என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
போட்டி - பேட்டி - நேயர் கடிதங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டி - பேட்டி - நேயர் கடிதங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S. SESHADRI அவர்கள்


காரஞ்சன் (சேஷ்)


திரு. E.S. சேஷாத்ரி

அவர்களின் பார்வையில் ....

சிறுகதைகளை வார இதழ்களில் வாசித்துப் பழகிய நான் முதன் முதலில் இவருடைய வலைப்பக்கத்தில் வாசிக்க நேர்ந்தபோது ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். நடையும் மிகவும் எளிமையாக அமைந்தது மேலும் சிறப்பு.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு படைப்பும் அதை படிப்பவருக்குள்ளோ/காண்பவர்களுக்குள்ளோ அதனூடே தானும் பயணிப்பது போன்ற உணர்வை அளித்து, மனதில் அதன் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.


காட்சிகளால் வெளிப்படும் நகைச்சுவையைவிட, கதைகள் வாயிலாக அதை வெளிப்படுத்துவது மிகவும் சிரமமான செயல். முதலில் அந்தக் காட்சியை நம் மனக்கண்முன் நிறுத்தி நம்மை உணரவைத்து, மகிழ்விக்க வேண்டும். அதில் திரு வைகோ சார் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

சிறுகதை விமர்சனப் போட்டி என்றவுடன் முதலில் மிகவும் தடுமாறிப்போனேன் என்பதுதான் உண்மை. கதையை மீண்டும் சொல்வதுபோல் விமர்சித்து எழுத ஆரம்பித்தேன். முதலில் சிலர் எழுதி பரிசுபெற்ற சில விமர்சனங்களைப் படித்துப் பின்னர் சற்று தெளிவடைந்தேன்.

இந்தப் போட்டியில் பங்கு பெற்றதால் ஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதில் மூன்று பரிசுகளுக்கு 5 பேர் தெரிவாவதைப் பார்த்து ஐந்திலே ஒன்று பெற்றான் எனும் நிலையைத் தொடர்ந்து தக்க வைக்க ஆசைப்பட்டேன். சில கதைகளுக்கு பங்கு பெற்ற அனைவருக்குமே போனஸ் பரிசுகள் வழங்கியது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.


இந்த வயதிலும் அவருடைய உழைப்பு என்னை மலைக்க வைக்கிறது. தெளிவான சிந்தனை, காட்சிகளை வகைப்படுத்தும் திறன், விவரிக்கும் பாங்கு முதலியவை மிகச் சிறப்பு. உள்ளத்தனையது உயர்வு என்பது இவருக்கு முற்றிலும் பொருந்தும்.


ஐந்து வயதில் படித்த தமிழ்ச்செய்யுள் முதல் அன்றாடம்  படிக்கும் தினசரி வரை அசைபோட வைத்து ஒவ்வொரு வாரமும் கதை விமரிசனத்தை  எழுதவைத்த வை. கோ சார் அவர்களுக்கு நன்றி நடுவர் அவர்கள் அவ்வப்போது வழங்கிய குறிப்புகள் எனக்குப் பேருதவியாய் அமைந்தன. கிட்டத்தட்ட 24 கதைகளுக்குப் பின்னர்தான் என்னால் தொடர்ச்சியான வெற்றியைப் பெற முடிந்தது.


போட்டியில் பங்கேற்க கிடைக்கும் வாய்ப்பை நான் பெரிதாக எண்ணுகின்றேன். என்னுடைய விமர்சனம் எந்தப் பரிசுக்குத் தெரிவானாலும் எனக்கு மகிழ்வே.


நடுவரைப் பொறுத்தவரை “சமன் செய்து சீர்தூக்கும் கோல்” போன்ற செயல்பாடுடையவராகவே என்னால் உணர முடிந்தது. மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனம் தெரிவாகும்போது, மற்றவர்கள் எப்படியெல்லாம் மாற்றி யோசிக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது.


மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பின் உரைநடையாய் எழுத/தட்டச்சு செய்யப் பழக முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் தமிழ் மொழி வளர்கிறது. வாசிக்கும் பழக்கம் வளர்கிறது. பிழைகளைத் திருத்திக் கொள்ள முடிகிறது. சிந்தனை பல கோணங்களில் விரிவடைகிறது. சமுதாயத்தில் எந்தெந்த நிகழ்வுகள் நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதும் அதற்குத் தீர்வுகள் குறித்த சிந்தனையும் எழுகிறது.


