என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
பார்தததும் ரசித்ததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்தததும் ரசித்ததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

படங்கள் சொல்லும் பாடங்கள்



படங்கள் சொல்லும் பாடங்கள்


[ 1 ]





உன்னிடம் எவ்வளவு வளங்கள் 
எவ்வளவு எண்ணிக்கையில் 
உள்ளன என்பது முக்கியமல்ல.


உன்னிடம் உள்ள வளங்களை நீ 
எவ்வாறு உபயோகிக்க வேண்டும் 
என்பதே உனக்குத் தெரியாவிட்டால் 
எவ்வளவு வளங்கள் இருந்தும் 
அவை உனக்குப் போதவே போதாது தான். 


-oOo-

மேலே உள்ள படத்தைப்பாருங்கள்

ஒரே ஒரு ஏணியை சுவற்றில் சாய்த்து 
அதில் சுலபமாக ஏறி மதில் சுவற்றிற்கு 
மறுபக்கத்தைக் காணலாம் 
என்று தெரியாதவரின் காலடியில் 
நூற்றுக்கணக்கான ஏணிகள் இருந்து என்ன பயன்?

அவர் மேலும் உயரம் வேண்டுமென்று நினைத்து, 
மேலும் சில ஏணிகளைக்கூட 
கடையில் வாங்கி வந்து 
அவற்றையும் ஏற்கனவே உள்ளவற்றின் 
மேல் படுக்க வைக்கலாம்.

-oOo-oOo-oOo-oOo-oOo-




[ 2 ]



ஒரு தவறு உங்களை அனுபவசாலியாக்குகிறது

அந்த அனுபவம் உங்கள் தவறுகளைக் குறைக்கிறது

தவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது

பிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து 
அதே பாடத்தைக் கற்கிறார்கள்.

-oOo-