அன்புடையீர்,
உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை எழுதாமல் தனியாக ஈ.மெயில் மூலம், வரும் 23.07.2011 சனிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
மெயில் மூலம் பதில் அளித்துள்ள தகவல் மட்டும், அனுப்பிய தேதியுடன் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
E Mail Address: valambal@gmail.com
சரியான விடைகளும், ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர்கள் பெயர்களும், 24.07.2011 ஞாயிறு அன்று வெளியிடுகிறேன்.
அன்புடன்
vgk
=====================================================================
1)
திருமணம் ஆன பெண் ஒருவள் கையில் ஏதோவொரு குழந்தையை வைத்துக்கொண்டு நிற்கிறாள்.
அவ்வழியே சென்ற வழிப்போக்கன் ஒருவன் அவளிடம் ”இந்தக்குழந்தை யார்?” என்று கேட்கிறான்.
அவனுக்கு நேரிடையாக பதில் சொல்ல விரும்பாத அவள் கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறாள்:
”இந்தக் குழந்தையின் தந்தை யாருக்கு மாமனாரோ அவரின் தந்தை எனக்கு மாமனார். ”
அப்படியென்றால் அந்தப்பெண்ணுக்கு அந்த குழந்தை என்ன உறவு?
======================================================
2)
நாலோடு ஐந்தை சேர்த்தால் பத்து வரும். அது எப்படி?
======================================================
3)
வாங்கி வந்த ஒரு துண்டும் ஒரு கைக்குட்டையும் சேர்த்து ரூ. 110.
துண்டின் விலை கைக்குட்டையின் விலையைவிட ரூ. 100 அதிகம்.
துண்டின் விலை என்ன?
கைக்குட்டையின் விலை என்ன?
=======================================================
4)
”இட்டது பட்டானால் வாட்டென்ன?”
ஏதாவது புரிந்தால் கூறவும்.
==========================================================
5)
காலேஅரைக்கால் ரூபாய்க்கு நாலே அரைக்கால்
வாழைக்காய் என்றால் ஒரு முழு ரூபாய்க்கு
எத்தனை வாழைக்காய்கள் கிடைக்கும்?
[பின்னத்தில்
காலே அரைக்கால் = 3/8
நாலே அரைக்கால் = 4 and 1/8]
===========================================================
6)
100 பறவைகள் மரத்தில் இருந்தன.
வேடன் ஒருவன் ஒரே ஒரு பறவையை மட்டும்
துப்பாக்கியால் குறிவைத்து சுட்டு விட்டான்.
மீதி எவ்வளவு பறவைகள் அந்த மரத்தில் இருக்கும்?
=====================================================================
7)
சுத்தப்படுத்தப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டி காலியாக வரண்டு உள்ளது.
அதை நிரப்பும் குழாயை [A குழாய்] மட்டும் திறந்து விட்டால்
மிகச்சரியாக 6 மணி நேரத்தில் தொட்டி நிரம்பி விடும்.
அதன் பிறகும் குழாயை மூடாவிட்டால் தொட்டி நீர் வழிய ஆரம்பித்துவிடும்.
அதுபோல முழுவதும் நிரம்பியுள்ள தொட்டியை காலி செய்ய ஒரு குழாய் தனியாக உள்ளது [B குழாய்]. அது முழுவதும் நிரம்பிய அந்தத் தொட்டியைக்காலிசெய்ய 12 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
ஒரு நாள் காலையில் சுத்தமாகக் காலியாக வரண்டு கிடந்த அந்தத் தொட்டியுடன் A மற்றும் B இரு குழாய்களும் ஒரே நேரத்தில் காலை மிகச்சரியாக ஏழேகால் மணிக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டன
என்றால், முழுத்தொட்டியும் எத்தனை மணிக்கு நிரம்பக்கூடும்?
====================================================================
8)
ஒரு சிறிய விழாவிற்குகு வந்திருந்த ஆண்களும், பெண்களும்,
குழந்தைகளும் சேர்த்து மொத்தம் நூறு நபர்கள்.
தயாரித்திருந்திருந்த இட்லிகளோ மொத்தம் நூறு மட்டுமே.
சமையல்காரரின் சமயோசித புத்தியாலும், அனைவருக்குமே இட்லி பரிமாறப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும், ஒரு சிறிய ஐடியா செய்யப்பட்டது.
அதன்படி குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா அரை இட்லி வீதமும், பெண்களுக்கு தலா இரண்டு இட்லி வீதமும், ஆண்களுக்கு தலா மூன்று இட்லிகள் வீதமும் பரிமாறப்பட்டன.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் [100 பேர்களும்] இட்லி சாப்பிட்டனர். தயாரித்திருந்த அனைத்து இட்லிகளும் [100 இட்லிகளும்] காலியாகி விட்டன.
அப்படியென்றால் விழாவுக்கு வந்திருந்த
ஆண்கள் எவ்வளவு பேர்?
பெண்கள் எவ்வளவு பேர்?
குழந்தைகள் எவ்வளவு பேர்?
======================================================================
9)
என் குழந்தைக்கு ஆங்கிலத்தில் 10 வார்த்தைகள் டிக்டேஷன்
கொடுத்தேன். 9 வார்த்தைகள் தவறேதும் இல்லாமல்
மிகச்சரியாகவே எழுதியிருந்தான்.
நடுவில் ஒரு வார்தைக்கு பதில் G T T T T என்று எழுதியிருந்தான்.
எனக்கு புரியாமல் அவனையே கூப்பிட்டு இது என்ன வார்த்தை
என்று கேட்டேன். அவன் கூறிய வார்த்தையைக்கேட்டதும்
எனக்கே சிரிப்பு வந்தது. நான் டிக்டேட் செய்த வார்த்தைக்கும்
அவன் எழுதியதற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதாகவே தோன்றியது.
நான் டிக்டேட் செய்த அந்த வார்த்தை என்னவாக இருக்கும்?
================================================================
10)
ஒரு வரை படத்தின் தலை பகுதியில் வடக்கு பக்கம் என்று காட்ட " N "
(N for North) என்று எழுதப்பட்டிருந்தது.
வரை படத்தின் நடுபாகத்தில், இடதுபுற ஓரமாக (Margin ஐ ஒட்டி) ஒரு MANGO வரைந்து காட்டப்பட்டிருந்தது.
வேறு எந்த குறிப்புகளும் இல்லை.
அந்த வரைபடம் எதை குறிக்கிறது?
=================================================================
அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன்
17.07.2011