பரிசுத்தொகை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஊக்கம் அளிப்பதற்கான ஒரு காரணி எனக் கொள்வேன். அதையும் பத்து கதைகள் முடிந்தவுடன் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்த பாங்கு போற்றத்தக்கது. இதில் கதாசிரியரின் பொறுப்புணர்வு, ஈடுபாடு, வெளிப்படுகிறது.

  
பொதுவாக ஒருவருடைய படைப்பை விமர்சிப்பதைப்பெரும்பாலும் பலர் விரும்பமாட்டார்கள். ஆனால் நம் கதாசிரியரோ தன் படைப்புகளை விமர்சனம் செய்யத் தூண்டி, அதற்குப் பரிசும் அறிவித்து hats off. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோர்க்கும் அமைந்துவிடாது. அந்த விஷயத்திலும் நம் கதாசிரியர் ஒரு சாதனையாளர்தான்.


விமர்சனம் எழுதி முடித்ததும் வாசித்துப் பார்க்கையில் என் உள்ளுணர்வில் பரிசு கிடைக்கும் எனத் தோன்றினால் ஏதோ ஒரு பரிசுக்குத் தெரிவாகிவிடுகிறது. அந்த வகையில் ஒரு தன்னம்பிக்கையை என்னுள் தவழவிட்டிருக்கிறது.


பத்திரிகைகளுக்கு ஒரு கதையை அனுப்பும்போது அது நாம் அனுப்பிய வடிவிலேயே பிரசுரமாகும் என்று சொல்வதற்கில்லை. சற்று சுருக்கப்பட்டோ அல்லது சில பகுதிகள் நீக்கப்பட்டோ பிரசுரிக்கப்படலாம். சில கதைகள் நாம் எதிர்பார்த்த காலத்தில் வெளிவராமலும் போகலாம்.


வலையுலகைப் பொறுத்தவரை முழு சுதந்திரத்துடன் நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி, நினைத்த வரிசையில் நம் படைப்புகளை வெளியிட முடிகிறது. அதில் ஆர்வமிக்கவர்களின் கருத்துகளையும் பின்னூட்டம் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது.


மொத்தத்தில் இந்தப்போட்டி நம் அறிவுத்திறனை, சிந்தனைத்திறனை மேம்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்கள் மேலும் நம் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாக அமைகிறது. கரும்பு தின்னக் கூலிபோன்ற நிகழ்வு இது. திரு வைகோ அவர்களின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது. அவர் பணி பல்லாண்டு தொடர என் உளமார்ந்த வேண்டுதலும், வாழ்த்துகளும்.

நன்றி
  
காரஞ்சன்(சேஷ்) 

 

 

 

My Dear Mr. Seshadri, Sir,

வணக்கம். 



தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் 


எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், 


தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. 


தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.






ஒருசில போட்டிகளில் 
தங்கள் மனைவி, 
தங்கள் மகள், 
தங்கள் மாமனார்  
என குடும்ப சஹிதமாகவே 
தாங்கள் கலந்துகொண்டது 
எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்தது.
தங்கள் குடும்பத்தார் 
அனைவருக்கும் என் நன்றிகள்.



பெரும்பாலான கதைகளுக்கான 
தங்களின் விமர்சனங்கள்
வியாழக்கிழமை இரவு 
7.39க்குப்பிறகு 7.59க்குள் மட்டுமே
எனக்குக் கிடைத்துள்ளன.

இருப்பினும் பலமுறை அவைகளே
பரிசுக்கும் தேர்வாகியுள்ளன
என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே ! 

