என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

VGK 02 / 01 / 03 ] FIRST PRIZE WINNERS ”தை வெள்ளிக்கிழமை”




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



கதையின்  தலைப்பு 



VGK 02 ] 


”தை வெள்ளிக்கிழமை”



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 









நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள்  மொத்தம்:  

ஐந்து. 




 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய 

நல்வாழ்த்துகள். 



   


மற்றவர்களுக்கு:  


BETTER LUCK NEXT TIME !





    



முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் 






இருவர் :-







1] திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

வலைத்தளம்: “அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com







முதல் பரிசினை வென்றுள்ள 


திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் 


அவர்களின் விமர்சனம்:



தை வெள்ளிக்கிழமை '  கதை தாய்மை பண்பு மிளிரும் கதை.

கதையில் ருக்குவும் அவள் கணவரும் எடுக்கும் முடிவுக்கு வறுமை  மட்டுமே காரணம் என்பதை அருமையாய் விளக்கியிருக்கிறார் கதாசிரியர்.

இந்தக் கதை திரு. வை. கோபாலகிருஷ்ணன்   எழுதும் போது வாடகைத் தாய்மார்கள் இவ்வளவு பிரசித்தம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது நிறைய வாடகைத் தாய்மார்கள், நம் கண்ணெதிரே உலவிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் எல்லோருமே தாய், பிறகு தான் அவர்கள்  தத்துக் கொடுக்கும் தாய்  என்பதை அழகாக விங்க வைத்துள்ளார் கதாசிரியர். 

ருக்கு தாய் தானே! எப்படி தத்துக் கொடுக்க ஒத்துக் கொண்டாள் என்று  தோன்றலாம். ஔவையார் சொல்வது போல், வறுமை கொடிது ஆயிற்றே! அந்த நேரத்தில் வளமான தன் நான்கு குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமல்ல பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலமும் அவர்களை அந்த முடிவை நோக்கித் தள்ளி விட்டு விட்டது.

தத்து கொடுத்து விடுவார்களோ என்கிற பதை பதைப்பு படிக்கும் போது ஏற்படுவதை  தவிர்க்க முடியாது..

 நான்கு குழந்தைகளின் எதிர்காலம், கணவரின் தொழில், பிறக்கப் போகும் குழந்தையின், வளமான எதிர்காலம், என்று  ருக்குவும் அவள் கணவரும் தத்துக் கொடுக்க தீர்மானித்தாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களுக்கு குழந்தை மேல் இருந்த பாசமே இறுதியில்  வெற்றி பெறுகிறது. அப்பாடி......என்று பெருமூச்சு விடத் தோன்றுகிறது. 

காரணம் சொல்ல வேண்டுமே மறுப்பதற்கு  என்பதற்காக 
"அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது , அதுவும் தைவெள்ளிக்கிழமை " என்று சொல்கிறார்கள் என்பதே என் கருத்து.   அவர்கள்  பாசத்தின் முன், வறுமை தோற்றோடிப் போனது . பணம் எவ்வளவு வலிமை வாய்ந்த ஆயுதம் என்றாலும், இறுதியில் பாசம் தான் வெற்றி பெறும் என்று சொல்லி விட்டது கதை. பணமா,  பாசமா என்கிற சவாலில் பாசத்தை வெற்றி பெற செய்ததற்கு  மிக்க நன்றி கோபு சார்.

தத்துக் கொடுக்கும் தாய் மார்களுக்கும், வாடகைத் தாய்களுக்கும் ஏற்படும் மனப் போராட்டத்தை விளக்கும் கதை. ஆயிரமாயிரம் ருக்குக்கள்  இன்னும் இந்த சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். ருக்கு தன் முடிவை மாற்றிக் கொண்டதும் கோபப்படாமல், அவர்கள் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர் மரகதத்திற்கு பாராட்டுக்கள். டாக்டர் மரகதம் போன்று எல்லா டாக்டர்களும் இருந்தால் மகிழ்ச்சி தான்.

மொத்தத்தில் தாய்மையின் உன்னதத்தை அழகாய் எடுத்துக் காட்டிய கதை.

     


\

மற்றொருவர் 







 திரு. ரமணி 


அவர்கள்


yaathoramani.blogspot.com


’தீதும் நன்றும் பிறர் தர வாரா...’








முதல் பரிசினை  


மீண்டும் வென்றுள்ள 



திரு. ரமணி 


அவர்களின் விமர்சனம்:



துவங்கியதும் தெரியாது 
தொடர்ந்ததும் தெரியாது 
சட்டென  கனத்துப் பெய்து
ஓய்ந்த  கோடை மழைபோலவும்...

வளைவுகள் நெளிவுகள் அற்ற ஒரு
நெடுஞ்சாலையில் சட்டெனத் தோன்றி
வேகமாக நம்மைக் கடந்து போகும் ஒரு
அதி வேக அழகியக் கார் சட்டென நம்முள்
ஏற்படுத்திப் போகும் அதிர்வினைப் போலவும் ...

இக்கதை நம்முள் ஒரு எதிர்பாராத
ஆயினும் ஒரு அழுத்தமான பாதிப்பை
ஏற்படுத்திப் போகிறது
என்றால் நிச்சயம் அது மிகையில்லை

"ருக்குவுக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது " என
எடுத்தவுடன் கதைக் கருவின் கழுத்தை அழுத்தப் பிடிப்பதற்கு உண்மையில் கொஞ்சம் கூடுதல் "தில் "தான் வேண்டும். அது வைகோ சாருக்கு கூடுதலாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே சாட்சி

வேறு யாரேனும் இக்கதையைச் சொல்லி இருந்தால் நிச்சயமாக செக்- அப்புக்கு வருவது முதல் துவங்கி பின் குழந்தை இல்லாத தம்பதிகளின் மன நிலையை விளக்கி, பின் விலாவரியாக பேரம் பேசுதலை விவரித்து உச்சக் கட்டமாக பிரசவ வலியெடுத்து
மருத்துவ மனையில் சேர்ப்பது என்கிற வகையில்தான் யோசித்திருப்பார்கள். அதுவும் ஒரு சாதாரணக் கதையாகிப் போயிருக்கும்

நிச்சயம் எத்தனை குழந்தை பெற்றாலும்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பத்து மாதம்
சுமந்து பெற்றவள் நிச்சயம் மனசார தன் குழந்தையை விற்கத் துணியமாட்டாள்.

இது கதாபாத்திரமாக வருகிற மருத்துவருக்கும்
நிச்சயம் தெரிந்திருக்கிறது. அதனால்தான் குழந்தையை வாங்க நினைப்பவர்களை வரச் சொல்லிவிட்டு இவர்களிடம் அவர்களை வரச் சொல்லவா எனக் கேட்கிறார்

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றுவிட வேண்டும் அதற்காக மருத்துவர் மூலம் பெற முடிந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வோம், அதுவரை மருத்துவரிடம் முரண்பாடு வேண்டாம் எனத் தான்  முடிவு
எடுத்திருக்கவேண்டும். இல்லையெனில் மருத்துவர் கேட்டவுடன் இருவரும் இப்படி திட்டவட்டமான பதிலைக் கூறி இருக்க வாய்ப்பே இல்லை

கதை மாந்தருக்கும் தெரிந்த, கதை படிப்பவருக்கும் புரிந்த விஷயம் கதையை எழுதியவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும். நிச்சயம் தெரிந்திருக்கும்

கதாசிரியரைப் பொருத்தவரை அவர் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வினைப் பயன்படுத்திக் கொள்கிறாரே ஒழிய அவரது முழுக் கவனமும் நிச்சயம் அதில் இல்லை எனவே எனக்குப் படுகிறது

உண்மையோ பொய்யோ தப்போ சரியோ
காலம் காலமாக பண்பாடு ரீதியாக கலாச்சார ரீதியாக நாம் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்

தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில் மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற நம்பிக்கையின் மீதான  நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன.

"ஐந்தாவது குழந்தை " "தை வெள்ளிக்கிழமை " என்கிற சென்டிமெண்டான நம்பிக்கையை தவிர்த்து வேறு எந்தக் காரணத்தைச் சொல்லி இருந்தாலும் அதற்கு மருத்துவர் மாற்று ஒன்று சொல்லி இருக்கமுடியும்.


இந்த நம்பிக்கைக்கு எதிராக நிச்சயம் அவர்
எந்த வாதத்தையும் வைக்க முடியாது -
கதையில் வைக்கவும் இல்லை.

எனக்கு இந்தக் கதையின் மையக் கருத்தே
இதுதான் எனப்படுகிறது

இல்லையெனில் கதை ஆசிரியர் ஐந்தாவது குழந்தை
மற்றும் தை வெள்ளிக் கிழமை என்கிற வரிகளுக்கு
அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

அந்த வகையில்  நிலாவைக் காட்டி சோறு
ஊட்டுகிற தாயினைப் போல ஏதோ ஒரு
நிகழ்வை  எடுத்துக் கொண்டு தான் வாசகருக்கு
ஊட்ட நினைக்கிற கருத்தினை மிகச் சுருக்கமான கதையாகச் சொல்லிப்போனாலும் சரியாக சொல்லிப் போனவிதம் மிக மிக அருமை

அதே சமயம்

கலையை முன் வைத்துவிட்டு கலைஞன் ரசிகனே தேடி அறியட்டும் எனச் சொல்கிற மாதிரி அந்த இரண்டு சொற்களை அத்தனைப் பெரிதாக உருவத்திலும் நிறத்திலும் அழுத்திச் சொல்லாமல் படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமோ எனத் தோன்றிய எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை

இருப்பினும் வருடத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில், தை வெள்ளி மிகச் சிறந்தது என்பதைப் போல இந்தத் 

"தை வெள்ளிக்கிழமை” கதையும்  மிகச் சிறந்தது என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்.


     




இருவருக்கும் மனம் நிறைந்த 


பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


-oOo-


முதல் இரண்டு போட்டிகளிலுமே 


முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ள 


திரு. ரமணி அவர்களுக்கு என் 


ஸ்பெஷல் பாராட்டுக்கள்.


Mr. S. Ramani Sir, 


தாங்கள் HAT TRICK 

போட்டாலும் ஆச்சர்யம் இல்லை. ;)



-oOo-






மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.








நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக 
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.



காணத்தவறாதீர்கள்






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.







இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 


“சுடிதார் வாங்கப் போறேன்”



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 06.02.2014  



இரவு 8 மணிக்குள் [I.S.T]





என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

29 கருத்துகள்:

  1. என்னுடைய விமரிசனத்திற்கு, முதல் பரிசு வழங்கிய நடுவருக்கு நன்றி. போட்டி அறிவித்து, பரிசு பெற வாய்ப்பளித்த
    திரு வைகோ சாருக்கு மிக்க நன்றி.பரிசைப் பகிரும் ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை பரிசு பெற்ற ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  3. முதல் இரண்டு போட்டிகளிலுமே முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ள திரு. ரமணி அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் இருவருக்கும் வாழ்த்துகள். அதிலும் திரு ரமணி அவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள். தொடர்ந்து எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசை வென்றிடவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்புடன் தெளிவாக விமர்சனம் தந்த ரமணி சார் மீண்டும் முதல் பரிசு பெறுகிறார். அதேபோல், படிக்கையில் தான் உணர்ந்த எண்ணங்களை விமர்சனமாகத் தந்த ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களும் முதல் பரிசு பெறுகிறார்.
    இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ரமணி சார் மற்றும் ராஜலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  8. இருவருக்கும் மனம் நிறைந்த




    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




    இருவருக்கும் மனம் நிறைந்த




    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


    திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை பரிசு பெற்ற ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  9. தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில் மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற நம்பிக்கையின் மீதான நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன.//
    அருமை!

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசினை பெற்ற ராஜலஷ்மி மேடமுக்கும், ரமணி சாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்... தங்கள் இருவரின் விமர்சனமும் அருமையாக உள்ளன...

    போட்டிகளை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் வை.கோ சாருக்கும், நடுவர் அவர்களுக்கும் பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  11. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், முதல் பரிசினை வென்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், கவிஞர் ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. முதல்ப் பரிசைவென்ற,ரமணிஸார் அவர்களுக்கும்,ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
    பெண்ணே இல்லாது பிள்ளையாகப் பிறந்தாலும், கொடுக்க என்னவோ மனம் வராது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், இருமுறை பரிசு பெற்ற ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  14. இரண்டாம் முறையாக முதல் பரிசினை தட்டிச் செல்லும் ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்.

    முதல் பரிசு பெற்ற ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஒரு பெண்ணின் பார்வையில் இந்தக் கதையினை விமரிசித்து இருப்பது உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது, ராஜி. அசத்திட்டீங்க!

    பதிலளிநீக்கு
  15. பரிசு பெற்ற ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருமுறை பரிசு வென்ற ரமணி சாருக்கும் அவருக்கு இணையாக முதல் பரிசு பெற்ற ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள். இப்படியொரு போட்டியின் மூலம் பலருடைய விமர்சனத் திறமைகளையும் வெளிக்கொணரும் வை.கோ.சாருக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இந்த இரு வெற்றியாளர்களும், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://rajalakshmiparamasivam.blogspot.in/2014/02/blog-post.html
    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

    http://yaathoramani.blogspot.in/2014/02/blog-post.html
    திரு. ரமணி அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  17. திருமதி ராஜலட்சுமி அவர்களுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. திருமதி ராஜலஷ்மிஅவர்களுக்கும் திரு ரமணி சார் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி (மீண்டும், மீண்டும் பரிசு பெறும்) அவர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. ராஜலட்சுமி மேடம ரமணி சாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திரு ரமணி ஸாருக்கு வாழ்த்துகள். ராஜலட்சமி மேடம் வாடகை தாய் பற்றி எழுதி இருப்பதை சிறப்பாக சொல்றாங்க திரு ரமணி ஸார் நிலாவைக்காட்டி சோறு ஊட்டுவதைப்போல தைவெள்ளி பெண்குழந்தை என்று சென்டிமென்டாக எழுதிய கதாசிரியரை பாராட்டி சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும், திரு ரமணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு