என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 ஜனவரி, 2014

VGK 01 / 01 / 03 ] FIRST PRIZE WINNER "ஜாங்கிரி”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்

கதையின்  தலைப்பு 

VGK 01 ] ஜா ங் கி ரி



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
கணிசமான எண்ணிக்கையில் பலரும், 
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 
வெகு அழகாக விமர்சனங்கள் 
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மூன்று. 


 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும் 
நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். 

   


மற்றவர்களுக்கு:  
BEST OF LUCK NEXT TIME !



    

முதல் 
’ஜாங்கிரி’யை 
{பரிசினை }
வென்றுள்ளவர்:-



திரு. ரமணி அவர்கள்
yaathoramani.blogspot.com
’தீதும் நன்றும் பிறர் தர வாரா...’



மனம் நிறைந்த 
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




முதல் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:



இனிப்பான தலைப்பில் வாழ்வின் விளிம்பு நிலை
மனிதர்களின்  கசப்பான வாழ்வை கோடிட்டுக்
காட்டிப் போகும் "ஜிலேபி " சிறுகதை மிக மிக அருமை

சிறு பின்சுவர் கட்டமுடியாமல் தினம் கட்டிட
வேலைக்குப் போகும் கொத்தனாரும்
வண்ண வண்ண ஆடைகளைத் தைத்துக் கொடுத்தும்
ஒரு எளிய கதர் ஆடையில் திரியும் தையல்காரரும்
வருடம்முழுவதும் பட்டாசு ஆலையில்
கந்தகத்தில் வெந்தும் தீபாவளிக்கு முதல் நாள் தரும்
ஒரு சிறு பட்டாசு பண்டலுக்காகக் காத்திருக்கும்
தொழிலாளியும் நமக்கு அதிகம் பழக்கப்பட்ட அளவு
இந்தச் சமையல் நாகராஜன்கள் நமக்குப்
பழக்கப்படச் சாத்தியமில்லை

அதனால்தான் பொதுவாகவே தண்ணீரில் கிடக்கும் தவளை
தண்ணீர் குடித்ததா இல்லையா என யார் கண்டது
எனப் பழமொழி சொல்லுகிறமாதிரி இந்த
அடுப்படிப் பணியாளர்கள் எல்லாம் சாப்பிட்டிருப்பார்களா
சாப்பிட்டிருக்கமாட்டார்களா என்கிற
சிறு சந்தேகம் கூட நமக்கு வருவதில்லை
நாமாகவே அவர்கள் திட்டவட்டமாக சாப்பிட்டிருப்பார்கள்
என்கிற முடிவுக்கே பல சமயங்களில் வந்து விடுகிறோம்

வேலை அலுப்பில் தொடர் வேலையில் அல்லது
சமையல் வாடை தொடர்ந்து முகத்திலடிக்கிற எரிச்சலில்
அவர்கள் பெரும்பாலான சமயங்களில் விஷேஷ வீடுகளில்
முறையாகச் சாப்பிடுவதே இல்லை.
பல சமயங்களில் கொஞ்சம் சோற்றை மட்டும் போட்டு
அனைத்து காய்கறிகளையும் சாம்பார் ரசம் அனைத்தையும்
போட்டுக் கலந்து கலவையாக இரண்டு மூன்று
கவளங்கள் மட்டும் சாப்பிடுவதை பல
சமயம் நானே பார்த்திருக்கிறேன்

சமையல் நாகராஜன்களே இப்படி எனில் சுவீட் போடும்
நாகராஜன்களை சொல்லவேண்டியதே இல்லை
அதுவும் வறுமையில் செம்மை என்பதே சிறப்பு என
தன்மானமும் கொஞ்சம் கூடிவிட்டால் நாகராஜன்களின் பாடு
ஜிலேபி  கதை நாயகன் நாகராஜன் மாதிரி அதோ கதிதான்

அதை மிகச் சரியாக உணர்ந்து வடித்த இந்தக் கதை
என்னை அதிகம் கவர்ந்ததில் ஆச்சரியமே இல்லை

ஒரு கருத்தைச் சொல்ல நிகழ்வைத் தேடுவது
அல்லது தன்னைப் பாதித்த நிகழ்வை ஒரு கருத்தோடு
இணைத்துத் தர ஒரு கதை செய்வது என இல்லாமல்
இப்படி நிகழ்வும் கருத்தும் மிகச் சரியாக இணையும்படியாக
கதை எழுதுதல் என்பது  அதுவும் சிறுகதை எழுதுவது
என்பது சாதாரண விஷயமேயில்லை.

அதுவும் காதாபாத்திரத்தை உயர்த்திச் சொல்லவேண்டும்
என்ற எண்ணத்தில் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிற
ஆரம்பத்திலேயே கோவில் குளம் சாமிபடம் முன்பு எனச்
சொல்லாமல் திண்ணையில் வெட்டி ஆபீஸர்கள் எல்லாம்
சீட்டாடிக் கொண்டிருப்பதைச் சொன்னவிதமும்
சீட்டில் அவர் கெட்டிக்காரத்தனத்தைச் சொன்னவிதமும்
இயற்கையாக இருந்ததோடு இல்லாமல் மிகச் சரியாக
அந்தக் கதாபாத்திரத்தின் சாமர்த்தியத்தையும் (?) மிகச் சரியாக
நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

தன் கதாபாத்திரத்திற்கு அதன் உணர்வுக்கு வலு சேர்க்க
வேண்டும் என்பதற்காக எதிர் கதாபாத்திரங்களின்
தன்மையைக் குறைக்கும் வேலைப்பாட்டைச் செய்யாதது
என்னை இந்தப் படைப்பில் மிகக் கவர்ந்தது

இயல்பாக சமையல்காரரின் நோக்கத்தில் இல்லாமல்
நம்முடைய சுய நல எண்ணத்திலேயே இரண்டு
பாராட்டு வார்த்தைகளை சம்பிராதயத்துக்குப்போட்டுவிட்டு
அடுத்த விசேஷத்திற்கு நீங்கள்தான் என
பொய்யான உறுதி மொழியைக் கொடுத்திவிட்டு
வேலையாளின் கூலியைக் குறைக்க முயலும் அல்பத்தனம்
நம் அனைவரிடத்தும் உண்டு

நல்ல வேளை அந்த அளவு மோசக்காரராக
அந்த விஷேஷ வீட்டுக்காரர் இல்லையென்றாலும் கூட
தன் சுயநல நிலையில் இருந்தே  நாகராஜனை டீல்
செய்கிற விஷயம் என்னை மிகவும் பாதித்தது

வியர்வை காயும் முன் கூலி கொடுப்பது சிறந்ததுதான்
சரியான கூலி கொடுப்பதும் மிகச் சிறந்துதான்
ஆயினும் அவன் உழைப்பைக் கௌரவப்படுத்தும்படியாகக்
கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை இந்தக் கதை
என்னுள் விதைத்துப் போனது

நிச்சயம் படிப்பவர்கள் அனைவரின் மனங்களிலும்
விதைத்துப் போயிருக்கும்

ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம் இதுபோல்
மேல் நோக்கி உயர்த்துவது என்பதல்லாது
வேறு ஏதாயிருக்க முடியும் ?

ஒரு படைப்பாளி வாசகனிடம் ஏற்படுத்த முயல்கிற பாதிப்பினை

அந்தப் பாதிப்பினை மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டி தன்னுள் அது நேர்ந்தது என
ஒரு வாசகன் சொல்வதை விட

ஒரு படைப்பாளிக்கு
அதிக மகிழ்வும் உற்சாகமும் தருவது
வேறு  ஏதாயிருக்க முடியும் ?

வாழ்த்துகள் வை.கோ. சார்


    

மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 
பற்றிய விபரம் இன்றே  தனித்தனிப்
பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன.


அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 30.01.2014  
இரவு 8 மணிக்குள் [I.S.T]





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


வெள்ளி, 24 ஜனவரி, 2014

கண்ணான கண் அல்லவோ !




என் நிலை விளக்கம்

அன்புடையீர்,

தங்கள் எல்லோருக்கும் என் பணிவான இனிய அன்பு வணக்கங்கள்.

பொதுவாக அறுவை சிகிச்சை என்றால் அது எப்படியிருக்கும் என்ற அனுபவமோ, கண் பார்வையில் கோளாறுகள் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்ற அனுபவமோ இதுவரை ஏற்படாமல் அதிர்ஷ்டமாகவே இருந்து வந்த எனக்கு, சமீபத்தில் இவை இரண்டு அனுபவங்களுமே ஏற்பட்டு பல்வேறு பாடங்களைக் கற்பித்துள்ளன. 

இவைகளால் எனக்கு ஏற்பட்ட தேவையற்ற பயங்கள் + மிகப்பெரிய  அனுபவங்கள் அத்தனையும் சேர்த்து “புதிய பார்வை” என்ற தலைப்பினில் பிறகு ஒருநாள் ஓர் தொடர்க் கட்டுரையாக எழுதலாம் என நினைக்கிறேன். அந்தக்கட்டுரை என்னைப்போன்ற ஒரு சிலருக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும் என நம்புகிறேன்.

எனக்கு சமீபத்தில் கண் ஆபரேஷன் நடந்துள்ளது என நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தாலும் பிறர் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் அழகாக கச்சிதமாக கண்பட்டுப் போகும்படி செய்து முடித்துள்ளார்கள். 

கத்தியின்றி, ரத்தமின்றி, கண்மீது கட்டுக்கள் ஏதுமின்றி, கண்ணை மறைக்கும் திரைத்துணிகள் ஏதுமின்றி, ஆபரேஷனுக்குப்பிறகு கூலிங் க்ளாஸ் மட்டும் போட்டு அப்படியே  நடந்து என் ரூமுக்குச் செல்லுமாறு என்னை அனுப்பி விட்டார்கள். அந்த அளவுக்கு இன்றைய மருத்துவ விஞ்ஞானம் முன்னேறி, மிகத்துல்லியமான உபகரணங்களும் வந்து விட்டன.

முதல் நாள் மட்டும், வலியும், உறுத்தல்களும் பலமணி நேரங்கள் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே இருந்தன. 

இதில் மொத்தம் நான்கு வகையான சிகிச்சை முறைகள் இருப்பினும் நான் தேர்ந்தெடுத்தது SIMPLE,  LATEST  AND COSTLIEST TECHNOLOGY  / TREATMENT - MULTIFOCAL LENS என்பதாகும்.

இதை நான் தேர்ந்தெடுத்துள்ளதற்கான முக்கியமான காரணம் கண்ணாடி ஏதும் அணியாமல்  கடைசிவரை எழுதுதல் + வாசித்தலில் எனக்குள்ள ஆர்வம் மட்டுமல்ல, அவர்கள் கொடுத்துள்ள விளம்பரங்களும் கூட. 

அவர்கள் அளித்துள்ள விளம்பரத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

1] நீங்கள் 60 வயதிலும் 20 வயதினரைப்போல பார்க்கலாம்.

2] சிறந்த தூரப்பார்வை, சிறந்த இடைப்பார்வை, சிறந்த கிட்டப்பார்வை ஆகிய மூன்றுமே மிகத்தெளிவாக இதில் கிடைக்கின்றன. 

3] வெள்ளெழுத்துக் கண்ணாடி ஏதும் தேவையில்லை.

4] ஊசியில் நூல் கோர்க்கலாம், அரிசியில் கல் பொறுக்கலாம், எழுதலாம், படிக்கலாம் அதுவும் கண்ணாடி ஏதும் அணியாமலேயே !

5] இது IQ Base ஆல் ஆனதால் உங்கள் கண்களுக்கு முதுமையிலும் இளமை ஏற்படும் என்பதே இதன் சிறப்பு அம்சம்.

கண் சம்பந்தமாக பல்வேறு நவீன பரிசோதனைகள் மேற்கொண்டு, கண் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தும்கூட, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என மிகப்பெரிய பட்டியல் ஒன்று கண் மருத்துவர்களால் என்னிடம் கொடுக்கபட்டுள்ளது.

பெண்களுக்குப் பிரஸவத்திற்குப் பின்பு போஷாக்கான ஆகாரங்கள் கொடுக்க வேண்டியது அவசியம் போலவே இங்கு கண்களுக்கும் இவை அவசியமாகிறது.

அதன்படி தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை குறிப்பிட்ட இடைவெளியில், தினமும்  21 முறை வெவ்வேறு சொட்டு மருந்துகள் போட வேண்டியுள்ளது. 

அதன் அளவுகள் மட்டும் வாராவாரம் சற்றே குறையுமே தவிர, 2 மாத காலம், தினமும் சொட்டு மருந்து போடுவது என்பது கட்டாயமாக நீடிக்கப்பட வேண்டியது அவசியம்.

தினமும் சுமார் 12 மணி நேரங்கள் கணினியிலேயே இருந்து பழகி விட்ட எனக்கு, தினமும் அரை மணி நேரம் மட்டுமே கணினி பக்கமோ அல்லது தொலைகாட்சிப் பெட்டிப்பக்கமோ செல்ல தற்சமயம் ஸ்பெஷல் அனுமதி அளித்துள்ளார்கள். 

அதுவும் கண்களுக்கு அதிக ஒளியின் பாதிப்புகளோ, வெளித் தூசிகளின் பாதிப்புகளோ ஏதும் நெருங்காதவாறு ஓர் ஸ்பெஷல் டைப் [பக்கவாட்டு இடைவெளிகள் முழுவதும் அடைக்கப்பட்ட ] கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு தினமும் அரை மணி நேரம் மட்டும் கணினியில் ஏதாவது வேலைகள் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தக்கட்டுப்பாடுகள் எல்லாம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே. 

அதன்பிறகு ஜாலிதான். “ராஜாவின் ... பார்வை ... ராணியின் பக்கம் ......” பாட்டுப்போலத் தானோ என்னவோ ! ;)

இந்த தினமும் அரை மணி நேரம் மட்டுமே என்ற மிகக்குறுகிய கால அவகாசத்தில் என்னால் என் வலைப்பக்கத்தை மட்டுமே கவனிக்க இயலும். 

எனக்கு மிகவும் பிடித்தமான மற்ற ஒருசில பதிவர்களின் பக்கம் ஓரிரு மாதங்களுக்கு என்னால் வர இயலாமல் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

என் கண்பார்வை மிகத்தெளிவாகத் திரும்பக் கிடைப்பதற்காக, எனக்காக ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்துள்ள அன்பு உள்ளங்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.  

தங்கள் ஒவ்வொருவரின் கூட்டுப்பிரார்த்தனைகள் மட்டுமே எனக்கு மனதுக்கு ஆறுதலும், கண்ணுக்குப் பார்வையும் அளித்துள்ளது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

தொலைபேசி, கைபேசி, குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், சுட்டிகள், வலைப்பதிவினில் பின்னூட்டங்கள் என பல்வேறு வழிகளில் என்னையும், என் குடும்பத்தாரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி ! நன்றி !! நன்றி !!!


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

oooooOooooo

என்னுடைய அடுத்த பதிவு அநேகமாக 
சிறுகதை விமர்சனப்போட்டி VGK-01 
“ஜாங்கிரி” சிறுகதைக்கு 
விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தவர்களில், 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவர் பற்றிய அறிவிப்பாக இருக்கும்.

oooooOooooo

இன்று  “தை வெள்ளிக்கிழமை” 
அதிகாலை வெளியிடப்பட்டுள்ள
http://www.gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html
சிறுகதை விமர்சனப்போட்டிக் கதைக்கு
இன்றே சிலர்  மாவிளக்கு போலச் சுடச்சுட
விமர்சனங்கள் எழுதி அனுப்பியுள்ளது 
மிகவும் மகிழ்வளிக்கிறது.

இருப்பினும் மேற்படி போட்டியில் 
கலந்துகொள்ள 
மேலும் ஆறு நாட்கள் உள்ளன.

எனவே அனைவரும் வழக்கம்போல்
உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

oooooOooooo








VGK 02 ] தை வெள்ளிக்கிழமை


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 30.01.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M ] 

REFERENCE NUMBER:  VGK 02

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:



'தை வெள்ளிக்கிழமை'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
                                    
                                  
                                   
                                               



ருக்குவுக்கு இடுப்புவலி எடுத்து விட்டது. 

ஸ்பெஷல் வார்டிலிருந்து தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

பெற்ற தாய் போல பார்த்துக் கொள்ள டாக்டர் மரகதம் இருக்கிறார்கள். 

சுகப் பிரஸவமாகி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை மட்டும் தான் ருக்குவுக்கு.

ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயான ருக்கு, இந்த ஐந்தாவது குழந்தை தேவையில்லை என்று சொல்லி டாக்டர் மரகதத்திடம் வந்தவள் தான், ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு.

“ஏம்மா .... சற்று முன்ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? இப்போது தான் எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கே! கருக்கலைப்பு செய்து உடம்பைக் கெடுத்துக்கணுமா?” என்றார்கள் அந்த லேடி டாக்டர்.

ருக்கு கடந்த இரண்டு வருடங்களாக, டாக்டர் மரகதம் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவள். அவள் கணவன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு பெண், இரண்டு பிள்ளையென நான்கு குழந்தைகள். இது ஐந்தாவது பிரஸவம்.

ஒரே ஒரு முறை ருக்குவின், தங்கவிக்ரஹம் போன்ற நான்கு குழந்தைகளையும் டாக்டர் மரகதம் பார்க்க நேர்ந்த போது, அவர்களின் அழகு, அடக்கம், அறிவு, ஆரோக்கியம் அனைத்தையும் கவனித்து தனக்குள் வியந்து போய் இருந்தார்கள்.

ஐந்தாவதாக இருப்பினும் நல்ல நிலையில் உருவாகியுள்ள இந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய மனம் ஒப்பவில்லை, டாக்டர் மரகதத்திற்கு.

மேலும் டாக்டருக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, டாக்டரிடம் ஏதாவது நல்ல குழந்தையாக ஏற்பாடு செய்யச் சொல்லிக் கூறியிருந்தனர், அந்த தம்பதியினர்.

ருக்குவிடம், டாக்டர் மரகதம் இந்த விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள்.

“உனக்கு வேண்டாத இந்தக் குழந்தையை, இப்போது எதுவும் செய்யாமல், நீ பெற்றெடுத்த பிறகு என்னிடம் கொடுத்து விடேன். பிரஸவம் நல்லபடியாக நடக்கும் வரை, நானே உன்னையும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும், போஷாக்காக கவனித்துக்கொள்கிறேன்” என்று கூறி ஒருவாறு ருக்குவையும், அவள் மூலமே அவள் கணவனையும், சம்மதிக்க வைத்து விட்டார், அந்த டாக்டர்.

மேற்கொண்டு குழந்தை பிறக்காமல் இருக்க பிரஸவத்திற்குப் பின், கருத்தடை ஆபரேஷன் செய்வதாகவும், பேசித் தீர்மானித்து வைத்தனர்.

அன்று ருக்கு வேண்டாமென்று தீர்மானித்த குழந்தை பிறக்கும் நேரம், இப்போது நெருங்கி விட்டது.

ருக்கு பிரஸவ வலியின் உச்சக்கட்டத்தில் துள்ளித் துடிக்கிறாள். மிகப்பெரிய அலறல் சப்தம் கேட்கிறது.  




பட்டு ரோஜாக்குவியல் போல பெண் குழந்தை பிறந்து விட்டது. நல்லவேளையாக இதுவும் நார்மல் டெலிவெரி தான். தாயும் சேயும் நலம். 


டாக்டர் மரகதம் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் தன் கடமையைக் கச்சிதமாக முடித்ததும், கை கழுவச் செல்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்கின்றனர். வாசலில் கவலையுடன் ருக்குவின் கணவர். 

டாக்டருக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது.

“உங்கள் விருப்பப்படியே பெண் குழந்தை தான். யெஸ்...யெஸ், ஜோராயிருக்கு. ஷ்யூர், ஐ வில் டூ இட். ... இப்போதே கூட குழந்தையைப் பார்க்க வரலாம். வக்கீலுடன் பேசி லீகல் டாகுமெண்ட்ஸ் ரெடி செய்து வைச்சுடுங்கோ. நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ” என்றார் டாக்டர்.

ருக்குவை தியேட்டரிலிருந்து ஸ்பெஷல் ரூமுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து, அருகே தொட்டிலில் குழந்தையைப் போடுகிறார்கள்.

ருக்குவின் கணவரும் உள்ளே போகிறார். பெற்றோர்கள், பிறந்த குழந்தையுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சட்டும். மனம் விட்டுப்பேசி, மனப்பூர்வமாக குழந்தையைத் தத்து கொடுக்கட்டும் என்று ஒரு மணி நேரம் வரை டாக்டர் அவகாசம் தந்திருந்தார்.

பிறகு டாக்டர் ருக்குவை நெருங்கி ஆறுதலாக அவள் தலையைக் கோதி விட்டார்.

“என்னம்மா, பரிபூரண சம்மதம் தானே. அவங்களை வரச் சொல்லவா? உன் வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்? உன் வீட்டுக்காரர் தனியே ஒரு ஹோட்டல் வைத்து, முதலாளி போல வாழவேண்டி, நியாயமாக எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அவர்கள் அதைத் தந்து விட நிச்சயம் சம்மதிப்பார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மேலும் உனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை மிகவும் நன்றாக, வசதியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இன்றைக்கே இப்போதே உடனடியாக முடிவெடுத்து விட்டால் தான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது ” என்றார் டாக்டர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

“எங்களை  தயவுசெய்து மன்னிச்சுடுங்க டாக்டர். நாங்க இந்தக் குழந்தையை மட்டும் கொடுக்க விரும்பலை” என்றனர்.

சிரித்துக்கொண்ட டாக்டர், ”அதனால் பரவாயில்லை. ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விஷயம் தானே என்று தான் கேட்டேன். திடீரென்று ஏன் இப்படி மனசு மாறினீங்க? அதை மட்டும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றார் டாக்டர்.

ருக்கு வெட்கத்துடன் மெளனமாகத் தலையைக் குனிந்து கொள்ள, அவள் கணவன் பேச ஆரம்பித்தான்:

“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். 

அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; 

தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டர் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே போனார், தன் குடும்ப நண்பருக்குப் போன் செய்து, அவர்களை புறப்பட்டு வராமல் தடுக்க.


oooooOooooo




திங்கள், 20 ஜனவரி, 2014

108/108 ] பச்சை மரம் ஒன்று ! ...... இச்சைக்கிளி ..... ரெண்டு !!

அன்புடையீர்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

’ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்’ என்ற லேபிளின் கீழ் அடியேன் ஒரு மெகா தொடரினை எழுதி வெளியிட்டிருந்தேன்.



28.05.2013 அன்று ஆரம்பித்த அந்தத்தொடர் 11.01.2014 அன்று நிறைவடைந்தது.

பகுதி-1 க்கான இணைப்பு:


பகுதி-108 க்கான இணைப்பு:


இந்த 108 மெயின் பகுதிகளும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவ்வப்போது வெளியிடப்பட்ட 17 உப பகுதிகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 125 பதிவுகளாக இந்தத்தொடர் அடியேனால் வெளியிடப்பட்டது.

[MAIN = 108; **SUPPLEMENTARY = 17**; TOTAL: 125  ]

**Details for 17 Supplementary Issues** 

45/2/6;  45/3/6;  45/4/6;  45/5/6;  45/6/6; 
55/2/2;  61/2/2;  65/2/4; 65/3/4;  65/4/4; 
75/2/2; 85/2/2; 95/2/2; 100/2/2; 105/2/2;
106/2/3; 106/3/3

இடையிடையே நிகழ்ந்த ஒருசில மகிழ்ச்சியான சம்பவங்களும், சிலரின் சாதனைகளும், பதிவர்கள் சிலரின் இனிய சந்திப்புக்களும் அவ்வப்போது இதே மெயின் பதிவுகளிலும், மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒருசில உப பதிவுகளிலும் என்னால் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருந்தன.

இந்தத்தொடரின் மொத்தப் பகுதிகளான 108+17=125 பகுதிகளில் ஏதாவது ஒன்றுக்காவது வருகை தந்து கருத்தளித்துவர்களின் பெயர் பட்டியல்கள் என்னால் கீழ்க்கண்ட பதிவுகளின் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.



1 to 57 - ஐம்பத்தேழு பெண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - நான்கு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்


62 and 63 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்

64 and 65 - இரண்டு பெண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்



இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்:




66. Mrs. USHA SRI KUMAR அவர்கள்








1 to 64 - அறுபத்தி நாலு ஆண்களுக்கான முதல் பட்டியல்


65 to 70 - ஆறு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


71 and 72 - இரு ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


73 - ஒருவருக்கான அடுத்த உபரிப் பட்டியல்

74 to 77  நான்கு ஆண்களுக்கான அடுத்த உபரிப் பட்டியல்


இப்போது புதிய வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள்:



78. Mr. T. ANANTHASAYANAM Sir அவர்கள்

[ One of the Top Most Leaders of BHEL - FINANCE - TIRUCHI ]





79. Mr. MANIMARAN அவர்கள்


இந்த மேற்படி பட்டியல்களின்படி இதுவரை 79 ஆண்களும், 66 பெண்களும் இந்த அமுத மழைத்தொடரில் தங்களைக் கொஞ்சமாவது நனைத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இவ்வாறு என்னுடன் பின்னூட்டம் என்கிற பந்தத்தின் மூலம் இணைந்துள்ளவர்களை,  கீழ்க்கண்ட குடியிருப்புப் பகுதியில் ஆளுக்கு ஒரு வீடு வீதம் கொடுத்து, நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக ஒரே குடியிருப்புப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வதுபோல, நான் என் கற்பனையில், நினைத்து மகிழ்கின்றேன். 



இந்த என் தொடருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் அளித்து மகிழ்வித்துள்ள நம் 

 தெய்வீகப்பதிவர் 
ஸ்ரீமதி. இராஜராஜேஸ்வரி 

அவர்களின் கம்பீரமான பெயரிலேயே, 
இந்தக்குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது, 
மேலும் எனக்கு சந்தோஷம் தருவதாக உள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட உங்கள் 
ஒவ்வொருவருக்கும் 
ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மாதிரியை 
இப்போது கண்டு மகிழுங்கள். 


 

 


வீடு மட்டுமல்ல .... 
மேலும் இங்கு தங்களுக்கு 
 அளிக்கப்பட்டுள்ள பல்வேறு 
இதர வசதிகளையும் கவனியுங்கள்  


  



 

 


இந்தத்தொடரின் பெரும்பாலான பகுதிகளுக்கு 
[அதாவது More than 60%] வருகை  தந்து கருத்தளித்துள்ள கீழ்க்கண்ட  11 நபர்களுக்கு மட்டும் 3 Bed Rooms கொண்ட சற்றே பெரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

திருமதிகள்:



01. மேனகா அவர்கள் [ 1 to 98 ..... + 5 ] 


02.  அதிரா அவர்கள்  [ 1 to 92 ]



gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

அதிரா ஸ்பெஷல் ;))))) 

மீண்டும் படிக்கவும் - சிரிக்கவும் !



03. பிரியா ஆனந்தகுமார் அவர்கள் [ 1 to 89 ]

04. கீதமஞ்சரி அவர்கள் [ 1 to 73 .... + 9 ]

http://geethamanjari.blogspot.in



05. கோவைக்கவி 
     வேதா இலங்காதிலகம் அவர்கள்


http://kovaikkavi.wordpress.com/


திருவாளர்கள்:



06. ரிஷபன் அவர்கள்


07. SUNDARESAN GANGADHARAN அவர்கள் [ 42 to 108 ]

[தற்சமயம் வலைப்பதிவு ஏதும் இவருக்கு இல்லை ]


08. S. RAMANI  அவர்கள்

09. துரை செல்வராஜூ அவர்கள்


10. G.M.B. ஐயா அவர்கள்



11. S. SURESH அவர்கள்  



இதோ அந்த 3 BHK வீட்டின் 
மாதிரியைப் பார்த்து மகிழுங்கள்.






  

முதலில் அனைவரும் 


ஜூஸ் சாப்பிடுங்கோ !


அடியேனின் இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி உள்ளவர்களின் சிறப்புப் பட்டியல் இதோ:

100% ATTENDANCE 
{ 108 out of 108 }

திருமதிகள்:




01. இராஜராஜேஸ்வரி அவர்கள்

http://jaghamani.blogspot.com/



02. விஜி {விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்} அவர்கள் 




03. கோமதி அரசு அவர்கள்

http://mathysblog.blogspot.com/





04. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்


http://rajalakshmiparamasivam.blogspot.in






05. காமாக்ஷி மாமி அவர்கள்

http://chollukireen.wordpress.com/



06. கீதா சாம்பசிவம் அவர்கள்

http://sivamgss.blogspot.in



07. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்

http://ranjaninarayanan.wordpress.com/



08. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்

http://middleclassmadhavi.blogspot.in/





09. மாதேவி அவர்கள்

http://ramyeam.blogspot.in/   




10.  ஆதி வெங்கட் அவர்கள்





திருவாளர்கள்:



11. அன்பின் சீனா ஐயா அவர்கள்




12. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்




13.  பட்டாபிராமன் அவர்கள்




14.  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்





15. சேஷாத்ரி E S அவர்கள்





16. வெங்கட் நாகராஜ் அவர்கள்

http://venkatnagaraj.blogspot.com/



17.  கரந்தை ஜெயக்குமார் அவர்கள்



இந்த மேற்படி 17 நபர்களுக்கு மட்டும், அதே குடியிருப்புப் பகுதியில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அடுத்தடுத்து இரண்டு பங்களாக்கள் + இரண்டு கார்கள் வீதம் தரப்படுகின்றன. 

இதோ அதன் மாதிரியைக் கண்டு மகிழுங்கள்:


நினைத்தாலே மனதுக்கு மிகவும் 
திருப்தியாக, மகிழ்ச்சியாக உள்ளதல்லவா !

வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்தே
ஒற்றுமையாக ஒரே நாளில் 




கிரஹப்பிரவேஸம் செய்து மகிழ்வோம்.

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  



oooooOooooo

  



மேற்படி பதிவிலே கொடுக்க இயலாமல்போன 


கார் இந்தப்பதிவினிலே கொடுக்கப்படுகிறது.





 


இந்தக் காரை உபரியாக இன்று 


பெறும் அதிர்ஷ்டசாலி




அன்புள்ள விஜி



[விஜிக்கு, வீ....ஜீ...யின் அன்பான வாழ்த்துகள்]



[திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்]



oooooOooooo

POSITION AS ON 
20/01/2014 [I.S.T.] 10 AM     

இந்தத்தொடரின் பல்வேறு பகுதிகளுக்கு அவ்வப்போது வருகை தந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை:  145

ஆண்கள்:         79  

பெண்கள்:       66

இந்தத்தொடருக்கு இதுவரை கிடைத்துள்ள 
பின்னூட்டங்களின்  எண்ணிக்கை: 

ஆண்களிடமிருந்து:          2399

பெண்களிடமிருந்து:          3145

====================================

ஆக மொத்தம்:                    5544

====================================

இதுவரை என்னிடம் வேலை பார்த்து வந்த கணக்குப்பிள்ளை கிளி மற்றும் உதவியாளர்களான மற்ற அனைத்துக்கிளிகளுக்கும், அவைகளின் சேவைகளைப் பாராட்டி கைத்தட்டி, கரவொலி எழுப்பி,  இன்று முதல் சுதந்திரமாகப் பறக்க அனுமதி அளிக்கிறேன்.






 

 





 

-oOo-


வேண்டுதலுக்காக அம்பாளடியாள் 
அவர்களின்  குழந்தைக்கு மட்டும் 
ஸ்பெஷல் மேங்கோ ஜூஸ்


-oOo-

இப்போது இந்தப்பதிவின் 
தலைப்புக்கு வருவோம்.

”பச்சை மரம் ஒன்று !  .... 
இச்சைக்கிளி  ....ரெண்டு !!"

’பச்சை மரம்’ ஒன்று என்பது 
அடியேன் இதுவரை வெளியிட்ட 
இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய 
ஆன்மிகத்தொடர் மட்டுமே !



இச்சைக்கிளி ரெண்டு என்பது, 
இந்த என் ஆன்மிகத்தொடர் மீது 

அதிக இச்சை கொண்டு

மிக அதிகமாகப் பின்னூட்டங்கள் அளித்து 
அசத்தியுள்ள இருவர் மட்டுமே  !!

அதிலும் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கிளி  



நம் பேரன்புக்கும் 
பெரும் மரியாதைக்கும் உரிய
திருமதி. 

இராஜராஜேஸ்வரி 

அவர்கள்.


108+17=125  பதிவுகளுக்கும் சேர்த்து இவர்கள்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை மட்டுமே 

4 7 9

  

My Heartiest
and Thanks to YOU Madam.


-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-

இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளவர் :

 


நம் பேரன்புக்கும் 
பெரும் மரியாதைக்கும் உரிய

அன்பின் 
திரு. சீனா ஐயா  

அவர்கள்


108+17=125  பதிவுகளுக்கும் சேர்த்து இவர்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின்
மொத்த எண்ணிக்கை: 

3 0 1


My Hearitiest

and Thanks to YOU Sir.

-oOoOoOoOoOoOoOoOoOoOoOoOo-

இந்த சாதனைக்கிளிகள் 
இருவருக்கும் 
என் அன்பான இனிய 
ஸ்பெஷல் நன்றிகள்.




இன்று கற்பனையில் 

2 BHK பெற்ற 117 நபர்களுக்கும்

3 BHK பெற்ற 11 நபர்களுக்கும்

இரட்டை பங்களாக்கள் + 
இரண்டு கார்கள் பெற்றுள்ள 
17 நபர்களுக்கும்

ஆகமொத்தம் 145 நபர்களுக்கும்
அடியேனின்
அன்பான நல்வாழ்த்துகள்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

ooooooooooooooooooooooooooooo





  




 

சிறுகதை விமர்சனப் போட்டி !

ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


முதல் கதையான  ‘ஜாங்கிரி’க்கு ஆர்வத்துடன் 
விமர்சனங்கள் எழுதி அனுப்பிய அனைவரின்
விமர்சனங்களும் நடுவர் அவர்களின் 
தீவிரப் பரிசீலனையில் இப்போது உள்ளன.

பரிசுக்குத்தேர்வானவர்கள் பற்றிய அறிவிப்பு
வெகு விரைவில் வெளியிடப்படும்.

முதல் விமர்சனப் போட்டியில் 
ஆர்வத்துடன் உற்சாகமாகக் 
கலந்துகொண்டு சிறப்பித்த 
அனைவருக்கும் என் மனம் நிறைந்த 
இனிய அன்பு நன்றிகள்.

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
இரண்டாம் சிறுகதையை, 
இரண்டாம் ’தை வெள்ளிக்கிழமை’ ஆகிய 
24.01.2014 அன்று  எப்படியும் வெளியிடத்தான் 
அடியேன் ஆசைப்படுகிறேன்.

அதற்கான தயார் 
நிலையிலும் இருக்கிறேன்.

இருப்பினும் பகவத் சங்கல்ப்பம் 
எப்படியோ ? ... பார்ப்போம்.

 

மீண்டும் அடுத்த பதிவினில் 
சந்திக்கும் வரை தங்களிடமிருந்து 
தற்காலிகமாக விடைபெறும் .....


தங்கள் அன்புள்ள

 

வை. கோபாலகிருஷ்ணன்


Bye for Now !

Affectionately yours,
vgk