தங்களின் விமர்சனம் கிடைத்ததும்
சரியாக 8 மணிக்கு கடையை மூடுவது
என் வழக்கமாக இருந்து வந்ததுள்ளது. :)

தாங்கள் அனுப்பும் விமர்சனத்தை 
நான் ஒருமுறை முழுவதுமாகப் படித்துவிட்டு 
என் STD. ACK. அனுப்புவதற்குள் 
எனக்குத் தாங்கள் CHAT செய்து, 
விமர்சனம் அனுப்பினேனே 
வந்ததா, சார்? எனக் கேள்வியும் கேட்பீர்கள். :)



வேறு பிற போட்டிகளில் கலந்துகொள்ளும்போது
இதுபோல LAST MINUTE RISK எடுக்க வேண்டாம் என
தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சில சமயங்களில் இது போல LAST MINUTE RISK எடுப்பது நம் வெற்றி வாய்ப்பினை பாதிக்கக்கூடும் என்பதைத் தெரிவிக்க எனக்கு நேர்ந்த ஓர் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். பள்ளிச்சிறுவர்கள் இரண்டு மணி நேரம் நடிக்கும் வண்ணம் ஓர் நாடக ஆக்கம் எழுதித்தர வேண்டும் என அறிவித்திருந்தார்கள். 

விளம்பர அறிவிப்பினை, கடைசி நாளுக்கு 25 நாட்கள் முன்பாகவே படித்து மனதில் ஏற்றிக்கொண்ட நான், தினமும் மிகவும் கஷ்டப்பட்டு, நாடக ஆக்கத்தினை உருவாக்க ஆரம்பித்தேன். நான் எழுதிய அந்த புராண நாடகத்தை,  நானே திரும்பத்திரும்ப பலமுறை தினமும் படித்துப்பார்த்ததோடு, என் மனதுக்கு முழுத் திருப்தி கிடைக்கும்வரை, தினமும் விடியவிடிய அதை மெருகேற்றிக்கொண்டே வந்தேன்.  

அப்போதெல்லாம் [2007] இன்றுபோல மின்னஞ்சல் வசதிகளெல்லாம் அவ்வளவாகக் கிடையாது. கையால் தெளிவாக எழுத வேண்டும். தபாலிலோ கொரியரிலோ மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய விலாசம் ’சென்னை’ என்பதால் நானும் போட்டியின் இறுதி நாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே [Well in Advance] அதனை கொரியரில் அனுப்பி வைத்து விட்டேன். மன நிறைவோடு போட்டியின் முடிவுக்காக மனதினில் ஓர் சின்ன ஆவலுடன் காத்திருக்கவும் ஆரம்பித்து விட்டேன். 

போட்டிக்கு ஆக்கங்கள் வந்து சேர வேண்டி அவர்கள் கொடுத்திருந்த இறுதித்தேதிக்கு மறுநாள் எனக்குக் கொரியரில் நான் அனுப்பியிருந்த கொரியர் தபால் அப்படியே பிரிக்கப்படாமல் திரும்பி வந்துவிட்டது. 

அந்தக் கவரின் மீது “இதில் எழுதப்பட்டுள்ள விலாசத்தில் யாரும் இல்லை .... விலாசத்தில் எழுதியுள்ள கதவு கடந்த மூன்று நான்கு நாட்களாகப் பூட்டப்பட்டுள்ளது”  என கொரியர்காரர்களால் எழுதப்பட்டிருந்தது கண்டேன். என் கடின உழைப்பு இப்படி வீணாகிப்போய்விட்டதே என சற்று நேரம் கலங்கினேன்.

பிறகு அந்த விளம்பரம் அறிவிக்கப்பட்டிருந்த மாத இதழ் அலுவலகத்திற்கு நான் ஃபோன் செய்து, விளம்பரம் செய்யப்பட்டிருந்த இதழின் தேதி + பக்க எண்ணுடன், எனக்கு இதில் நேர்ந்துள்ள சிரமங்களையும், ஏமாற்றத்தையும் விரிவாக எடுத்துரைத்து முறையிட்டேன். 

என் பக்க நியாயத்தினை உணர்ந்துகொண்ட அங்கிருந்த நல்லவர் ஒருவர், அந்த விளம்பரம் யாரால் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவரின் பெயர் + ஃபோன் நம்பர் போன்றவற்றை எனக்கு அளித்து உதவினார். 

விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நானும் அந்த விளம்பரதாரரை ஃபோனில் அழைத்து நடந்த கதைகளை விரிவாகச் சொல்லி முறையிட்டேன்.

