அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இங்கு இந்த வலைத்தளத்தின் மூலம் தங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கும் பாக்யம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சமீபத்தில் 18.11.2019 திங்கட்கிழமை மாலை வேளையில், திருச்சி, ’பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்’ டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள ’முத்தமிழ் மன்றத்தில்’ புதிய நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூல் ஆசிரியர்:- Dr. VGK என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும், எங்கள் BHEL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் V.கோபாலகிருஷ்ணன் அவர்கள்:
Dr. V.GOPALAKRISHNAN
Former EXECUTUVE DIRECTOR of

BHARAT HEAVY ELECTRICALS LIMITED,
TIRUCHIRAPPALLI
அப்பா... ஒரு வழியாக ஆறு மாத 'தூக்கம்' முடிந்துவிட்டதா?
ReplyDeleteபுதிய இடுகை வெளியிட்டிருக்கீங்களே... அதிலும் 'தொடரும்' என்பதோடு. தொடர்ந்து எழுதுவீங்களா கோபு சார்?
இன்னும், வாங்கோ ஸ்வாமி... ஒலிக்கக் காணமே:)..
Deleteநடக்காமலே..சும்மா வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், கிச்சனுக்குச் சென்று காஃபி போடக்கூட சோம்பேறித்தனமாக இருக்கும்.
Deleteகோபு சார்..பிளாக்ஸ்பாட் பக்கமே வராம, அதிசயமா இடுகை போட்டுள்ளதால், அதற்கு பதில் எழுதுவதற்கும் சோம்பேறித்தனமாக இருக்கும்.
நாமதான் கொஞ்சம் (நிறைய) காத்திருந்து பார்க்கணும்.
புத்தகத் தலைப்பு சுவாரசியத்தை வரவழைக்கிறது.
ReplyDeleteஆற்றின் கரையில்தான் நாகரீகங்கள் தோன்றும். அங்குதான் கல்வியிற் சிறந்த மனிதர்களும் தோன்றுவார்கள்.
சொந்த ஊர் பாசம் அதிகம் போல (புத்தக பின்பக்க அட்டையில் எழுதியுள்ளதைப் போல). அதனால் 'காவிரிக் கரையில் வாழ்ந்த மகான்களும் மன்னர்களும்' என்பது பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.
சுவாரசியமாக இருக்கும் என்று புத்தகத்தின் தடிமன் தோன்றவைக்கிறது. பார்ப்போம்.
இந்த 'கோபாலகிருஷ்ண சாஸ்திரி' என்பது கோபாலகிருஷ்ண பாரதியா? (சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்ற பாடலை எழுதிய)? அவர் மாயவரத்தில் வாழ்ந்து மறைந்தார் என்று உ.வெ.சு அவர்களின் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
ReplyDeleteபதிப்பித்திருக்கும் பக்கங்களிலேயே நிறைய எழுத்து/சொல் பிழைகளைக் காண்கிறேனே...
ReplyDeleteவேலூர் (வெல்லூர் என்று உள்ளது), திருவானைக்கோயில் - திருவானைக்காவல் கோவில், பிக்ஷண்டர் கோவில் - பிக்ஷாண்டார் கோயில்.....
நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிய ஆவல்.
ReplyDeleteநலம் தானே நீங்கள். வாழ்க வளமுடன்.
வி கொபாலகிருஷ்ணன் பிஎச் இ எல் முன்னாள்தலைவரா புதிய செய்தி
ReplyDeleteஒரு வேளைநன் வந்தபின் பதையில் இருந்தாரோ
ReplyDeleteபணி சிறக்க இறைவனின் பேரருளுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி. நூல் வெளியீட்டிற்கும், உங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான பதிவிற்கும்.
ReplyDeleteவரவேற்கின்றோம். பணி தொடரட்டும்.
ReplyDeleteBHEL நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ‘காவிரிகரையில் வாழ்ந்த மன்னர்களும் மகான்களும்’ என்ற நூல் வெளியீட்டுவிழா தங்களை மீண்டும் வலையுலகத்திற்கு வர காரணமாக இருந்தது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநூலின் தலைப்பே இதுவரை அறியப்படாத அறிய தகவல்களைத் தரும் களஞ்சியம் என் நினைக்கிறேன். நூல் வெளியீட்டு விழா பற்றியும், அவரின் இந்த அரிய நூலின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தாங்கள் எழுதவுள்ளதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வருக... வருக...
ReplyDeleteதொடர்கிறேன்.
தங்கள் வருகை எனக்கும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது... வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஆஆஆஆஆஆ கோபு அண்ணன் இங்கேயா இருக்கிறார், கோபு அண்ணன் பெயரிலேயே இன்னொருவரோ...
ReplyDeleteதேடாத இடமெல்லாம் தேடி“னோம்”:).
புத்தக அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள், தொடருங்கோ.. எதையாவது தொடர்ந்து, புளொக்குக்குள் , நம் கண்பார்வைக்கு எட்டிய தூரத்துள் இருங்கோ.. அதுவே நமக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஇதெல்லாம் எத்தனை முறை நான் சொல்லியாச்சு. அவர் கேட்டால்தானே.
Deleteஅவங்க வீட்டுல, அவருடைய சொகுசு மெத்தையை வேறு யாருக்கேனும் அலாட் பண்ணினால்தான், கோபு சாருக்கு சுறுசுறுப்பு மீண்டும் வரலாம். இல்லைனா, மனிதர் சுகமாக படுத்துக்கொண்டே காலம் கழிக்கிறார் போலத் தெரிகிறது.
நீங்க சொல்லி ஆரு கேய்க்கப்போறா நெ தமிழன்:) ஹா ஹா ஹா ஹையோ அவர் சுறுசுறுப்பாகிட்டால் பின்பு நாங்க இருந்த பாடில்லை:)... எதுக்கும் இன்னொரு பக்கெட் குண்டாவுடன் ஒருக்கால் போய்க் கோபு அண்ணனைப் பார்த்திட்டு வாங்கோ நெ தமிழன்:)... இன்னொரு போஸ்ட் வருமெல்லோ:)..
Deleteஅது உண்மையில் மாக்கோலமோ? ஏதோ கார்பெட் விரிச்சதைப்போல இருக்கு.
ReplyDeleteவழமையாக பேனாவுடன் தானே போஸ் குடுப்பார்ர்.. இதென்ன இம்முறை கும்பிட்டுக்கொண்டு?:) புயுப்பயக்கம்?:)) ஹா ஹா ஹா...
அது ரங்கோலி வகைக் கோலம்னு தோணுது. இதெல்லாம் கோபு சாருக்குத் தெரியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. ஹா ஹா ஹா
Delete//வழமையாக பேனாவுடன்// - அதாவது எப்போதும் இணையத்தில் இடுகைகள் போட்டால், அந்தப் படமே போதும். இதுவோ, தொகுதியில் காணாமல் போன சட்ட மன்ற உறுப்பினர், அடுத்த எலெக்ஷனுக்கு நிற்கும்போது கைகூப்பி போஸ் கொடுப்பது போல போஸ்டர் அடிச்சு, மக்களுக்கு 'நான் தான் காணாமல் போன எம்.எல்.ஏ' என்று சொல்வதைப் போல போஸ்டர் ஒட்டுவாங்க. அதைத்தான் கோபு சாரும் செய்கிறாரோ என்பது என் சந்தேகம்.
அவர் 'இல்லை' என்று சொன்னால் அதை 'நம்பக்கூடாது' என்பது சரியாக இருக்கும். ஹா ஹா
ஹா ஹா ஹா திருச்சி மலைக் கோட்டை எம் எல் ஏ ஆகிட்டாரோ?:)... கட்டிலில் இருந்துகொண்டே ஹா ஹா ஹா...
DeleteHappy to see u active.. Cheers!
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteதொடர வேண்டுகிறேன்...
நன்றி...
லேபிள்ல, Dr VGK's நூல் அறிமுகம், என்று போட்டிருக்கிறீர்களே.. எப்போ நீங்க டாக்டரேட் வாங்கினீர்கள் என்று யோசித்தேன். இதனை, வி.ஜி.கே செய்யும் நூல் அறிமுகம் என்றும் புரிந்துகொள்ளலாம் இல்லையா? டாக்டர் வி.ஜி.கே எழுதிய நூலின் அறிமுகம் என்பதுதான் சரியான தமிழா இருக்குமா?
ReplyDeleteமகிழ்வுடன் ஆர்வமாய் தொடர்கிறோம்...
ReplyDeleteஎழுத்தோய்விலிருந்து தாங்கள் மீண்டெழுந்து பதிவுலகுக்கு வருகை தந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் பெயரிலேயே இன்னொருவர் என்பது பதிவை முழுவதும் வாசித்த பிறகுதான் புரிந்தது. நூல் குறித்த தங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு தொடர்கிறேன்.
ReplyDeleteகோபு அண்ணா
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் நான் வலை உலகத்தை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் போது முதலில் கண்ணில் பட்டது உங்கள் பதிவு.
அடுத்தவங்கள பாராட்டறதிலயும், கௌரவிக்கறதிலயும் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே தான்.
வாழ்த்துக்கள்.
இன்னும் 2, 3 நாட்களில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கு.
வணக்கம் கோபு சார்! நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் ஓராண்டுக்கு மேலாக எதுவும் எழுதவில்லை. இப்போது தான் வலையுலகம் களை கட்டத் துவங்கியுள்ளது. இனி தான் நானும் துவங்க வேண்டும்.
ReplyDelete