அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
இந்த நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு இதுவரை நடுவராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருபவர் யார் என்பதை நான் இதுவரை யாரிடமும் தெரிவிக்காமலேயே மிகவும் இரகசியமாகவே கட்டிக்காத்து வந்துள்ளேன்.
முதல் 21 கதைகளுக்கும் விமர்சனப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து பரிசுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. முதல் 20 கதைகளுக்கான பரிசுத்தொகைகளும் அவரவர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. http://gopu1949.blogspot.in/ 2014/06/vgk-11-to-vgk-20_16. html
போட்டி 50%க்கு மேல் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையிலும், இப்போதும் நடுவர் யார் என்பது தெரிவிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.
இந்தப்போட்டியின் 90% கதைகளுக்கு பரிசுகள் அறிவித்தவுடன் ‘நடுவர் யார்?’ என்பதற்கான விடையினை நானே என் பதிவினில் அறிவித்து விடலாம் என நினைத்துக்கொண்டுள்ளேன்.
அதனால் VGK-36 போட்டிக்கான பரிசு முடிவுகள் வெளியீட்டின்போது நடுவர் யார் என்ற தகவலும் என்னால் என் பதிவுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்படும்.
இதனால் கடைசி நான்கு கதைகளின் விமர்சனப் போட்டிகளில் நடுவர் அவர்களும் நம்மோடு ஒருவராகவே சங்கமித்து விடுவதுடன் மனம்விட்டுப்பேசி, விமர்சனங்களை விமர்சித்து கருத்தளித்து மகிழக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.
இதற்கிடையில் இந்தப்போட்டியின் நடுவர் யாராக இருக்கும் என்பது பற்றி தாங்கள் சிந்தித்து யூகம் செய்ய, ஓர் போட்டி வைத்து, சரியாக யூகித்துக் கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று ஒரு யோசனையும் எனக்குள் உதயமாகியுள்ளது.
ஒரு புதிய போட்டி என்று அறிவிக்கும் போது அதற்கான சில நிபந்தனைகளையும் சொல்ல வேண்டும் அல்லவா !
’சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்? - யூகித்துக் கண்டுபிடியுங்கள்’ என்ற போட்டியின் மிகச்சுலபமான நிபந்தனைகள் இதோ:
VGK-31, VGK-32, VGK-33 மற்றும் VGK-34 ஆகிய நான்கு சிறுகதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
அவர்கள் எழுதியனுப்பும் விமர்சனங்களின் இறுதியில் என் யூகப்படி இந்த சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர்: _______________________ என ஒரே ஒருவரின் பெயரை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளுக்கான விமர்சனங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இந்தத்தங்களின் யூகத்தினை வெளிப்படுத்தினால் போதுமானது. அது எனக்குக் கிடைத்ததும் என்னிடமிருந்து அதற்கும் சேர்த்து ஒரு STANDARD ACKNOWLEDGEMENT தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
VGK-31 முதல் VGK-34 வரை தாங்கள் அனுப்பி வைக்கும் எல்லா விமர்சனங்களிலுமே மாற்றி மாற்றி நடுவர் பெயர்கள் எழுதி அனுப்பப்பட்டால் அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும். ’சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்? - யூகித்துக் கண்டுபிடியுங்கள்’ போட்டிக்கு அவை எதுவுமே எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளவும்.
இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில், சிலர் சில கதைகளுக்கு தொடர்ச்சியாக விமர்சனம் எழுதி அனுப்ப இயலாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மட்டுமே இவ்வாறு அடுத்தடுத்து VGK-31, VGK-32, VGK-33, VGK-34 என நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தாங்கள் யூகிக்கும் நடுவர் பெயராக ஒரே ஒருவரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு, VGK-31 To VGK-34 க்கான ஏதாவது ஒரேயொரு கதைக்கான விமர்சனத்துடன் எழுதி அனுப்ப வேண்டும்.
ஒன்றிற்கு மேற்பட்ட நடுவர் பெயர்களை எழுதி இவர்களுக்குள் யாரோ ஒருவர் என எழுதி அனுப்பினால் அவைகள் யாவும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும். போட்டிக்கு அவை எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
மிகச்சரியாக யூகித்து எழுதுபவருக்கு ரூ. 108 [ரூபாய் நூற்று எட்டு மட்டும்] பரிசளிக்கப்படும். ஒன்றிற்கு மேற்பட்டு, இரண்டு, மூன்று அல்லது நான்கு பேர்கள் வரை சரியான விடையை எழுதியிருந்தால் பரிசுத்தொகை ரூ. 108 அவர்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
எனினும் நான்கு பேர்களுக்கு மேல் எவ்வளவு பேர்கள் சரியான விடையை எழுதியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ரூ. 27 வீதம் பரிசு அளிக்கப்படும்.
நடுவர் யார்? என்ற தங்களின் யூகத்தினை யாரும் பின்னூட்டமாகக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு பின்னூட்டமாகக் கொடுத்தால் அவைகளும் போட்டிக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறான பின்னூட்டங்கள் என்னால் என் பதிவுகளில் வெளியிடப்படவும் மாட்டாது.
போட்டிக்கு இன்னும் எட்டு வாரங்களுக்கு மேல் உள்ளன. இருப்பினும் இப்போதே மனதில் யூகிக்க ஆரம்பித்து விடுங்கள். ஒரேயொரு நடுவரை யோசித்து மனதினில் முடிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அவரும் ஒரு பதிவர் தானா .... இல்லையா?
திருச்சியில் என்னோடு கூடவே இருப்பவரா ?
திருச்சியைத் தாண்டி ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருப்பவரா?
ஒருவேளை தமிழ்நாட்டைத்தாண்டி இந்தியாவுக்குள் இருப்பவரா?
ஒருவேளை இந்தியாவைத்தாண்டி வெளிநாட்டில் இருப்பவரா?
வெளிநாட்டில் என்றால் அங்கேயே வசிப்பரா + வாழ்பவரா?
என பல கேள்விகளை தங்கள் மனதில் எழுப்பி விடை காண முயலுங்கள்.
ஆஹா .... பேஷ், பேஷ் !
இப்போதே இப்படி ஒரேயடியாக யோசிக்க
ஆரம்பித்து விட்டீர்களே !! சபாஷ் !!!
oooooOooooo
இதையே யோசித்துக்கொண்டு
இந்த வார சிறுகதைப்போட்டிக்கு
விமர்சனம் எழுதி அனுப்ப
மறந்து விடாதீர்கள் ! ;)
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-23
’ யாதும் ஊரே யாவையும் கேளிர் ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை
26 . 06. 2014
26 . 06. 2014
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
வை. கோபாலகிருஷ்ணன்





