அதற்கு அவர் “ அப்படியா .... Very Very Sorry, Sir.  நாங்கள் இப்போது அந்த முகவரியில் இல்லை. அந்த இடத்தை காலிசெய்துவிட்டு, வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிக்கொண்டு வந்து விட்டோம். அதனால் தாங்கள், தங்களுக்குத் திரும்ப வந்துள்ள அந்தக்கவரை அப்படியே பிரிக்காமல், வேறு ஒரு பெரிய கவரில் வைத்து மீண்டும் கொரியர் தபாலில் இதோ இந்தப் புதிய விலாசத்திற்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.  போட்டிக்கான இறுதி நாள் முடிந்து விட்டாலும் கூட, தாங்கள் முன்கூட்டியே அனுப்பியுள்ளீர்கள் என்ற அத்தாட்சி அந்தப் பழைய கவரில் இருப்பதால், நான் எப்படியாவது, இதில் தங்களுக்கு உதவி செய்து, தங்களின் படைப்பினையும் நடுவர்களின் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று உத்தரவாதம் அளித்தார். 

அவரின் பெயரையும், ஃபோன் நம்பரையும் குறித்துக்கொண்டு உடனடியாக அவர் சொன்னபடியே நானும் அந்தப்பழைய கவரைப்பிரிக்காமல், வேறு ஒரு புதுக்கவரில் வைத்து, மீண்டும் புது விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். பெரிய A4 Size Cover. நிறைய பக்கங்களானதால் கனமும் ஜாஸ்திதான். ஒவ்வொரு முறையும் அனுப்ப அன்றைக்கு எனக்கு சுமார் ரூ. 40 to 50 செலவானது. Unnecessary Tension also.

இருப்பினும், இதில் என் கடின உழைப்பும், விடாமுயற்சிகளும் வீண் போகவில்லை.  அகில இந்திய அளவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்துகொண்டிருந்த அந்தப்போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசாக ரூ 5000 [ரூபாய் ஐயாயிரம்] பணம் ரொக்கமாகக் கிடைத்தது என்பதில் ஓர் மகிழ்ச்சியே. 

அந்தப்பரிசுப்பணம் ரூ.5000த்தை நேரில் விழாவினில் கலந்துகொண்டு பெற்றுவர என் குடும்பத்தில் சிலருடன் திருச்சியிலிருந்து சென்னைக்குப் போகவர கார் ஏற்பாடு செய்து சென்று வந்ததில் எனக்கு 7000-8000 செலவு ஆனது என்பது தனிக்கதை. :) பணம் கிடக்கட்டும். இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த ஓர் மிகச்சிறந்த அங்கீகாரம் அல்லவா!


போட்டியில் பரிசு பெற்ற மகிழ்ச்சியினை 
படங்களுடன் பகிர்ந்துகொண்ட இறுதிப் பகுதி

நாடகத்தின் ஆரம்ப முதல் பகுதி

பதிவுலக நாடக ரஸிகர்களுக்கு என் நன்றி அறிவித்தல்


இப்போதும் கூட என்னதான் மின்னஞ்சல் வசதிகளெல்லாம் நமக்கு இருந்தாலும் கூட, எதிர்பாராத விதமாக, மின் தடை, நெட் கிடைக்காமல் படுத்துதல் என எவ்வளவோ சோதனைகளும் ஏற்படலாம். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும்போது, நாம் கடைசி நிமிட ரிஸ்க்கெல்லாம் எடுக்கவே கூடாது என்பதைத் தங்களுக்கு என் அறிவுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

 

பொதுவாக ஒவ்வொரு வாரமும் போட்டிக்கான முதல் விமர்சனம் பிள்ளையார் சுழிபோல திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்தோ அல்லது திருவாளர். பழனி கந்தசாமி ஐயா அவர்களிடமிருந்தோ மட்டுமே எனக்கு வந்து சேரும். இருவருமே ’கோவை’க்காரர்கள். சீனியர் சிடிசன்களாக இருப்பினும் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பானவர்கள். :)


வியாழக்கிழமைதோறும் கட்டக்கடைசியாக தள்ளாடியபடி தங்களிடமிருந்தோ அல்லது நம் திரு. ரவிஜி எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்தோ மட்டுமே எனக்கு விமர்சனங்கள் வந்து சேரும். [இந்தத் தங்களின் ‘நேயர் கடிதம்’ கூட எனக்குக் கட்டக்கடைசியாகத்தான் வந்துள்ளது.]


தாங்கள் இருவருமே ’பாண்டிச்சேரி’ என்பதால் இவ்வளவு தள்ளாட்டமோ என என் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்வதும் உண்டு. :)))))


இப்படியாக இனிமையாக கடந்த 40 வாரங்களும் சுகமாகவே கழிந்துள்ளன. இனி இவையெல்லாம் எனக்கு ஓர் பசுமையான நினைவலைகளாக மட்டுமே நீண்ட நாட்களுக்கு இருக்கக்கூடும். 



’VGK-25 தேடி வந்த தேவதை’

அதிலிருந்து ஆரம்பித்து
தொடர்ச்சியாக VGK-39 வரை
15 போட்டிகளில், ஏதோவொரு
பரிசுக்குத் தங்கள் விமர்சனங்கள்
தேர்வாகிக்கொண்டே வருகின்றன.

’வெற்றி’

தங்களைத் 'தேடி வந்த தேவதை'யாகத் 
தன்னையே மாற்றிக்கொண்டுள்ளது
ஓர் தனிச்சிறப்பாக எனக்குத் தெரிகிறது. 

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  

பிரியமுள்ள கோபு [VGK]

     




 சிறுகதை விமர்சன 


இறுதிப் போட்டிக்கான கதையின் தலைப்பு:





VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !




    





இந்த இறுதிப் போட்டியில்


விமர்சனப் பரிசு 


வென்றவர்கள் யார் ? யார் ?


யாருக்குத் தெரியும் ?



நாளை முதல் வெளியிட


அனைத்து முயற்சிகளும்


மேற்கொள்ளப்பட்டு


வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !








என்றும் அன்புடன் தங்கள்


வை.கோபாலகிருஷ்ணன்

புதன், 1 அக்டோபர், 2014

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !




 அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


அடியேன் இந்த ஆண்டு 2014 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெற்றி நடை போட்டு வருவதுடன், இந்த அக்டோபர் மாத இறுதியில் வெற்றிகரமாக முடிவடைய உள்ளது என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். 

இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகங்களுடனும் கலந்துகொண்டு தங்களில் பலரும் இதுவரை அளித்துள்ள ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றி, நம் பிரபலப் பதிவர்களில் ஒருவருடன் மின்னஞ்சல் மூலம் சமீபத்தில் நான் ஒரு பேட்டி எடுத்தேன். அதில் நான் கேட்டிருந்த சில கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களும் இதோ இங்கே தங்கள் அனைவரின் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 


 

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !

   


 

 { பேட்டிக்கு முன்பு ஓர் அறிமுகமாக ..... சற்றே என் கற்பனை கலந்தது }

 வணக்கம் மேடம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ? எப்போதுமே பிஸியாத்தான் இருப்பீங்கோ. இருந்தாலும் நான் கொஞ்சம் உங்களுடன் பேசணுமே ...... இப்போ அதற்கு நேரம் சரிப்பட்டு வருமா?

 வாங்கோ ஸார் ... வணக்கம். ஒரு நாளைக்கு 24 மணி நேரமே எனக்குப்போதவில்லை. நடுவினில் நீங்க வேறு வந்துட்டீங்களா? சரி... சரி.. வாங்கோ;  உங்களுக்கு இப்போ என்ன வேண்டும்? அதுதான் உங்கள் கதைக்கான என் விமர்சனங்களை உடனுக்குடன் அனுப்பி விடுகிறேனே ! வேறென்ன இப்போ உங்களுக்கு என்னிடம் வேண்டும் ?

 


 கோச்சுக்காதீங்கோ ... மேடம். தாங்கள் எனக்கு ஒரு சின்ன பேட்டி தரவேண்டும். ஒரு பத்தே பத்து நிமிஷம் மட்டுமே எனக்காக தாங்கள் ஒதுக்ககூடாதா? 

 சரி .... சரி ..... சீக்கரமா என்னை என்ன கேட்கணுமோக் கேட்டுட்டுக் கிளம்புங்கோ. எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்கான தினசரிப்பதிவுகளை இன்று ஒரே நாளில் நான் கம்போஸ் பண்ணி, நூற்றுக்கணக்கான படங்களைத் தேடித்தேடி ஆசைதீர என் பதிவுகளில் இணைக்க வேண்டியதாக உள்ளதாக்கும் ...... !

  

[அவர்கள் மனதுக்குள் ஏதோ முணுமுணுப்பதுபோல எனக்குத் தோன்றியது:  ”ஹூக்க்கும் ! மூச்சு விடவே இங்கு எனக்கு நேரமில்லை. இதில் இவருக்கு என் பேட்டி வேறு வேண்டுமாம் .....” என்று தான் முணுமுணுத்திருப்பார்கள் :) - உடனே கட்டெறும்பு என்னைக் கடித்ததைப்போல சுருக்கென்று உணர்ந்தேன்.  சரி ... அது போகட்டும் .... மளமளன்னு நம் பேட்டியை ஆரம்பித்து முடித்து விடுவோம் என இதோ நானும் ஆரம்பித்து விட்டேன் .....]

 


 

{ இப்போது நிஜமான பேட்டி சூடாக ஆரம்பிக்கிறது }

 ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்களாகத் தாங்கள் நினைப்பவற்றைக் கொஞ்சம் சொல்லுங்கோ மேடம்.

 சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் எழுத எழுத வித்தையை கற்கும் உற்சாகம் கொடுத்தது விமர்சனப்போட்டி.. புதிதான ஒரு கதவு திறந்தாற்போல் புதிய காற்றை சுவாசித்தாற்போன்ற உற்சாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை அறியாத ஓரு தளம் விமர்சனம் ..  ஒரு கதைக்கு கருத்துரை தருவது வேறு... விமர்சனம் எழுதுவது வேறு என்னும் அடிப்படைப்பாடத்தை கற்றுக்கொடுத்தது..

 

 வெரி குட் ... நல்ல பதிலாக வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். 
ந்த என் போட்டிகளில் நான் காட்டிவரும் ஆர்வம் மற்றும் ஈடுபாடுகளைப்பற்றி பொதுவாகத் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

 பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல்,  இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ...  நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது.. 

 

 ஆஹா வெகு அருமையாச் சொல்லிட்டீங்கோ .....  நானும் இந்தத்தங்களின் அற்புதமான பதிலை எண்ணிப்பார்த்து மிகவும் வியப்பில் ஆழ்ந்து போனேனாக்கும்! 
ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் உள்ள அடிப்படை நோக்கங்களாக தாங்கள் நினைப்பது என்னவோ ?

 புத்தகம் போடுவதை விட குறைந்த முதலீட்டில் , தங்கள் கதைகள் நிறைய பேரை விமர்சனம் எழுதவும் அசை போடவும் வைத்திருக்கின்றன..

புத்தகமாகப்போட்டால் கூட ஒருமுறை வாசிப்பதோடு நிறுத்திடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது..

விமர்சனம் எழுத நிறைய முறை படிக்கவேண்டி இருப்பதால் தங்கள் பதிவின் பக்கப்பார்வை - ‘பேஜ்வியூஸ்’ கூடியிருப்பதை கண்கூடாகக்காணமுடிகிறது..


 

  ஆஹா ... ’பேஜ்வியூஸ்’ என்று எனக்கு இதுவரை தெரியாத, நான் இதுவரை கவனிக்காத ஒன்றைப்பற்றி புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.  தங்கள் வலைத்தளத்தின் ’பேஜ்வியூஸ்’ இப்போது 13 லட்சங்களை நெருங்க இருப்பதைப்பார்த்து நான் மிகவும் வியந்து மகிழ்ந்து போனேன் .... :)

ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் குறிப்பாகத் தங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்னென்ன எனச் சொல்ல முடியுமா ?

 போட்டிக்காக  வெளியிடப்பட்ட கதைகளில் பொருத்தமான படங்களை இணைத்தது... கதையை அமர்களமாக எடிட் செய்து சிக் என பரிமாறியது... பரிசு பெற்றவர்களை  அறிவிக்கும் உற்சாகமான கைதட்டல்கள்... சஸ்பென்ஸ் நீடிக்கவைக்கும் தனித்தன்மை...

நடுவரிடம்  அவ்வப்பொழுது குறிப்புகள் வாங்கி வெளியிட்டு விமர்சனம் செல்லவேண்டிய பாதையை ஒழுங்குபடுத்தி .. கட்டை விரல் கேட்காத குருவாக ஒரு வித்தையை கற்றுக்கொடுத்தது சிறப்பம்சம்.

ஒரு திறனாய்வு திறமையை வாசகர்களிடம் வளர்த்தது  இந்த விமர்சனப்போட்டியின் ஒட்டு மொத்த சாதனை என பெருமைப்படலாம்.




 சபாஷ் .... என் சாதனைகளை ரஸித்துப் பட்டியல் இடுவதிலேயே தாங்கள் ஒரு சாதனையாளர் என நிரூபித்து விட்டீர்கள்! சரி, அதுபோகட்டும்.....  

ம் நடுவர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் எவ்வாறு இருந்ததாக தங்களுக்குத் தோன்றியது எனக் கொஞ்சம் சொல்லுங்கோ ! 


 எந்தவிதமான பாரபட்சமும் இன்றி,  தகுதி ஒன்றையே இலக்காகக்கொண்டு  நடுவர் செயல்படுவதாகத் தான்  தோன்றுகிறது..!





 நடுவரைப்பற்றி நன்னாவே சொல்லிட்டீங்கோ ..... ஓக்கே. 

டுத்தது சற்றே சங்கடமான கேள்விதான். இருப்பினும் கேட்கிறேன். இந்த என் விமர்சனப்போட்டிக்காக நான் அளித்து வரும் ஏதோவொரு மிகச்சிறிய பரிசுத்தொகைகளில் தங்களுக்குள்ள திருப்தி அல்லது திருப்தியின்மையைப் பற்றி தயவுசெய்து உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுகிறேன் ..... சொல்லுங்கோ ப்ளீஸ் !



 பரிசுத்தொகை என்பது குதிரையின் முன் கட்டிவிட்ட காரட் போலத்தான்.. அது ஒன்றும் என்னைப்பொறுத்தவரை இலக்கு இல்லை..



புத்தகங்களாக அனுப்பியிருந்தால் எங்கள்  இல்லத்தில் கேலிப்பார்வைக்கு ஆளாக்கியிருக்கும் .. இப்போது வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை பணமாகவே சேர்ந்துவிடுவதால் பிரச்சனை இல்லை..


 

 மிகவும் புத்திசாலித்தனமாக தகுந்த உதாரணத்துடன் பதில் சொல்லி சமாளித்துத் தப்பித்து  விட்டீர்கள். சரி, அது போகட்டும்... 

ந்தக்குதிரைக்கான கேரட் போன்ற பரிசுத்தொகைகளை கணக்கிட்டு அவ்வப்போது நான் அனுப்பி வைக்கும் முறைகளில் உள்ள திருப்தி அல்லது திருப்தியின்மை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோளேன் ..... 

 அதெல்லாம்மிகச்சரியாக டாண்-டாண்ன்னு வந்து சேர்ந்துவிடுகின்றன.. மிகவும் திருப்தியாக மட்டுமே உள்ளது.


 

 அப்பாடீ ...... அம்மாடீ ...... ஒரு மிகப்பெரிய நிம்மதி எனக்கு! 

பிரத்யேகமாகத் தங்களுக்கு இந்த என் போட்டிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் + மகிழ்ச்சி அல்லது அதிருப்தி .. பற்றி கொஞ்சம் விலாவரியாகத்தான் சொல்லுங்கோளேன் ..... ப்ளீஸ் !

 விமர்சனமே எழுதத்தெரியாது .. போட்டிகளிலும் பங்கேற்க முடியாது .. என்ற நிலையில் வெளிநாடுசெல்ல பயண ஏற்பாட்டில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக என் மகனே இங்கு என்னைப்பார்க்க வந்துவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது..

ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல்   கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான கதைகள் ஏற்கனவே தங்கள் பதிவினில் வெளியிடப்பட்டு, அவற்றிற்குப் பலமுறை நான்  கருத்தளித்திருப்பதால், வியாழன் இரவு 12 மணி அளவில் படிக்கும்போதே, எழுதப்பட வேண்டிய விமர்சனம் முந்திரிக்கொட்டையாய் என் மனதில் உருவாகிவிடுகிறது..

என்னுடைய பல விமர்சனங்களை நான் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையே தங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் பரிசு பெற்றவர்களை அறிவிக்கும் பதிவுக்குத் தாங்கள் தயாராகிக்கொண்டிருப்பீர்கள் என நினைத்து,  சில நாட்கள் கழித்து அனுப்ப ஆரம்பித்தேன்.. ஆனால் விமர்சனம் எதையும் நான் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.. அதுதான் என் வழக்கம்.


 

 ’மங்கள்யான் விண்கலம்’ போன்ற தங்களின் இந்த அதிவேகமும், சுறுசுறுப்பும் என்னை எவ்வளவோ முறைகள் வியக்கவும், மயக்கவும், மயங்கவும் வைத்துள்ளன! அதுதான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே ஆகும்.

ங்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பதிவு வேலைகளுக்கு இடையேயும், நேர நெருக்கடிகளுக்கு இடையேயும், எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தங்கள் மனதில் பட்டதைப் பட்...பட்... எனச் சொல்லி, பேட்டியளித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், Madam ..... Thank you very much ..... Bye for now !

 Welcome, Sir. Good Bye ! 


 [மனதுக்குள்] 

பேட்டி காண வந்த என்னை ஏனோ இவங்க சீக்கரமாகத் துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்காங்க! ........ பாவம் அவர்கள். மிகவும் தங்கமானவங்கதான்... அதுவும் சாதா தங்கமல்ல... கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமேதான் ........ ஒருவேளை ஏதேனும் சுவையற்ற சூழ்நிலையில், இக்கட்டான தர்மசங்கடமான நிலைமையில் தற்போது அங்கே உள்ளார்களோ என்னவோ?  அது நமக்கு எப்படித்தெரியும்? மனம்விட்டுச் சொன்னாலாவது ஆறுதலாகச் சில வார்த்தைகள் நாமும் பகிர்ந்துகொள்ள முடியும்! 

எது எப்படியோ, அவங்க எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும், மனதை எப்போதும் ஜிலு-ஜிலுன்னு வைத்துக்கொண்டு, என்றும் செளக்யமா, சந்தோஷமா, நிம்மதியா, நீடூழி வாழணும் என நான் என் மனதாரப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

காணக்கிடைக்காத, கண்ணைப்பறிக்கும், அற்புதமானப் படங்களுடனும், தகவல் களஞ்சியமாக அரிய பெரிய அருமையான செய்திகளுடனும், தினசரி பதிவுகளாக இன்றுவரை 1,416 [ஆயிரத்து நானூற்றுப் பதினாறு] பதிவுகளை கொடுத்து மிகப்பெரிய சாதனை செய்துள்ள இவர்கள், மேலும் மேலும் பல ஆயிரம் பதிவுகளைத் தந்து நம் எல்லோரையும் தினமும் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என இவர்களை நான் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றியுடன் .....
VGK 

   

 



 

பேட்டி அளித்தவர் யார் ? 
எனத்தெரியாதவர்களுக்கு மட்டும் இதோ இந்த இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html




 




    


அனைவரின் கவனத்திற்கும் !


மேலேயுள்ள பேட்டி போல இல்லாவிட்டாலும், இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் மேலான கருத்துகளை மற்ற அனைவரும் என்னுடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

தங்களின் கருத்துக்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் கட்டுரை வடிவில் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு valambal@gmail.com அனுப்பி வைக்கலாம். 

வரும்  05.10.2014 ஞாயிற்றுக்கிழமைக்குள்  எனக்குக் கிடைக்குமாறு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். Mail இல் Subject என்ற இடத்தில் ‘நேயர் கடிதம்’ எனக்குறிப்பிடவும். 

 இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு விமர்சனம்  எழுதி அனுப்பியவர்கள், போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள்,  பார்வையாளர்கள், வாசகர்கள், பதிவர்கள், பதிவர் அல்லாதோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை எழுதி மின்னஞ்சல் மூலம்  எனக்கு 05.10.2014க்குள் அனுப்பி வைக்கலாம்.

அவ்வாறு எனக்கு வந்துசேரும் சிறப்பான கட்டுரைகள் இந்த அக்டோபர் மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் இடவசதிக்கு ஏற்ப தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில், தங்கள் பெயர் மற்றும் Photo or Profile Photo வுடன் என்னால் வெளியிடப்படும்.  





    



நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:


கதையின் தலைப்பு:

VGK-37 
எங்கெங்கும்...
எப்போதும்...
என்னோடு... !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

02.10.2014
நாளை வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
நான்கு வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்