”பொக்கிஷம்”
தொடர்பதிவு
By
”பொக்கிஷம்” என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுதுமாறு எனக்கு இதுவரை இருவரிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன.
வலைத்தளம்: காகிதப்பூக்கள்
பொக்கிஷமான என் பொருட்கள்.
இதை தொடர நான் அழைப்பது ....... முதலாமவர் :)))
அறுசுவை அரசர் ...வி .ஜி .கே. கோபு சார் அவர்கள்.
===============================================
வலைத்தளம்: மணித்துளி
என் பொருள் தான் - எனக்கு மட்டும் தான் - தொடர்பதிவு
இத்தொடரை தொடர நான் அன்பாக அழைப்பது :- சகோ.வைகோ. சார்
===============================================
"பொக்கிஷம்" என்பது பற்றி ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு அதன் பிறகு ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
நாம் தினமும் எவ்வளவோ பொருட்களை உபயோகப்படுத்தி வருகிறோம். சில பொருட்கள் பரம்பரை பரம்பரையாக நம்மிடம் இருக்கக்கூடும். அதை அன்றாடம் நாம் உபயோகிக்கிறோமோ இல்லையோ அவைகளில் சில நம் வீட்டுப்பரணைகளில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் இருப்போம். அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பினும் ஏதோ ஒரு சோம்பலிலோ, நேரமின்மையாலோ, டஸ்ட் அலர்ஜி போன்றவைகளாலோ அல்லது செண்டிமெண்ட் ஆகவோ அத்தகைய பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்ற நாம் தயங்குவோம்.
அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் இருப்போம். அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பினும் ஏதோ ஒரு சோம்பலிலோ, நேரமின்மையாலோ, டஸ்ட் அலர்ஜி போன்றவைகளாலோ அல்லது செண்டிமெண்ட் ஆகவோ அத்தகைய பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்ற நாம் தயங்குவோம்.
சில பொருட்கள் நமக்கு பொக்கிஷமாகவே இருப்பினும் அவற்றை நம்மால் பாதுகாப்பது என்பது முடியாமல் போகும்.
உதாரணமாக நமது அன்புக்குரியவர், ஓர் ’ரவாலாடு’ போன்ற தின்பண்டம் நமக்குத் தருகிறார். நம் அன்புக்கு உரியவரான அவர் நமக்குக் கொடுக்கும் அது, நம்மைப்பொறுத்தவரை ஒரு பொக்கிஷம் தான்.
அதற்காக அதை நாம் ருசி பார்க்காமல் நீண்ட நாட்கள், அந்த நம் அன்புக்குரியவரின் நினைவாகவே அதை வைத்திருந்தால் என்ன ஆகும்? அந்தப்பொருளே தெரியாதபடி எறும்புகள் சூழ்ந்து கொள்ளும்.
அதுபோலவே காதலர் காதலிக்குக்கொடுக்கும் ரோஜா மலர். ஓரிரு நாட்கள் வைத்துக்கொண்டு அழகு பார்க்கலாம். அதன் பின் அது வாடிவிடும். இவற்றையெல்லாம் பொக்கிஷமாக நாம் கருதினாலும் நீண்ட காலம் நம்மிடம் அவற்றை வைத்துக்கொண்டு பாதுகாக்க முடியாது.
அதற்காக அதை நாம் ருசி பார்க்காமல் நீண்ட நாட்கள், அந்த நம் அன்புக்குரியவரின் நினைவாகவே அதை வைத்திருந்தால் என்ன ஆகும்? அந்தப்பொருளே தெரியாதபடி எறும்புகள் சூழ்ந்து கொள்ளும்.
அதுபோலவே காதலர் காதலிக்குக்கொடுக்கும் ரோஜா மலர். ஓரிரு நாட்கள் வைத்துக்கொண்டு அழகு பார்க்கலாம். அதன் பின் அது வாடிவிடும். இவற்றையெல்லாம் பொக்கிஷமாக நாம் கருதினாலும் நீண்ட காலம் நம்மிடம் அவற்றை வைத்துக்கொண்டு பாதுகாக்க முடியாது.
அதுபோல ஒருவர் ஒருசில பொருட்களை மிகவும் பொக்கிஷமாக நினைக்கக்கூடும். அதே பொருட்கள் மற்றவர்களுக்கும் பொக்கிஷமாக நினைக்கத்தோன்ற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறு.
உதாரணமாக என் படைப்புகள் வெளியான பத்திரிகைகள், நான் வாங்கிய பரிசுகள், நான் எழுதிய நூல்கள், எனக்குத்தரப்பட்ட சான்றிதழ்கள், எனக்கு பிறரால் எழுதப்பட்ட பாராட்டுக்கடிதங்கள், நான் பெற்ற விருதுகள், பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், என்னைப்பற்றி செய்தித்தாளில் வந்த செய்திகள் முதலியவற்றை நான் எப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவது உண்டு. ஓரிரு பெரிய பெட்டிகள் நிறைய அவற்றை சேர்த்து வைப்பதும் உண்டு.
என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான்.
ஒவ்வொருவர் டேஸ்ட் [ருசி] ஒவ்வொருவிதமாக இருக்கும்.எல்லாவற்றையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என் டேஸ்ட் பற்றியும், என் மனைவியின் டேஸ்ட் பற்றியும் கூட என்னுடைய “சுடிதார் வாங்கப்போறேன்” என்ற சிறுகதையின் முதல் பகுதியில் ஓரளவுக்கு விபரமாக எழுதியுள்ளேன். இதுவரை படிக்காதவர்கள் போய்ப்படிக்கவும்.
இணைப்பு இதோ:
நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.
இருப்பினும் இதில் இருந்த ’மித்ர ஷஷ்டாஷ்டகம்’ என்ற விதிவிலக்கை மட்டுமே, தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, என் மாமியாரும் என் தந்தையும் ரிஸ்க் எடுத்துள்ளனர்.
என் மாமியாருக்கு என் தந்தை சொந்த தாய் மாமா என்பதும் இவர்கள் எடுத்த ரிஸ்க்குக்கு சாதகமாக அமைந்து விட்டது.
விதியின் விளையாட்டை யாரால் தான் தடுக்க முடியும்? கடைசியில் இந்த விஷப்பரிட்சையில் மாட்டியவன் நான் அல்லவா!
எங்களுக்குள் எந்தப்பிரச்சனை, எந்த நேரத்தில், எந்த ரூபத்தில், எப்போது ஏற்படும், அது எவ்வளவு தூரம் பூதாகாரமாக வளரும், பின் எப்போது அந்தப்புயல் கரையைக்கடந்து சமாதானக்கொடி ஏற்றப்படும் என்பது, எங்களுக்கே தெரியாததோர் மர்மமான ஒன்று தான்.
எங்களுக்குள் சிற்சில வாக்குவாதங்களும், ஊடல்களும், வாய்ச் சண்டைகளும் ஏற்பட்டாலும், அது மண்டை உடையும் அளவுக்குப்போகவே போகாது. அதுபோலப்போக நான் விடவும் மாட்டேன். கிளைமாக்ஸ் காட்சிகள் எப்போதுமே சுபமானதாகவும், சுகமானதாகவும் மட்டுமே இருக்கும்.
இருகைகள் தட்டினால் தானே சப்தம் வரும். நான் எப்போதுமே அனுசரித்து, அட்ஜஸ்ட் செய்து போகும் டைப் அல்லவா. இதுபோலவே, ஊடல் + சமாதானம் என்ற முறையிலேயே, எங்களின் இனிய இல்வாழ்க்கையில் வெற்றிகரமாக 40 ஆண்டுகள் கடந்து இருக்கிறோம் என்றால் சும்மாவா? அன்றாட வாழ்க்கையைக் காரசாரமாக்கி, அதன் பயனாக அன்பினை அதிகப்படுத்தி ஆழமாக்கி மகிழ்விக்கும் ஊடல் வாழ்க.
இந்த ஷஷ்டாஷ்டக தோஷ ஜாதகங்களை வைத்தே நான் ஒரு நகைச்சுவைச் சிறுகதை எழுதி வெளியிட்டுள்ளேன்.
தலைப்பு: “மாமியார்”
படிக்காதவர்கள் போய் படித்து மகிழவும்.
விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.
அதே நேரம் நம் பொக்கிஷங்களையும், பிறருக்கு கண்ணை உறுத்தாதபடியும், தொல்லை ஏதும் தராதபடியும், எங்காவது நம்மிடமே ஒளித்து வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகும்.
அது போல ஒரு காலக்கட்டத்தில் நாம் பொக்கிஷம் எனக்கருதி மிகவும் ஆசையாக பாதுகாத்து, அடிக்கடி உபயோகித்த பொருட்கள், மற்றொரு காலக்கட்டத்தில் நமக்கே பொக்கிஷமாகத் தோன்றாமல் கூடப்போகலாம்.
உதாரணமாக ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் முதன் முதலில் வாங்கிய ஒரு ரேடியோ, ஒரு டிரான்சிஸ்டர், ஒரு கைக்கெடிகாரம், ஒரு புதிய சைக்கிள், ஃபிலிம் போட்டு படமெடுக்கும் கேமரா முதலியனவற்றைச் சொல்லலாம்.
அன்று நாம் அவற்றை பொக்கிஷமாகவே நினைத்து அன்றாடம் ஆசையுடன் பயன்படுத்தியிருப்போம். இன்று அவைகள் நம்மிடம் பெரும்பாலும் இல்லாமலேயே போய் இருக்கலாம் தானே !
காலமாற்றத்தால், நமக்கான தேவைகளும் சொகுசுகளும் இன்று நிறையவே பெருகிவிட்டன. ஒரு புதிய தொழில் நுட்பக் கண்டிபிடிப்பு வரும்போது, பழையனவெல்லாம் நம்மை விட்டு பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.
இன்றும் கூட என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் மிகவும் பொக்கிஷமாக நினைத்து பலமுறை படித்து மகிழ்வது உண்டு. பின்னூட்டம் கொடுத்தவருக்கு பொறுமையாக பதில்களும் எழுதுவது உண்டு.
என் மனதுக்கு மிகவும் பிடித்தமான சில பின்னூட்டங்களை, நான் தனியாக Copy + Paste போட்டு, வேறு இடத்தில் வேறு ஒரு கோப்பினில் சேமித்து வைத்து மகிழ்வதும் உண்டு.
என் மனதுக்கு மிகவும் பிடித்தமான சில பின்னூட்டங்களை, நான் தனியாக Copy + Paste போட்டு, வேறு இடத்தில் வேறு ஒரு கோப்பினில் சேமித்து வைத்து மகிழ்வதும் உண்டு.
இவையெல்லாம் போக, என்னிடமும் பொக்கிஷம் என்று நான் நினைத்து மகிழும் பொருட்கள் சில உள்ளன. என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ? இருப்பினும் நான் அவற்றைப்பற்றி பகிரத்தான் போகிறேன், என் அடுத்த சில பதிவுகளில்.
அதற்கு முன்பு சமீபத்தில் எனக்குக்கிடைத்த பொக்கிஷமான பேனா ஒன்றைப்பற்றி மட்டும் கூறிக்கொண்டு இந்தத் தொடர்பதிவுக்குத் ‘தொடரும்’ போடலாம என நினைக்கிறேன். இதோ அந்தப்பேனா.
கேவலம் ஒரு பேனா, பத்து ரூபாய் கொடுத்தால் கடையில் சுலபமாகக்கிடைக்கும் பேனா, இதிலென்ன பொக்கிஷம் உள்ளது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் புரிகிறது. நியாயம் தான். இது சாதாரணமாக என்னிடத்தில் எப்போதும் கைவசம் இருக்கும் ஒரு டஜன் பேனாக்களில் ஒன்று தான்.
ஆனால், அன்று இது என்னால், கலைமகள் சரஸ்வதி போன்ற ஒரு V.I.P. அவர்களின் அவசரத்தேவைக்காக அளிக்கப்பட்டு அவர்கள் ஒரு தாளில் இந்த என் பேனாவால் கையொப்பமிட்டபின், என்னிடமே இந்தப்பேனா திரும்பி வந்தபோது, அது விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்ற அந்தஸ்தினைப்பெற்று விட்டது.
ஆனால், அன்று இது என்னால், கலைமகள் சரஸ்வதி போன்ற ஒரு V.I.P. அவர்களின் அவசரத்தேவைக்காக அளிக்கப்பட்டு அவர்கள் ஒரு தாளில் இந்த என் பேனாவால் கையொப்பமிட்டபின், என்னிடமே இந்தப்பேனா திரும்பி வந்தபோது, அது விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்ற அந்தஸ்தினைப்பெற்று விட்டது.
சாதாரணமாக என்னிடம் இருந்த ஒரு பேனாவை, விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றி அருளிய அந்த கலைவாணி சரஸ்வதி தேவியார், யார் என்று அறிய விரும்புவோர், தயவுசெய்து என்னுடைய இந்தப்பதிவினைப் போய்ப்பாருங்கள் + படியுங்கள்.
தலைப்பு:- SVANUBHAVA 2012 [திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்]
முடிந்தால் அந்தப்பதிவுகளுக்கும் கருத்து அளியுங்கள்.
என்னுடைய மற்ற சில பொக்கிஷங்கள் பற்றி என் அடுதத பதிவுகளில் தொடர்ந்து பேசுவேன்.
தொடரும்
அழைப்பினை ஏற்று பொக்கிஷங்கள் பற்றி இத்தனை விரிவாக அசத்தலாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.கலைமகள் கைக்கே சென்று வந்த அந்த பேனா..புத்தகங்கள்,பின்னூட்டங்கள்,முதல் முதல் வாங்கிய பொருட்கள்..என்று லிஸ்ட் நீண்டாலும் பொக்கிஷமான உங்கள் பொருட்கள் எத்தனை ஆண்டு சென்றாலும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் தானே!தொடருங்கள்..
பதிலளிநீக்குAsiya Omar March 14, 2013 at 9:54 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//அழைப்பினை ஏற்று பொக்கிஷங்கள் பற்றி இத்தனை விரிவாக அசத்தலாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார். கலைமகள் கைக்கே சென்று வந்த அந்த பேனா..புத்தகங்கள், பின்னூட்டங்கள், முதல் முதல் வாங்கிய பொருட்கள்..என்று லிஸ்ட் நீண்டாலும் பொக்கிஷமான உங்கள் பொருட்கள் எத்தனை ஆண்டு சென்றாலும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் தானே!தொடருங்கள்..//
தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான அசத்தலான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும். //
பதிலளிநீக்குபொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய அறிவுரைகள்.
இன்றும் கூட என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் மிகவும் பொக்கிஷமாக நினைத்து பலமுறை படித்து மகிழ்வது உண்டு. பின்னூட்டம் கொடுத்தவருக்கு பொறுமையாக பதில்களும் எழுதுவது உண்டு.
பொக்கிஷமாய் நாம் நினைக்கும் பொருட்கள் சிலருக்கு அற்பமாய் தெரியும் என்பது உண்மை தான்.
பக்கத்துவீட்டு பையன் ஒருவன் அவன் படித்த போது அவன் உபயோகித்த கலர்சிலேட்டு குச்சிகள், குட்டியாக போன பென்சில்கள் உடைந்த பேனாக்கள் எல்லாம் அவன் படிக்கும் போது கொண்டு போன அலுமினிய பெட்டியில் வைத்து பாதுகாக்கிறான்.
அவன் வீட்டார் அவனை கேலி செய்கிறார்கள் ஆனாலும் அதை தூர எறிய மனம் வரவில்லை அந்த பையனுக்கு.
நானும் ஒரு சூட்கேஸ் நிறைய கோல நோட்டுக்கள், கிழிந்து நைந்து போனது, கண்பேட்டி துணியில் பின்னும் டிஸைன்(முதுகுவலிக்க கிராப்ட் நோட்டில் வரைந்தவற்றையும்) நான் விருப்பபாடமாக எடுத்துக் கொண்ட வரலாறூ ஆல்பம், மன்னர்கள் வாழ்க்கை கலை , போர், யாருக்கு பின் யார் என்று தயார் செய்த ஆல்பம் ,இந்தியவரைபடத்தில் அவர்கள் ஆண்ட இடங்களை குறித்த ஆல்பம் எல்லாம் வைத்து இருக்கிறேன். பழைய சமையல் குறிப்பு புத்தகங்கள் நான் கைபட எழுதியவையும் இருக்கிறது.
கோமதி அரசு March 14, 2013 at 10:19 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய அறிவுரைகள்.//
//பொக்கிஷமாய் நாம் நினைக்கும் பொருட்கள் சிலருக்கு அற்பமாய் தெரியும் என்பது உண்மை தான். //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும், தங்களின் பொக்கிஷங்கள் பற்றியும், தங்கள் பக்கத்துவீட்டுச் சிறுவனின் பொக்கிஷங்களைப்பற்றியும் பகிர்ந்துள்ள விஷயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
இன்றும் கூட என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் மிகவும் பொக்கிஷமாக நினைத்து பலமுறை படித்து மகிழ்வது உண்டு. பின்னூட்டம் கொடுத்தவருக்கு பொறுமையாக பதில்களும் எழுதுவது உண்டு. //
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டங்கள் மறுபடியும் படிக்க தூண்டும்.
என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ? இருப்பினும் நான் அவற்றைப்பற்றி பகிரத்தான் போகிறேன், என் அடுத்த சில பதிவுகளில்.//
அடுத்தபதிவுகளில் வரும் பொக்கிஷங்கள் அறிய ஆவல்.
கோமதி அரசு March 14, 2013 at 10:24 PM
நீக்குதங்களின் மீண்டும் வருகைக்கு மகிழ்ச்சி.
*****இன்றும் கூட என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் மிகவும் பொக்கிஷமாக நினைத்து பலமுறை படித்து மகிழ்வது உண்டு. பின்னூட்டம் கொடுத்தவருக்கு பொறுமையாக பதில்களும் எழுதுவது உண்டு.*****/
//உங்கள் பின்னூட்டங்கள் மறுபடியும் படிக்க தூண்டும்.//
அப்படியா, சந்தோஷம் மேடம். இப்போதெல்லாம் வெகுவாகக் குறைத்துக்கொண்டு விட்டேன்.
*****என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ? இருப்பினும் நான் அவற்றைப்பற்றி பகிரத்தான் போகிறேன், என் அடுத்த சில பதிவுகளில்.*****
//அடுத்தபதிவுகளில் வரும் பொக்கிஷங்கள் அறிய ஆவல்.//
தங்களின் ஆவலுக்கு மிக்க நன்றி.
”போகப்போகத்தெரியும் .... இந்தப்பூவின் வாஸம் புரியும் ”
என்பது போல கடைசியில் எல்லோருமே ”இது ஒரு பொக்கிஷமே தான்” என்று ஏகமனதாக ஏற்றுக்கொள்ளுமாறு என் பதிவினை முடிக்க உள்ளேன். தயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள்.
ரொம்ப அருமையான பதிவு... யார் வீட்டில் தான் சண்டை வராமல் இருக்கிறது சார் ! எங்கள் வீட்டில் தினமும் ஒரு போர், கடைசியில் நீங்க சொனது போல சுபம் தான் :) உங்க மனைவி புகைப்படம் இருந்த போடுங்களேன் ?? பார்க்கணும் போல இருக்கு :) If u think about Privacy, vendan sir ! :)
பதிலளிநீக்குhttp://recipe-excavator.blogspot.com
Sangeetha Nambi March 14, 2013 at 10:49 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//ரொம்ப அருமையான பதிவு... //
மிக்க மகிழ்ச்சி.
//யார் வீட்டில் தான் சண்டை வராமல் இருக்கிறது சார் ! எங்கள் வீட்டில் தினமும் ஒரு போர், கடைசியில் நீங்க சொனது போல சுபம் தான் :) //
தம்பதியினரிடையே சண்டை சச்சரவே இல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று அவர்கள் வாய் பேச முடியாதவர்களாகவோ அல்லது காது கேளாதவராகவோ தான் இருக்க வேண்டும்.
அதுபோல சண்டை சச்சரவுகள் வராவிட்டால், உப்பு சப்பில்லாத உணவை உட்கொள்வது போலல்லவா இருக்கும்.
காரசாரமான உணவுகளையும், காரசாரமான விவாதங்களையும் நான் பொறுமையாக ரஸித்து மகிழக்கூடியவன்.
எதிராளி தொண்டை கிழிய நூறு வார்த்தைகள் பேசிய பிறகே, என்னிடமிருந்து ஒரு வார்த்தை வெளிப்படும்.
அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக ரஸிப்பேன்.
//உங்க மனைவி புகைப்படம் இருந்த போடுங்களேன் ?? பார்க்கணும் போல இருக்கு :) If u think about Privacy, vendan sir ! :)
http://recipe-excavator.blogspot.com//
நாங்கள் எங்களுக்குள் தனிமையில் சுவாரஸ்யமாக சண்டைபோடும் புகைப்படங்கள் ஏதும் கைவசம் இல்லை.
இருப்பினும் பிறர் பார்வையில்
“ஆஹா, எத்தனை உத்தமமான ஒற்றுமையான தம்பதியினர்”
என்று வியந்து பாராட்டிடும் புகைப்படங்கள் சில ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
அதற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
http://gopu1949.blogspot.in/2011/07/2.html
http://gopu1949.blogspot.in/2011/07/5.html
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
[ஆண்டாள் சந்ந்தியில் இருப்பவர்]
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அசத்தலான பாராட்டுக்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும், தங்களின் ஆவலைத் தெரியப்படுத்தி கேட்டுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
மேற்படி பதிவுகளில் உள்ள படங்களைப்பார்த்து விட்டு, ஏதேனும் கருத்து அளித்துவிட்டுச் செல்லுங்கள், ப்ளீஸ்.
எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி !
நீக்குPMG.Pathy May 14, 2013 at 6:03 PM
நீக்கு//எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி !//
வாருங்கள் வணக்கம். தங்களின் பின்னூட்டம் இங்கு இடையில் வந்து உட்கார்ந்திருப்பதை இப்போது தான் நான் கவனித்தேன். தங்களுக்கான என் பதில் கடைசியில் 128 ஆவதாக உள்ளது. தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள், ஐயா.
உங்கள் பேனாவை, விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றி அருளிய அந்த கலைவாணி சரஸ்வதி தேவியார் பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குமாமியார் பதிவு படிக்க வேண்டும்.
கோமதி அரசு March 14, 2013 at 10:50 PM
நீக்குவாருங்கள். மீண்டும் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//உங்கள் பேனாவை, விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றி அருளிய அந்த கலைவாணி சரஸ்வதி தேவியார் பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்து இருக்கிறேன்.//
மிகவும் சந்தோஷம்.
//மாமியார் பதிவு படிக்க வேண்டும்.//
ஆஹா, பேஷா படியுங்கோ.
படித்துவிட்டு மறக்காமல் தங்கள் கருத்தினை அங்கு பதிவு செய்யுங்கோ.
மிக்க நன்றி.
பொக்கிஷங்கள் என்று நாம் பாதுகாக்கும் சில பொருட்கள் பிறர் கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும் நமக்கு அவை பொக்கிஷங்களே!
பதிலளிநீக்குஅவற்றின் மூலம் கிடைக்கும் மலரும் நினைவுகள் காலத்தால் அழிக்க முடியாதவை.
பொக்கிஷம் என்பது நமக்கு இனிய நினைவுகளை கொடுப்பதாலேயே அவை பொக்கிஷமாகி விடுகின்றன.
உங்களது முன்னுரையே ஒரு பொக்கிஷம்தான்.
தொடருங்கள்.
தொடர்கிறோம்.
அடுத்த 'பொக்கிஷ' தொடர் பதிவு கோமதி அரசுவா?
Ranjani Narayanan March 14, 2013 at 11:11 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷங்கள் என்று நாம் பாதுகாக்கும் சில பொருட்கள் பிறர் கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும் நமக்கு அவை பொக்கிஷங்களே!
அவற்றின் மூலம் கிடைக்கும் மலரும் நினைவுகள் காலத்தால் அழிக்க முடியாதவை. பொக்கிஷம் என்பது நமக்கு இனிய நினைவுகளை கொடுப்பதாலேயே அவை பொக்கிஷமாகி விடுகின்றன. //
அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.
//உங்களது முன்னுரையே ஒரு பொக்கிஷம்தான்.//
ஆஹா! இதை நீங்கள் சொல்லி நான் கேட்கவே என் மனதுக்கு ஜில்லுனு உள்ளது. ;)
//தொடருங்கள். தொடர்கிறோம்.//
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
/// நாம் பொக்கிஷம் எனக்கருதி மிகவும் ஆசையாக பாதுகாத்து, அடிக்கடி உபயோகித்த பொருட்கள், மற்றொரு காலக்கட்டத்தில் நமக்கே பொக்கிஷமாகத் தோன்றாமல் கூடப்போகலாம்... ///
பதிலளிநீக்கு100% உண்மை... பொருட்கள் மட்டுமல்ல... இன்ன பிற அன்பு உள்ளங்களும்...
பல பிரச்சனைகள் வந்தாலும், ஒரு அளவிற்கு மீறாமல், முடிவில் சுபம் என்பதால் சந்தோசம் தானே... வாழ்க்கையின் சுவாரஸ்யம் கூட அது தானே...
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி...
திண்டுக்கல் தனபாலன் March 14, 2013 at 11:12 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
*****நாம் பொக்கிஷம் எனக்கருதி மிகவும் ஆசையாக பாதுகாத்து, அடிக்கடி உபயோகித்த பொருட்கள், மற்றொரு காலக்கட்டத்தில் நமக்கே பொக்கிஷமாகத் தோன்றாமல் கூடப்போகலாம்... *****
//100% உண்மை... பொருட்கள் மட்டுமல்ல... இன்ன பிற அன்பு உள்ளங்களும்...//
மிகவும் நல்ல கருத்து. அன்பு உள்ளங்கள், திடீரென பாராமுகமாக இருந்தாலே நம்மால் அதைத்தாங்கிக்கொள்ளவே முடியாமல் தான் உள்ளது.
//பல பிரச்சனைகள் வந்தாலும், ஒரு அளவிற்கு மீறாமல், முடிவில் சுபம் என்பதால் சந்தோசம் தானே... வாழ்க்கையின் சுவாரஸ்யம் கூட அது தானே...//
ஆம். இறைவன் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை எங்கெங்கோ வைத்து, அதில் ஓர் சந்தோஷத்தையும் வைத்து, பாடாய்ப்படுத்தி நம்மை பம்பரமாய் ஆட்டி வருகிறான் என்பதே உண்மை..
//அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி...//
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பொக்கிஷம் பற்றி மிக அருமையாக விவரமாக எழுதியிருக்கீங்க. நீங்க கொடுத்திருக்கும் முன்னுரை மிகச்சிறப்பு.
பதிலளிநீக்கு//என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். //
ஒருவருக்கு பொக்கிஷமாக இருப்பது மற்றவருக்கு குப்பையாக தெரியலாம் என்பது உண்மைதான்.
உங்க மற்ற பதிவுகளையும் திரும்பிப்படிக்கிறேன்.
RAMVI March 14, 2013 at 11:42 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷம் பற்றி மிக அருமையாக விவரமாக எழுதியிருக்கீங்க. நீங்க கொடுத்திருக்கும் முன்னுரை மிகச்சிறப்பு.//
மிகவும் சந்தோஷம்.
*****என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். *****
//ஒருவருக்கு பொக்கிஷமாக இருப்பது மற்றவருக்கு குப்பையாக தெரியலாம் என்பது உண்மைதான். //
புரிதலுக்கு நன்றி.
//உங்க மற்ற பதிவுகளையும் திரும்பிப்படிக்கிறேன்.//
ஆஹா, மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
பொக்கிஷமாய் பாதுகாத்துவரும் பொருள்களை வாழ்க்கை துணை
பதிலளிநீக்குஒப்புக்கொள்வதில்லை தான்..
அருமையான சுப சஷ்ட்டாகத்தில் அமைந்த
வாழ்க்கைத்துணைக்குப் பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி March 14, 2013 at 11:48 PM
நீக்குவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ. வணக்கம்.
//பொக்கிஷமாய் பாதுகாத்துவரும் பொருள்களை வாழ்க்கை துணை ஒப்புக்கொள்வதில்லை தான்..//
தாங்களாவது இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே! ;)
//அருமையான சுப சஷ்டாஷ்டகத்தில் அமைந்த வாழ்க்கைத்துணைக்குப் பாராட்டுக்கள்..//
;)))))
வாய்ச் சண்டைகளும் ஏற்பட்டாலும், அது மண்டை உடையும் அளவுக்குப்போகவே போகாது. அதுபோலப்போக நான் விடவும் மாட்டேன்.
பதிலளிநீக்குகைவசம் எப்போதும் ஹெல்மெட் தயாராக இருக்கும்..!
சண்டையில் உடையாத
நீக்குகொண்டை போட்ட
மண்டைக்குப் பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி March 14, 2013 at 11:49 PM
நீக்கு*****வாய்ச் சண்டைகளும் ஏற்பட்டாலும், அது மண்டை உடையும் அளவுக்குப்போகவே போகாது. அதுபோலப்போக நான் விடவும் மாட்டேன். *****
//கைவசம் எப்போதும் ஹெல்மெட் தயாராக இருக்கும்..!//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))
இராஜராஜேஸ்வரி March 16, 2013 at 3:38 AM
நீக்கு//சண்டையில் உடையாத கொண்டை போட்ட மண்டைக்குப் பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..//
ஏதேதோ நானும்
“சொல்லத்தான் ..... நினைக்கிறேன்.”
ஆனாலும் வேண்டாம்.
அடுக்குமொழிக்கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ;)))))
மாற்றங்கள் மட்டுமே என்றும்
பதிலளிநீக்குமாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.
இவற்றில் பொக்கிஷங்கள் தரும் மகிழ்ச்சி என்றும் மாறுவதில்லை ..
நாளாக நாளாக அவற்றின் - antic value தங்கம் போல ஏற்றம் பெறுவது உணரக்கூடிய உண்மை..!
இராஜராஜேஸ்வரி March 14, 2013 at 11:56 PM
நீக்கு//மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை. இவற்றில் பொக்கிஷங்கள் தரும் மகிழ்ச்சி என்றும் மாறுவதில்லை ..//
ஆம். முழுவதுமாக மனதளவில் அப்படியே இதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
//நாளாக நாளாக அவற்றின் - antic value தங்கம் போல ஏற்றம் பெறுவது உணரக்கூடிய உண்மை..!//
தங்கமான கருத்துக்கள் தான். நமக்குள் ஏதோ ஒரே அலைவரிசையில் எண்ண ஓட்டங்கள் உள்ளன என்பதையும் நன்கு உணரமுடிகிறது. ;)
மிகவும் சந்தோஷம், மேடம்.
அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.
பதிலளிநீக்குவாழ்ந்து கற்கும் அருமையான வாழ்க்கைப்பாடத்திற்கு வாழ்த்துகள்...
இராஜராஜேஸ்வரி March 14, 2013 at 11:59 PM
நீக்கு*****அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும். *****
//வாழ்ந்து கற்கும் அருமையான வாழ்க்கைப்பாடத்திற்கு வாழ்த்துகள்...//
வேறு வழி?????
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான பல அனுபவக்கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், ஐந்துமுறை அழகான தாமரை மலர்களை மலரச்செய்து, இந்த என் பதிவினைப் பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ள நல்ல பண்புக்கும், அன்பிற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
தாங்கள் பாது காத்து வரும் பொக்கிஷங்கள் சுவாரஸ்யமாய் இருக்கிறது. விசாஹா ஹரி அவர்களினால் எழுத பட்ட பேனாவை நினைவாக வைத்திருப்பதும் உங்கள் நினைவுக்கான பொக்கிஷங்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் எழுத்துக்கள் பிரசுரமான பத்திரிக்கைகளை பொக்கிஷமாக வைத்திருப்பது உண்மையில் விலை மதிப்பில்லா சொத்துக்கள்தான். நானும் அப்படி நினைத்துதான் என்னுடைய படைப்புகள் பிரசுரமான நூற்றுக்கணக்கான புத்தகங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். படிப்பதற்காக யாருக்கும் கொடுத்தால் திரும்பி வராமல் போய்விடுமோ என்று புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை. ஓய்வாக இருக்கும் போது மீண்டும் புரட்டி பார்த்து மகிழ்வேன்.
பதிலளிநீக்குவாழ்க்கையில் விட்டுகொடுத்தல் போன்ற பண்புகளையும் இதில் சொல்லி இந்த பதிவை சிறப்பித்து விட்டீர்கள். ஒரே அலைவரிசை கொண்ட இணையர்கள் அரிதுதான் என்றாலும் விட்டுகொடுத்து சிறப்பாக வாழ்வதுதான் நம் பண்பாடு. மிக்க நன்றி சார்!
உஷா அன்பரசு March 15, 2013 at 12:09 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//தாங்கள் பாது காத்து வரும் பொக்கிஷங்கள் சுவாரஸ்யமாய் இருக்கிறது. விசாஹா ஹரி அவர்களினால் எழுத பட்ட பேனாவை நினைவாக வைத்திருப்பதும் உங்கள் நினைவுக்கான பொக்கிஷங்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் எழுத்துக்கள் பிரசுரமான பத்திரிக்கைகளை பொக்கிஷமாக வைத்திருப்பது உண்மையில் விலை மதிப்பில்லா சொத்துக்கள்தான்.//
உங்களுக்கும் எனக்கும் இப்படித்தோன்றுவதில் வியப்பேதும் இல்லை தான்.
//நானும் அப்படி நினைத்துதான் என்னுடைய படைப்புகள் பிரசுரமான நூற்றுக்கணக்கான புத்தகங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.//
என்னுடைய மிகப்பெரிய இரண்டு பெட்டிகளையும் உடனே வேலூருக்கு தங்களிடம் SAFE CUSTODY யில் வைத்துக்கொள்ள அனுப்பி விடலாமா என்று நினைக்கத்தோன்றுகிறது.
//படிப்பதற்காக யாருக்கும் கொடுத்தால் திரும்பி வராமல் போய்விடுமோ என்று புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை. //
நான் அதுபோன்ற பொக்கிஷங்களை ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துவிடுவது வழக்கம். ஒன்று நான் படிக்க + CIRCULATIONனுக்கு மற்றொன்று புத்தம் புதிதாக அட்டைமீது, நம் படைப்பு வெளியாகியுள்ள பக்கம் எண் எழுதி, பெட்டியில் போட்டு விடுவேன்.
//ஓய்வாக இருக்கும் போது மீண்டும் புரட்டி பார்த்து மகிழ்வேன்.//
அந்த மகிழ்ச்சியே தனிதான். ;) அதை அனுபவித்தவர்களாலேயே உணர முடியும்.
//வாழ்க்கையில் விட்டுகொடுத்தல் போன்ற பண்புகளையும் இதில் சொல்லி இந்த பதிவை சிறப்பித்து விட்டீர்கள். //
99.99% இன்று விட்டுக்கொடுத்து தான் போகிறார்கள். அதுபோலவே தான் போக வேண்டியது உள்ளது. வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை.
//ஒரே அலைவரிசை கொண்ட இணையர்கள் அரிதுதான்//
ஒரே அலைவரிசை என்பதெல்லாம், ஏதோ கற்பனைக்கும், வாதத்திற்கும் வேண்டுமானால், நினைத்துப்பார்க்க சற்றே மகிழ்ச்சியாக இருக்கும்.
அதுபோல அரிதாக அமைந்தாலும், அந்த வாழ்க்கையும் சுத்த வழுவட்டையாகவே இருக்க முடியும்.
//என்றாலும் விட்டுகொடுத்து சிறப்பாக வாழ்வதுதான் நம் பண்பாடு. மிக்க நன்றி சார்!//
விட்டுக்கொடுத்தால், விண்டுபோகாமல் வாழலாம். அது சிறப்பாகவும் அமைந்தால் மகிழ்ச்சியே! பண்பாடுகள் வாழ்க!
தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கத்திற்கு மாறான மிக நீ......ண்.......ட, அழகான, மனம் திறந்த அரிய பெரிய கருத்துக்களுக்கும், பண்பாட்டு விளக்கங்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
மிக மிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குபெரும்பாலான வீடுகளில் தினம் சண்டை உண்டு. ஆனால் சமாதானப் புறாவை யாராவது ஒருவர் பறக்க விட்டால் ஆயிற்று.
உங்களுடைய இந்தப் பதிவை இளம் தம்பதியர் படித்தால் சண்டையும் சமாதானமும் சகஜமே என்றுணர்வார்கள்.
உங்கள் இந்தப் பதிவில் பொக்கிஷம் பேனா மிகவும் அதிர்ஷ்டம் வாய்த்தது என்று svanubhava பதிவில் படித்துவிட்டேன்.
அடுத்தப் பொக்கிஷப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
rajalakshmi paramasivam March 15, 2013 at 12:13 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//மிக மிக அருமையான பதிவு.//
மிகவும் சந்தோஷம்.
//பெரும்பாலான வீடுகளில் தினம் சண்டை உண்டு. ஆனால் சமாதானப் புறாவை யாராவது ஒருவர் பறக்க விட்டால் ஆயிற்று.
உங்களுடைய இந்தப் பதிவை இளம் தம்பதியர் படித்தால் சண்டையும் சமாதானமும் சகஜமே என்றுணர்வார்கள்.//
அப்படியா, மிக்க மகிழ்ச்சி.
//உங்கள் இந்தப் பதிவில் பொக்கிஷம் பேனா மிகவும் அதிர்ஷ்டம் வாய்த்தது என்று svanubhava பதிவில் படித்துவிட்டேன். //
மிகவும் சந்தோஷம்.
//அடுத்தப் பொக்கிஷப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//
திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் தங்கப்புதையல் பொக்கிஷம் போல, என் பொக்கிஷப்பகிர்வும் வந்துகொண்டே இருக்கும். தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
பொக்கிஷம் பற்றி பொக்கிஷமாய் ஒரு பதிவு! பிடியுங்கள் ஒரு பொக்கே!
பதிலளிநீக்குகே. பி. ஜனா... March 15, 2013 at 12:13 AM
நீக்குவாருங்கள் திரு. கே.பி. ஜனா, சார், வணக்கம்.
//பொக்கிஷம் பற்றி பொக்கிஷமாய் ஒரு பதிவு! பிடியுங்கள் ஒரு பொக்கே!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிய நறுமணம் உள்ள பொக்கேவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பொக்கிஷங்கள் தொடர் அருமையாக ஆரம்பித்திருக்கு. கலைமகள் கைக்கே சென்று வந்த அந்த பேனா நிச்சயம் விலைமதிப்பற்றது.
பதிலளிநீக்குநான் திருமதி விசாகா ஹரி அவர்களை நான் கோவில் செல்லும் வழியில் சிலசமயம் அவர்கள் வீட்டு திண்ணையில் பார்ப்பதுண்டு...:) மடிக்கணினியில் ஏதேனும் பணிகளை செய்து கொண்டிருப்பார்.
எல்லோருடைய ரசனையும் ஒருபோல இருப்பதில்லையே....:) தாங்கள் பொக்கிஷங்களாக வைத்திருக்கும் பொருட்களை பகிருங்கள். நாங்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.
கோவை2தில்லி March 15, 2013 at 12:14 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷங்கள் தொடர் அருமையாக ஆரம்பித்திருக்கு.//
சந்தோஷம்.
//கலைமகள் கைக்கே சென்று வந்த அந்த பேனா நிச்சயம் விலைமதிப்பற்றது.//
ஆம். எனக்கு அதுபோலத்தான் நினைக்கத்தோன்றியது.
//திருமதி விசாகா ஹரி அவர்களை நான் கோவில் செல்லும் வழியில் சிலசமயம் அவர்கள் வீட்டு திண்ணையில் பார்ப்பதுண்டு...:) மடிக்கணினியில் ஏதேனும் பணிகளை செய்து கொண்டிருப்பார்.//
அப்படியா, மிக்க மகிழ்ச்சி.
//எல்லோருடைய ரசனையும் ஒன்று போல இருப்பதில்லையே..)//
அதுபோல இருந்தால் தான் ஆச்சர்யம்.
//தாங்கள் பொக்கிஷங்களாக வைத்திருக்கும் பொருட்களை பகிருங்கள். நாங்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.//
ஆகட்டும். ரொம்பவும் சந்தோஷம். தங்களின் ஆவலுடன் கூடிய ஈடுபாட்டுக்கு என் நன்றிகள்.
தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அருமை. பொக்கிஷத்துக்கு முன்னுரையே ஒரு பதிவைச் சாப்பிட்டு விட்டது! திருமதி விசாகா ஹரி கை பட்ட பேனா நிச்சயம் பொக்கிஷம்தான். நீங்கள் கணவன்-மனைவி சண்டை சமாதானம் பற்றிச் சொல்லியிருப்பவையும் கூடப் பொக்கிஷங்களே.
பதிலளிநீக்குஸ்ரீராம். March 15, 2013 at 12:36 AM
நீக்குவாருங்கள், ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//அருமை. பொக்கிஷத்துக்கு முன்னுரையே ஒரு பதிவைச் சாப்பிட்டு விட்டது! //
ஆம். சாப்பிட்டே விட்டது.
//திருமதி விசாகா ஹரி கை பட்ட பேனா நிச்சயம் பொக்கிஷம்தான்.//
மிக்க மகிழ்ச்சி.
//நீங்கள் கணவன்-மனைவி சண்டை சமாதானம் பற்றிச் சொல்லியிருப்பவையும் கூடப் பொக்கிஷங்களே.//
ஆம். அது மிகச்சிறந்ததோர் பொக்கிஷமே. சந்தேகமே இல்லை. ;)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.
மீண்டும் படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்க்கெனவே பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...
நீக்குஸ்ரீராம். March 15, 2016 at 1:32 PM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
//மீண்டும் படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்க்கெனவே பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...//
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)
மனதிற்குள் பதுக்கி பாதுகாக்க வேண்டிய
பதிலளிநீக்குபொக்கிஷங்கள் ஐயா நீங்கள் பகிர்ந்தவை...
மகேந்திரன் March 15, 2013 at 1:32 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் இன்றைய வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
//மனதிற்குள் பதுக்கி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் ஐயா நீங்கள் பகிர்ந்தவை...//
சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பொக்கிஷக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பொக்கிஷத்தில் பொதிந்துள்ள அர்த்தங்கள் எல்லாமே அருமை உண்மை விட்டு கொடுத்தலின் பண்பும் அருமை பாதுகாக்க பட வேண்டிய விஷயங்கள் நீங்கள் சொன்னவைகளும் கருத்தில்
பதிலளிநீக்குmalar balan March 15, 2013 at 1:49 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//பொக்கிஷத்தில் பொதிந்துள்ள அர்த்தங்கள் எல்லாமே அருமை//
சந்தோஷம்.
//உண்மை விட்டு கொடுத்தலின் பண்பும் அருமை பாதுகாக்க பட வேண்டிய விஷயங்கள் நீங்கள் சொன்னவைகளும் கருத்தில்//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! இன்று காலை, உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு புதுக்கோட்டை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். மறுபடியும் ஒருமுறை உங்கள் பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.
பதிலளிநீக்கு( உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)
தி.தமிழ் இளங்கோ March 15, 2013 at 3:45 AM
நீக்கு//அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!/
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//இன்று காலை, உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு புதுக்கோட்டை சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். மறுபடியும் ஒருமுறை உங்கள் பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருவேன். //
சந்தோஷம் ஐயா. நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, மெதுவாகவே வாருங்கள்,. ஐயா.
( உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்! இது ஒரு தகவலுக்காக மட்டும்.)
மிக்க நன்றி, ஐயா.
Thank you for your good presentation of the article.
பதிலளிநீக்குLife is to Love
Life is to learn
Life is not for entertainment only It should also lead us to enlightenment of our soul
Nobody is is perfect
But we bust find some good things in everybody and try to
bridge the gap for our mutual benefit and upliftment.
அய்யா நானும் என் மனைவியும் சஷ்டாங்க ஜாதககாரார்கள் தான் ஆனால் அது எனக்கு தெரியாது. பெண் பார்த்தபோது இருவருக்கும் பிடித்துப்போனது.சஷ்டாங்க ஜாதகமாக இருந்தாலும் பரவாயில்லை நான் அவருடன் அனுசரித்துபோகிறேன் என்று சொன்னதாக பிறகு எனக்கு தெரியவந்தது. 37 ஆண்டுகள் கடந்துவிட்டோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் உள்ளத்தை நன்றால் தெரிந்துகொண்டால் இருவர் என்பது மாறிவிடும் இரண்டும் ஒன்றாய் கலந்துவிடும் என்பதுபோல் ஆற்றில் வெள்ளம் வந்தபோதும் வரண்டபோதும் ஒரே நிலையில் அன்பால் பிணைக்கப்பட்டு வாழ்வு செல்கிறது. my wife is my wife,my wife is my love
even though some good things still have to happen in our family.
we believe in GOD and we are independantly ,peacefully leading our life with mutual love and sacrifice.
Pattabi Raman March 15, 2013 at 4:03 AM
நீக்குWELCOME TO YOU Mr. PATTABIRAMAN Sir. வாங்கோ, வணக்கம்.
//Thank you for your good presentation of the article.//
Thanks a Lot for your appreciation, Sir.
//Life is to Love; Life is to learn; //
Superb Sir. Excellent words ! ;)
//Life is not for entertainment only It should also lead us to enlightenment of our soul.//
Very Nice Sir. So Happy Sir, to hear this.
//Nobody is perfect //
But, You are mentioned this here PERFECTLY Sir. Very True Words ! ;)
//But we bust find some good things in everybody and try to bridge the gap for our mutual benefit and upliftment.//
Yes Yes Correct. அச்சா, பஹூத் அச்சா!
>>>>>
VGK >>>> Mr Pattabi Raman Sir [2]
நீக்கு//ஐயா நானும் என் மனைவியும் சஷ்டாங்க ஜாதககாரார்கள் தான் //
அப்படியா, வாழ்த்துகள் ஐயா. மனமார்ந்த வாழ்த்துகள்.
//ஆனால் அது எனக்கு தெரியாது.//
நல்லதாப்போச்சு, சார். குழப்பத்திற்கே இடமில்லையே.
//பெண் பார்த்தபோது இருவருக்கும் பிடித்துப்போனது.//
கேட்கவே ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது, சார். மகிழ்ச்சி.
//சஷ்டாங்க ஜாதகமாக இருந்தாலும் பரவாயில்லை நான் அவருடன் அனுசரித்து போகிறேன் என்று சொன்னதாக பிறகு எனக்கு தெரியவந்தது. //
ஆஹா, கொடுத்து வைத்த தம்பதியினர், நீங்கள் இருவருமே.
//37 ஆண்டுகள் கடந்துவிட்டோம்.//
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
//ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் உள்ளத்தை நன்றால் தெரிந்துகொண்டால் இருவர் என்பது மாறிவிடும் இரண்டும் ஒன்றாய் கலந்துவிடும் என்பதுபோல் ஆற்றில் வெள்ளம் வந்தபோதும் வரண்டபோதும் ஒரே நிலையில் அன்பால் பிணைக்கப்பட்டு வாழ்வு செல்கிறது.//
ஒன்றாய்க் கலந்துபோய் அன்பால் பிணைக்கப்பட்டுள்ள உங்கள் இருவரையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. சபாஷ்.
>>>>>>
VGK >>>> Mr. PATTABI RAMAN Sir [3]
நீக்கு//my wife is my wife,my wife is my love
even though some good things still have to happen in our family.
we believe in GOD and we are independently, peacefully leading our life with mutual love and sacrifice.//
மிக்க மகிழ்ச்சி சார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
உங்களுக்கு வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடைபெறும். கவலை வேண்டாம்.
Sir,
ஷஷ்டாஷ்டக தோஷம் உள்ள பல ஜாதகக்காரர்களை [தம்பதியினரை] நான் இதுவரை ஆராய்ச்சி செய்துள்ளேன்.
