About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, June 21, 2013

13] களியாட்டம்

2
ஸ்ரீராமஜயம்
இந்த நாளில் EXCITE [கிளர்ச்சியூட்டுவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT [களியாட்டம்] என்று வைத்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த நாளிலோ ELEVATE [உன்னதமாக்குவது] பண்ணுவதுதான் ENTERTAINMENT என்று தெரிந்துகொண்டு, எத்தனைதான் உணர்ச்சிகளைக் கிளறி விட்டாலும் முடியாத, ஆத்மார்த்த மனதாக்கி சாதகத்தில் அடங்கச் செய்தார்கள்.

”எண் சாண் உடம்பிற்கு சிரசே [தலையே] பிரதானம்” என்கிறோம். அப்படி வேதத்திற்கும் ஒரு சிரசு [தலை] இருக்கிறது. உபநிடதங்கள் தான் அப்படிப்பட்ட தலை.

மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.


ooooooOoooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10  ..... தங்கள் நினைவுக்காக :  

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரரின் பதற்றத்தையும் தவிப்பையும் பார்த்த, மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக்கொடுத்து, நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச்சென்றார். 


பெரியவாளைப் பார்த்ததும் மிராசுதாரருக்கு கையும் காலும் ஓடலை. தொபுக்கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார். ’என்ன விஷயம்?’ என்பதைப் போலப் புருவங்களை உயர்த்தினார்.


உடனே மிராசுதார் கைகள் உதற “பிரஸாதம் .. பிரஸாதம் .. பெரியவா” என்று குழறினார். 

மீண்டும் பெரியவர், “என்ன பிரஸாதம்?” என்று கேட்டு அவரைப்பார்த்தார். 

அதற்குள் மூட்டையைப்பிரித்து, பிரஸாதத்தை எடுத்து அங்குள்ள மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாக சமர்ப்பித்தார் மிராசுதார். அதில் ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.


மஹாஸ்வாமிகள், “இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரஸாதம்?” என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப்பார்த்தார்.    


மிராசுதார் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, மிகவும் விநயமாக, “பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூரிலே மஹாலிங்க ஸ்வாமிக்கு, ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப்பிரஸாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” என்று சொல்லி முடித்தார். 


உடனே பெரியவா அந்தப்பிரஸாத மூங்கில்த்தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக்கேட்டார், “நாராயணஸ்வாமி! நீ பெரிய மிராசு தான், இருந்தாலும் செலவுக்கு இன்னும் வேறு யாரையாவது கூட்டு சேர்த்துண்டு, இந்த ருத்ராபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினயோ?” 


“இல்லே பெரியவா! நானே என் சொந்தச்செலவிலே பண்ணினேன்” என்று அந்த நானேவுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். 

பெரியவாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அத்துடன் விடவில்லை. ”லோக க்ஷேமார்த்ததிற்கு [உலக நன்மைக்கு] மத்யார்ஜுன க்ஷேத்ரத்திலே [திருவிடைமருதூரில்] ருத்ராபிஷேகம் பண்ணினையாக்கும்?” என்று கேட்டார். 


உடனே மிராசுதார் ஆதங்கத்துடன் , “இல்லே பெரியவா! ரெண்டு மூணு வருஷமாவே வயல்கள்லே சரியான விளைச்சல் கிடையாது.  சில வயல்கள் தரிஸாகவே கெடக்கு. 

திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப்பார்த்தேன். அவர்தான் “சித்ரா பெளர்ணமி அன்னிக்கு, மஹாலிங்க ஸ்வாமிக்கு, மஹந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து; அமோக விளைச்சல் கொடுக்கும்”ன்னு சொன்னார். அத நம்பித்தான் பண்ணினேன் பெரியவா!“ என்று குழைந்தார்.
[பகுதி 3 of 10]
எதிரில் வைத்திருந்த பிரஸாதம் அப்படியே இருந்தது.  ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக்கொள்ளவில்லை. 

“அப்படீன்னா ஆத்மார்த்தத்துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ இதை நீ பண்ணலேன்னு தெரியறது” என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத்திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு!  

கண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை. 

அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார், “சரி, ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?”

“பதினோரு வேத பண்டிதர்களை ஏற்பாடு பண்ணியிருந்தேன், பெரியவா!” இது மிராசுதார். 

உடனே ஸ்வாமிகள், “வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊர்ன்னு எல்லாம் தெரியுமோ? நீ தானே எல்லா ஏற்பாடும் பண்ணினே? என்று விடாப்பிடியாக விசாரித்தார். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு, ’பெரியவா ஏன் இப்படி துருவித்துருவி விசாரணை செய்கிறார்’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும் ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார், என்பதையும் புரிந்துகொண்டார்கள். 

மிராசுதார் தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

”வாசிக்கிறேன், பெரியவா! திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாஸ கனபாடிகள், ராஜகோபால சிரெளதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்குட்டு வாத்யார் .... அப்புறம் என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், “எல்லாம் நல்ல அயனான  வேதவித்துக்களாகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கே. அது சரி ... உன் லிஸ்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கான்னு பாரு” என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, “இருக்கு பெரியவா, இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!” என ஆச்சர்யத்தோடு பதிலளித்தார்.


சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம், ’பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப்பற்றி தூண்டித் துருவித்துருவி விசாரிக்கிறார்’ என்ற வியப்பே தவிர,   ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், “பேஷ் ... பேஷ்” வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா? ரொம்ப நல்ல கார்யம். மஹா வேத வித்து. இப்போ கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு [மூச்சடக்கி] சொல்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூறியதுதான் தாமதம்..... 

மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது. 


நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.  ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் ........... 


பொங்கி விட்டார் ஸ்வாமிகள். 
தொடரும்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 23.06.2013 ஞாயிறு வெளியாகும்]
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

39 comments:

 1. முதலில் நான்கு பத்திகளும் சிறப்பானது ஐயா... மிராசுதாரரின் "நானே" புரிகிறது...

  பொங்கும் நேரத்தில் "தொடரும்..." தொடர்கிறேன் ஆவலுடன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  ReplyDelete
 2. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது//

  நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.

  பூஜை, ஹோமம் எல்லாம் உலக நன்மைக்காக் நடந்தப்படவேண்டும் என்று பெரியவா விரும்புவது தெரியாமல் தன் வயலில் அமோக விளைச்சலுக்கு செய்ததாக பெருமை அடித்துக் கொண்டு இருக்கிறாரே மிராசுதார்.

  வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லியிருந்தயா? //

  அவரைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்? பெரியவா என அறிய ஆவல்.

  ReplyDelete
 3. திருவாரூர் மிராசுதார் நாராயணஸ்வாமி படும்பாடு. சஸ்பென்ஸ் தொடர்கிறது. அடுத்து என்ன?

  ReplyDelete
 4. வேதம் கற்றவர்களைப் பழிக்கும் அளவிற்கு நமக்கென்ன தெரியும் என்று நாராயணஸ்வாமி ஐயர் நினைக்காது போய்விட்டாரே!
  அடக்கம் என்பது இந்த இடத்தில் எங்கேயோ போய்விட்டதுபோல இருக்கே. என்னதான் பெரியவாள் சொல்லியிருப்பார். என்ன எழுதப்போகிறீர்கள் பார்க்க வேண்டும். அன்புடன்

  ReplyDelete
 5. சிற்றின்பங்களில் மூழ்கியவர்களுக்கு பேரின்பம் என்றால் என்னவென்று தெரியாது.

  ஆனால் சிற்றின்பத்தில் மூழ்கி பின் முருகன் அருளால் பேரின்பத்தை அடைந்த அருணகிரிநாதரின் கதையைத் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

  எல்லாம் அறிந்த மகாபெரியவாளின் முன் வந்து தன் அறிவீனத்தை காட்டுகிறாரே நாராயணஸ்வாமி ஐயர்

  ReplyDelete
 6. Waiting to read the continuition.....

  ReplyDelete
 7. கண்மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள் பல விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்ட ஒரு ஞானப் பார்வை.

  மனதில் நிறையும் அமுதமழை...!

  ReplyDelete
 8. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.

  சங்கீதத்தைவிட இங்கிதம் அவசியமானது..

  ReplyDelete
 9. அச்சச்சோ இது புதுசோ? நான் இன்னும் வரவே இல்லையே.. வருகிறன்ன்ன்...

  ReplyDelete
 10. தெரியாதவர்கள்
  தெரிந்துகொள்ளட்டும்.
  தொடருங்கள்.

  ReplyDelete
 11. கல்வியை விட அடக்கம் மிக முக்கியம் .சத்தியமான வரத்தை அல்லவா? மிராசுதார் கதை என்ன வாயிற்று. மகா பெரியவர் என்ன சொன்னார்? தெரிந்து கொள்ள ஆவல்....

  ReplyDelete
 12. Pathiyam pattriya villakam Amiga arumai, suspense is increasing and egarlywaiting for the next post. Thank you very much sir....

  ReplyDelete
 13. \மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.\\

  அற்புதமான வாக்கியம்.

  தொடர்ந்து வருகிறேன்.

  ReplyDelete
 14. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது
  Aha very well said. But to whom? Who will realise it?
  O.K. A time will come. Periyava has to do this.
  viji

  ReplyDelete
 15. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” //


  அனுக்ரஹம் கிடைக்க ப்ராப்தம்' இல்லேங்கறது தெரியாமல் பிரயாசைப்பட்டு குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக கஷ்ட்டப்படுகிறாரே மிராசுதார் ..!

  ReplyDelete
 16. //மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//
  மிராசுதார் சீக்கிரம் இதைப் புரிந்து கொண்டுவிடுவார்!

  ReplyDelete
 17. வணக்கம் ஐயா!...

  //மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//
  மிகமிக யதார்த்தமான அருமையான தத்துவம்! எத்தனை இருந்தாலும் இந்த ’அடக்கம்’ என்பது இல்லாமல் எத்தனைபேர் எத்தனைவிதமான சங்கடங்களை தமக்கும் பிறர்க்கும் ஏற்படுத்துகின்றனர்...

  அடக்கம் அதுவாக அமையாது நாம்தான் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.பொறுமை, அமைதியைக் கடைப்பிடிக்க அடக்கம் வந்து அமர்ந்துகொள்ளும்.

  நல்ல தத்துவப் பகிர்வு. நன்றி ஐயா!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. //மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//அருமை ஐயா...

  சஸ்பென்ஸ் தொடர்கிறது,அடுத்த பதிவுக்கு சீக்கிரம் போய் படிக்கனும்.

  ReplyDelete
 19. அடக்கம் என்பது முக்கியம் என்பதை நன்றாக நினைவுறுத்திவிட்டார். அடுத்து வருகிறேன்......

  ReplyDelete
 20. excitement, elevationவிளக்கத்தோடு கூடிய இந்தப் பகுதியும் அருமையாய் இருக்கிறது.

  ReplyDelete
 21. மிக அருமை! தொடர்கிறேன் ஐயா! நன்றி!

  ReplyDelete
 22. மிகவும் அருமையான அமுதமழைகள்.வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
  மிராசுதாரின் கதை வெகுசுவாரஸ்யம்.பல அர்த்தங்கள் உள்ளது.

  ReplyDelete
 23. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது
  உண்மை அய்யா உண்மை. நன்றி

  ReplyDelete
 24. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது
  உண்மை அய்யா உண்மை. நனறி

  ReplyDelete
 25. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது
  உண்மை அய்யா உண்மை. நன்றி

  ReplyDelete
 26. /மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//

  ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பாடம்.... நாங்களும் கற்றுக்கொள்கிறோம்...

  ReplyDelete
 27. கல்வியோடு சேர்ந்த பணிவு நமக்கு நன்மை.துருவித்துருவி கேட்டதன் காரணம் என்ன என்பதை பார்க்க அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.

  ReplyDelete
 28. சுவாமிகள் என்ன சொன்னாரோ என்ற ஆவல். அடுத்த பகுதிக்கு செல்கிறேன்..

  ReplyDelete
 29. அன்பின் வை.கோ - பதிவு அருமை - கனபாடிகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவரும் - அவரைப்பற்றி நன்கு அறிந்தவரும் ஆன ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கனபாடிகளைப் பற்றி மிராசுதாரிடம் கேட்ட போது .... " மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது.

  நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் "

  பெரியவா பொங்கிட்டா -

  நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 30. பெரியாவாளைப் பொங்கச்செய்து விட்டாரே, நாராயணஸ்வாமி.

  ReplyDelete
 31. ஆச்சார்யா ஏன் இப்படி துருவி துருவி கேக்கறான்னு நாங்களும்யோசிக்கறோம் அடுத்த பதிவில் தெரிந்துவிடும் இல்லியா?

  ReplyDelete
 32. குருசாமி வேரயாரயோ பத்தி வெலாவாரியா கேட்டுபிட்டிருக்காக

  ReplyDelete
 33. ஆச்சாரியா ஒருவரைப்பற்றி துருவித் துருவி விசாரிக்கறான்னா ஏதோ விஷயம் இருக்குனு தோணறது.

  ReplyDelete
 34. மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.// அடக்கம் அமரருள் உய்க்கும்..பத்தியம் இருக்கும் பக்குவம் வந்துவிட்டால் பின்னர் மருந்தெதற்கு???

  ReplyDelete
 35. எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...

  ReplyDelete
  Replies
  1. happy October 28, 2016 at 8:37 AM

   வாம்மா ..... ஹாப்பி, வணக்கம்.

   //எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...//

   முக்காலமும் உணர்ந்த, மிகவும் எளிமையாகவும், நடமாடும் தெய்வமாகவும், மஹா ஞானியாகவும் வாழ்ந்து காட்டிய மஹான் அல்லவா. சாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரம் அல்லவா !

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதங்களை ஒருமுறையாவது நேரில் தரிஸிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களே மஹா பாக்யசாலிகளாகும்.

   இன்றும் அவர்களை மனஸார நினைப்பவர்களுக்கும், துதிப்பவர்களுக்கும், வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது, இதனை அனுபவித்து உணர்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளதோர் இரகசியமாக உண்மையாகும்.

   Delete
 36. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400978503738183

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete