கிராமத்திலேயே பெரிய வீடு
மொத்த நபர்கள் பதினெட்டு
பச்சைப் பசேலென பரந்து விரிந்த
சொந்த வயல்வெளிகள்
ஆற்றுப் பாசனத்தில்
அருமையான சாகுபடி
வீட்டின் அனைவர்
தொழிலும் விவசாயம்
மூட்டை மூட்டையாய்
நெல்மணிகள்
வீடு முழுவதும்
விளை பொருட்கள்
சதங்கை ஒலியுடன்
வண்டி மாடுகள்
கூப்பிட்ட குரலுக்கு
வேலையாட்கள்
செல்வச் செழிப்பிலும்
பாச மழையிலும்
வளர்ந்த என்
மழலைச் செல்வங்கள்
சத்தான உணவு
முத்தான உழைப்பு
நிம்மதியான வாழ்வு
கவலையற்ற உறக்கம் - அன்று.
திடுக்கிட்டு எழுந்தேன் - இன்று
ரேஷன் கடைக் க்யூவில்
நின்ற நிலையில் தூங்கியுள்ளேன்
கனவில் கண்ட அந்த அருமையானக்
கூட்டுக் குடும்ப நாளும் வந்திடாதோ?
=========================================================================
ஓர் அறிவிப்பு
இன்றும் நாளையும், நான் வெளியிடுவதாக இருந்த "அஞ்சலை" சிறுகதைத்தொடரின் பகுதி-5 மற்றும் பகுதி-6, ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், வரும் செவ்வாய் (12.04.2011) மற்றும் புதன் (13.04.2011)வெளியிட உத்தேசித்துள்ளேன்.
இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.
அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
