உலகத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகமாகத் திகழ்வது துபாய் மால். இங்கு இரவு நேரத்தில் சென்று பார்ப்பது மிகவும் நல்லது. FOUNTAIN எனச்சொல்லப்படும் செயற்கை நீர் ஊற்றுகள் மூலம் சுமார் 500 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
கலர் கலராக பல்வேறு டிசைன்களில் மின்னொளியில் இவற்றைக் காண்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு தினமும் வருகிறார்கள்.
மாலை 6 மணி முதல் விடியவிடிய அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் மட்டும் இதைக் காட்சிப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடத்திற்கு அந்தப்பகுதி முழுவதும் ஜகத்ஜோதியாகக் காட்சி அளிக்கிறது.
துபாய் மாலின் தரைத்தளத்தினில் நடைபெறும் இதைக்கண்டு களிக்க தனியாகக் கட்டணம் ஏதும் கிடையாது.
23.11.2014 இரவு 7 மணி முதல் 9 மணி வரை
இதனைக்கண்டு களித்தோம்.
உலகிலேயே மிக உயர்ந்த கட்டடமான ‘புர்ஜ் கலிபா’ செல்ல இங்கு துபாய் மாலில் தான் முன்பதிவு செய்துகொள்கிறார்கள்.
இங்கிருந்துதான் லிஃப்டு மூலம் மேலே செல்ல வேண்டும். காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டும் [தினமும் எட்டு முறை மட்டுமே] மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.
ஒரிருநாட்கள் முன்னதாகவே ON LINE மூலம் பதிவு செய்துகொள்வது கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடும்.
இங்கிருந்துதான் லிஃப்டு மூலம் மேலே செல்ல வேண்டும். காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டும் [தினமும் எட்டு முறை மட்டுமே] மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.
ஒரிருநாட்கள் முன்னதாகவே ON LINE மூலம் பதிவு செய்துகொள்வது கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடும்.
மொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது.
100 தளங்களைத் தாண்டுவதற்குள் நம் காதுகளில் ஒருசில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் வலி உண்டாகிறது. ஆகாய விமானம் கிளம்பிப்பறக்கும்போது காது வலிக்குமே, பஞ்சு வைத்துக்கொள்வோமே ... அதே போன்ற வலிதான் இதுவும்.
124-வது தளத்திலிருந்து துபாயின் பெரும்பாலான பகுதிகளைக் கண்ணாடிச் சுவர்கள் மூலம் கண்டு களிக்க முடிகிறது. மேலும் நமக்கு உயரே உள்ள 36 தளங்களையும் அங்கிருந்தபடியே மேல் நோக்கிக் காணமுடிகிறது.
100 தளங்களைத் தாண்டுவதற்குள் நம் காதுகளில் ஒருசில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் வலி உண்டாகிறது. ஆகாய விமானம் கிளம்பிப்பறக்கும்போது காது வலிக்குமே, பஞ்சு வைத்துக்கொள்வோமே ... அதே போன்ற வலிதான் இதுவும்.
124-வது தளத்திலிருந்து துபாயின் பெரும்பாலான பகுதிகளைக் கண்ணாடிச் சுவர்கள் மூலம் கண்டு களிக்க முடிகிறது. மேலும் நமக்கு உயரே உள்ள 36 தளங்களையும் அங்கிருந்தபடியே மேல் நோக்கிக் காணமுடிகிறது.
Visited this very wonderful place on 12.12.2014
12.30 PM to 3.30 PM
சற்றே அதிக நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.
பிறகு அந்தச்சீட்டை வேறொரு இடத்தில் கொண்டுபோய் கொடுத்தால், கம்ப்யூட்டரில் நம் புகைப்படங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தப்படங்களில் பல்வேறு ஆச்சர்யங்கள் [Trick Shots] புதிதாக நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பிறகு அந்தச்சீட்டை வேறொரு இடத்தில் கொண்டுபோய் கொடுத்தால், கம்ப்யூட்டரில் நம் புகைப்படங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தப்படங்களில் பல்வேறு ஆச்சர்யங்கள் [Trick Shots] புதிதாக நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும்.
போட்டோவின் பிரதி ஒன்று வேண்டும் என்று ஆசையுடன் கேட்டால் ”அதற்குத்தனியாக 260 திர்ஹாம் கொடுக்க வேண்டும்” என்றார்கள். அதாவது 260*17 = ரூபாய் 4420 மட்டுமே. :) ”வேண்டாம் நீங்களே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டோம். எங்களைப் போலவே தான் பலரும் செய்தனர்.
ஏற்கனவே நாங்கள் எட்டு பேர் கையில் ஆளுக்கு ஒரிரு கேமரா வீதம் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான படங்களை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோமே ! மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு? என்று வந்து விட்டோம்.
உச்சிக்குச்செல்ல நுழைவுக்கட்டணம் நபர் ஒன்றுக்கு பகல் 12.30 வரை 125 திர்ஹாம், அதன் பிறகு 200 திர்ஹாம். [ஒரு திர்ஹாம் = 17 ரூபாய் ஆகும்]
ஏற்கனவே நாங்கள் எட்டு பேர் கையில் ஆளுக்கு ஒரிரு கேமரா வீதம் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான படங்களை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோமே ! மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு? என்று வந்து விட்டோம்.
உச்சிக்குச்செல்ல நுழைவுக்கட்டணம் நபர் ஒன்றுக்கு பகல் 12.30 வரை 125 திர்ஹாம், அதன் பிறகு 200 திர்ஹாம். [ஒரு திர்ஹாம் = 17 ரூபாய் ஆகும்]
இது உச்சியில் 124வது தளத்திலிருந்து
கீழ் நோக்கி எடுக்கப்பட்ட படம்
மிக அகலமான சாலைகள் அனைத்தும்
மிகச்சிறியதாகக் காட்சியளிக்கின்றன.
அதில் செல்லும் வாகனங்கள் அனைத்தும்
பொடிப்பொடியாக எறும்பு ஊர்வதுபோல உள்ளன.
அதே போல நாம் 'புர்ஜ் கலிபா'வின் 124வது
தளத்திற்குச் சென்றதும்
அங்கே ஒரு மிஷின் வைத்துள்ளார்கள்.
அதில் உள்ள உண்டியலில்
10 திர்ஹாம் பணம் போட வேண்டும்.
பின் அதன் மேல் உள்ள கார் ஸ்டியரிங் வீல்
போன்ற ஒன்றைக் கஷ்டப்பட்டு
சேவை நாழியில் சேவை பிழிவதுபோல
சற்றே அழுத்திச் சுற்ற வேண்டும்.
ஒரு ஐந்து நிமிடங்கள் சுற்றிய பிறகு
நமக்கு ஓர் மிகச்சிறிய [1” x 3/4" size] சற்றே வளைந்த
’தங்க வில்லை’ டாலர் போல வந்து விழும்.
அதில் அந்த ’புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான
கட்டடத்தின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
நானும் என் மகனும் அதில் காசு போட்டு சுற்றினோம்.
தங்க வில்லை வெளியே வந்தது.
என்னிடம் அதை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
திருச்சி வந்ததும்
தங்கவில்லை எங்கே ?
என்று தேடினேன். கிடைக்கவில்லை.
’தங்கவில்லை’
நம்மிடம்
தங்கவில்லையோ !
என வருந்தினேன்.
பிறகு ஒருவழியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி :)
இதோ அதன் படம்:
World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’
பயணம் தொடரும்
பல சுற்றுப் பயணப் பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி எழுதுகிறார்கள் என்ற நினைப்புத்தான் வந்துள்ளது. ஆனால் உங்களைப்போல் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் சுற்றுலாப் பதிவுகளை இது வரையில் பார்த்ததில்லை. உங்களுக்கு மனதில் ஈவு இரக்கமே கிடையாதா? எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா? தர்மம்தானா?
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி December 31, 2014 at 3:53 AM
நீக்குஅன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா.
//பல சுற்றுப் பயணப் பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி எழுதுகிறார்கள் என்ற நினைப்புத்தான் வந்துள்ளது. ஆனால் உங்களைப்போல் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் சுற்றுலாப் பதிவுகளை இது வரையில் பார்த்ததில்லை. //
நான் எது செய்தாலும் அதை சற்றே வித்யாசமாகவும் MOST PERFECT ஆக செய்ய வேண்டும் என நினைப்பவன்.
இந்த என் அதிவேக பயணக்கட்டுரைப் பதிவுகளில் கூட எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை என்று தான் நான் சொல்ல நினைக்கிறேன்.
சென்ற முறை சென்று வந்தபோது [2004] சற்றே அதிக நாட்கள் அங்கு தங்கினேன். ஏராளமான இடங்களைச் சென்று பார்த்து மகிழ்ந்தேன். தாராளமாக படங்களும் போட்டோ + வீடியோக்களும் எடுத்து வந்தேன். ஒரு டயரி நிறைய அன்றாட அனுபவங்களையும் என் வியப்புக்களையும் மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையுடனும் பதிவு செய்து வைத்திருந்தேன்.
அவற்றையெல்லாம் இப்போது என் வீட்டில் தேடி எடுத்து கோர்வையாகப் பதிவிட்டு எழுத எனக்கு மிகவும் சோம்பலாக உள்ளது. அவற்றை எழுத ஆரம்பித்தால் ஒரு நூறு பதிவுகளாவது கொடுக்கும் படியாக இருக்கும்.
இந்த முறை மிகக் குறுகிய நாட்களே அங்கு நான் தங்கினேன். சென்றமுறை செல்லாத புதிய இடங்களில் சிலவற்றிற்கு மட்டுமே சென்று வந்தேன். அதிலேயே ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பல கேமராக்களில் எடுக்கப்பட்டு, இங்கு பாதியும், அங்கு பாதியுமாக தங்கிவிட்டன. ஊருக்குக் கிளம்பும்போது பென்-டிரைவில் அவசர அவசரமாக ஏற்றிக்கொண்டு வரும்போது அவற்றில் பாதி சரியாக COPY ஆகாமல் போய்விட்டன போல் தெரிகிறது.
ஏதோ நான் என் கேமராவில் எடுத்தவற்றை மட்டும் FILTER செய்து இங்கு தினமும் ஒரு பதிவாகக் கொடுத்து வருகிறேன்.
என்னதான் காரில் பல இடங்களுக்கு ஜாலியாகச் சென்று வந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் இறங்கி நடந்து சுற்றிப்பார்ப்பதற்குள் களைத்துப்போய் விடுகிறோம்.
ஒவ்வொரு இடமும், மாலும் நம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அளவுக்கு மிகப் பெரியதாக உள்ளன. :)))))
//உங்களுக்கு மனதில் ஈவு இரக்கமே கிடையாதா? எங்களுக்கு இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்துகிறீர்களே, இது நியாயமா? தர்மம்தானா?//
:)))))
ஏதோ மிகச்சுருக்கமாக இந்தப்பயணக்கட்டுரையை 20 பதிவுகளுக்குள் முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இது வரை 15 வெளியிட்டுள்ளேன். இன்னும் 5 நாட்களுக்கு மட்டும் பொறாமைப்படாமல் தயவுசெய்து சகித்துக்கொள்ளுங்கள், ஐயா. :)))))
தங்களின் பேரன்புக்கும், தினசரி வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
யப்பா...! அட்டகாசமான படங்கள்...
பதிலளிநீக்குதங்கவில்லை பற்றிய பகிர்வு வருமா...?
சிறப்பான பயணம். அழகான படங்கள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா
அழகான படங்கள்....அருமையான கட்டுரை,,,,காணத் திகட்டாத காட்சிகள்....சூப்பர்!!
பதிலளிநீக்கு//சற்றே அதிக நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.//
இது போன்று பாரிஸ், லண்டன் எல்லா இடங்களிலும் புகைப்பட வேட்டை உண்டு. நம்மைத் தேடித் தேடி வந்து விதவிதமாகப் புகைப்படம் எடுப்பார்கள். வெளியில் வரும்போது காட்சிக்கு வைத்திருப்பார்கள். நமக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை....20 பவுண்டு (2000 ரூபாய்) , 20 யூரோ (1600 ரூபாய்) என்பார்கள். நானும் ஆசையாக நம் போட்டோக்களை பார்த்துவிட்டு வந்து விடுவேன்!! ஆனால் துபாயில் விலை ரொம்ப ஜாஸ்தி போலருக்கு! 4000 ரூபாயில் நாம் என்னென்னவோ வாங்குவோமே!!
கண்கொள்ளாக் காட்சிகள்! அருமையான புகைப்படங்கள்! தங்கவில்லையை இரசித்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குதங்கவில்லை சிலேடை அருமை! புர்ஜ் கலிபா, துபாய் மால் பற்றிய படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குஅருமையான படங்கள். உங்களுடன் பயணம் செய்த அனுபவம் எங்களுக்கும்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
என்னத்த சொல்ல
பதிலளிநீக்குஆன்னு வாயைப் பொளந்துண்டு பட்டிக்காட்டன் மிட்டாய்க்கடையை பாத்த மாதிரி உங்க புகைப் படங்கள பாத்துண்டிருக்கேன்.
உங்க ப்ளாக் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பொக்கிஷமா இருக்கப் போறது.
வாழ்த்துக்களுடனும், அன்புடனும்
ஜெயந்தி ரமணி
பதிவுகள் யாவற்றையும் ரசித்தேன். நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் மீண்டும் ஒரு வலம் வரலாம் என்று இருக்கிறேன்.
பதிலளிநீக்குநீரூற்று நடனம் வெகு அழகு. புர்ஜ் கலிபா கட்டடத்தின் 124 வது தளத்திலிருந்து காட்சிகள் வெகு ரசனை. ஆங்காங்கே தங்கள் ரசனையான எழுத்தும் சுவை கூட்டுகிறது. தங்கவில்லை மறுபடி கிடைத்ததில் மகிழ்ச்சி. சிறப்பான பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார்.
பதிலளிநீக்குநீரூற்று காணொளி முன்பு மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியதில் பார்த்திருக்கிறேன். மற்ற படங்கள் எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரையிலான முதல் நான்கு ஆண்டுகளில் [48 மாதங்களில்] வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 696) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, மீதியுள்ள January to March 2015 மூன்று மாதப் பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துகொண்டிருக்கும் தாங்கள் இறுதி வெற்றியும், இரட்டிப்பு ரொக்கப்பரிசாகிய (Rs.500*2=1000) ரூபாய் ஆயிரமும், ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளான 01.01.2016 அன்று பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)
என்றும் அன்புடன் VGK
நீரூற்று காணொலி சூப்பரா இருக்கு
பதிலளிநீக்குபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
நீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரை முதல் 48 மாதப்பதிவுகள் அனைத்திலும் [அதாவது நான்கு வருடப்பதிவுகள் அனைத்திலும் முழுமையாக] தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Heartiest Congratulations for this Highest Achievement !
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
தங்கமான தருணங்களின் பதிவுகளுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:25 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்கமான தருணங்களின் பதிவுகளுக்கு வாழ்த்துகள்..//
காணாமல் போன தங்கமே தங்கம் எனக்குத் திரும்பக்கிடைத்ததில் மகிழ்ச்சியே.
{தங்கவில்லையைப் பற்றித்தான் சொன்னேன்.}
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள்.
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் மாதம் வரை [*முதல் நான்கு வருடங்களில்*] அதாவது 48 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
இந்தப்போட்டிக்கு இன்னும் மூன்றே மூன்று மாதப் பதிவுகள் மட்டுமே தாங்கள் பின்னூட்டமளிக்க பாக்கியுள்ளன.
இருந்தாலும் தங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது ஜெ.
இன்னும் முழுசாக 64 நாட்கள் உள்ளன. முதலில் ஸ்பீடாக எல்லாப்பதிவுகளையும் முடித்து விட்டு, பின்பு மீண்டும் உங்கள் பாணியில் ஒருசில பதிவுகளுக்காவது நகைச்சுவையாக மீண்டும் விரிவான பின்னூட்டங்கள் கொடுங்கோ, ப்ளீஸ் .... ஜெ ! :)
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
//இருந்தாலும் தங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது ஜெ. //
பதிலளிநீக்குகண்ணு வெக்காதீங்கோ அண்ணா
வீட்டு வேலை,
ஸ்கூலுக்குப் போற வேலை (லயாக்குட்டியை அழைச்சுண்டு வர)
கம்ப்யூட்டர் கிடைக்காமை (வீட்டய்யா விடா தானே. அவரோட அட்டகாசத்தை FACEBOOK ல போய் பாருங்கோ)
லயாக்குட்டி கம்ப்யூட்டர்ல RHYMES, ஆத்திச்சூடி கதைகள் பார்க்கற நேரம் தவிர,
கம்ப்யூட்டர்க்கு ஜுரம், எனக்கு ஜூரம், இத்யாதி, இத்யாதி
இத்தனைக்கும் நடுவில உங்களுக்குக் கொடுத்த வாக்குக்காக (போட்டிக்காக மட்டும் இல்லை) பின்னூட்டம் கொடுத்துண்டிருக்கேன், எப்ப முடியாம போயிடுமோங்கற பயத்துல
நல்லபடியா முடிக்கணும்ன்னு முதல்ல வாழ்த்துங்கோ.
Jayanthi Jaya October 28, 2015 at 10:34 PM
நீக்கு//நல்லபடியா முடிக்கணும்ன்னு முதல்ல வாழ்த்துங்கோ.//
மனம் நிறைந்த வாழ்த்துகள், ஜெ.
நல்லபடியாகவே இன்னும் 2-3 நாட்களுக்குள்ளாகவேகூட ஸ்பீடாக முடித்துவிடுவீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதுவா முக்கியம்?
நம் ’ஜெயா பாணி’ ஸ்பெஷல் பின்னூட்டங்கள் அல்லவோ நான் ஆசையுடன் விரும்பி எப்போதுமே எதிர்பார்ப்பது ! :)
வீட்டு ரொடீன் சமையல் வேலைகள், பேத்தியின் அன்புத் தொல்லைகள், மற்ற சரீர சிரமங்கள், கணினி கிடைப்பதில் பிரச்சனைகள், பிறக்கப்போகும் ’லயாக்குட்டியின் தம்பி’யின் தாயாரை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு என அனைத்தையும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.
எல்லாம் நல்லபடியாக முடியும். கவலைப் படாதீங்கோ.
பிரியமுள்ள கோபு அண்ணா
2004--ல போயாந்த பத்தியும் பதிவா போடுங்க. ஒங்களுக்கெல்லா சோம்பேறித்தனம்க்கு ஸ்பெல்லிங்குகூட தெரியாதுல்ல.
பதிலளிநீக்குஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 டிஸம்பர் வரை, என் முதல் 48 மாதப்பதிவுகள் அனைத்திலும் [அதாவது முதல் நான்கு வருடப்பதிவுகள் அனைத்திலும் முழுமையாக] தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Heartiest Congratulations for this Highest Achievement, that too within a very short period of just only one month !
இந்தப் புதிய போட்டிக்கு, என்னால் வெளியிட்டுள்ள, மூன்றே மூன்று மாதப் பதிவுகள் (JANUARY TO MARCH 2015) மட்டுமே, தாங்கள் பின்னூட்டமிட பாக்கியுள்ளன. அதாவது 24+15+15 = 54 பதிவுகள் மட்டுமே பின்னூட்டமிட பாக்கியுள்ளன.
இன்னும் போட்டி நிறைவுத் தேதிக்கு, நடக்கும் நவம்பரில் 26 நாட்களும், டிஸம்பரில் 31 நாட்களுமாக மொத்தம் 57 நாட்கள் உள்ளன.
நீங்கள் படு ஸ்பீடாக வருவதைப்பார்த்தால் அடுத்த ஒரே வாரத்தில் வெற்றி பெற்று, தீபாவளிப் பண்டிகைக்குள் பரிசுப் பணத்தையே பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பொறுமையாகவும் சற்றே விரிவாகவும் பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அன்புடனும் நட்புடனும்
குருஜி கோபு
படங்களும் பகர்வும் ரொம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
696 out of 750 (92.8%) within
23 Days from 15th Nov. 2015 ! :)
2011 to 2014 ....
4 Years Successfully Completed.
Heartiest Congratulations ! :))
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 48 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
//மொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது. // 1.75 கி.மீ, ஒரு நிமிடத்தில்...அடேயப்பா...சிகரம் தொட்டுத்திரும்பியிருக்கிறீர்கள் என்றால் மிகையில்லை. சிகரமெல்லாம் ஏற்கனவே பல முறை தொட்டாச்சு என்கிறீர்களா?? கலக்குங்க..
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
2011, 2012, 2013 & 2014
Four Full Years successfully completed
CONGRATULATIONS !:)
Only Just 3 More Months
[24+15+15=54 Posts]
are only pending
696 out of 750 (92.8%) that too within
16 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் வரை, என்னால் முதல் 48 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
:) விண்ணை முட்டும் கட்டிடங்கள்! கண்கவரும் வண்ணப்படங்கள்! கோர்வையாகச் சொன்னவிதம் கொள்ளையழகு! நன்றி ஐயா!
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
696 out of 750 (92.8%) that too within
Four Days from 17th December, 2015.
2011, 2012, 2013 and 2014 Four Full Years
Successfully Completed. :))))
Only 3 more months (24+15+15=54 Posts]
are pending to WIN the contest !
C O N G R A T U L A T I O N S !
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 டிஸம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் நான்கு வருட ( 48 மாத ) அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK