   அவரை கண்டு பிடிப்பதற்காகவே போகிறது.

   அனைத்தும் முடிவதற்குள்
   பல லட்சங்கள் காலி.
   இருப்பவர்கள் அள்ளி விடட்டும்.
   இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

   எரிகிற கொள்ளியில்
   பிடுங்கியவரை லாபம் என்று செயல்படும்
   சிலரைப் பார்த்து அனைத்து பிரிவினரும்
   இந்த விஷயத்தில் பெரும் துன்பம் அடைகிறார்கள்.
   என்பது மறுக்க முடியாத உண்மை.

   ஒருதடவை ஒரு ப்ரோஹிதர்
   அதற்கு ஒத்துக்கொண்டால்
   அவரை மற்ற விஷயங்களுக்கு அழைக்க மாட்டார்கள்.
   அவரை ஒதுக்கிவிடுவார்கள்.

   எல்லா நேரங்களை விட
   அந்த சோகமான தருணத்தில்
   நமக்கு வழிகாட்டும் அவருக்கு
   உரிய மரியாதை சமூகம் தரவேண்டும்.

   எத்தனையோ அமைப்புகள் உள்ளன.
   ஆனால் இந்த விஷயத்தில்
   யாராலும் ஒன்றும் செய்ய வில்லை.

   அங்கே காட்டில் எரிகிறது சிதை
   ஆனால் அதன் பின்
   மக்கள் படுகிறார்கள்வதை

   இதற்க்கெல்லாம் ஒரு நல்ல
   தீர்வு காணப்படவேண்டும்

   அனாவசியமான செலவுகள் தவிர்க்கப்பட்டு
   அந்த தொகையை நல்ல விஷயங்களுக்கு
   திருப்பி விடப்படவேண்டும்.

   மனதில் உள்ளதை கொட்டி விட்டேன்.
   ஜீரணிக்க முடிந்தால் ஜீரணியுங்கள்.

   இல்லையேல் ஏதாவது மாத்திரைகளை
   முழுங்கிவிட்டு அடுத்த
   விருந்துக்கு தயாராகுங்கள்

   Delete
 12. //வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது.//

  அழகாய்ச் சொல்லிவிட்டார். நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அதற்காக வேதத்தை விடமுடியாது
   வேதத்தை விட்டுவிட்டால் எதுவும் மிஞ்சாது
   வேதத்தில் எதையெல்லாம் விட சொல்லியிருக்கிறதோ அவைகளையெல்லாம் விட வேண்டுமே அல்லாது பெரியவாளின் கருத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

   Delete
 13. Very nice
  Really very sharp answer. I totally agree with Pattabi Raman Sirs words.
  Thanks for the post sir. Very nice.
  viji

  ReplyDelete
 14. // வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. //
  இதுதான் தன்னை மறந்த மெய்ஞான நிலை!

  ReplyDelete

 15. வணக்கம்!

  ஞான நிலைமேவின் வான நிலையுணா்ந்து
  கான தமிழ்மணக்கும் காண்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 16. ஒரு சின்ன உதாரணம் மூலம் சிறப்பான பதிலை தந்த பரமாச்சார்யாரின் சாதுர்யம் அருமை! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 17. குட்டிக் குட்டிக் கதைகளோடு பெரிய பெரிய தத்துவங்களை சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறீங்க.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹையோ நான் இன்னுமொரு பின்னூட்டம் கையோடயே போட்டிருந்தேனே... வந்து சேரவில்லையோ... இப்பத்தான் மீண்டும் வந்திருக்கிறேன்ன்.. சில வேளைகளில் ரைப் பண்ணி விட்டு செண்ட் பண்ணும் சமயம் ஆரும் அழைத்தால்ல் ஓடிவிடுவேன்ன்... பின்பு லேட்டானதும் எதையும் கவனிக்காமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிடுவேன்ன்... இப்படியும் ஆகி விடுகிறது.

   இக்கொம்பியூட்டர் நான் மட்டுமே பாவிப்பேன்ன்.. ஏனையோர் ஃபோன், ஐ பாட் , ஐபாட் மினி என பாவிப்பினம். அதனாலதான் எதுவும் தெரியாமல் போயிடுது.

   Delete
 18. சின்னஞ் சிறு செய்தியில் கூட எவ்வளவு பெரிய தத்துவம் அய்யா.
  பகிர்வுக்கு நன்றி அய்யா. வணக்கம்

  ReplyDelete
 19. எளிமையான தத்துவம்: நீ செய்ய வேண்டியதை செய்.
  பல நேரம் நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல், தொடர்புடைய பிறரின் திறமைகளையும் செயல்பாடுகளையும் நம் செயலுக்கு முன்பே குற்றம் காண்கிறோம்.

  பட்டாபிராமன் சொன்னது போல் இங்கே கவனிக்க வேண்டியது: பெரியவர் யாரையும் குற்றம் சொல்லவில்லை.

  சுப்புத்தாத்தாவின் பின்னூட்டம் வழக்கம் போல் profound.

  ReplyDelete
 20. Thank you sir very nice post. A very big issue was easily explained with a simple PIN, which is very interesting. Thank you very much sir for sharing with us....
  Waiting for the upcoming post, I have learnt a lot after having followed you and reading all your post. Thank you very much for everthing sir....

  ReplyDelete
 21. சிறிய சிறிய செய்திதான் ஆனால் பொதிந்திருக்கும் விடயங்களோ மிகப் பெரியது.
  அருமைதான் ஐயா! வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்!

  ReplyDelete
 22. PIN ஐ வைத்து மிகப் பெரிய தத்துவத்தை மிக மிக எளிமையாக அவர் உணர்த்திஇருக்கிறார்.
  மகா பெரியவரின் அற்புதங்களை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 23. சாதாரணமான விஷயத்தினைக் கொண்டே மிகப் பெரிய விஷயங்களை சுலபமாகப் புரிய வைப்பதில் அவருக்கு ஈடு இல்லை....


  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 24. pin விளக்கம் அருமை.
  பொக்கிசமான பதிவு. சுவைத்தேன் .
  இறை ஆசி நிறையட்டும்.

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ ... அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்//வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது. //

  தாயிற் சிறந்த கோயிலுமில்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! நல்லதொரு பதிவு! நன்றி ஐயா!  ReplyDelete
 26. சுப்பு சார். ஸ்ரீ பட்டாபிராமன் இருவரது கருத்துகளுக்கும் மிக நன்றி.

  ReplyDelete
  Replies
  1. திரு வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 27. pin ஐ வைத்து சொன்ன நிகழ்வு நல்லதொரு விளக்கம்!
  அருமையாக தொடர்கிறீர்கள்...

  //காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். //
  அருமையான விளக்கம்!

  ReplyDelete
 28. அழகான சிந்தனைக்குரிய அமுதமழை. மகாபெரியவருடனான சின்ன சின்னச் சம்பவங்களை அழகாகதொகுத்துத் தருகிறீங்க. நன்றி. அந்த அதிகாரிகளுக்கு ஒரு" பின்" னினை வைத்து அவர்களுக்கு அருமையாக புரியவைத்துள்ளார்.

  ReplyDelete
 29. அற்புதமாக விளக்கம் கொடுத்து விட்டார்.

  ReplyDelete
 30. யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ... எப்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படுமோ அப்படிச் சொல்லிப் புரியவைத்தப் மகாபெரியவரின் மகிமையே மகிமை. கடமையைச் சிரத்தையுடன் செய்தால் சிரமமின்றிப் பலனை அடையலாம் என்பதை அழகாக விளக்கிய பதிவு. நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 31. iyyavin pathivugalai padikka neram kidaippathillai..mannikkavum..pallikkodam aarambithu vittadhal palli patriya sinthanaiyil blog pakkam adikkadi varamudivathillai..varumpothu ungal pathivugalai suvaikkiren..

  ReplyDelete
 32. உங்கள் பதிவுகளுக்குப் பின் வரும் பின்னூட்டங்களில் கூட மிக அழகாய் கருத்துக்கள்..

  ReplyDelete
 33. பெரிய விசயத்தை ஒரு அழகான உவமையோடு சொல்லி விளக்கிட்டார் பெரியவர்..அருமையான விளக்கம்!!

  ReplyDelete
 34. சின்ன விஷயத்தில் எவ்வளவு பெரிய விளக்கம். அருமை..

  ReplyDelete
 35. சொந்த ஆசைக்கு என்றில்லாமல் உலக நலனுக்காக காரியங்களைப் பண்ண ஆரம்பியுங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. //

  நன்றாக சொன்னீர்கள்.
  மக்கள் சேவையே மகேசன் சேவை அல்லவா!

  //ஆனா ..... PIN CODE ன்னு போட்டிருக்கிற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா ..... அது சரியாப் போய்ச்சேர வேண்டிய எடத்துக்குப் போறா மாதிரி .... பண்ணி வைக்கிற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாவிட்டாலும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ ... அதைச் சரியாச்சொன்னா, அதுக்குண்டான பலனை அது கொடுக்கும்!/

  அருமையான எளிமையான விளக்கம்.
  பகிர்வுக்கு மிக மிக நன்றி.
  வாழ்த்துக்கள்.  ReplyDelete
 36. எனக்கும் இப்பதான் pin ன் விரிவாக்கம் தெரியவந்தது.எவ்வளவு அருமையான எதார்த்தம்,நடைமுறை உதாரணத்துடனான சமாதாணம்.

  ReplyDelete
 37. எந்த கர்மாவுக்கு என்ன மந்திரம் சொல்லமோ அதைச் சொன்னால் அதற்குண்டான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

  PIN விளக்கம் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 38. அன்பின் வை.கோ - பேதமில்லாத ஞான நிலை - வேதம் வேண்டாம். கோயில் வேண்டாம் என்பது தான் மிகவும் உச்ச நிலையில் வேதமே சொல்வது.

  ஞானம் வந்த நிலையில் பேதம் ஏதும் இல்லை; பிராம்மணன் இல்லை; தீண்டாதான் இல்லை என்று வேதமே சொல்கிறது.
  அருமையான கருத்துகள்

  அமுத மழை தொடர்ந்து பொழியட்டும்.

  பின் கோடினை வைத்து எவ்வளவு அழகான விளக்கம் - அதனால் தான் அவர் மகாப் பெரியவா -

  நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 39. பின்னை வைத்து விளக்கம் சொல்லியது மிகவும் பொருத்தம்.

  ReplyDelete
 40. இந்த பதிவு படிக்கும் போது கொஞ்சம் ப்ளாஷ்பாக் நினைவு வந்துடுத்து..ரெண்டு வருஷம் ஜபல்பூரிலிருந்து50--கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கமேரியான்னு ஒரு ஊரில் இருந்தோம். அங்கு ஸ்ரார்தத்தம் பண்ணி வைக்க வாத்தியாரோ பிராமணாளோ கிடைக்கலை. கலவை போயி பெரியவாளிடம் எங்க நிலமையை சொன்னோம். ஒரு கிலோ அரிசி ஒரு கைப்பிடி பயத்தம் பருப்பு போட்டு சாதம் பண்ணி ஆற விட்டு பசுமாட்டுக்கு கொடுங்கோ என்று உத்தரவு வந்தது

  ReplyDelete
 41. ஆஹா பினகோடுக்கு அர்த்தம் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் அத எளுதிட்டா சேர வேண்டிய எடத்துக்கு போயி சேந்துடும் அதுபோலதா மந்திரங்களும் இன்னா வெவரமா சொல்லிபோட்டாக

  ReplyDelete
 42. நெத்தியடின்னா இதுதான். மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியலைனாலும் ஆத்மார்த்தமா செய்தா சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துவிடும் பின்கோட் உதாரணம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 43. என்ன அழகான விளக்கம் வேதம் படிச்சு சொல்றவா மந்திரங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு கரெக்டாக போய்ச்சேந்துடும். பின் கோட் விளக்கம் சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. happy October 24, 2016 at 11:16 AM

   வாங்கோ ஹாப்பி. ஹாப்பியாக உள்ளது உன் வருகை.

   //என்ன அழகான விளக்கம் வேதம் படிச்சு சொல்றவா மந்திரங்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு கரெக்டாக போய்ச்சேந்துடும். பின் கோட் விளக்கம் சூப்பர்..//

   ’பின்’னூட்டம் கொடுக்க மிகவும் ’பின்’னாலே நீ வந்திருந்தாலும் PIN POINT ஆக மிகவும் SHARP ஆகப் புரிந்துகொண்டு சொல்லி இருக்கிறாய். TOO SHARP ! :) தேங்க் யூ டா ..... செல்லம்.

   Delete
 44. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (03.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1251813448286913


  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 45. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (17.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400198877149479

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete