2
ஸ்ரீராமஜயம்
============
============
அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
01.06.2015 முதல் 05.07.2015 வரை தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு வலைச்சர ஆசிரியராக பணியாற்ற நினைத்திருந்தேன். அதற்கான 35 பதிவுகளையும் நான் முன்கூட்டியே திட்டமிட்டு வடிவமைத்து என்னிடம் தயார் நிலையில் (As Composed Drafts) வைத்துக்கொண்டும் இருந்தேன்.
ஆனால் ஒருசில நிர்பந்தங்களால், நெருக்கடிகளால், கட்டுப்பாடுகளால் என்னால் அங்கு, என் போக்குப்படி, ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தபடி, முழுச்சுதந்திரமாக செயல்பட இயலாமல் போன காரணத்தால், இன்று 14.06.2015 முதல், வலைச்சர ஆசிரியர் பதவியிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என்றாலும், என் வழக்கப்படி ’எல்லாம் நன்மைக்கே’ என மிகச்சுலபமாக எடுத்துக்கொண்டு விட்டேன்.
இருப்பினும் நான் ஒருவேளை அங்கு வலைச்சர ஆசிரியராக 35 நாட்களுக்கும் நீடித்திருந்தால், யார் யாரை அடையாளம் காட்டி சிறப்பிக்க நான் நினைத்திருந்தேனோ, அவர்கள் பற்றிய பதிவுகள் இந்த என் வலைத்தளத்தினில் ‘நினைவில் நிற்போர்’ என்ற புதிய தலைப்பினில், தொடர்ந்து தினமும் வெளியிடப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
-ooooooooo-
நினைவில் நிற்கும்
பதிவர்களும், பதிவுகளும்
பதிவர்களும், பதிவுகளும்
14ம் திருநாள்
14.06.2015
73. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
எத்தனை எத்தனை இராமன்-37
ஹாங்காங் நோவாவின் கப்பல்-38
கண்ணாடிப்பாலமும் தொட்டிப்பாலமும்-39
74. செல்வி. யுவராணி தமிழரசன் அவர்கள்
வலைத்தளம்: கிறுக்கல்கள்

75. திருமதி. புவனா அவர்கள்
வலைத்தளம்: அப்பாவித் தங்கமணி
பிரசவ வைராக்யம்
என் உயிர் நின்னதன்றோ
ராங் காலும் ரங்கமணியும்.... :)
’ஜில்லுன்னு ஒரு காதல்’ ... பகுதி-1
76. திருமதி. மாலதி அவர்கள்
வலைத்தளம்: மாலதியின் சிந்தனைகள்

பித்தம் தெளிந்தேன்
என் இதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்
இலக்கணத்தைப் படைப்போம் வா
77. திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
வலைத்தளம்: முகிலின் பக்கங்கள்

78. சுய அறிமுகத்தில் சில
சிந்தனைக்கு ஓர் விஷயம்
'விதிமுறைகள்’ என்ற சொல்லை யார் மூலம் எப்போது நான் கேட்டாலுமே, உடனே எனக்கு பலத்த சிரிப்பு மட்டுமே வருவது உண்டு.
அரசாங்கமோ, நீதிமன்றங்களோ, காவல்துறையோ கொண்டுவரும் ஒருசில கடுமையான விதிமுறைகள்கூட, சமயத்திற்குத் தகுந்தாற்போல, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, ஆளுக்குத் தகுந்தாற்போல, காலத்திற்கு ஏற்றார்போல அவர்களாலேயே அவ்வப்போது, அவற்றை மாற்றிக்கொள்வதோ அல்லது தளர்த்திக்கொள்வதோ நாம் நடைமுறையில் மிகவும் நன்றாகவே அறிந்ததுதான்.
பொதுவாக ’விதிமீறல்’ என்பதே அந்த விதிமீறலால் வேறு யாருக்கும் எந்த விதத்திலாவது பாதிப்புகள் இருந்தால் மட்டுமே, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ என்ற விதிமுறையையே நாம் எடுத்துக்கொள்ளலாம்.
நம் தமிழ்நாட்டில், அன்று ஒருநாள் இது கட்டாயப்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இது கட்டாயப்படுத்தப்பட்டது. இன்று அதாவது இப்போது நடக்கும் இந்த ஜூன் மாதம் இதை அணிய வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்று உள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் அணிய வேண்டிய கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் என்றாவது ஒருநாள் அது கண்டுகொள்ளப்படாமல், விட்டாலும் விடப்படலாம். எதுவுமே எப்போதுமே நாம் உறுதியாகச் சொல்வதற்கு இல்லை.
இந்த ஒரு சின்ன, ஆனால் அதே சமயம் விபத்து நேர்ந்தால், நம் தலைக்கும் உயிருக்குமே பாதுகாப்பு அளிக்கக்கூடிய மிகப்பெரிய, விதிமுறையையேகூட எவ்வளவு தடவை தளர்த்திக்கொண்டுள்ளார்கள்? எவ்வளவு தடவை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்? என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.
அதனால் ‘விதிமுறைகள்’ என்ற பெயரைச்சொல்லி, அனைவரும் விரும்பி வரவேற்கும், ஒரு நற்செயலைத் தடுக்க நினைப்பதெல்லாம் .... எங்கும் எதிலும் ‘சும்மா’ ஒரு நொண்டிச் சாக்கு மட்டுமே என்று நினைக்கத்தோன்றுகிறது !






