என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 22 டிசம்பர், 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய்-6

குளோபல் வில்லேஜ்:

இவற்றில் முக்கிய இடம் பிடித்திருப்பது  1999-ம் ஆண்டு திறக்கப்பட்ட பர்ஜ் அல் அராப் என்ற ஹோட்டல். இது ஏழு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. 321 மீட்டர் உயரம் உள்ள இந்த ஹோட்டல் உலகிலேயே உயரமான ஹோட்டல்களில் நான்காம் இடத்தினைப் பிடித்து இருக்கிறது. பகலிலும் மற்றும் இரவு நேரங்களில் அலங்கார மின்விளக்கு ஒளியிலும் இந்தக் கட்டடத்தைப்பார்த்து ரசிக்கலாம்.


 


  OUTER LOOK 
[இதன் நிறம் மின் விளக்குகளின் ஒளியினால்
அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்]

 
INTERIOR

 ROOM

 LOBBY

 BATH ROOMS

TENNIS COURT

HELIPAD

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட சிறிய தீவில் அமைந்திருக்கும் அட்லான்டிஸ் ஹோட்டலும் வியப்பை அளிக்கும்.

ATLANTIS HOTEL

குளோபல் வில்லேஜ் என்ற இடத்தில் அனைத்து நாடுகளின் கலாச்சாரப் பொருட்களும், உணவு வகைகளும் கிடைப்பதோடு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து இருக்கும். 

 
PALM ISLANDS


பாம் [PALM ISLAND] ஐலேண்ட், துபாய் கிரீக், ஸ்கீ துபாய், துபாய் மரீனா, வைல்ட் வாடி போன்ற ஏராளமான அம்சங்கள் துபாயில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிப்பதற்கு குவிந்து கிடக்கின்றன.

துபாயைச் சுற்றிப்பார்க்க குளிர்காலம் தான் மிகச்சிறந்தது. அங்கு குளிர்காலம் அக்டோபரில் துவங்கி ஏப்ரில் வரை இருக்கும்.

கட்டுக்கோப்பான நடைமுறைகள்:

துபாயில் ஒழுங்குமுறையுடன் கூடிய சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. பொது இடங்களிலோ, வீதியிலோ மது அருந்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடமாடுபவர்கள் - வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் என்றாலும் தோள்களுக்கு மேல் பகுதி வரையிலும், முழங்காலுக்குக் கீழ்ப்பகுதி வரையிலும் ஆடையால் உடலை மறைத்திருக்க வேண்டும். 

அனைத்து இடங்களிலும் குறிப்பாக வணிக வளாகங்களில் இதற்கான அறிவிப்புப்பலகைகளைக் காணலாம். இந்த விதியை மீறுபவர்கள் வணிக வளாகங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரம்ஜான் மாதத்தில், அனைவரும் கடைபிடிப்பதற்கு என்று சில விதி முறைகளும் இருக்கின்றன. இதுபோன்ற கட்டுக்கோப்பான நடை முறைகள் காரணமாகத்தான் துபாய், செல்வச்செழிப்போடு விளங்குவதோடு அமைதியான அருமையான சுற்றுலா இடமாகவும், வர்த்தக மையமாகவும் உலக மக்களால் போற்றப்படுகிறது.




இதிலுள்ள பெரும்பாலான தகவல்கள்
துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட
’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன





 இந்தக்கட்டுரை மேலும் தொடரும் 



World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’

24 கருத்துகள்:

  1. ஆஹா ஆஹா டுபாயில் இருக்கும் பலருக்குத் தெரியாது இப்படி விபரங்கள் என நிட்சயமா சொல்லுவேன்... கலக்குங்கோ..

    பதிலளிநீக்கு
  2. துபாய் போவேனா துபாய் போவேனா
    வைகோ சொல்லியவற்றை பார்ப்பேனா
    யாரறிவார் சொல் பழனி கந்தா !

    பதிலளிநீக்கு
  3. குளோபல் வில்லேஜின் படங்களும் தகவல்களும் பிரம்மாண்டத்தை தருகின்றன. டென்னிஸ் கோர்ட் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. போக முடியாத எனக்கு கையருகே காட்சிகள்.. கண்ணருகேயும் !

    பதிலளிநீக்கு
  5. காணக் கண் கோடி வேண்டும்

    படங்களும், தகவல்களும் அருமை.

    வாழ்த்துக்களுடனும்
    அன்புடனும்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  6. அய்யா பழனி.கந்தசாமி அவர்கள் உங்கள் பதிவுகளைப் பார்த்ததினால் துபாய் மீது ஒரு கண் வைத்து விட்டார் என்று நினைக்கிறேன். கிளம்பி விடுவார். தமிழ் வலையுலகில், துபாய் பற்றிய அடுத்த பதிவு இனி அவருடையதாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அம்மாடீ... பர்ஜ் அல் அராப் ஹோட்டல் பற்றிய செய்திகள் வியக்கவைக்கின்றன. துபாய் சுற்றிப் பார்க்க செல்பவர்களுக்கு நிச்சயமாக இந்தப் பதிவுகள் பயனுள்ளவையாக இருக்கும். குளோபல் வில்லேஜ் சுவாரசியம். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள். பிரமிக்க வைக்கும் படங்கள்!

    பதிலளிநீக்கு
  9. சுவாரசியமான செய்திகள். ஹோட்டலின் அறைகள் வியக்க வைத்தன என்றால் பாத்ரூம் அதைவிட அருமை. கண்ணைப் பறிக்கிறது சுத்தம். எல்லாமே அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. துபாயின் கட்டுகோப்புகள் நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பயணத்தால் எங்களுக்கும் பலன் கிடைத்தது என்றால் மிகையில்லை! நேரில் சென்று பார்ப்போமா என்பது தெரியவில்லை! புகைப்படங்கள் வாயிலாகவும் தங்களின் கட்டுரைகள் வாயிலாகவும் தெரிந்துககொள்ள முடிந்ததில் மகிழ்வே!

    பதிலளிநீக்கு
  13. படங்களும் பகிர்வும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ரசனையுடன் சூல்லி வருவது சூப்பர்

    பதிலளிநீக்கு
  14. துபாயில் ஒழுங்குமுறையுடன் கூடிய சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. மிகவும் வியக்கவைத்த செய்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 7:09 PM

      வாங்கோ, வணக்கம்.

      //துபாயில் ஒழுங்குமுறையுடன் கூடிய சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது. மிகவும் வியக்கவைத்த செய்தி//

      தங்களை வியக்கவைத்த செய்தியை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  15. ஓட்டலா அது ஆத்தாடி உள்ளார போகவே விடுவாங்களா காசு புடிங்கிடுவாங்களோ.

    பதிலளிநீக்கு
  16. குளோபல் வில்லேஜ் படங்களும் பகிர்வும் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. ஆஹா..இவ்வளவு கலர்ஃபுல்லான இ(ப)டங்களா? ஒருதடவ போய்த்தான் ஆகணும்போல இருக்கே...ராஜ வாழ்க்கங்குறது இதுதானா???

    பதிலளிநீக்கு