நாம் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
என் ஆராய்ச்சியில் அனைவருமே [நானும் என் மனைவியும் உள்பட] எப்போதுமே மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் மட்டுமே இருப்பவர்கள்..
சின்னச்சின்ன விஷயங்களில் வாக்குவாதங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் அதற்கெல்லாம் காரணமாக அடிப்படையில் உள்ளது, ஒருவர் மீது மற்றொருவருக்குள்ள ஆழ்ந்த அன்பு மட்டுமே.
POSSESSIVENESS மட்டுமே.
நான் புனர்பூசம், அவள் உத்திராடம்.
அதே போல என் பெரிய அக்கா [வயது 73-74] உத்திராடம்.
அவள் கணவர் புனர்பூசம் [வயது 83-84]
அங்கும் வாக்குவாதங்கள் உண்டு.
இருப்பினும் அன்போ அன்பு தான்.
மிகவும் நிறைவான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
மிகப்பெரிய சம்சாரி, ஏராளமான குழந்தைகள். நிறைய பேரன் பேத்திகள் கொள்ளுப்பேரன் உள்பட எடுத்தாச்சு. எந்தக் குறைவும் இன்றி ராஜயோக வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்கள்.
என் ஆராய்ச்சிகளின் முடிவுப்படி, மித்ர ஷஷ்டாஷ்டகம் இருக்குதா என்று பார்த்துவிட்டு, அதன் பின் அவ்வாறு மித்ர ஷஷ்டாஷ்டகம் உள்ளவர்களுக்கு விவாஹம் செய்து வைப்பது தான் நல்லதோ என நினைக்கிறேன்.
தாங்களும் என் ஆராய்ச்சியில் மேலும் ஒரு உதாரண தம்பதியாக அமைந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.
மேலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் திருமாங்கல்யத்தை சமர்பித்து, அவர்களால் பரிபூரண அனுக்கிரஹம் செய்யப்பட்டு, ந்டந்தது எங்கள் விவாஹம்.
சாஸ்திரப்படி நான்கு நாட்கள் ஒளபாஸ்னம் செய்யப்பட்டது.
மாலை மாற்றும் போது, பெண்ணுக்கு மாலை எடுத்துக்கொடுத்த மஹான் [தாய் மாமா] யார் என்று உங்களுக்கே தெரியும்.
இப்படியெல்லாம் இருக்கும் போது எங்கள் இல்வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமான ஒன்று என்பதைத் தாங்களே அறிந்துகொள்ள முடியும் தானே!
நான் ஏற்கனவே உங்களிடம் எவ்வளவோ விஷயங்கள் மெயில் மூலமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இந்தப்பதிவினில் நகைச்சுவைக்காகவும், விறுவிறுப்புக்காகவும், சமுதாய விழிப்புணர்வுக்காகவும் சிலவிஷயங்களை நான் இவ்வாறு தான் எழுதுவது வழக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அன்பின் அடிப்படையில் அமைந்துள்ள தங்களின் இல்வாழ்க்கை பற்றிச்சொன்ன அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சந்தோஷம். சந்தோஷம். சந்தோஷம்.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
நீங்கள் பேசப் பேச நாங்கள் கேட்பது போலிருக்கும்
பதிலளிநீக்குஉஙகள் நடையும், விசாலமான(ஜன்னல்)பார்வையும்
பதிவை சூடான அடையாய் சுவைபட வைக்கிறது வைகோ சார்.
vasan March 15, 2013 at 4:21 AM
நீக்குவாருங்கள், சார். வணக்கம் சார். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
//நீங்கள் பேசப் பேச நாங்கள் கேட்பது போலிருக்கும்
உஙகள் நடையும், விசாலமான(ஜன்னல்)பார்வையும்
பதிவை சூடான அடையாய் சுவைபட வைக்கிறது வைகோ சார். //
ஆஹா, இந்த ஒரே பின்னூட்டத்தில் என் 5-6 பதிவுகளையும் இழுத்து வந்து கொடுத்து அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.
உங்கள் பதிவே ஒரு பொக்கிஷமாகி விட்டது.
பதிலளிநீக்குஆத்மாவின் பொக்கிஷம் அருமை.
உருவம் கொண்ட பொக்கிஷங்கள் இனிமேல் வரப்போகிறவை. நிறைவாக இருக்கிறது கோபு சார். உயர்ந்த மனிதர்களுக்கான உயர்ந்த பதிவு.
வல்லிசிம்ஹன் March 15, 2013 at 5:31 AM
நீக்குவாங்கோ. நமஸ்காரங்கள்.
//உங்கள் பதிவே ஒரு பொக்கிஷமாகி விட்டது.//
அடடா, தன்யனானேன்.
//ஆத்மாவின் பொக்கிஷம் அருமை. உருவம் கொண்ட பொக்கிஷங்கள் இனிமேல் வரப்போகிறவை. //
ஆம். .... மேலும் சில லெளகீக விஷயங்கள் இடம்பெறும்.
//நிறைவாக இருக்கிறது கோபு சார். உயர்ந்த மனிதர்களுக்கான உயர்ந்த பதிவு.//
ரொம்பவும் சந்தோஷம் இந்தப்பதிவினை தயவுசெய்து கடைசிவரை தொடர்ந்து பார்த்து / படித்து வாருங்கள்.
மேலும் மேலும் பல்வேறு பொக்கிஷங்கள் வரக்கூடும்.
உண்மையில் பொக்கிஷம் என்றால் என்ன? என்ற தெளிவும் இறுதியில் கிடைக்கக்கூடும்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !
பதிலளிநீக்குரிஷபன் March 15, 2013 at 5:32 AM
நீக்குவாருங்கள், வணக்கம் சார்.
//எங்கள் பொக்கிஷம் நீங்கள்தான் ஸார் !//
அடடா, இதுபோல எதையும் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லணும் என்று தான் நானும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது போல முடியவில்லையே, குருநாதா!
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், சார்.
தயவுசெய்து தொடர்ந்து வருகை தாருங்கள், சார்.
அன்புடன்
வீ.........ஜீ
[ VGK ]
வணக்கம் ஐயா.
பதிலளிநீக்குஉங்களின் “பொக்கிஷம்“ பதிவை நாங்கள் பொக்கிஷமாக மனத்தில்
பாதுகாக்கும் படி எழுதி இருக்கிறீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட திருமதி விசாஹா ஹரி அவர்களையும்
படித்துவிட்டு வந்தேன். அருமையான கேள்வி பதிலுடன் அமைந்த பதிவு.
அவர்களின் கைபட்ட பேனா பேறு பெற்றது தான்.
ஆனால்... உங்களுக்கு சான்சு ஐயா...
நான் எதையாவது பொக்கிஷமாக வைத்திருந்தால் அது திருடு போய்விடும்....!!! அதனால் எந்தப் பொருளையும் நான் பொக்கிஷமாக நினைத்துப் பாதுகாத்து வைப்பதில்லை. உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளம் உடைய மனிதர்களின் கருத்துக்களை மட்டுமே என் மனத்தில் பொக்கிஷமாகப் பாது காக்கிறேன்.
பதிவு மனத்தில் நிற்கிறது கோபாலகிருஷ்ணன் ஐயா.
அருணா செல்வம் March 15, 2013 at 6:17 AM
நீக்கு//வணக்கம் ஐயா.//
வாருங்கள். வணக்கம்.
தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. .
//உங்களின் “பொக்கிஷம்“ பதிவை நாங்கள் பொக்கிஷமாக மனத்தில் பாதுகாக்கும் படி எழுதி இருக்கிறீர்கள்.//
மிகவும் சந்தோஷம்.
//நீங்கள் குறிப்பிட்ட திருமதி விசாஹா ஹரி அவர்களையும்
படித்துவிட்டு வந்தேன். அருமையான கேள்வி பதிலுடன் அமைந்த பதிவு.//
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
//அவர்களின் கைபட்ட பேனா பேறு பெற்றது தான்.//
ஆம். நிச்சயமாக. எனக்கு அது போலத்தான் தோன்றியது.
//ஆனால்... உங்களுக்கு சான்சு ஐயா... நான் எதையாவது பொக்கிஷமாக வைத்திருந்தால் அது திருடு போய்விடும்....!!! அதனால் எந்தப் பொருளையும் நான் பொக்கிஷமாக நினைத்துப் பாதுகாத்து வைப்பதில்லை.//
”போனது போக பொண்டாட்டி பிள்ளை மிச்சம்” என்று சொல்லுவர்கள். நானும் கூட அதுபோலத்தான்.
என்னிடம் இருந்த எவ்வளவோ விஷயங்கள் காணாமல் போய் விட்டன. நினைவுகளில் மட்டும் அவை நீங்காத இடம் பெற்றுள்ளன.
அதனால் எதைப்பற்றிச் சொல்வது எதை விடுவது என்றே எனக்கும் புரியாமல் தான் உள்ளது.
ஏதோ இருப்பதில், நினைவில் நிற்பதில் சிலவற்றைப் பற்றி மட்டும் பேசலாம் பகிரலாம் என்று தான் நினைத்துள்ளேன்.
// உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளம் உடைய மனிதர்களின் கருத்துக்களை மட்டுமே என் மனத்தில் பொக்கிஷமாகப் பாது காக்கிறேன்.//
மிகவும் சந்தோஷம்.
//பதிவு மனத்தில் நிற்கிறது கோபாலகிருஷ்ணன் ஐயா.//
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இது Just ஒரு ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து வாருங்கள், ப்ளீஸ்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.
எங்களது அழைப்பை ஏற்று தொடர்வதற்கு முதலில் மிக்க நன்றி அண்ணா .
பதிலளிநீக்குபொக்கிஷத்துக்கு ..முன்னுரை ,விளக்கவுரை அனைத்தும் FANTABULOUS !!!!!
angelin March 15, 2013 at 6:48 AM
நீக்குவாங்கோ நிர்மலா, வணக்கம்.
//எங்களது அழைப்பை ஏற்று தொடர்வதற்கு முதலில் மிக்க நன்றி அண்ணா.//
எழுதத்தூண்டி வாய்ப்பு அளிததற்கு என் நன்றிகள்.
ஏற்கனவே தங்களுக்காக நான் எழுதிய ஓர் தொடர்பதிவு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
தலைப்பு: ”ஊரைச்சொல்லவா! பேரைச்சொல்லவா!!”
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
அதுபோலவே இதுவும் சிறப்பாகவே அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
//பொக்கிஷத்துக்கு ..முன்னுரை, விளக்கவுரை அனைத்தும் FANTABULOUS !!!!!//
மிகவும் சந்தோஷம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உதாரணமாக நமது அன்புக்குரியவர், ஓர் ’ரவாலாடு’ போன்ற தின்பண்டம் நமக்குத் தருகிறார். நம் அன்புக்கு உரியவரான அவர் நமக்குக் கொடுக்கும் அது, நம்மைப்பொறுத்தவரை ஒரு பொக்கிஷம் தான். //
பதிலளிநீக்குஇதில் எனது சொந்த அனுபவம் ஒன்று இருக்கு ..படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது ..கண்டிப்பாக விரைவில் கூறுகிறேன் :))
என்னை பொறுத்தவரை இந்த பதிவே எனக்கு மிகசிறந்த பொக்கிஷமாக தோன்றுகிறது அருமையான அறிவுரைகளுடன்.
ஆஆஆ மீ லாண்டட்..... முழுவதும் படிச்சேன்ன்... அருமையான எழுத்து, அழகான பதிவு.
நீக்குசிலை என்றால் அது சிலைதான்.. வெறும்
கல் என்றால் அது கல்தான்..
அப்படித்தான் பொக்கிஷமும்... அது ஒவ்வொருவரின் பார்வையில்தான் தங்கியிருக்கிறது.
பின்பு வருகிறேன்ன்... நீங்கள் கூறியிருக்கும் லிங்குகளும் படிக்கோணும்.
அதுவரை என் இந்தப் பின்னூட்டத்தையும் உங்கட அந்த கொப்பி பேஸ்ட் பகுதியில சேர்த்திடோணும் சொல்லிட்டேன்ன்:) இல்லாட்டில் உச்சிப்பிள்ளையார் கனவில வந்து மிரட்டுவார் :))).
ஊசிக்குறிப்பு:..
கோபு அண்ணன்.. அப்பகுதியில் அஞ்சுட உந்தப் பின்னூட்டத்தை சேர்க்கத் தேவையில்லை:))))..
ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈ... இதுக்குப் பனிஸ்மெண்ட்டா கோல்ட்ஃபிஸ்ஸு ...ஏதாவது சமையல் குறிப்பு போட்டிடப்போறாவே மீ இப்ப என்ன பண்ணுவேன்ன்ன்:)
angelin March 15, 2013 at 6:54 AM
நீக்கு*****உதாரணமாக நமது அன்புக்குரியவர், ஓர் ’ரவாலாடு’ போன்ற தின்பண்டம் நமக்குத் தருகிறார். நம் அன்புக்கு உரியவரான அவர் நமக்குக் கொடுக்கும் அது, நம்மைப்பொறுத்தவரை ஒரு பொக்கிஷம் தான்.*****
//இதில் எனது சொந்த அனுபவம் ஒன்று இருக்கு ..படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது ..கண்டிப்பாக விரைவில் கூறுகிறேன் :))//
*எனக்கு அப்போ 21 வயது. என் அன்புக்குரிய பெண்ணுக்கு 17 வயது. அவள் எனக்கு ஒரு ரவாலாடு தருகிறாள்* என்ற என் சொந்த அனுபவத்தை நான் ஏற்கனவே என் கதை ஒன்றில் கொண்டு வந்துள்ளேன்.
நீங்கள் மிகவும் ரஸித்துப்படிச்ச கதை தான் அது.
பாவம் நம் அதிராவுக்குத்தான் அந்த சூப்பர் கதையை இன்னும் படிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
இணைப்பு இதோ: [அதிராவுகாக மட்டுமே]
http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html
//என்னை பொறுத்தவரை இந்த பதிவே எனக்கு மிகசிறந்த பொக்கிஷமாக தோன்றுகிறது அருமையான அறிவுரைகளுடன்.//
இதைக்கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, நிர்மலா.
மிக்க நன்றி.
athira March 16, 2013 at 12:16 AM
நீக்குவாங்கோ அதிரா, வாங்கோ.
//ஆஆஆ மீ லாண்டட்.....//
அப்பாடி, பிள்ளையாருக்கு பூசணிக்காய் இல்லை இல்லை ஸாரி தேங்காய் [ஒன்று மட்டும்] உடைக்கணும்.
//முழுவதும் படிச்சேன்ன்... அருமையான எழுத்து, அழகான பதிவு.//
ரொம்பவும் சந்தோஷம்.
//சிலை என்றால் அது சிலைதான்.. வெறும் கல் என்றால் அது கல்தான்.. அப்படித்தான் பொக்கிஷமும்... அது ஒவ்வொருவரின் பார்வையில்தான் தங்கியிருக்கிறது.//
ஆஹா, அசத்தலான கருத்துக்கள். அதிராவா? கொக்கா? ;)))))
//பின்பு வருகிறேன்ன்... நீங்கள் கூறியிருக்கும் லிங்குகளும் படிக்கோணும்.//
சீக்கரம் வாங்கோ. சில காணாமல் போனவர்களைப்பற்றி சொல்லியிருந்தெனே! அவங்க வருவாங்களா? இல்லை ரெட்டைத்தேங்காயாக உடைத்து விடட்டுமா? என் மனது இன்னும் அங்கலாய்க்கிதூஊஊஊஊ.!!!!!
கோபு >>>> அதிரா [2]
நீக்கு//அதுவரை என் இந்தப் பின்னூட்டத்தையும் உங்கட அந்த கொப்பி பேஸ்ட் பகுதியில சேர்த்திடோணும் சொல்லிட்டேன்ன்:) இல்லாட்டில் உச்சிப்பிள்ளையார் கனவில வந்து மிரட்டுவார் :))).//
ஆஹா, நீங்களே இப்படி என்னை மிரட்டுரீங்களே!!!! அந்த உச்சிப்பிள்ளையார் வேறு கனவில் வந்து மிரட்டுவாரா? போச்சு போச்சு - நான் நல்லா மாட்டீஈஈஈஈ.
//ஊசிக்குறிப்பு:..
கோபு அண்ணன்.. அப்பகுதியில் அஞ்சுட உந்தப் பின்னூட்டத்தை சேர்க்கத் தேவையில்லை:))))//
அவங்க பாவம் இல்லையா? ரொம்ப ரொம்ப நல்லவங்க. தங்கமான ஜொலிக்கும் கோல்டன் ஃபிஷ் இல்லையோ!! ;)))))
//ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈ... இதுக்குப் பனிஸ்மெண்ட்டா கோல்ட்ஃபிஸ்ஸு ...ஏதாவது சமையல் குறிப்பு போட்டிடப்போறாவே மீ இப்ப என்ன பண்ணுவேன்ன்ன்:)//
ஏற்கனவே உங்களுக்காகவே ஆசை ஆசையா ஏதேதோ போடப்போவதாகச் சொல்லியிருக்காங்கோ. ;)
பொக்கிஷப்பதிவில் உங்களின் பொக்கிஷங்களான பழைய பதிவுகளுக்கும் இணைப்புக் கொடுத்து சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி! அருமை!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நீக்குபிடித்த பின்னுட்டங்ககளை தனியாக வச்சிருகிங்களா !!!!!!!!!! அப்ப அதை ஒரு பதிவா போட்ருங்க சார்.ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஷஷ்டாங்க (சங்கட பொருத்தம்)ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்துட்டுதான் இருக்கு,மாமியார் பதிவும் பேனாவை பாத்தவுடன் அந்த கச்சேரி சபா பதிவும் எனக்கு நினைவிற்கு வந்தது.அங்கு உங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஒரு பெண்ணையும் சந்தித்திர்கள் என்று நினைக்கிறேன்.தொடருவோம்
பதிலளிநீக்கு///பிடித்த பின்னுட்டங்ககளை தனியாக வச்சிருகிங்களா !!!!!!!!!! அப்ப அதை ஒரு பதிவா போட்ருங்க சார்.///
நீக்குhaa..haa...haa.. கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈ:)))...
எனக்கொரு டவூட்டு.. அப்போ பிடிக்காத பின்னூட்டங்கள் எனவும் இருக்கா கோபு அண்ணன்?:))) எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல?:))
thirumathi bs sridhar March 15, 2013 at 7:15 AM
நீக்குவாங்கோ, வணக்கம். செளக்யமா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சுத்தமா மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்.
//பிடித்த பின்னுட்டங்ககளை தனியாக வச்சிருகிங்களா !!!!!!!!!! அப்ப அதை ஒரு பதிவா போட்ருங்க சார்.//
அடாடா, சும்மாவே கம்முனு இருக்க மாட்டீங்களே! ;)))))
//ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஷஷ்டாங்க (சங்கட பொருத்தம்) ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்துட்டுதான் இருக்கு//
அச்சச்சோ! அப்படியா சொல்றீங்கோ. அப்போ எல்லோருமே பாவம் தான்.
//மாமியார் பதிவும் பேனாவை பாத்தவுடன் அந்த கச்சேரி சபா பதிவும் எனக்கு நினைவிற்கு வந்தது.//
ஏதோ கொஞ்சமாவது ஞாபகம் வந்தவரை எனக்கும் மகிழ்ச்சி தான்.
//அங்கு உங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஒரு பெண்ணையும் சந்தித்திர்கள் என்று நினைக்கிறேன்.//
அது வேறு பதிவு. “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தொடர்பதிவு. 2012 மார்ச்சில் வெளியிடப்பட்டது.
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பெண் அல்ல. என்னுடன் ஒன்றாக Contact Seminar Class Attend செய்த பெண்.
//தொடருவோம்//
தொடர்ந்து வாருங்கள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
athira March 16, 2013 at 12:23 AM
நீக்கு///பிடித்த பின்னுட்டங்ககளை தனியாக வச்சிருகிங்களா !!!!!!!!!! அப்ப அதை ஒரு பதிவா போட்ருங்க சார்.///
haa..haa...haa.. கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈ:)))...
அடடா, ஒருத்தருக்கு இரண்டுபேரா என்னை இப்படிக் குடைய ஆரம்பிச்சுட்டாகளே ! கடவுளே, கடவுளே !!
//எனக்கொரு டவூட்டு.. அப்போ பிடிக்காத பின்னூட்டங்கள் எனவும் இருக்கா கோபு அண்ணன்?:))) எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல?:))//
எல்லாமே எனக்குப் பிடித்த பின்னூட்டங்கள் மட்டுமே, அதிரா.
இருந்தாலும் மிகசிறந்த பின்னூட்டங்களாக சிலவற்றை நான் கருதுவதும் உண்டு.
அதாவது உங்களைப்போல சிலர் முழுவதும் ஊன்றிப்படித்து அலசி ஆராய்ந்து, மிக நுணுக்கமாக, விரிவாக, அழகாக குறை நிறைகளை எடுத்துச்சொல்லி விமர்சனம் செய்திருப்பார்கள்.
அவற்றை மட்டும் நான் Highlight செய்து தனியாக சேமிப்பது உண்டு.
பொக்கிஷம் என்புது,பிறர் கண்ணுக்குப்படாத, நாம் உண்மையாகவே
பதிலளிநீக்குமதிக்கும் உண்மைப் பொருள்கள். பிறர் கண்ணுக்குப் பட்டாலும்,அவர்களுக்கு மதிப்பு தெரியாது.ஞாபகத்திலிருக்கும்,பொக்கிஷங்களும், கண் முன்னே இருக்கும் பொக்கிஷங்களும், காப்பாற்றப்பட வேண்டிய பொக்கிஷங்களும் நினைவில் எப்போதுமிருக்கும். உங்கள் எழுத்து முறையே அபாரம். இன்னும் நீங்கள் பொக்கிஷங்களை எழுதும்போது, நாங்களும் அவைகளில் பங்கு கொண்டு,பொக்கிஷங்களை அனுபவிக்கிறோம். தொடர்ந்து
பொக்கிஷங்களில் பங்கு வேண்டும். அள்ளி அள்ளித் தாருங்கள்
அன்புடன்
்
Kamatchi March 15, 2013 at 7:51 AM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//பொக்கிஷம் என்புது, பிறர் கண்ணுக்குப்படாத, நாம் உண்மையாகவே மதிக்கும் உண்மைப் பொருள்கள். பிறர் கண்ணுக்குப் பட்டாலும், அவர்களுக்கு மதிப்பு தெரியாது. ஞாபகத்திலிருக்கும், பொக்கிஷங்களும், கண் முன்னே இருக்கும் பொக்கிஷங்களும், காப்பாற்றப்பட வேண்டிய பொக்கிஷங்களும் நினைவில் எப்போதுமிருக்கும்.
உங்கள் எழுத்து முறையே அபாரம். இன்னும் நீங்கள் பொக்கிஷங்களை எழுதும்போது, நாங்களும் அவைகளில் பங்கு கொண்டு, பொக்கிஷங்களை அனுபவிக்கிறோம்.
தொடர்ந்து பொக்கிஷங்களில் பங்கு வேண்டும். அள்ளி அள்ளித் தாருங்கள். அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாங்கோ.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
சிலருக்குப் பொக்கிஷமாகத் தெரிபவை சிலருக்கு சாதாரணமாகத் தெரியலாம். சிலவேளை பொக்கிஷமாகத் தெரிபவையே காலப் போக்கில் காணாமல் போய்விடலாம். எப்படி இருந்தாலும் உங்கள் பொக்கிஷங்கள் காலத்தால் அழியாது . போற்றிப் பாதுகாக்க வேண்டியவையே . இவற்றின் தொகை அதிகரித்துப் போகவும் கூடும் . அது சிலருக்கு அதிகமாகவும் தெரியும். ஆனாலும் உங்கள் மனதுக்கு அது குறைவாகவே என்றும் படும். என்னைப் பொறுத்தளவில் உறவுகளும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷங்களே .
பதிலளிநீக்குசந்திரகௌரி March 15, 2013 at 9:25 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//சிலருக்குப் பொக்கிஷமாகத் தெரிபவை சிலருக்கு சாதாரணமாகத் தெரியலாம். சிலவேளை பொக்கிஷமாகத் தெரிபவையே காலப் போக்கில் காணாமல் போய்விடலாம். எப்படி இருந்தாலும் உங்கள் பொக்கிஷங்கள் காலத்தால் அழியாது . போற்றிப் பாதுகாக்க வேண்டியவையே . இவற்றின் தொகை அதிகரித்துப் போகவும் கூடும் . அது சிலருக்கு அதிகமாகவும் தெரியும். ஆனாலும் உங்கள் மனதுக்கு அது குறைவாகவே என்றும் படும். என்னைப் பொறுத்தளவில் உறவுகளும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷங்களே .//
தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களை வெகு அழகாகப்பட்டியலிட்டுள்ளதற்கும், பொருட்களைவிட அதிகம் நாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் ’மனித உறவுகளே’ என அசத்தலாகக் கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
உங்களுடைய பதிவுகளும் பொக்கிஷங்கள்.
பதிலளிநீக்குகணவன் - மனைவி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.....
மற்ற பொக்கிஷங்களையும் தெரிந்து கொள்ள ஆவலுடன்!
வெங்கட் நாகராஜ் March 15, 2013 at 9:44 AM
நீக்குவாருங்கள், வெங்கட்ஜி, வணக்கம்.
//உங்களுடைய பதிவுகளும் பொக்கிஷங்கள்.//
சந்தோஷம்.
//கணவன் - மனைவி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.....//
மகிழ்ச்சி.
//மற்ற பொக்கிஷங்களையும் தெரிந்து கொள்ள ஆவலுடன்!//
தங்களின் அன்பான வருகை + கருத்துக்கள் + மற்ற பொக்கிஷங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவல் முதலியவற்றிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Wow re wow Vai Go Sir. Oru super salute thaaan ungalku. I want to read rest of the them too.
பதிலளிநீக்கு///Vai Go Sir.//
நீக்குஅச்சச்சோ விஜி... கோபு அண்ணன் எங்கயும் போகல்ல:))... அவரைப் பார்த்து ....
ஏன்(vai) போறீங்க(go) சேர்?.. எனக் கேட்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
Vijiskitchencreations March 15, 2013 at 7:14 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//Wow re wow Vai Go Sir. Oru super salute thaaan ungalku. I want to read rest of the them too.//
தங்களின் சல்யூட்டுக்கு பதிலாக என் ’ராயல் சல்யூட்’டையும் ஏற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து வருகை தாருங்கள்.
தங்களின் அன்பான வருகை + கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
athira March 16, 2013 at 12:20 AM
நீக்கு///Vai Go Sir.//
அச்சச்சோ விஜி... கோபு அண்ணன் எங்கயும் போகல்ல:))... அவரைப் பார்த்து .... ஏன்(vai) போறீங்க(go) சேர்?.. எனக் கேட்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))//
;)))))
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்கு// என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். //
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும், வாயும் வயிறும் வேறுதானே? மனமும் அப்படித்தான்.
// இந்த ஷஷ்டாஷ்டக தோஷ ஜாதகங்களை வைத்தே நான் ஒரு நகைச்சுவைச் சிறுகதை எழுதி வெளியிட்டுள்ளேன். //
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறுகதை. திருமணத்திற்குப் பிறகு கிட்டதட்ட எல்லோருமே ஷஷ்டாஷ்டக தோஷ ஜாதகக்காரர்களாவே மாறிவிடுகிறார்கள்.
// விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும். //
குடும்ப வாழ்க்கையில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் எது என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.
காகிதப்பூக்கள், மணித்துளி இரண்டு வலைத்தளங்களிலும் சென்று பார்த்தேன். அறிமுகத்திற்கு நன்றி!
தி.தமிழ் இளங்கோ March 15, 2013 at 7:38 PM
நீக்கு//அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.
//தாயும் பிள்ளையும் ஆனபோதிலும், வாயும் வயிறும் வேறுதானே? மனமும் அப்படித்தான்.//
ஆமாம் ஐயா. வாஸ்தவம் தான்.
//சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறுகதை. திருமணத்திற்குப் பிறகு கிட்டதட்ட எல்லோருமே ஷஷ்டாஷ்டக தோஷ ஜாதகக்காரர்களாவே மாறிவிடுகிறார்கள்.//
ஆமாம், ஆமாம். அதுபோலவே தான். அதனால் ஜாதகமெல்லாம் பார்த்து மிகவும் அலட்டிக்கவே வேண்டியது இல்லை.
ஏதோ ஓரளவு மனதுக்குத் திருப்தியாக இருந்தால் துணிந்து இறங்கிவிட வேண்டியது தான்.
எப்படியும் திருமணத்திற்குப்பிறகு அவரவரின் சுயரூபம் என்ன என்பது, அந்த ஜோடிகளுக்குள் ஒளிவுமறைவு எதும் இல்லாமல் தெரியத்தான் போகிறது. ;)))))
//குடும்ப வாழ்க்கையில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் எது என்பதை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். //
மிக்க மகிழ்ச்சி ஐயா
//காகிதப்பூக்கள், மணித்துளி இரண்டு வலைத்தளங்களிலும் சென்று பார்த்தேன். அறிமுகத்திற்கு நன்றி!//
ரொம்பவும் சந்தோஷம் ஐயா,.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.
மிக அருமையான் பொக்கிஷ பதிவு,.
பதிலளிநீக்கு//விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும். //
100 க்கு 100 உண்மை, க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ்/
நானும் நிறைய பொக்கிஷங்கள் பாது காத்து வருகிறேன், என்னையும் அழைத்து இருந்தார்கள்,
Jaleela Kamal March 16, 2013 at 7:00 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//மிக அருமையான் பொக்கிஷ பதிவு,//
மிக்க மகிழ்ச்சி..
*****விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.*****
//100 க்கு 100 உண்மை, க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ்//
மிகவும் சந்தோஷம்.
//நானும் நிறைய பொக்கிஷங்கள் பாதுகாத்து வருகிறேன், என்னையும் அழைத்து இருந்தார்கள்//
தாங்களும் பதிவு எழுதுங்கள், வெளியிட்டபின் எனக்கு மெயில் மூலம் மறக்காமல் லிங்க் அனுப்புங்கள். வாழ்த்துகள்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பொக்கிஷம் பற்றிய தங்கள் கருத்துக்கள் யாவும் அசத்தலான பொக்கிஷங்கள் தாம்!
பதிலளிநீக்குMano Saminathan March 16, 2013 at 8:51 AM
நீக்குவாருங்கள் மேடம், வணக்கம்.
//பொக்கிஷம் பற்றிய தங்கள் கருத்துக்கள் யாவும் அசத்தலான பொக்கிஷங்கள் தாம்!//
;) சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
You are hundred percent corrct sir. My kolanotes, craft notes, needleworkbooks(mostly collected from my school days) are being kept in the book shelf very carefully.
பதிலளிநீக்குBut when a day comes to clean things, my family members first notice is my pokisham only.
I dontknow howfar i can safeguard those things.
Waiting to read your next post sir.
viji
viji March 16, 2013 at 7:26 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//You are hundred percent correct sir. My kolanotes, craft notes, needle workbooks (mostly collected from my school days) are being kept in the book shelf very carefully. But when a day comes to clean things, my family members first notice is my pokisham only. I don’t know howfar i can safeguard those things.Waiting to read your next post sir. - viji//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், சிறுவயதிலிருந்து சேகரித்து பாதுகாத்து வரும் தங்களின் பொக்கிஷங்களான கோலநோட், கைவேலைகள் நோட், ஊசிநூல் தையல் நோட் போன்றவற்றை பாதுகாப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளத்தற்கும், இதன் அடுத்த பகுதியைப் படிக்கும் ஆவலுடன் தங்கள் இருப்பதாகச் சொல்லியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
பதிலளிநீக்குசகோதரர் ரிஷபன் சொன்ன கருத்துதான் நூறு சதவீதம் சரி , நீங்கதான் சார் எங்க பொக்கிஷம் .
அஜீம்பாஷா March 16, 2013 at 10:41 PM
நீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//சகோதரர் ரிஷபன் சொன்ன கருத்துதான் நூறு சதவீதம் சரி , நீங்கதான் சார் எங்க பொக்கிஷம்.//
;))))) சந்தோஷம்.
திரு. ரிஷ்பன் அவர்கள் இதுபோல ஏதாவது விளையாட்டாகச் சொல்லுவார்கள்.
திரு. ரிஷபன் அவர்கள் தான் என் நலம் விரும்பி, என் எழுத்துலக மானஸீக குருநாதர். என்னை அவ்வப்போது மிகவும் ஊக்குவித்து பத்திரிகைகளிலும், வலைப்பதிவிலும் எழுத வைத்தவர். என் இனிய நண்பர்.
இவரைப்பற்றி என் ஒருசில பதிவுகளில் அவ்வப்போது எழுதியுள்ளேன்.
அவற்றில் ஒருசில இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
ஐம்பதாவது பிரஸவம் [நகைச்சுவை]
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
[தாயுமானவள் சிறுகதை - இறுதிப்பகுதி]
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html
முன்னுரை என்னும் முகத்திரை
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பொக்கிஷப் பதிவுப் பகிர்வுக்கு நன்றி. நானும் ஸ்ரீரங்கத்திலேயே இருக்கேன். ஆனால் இன்னமும் விசாகா ஹரியைப் பார்த்தது கூடக் கிடையாது. அதிகமாய் வெளியே போறதில்லை. அவங்க கைகளால் தொட்டுக் கொடுக்கப் பட்ட பேனாவை நீங்கள் மிகவும் உயர்வாக மதிப்பது தெரிந்து ஆச்சரியமாய் இருந்தது. பொக்கிஷப் பேனாவைக் குறித்து எழுதிய உங்கள் மற்றப் பதிவுகளையும் இனிமேல் படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஜோதிட ஆராய்ச்சி வேறே பண்ணுவீங்க போல! ஒவ்வொரு பின்னூட்டமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகிறது. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எங்கள் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
Geetha Sambasivam March 17, 2013 at 12:52 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பொக்கிஷப் பதிவுப் பகிர்வுக்கு நன்றி.//
சந்தோஷம். உங்கள் நன்றிக்கு என் நன்றிகள்.
//நானும் ஸ்ரீரங்கத்திலேயே இருக்கேன். ஆனால் இன்னமும் விசாகா ஹரியைப் பார்த்தது கூடக் கிடையாது. அதிகமாய் வெளியே போறதில்லை.//
அதனால் பரவாயில்லை. எதற்கும் ஒரு நேரம், காலம், பிராப்தம் எல்லாம் வரவேண்டித்தான் உள்ளது. என்ன செய்வது?
//அவங்க கைகளால் தொட்டுக் கொடுக்கப் பட்ட பேனாவை நீங்கள் மிகவும் உயர்வாக மதிப்பது தெரிந்து ஆச்சரியமாய் இருந்தது. //
;))))) ஆம். மிக உயர்வான பொக்கிஷமாகவே தான் அதை எனக்கு நினைக்கத்தோன்றியது. எனக்கு அன்று அந்த பாக்யம் கிடைத்தது எனக்கும் மிகுந்த ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
//பொக்கிஷப் பேனாவைக் குறித்து எழுதிய உங்கள் மற்றப் பதிவுகளையும் இனிமேல் படிக்க வேண்டும். //
அவசியமாகப்படியுங்கோ. அந்த நிகழ்ச்சி பற்றி மிகவும் சுவையாகவே எழுதியுள்ளேன்.
//ஜோதிட ஆராய்ச்சி வேறே பண்ணுவீங்க போல!//
அதெல்லாம் ஒன்றும் இல்லை. பல்வேறு ஜோஸ்யர்களிடம் நான் சென்று வந்த அனுபவம் மட்டும் உள்ளது.
நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஒவ்வொரு ஜோஸ்யர் சொல்லும் கதையையும் காதால் கேட்கவும், உடனே அதை ஒரு நோட்டுப்போட்டு, மளமளவென்று எழுதிக்கொள்ளவும் ஆசைப்படுவேன். அதெல்லாம் ஒரு காலம். இப்போது யாரிடமும் நான் ஜோஸ்யம் பார்க்கப்போவது இல்லை.
//ஒவ்வொரு பின்னூட்டமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகிறது.//
ஆமாம். என் பதிவுகளில் உள்ள விஷயங்களைவிட, அதற்கு வரும் பின்னூட்டங்களில் நிறைய கதைகள் இருக்கும். அதில் பலவும் மிகுந்த சுவாரஸ்யமாகவே இருக்கும்.
// உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எங்கள் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.//
மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.
தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எங்களை மனதார வாழ்த்தி அருளியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
மூன்றுநாளாக முயல்கிறேன். எரர் மெசேஜே வருது. இன்னிக்கும் அது தான் வந்திருக்கு. பின்னூட்டம் போனதாய்த் தெரியலை. மறுபடி முயன்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குGeetha Sambasivam March 17, 2013 at 12:53 AM
நீக்கு//மூன்றுநாளாக முயல்கிறேன். எரர் மெசேஜே வருது. இன்னிக்கும் அது தான் வந்திருக்கு. பின்னூட்டம் போனதாய்த் தெரியலை. மறுபடி முயன்று பார்க்கிறேன்.//
சமயத்தில் எனக்கும் இதுபோலத்தான் ஆகிவிடுகிறது.
அதனாலேயே நான் சின்னச்சின்ன பின்னூட்டங்களாக, ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்ட்ங்களாகப் பிரித்துப்பிரித்து, பிறருக்கு அனுப்பி வருகிறேன்.
பெரியதாக அடித்து முடித்தபின் அது ஒழுங்காகப் போய்ச்சேராமல் ERROR MESSAGE வந்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாகவே உள்ளது.
அதனால் பெரும்பாலும் நான் COMPOSE MAIL க்குப்போய் DRAFT ஆக அடித்து வைத்துக்கொண்டு, அதை பிறகு COPY + PASTE செய்து, பின்னூட்டமாக அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் அது ஒருவேலைக்கு இருவேலையாகத்தான் உள்ளது.
இருப்பினும், ஒழுங்காக போய்ச்சேராத போது, மீண்டும் மீண்டும் முயற்சித்து அனுப்ப அது. செளகர்யமாக உள்ளது.
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
நீக்கு//அதனால் பெரும்பாலும் நான் COMPOSE MAIL க்குப்போய் DRAFT ஆக அடித்து வைத்துக்கொண்டு, அதை பிறகு COPY + PASTE செய்து, பின்னூட்டமாக அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் அது ஒருவேலைக்கு இருவேலையாகத்தான் உள்ளது.
இருப்பினும், ஒழுங்காக போய்ச்சேராத போது, மீண்டும் மீண்டும் முயற்சித்து அனுப்ப அது. செளகர்யமாக உள்ளது. //
நீங்கள் இவ்வாறு COMPOSE செய்யும்போது இடையில் தடங்கல் ஏற்பட்டால், தேவையற்ற பதற்றமும் நேரவிரயமும் ஏற்படும். சில்சமயம் இரண்டு தடவை பின்னூட்டம் பதிவாகிவிட வாய்ப்பும் உண்டு.
எனவே, தாங்கள் இவ்வாறு செய்வதைவிட MICROSOFT WORD – இல் உங்கள் பதிவுகளை பதிவு செய்து கொண்டு சேமிப்பு (SAVE) செய்யவும். அதனை சரிபார்த்த பின்னர் COPY AND PASTE முறையில் உங்கள் வலைத்தளத்தின் வழியாகவோ அல்லது e – mail முறையிலோ பின்னூட்டங்களையும் பதிவுகளையும் வெளியிட்டால் நேரமும் மிச்சமாகும், இண்டர்நெட் கட்டணமும் மிச்சமாகும்.
தி.தமிழ் இளங்கோ March 17, 2013 at 3:57 AM
நீக்கு//அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//
வணக்கம் ஐயா. என் LAPTOP இல் MICROSOFT WORD பக்கமும் திறக்க மறுக்கிறது. கஷ்டப்பட்டு திறந்தாலும் அதில் தமிழில் அடிக்கவோ சேமிக்கவோ முடிவது இல்லை. அதில் ஏதேதோ கோளாறுகள் உள்ளன.
COMPOSE MAIL என்றால் எனக்கு சுலபமாக உள்ளது. அது அவ்வப்போது AUTO SAVE ஆகிவிடுகிறது. சரியான முறையில் அனுப்பப்பட்டு விட்டால் அதை அப்படியே DISCARD செய்து அழித்தும் விட முடிகிறது.
ஏற்கனவே BSNL Broad Band Maximum Usage Plan with High Speed Net Work என்பதில் நான் சேர்ந்துள்ளதால், நெட் கட்டணம் உபரி ஆக செலுத்தப்பட வாய்ப்பு ஏதும் இல்லை ஐயா.
தங்களின் மீண்டும் வருகைக்கும், சில விளக்கங்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.
நிறைய விஷயங்கள் எனக்குப் புரிவதும் இல்லை.
நேரில் நீங்கள் இவ்விடம் வரும்போது தான் கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்குள் என்ன கேட்க வேண்டுமோ அதுவே சுத்தமாக மறந்தும் போகும். ;)
வணக்கம் ஐயா.
பதிலளிநீக்குபொக்கிஷமான பொக்கிஷம்தான் உங்கள் பதிவு.
பாதுகாப்பாக வைத்திருக்கும் அனைத்துமே பொருளோ நினைவோ எதுவென்றாலும் பொக்கிஷங்களே.
உங்கள் எழுத்துலகப் பொக்கிஷங்கள் அருமை.
இவற்றை இப்படி காகிதப் பதிவுகளாக தாள்களாக வைத்திருக்காமல் எந்தக் காலகட்டத்தில் எதில் பிரசுமானது என்னும் முன் அட்டையினையும் உங்கள் பதிவு இடம்பெற்ற பக்கங்களையும் பிரதிசெய்து கணனி மயமாக்கி வையுங்கள். காலத்திற்கும் இருக்கும்.
தாள் எனில் இற்றுப்போய், பக்கம் தொலைந்துபோய், யாராவது எடுத்து நாசம் செய்துவிட்டுத் தொலைந்தும் போய், இதையெல்லாவற்றையும் விட இடத்தைபிடித்து அடசலாக இல்லாமல் தேவையான இடத்தில் மட்டும் சேகரிக்கப்பட்டு பொக்கிஷம் பாதுகாக்கப்பட்டுவிடலாமே.
பொக்கிஷமான பொருட்களெனில் எம் மனதில் அதற்கு இடம் இருக்கும்வரை வேறு வழியின்றி பாதுகாக்கத்தான் வேண்டும்.
நல்ல பதிவு + பகிர்வு. வாழ்த்துக்கள்!
இளமதிMarch 17, 2013 at 1:33 AM
நீக்கு//வணக்கம் ஐயா.//
வாங்கோம்மா! வணக்கமம்மா! என்னுடைய சமீபத்திய பல பதிவுகளில் என்னால் உங்களைக்காணவே முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. செளக்யமா இருக்கீங்களா?
//பொக்கிஷமான பொக்கிஷம்தான் உங்கள் பதிவு.//
சந்தோஷம்.
//பாதுகாப்பாக வைத்திருக்கும் அனைத்துமே பொருளோ நினைவோ எதுவென்றாலும் பொக்கிஷங்களே.//
பொருட்களைவிட, நினைவுகள் தான் மிகச்சிறந்த பொக்கிஷங்கள். மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ;))))) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//உங்கள் எழுத்துலகப் பொக்கிஷங்கள் அருமை. இவற்றை இப்படி காகிதப் பதிவுகளாக தாள்களாக வைத்திருக்காமல் எந்தக் காலக்கட்டத்தில் எதில் பிரசுமானது என்னும் முன் அட்டையினையும் உங்கள் பதிவு இடம்பெற்ற பக்கங்களையும் பிரதிசெய்து கணனி மயமாக்கி வையுங்கள். காலத்திற்கும் இருக்கும்.//
அருமையான ஐடியா. நானும் இதைப்பற்றியே தான் இப்போது தீவிரமாக யோசித்துக்கொண்டு இருக்கிறேன். தாங்கள் அதையே ஆலோசனையாகச் சொல்லியுள்ளது சந்தோஷமாக உள்ளதும்மா.
//தாள் எனில் இற்றுப்போய், பக்கம் தொலைந்துபோய், யாராவது எடுத்து நாசம் செய்துவிட்டுத் தொலைந்தும் போய், இதையெல்லாவற்றையும் விட இடத்தைபிடித்து அடசலாக இல்லாமல் தேவையான இடத்தில் மட்டும் சேகரிக்கப்பட்டு பொக்கிஷம் பாதுகாக்கப்பட்டுவிடலாமே.//
சாதகபாதகங்களை அலசி, புட்டுப்புட்டு வைத்துள்ளீர்களம்மா. மிக்க நன்றி.
//பொக்கிஷமான பொருட்களெனில் எம் மனதில் அதற்கு இடம் இருக்கும்வரை வேறு வழியின்றி பாதுகாக்கத்தான் வேண்டும்.//
நம் மனதில் எப்போதுமே இடம் கொடுத்திருப்பதால் மட்டுமே, நீங்காத நினைவுகளாகிய அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பொக்கிஷமாகப் பாதுகாக்கவும் வேண்டியதாக உள்ளது.
//நல்ல பதிவு + பகிர்வு. வாழ்த்துக்கள்!//
;) சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் மனதை மேலும் அங்கலாய்க்க விடாமல் என் சமீபத்திய மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு, கருத்துச்சொல்லி விடுங்கோ, ப்ளீஸ்.
அருமையான பொக்கிசப் பகிர்வு. அடுத்து படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
பதிலளிநீக்குமாதேவி March 18, 2013 at 7:07 AM
பதிலளிநீக்குவாருங்கள், வணக்கம்.
//அருமையான பொக்கிஷப் பகிர்வு. அடுத்து படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும், மேலும் படிக்கக் காத்திருக்கும் ஆவலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
98 வது கருத்தாக இது வருகிறது.
பதிலளிநீக்குபொக்கிசப் பதிவு மிக நன்றாக உள்ளது.
பாராட்டுகள்.
மீண்டும் வருவேன்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi March 18, 2013 at 1:31 PM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//98 வது கருத்தாக இது வருகிறது. பொக்கிசப் பதிவு மிக நன்றாக உள்ளது. பாராட்டுகள். மீண்டும் வருவேன். வேதா.இலங்காதிலகம்.//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
"இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்"
பதிலளிநீக்குinge dhinakaran kidaiyaathu neenga solliththaan enakkuth theriyum en valaippu parri vanthiruppathu...romba thanks sir!!sorry no tamil fonts
அன்புடன் அருணா March 19, 2013 at 2:47 AM
பதிலளிநீக்குவாருங்கள், வணக்கம். இந்தப்பதிவின் பின்னூட்ட எண் : 100 தங்களுக்கு அமைந்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களின் முதல் வருகைக்கு என் நன்றிகள், மகிழ்ச்சிகள், சந்தோஷங்கள்.
//"இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்"
inge dhinakaran kidaiyaathu neenga solliththaan enakkuth theriyum en valaippu parri vanthiruppathu...romba thanks sir!!sorry no tamil fonts.
இங்கே தினகரன் கிடையாது. என் வலைப்பூ பற்றி வந்திருப்பது நீங்க சொல்லித்தான் எனக்குத்தெரியும். மிக்க நன்றி சார். தமிழில் அடிக்க இயலாமல் உள்ளதற்கு வருந்துகிறேன்//
நானும் ’தினகரன்’ வழக்கமாகப் படிப்பவன் அல்ல. ஒரு தலைபோகும் அவசரக்காரியமாக ஒரு இடத்திற்கு 17.03.2013 ஞாயிறு காலை செல்ல நேர்ந்தது. [Saloon for Hair Cutting ;) ]
அங்கு எனக்கு அழைப்பு வரும் வரை சற்று நேரம் காத்திருக்க நேர்ந்தது. அங்கிருந்த தினகரன் செய்தித்தாளை புரட்டிய பிறகு அதனுடன் இலவச இணைப்பாக இருந்த ‘வசந்தம்’ பல்சுவை ஸ்பெஷல் என்ற புத்தகத்தையும் புரட்டியபோது, அதில் ஆறாம் பக்கத்தில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் 15 பெண் பதிவர்களைப்பற்றியும் அவர்களின் வலைத்தள முகவரியும் கொடுத்து சிறப்பித்துப்பாராட்டி எழுதியிருந்தார்கள்.
அதனால் அதில் உள்ள 15 minus 1 = 14 பேர்களுக்கும் நான் தகவல் கொடுத்தேன்.
ஒரே ஒருவருக்கு [madhumithaa.blogspot.in] மட்டும் என்னால் தகவல் தர இயலவில்லை.
தங்களின் மெயில் விலாசம் தெரிவித்தால் அந்த இதழின், அந்தக் குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் புகைப்படம் எடுத்து மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். என் மெயில் விலாசம் : valambal@gmail.com
தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Ungalai maathiri famous aaga irundu, yenakkum niraiya azhagaana comments vandaal, kadai yezhudi adu puththagangalil vandaal, naanum ungalai maadiri, yellavatraiyum serththu vaiththiruppen, pokkishmaaga! Rs.10 penaavum pokkishamthaan, ingu!
பதிலளிநீக்குNaan Vishaaka Hariyin periya rasigai. Kandippaa anda pena pokkishamthaan!
Sandhya March 19, 2013 at 8:59 AM
நீக்குவாருங்கள், வணக்கம்.
//Ungalai maathiri famous aaga irundu, yenakkum niraiya azhagaana comments vandaal, kadai yezhudi adu puththagangalil vandaal, naanum ungalai maadiri, yellavatraiyum serththu vaiththiruppen, pokkishmaaga! Rs.10 penaavum pokkishamthaan, ingu!
//உங்களை மாதிரி பிரபலமாக இருந்து//,
நான் பிரபலம் எல்லாம் ஒன்றும் இல்லை. சாதாரணமானவன் மட்டுமே.
//எனக்கும் நிறைய அழகான பின்னூட்டங்கள் வந்தால்//
ஏதோ என் மீதுள்ள தனிப்பட்ட பிரியத்தினாலும், அன்பினாலும், நிறைய அழகான பின்னூட்டங்கள் பலரிடமிருந்தும் வருகின்றன. நான் அவற்றைத்தான் மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதுகிறேன். அவைகள் மட்டுமே நான் தொடர்ந்து எழுதுவதற்கு உற்சாகம் தருவதாக எண்ணி மகிழ்கிறேன். பின்னூட்டமிடும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்..
//கதை எழுதி அது புத்தகங்களில் வந்தால், நானும் உங்களை மாதிரி, எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருப்பேன், பொக்கிஷமாக!//
நாம் கதை எழுதுவதும், அது புத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளிவருவதுமே மிகப்பெரிய அனுபவக் கதைகள் தான். அதற்கு நம்முடைய ஓரளவு எழுத்துத்திறமையையும் தாண்டி மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது. அதனால் நான் இப்போதெல்லாம் அந்தப்பக்கம் போவதையே நிறுத்தி விட்டேன்.
நீங்கள் விடாது தொடர்ந்து முயற்சித்தால் நிச்சயமாக என்னைவிட உங்களால், எழுத்துலகிலும் பத்திரிகையுலகிலும் ஜொலித்திடவும் முடியும் / இதுபோன்ற பொக்கிஷங்களைச் சேர்த்திடவும் முடியும்..
//ரூபாய் பத்து பெறும் பேனாவும் பொக்கிஷம் தான், இங்கு!//
ஆமாம். அது மிகச்சிறந்ததோர் பொக்கிஷமே தான், என்னைப் பொறுத்தவரை.
//Naan Vishaaka Hariyin periya rasigai. Kandippaa anda pena pokkishamthaan!
நான் திருமதி. விசாஹா ஹரி அவர்களின் பெரிய ரஸிகை. கண்டிப்பா அந்தப்பேனா பொக்கிஷமே தான்.//
இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
தங்களின் அன்பான வருகைக்கும், மனம்திறந்து கூறியுள்ள அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் அன்புடன் கூடிய மனமார்ந்த இனிய நன்றிகள்.
VGK >>>>> Mrs. SANDHYA Madam
நீக்குஇந்த என் தொடர்பதிவு முடியும் வரை தொடர்ந்து தயவுசெய்து வருகை தாருங்கள். கருத்தும் கூறுங்கள்.
மேலும் பல பொக்கிஷங்களைக் கண்டு ரஸிக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். //
பதிலளிநீக்குவீட்டுக்கு வீடு வாசப்படி. அளவுதான் வித்தியாசப்படறது.
எங்க வீட்டுலயும் ஒரு நாள் உன் பீரோவுல இருக்கறத எல்லாம் தூக்கி விட்டெறியப்போறேன்னு சொல்லுவார் திருவாளர் ரமணி & கோ (அதான் பிள்ளை, பொண்ணு, போறாத்துக்கு இப்ப மாட்டுப் பொண்ணும்). ஆனா இவங்களுக்கெல்லாம் கடுக்கா குடுத்துட்டு நான் இந்த மாதிரி நிறைய வெச்சிருக்கேன். முக்கியமா புத்தகங்கள்,
என் கணவரின் ஸ்டேட்மெண்ட்: “உங்கம்மா நிறைய சமையல் குறிப்பு, புத்தகம் எல்லாம் சேர்த்து வெச்சிருப்பா. ஆனா சமைக்கறதென்னவோ சாம்பார், ரசம், பொரியல், கூட்டு etc. etc. இப்படித்தான். கேட்டா ரிடையர் ஆனப்பறம்தான் எல்லாம்ன்னு சொல்லிடுவா”.
ஆனா இந்த மனுஷாளுக்கு விதம் விதம் செஞ்சு குடுத்தாலும் சாப்பிட்டத மறந்துடறாளே. என்ன செய்யறது.
இருகைகள் தட்டினால் தானே சப்தம் வரும். நான் எப்போதுமே அனுசரித்து, அட்ஜஸ்ட் செய்து போகும் டைப் அல்லவா. //
மன்னிய கேட்டாதானே தெரியும் இது உண்மையா இல்லையான்னு.
சாதாரணமாக என்னிடம் இருந்த ஒரு பேனாவை, விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றி அருளிய அந்த கலைவாணி சரஸ்வதி தேவியார், யார் என்று அறிய விரும்புவோர், தயவுசெய்து என்னுடைய இந்தப்பதிவினைப் போய்ப்பாருங்கள் + படியுங்கள். //
ம்க்கும். பெரிய ராணுவ ரகசியம். விசாகா ஹரியின் புகைப்படத்தைப் பார்த்ததுமே புரிஞ்சுடுத்தே. ஆனால் உண்மையிலேயே அந்தப் பேனா விலை மதிக்க முடியாத பொக்கிஷம் தான்.
அது சரி. உங்களோட ஒரு பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்கவே நேரத்த காணும். விக்கிரமாதித்தான் கதை மாதிரி ஒண்ணுக்குள்ள ஒண்ணு. ஒரு பதிவில ஓராயிரம் பதிவு இலவச இணைப்பா, மகாபாரதத்தின் கிளைக்கதைகள் மாதிரி.
இருந்தாலும் உங்கள் பதிவுகள் எல்லாமே சுவாரசியமானவை.
எனக்கும் குருவின மிஞ்சின சிஷ்யை ஆக ஆசைதான். அதற்கும் உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும், ஆலோசனைகளும் தேவை.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
JAYANTHI RAMANIMarch 21, 2013 at 11:26 PM
நீக்குவாங்கோ வாங்கோ, வணக்கம். செளக்யமா இருக்கீங்களா?
பார்த்து பல வருஷம் ஆனாப்போல இருக்குது.
*****என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான்.*****
//வீட்டுக்கு வீடு வாசப்படி. அளவுதான் வித்தியாசப்படறது.
எங்க வீட்டுலயும் ஒரு நாள் உன் பீரோவுல இருக்கறத எல்லாம் தூக்கி விட்டெறியப்போறேன்னு சொல்லுவார் திருவாளர் ரமணி & கோ (அதான் பிள்ளை, பொண்ணு, போறாத்துக்கு இப்ப மாட்டுப் பொண்ணும்). ஆனா இவங்களுக்கெல்லாம் கடுக்கா குடுத்துட்டு நான் இந்த மாதிரி நிறைய வெச்சிருக்கேன். முக்கியமா புத்தகங்கள்,//
கடுக்கா கொடுப்பதில் நீங்க பலே பலே கெட்டிக்காரிதான் என்பதைப்புரிந்து கொண்டுள்ளேன்.
14.03.2013 வெளியிட்டுள்ள இந்த என் பதிவுக்கு, இன்று 22.03.2013 அன்று 105 ஆவதாகக் கமெண்ட் கொடுத்துள்ளீர்கள்.
இதற்கிடையில் அவ்வப்போது பேசிய அலைபேசி, எஸ்.எம்.எஸ், மெயில் எல்லாவற்றிலும் நிறையவே அள்ளி அள்ளி கடுக்காய்களை சப்ளை செய்திருந்தீர்கள். ;)))))
இருப்பினும் நீங்கள் அவ்வப்போது எனக்குக் கொடுத்துவரும் கடுக்காய் என் உடம்புக்கு நல்லதே என நானும், நம் லயாக்குட்டிக்காக மட்டுமே, அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகிறேனாக்கும். ;)
>>>>>
VGK >>>> Mrs. JAYANTHI RAMANI Madam [2]
நீக்கு//என் கணவரின் ஸ்டேட்மெண்ட்: “உங்கம்மா நிறைய சமையல் குறிப்பு, புத்தகம் எல்லாம் சேர்த்து வெச்சிருப்பா. ஆனா சமைக்கறதென்னவோ சாம்பார், ரசம், பொரியல், கூட்டு etc. etc. இப்படித்தான். கேட்டா ரிடையர் ஆனப்பறம்தான் எல்லாம்ன்னு சொல்லிடுவா”.
ஆனா இந்த மனுஷாளுக்கு விதம் விதம் செஞ்சு குடுத்தாலும் சாப்பிட்டத மறந்துடறாளே. என்ன செய்யறது. //
ஆஹா, அருமை. தங்கள் சமையல் எப்படியிருக்குமோ ..... ! ஆனால் இங்கு கொடுத்துள்ள சொற்சுவை மிகவும் ராஸிக்கும் படியாக, நல்ல காரசாரமாக, மிகவும் ருசியாகவே உள்ளது.
பொதுவாக எல்லோருமே அப்படித்தான். சிலர் வயிறு முட்ட சாப்பிட்டதும் வாயாற திருப்தியாக பாராட்டுவார்கள். அடுத்த வேளை மீண்டும் பசிக்கும் போது, சாப்பிட்ட பழசெல்லாம் மறந்து போய் விடும்.
இதைத்தான் பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்கிறார்களோ?
[பத்து, பசை, எச்சில் முதலிய எதுவும் பார்க்க மாட்டார்களோ?]
>>>>>
நீக்குVGK >>>> Mrs. JAYANTHI RAMANI Madam [3]
*****இருகைகள் தட்டினால் தானே சப்தம் வரும். நான் எப்போதுமே அனுசரித்து, அட்ஜஸ்ட் செய்து போகும் டைப் அல்லவா.*****
//மன்னிய கேட்டாதானே தெரியும் இது உண்மையா இல்லையான்னு.//
அடடா, எல்லாவற்றையும் போட்டு, திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது போல உடைச்சுப்புடுறீங்களே !
நான் சொன்னால் பேசாம சரின்னு நம்புங்கோ. மன்னியெல்லாம் கேட்டு டென்ஷன் ஆக்காதீங்கோ, ப்ளீஸ்.
>>>>>
VGK >>>> Mrs. JAYANTHI RAMANI Madam [4]
நீக்கு*****சாதாரணமாக என்னிடம் இருந்த ஒரு பேனாவை, விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றி அருளிய அந்த கலைவாணி சரஸ்வதி தேவியார், யார் என்று அறிய விரும்புவோர், தயவுசெய்து என்னுடைய இந்தப்பதிவினைப் போய்ப்பாருங்கள் + படியுங்கள்.*****
//ம்க்கும். பெரிய ராணுவ ரகசியம். விசாகா ஹரியின் புகைப்படத்தைப் பார்த்ததுமே புரிஞ்சுடுத்தே.//
ஹைய்யோ! பெரிய ராணுவ ரகசியமே ஆனாலும் ‘ஜெ’ நினைத்தால் கண்டுபிடிப்பது எளிது தான். ;)))))
//ஆனால் உண்மையிலேயே அந்தப் பேனா விலை மதிக்க முடியாத பொக்கிஷம் தான்.//
அப்பாடி, ஒருவழியா ஒத்துக்கொண்டீங்களே ! சந்தோஷம்.
>>>>>
VGK >>>> Mrs. JAYANTHI RAMANI Madam [5]
நீக்கு//அது சரி. உங்களோட ஒரு பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்கவே நேரத்த காணும். விக்கிரமாதித்தான் கதை மாதிரி ஒண்ணுக்குள்ள ஒண்ணு. ஒரு பதிவில ஓராயிரம் பதிவு இலவச இணைப்பா, மகாபாரதத்தின் கிளைக்கதைகள் மாதிரி.//
தங்களுக்கு நேரம் இருக்காது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். நேரம் இருப்பவர்களுக்குப் பயன்படட்டுமே என்பதற்காக அந்த இணைப்புகள் கொடுத்துள்ளேன். ஆயிரத்தில் ஒருவருக்காவது பயன் படக்கூடும் அல்லவா!
//இருந்தாலும் உங்கள் பதிவுகள் எல்லாமே சுவாரசியமானவை. //
ஆஹா, என்னவோ சொல்லுங்கள் ....... ;)))))
//எனக்கும் குருவின மிஞ்சின சிஷ்யை ஆக ஆசைதான். அதற்கும் உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும், ஆலோசனைகளும் தேவை. அன்புடன் ஜெயந்தி ரமணி//
உங்கள் ஆசை கட்டாயம் நிறைவேறும். என் வாழ்த்துகளும், ஆசிகளும், ஆலோசனைகளும் எப்போதும் உங்களுக்கு மிகச் சுலபமாகவே கிடைக்கும். எப்போதும் நான் உங்கள் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே! ;)
உங்களுக்கான பரிசு ஒன்று எனது வலைப்பூவில் இருக்கிறது வந்து பெற்றுக்கொள்ளவும்...http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html
பதிலளிநீக்குfaiza kader March 25, 2013 at 4:06 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//உங்களுக்கான பரிசு ஒன்று எனது வலைப்பூவில் இருக்கிறது வந்து பெற்றுக்கொள்ளவும்...
http://www.eniniyaillam.com/2013/03/passion-on-plate.html//
ஆஹா, சந்தோஷமான விஷயம் சொன்னதற்கு மிக்க நன்றி.
இதோ வந்து பார்க்கிறேன்.
விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.
பதிலளிநீக்குஇந்தப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் மேலே .உங்காத்துமாமி உங்க பதிவெல்லாம் படிப்பாங்களா?எவ்வளவு பல்ப் வாங்கி இருக்கீங்க அவங்க கிட்டேந்து/?மாமியை சந்திக்க நேர்ந்தால் கேக்கணும். நீங்க யாருக்காவது இதுபோல பரிசு ஏதானும் கொடுத்திருக்கீங்களா?எக்க சக்கமா வாங்கிட்டீங்களே/ அதான் கேட்டேன் ஆனா தலைப்பு அது இல்லியே இல்லியா?
பூந்தளிர் March 26, 2013 at 8:08 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
*****விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும். *****
//இந்தப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் மேலே.//
சந்தோஷம்.
//உங்காத்துமாமி உங்க பதிவெல்லாம் படிப்பாங்களா?//
99% படிக்க மாட்டாங்க. 1% நானாக வற்புருத்தினால் தலைவிதியே என படிக்க ஆரம்பிப்பார்கள். ஆனாலும் படித்து முடிப்பார்கள் என உறுதியாகச் சொல்லமுடியாது.
நடுவே அப்போது பார்த்து தான் பலவித இடையூறுகள் குறுக்கீடுகள் வரும். ஃபோன் வரும், வேலைக்காரி வருவாள். யாராவது காலிங்பெல் அடிப்பார்கள். டீ.வி.யில் நல்ல அவங்களுக்கு மிகவும் பிடித்த ப்ரோக்ராம் ஏதாவது வரும், அடுப்பில் பால் பொங்கும் etc., etc.,.
//எவ்வளவு பல்ப் வாங்கி இருக்கீங்க அவங்க கிட்டேந்து? //
பல்ப் வாங்கும் பழக்கமே என்னிடம் கிடையாது. நான் பிறருக்கு பல்ப் கொடுப்பதோடு சரி.
//மாமியை சந்திக்க நேர்ந்தால் கேக்கணும்.//
அது மட்டும் நடக்காது. ஏன் என்று கேட்டால் நீங்க இந்த என் பதிவை அவசியமாகப்படிக்கணும் http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
அதைப்படித்திருந்தால் நீங்க இதுமாதிரி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டீங்க.
//நீங்க யாருக்காவது இதுபோல பரிசு ஏதானும் கொடுத்திருக்கீங்களா?//
Publicity செய்துகொள்ளாமல் எவ்வளவோ கொடுத்தது உண்டு தான்.
வலைப்பதிவு மூலம் ஏதாவது ஒரு போட்டி வைத்து, மிகப்பெரிய அளவில் பரிசு கொடுக்க மனதில் எண்ணமும் / திட்டமும் வைத்துள்ளேன். எப்போது என எனக்கே தெரியாது.
//எக்க சக்கமா வாங்கிட்டீங்களே; அதான் கேட்டேன் ஆனா தலைப்பு அது இல்லியே இல்லியா?//
தலைப்பு “பொக்கிஷம்” என்பது பற்றி மட்டுமே. பொக்கிஷம் என்பதற்கான என் விளக்கத்தையும் முழுவதும் படித்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
//அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் இருப்போம். அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பினும் ஏதோ ஒரு சோம்பலிலோ, நேரமின்மையாலோ, டஸ்ட் அலர்ஜி போன்றவைகளாலோ அல்லது செண்டிமெண்ட் ஆகவோ அத்தகைய பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்ற நாம் தயங்குவோம்// அத்தனையும் உண்மை அண்ணா. கூடுதலா சென்டிமென்ட்தான். என் நண்பியும் இதே நிலையில் இருக்கிறா.
பதிலளிநீக்குநல்ல உதாரணங்கள்.(ரவாலாடு,ரோஜா)கொடுத்து நகைச்சுவையாக எழுதி
யிருக்கிறீங்க
//விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.// இந்த நிலை எங்கே இருக்கிறது அத்துடன் இது கணவன்,மனைவி மட்டுமில்லை மற்றைய உறவுகளுக்கும் பொருந்தும்.முக்கியம் நண்பர்கள்.
//காலமாற்றத்தால், நமக்கான தேவைகளும் சொகுசுகளும் இன்று நிறையவே பெருகிவிட்டன. ஒரு புதிய தொழில் நுட்பக் கண்டிபிடிப்பு வரும்போது, பழையனவெல்லாம் நம்மை விட்டு பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.// காலமாற்றத்தால் மாறுவது ஒருபக்கமாயின், சிலபேருக்கு இது கெளரவ பிரச்சனை.அதனால் மாறி அவைகள் அனுபவிக்கும் கஷ்டங்கள்,வலிகள் எத்தனை.
ammulu April 4, 2013 at 10:00 PM
நீக்குவாங்கோ அம்முலு வாங்கோ, வ்ணக்கம். நல்லா இருக்கீங்களா? உங்களைக்காணோமே என்று மிகவும் கவலைப்பட்டேன்.
உங்களின் ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும், நான் பொறுமையாக பதில் அளிப்பேன், அம்முலு.
ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகும். கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.
பிரியமுள்ள கோபு அண்ணா
கோபு >>>> அம்முலு [2]
நீக்கு//அத்தனையும் உண்மை அண்ணா. கூடுதலா சென்டிமென்ட்தான். என் நண்பியும் இதே நிலையில் இருக்கிறா.//
அப்படியா! சந்தோஷம்.
நல்ல உதாரணங்கள். (ரவாலாடு, ரோஜா) கொடுத்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க//
அம்முலு,
இதை நான் நகைச்சுவைக்காக மட்டும் எழுதவில்லை. என் இளம் 21 வயதில் எனக்குக் கிடைத்த உண்மையான அனுபவம் இந்த ’ரவாலாடு’ பற்றிய சம்பவம்.
மிகவும் சுவாரஸ்யமான இந்தப் பதிவினை அவசியமாகப் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்.
http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html
அப்படியே தங்கள் கருத்தினையும் பதிவு செய்யுங்கோ.
>>>>>
கோபு >>>> அம்முலு
நீக்கு*****விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.*****
//இந்த நிலை எங்கே இருக்கிறது அத்துடன் இது கணவன், மனைவி மட்டுமில்லை மற்றைய உறவுகளுக்கும் பொருந்தும். முக்கியம் நண்பர்கள்.//
ஆமாம் அம்முலு, ஏதோ எழுதியுள்ளேனே தவிர, இதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாமல் தான் உள்ளது.
பெரும்பாலும் நான் மட்டுமே, எல்லோரிடமும், விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போக வேண்டியுள்ளது.
மற்றவர்கள் எல்லோருமே மிகவும் அழுத்தமாகத்தான் இருந்து வருகிறார்கள். சமயத்தில் எனக்கும் மனம் மறுகிப்போய் வருத்தம் தான் மேலிடுகிறது. முடிந்தவரை பொறுமையைக் கடைபிடித்து வருகிறேன். பார்ப்போம்.
>>>>>
கோபு >>>> அம்முலு [4]
நீக்கு*****காலமாற்றத்தால், நமக்கான தேவைகளும் சொகுசுகளும் இன்று நிறையவே பெருகிவிட்டன. ஒரு புதிய தொழில் நுட்பக் கண்டிபிடிப்பு வரும்போது, பழையனவெல்லாம் நம்மை விட்டு பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.//*****
//காலமாற்றத்தால் மாறுவது ஒருபக்கமாயின், சிலபேருக்கு இது கெளரவ பிரச்சனை. அதனால் மாறி அவைகள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வலிகள் எத்தனை.//
கரெக்ட். கெளரவப்பிரச்சனையே தான். போட்டிகள் நிறைந்த உலகினில் நாமும் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப்பார்த்து, எதிர் நீச்சல் போட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.
அதன் கஷ்டங்கள் + வலிகள் மிகவும் தாங்க முடியாமலேயே உள்ளன.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.
நீங்க இப்பேனாவை எவ்வளவுத்தூரம் பொக்கிஷமாக கருதுகிறீங்க என்பது நன்றாக (பதிவு வாசித்தேன்)தெரிகிறது நல்லதொரு பொக்கிஷம்.
பதிலளிநீக்கு/என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ? // எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் + வித்தியாசமாக இருக்கும்.
ammulu April 4, 2013 at 10:01 PM
நீக்கு//நீங்க இப்பேனாவை எவ்வளவுத்தூரம் பொக்கிஷமாக கருதுகிறீங்க என்பது நன்றாக (பதிவு வாசித்தேன்) தெரிகிறது நல்லதொரு பொக்கிஷம்.//
மிகவும் சந்தோஷம் அம்முலு. அந்தப்பதிவினை வாசித்ததற்கும் என் நன்றிகள்.
*****என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ?*****
//எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் + வித்தியாசமாக இருக்கும்.//
என் எழுத்தின் மீது உங்களுக்குள்ள நம்பிக்கைக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு. மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
பொக்கிஷங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமே. ஒருவருக்குப் பொக்கிஷமாக இருப்பது இன்னொருவருக்கு குப்பை என்பது மிகச்சரி. பொக்கிஷமாய் பாதுகாப்பவர்களுக்கு அந்தப் பொருளின் மதிப்பு மிக்கது என்பது மட்டுமல்லாது, அதனோடு தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள், சூழ்நிலை போன்ற பல விஷயங்களையும் நினைவுபடுத்தும் ஒரு காலயந்திரம் போன்றது. அத்தகு அருமையான பொக்கிஷ நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நன்றி வை.கோ.சார். கலைமகள் எழுதித் தந்த பேனாவின் கதையையும் ரசித்துவந்தேன். உண்மையில் எவருக்கும் எளிதில் கிடைத்திடாத பொக்கிஷம் அது. பாராட்டுகள் சார்.
பதிலளிநீக்குகீதமஞ்சரி April 10, 2013 at 3:43 AM
பதிலளிநீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பொக்கிஷங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமே. ஒருவருக்குப் பொக்கிஷமாக இருப்பது இன்னொருவருக்கு குப்பை என்பது மிகச்சரி. பொக்கிஷமாய் பாதுகாப்பவர்களுக்கு அந்தப் பொருளின் மதிப்பு மிக்கது என்பது மட்டுமல்லாது, அதனோடு தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள், சூழ்நிலை போன்ற பல விஷயங்களையும் நினைவுபடுத்தும் ஒரு காலயந்திரம் போன்றது. அத்தகு அருமையான பொக்கிஷ நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நன்றி வை.கோ.சார். //
மிகவும் சந்தோஷம் மேடம். புரிதலுக்கு நன்றி.
//கலைமகள் எழுதித் தந்த பேனாவின் கதையையும் ரசித்துவந்தேன். உண்மையில் எவருக்கும் எளிதில் கிடைத்திடாத பொக்கிஷம் அது. பாராட்டுகள் சார்.//
மிக்க மகிழ்ச்சி, மேடம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். //எங்கள் இனத்தில் ஜாதகம் பார்ப்பதில்லை சார்.ஜாதகம் பார்க்காமலே அனைத்து திருமணங்களும் நடக்கின்றன.
பதிலளிநீக்குஎக்கசகமான இணைப்புகள் கொடுத்து இருக்கிங்க.கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன்.
ஸாதிகா April 15, 2013 at 12:09 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
*****நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.//*****
//எங்கள் இனத்தில் ஜாதகம் பார்ப்பதில்லை சார்.ஜாதகம் பார்க்காமலே அனைத்து திருமணங்களும் நடக்கின்றன.//
அதுவும் நல்லது தான். எங்க ஆட்களும் இப்போது மிகவும் மாறி வருகிறார்கள். இந்தக்காலத்தில் பையன்களுக்கு பெண்கள் கிடைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் பெரும்பாலும் யாரும் ஜாதகமெல்லாம் அதிகமாகப் பார்ப்பது இல்லை. ஓரளவு மனதுக்குப் பிடித்திருந்தால் நேரிடையாகக் கல்யாணம் செய்து வைப்பது என மாறிக்கொண்டு வருகிறார்கள்.
//எக்கசகமான இணைப்புகள் கொடுத்து இருக்கிங்க.கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன்.//
அதில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம் என நினைக்கிறேன். எனினும் நன்றி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:01 (54 minutes ago) to me
பதிலளிநீக்குPMG.Pathy has left a new comment on the post "1] கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா !":
//எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி !
Post a comment. //
வாருங்கள் ஐயா, வணக்கம்.
தங்களின் மேற்படி பின்னூட்டத்தினை நான் PUBLISH கொடுத்தும் அது ஏனோ இங்கு இந்தப் பின்னூட்டப்பகுதியில் தோன்றாமல் உள்ளது.
தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:18 (46 minutes ago) to me
பதிலளிநீக்குPMG.Pathy has left a new comment on the post "*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்...":
//அடை செய்வதில் இவ்வளவு சூட்சுமமா? என் மனைவியிடம் படித்துக் காண்பித்தால் “ஆமாம், நான் பண்ணாத அடையா, தினம் சப்புக்கொட்டிண்டு சாப்பிடறேளே, அதுலெ என்ன குறெச்சலாம்?” என்று பம்முகிறாள்.
பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த ஒரு ஜோக்:
கணவன்: ஏண்டீ! இன்னிக்கு ராத்திரி என்ன டிஃபன்?
மனைவி: அடை!
கணவன்: அடே!
Post a comment.//
வாருங்கள் ஐயா, வணக்கம்.
தாங்கள் என் “அடடா என்ன அழகு! அடையைத்தின்னு பழகு” என்ற பதிவுக்கு இட்டுள்ள இந்தப்பின்னூட்டமும் நான் PUBLISH கொடுத்தும் ஏனோ அங்கு அது என் பின்னூட்டப்பெட்டியில் பதிவாக மறுக்கிறது.
ஏற்கனவே வ்ந்துள்ள 260 பின்னூட்டங்களில் முதல் 200 மட்டுமே காட்சி அளிக்கின்றன. 201-260 நேரிடையான முறையில் படிக்க இயலாமல் உள்ளன. தங்களுடையது 261 ஆக இருப்பதால் சுத்தமாக அது பதிவாகாமலேயே உள்ளது. அதனால் இங்கு அதை வெளியிட்டு பதில் அளித்துள்ளேன்.
//அடை செய்வதில் இவ்வளவு சூட்சுமமா? என் மனைவியிடம் படித்துக் காண்பித்தால் “ஆமாம், நான் பண்ணாத அடையா, தினம் சப்புக்கொட்டிண்டு சாப்பிடறேளே, அதுலெ என்ன குறெச்சலாம்?” என்று பம்முகிறாள்.//
இதை தாங்கள் தங்கள் மனைவிடம் படித்துக்காட்டியிருக்கவே கூடாது. இதில் உள்ள குறிப்புகள் யாவும் ஆண்கள் அடை தயாரிக்க மட்டுமே! தாங்களே நேரடி நடவடிக்கையில் இறங்கி அடை தயாரித்து, சூடான அதனை சுவைக்க மட்டுமே, தங்கள் மனைவியை அழைத்திருக்க வேண்டும். ;)
அவ்வாறு செய்திருந்தால் அவர்க்ள் உங்களைப் பம்முவது இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.;)
ஆனந்தவிகடன் அட்டைப்பட ’அடை’ ஜோக் அருமை. எனக்கும் பார்த்ததாக நினைவு உள்ளது. இங்கு சுட்டிக்காட்டி நினைவூட்டியதற்கு நன்றி.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
ஐயா...
பதிலளிநீக்குபடித்தேன்!!
சுவைத்தேன்!!!
பற்ற பகுதிகளையும் பிறகு படித்து...
விரைவில் கருத்திடுகிறேன்... இறை நாட்டம்!!!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 28, 2014 at 9:40 PM
நீக்குஐயா...
படித்தேன்!!
சுவைத்தேன்!!!
பற்ற பகுதிகளையும் பிறகு படித்து...
விரைவில் கருத்திடுகிறேன்... இறை நாட்டம்!!!//
வாருங்கள் நண்பரே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் VGK
மனதிற்குப் பிடித்ததுதான் பொக்கிஷம். அதன் விலை மதிப்பு அனாவசியம்.
பதிலளிநீக்குஇது பத்தி மொதகலே சொல்லினிங்கல. நெனப்புல இருக்குது.
பதிலளிநீக்குநினைவில் உள்ளதும்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)
நீக்குஉண்மையிலேயே பொக்கிஷமாக படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு. எந்த விஷயம் பற்றி சொன்னாலும் அடி முதல் நுனி வரை விமக்கமா தெளிவா சொல்லி வரீங்க. படிக்க படிக்க சுவாரசியம்.
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். /// ஆஹாஹா...பெரும்பாலும் அப்படிதான். பேனாவைப் பொறுத்தவரை...பெரும் பொக்கிஷம்தான்...ஏனெனில் நானும் ஒரு PEN - பித்தன்.ஒருகாலத்தில் 500 பேனாக்கள்வரை வகைவகையாய் ஒரு பெட்டி நிறைய வைத்திருந்தேன். இப்பொழுது கொஞ்சம் குறைவு.
பதிலளிநீக்குபொக்கிஷப்பதிவு அருமை!
பதிலளிநீக்கு