என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 4 மே, 2017

’தொலைத்ததும்... கிடைத்ததும்...!’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்
திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்

 



மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.



என் பார்வையில் 
’தொலைத்ததும்...
கிடைத்ததும்...!’
மின்னூல்


இந்த மின்னூலிலும் ஒரேயொரு நெடுங்கதையை மட்டுமே சுமார் 74 பக்கங்களில் எழுதியுள்ளார்கள்.

கதைச் சுருக்கம்:

கஷ்டப்பட்டு கல்லூரி படிப்பினை முடித்த கையோடு,  சீர்காழியை ஒட்டியுள்ள மிகவும் அழகானதொரு கிராமத்துப்பெண் (கிராமம் மட்டுமல்ல ... பெண்ணும் அழகோ அழகுதான்), பக்கத்து ஊரான சேத்தியாத்தோப்பினில், மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி முடிக்க விரும்பி, அதற்கான பணம் சுமார் முப்பதாயிரம் ரூபாய் மிகக்குறுகிய காலத்தில் சம்பாதிக்க எண்ணி, எவளோ ஒரு சிநேகிதியை மட்டும் நம்பி, முதன்முறையாக சென்னைக்குத் தனியே பஸ்ஸில் புறப்பட்டுச் செல்கிறாள். தன் தாயார் எவ்வளவோ தடுத்தும், தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி புறப்பட்டு விடுகிறாள்.

பல்வேறு இன்பக்கனவுகளுடன் பஸ்ஸில் ஏறியதிலிருந்தே, பஸ் கண்டக்டர் உள்பட பலரின் விஷமப் பார்வைகள் அவளை மேயத்தொடங்கி, படிக்கும் நமக்கும் பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இவள் வேலைக்காகச் சென்று மாட்டியுள்ள இடம் மிகப்பெரிய இம்போர்ட்-எக்ஸ்போர்ட் கம்பெனி அல்ல. மிகச்சாதாரணமான, மிகவும் கஷ்டமான, நாற்றம் பிடித்ததோர் வேலை மட்டுமே. வாரத்திற்கு நாலாயிரம் சம்பளம் என எழுதி கைநாட்டு பெற்றுக்கொண்டு, ஆனால் தினமும் ஓவர்டைம் உள்பட ரூ. 300 வீதம் வாரம் ரூ. 2100 மட்டுமே தரப்படும் இடம். உழைப்பைச் சுரண்டும் ஆசாமிகள். ஏதேனும் எதிர்த்துக்கேட்டால் அந்த வேலையும் போய்விடும்.

இந்த வேலைக்காக மட்டுமே, இவள் தன் தோழி ஷீலாவுடன் தங்கியுள்ள இடமோ, எந்த செளகர்யமும் இல்லாததோர் விடுதி. சுத்தமோ சுகாதாரமோ இல்லாத பொதுக்கழிவறை, பொதுக்குளியலறையுடன், தரையில் பாய்விரித்துப் படுக்க வேண்டிய மஹா மட்டமானதோர் இடம். அதற்கே வாடகை அதிகம் தர வேண்டியதாக உள்ளது.  தங்கியுள்ளது சிங்காரச் சென்னைப் பட்டணம் அல்லவா! 

அந்த நாற்றம் பிடித்த வேலைக்கு வரும் பெண்களின் தோற்றம், வயது, இளமை, அழகு, வறுமை, பணத் தேவைகள் ஆகியவற்றை எடைபோட்டு அவர்களை வெகு விரைவில் வேறொரு இடத்துக்கு பணி மாற்றம் என்ற பெயரில், சபலம்காட்டி அனுப்பி வைப்பார்கள். தொலைகாட்சி விளம்பரங்களில் நடிக்கலாம், சீரியலில் நடிக்கலாம், சினிமாவிலும் நடிக்கலாம், கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்கலாம் என  ஆசை காட்டி மோசம் செய்வார்கள். சபலப்பட்டு அங்கு போய் மாட்டியவர்கள் யாரும் வெளியே தப்பி வரவே முடியாது. வெளியுலகத் தொடர்பு ஏதும் வைத்துக்கொள்ளவும் முடியாது. இதன் ஏஜண்ட்களாலேயே வெவ்வேறு ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் இம்போர்ட்-எக்ஸ்போர்ட் செய்யப்படுவார்கள். கமிஷன் அடிப்படையில்  ஆடு-மாடுகள் போல, நல்ல விலைக்கும் விற்கப்பட்டு விடுவார்கள். 

தன் தாய் சொல்லியும் கேட்காமல், வீட்டிலிருந்து ஏதோவொரு ஆசையில் புறப்பட்ட பெண்ணின் பெயர் ‘மலர்விழி’ .... இரண்டு வாரங்கள் கழித்து, எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டுப் போராடி, ஒருவழியாக வீடு திரும்புகிறாள் ..... போன இடத்தில் எதை எதையோ தொலைத்து விட்டு, மாற்றுத்துணியோ, கை பையோ, மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டிய பணமோ ஏதும் இல்லாமல் பைத்தியக்காரி போல காட்சியளிக்கிறாள்.

பூஜைக்குரிய மலர் போன்ற நம் கதாநாயகி ’மலர்விழி’ தொலைத்ததுதான் என்ன? இந்தக்கொடிய அனுபவத்தால் அவளுக்குக் கிடைத்ததுதான் என்ன? என்பதே இந்தக்கதையினில் நமக்குக் கிடைக்கும் மிகவும் அருமையான பாடமாகும். 

ஆண் வர்க்கத்தைப் பற்றியே முழுவதும் அறியாத, உலக யதார்த்தமே தெரியாத, தன்னைச்சுற்றி எந்த ஆபத்தும் எந்த நேரத்திலும், யார் மூலமும், எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற விழிப்புணர்வுகளும் இல்லாத, இந்தக்கால இளம் பெண்களும், அவர்களின் பெற்றோரும் அவசியமாகப் படிக்க வேண்டிய கதை இது.




கதையில் வரும் எல்லாவற்றையும் இங்கு நான் சொல்லிவிட்டால், கதையை வாங்கி ’ஜெயஸ்ரீ’ அவர்களின் அழகிய புதுமையான, வித்யாசமான  எழுத்து நடையில் வாசிக்கும் போது, தங்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துபோகும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

மின்னூலைப் படிக்க ஆரம்பத்ததிலிருந்து கடைசிவரை ஒரே சஸ்பென்ஸுடனும், அடுத்து அந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆபத்துகள் வருமோ, மேற்கொண்டு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்ற திக் திக் என்று நம் மனம் அடித்துக்கொள்ள, விசாரத்துடனும் படிக்க வேண்டிய கதையாக உள்ளது.

ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் அழகாக வித்யாசமாக காட்சிப்படுத்தி எழுதியுள்ளார்கள் இந்தக் கதாசிரியர். ஆங்காங்கே உள்ள மஹாமட்டமான சூழ்நிலைகளையும், அந்தப்பெண் சந்திக்க நேரும் மனிதர்களையும், அவர்கள் ஒவ்வொருவரின் வக்கிரமான எண்ணங்களையும், குணாதிசயங்களையும் வர்ணித்துள்ள விதம் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளன.

இந்த மின்னூல் கதையினில் ஒரு சிறு குறை என்று சொல்ல வேண்டுமானால் பக்கம் எண்: 21 முதல் 27 வரை உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை அப்படியே பக்கம் எண்: 28 முதல் 33 வரை மீண்டும் REPEAT ஆகின்றன. அதனால் மின்னூலை வாங்கி வாசிக்க விரும்புவோர் பக்கம் 27 முடிந்ததும் பக்கம் 34 க்கு தாவிச் சென்று தொடர்ந்து படித்துக்கொள்ளலாம். :) 


 
 




கதையில் வரும் ஒருசில உரையாடல்களை மட்டும் இங்கு நான் கொடுத்துள்ளேன். அனைத்தையும் எழுத எனக்கும் ஆசைதான். இருப்பினும்  தாங்களே திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்து நடையில் வாசித்து மகிழ வேண்டும் என்பதால் கொஞ்சூண்டு மட்டும் இங்கு நான் சாம்பிளாகக் கொடுத்துள்ளேன். 

மலர்விழியின் அம்மா தன் மகள் மலர்விழியிடம்:

”பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப்பாரு. தண்ணியடிக்கிறயா....? தண்டால் எடுக்கிறியாண்டு....!


“காலேஜ் படிப்புப் படிக்கிறேன்ன்னு ஒத்த காலுல நின்னு அடம்பிடிச்சு அறுவடைப்பணத்தை அம்புட்டயும் அள்ளிக்கொண்டு போயி அந்தப் பாளாப்போன கட்டுடத்துக் கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!”

மலர்விழி தன் தாயிடம்:

“யம்மா, அது படிக்க பீஸ்.... அன்னிக்கு அம்புட்டுக் கொடுத்ததாலத் தான இன்னிக்கு நான் ஒரு கிராஜுவேட்டுன்னு பெருமையாச் சொல்லிக்கிட முடியுது. இப்போ ஒரு முப்பதாயிரம் மட்டும் கொடு. இனிமேட்டு நான் பி.எட். படிச்சுட்டா அம்புட்டுத்தான்.... ஒரு டீச்சர் ஆகிப்புடுவேன். அதுக்குப் பெறகு நான் ஏன் மேற்கொண்டு படிக்கப்போறேன்னு உங்கிட்ட கெஞ்சிக்கிட்டு நிற்கப் போறேன்”.

மலர்விழியின் அம்மா தன் மகளிடம்:

”அன்னிக்கு என் தம்பியக் கட்டியிருந்தீன்னா இன்னிக்குக் கையில பிள்ளையோட நீயும் துபாய் போயிருக்கலாமில்ல. கூறு கெட்டவளே...! நல்ல சான்ஸை நளுவ விட்டுப்போட்டு இப்போ கிடந்து அலபாயுற. நீ என்னாத்த படிச்சா எவன் கேட்குறான்.... கல்யாணம் பண்ணி புள்ளயப் பெத்தோமா.... போய்ச் சேர்ந்தோமான்னு நிக்காமா.... இவ படிச்சி ஊருக்குச் சொல்லிக்கொடுத்து பயபுள்ளைய சீமைக்கு அனுப்பப்போறியாக்கும்...? திருட்டுப்பயலுவ நடமாடற ஊருடி இது.... எங்கிட்டுப் பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா நடக்குது. கலியாணம் தாண்டி பாதுகாப்பு. வெளங்கிச்சா....?”

மலர்விழி தன் தாயிடம்:

“எம்மா..... எம்பூட்டு சொல்றது. உம்ம மூளைக்கு முண்டாசுதான் கட்டோணும். சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது. பிரச்சனைதான் வந்து பொறக்கும்..... எம்புட்டுச் சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டே. கூறப் பத்தி நீ எங்கிட்ட பேசுறியா? துபாயிலே மாமா என்ன வேலை பாக்குதுன்னு உனக்குத் தெரியாதா? வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து உங்கிட்ட ஐநூறு ரூபா கொடுத்துட்டா அவரு பெரிய சீமைத் துரையா....? இப்போ நான் மேற்கொண்டு படிக்கணும். அதுக்கு வழியச்சொல்லு. உன்னோட வெளங்காத கேள்விக்கெல்லாம் பதிலு சொல்ல என்னால ஆகாது.

சென்னைக்கு மலர்விழியை வரவழைத்துள்ள தோழி ஷீலா:

“இதோ இந்தக்கட்டடம் தான் ஹாஸ்டல்.... பாத்தியா பேர ‘சாந்திக் குடில்’ உனக்காச்சும் இங்கு எங்கிட்டாவது சாந்தி கிடைக்குதா பார்க்குறேன்” என்று ஷீலா மலரிடம் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைகிறாள். “மெல்ல வா ... அந்தக்கதவுல ஒரு ஆணி நீட்டிக்கிட்டு கெடக்கு. உன் கையை அல்லது உன் துப்பட்டாவை கிழிச்சித் தொலைக்கும். பார்த்து வா” என்று சொல்லிக்கொண்டே வராண்டாவில் காலடி எடுத்து வைக்கவும் ......

மலர்விழி தன் தோழி ஷீலாவிடம்:

”டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... கிழிஞ்சுடுச்சுடி!” மலர் அழாத குறையாக அலறினாள்.

பொதுவான சில காட்சிகள்:

ஹாஸ்டல் ரூமுக்கு உள்ளே நுழையும் போதே ஒரு முடை நாற்றம்.... வந்து, மலர் தன் முகத்தை சுழித்துக்கொண்டாள். 

-oOo-

தான் ஒரு பெரிய கம்பெனியிலே வேலை செய்யப்போவதாக கற்பனை செய்தபடியே ஷீலாவுடன் நடக்கிறாள் மலர்.

-oOo-

கூவம், குப்பை, கூளம், சாராயக்கடை, சகதி, முட்டுச்சந்து, மூத்திரச் சந்து எல்லாவற்றையும் கடந்து நாற்றம் வரவேற்க ஒரு பழைய கட்டடத்திற்குள் அழைத்துச் செல்வதைப் பார்த்து, ”இது மட்டும் என்ன ஓவியமா? இதற்கு அந்த ரூம் தேவலை” என வாய்விட்டுச் சொன்னவள்......

“அம்மா நான் தப்புப் பண்ணிட்டேன்..... எம்புட்டு சொன்னே..... சென்னையில் ஒரு நல்ல இடம்கூட இல்லைம்மா... இந்த ஊர்லே எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா... ஹாங் நயன்தரா.... இவுங்க எல்லாம் இருக்காங்க.... அத்துக்கிட்டு ஓட வேண்டாமா?” என மனதுக்குள் கேட்டுக்கொள்கிறாள்.  

-oOo-

இதுபோன்ற ஆத்துமீனுக்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும் மலரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.

-oOo-

வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் ஏதோ குசுகுசுவென்று பேசவும்......

”அதெல்லாம் படியும்..... முதல்ல கோழியை..... அமுக்கு..... பெறகு கொசுவையும் பிடிக்கலாம்....” என்று பூடகமாகச் சொல்லிவிட்டு, போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கெளரவப்புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு வெளியேறினார் வந்தவரான அமீர்பெட் ஆஞ்சநேயலு.

-oOo-

இந்த மின்னூல் கதையில் வரும் ’அமீர்பெட் ஆஞ்சநேயலு’ என்ற கதாபாத்திரத்தின் பெயர் தேர்வும், அவரின் உருவம், குணாதிசயம், பற்றிய வர்ணனைகளும், தெலுங்குப் பேச்சுக்களும், அவற்றின் தமிழ் மொழியாக்கமும் மிகவும் அட்டகாசமாக ரஸிக்கும்படியாக உள்ளன. 

எழுத்தாளர் ஜெயஸ்ரீ இப்போது ஹைதராபாத் வாசி அல்லவா! அதனால் ஆங்காங்கே ‘சுந்தரத் தெலுங்கிலும்’ சிலவற்றைச் சொல்லி சொக்க வைத்துள்ளார்கள்.  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !





தொலைத்ததும்... கிடைத்ததும்...! 
என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக 
எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
 திருமதிஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்


இந்த மின்னூலை உடனடியாக படிக்க விருப்பமுள்ளோர் 
http://www.pustaka.co.in/home/ebook/tamil/tholaithathum-kidaithathum 
என்ற இணைப்புக்குச் சென்று ’Buy Now’ என்பதை க்ளிக் செய்யுங்கோ, போதும். 
உங்களைத்தேடி மின்னல் வேகத்தில் இந்த மின்னூல் வந்து சேரும் . 


  


திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் 
அடுத்த மின்னூல் மதிப்புரையில் 
மீண்டும் விரைவில் நாம் சந்திப்போம்.

ஜாக்கிரதை ! 
 
 

என்றும் அன்புடன் தங்கள்,

47 கருத்துகள்:

  1. நான் தான் இம்முறையும் 1ஸ்ட்டோ?:) முதலாவதாக வருவதில் இருக்கும் த்றிலே ஒரு த்றில்தான்ன்ன்:).. முதலில் மின்னூல் ஆசிரியருக்கு சொல்லிடுறேன்ன்..

    வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ அக்கா... இன்னும் பல நூல்கள் இப்படி வெளியிட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 4, 2017 at 12:22 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நான் தான் இம்முறையும் 1ஸ்ட்டோ?:)//

      எப்போதுமே நீங்கதான் ஃபர்ஸ்ட்டூஊஊ அண்ட் பெஸ்டூஊஊ.

      //முதலாவதாக வருவதில் இருக்கும் த்றிலே ஒரு த்றில்தான்ன்ன்:)..//

      முதலில் வருவோருக்கு மட்டுமல்ல .... இதில் வரவேற்பவருக்கும்கூட ஒரே த்ரில் மட்டும்தான்.

      //முதலில் மின்னூல் ஆசிரியருக்கு சொல்லிடுறேன்ன்..//

      அ(த்)தைச் செய்யுங்கோ.

      //வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ அக்கா... இன்னும் பல நூல்கள் இப்படி வெளியிட வாழ்த்துகிறேன்.//

      ஆஹா ‘ஜெயஸ்ரீ அக்கா’! எவ்வளவு ஒரு அழகான சொல்லாடல்!!

      ’அக்கா’வை ஒரு ’கொக்கா’வே இங்கு வந்து வாழ்த்தியுள்ளதற்கு என் நன்றிகளும்.

      நீக்கு
    2. அன்பின் ஆதிரா,

      நீங்கள் முதலில் வந்து வாழ்த்து சொல்லிவிட்டீர்கள். நன்றி.
      எனக்கு கண்வலி வந்து படாத பாடு பட்டு...மீண்டு வந்தேன்.
      எனது தாமத வருகையின் காரணம் .தங்களின் வாழ்த்துக்களுக்கு
      எனது மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
    3. அன்பின் ஜெயஸ்ரீ மேடம். தங்களுக்கு ஓர் சின்ன தகவல்.

      மேலே பின்னூட்டமிட்டுள்ளவர் பெயர் ஆதிரா அல்ல. இவரின் பெயர் திருமதி. ’அதிரா’ என்பது மட்டுமே.

      எப்போதும் தன் வயது ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே என்று இவர்களாகவே வைத்துக்கொண்டுள்ளதால், ’திருமதி. அதிரா மேடம் அவர்கள்’ என்றெல்லாம் நாம் அழைத்தால் கோபம் வரக்கூடும்.

      ’அதிரா’ என்றால் எதற்குமே ’அதிராத’வங்க என்று பொருளாகும்.

      ”உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!” என்ற மஹாகவி பாரதியாரின் வரிகளுக்குப் பொருத்தமானவங்களாகும்.

      ’ஆதிரா முல்லை’ என்ற பெயரிலும் ஓர் பெண் தமிழ் பதிவர் இந்த வலையுலகில் உள்ளார்கள். இப்போது ஏனோ அவர்கள் அதிகமாகக் கண்களுக்கு எட்டாமல் பதிவுலகிலிருந்து விலகி உள்ளதாகத் தெரிகிறது. 2011-2012 இல் நான் வெளியிட்டுள்ள சில பதிவுகளில் ’ஆதிரா முல்லை’ என்ற தமிழ் புலமை வாய்ந்த அந்தப்பதிவரும் பின்னூட்டமிட்டுள்ளார்கள்.

      இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இனி நீங்கள் இந்த Athira என்பவரை ‘அன்பின் அதிரா’ என்றே அழைக்கவும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன்.. எதுக்கு சுத்தி வளைக்கிறீங்க?.. ஜெயஸ்ரீ அக்கா புதுசா வந்தவ என்னைப் பற்றி என்ன நினைப்பா சொல்லுங்கோ?:) ஏதோ நான் பொய் சொல்லித் திரிகிறேன் எண்டெல்லோ நினைக்கப்போறா கர்:)...

      சுத்தி வளைக்காமல் ஒரு வரியில சொல்ல வேண்டியதுதானே.. அதிராவுக்கு இப்பத்தான் “சுவீட் 16 “ நடக்குது... நீங்க அதிரா என்று அழைச்சாலே போதும்:).. அவவுக்குப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது என:)... அதை விட்டுப் போட்டு பந்தி பந்தியா எழுதி.. என்னை மானபங்கப்படுத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதுக்கு என் வன்மையான கண்டனங்கள் டெல்லிட்டேன்ன்:). எங்கிட்டயேவா?:).. ம்ஹூம்ம்ம்:).

      நீக்கு
    5. athira May 6, 2017 at 1:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன்.. எதுக்கு சுத்தி வளைக்கிறீங்க?..//

      நான் யாரையும், எதையும் சுத்தி வளைக்கவும் இல்லை. சுத்தி வளைக்க விரும்பவும் இல்லையே. அதுவும் சுமார் ஒரு வாரமாக நான் உண்டு என் வேலையுண்டு என மிகவும் கவனமாகவும் உஷாராகவும் அல்லவோ பிறருக்கான என் பின்னூட்டங்களையும், என் பதிவில் தோன்றும் பிறரின் பின்னூட்டத்திற்கான என் பதில்களையும் மிகவும் யோசித்து அல்லவோ கொடுத்து வருகிறேன்.

      அப்படியிருந்துவரும் எனக்குப்போய் இவ்வளவு பெரிய கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆஆஆஆஆ?

      //ஜெயஸ்ரீ அக்கா புதுசா வந்தவ//

      புதுசா என்றால் எங்கட ’பதினாறு வயதினிலே மயிலு’ போலவா? 1977-இல் வெளியான அந்தப்படம் வந்தே இப்போது நாற்பது வருடங்கள் ஆச்சே. அப்பவே 16 என்றால் இப்போ (அதில் எங்கட மயிலுக்கு வரும் அம்மாவான குருவம்மா போல) 16+40=56 இருக்கும் அல்லவோ! சரி அது போகட்டும். எனக்கு எதற்கு அனாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்?

      //.. என்னைப் பற்றி என்ன நினைப்பா சொல்லுங்கோ?:) ஏதோ நான் பொய் சொல்லித் திரிகிறேன் எண்டெல்லோ நினைக்கப்போறா கர்:)... //

      சேச்சே ...... அதுபோலெல்லாம் ஒருபோதும் நினைக்கவே மாட்டாங்கோ. ஏனெனில் அவங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க. தங்கமானவங்க. பத்திரை மாத்துத் தங்கம் போன்ற குணவதியாக்கும். (அந்தத் தங்கத்தை உரசிப்பார்த்தால் உங்களுக்கே தெரியும்) குழந்தைபோன்ற கள்ளம் கபடமற்ற மிகவும் அழகான மனசு அவங்களுக்கு.

      //சுத்தி வளைக்காமல் ஒரு வரியில சொல்ல வேண்டியதுதானே.. அதிராவுக்கு இப்பத்தான் “சுவீட் 16 “ நடக்குது... நீங்க அதிரா என்று அழைச்சாலே போதும்:).. அவவுக்குப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது என:)...//

      என் பார்வையில் மிகச் சிறந்ததோர் கதாசிரியரான அவர்களுக்கே இந்நேரம், நீங்க மேலே சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும்.

      ஷீ இஸ் டூஊஊஊ ஷார்ப், டூஊஊஊ ஸ்மார்ட் அண்ட் ஆல்ஸோ டூஊஊஊ ஸாஃப்ட் ஆக்கும். !!!!!

      //அதை விட்டுப் போட்டு பந்தி பந்தியா எழுதி.. என்னை மானபங்கப்படுத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..//

      அடடா ..... இப்படி என்னென்னவெல்லாமோ அபாண்டமாக பழிபோட்டு சொல்லிப்பூட்டீங்களே ..... மொத்தத்தில் எனக்கு இப்போது கொஞ்சநாட்களாகவே போதாதகாலமாக உள்ளது போலிருக்குது. அதனால் என் வழக்கமான பாணியில் இதற்கு நான் பதிலளிக்காமல் பொறுமையைக் கடைபிடித்துள்ளேனாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      //இதுக்கு என் வன்மையான கண்டனங்கள் டெல்லிட்டேன்ன்:).//

      இது வேறு இலவச இணைப்பா? ‘சோதனை மேல் சோதனை ..... போதுமடா சாமீ ..... வேதனைதான் வாழ்க்கை என்றால் ..... தாங்காது பூமி........’

      //எங்கிட்டயேவா?:).. ம்ஹூம்ம்ம்:).//

      உங்ககிட்ட பேசி என்னால் ஜெயிக்க முடியாதும்மா. நீங்க மட்டும் ஜாலியா இதுபோல உங்க பாணியில் கலகலப்பா பேசிக்கினே இருங்கோ.

      நான் இப்போதெல்லாம் மெளன விரதம் அனுஷ்டித்து வருகிறேனாக்கும். ஹூக்க்க்க்கும்.

