என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

எங்கள் பயணம் [துபாய்-12]

துபாய் நகரின் நடுவே மிகப்பிரும்மாண்டமான
செயற்கைப் பனி மலையை உருவாக்கி
பனிச்சறுக்கு விளையாட்டுக்கள்
விளையாட அனுமதித்து 
சுற்றுலாப்பயணிகளைக் கவர்கிறார்கள்.

[ We have visited this place on 06.12.2014 - 3.30 PM ]


உள்ளே செல்லாமலேயே உள்ளே நடப்பதை நாம்
வெளியிலிருந்து கண்ணாடி மூலம் பார்க்க 
மிகச்சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 சின்னக் குழந்தைகளுக்கான பனிச்சறுக்கு
கீழே தாழ்வாக காட்டப்பட்டுள்ளது. 


 உள்ளே செல்பவர்களுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்து
அதற்கான பிரத்யேக ஆடைகள் அளித்து அவரவர்களுக்கு 
விருப்பமான விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கிறார்கள்.

இளைஞர்களுக்கானவைகளான 
மிக உயரத்திலான 
வெகு வேகமான ஸ்காட்டிங் 
முதலியனவற்றை செய்தும், 
கண்டும் மகிழலாம்.

Very Thrilling Experience !


வெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த
உள்ளே மைனஸ் 4 டிகிரியில் 
பனிமலைகளை மிகப்பிரும்மாண்டமாகவும்
செயற்கையாகவும் உருவாக்கி நிர்வகித்து வருவது 
வேடிக்கையாகவும், அதிசயமாகவும் ,
மிகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. 

 

ENTRANCE OF WORLD FAMOUS STAR HOTEL: 
KEMPINSKI
[செயற்கைப் பனி மலை அருகே அமைந்துள்ளதோர் கிளை]








மேலே காட்டப்பட்டுள்ளவை ஆறும் 
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆங்காங்கே அமைந்துள்ள
அதே உலகப்புகழ் பெற்ற கெம்பின்ஸ்கி ஹோட்டலின் 
ஒருசில மாதிரிப்படங்கள் மட்டுமே.



செயற்கைப் பனிமலைக்கு அருகேயுள்ள 
ஷாப்பிங் மால்ஸ்களில் சில


oooooOooooo


I.T. INDUSTRIES AT DUBAI


oooooOooooo


12.12.2014 இரவு நாங்கள் ரஜினியின் ‘லிங்கா’ படம்
பார்த்த தியேட்டரின் நுழை வாயில்
எஸ்கலேட்டரில் ஏறி மாடிக்குச் செல்ல வேண்டும். 

 சினிமா தியேட்டரில் உள்ள தீனிக்கடை


’லிங்கா’ படத்தில் ஓர் காட்சி

oooooOooooo

பயணம் தொடரும்

22 கருத்துகள்:

  1. துபாய் ஊரை அழகாய் சுற்றி காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.
    லிங்கா படமும் காட்டி விட்டீர்கள்.

    பயணக் கட்டுரை அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வெளியே கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் உள்ளே பனியரங்கு உங்களைப் போலவே நானும் மலைத்து வியக்கிறேன். எவ்வளவு நேர்த்தியான திட்டமிடல். சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு எப்படியெல்லாம் சிறப்பாக திட்டமிட்டு வருவாயைப் பெருக்குகிறது துபாய் அரசு. உங்களுடைய இந்த பதிவால் துபாய் பற்றி பல புதிய விவரங்களை அறியமுடிகிறது. என்றாவது துபாய் செல்லும் வாய்ப்பு அமைந்தால் மிகவும் நன்றியோடு நினைவுகூர்வேன். பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய எல்லா துபாய் அனுபவங்களையும் நான் படித்து வருகிறேன். அப்படியே துபாயை கண் முன் கொண்டு நிறுத்தி விட்டர்கள். இந்தத் துபாய் பயணத் தொடரை ஒரு மின்னுலாக்கி விடுங்கள் கோபு சார். துபாய் போகிறவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் தொடரைப் படித்ததில், நாமும் ஒரு முறை துபாய் போய் வருவோமே என்று என்னவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். முடிகிறதா பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. பணம் என்னவெல்லாம் செய்கிறது? நாம் (இந்தியர்கள்) பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த மாதிரி பார்க்கத்தான் லாயக்கோ?

    பதிலளிநீக்கு
  5. செயற்கை பனிமலை அதிசயக்க வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்
    தோழமையுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. I remember the day we visited here.
    Thanks.
    malarum ninaykal for me.

    பதிலளிநீக்கு
  8. viji December 30, 2014 at 2:39 PM

    //I remember the day we visited here.
    Thanks. malarum ninaivukal for me.//

    ஆஹா, விஜியின் ’மலரும் நினைவுகளை’ மீட்டுத்தந்துள்ளேனா ?
    எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இனிய தகவலுக்கு மிக்க நன்றி விஜி :)))))

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  9. சொர்க்க லோகத்துக்கு போயிட்டு வந்திருக்கற மாதிரி இருக்கு. இந்த புகைப்படங்களைப் பார்த்தா.

    ஒரு நாள் இந்த ஹோட்டல்ல தங்கணும்ன்னா நம்ப சொத்தையே வித்தா கூட காணாது போல இருக்கே.

    அருமையான புகைப்படங்கள்.

    நான் பாடிக்கிட்டிருக்கேன் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா” என்று. வேறென்ன செய்ய. அதுதான் முடியும்.

    அன்புடன்
    ஜெயந்தி ர்மணி

    பதிலளிநீக்கு
  10. படங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. நமது நாடும் எப்போது இப்படி மாறும்?

    பதிலளிநீக்கு
  11. அழகான படங்களும், தகவல்களுக்கும் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் தருகின்றன.

    பதிலளிநீக்கு
  12. இந்த வெயில் எம்மை என் செய்யும் என பாடிமகிழ்வார்களோ? தொடர்கிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  13. அழகு அழகான படங்கள் நேரில் போய் பார்த்தால் எப்படி ரசிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு உங்க பதிவின் மூலமாக ரசிக்க முடியரது

    பதிலளிநீக்கு
  14. வெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த
    உள்ளே மைனஸ் 4 டிகிரியில்
    பனிமலைகளை மிகப்பிரும்மாண்டமாகவும்
    செயற்கையாகவும் உருவாக்கி பதிவுகளாக்கி மகிழவைத்தமைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:44 PM

      வாங்கோ, வணக்கம்.

      வெளியே 40 டிகிரி வெயில் கொளுத்த உள்ளே மைனஸ் 4 டிகிரியில் பனிமலைகளை மிகப்பிரும்மாண்டமாகவும்
      செயற்கையாகவும் உருவாக்கி பதிவுகளாக்கி மகிழவைத்தமைக்குப் பாராட்டுக்கள்.//

      அந்தப்பனிமலைகளை நாம் வெளியே நிழலில் அமர்ந்த நிலையில் உள்ளே நடப்பவை அனைத்தையுமே பார்க்கும் வண்ணம் GLASS WALLS & DOORS போட்டுள்ளார்கள். அதில் சாய்ந்தாலே ஐஸ்கட்டிபோல ஒரே ஜில்லென்று இருக்கின்றது. வெளியில் கொளுத்தும் வெயிலுக்கு அங்கிருந்து எழுந்துவரவே எனக்கு மனசு இல்லை.

      மிக அருமையாக மிக பிரும்மாண்டமாக அதனை வடிவமைத்து, சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து வருகிறார்கள். பனிமலைக்கு உள்ளே போவோரிடம் மட்டுமே பணம் வசூலிக்கிறார்கள்.

      செயற்கையில் இவர்களாகவே இயற்கை பனி மலை போல ஆக்கியுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர்கள் பராமரித்து வருவதும் மிக மிக வியப்பான விஷயமே.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. படங்கலா சூப்பரோ சூப்பரு ஒரு வெசயமும் வுடாம சொல்லிகிட்டு வருது இன்னும் ஸ்பெசலாகீது

      நீக்கு
  15. செயற்கை பனிமலை ஆச்சரியம் கலந்த அதிசயம்தான். ல்லாமே அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  16. //பாலைவனத்தில் ஒரு பனிமலை// தலைப்பு ஒக்கேயா? மோனிக்கா லெவின்ஸ்கி மாதிரி ... கெம்பின்ஸ்கி... ஃபோட்டாவுலயாவது பாக்க முடிஞ்சுதே!!

    பதிலளிநீக்கு