      நீக்கு
    6. ஹா ஹா ஹா மெளன விரதம் இருந்தே .. இப்பூடியெனில்.. அப்போ மெளனத்தைக் கலைச்சால்ல்ல்....??:) சரி வாணாம்ம்:)..

      நாங்க உங்களை வோச் பண்ணிட்டுத்தான் இருப்போம் எப்பவும்:).. நீங்க எல்லை தாண்டினால் விடமாட்டோம்ம்.. கேள்வி கேட்போம்ம்:)..

      ஹையோ இதுக்கு மேலயும் இங்கின நிண்டால் ஆபத்து... :).. நான் காதுக்குப் பஞ்சு வச்சிட்டேன்ன்ன்.. இனி நீங்க எப்பூடித்திட்டினாலும் நேக்குக் கேய்க்காதூஊஊஊஊ:).. எஸ்கேப்ப்ப்ப்:).

      நீக்கு
  2. // (கிராமம் மட்டுமல்ல ... பெண்ணும் அழகோ அழகுதான்),//

    நீங்க போய்ப் பார்த்தீங்க?:) கர்ர்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 4, 2017 at 12:27 AM

      **(கிராமம் மட்டுமல்ல ... பெண்ணும் அழகோ அழகுதான்),**

      //நீங்க போய்ப் பார்த்தீங்க?:) கர்ர்:)..//

      கொளுத்தும் அக்னி நக்ஷத்திர வெயிலில் நான் போய் யாரை எங்கு பார்க்க முடியும்? மேலும் எதற்கு நான் நிரந்தரமில்லாத இந்த அழகு என்பதைப் பார்க்கணும்?

      எல்லாம் உங்களின் அழகான ஜெயஸ்ரீ அக்கா தன் கதையில் சொல்லியுள்ள அழகோ அழகு மட்டுமேவாக்கும். ஹூக்க்க்கும்.

      ஆ...ஊ...ன்னா உடனே ஒரு கர்ர் ! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!

      நீக்கு
  3. அதுசரி எதுக்கு சொந்த பந்தங்களின் படத்தை நடுவில் போட்டிருக்கிறீங்க?:).

    ///தண்ணியடிக்கிறயா....? தண்டால் எடுக்கிறியாண்டு....!//

    இதில் எழுத்துப் பிழை வருதோ? தண்டல்.. என வந்திருக்கோணுமோ?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அதிரா - தண்டால், பஸ்கி போன்றவை உடற்பயிற்சிகள். எல்லாரும் உங்க பதிவுல கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு தவறுகளைக் கண்டுபிடிப்பதான் நீங்களும் அதை முயற்சிக்கிறீர்களா? (தண்டல் என்பது வேறு. அது தமிழ் என்று தோன்றவில்லை)

      நீக்கு
    2. athira May 4, 2017 at 12:29 AM

      //அதுசரி எதுக்கு சொந்த பந்தங்களின் படத்தை நடுவில் போட்டிருக்கிறீங்க?:).//

      என்னது .... உங்களுக்கு இவர்களெல்லாம் சொந்த பந்தங்களா? என்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே!

      http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_23.html இதோ இந்தப்பதிவின் முதல் பின்னூட்டத்தின் ‘என் கிரேட் குரு’ என மட்டுமே சொல்லியிருந்தீர்கள்.

      **தண்ணியடிக்கிறயா....? தண்டால் எடுக்கிறியாண்டு....!**

      //இதில் எழுத்துப் பிழை வருதோ?//

      இல்லை அதுபோலத் தெரியவில்லை. தண்டால் எடுப்பது என்பது வெயிட்-லிஃப்டிங் போன்ற ஓர் உடற்பயிற்சி மட்டுமே.

      [தண்ணியடிப்பதுபோலவே பொதுவாக அந்தக்காலத்தில் ஆண்கள் செய்வது மட்டும்தான் இதுவும். ஆனால் இப்போ கொஞ்சம் காலம் மாறியுள்ளது.]

      //தண்டல்.. என வந்திருக்கோணுமோ?:).//

      ’தண்டல்’ என்ற தமிழ் வார்த்தைக்கு ‘வரி வசூலித்தல்’ என்ற பொருள் மட்டுமே உண்டு.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழனுக்கு கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா..
      தண்ணியடிப்பது என்பது கெட்ட செயல் அதுபோலத்தான் தண்டல் எடுப்பது என்பதும் கூடாத செயல்தானே.. அதனால்தான் அப்பூடி நினைச்சேன்ன்...

      இது உங்கள் இருவரின் கருத்தும் புதுசு எனக்கு... இன்று புதுசா ஒரு சொல் படிச்சிட்டேன்ன்ன்ன் தண்டால்ல்ல்ல்ல்ல்:)...

      அப்போ “தண்டல்” தமிழ்ச் சொல் இல்லையோ?... “பொங்கியவர் புக்கையிலும் பார்க்க, தண்டியவர் புக்கை அதிகமாம்” எனும் பழமொழிகூட இருக்கே...

      நீக்கு
  4. மிக அருமையான ஒரு புத்தக அலசல்.. நன்றாக செய்திருக்கிறீங்க வாழ்த்துக்கள்...

    //ஜாக்கிரதை ! /// இது என்ன ஜெயஸ்ரீ அக்காவின் அடுத்த மின்னூல் புத்தகமோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira May 4, 2017 at 12:32 AM

      //மிக அருமையான ஒரு புத்தக அலசல்.. நன்றாக செய்திருக்கிறீங்க வாழ்த்துக்கள்...//

      ஆஹா, நன்றாக அலசிச்சொல்லி வாழ்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //**ஜாக்கிரதை !** இது என்ன ஜெயஸ்ரீ அக்காவின் அடுத்த மின்னூல் புத்தகமோ?:)//

      இல்லை. இல்லை. அதுபோல இல்லை. ஜெயஸ்ரீ அக்காவின் அடுத்தடுத்த மின்னூல்களான (3) பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள் (4) காய்க்காத மரமும்.... (5) ’டெளரி தராத கெளரிக் கல்யாணம்’ ஆகியவை பற்றிய மின்னூல் மதிப்புரைகள் என்னால் ஒருவேளை வெளியிடப்படலாம் .... எனவே ஜாக்கிரதை! எனச் சொல்லியுள்ளேனாக்கும்.

      நீக்கு
  5. இக்காலத்து இளம்பெண்கள் குறிப்பா கானல் நீரை நிஜமென்று நம்பி மாயவலையில் விழும் பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை என்பதை உங்கள் ரிவ்யூ தெளிவாக சொல்கிறது ..உலகம் எத்தனை மோசமானது எதோ வேலை ஆசையில் வந்த பெண்ணுக்கு என்னானதோ என்று மனம் பதைபதைக்கிறது ..பாவம் .துப்பட்டா கிழிந்தபோதே எதிர்காலமும் தனது ஆசைகளும் சிதரப்போகிறது என்பதை அவள் உணர வில்லையே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////எதோ வேலை ஆசையில் வந்த பெண்ணுக்கு என்னானதோ என்று மனம் பதைபதைக்கிறது///
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு அஞ்சு ஸ்ரொப் ஸ்ரொப்... இந்தாங்கோ இந்த சுடுதண்ணியைக் குடிச்சு கொஞ்சம் பதைபதைப்பைக் குறையுங்கோ கர்ர்ர்ர்ர்:).. கோபு அண்ணன் புளொக்குக்கு இன்சூரன்ஸ் இருக்கோ தெரியல்லியே முருகா:).. உச்சிப்பிள்ளையார் கோயில் வளவை வித்துத்தான் கட்டோணும் போல இருக்கே:).

      நீக்கு
    2. Angelin May 4, 2017 at 12:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இக்காலத்து இளம்பெண்கள் குறிப்பா கானல் நீரை நிஜமென்று நம்பி மாயவலையில் விழும் பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை என்பதை உங்கள் ரிவ்யூ தெளிவாக சொல்கிறது ..//

      ஆமாம். அதே.... அதே.... தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

      //உலகம் எத்தனை மோசமானது எதோ வேலை ஆசையில் வந்த பெண்ணுக்கு என்னானதோ என்று மனம் பதைபதைக்கிறது ..//

      ஆமாம். படிக்கும்போதே மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது.

      //பாவம். துப்பட்டா கிழிந்தபோதே எதிர்காலமும் தனது ஆசைகளும் சிதறப்போகிறது என்பதை அவள் உணர வில்லையே :( //

      ஆம். மலருக்கு வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்களை முன்கூட்டியே, சிம்பாலிக்காக ஷீலா தன் பல்வேறு அனுபவங்களால் உணர்த்துவதாக உள்ளது இந்த நிகழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    3. அன்பின் Anjelin .

      தங்களின் கருத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.
      கதையைப் படிக்கும் போது கொஞ்சம் திக் திக் தான் இருக்கும்.
      இருந்தாலும், திக்கற்றவற்கு தெய்வமே துணை ..என்றும்
      தோன்றும்.. பல கருத்துக்கள் கதையூடே கூட வரும்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்

      நீக்கு
  6. கதை இளம் பெண்ணின் ஆசிரிய பயிற்சி ஆசையைப் பற்றியும் அதற்கிடையில் ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி சொல்கிறது. தாய் மகள் உரையாடல் அருமை. தலைப்பை பார்க்கும் போது பல இடையூறுகளை தாண்டி தன் ஆசிரியர் பயிற்சி கனவை பூர்த்தி செய்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    ஜெயந்திக்கு வாழ்த்துக்கள். மதிப்புரையை அருமையாக செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு May 4, 2017 at 6:16 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கதை இளம் பெண்ணின் ஆசிரிய பயிற்சி ஆசையைப் பற்றியும் அதற்கிடையில் ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி சொல்கிறது. தாய் மகள் உரையாடல் அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //தலைப்பை பார்க்கும் போது பல இடையூறுகளை தாண்டி தன் ஆசிரியர் பயிற்சி கனவை பூர்த்தி செய்து விடுவார் என்று நினைக்கிறேன்.//

      தங்கள் யூகம் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

      //ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்கள். மதிப்புரையை அருமையாக செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. அன்பின் திரு.கோமதி அரசு அவர்களுக்கு,

      தங்களின் மேலான கருத்துக்களுக்கும் ,
      பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள்.
      வயதுக் காலத்தில் வரும் ஆசைகள் ஆபத்து அறியாது.
      அனுபவத்தையும் காதுகொடுத்துக் கேட்காது. விளைவு..?
      இதனடிப்படையில் பல விஷயங்களின் கோர்வையில்
      தொடுக்கப் பட்ட கருத்துக்கள்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
  7. கதைக்களம் நிச்ச்யம இன்றைய சூழலில்
    அவசியமானது

    கதையின் சில வாக்கியங்களைப் பதிவு
    செய்தது கதை எத்தனை இயல்பாய்
    உணர்வுப் பூர்வமாய் எழுதப்பட்டிருக்கும்
    என்பதை புரிந்து கொள்ளவைத்தது

    அருமையாக அருமையான கதையை
    நூல் அறிமுகமாகவும் விமர்சனமாகவும்
    பதிவு செய்தமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S May 4, 2017 at 7:13 AM

      வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.

      //கதைக்களம் நிச்சயம் இன்றைய சூழலில் அவசியமானது.//

      ஆமாம், ஸார்.

      //கதையின் சில வாக்கியங்களைப் பதிவு செய்தது கதை எத்தனை இயல்பாய் உணர்வுப் பூர்வமாய் எழுதப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளவைத்தது//

      தங்களின் இந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி, ஸார்.

      //அருமையாக அருமையான கதையை நூல் அறிமுகமாகவும் விமர்சனமாகவும் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. அன்பின் திரு.ரமணி அவர்களுக்கு,

      தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. புரிதலுக்கும்
      மேலான கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      கோபு ஸார் மிகவும் ஆழ்ந்து படித்து கருத்துக்கள் எழுதி இருப்பது
      எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது இந்த பெருந்தன்மை
      போற்றுதலுக்குரியது என்றே சொல்கிறேன்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்பின் Mohamed Althaf .அவர்களுக்கு,

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்,

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்

      நீக்கு
  9. மின்னூல் விமரிசனம் நல்ல detailedஆ இருக்கு. ஆழ்ந்து படிச்சிருக்கீங்க என்பது, பக்கங்கள் ரிபீட் ஆவதைக் கண்டுபிடித்ததிலிருந்து அறிய முடிகிறது.

    கடைசியில் போட்டுள்ள படம் ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் May 4, 2017 at 12:50 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //மின்னூல் விமரிசனம் நல்ல detailedஆ இருக்கு.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஆழ்ந்து படிச்சிருக்கீங்க என்பது, பக்கங்கள் ரிபீட் ஆவதைக் கண்டுபிடித்ததிலிருந்து அறிய முடிகிறது.//

      எந்த ஒரு வரியையுமே ஆழ்ந்து மனதில் வாங்கிக்கொண்டபிறகே, அடுத்த வரிக்குச் செல்பவன் நான். ஆழ்ந்து படிச்சுக்கிட்டே வரும்போது, படித்து மண்டையில் ஏற்கனவே ஏற்றப்பட்டு ஸ்டோரேஜ் ஆன சமாச்சாரங்களே திரும்பி வருவதைக் கண்டு பிடிப்பதில் என்ன பெரிய கஷ்டம் இருக்க முடியும்?

      //கடைசியில் போட்டுள்ள படம் ........//

      அது சும்மா ஒரு தமாஷுக்கான அனிமேஷன் பூனைப்படம் மட்டுமே. வேறு எந்தப் பதிவரையும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். நீங்களாகவே ஏதேனும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம், ஸ்வாமீ.

      நீக்கு
    2. அன்பின் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு,

      தங்களின் பாராட்டுகளுக்கு மனம் நல்கும் நன்றிகள்.
      கோபு ஸார் , என்னையும் அவரது வலைப்பூவில் அறிமுகப் படுத்தியதில்
      மகிழ்வும் நன்றியும் அடைகிறேன்.

      கடைசியில் போட்ட படம்....?..ஆமாம்....நானும் நினைத்தேன்.......!
      அவரது வலைப்பூ....அவரது இஷ்டம் என்று விட்டுவிட்டேன்.

      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.


      நீக்கு
  10. அருமையான கதை

    அருமையான விமர்சனம்.

    கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுண்டு படிப்பீங்களோ? பக்கம் மீண்டும் வந்ததைக் கூட விடவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 4, 2017 at 3:37 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //அருமையான கதை. அருமையான விமர்சனம்.//

      மிகவும் சந்தோஷம்.

      //கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுண்டு படிப்பீங்களோ? பக்கம் மீண்டும் வந்ததைக் கூட விடவில்லையே.//

      பொதுவாகவே நான் எதை படிக்கும்போதும் நுனிப்புல் மேய்வது கிடையாது. படித்தால் மனதில் வாங்கிக்கொண்டு முழுமையாக மட்டுமே படிப்பேன்; ஒருவேளை நான் படித்த அது ஓரளவுக்காவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தால் அவைகளுக்கு மட்டுமே. பின்னூட்டமும் இடுவேன்.

      நூல் அறிமுகமோ, விமர்சனமோ, மதிப்புரையோ வெளியிடும்போது கண்களில் விளக்கெண்ணெய் விட்டுண்டு படிப்பதுதான் மிகவும் நல்லது. அங்கும் நுனிப்புல் மேய்வது மிகவும் அபத்தமாகும்.

      யாரோ ஒருவர் தன் அச்சிடப்பட்ட நூலை வெளியிடும்போது, அந்த நூலின் ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப்படிக்காத, புரட்டிப் படிக்கவே இஷ்டமில்லாத மற்றும் நேரமில்லாத, வேறு யாரோ ஒருவர் (V.I.P) முன்னுரை, புகழுரை என ஏதாவது சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதித்தருவதும் உண்டு.

      அது நான் மேலே சொல்லியுள்ள அபத்தத்திற்கு நல்லதொரு உதாரணமாகும்.

      நீக்கு
  11. திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் படைப்பான ‘தொலைத்ததும்...கிடைத்ததும்...!’ என்ற மின்னூல் பற்றிய தங்களின் திறனாய்வில், கதையை சுருங்கச்சொல்லி விளங்கவைத்து, அதை வாசிக்கும் விருப்பத்தை உண்டாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்.

    //சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது. பிரச்சனைதான் வந்து பொறக்கும்.//

    //அதெல்லாம் படியும்..... முதல்ல கோழியை..... அமுக்கு..... பெறகு கொசுவையும் பிடிக்கலாம்....”//

    கதையில் வரும் உரையாடல்களில் ஒரு சிலவற்றை தந்ததன் மூலம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று கதையில் உள்ள உரையாடல்களின் வீச்சை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

    தொலைத்த இடத்தில் தொலைத்தது கிடைத்ததா? என அறிய நூலை வாசிப்பேன். திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி May 4, 2017 at 5:54 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் படைப்பான ‘தொலைத்ததும்...கிடைத்ததும்...!’ என்ற மின்னூல் பற்றிய தங்களின் திறனாய்வில், கதையை சுருங்கச்சொல்லி விளங்கவைத்து, அதை வாசிக்கும் விருப்பத்தை உண்டாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள். //

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      **சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது. பிரச்சனைதான் வந்து பொறக்கும்.**

      **அதெல்லாம் படியும்..... முதல்ல கோழியை..... அமுக்கு..... பெறகு கொசுவையும் பிடிக்கலாம்....”**

      //கதையில் வரும் உரையாடல்களில் ஒரு சிலவற்றை தந்ததன் மூலம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று கதையில் உள்ள உரையாடல்களின் வீச்சை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.//

      தங்களின் இந்தப் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      //தொலைத்த இடத்தில் தொலைத்தது கிடைத்ததா? என அறிய நூலை வாசிப்பேன்.//

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      //திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. முதலில் ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்.. ஒரு வேலைதேடி இந்தளவுக்கு கஷ்டப்படாமல் கல்யாணம் கட்டிகிட்டு குழந்தைகளை பெத்தகிட்டு நல்லபடியா குடும்பம் நடத்துவதுதான் பெண்களுக்கு அழகோ...

      நீக்கு
    3. ஆல் இஸ் வெல்....... May 5, 2017 at 10:06 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஒரு வேலைதேடி இந்தளவுக்கு கஷ்டப்படாமல் கல்யாணம் கட்டிகிட்டு குழந்தைகளை பெத்தகிட்டு நல்லபடியா குடும்பம் நடத்துவதுதான் பெண்களுக்கு அழகோ...//

      வேலையோ கல்யாணமோ, எதுவுமே பக்குவமான வயதில், நியாயமாகவும், தர்ம வழியிலும், அதிர்ஷ்டமாகவும் அமைவதே அழகாக இருக்க முடியும்.

      இருப்பினும் எல்லோருக்கும் எல்லாமே எப்போதுமே இதுபோல அழகாக அமைந்து விடுவதில்லைதான்.

      ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதமான கதையாக மலர்கின்றன போலும் என நினைக்கத் தோன்றுகிறது.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. முக்கியமான வரிகளை எடுத்துக்காட்டித் திறனாய்வு செய்து நூல் படிக்கத் தூண்டியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் May 5, 2017 at 3:59 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //முக்கியமான வரிகளை எடுத்துக்காட்டித் திறனாய்வு செய்து நூல் படிக்கத் தூண்டியிருக்கிறீர்கள்.//

      தங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  13. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்றவர்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University May 6, 2017 at 12:10 PM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கங்கள்.

      //பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை.//

      அதனால் பரவாயில்லை. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் ஐயா.

      //பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html//

      தங்கள் பதிவினைக் கண்டு களித்து இரண்டு பின்னூட்டங்களும் கொடுத்துள்ளேன், ஐயா.

      -=-=-=-=-

      வை.கோபாலகிருஷ்ணன் 4 May 2017 at 19:09
      பணி ஓய்வு விழா பற்றிய படங்களும் செய்திகளும்
      மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளன. முனைவர் ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

      வை.கோபாலகிருஷ்ணன் 4 May 2017 at 19:15
      தங்களின் பணி ஓய்வு சமயம், தங்களுக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததும், தங்கள் துணைவியாரின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்துக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      -=-=-=-=-

      //நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்றவர்கள். நன்றி ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், நான் இங்கு அறிமுகப்படுத்தியுள்ள கதாசிரியர் அவர்களை தனித்திறமை பெற்றவர் எனத் தாங்களும் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  14. திருமதி.ஜெயஶ்ரீ அவர்களைப் பற்றி அறிய வைத்தமைக்கு உங்களுக்கு மிகுந்த நன்றி . நிறையப் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குவது மகிழ்ச்சிக்குரியது .பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கதையாகத் தெரிகிறது .உரையாடலில் சீர்காழித் தமிழில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் May 6, 2017 at 1:08 PM

      வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள் ஐயா.

      //திருமதி.ஜெயஶ்ரீ அவர்களைப் பற்றி அறிய வைத்தமைக்கு உங்களுக்கு மிகுந்த நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //நிறையப் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குவது மகிழ்ச்சிக்குரியது.//

      ஆம். ஐயா. மிகவும் அருமையாகவும், திறமையாகவும் எழுதி அசத்தித்தான் வருகிறார்கள். இவரைப்போன்ற சிலர் பிறருக்கு அதிகம் தெரியவராமல் ‘குடத்தில் இட்ட விளக்காக’வே உள்ளனர். இதுபோன்றவர்களை ’குன்றில் ஏற்றிய விளக்காக மாற்றி’ கெளரவித்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய அடிப்படை நோக்கமும் ஆசையும் ஆகும்.

      //பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் கதையாகத் தெரிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி, ஐயா.

      //உரையாடலில் சீர்காழித் தமிழில்லை.//

      ஒருவேளை அப்படியும் இருக்கலாம். எனக்கு அதுபற்றி சரிவரத் தெரியவில்லை ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  15. வழக்கம்போல அருமையான திறனாய்வு! அழகிய விமர்சனம்! நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் May 6, 2017 at 2:39 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வழக்கம்போல அருமையான திறனாய்வு! அழகிய விமர்சனம்!//

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      //நூலாசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  16. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இளம்பெண்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதுண்டு. பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்ற விழிப்புணர்வை இக்கதையூட்டும். இக்கதாநாயகி வேலைக்காக வெளியேறுகிறாள். பணியில் அமர்கின்ற இடத்தைப் பற்றிச் சரிவர அறியாமல், ஊர் விட்டு ஊர் வருவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இக்கதையை வாசிக்கும் பெண்கள் விழிப்புணர்வு பெற்றால் அதுவே ஆசிரியருக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றி என்பேன். கதைச்சுருக்கம், முழுதும் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நேரங்கிடைக்கும் போது வாசிக்கக் குறித்திருக்கிறேன். சிறந்த மதிப்புரைக்கு உங்களுக்குப் பாராட்டுகள். ஆசிரியர் மென்மேலும் எழுத வாழ்த்துகிறேன். பக்கங்களைத் தாண்டிப் படிக்க வேண்டும் என்ற விப்ரத்திற்குக் குரங்குக் குட்டிகள் தாண்டும் படத்தைத் தேர்வு செய்து போட்டமைக்கு சபாஷ்! மிகவும் ரசித்தேன். நன்றி கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி May 7, 2017 at 12:01 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இளம்பெண்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதுண்டு. பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்ற விழிப்புணர்வை இக்கதையூட்டும். இக்கதாநாயகி வேலைக்காக வெளியேறுகிறாள். பணியில் அமர்கின்ற இடத்தைப் பற்றிச் சரிவர அறியாமல், ஊர் விட்டு ஊர் வருவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இக்கதையை வாசிக்கும் பெண்கள் விழிப்புணர்வு பெற்றால் அதுவே ஆசிரியருக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றி என்பேன்.//

      ஆமாம். மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டீர்கள், மேடம்.

      //கதைச்சுருக்கம், முழுதும் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நேரங்கிடைக்கும் போது வாசிக்கக் குறித்திருக்கிறேன். சிறந்த மதிப்புரைக்கு உங்களுக்குப் பாராட்டுகள்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //ஆசிரியர் மென்மேலும் எழுத வாழ்த்துகிறேன்.//

      ஆம். நானும் தங்களுடன் சேர்ந்து வாழ்த்திக்கொள்கிறேன்.

      //பக்கங்களைத் தாண்டிப் படிக்க வேண்டும் என்ற விபரத்திற்குக் குரங்குக் குட்டிகள் தாண்டும் படத்தைத் தேர்வு செய்து போட்டமைக்கு சபாஷ்! மிகவும் ரசித்தேன். நன்றி கோபு சார்!//

      :) மிகவும் சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு