என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 31 அக்டோபர், 2015

தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’


ஓர் கவிதை நூலுக்கான 
புகழுரை


சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது. 

ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும். 

அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

 

 
பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)

பூக்களிலும் ஆண் / பெண் என்ற பாகுபாடு உண்டோ என்ற சந்தேகத்துடன் அந்தப் புத்தம்புதிய நூலின் வழவழப்பான கன்னங்கள் போன்ற அட்டைகளைத் தொட்டுத்தடவிப் பார்த்.....தேன். உடனே கும்மென்றதோர் நறுமணம் கமழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.  

உள்ளே நுழைந்தால் ’ரோஜாப் பூ’வில் ஆரம்பித்து ...... ’அத்திப் பூ’ வரை ஐம்பத்து ஏழு  விதமான பூக்களைப் படங்களாக ஒவ்வொரு பக்கத்திலும் காண்பித்து, ஒவ்வொரு பூவின் பெயர்களையுமே தலைப்பாக வைத்து, மிக மிக அருமையாக தேன் சிந்திடும் 57 கவிதைகள் படைத்துள்ளார்கள். 

படிக்கப்படிக்க பூக்களின் மணத்திலும், தேனின் ருசியிலும் சொக்கிப்போனேன். நூலினை முழுவதும் படித்து முடிக்காமல் என்னால் அங்கு இங்கு நகர முடியாமல் கட்டிப்போட்டு விட்டன, இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான ஆக்கங்கள்.


  

’தமிழ் மரபின் நீட்சியாக’  என்ற தலைப்பில் ’புதிய தரிசனம்’ பதிப்பாசிரியர் திரு. ஜெபக்குமார் அவர்கள் இந்த நூலுக்கு மிகச்சிறியதோர் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள்.”பூக்களின் தேனுரை” என்ற தலைப்பினில் நம் ’ஹனி மேடம்’ எழுதியுள்ள முன்னுரைப் பக்கத்தில் என்னை மிகவும் கவர்ந்துள்ள வரிகள் இதோ:

”பெண்ணைத் தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகளாய், பேத்தியாய் நேசிக்காதவர்கள் இருக்க முடியாது. பிறப்பிலிருந்து இறப்புவரை நம் வாழ்வில் தொடர்புடையவை பூக்கள். பூத்துச் சிரிக்கும் மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பெண் நம் ஞாபகச் சுரங்கத்தில் தங்கம்போலோ, வைரம்போலோ பளீரிடுவாள். பேதையிலிருந்து பேரிளம் பெண் வரை .... ஏன் பாட்டி வரை நம்மை வசீகரித்த பெண்களும் பூக்களும், அவர்களின் மேலான நம் பாசமும், நேசமும், காதலும், அன்பும் பொங்க சில கவிதைகளை ஆண் பார்வையிலும், சில கவிதைகளைப் பெண் பார்வையிலிருந்தும் படைத்திருக்கிறேன். இவை கவிதைகள் என்பதைவிட பாசப்பகிர்வு எனலாம். வாழ்நாள் முழுவதும் உங்களை வசீகரித்த, வசீகரித்துக் கொண்டிருக்கும் பெண்களை நீங்களும் இக்கவிதைகளில் உணர்ந்தால் அதுவே எனக்கான பரிசு” - அன்புடன் தேனம்மை லெக்ஷ்மணன்.

எல்லாக் கவிதைகளுமே மிக அழகாக யோசித்து எழுதப்பட்டுள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு இங்கே சாம்பிளாகத் தந்துள்ளேன் ... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல. 


ரோஜா

நேற்றுப் பெய்த மழையில், மாடியின் தளத்திலும், கைப்பிடிச்சுவரிலும் ஈரப்பூக்கள் பூத்துக் கொண்டேயிருந்தன.

துணியெடுக்கச்சென்ற நான், தன்னையுமறியாமல், கன்னங்களை அழுந்தத் துடைத்துக்கொண்டேன்.

நேற்று நீ இட்ட முத்தம், ரோஜாவும் முட்களுமாய், கன்னம் வழி கசிந்து, பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று. 

 மல்லிகை

கல்லூரி வகுப்பறை நண்பர்கள், பேப்பர் அம்புகளை எய்து கொண்டிருந்தபோது.... நீ பார்வை அம்புகளை எய்தாய்....

உன் பார்வை விடு தூதில் ஒவ்வொன்றும் மல்லிகையாய் மெத்தென்று என் மனதில்....

உன் பார்வைகளில் உதிர்ந்த மல்லிகைகளை, என் பார்வைகளில் வாங்கிக் கோர்த்தபோது, நம் காதலின் கிரீடம் ஆனது அது.

அதை அணிந்து உலா வந்தோம்.. ஒளி வட்டம் போல பார்வை வட்டம் சூடி..  

  ஆவாரம்பூ 
பொங்கலுக்குப் பொங்கல் விடுமுறையில் ஊர் வாரேன்.. புது நெல்லு வாசத்தில் நீ வெல்லமிட்ட பொங்கல் தின்ன..

காணும் பொங்கலன்னிக்கு, கன்னுப்புள்ளையும் நெக்கதிரும், ஆவாரம் பூவும் சொமந்த காலம் என் நெனைப்பில் ஓடுதடி..

கண்ணுக்குத் தெரியாத கயிறுவச்சு இழுக்கிறியே.. மஞ்சு வெரட்ட விட்டுப்பிட்டு.. அடி..! என் மஞ்சக்கெழங்கு  ஒன்னோட பூப்பறிக்க வந்தேன்டி....

கொப்பும் குலையுமா கொள்ளைச் சிரிப்போட, என் அயித்தைமக ஒன்னைப்போல காடாட்டம் பூத்திருக்கும்.. ஆவாரம்பூ அலைஅலையா....

கூட நெறைய அள்ளி வந்து குதிர் ரெம்பக் கொட்டிவச்சோம்.... யார் கூட எப்படியோ ஒங்கூட மகிர்ந்திருக்கும்.

அள்ள அள்ளக் கொறையாத அழகுப்பாதகத்தி... அடுத்த பொங்கலுக்குக் காத்திருக்கேன் அடி..! சேர்ந்து நாம் பூப்பறிக்க...! 

 கனகாம்பரம்

ஊர்த்திருவிழா... கிலுகிலுப்பை, ஊதல் சின்னவனுக்கு... பலூனும் பஞ்சு மிட்டாயும் பெரியவளுக்கு... தேரில் வந்த சாமி பார்த்து தேங்காயுடைச்சு முடிச்சாச்சு...

கியாஸ் லைட் வெளிச்சத்துல, நாயனமும் மோளமும் ஒன்னுக்கொன்னு எசை பாட... கரகாட்டம் ஆடி வந்த கறுத்த அழகி  கூந்தலிலே அம்பாரமாய் கனகாம்பரம்..

மெலிஞ்சிருந்த அவள் கரகம் எடுத்துச் சுற்றிச்சுற்றி ஆடயிலே கனகாம்பரம் சுத்தினதுபோல் ராட்டினமாய் என் மனசும்...
  
 
இதுபோன்ற ருசிமிக்க மற்ற பூக்களையும் கவிதையாய் நுகர்ந்து ரஸித்து, அவற்றில் சிந்திடும் தேனை ருசித்து இன்புற, தாங்களே அந்த நூலை வாங்கிப்படித்து மகிழுங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன். 

 

மேலும் நம் அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவருக்கும் நம் அன்புப்பரிசாக வழங்க மிகவும் ஏற்றதோர் நூலாகும் இது.


  


நூல் வெளியீடு: 
‘புதிய தரிசனம் பதிப்பகம்’ 

அட்டைகள் நீங்கலாக 64 பக்கங்கள்
விலை : ரூ. 60 (ரூபாய் அறுபது) மட்டுமே 

தொடர்புக்கு முகவரி:

10/11 அப்துல் ரசாக் 2வது தெரு
சைதாப்பேட்டை
சென்னை - 600 015
தொலைபேசி எண்: 044-42147828
e-mail: puthiyadharisanam@gmail.com


திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
பற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்
சிறப்பித்து எழுதியுள்ளவைகள் 
மீண்டும் தங்களின் பார்வைக்காக இதோதிருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
 சும்மா
டைரிக்கிறுக்கல்கள்
THENU'S RECIPES
கோலங்கள்
CHUMMA!!!

சாதாரணப் பெண் அல்ல 
சாதிக்கப்பிறந்தவர்
நம் ’ஹனி மேடம்’ !
இவரைப்பற்றி மேலும் அறிய
சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள பிரபல நூல்கள்:
’அன்ன பட்சி’
”ங்கா”
’சாதனை அரசிகள்’

கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்,
ஆன்மிகம், கலை, கட்டடங்கள்
மட்டுமின்றி
பங்குச்சந்தை முதலீடுகள் உள்பட
இவர் எழுதாத தலைப்புகளோ, 
பங்கேற்காத நிகழ்ச்சிகளோ, 
இவரின் ஆக்கங்கள் இடம் பெறாத 
பத்திரிகைகளோ, மின்னூல்களோ,
முகநூல் பொன்ற சமூக வலைத்தளங்களோ ஏதும் 
இல்லவே இல்லை என நாம் அடித்துச்சொல்லலாம்.

நான் சமீபத்தில் படித்து வியந்தது இவரின்
கூண்டுக்கிளி


அனைத்திலும் ஆர்வமுள்ள
அதி அற்புதமான 
திறமைசாலியாவார் !


’சாட்டர் டே ஜாலி கார்னர்’ 

என்ற தலைப்பினில்

பல்வேறு நபர்களை பேட்டி எடுத்து இவர்

வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதோ ஒருசில சாம்பிள் பேட்டிகள் 


 காணத்தவறாதீர்கள் 


கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் தன் வலைத்தளங்களில் 


எழுதிக்குவித்துள்ள பதிவுகளின் மொத்த எண்ணிக்கை  2000த்தை தொட்டுள்ளன. :)அனைவருடனும் நட்புடன் பழகுவதில் தேனினும் இனிமையானவர் !


-oOo-வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!

என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

{இது தேனம்மை அவர்கள் அடிக்கடி கூறிவரும் தேன்மொழி}

நிமிர்ந்த நடை + 

நேர்கொண்ட பார்வை + 

தெளிந்த அறிவு + 

அசாத்ய துணிச்சல் + 

ஆளுமை சக்தி + 

அன்பான உள்ளம் 


=   நம் ஹனி மேடம்  
வாழ்க ! வளர்க !!என்றும் அன்புடன் தங்கள்

 

[ வை. கோபாலகிருஷ்ணன்]

68 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் சகோதரி தேனம்மை. நல்ல பகிர்வு ஸார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். October 31, 2015 at 7:48 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //வாழ்த்துகள் சகோதரி தேனம்மை. நல்ல பகிர்வு ஸார்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மைக் மோகினி சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் October 31, 2015 at 8:10 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மைக் மோகினி சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...//

   மைக் மோகினி !!!!! இதுவும் நல்லாத்தான் இருக்கு. :))))) மிக்க நன்றி.

   நீக்கு
 3. இனிமையான வலப்பதிவர். தேன் போன்ற கவிதைகள். பருகப்பருக ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி October 31, 2015 at 8:44 AM

   வாங்கோ, வணக்கம் சார்.

   //இனிமையான வலைப்பதிவர். தேன் போன்ற கவிதைகள். பருகப்பருக ஆனந்தம்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆனந்தமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   நீக்கு
 4. கவித அரசி தேனம்மை லஷ்மணன் அவங்களுக்கு வாழ்த்துகள். எங்க அல்லாருகூடவும் அறிய கொடுத்த குருஜியவங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 31, 2015 at 9:32 AM

   வாம்மா முருகு, வணக்கம்.

   //கவித அரசி தேனம்மை லஷ்மணன் அவங்களுக்கு வாழ்த்துகள். எங்க அல்லாருகூடவும் அறிய கொடுத்த குருஜியவங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்//

   அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிம்மா.

   அன்புடன் குருஜி

   நீக்கு
 5. தேனமைக்காக நீங்கள் எழுதிய விமர்சனம் வழக்கம்போல தேனாய் இனிக்கிறது! விமர்சனம் அருமை! தேனம்மைக்கு இனிய நல்வாழ்த்துக்களும் மனமார்ந்த பாராட்டுக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய வார்த்தைகளுக்கு நன்றி மனோ மேம் :)

   நீக்கு
  2. மனோ சாமிநாதன் October 31, 2015 at 10:20 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தேனம்மைக்காக நீங்கள் எழுதிய விமர்சனம் வழக்கம்போல தேனாய் இனிக்கிறது! விமர்சனம் அருமை! தேனம்மைக்கு இனிய நல்வாழ்த்துக்களும் மனமார்ந்த பாராட்டுக்களும்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமை’ என்ற அருமையான கருத்துக்களுக்கும், நூலாசிரியரைப் பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 6. விமரிசனம் ஜோர்.

  கவிதைகளுக்கான பார்வையும் புதிய தரிசனமாகத் தான் இருக்கிறது.

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி October 31, 2015 at 11:06 AM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள் + வணக்கம்.

   //விமரிசனம் ஜோர்.//

   புகழுரையை ஜோராக விமர்சனம் ஆக்கிச் சொல்லியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்

   //கவிதைகளுக்கான பார்வையும் புதிய தரிசனமாகத் தான் இருக்கிறது.//

   ஆஹா, இதுதான் தங்களின் முத்திரை வரிகள் .... எண்ணி எண்ணி வியந்துபோனேன். மிகவும் ரஸித்தேன்.

   //சகோதரிக்கு வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம், ஸார்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 7. இந்தத் தமிழ்த் தேனை சந்திக்கும் ஒரு அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

  அந்த பளீர் சிரிப்பு முகம் இன்னும் என் கண்களிலும், நினைவிலும் நிற்கிறது.

  அருமையான பெண்மணி.

  // வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!

  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!//

  அருமை தேன்.

  ரொம்ப நாளாச்சு உங்ககிட்ட தொலைபேசியில் பேசி.

  வாழ்த்துக்கள்

  தேனுக்கும்,

  தேனின் சுவையை வலைத்தளத்தில் விமர்சித்த கோபு அண்ணாவுக்கும்

  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹா அருமை அருமை ஜெயந்தி.

   நானும் உங்களையும் உங்கள் அழகான உருவையும் சந்தனக் குரலையும் ஆணித்தரமான கருத்துக்களையும் மறவேன். முத்துச்சரம் மகளிர் தின நிகழ்வுக்காக சந்தித்தோம் முதல் முறையா.

   உங்க எண் ஃபோன் மாற்றியதால் சிம்மில் இல்லை. உங்கள் எண்ணை முடிந்தால் என் ஈ மெயிலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

   நீக்கு
  2. Jayanthi Jaya October 31, 2015 at 12:54 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //இந்தத் தமிழ்த் தேனை சந்திக்கும் ஒரு அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.//

   நம் ஜெயா மிகவும் அதிர்ஷ்டக்காரி அல்(ல)வா !

   //அந்த பளீர் சிரிப்பு முகம் இன்னும் என் கண்களிலும், நினைவிலும் நிற்கிறது. அருமையான பெண்மணி.//

   நான் படங்களிலும் பதிவுகளிலும் பார்த்து அவ்வாறே நினைத்திருந்தேன் .... நீங்க நேரில் பார்த்து அதையே சொல்லி உறுதி ப--டு--த்--தி ட்டீங்கோ. :) சபாஷ் ஜெ.

   //தேனின் சுவையை வலைத்தளத்தில் விமர்சித்த கோபு அண்ணாவுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 8. இவரதுவலைப்பூவை தொடர்ந்து வாசிக்கிறேன்! நூல்கள் வாசித்தது இல்லை! நல்லதொரு நூல் பகிர்வு! வாங்கி படிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ் சகோ வெங்கட் சகோ, டிடி சகோ , குமார் சகோ, ஜெயக்குமார் சகோ இன்னும் பல சகோதரர்கள், & நண்பர்கள் என் வலைப்பூவைப் படித்துக் கொடுக்கும் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களினாலேயே நான் இன்றும் ஊக்கமுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். நன்றி அனைவருக்கும். :)

   நீக்கு
  2. ‘தளிர்’ சுரேஷ் October 31, 2015 at 2:27 PM

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 9. பக்கத்துக்கு பக்கம் படித்து பரவசம் ஆகி இருக்கிறீர்கள். சகோதரி தேனம்மையின் புத்தகத்தை வாங்கிடச் சொல்லும் வண்ணம் நல்லதோர் விமர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹா ! நன்றி தமிழ் இளங்கோ சார் படிச்சிட்டு சொல்லுங்க :)

   நீக்கு
  2. தி.தமிழ் இளங்கோ October 31, 2015 at 3:02 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //பக்கத்துக்கு பக்கம் படித்து பரவசம் ஆகி இருக்கிறீர்கள். //

   :) ஆம். பொதுவாகக் கவிதை என்றாலே காததூரம் ஓட நினைக்கும் என்னை, பக்கத்துக்கு பக்கம் இழுத்து, ஒரு ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் படிக்கவும் ரஸிக்கவும் வைத்து, உண்மையிலேயே பரவசம் ஆக்கிட்டாங்கோ. :)

   //சகோதரி தேனம்மையின் புத்தகத்தை வாங்கிடச் சொல்லும் வண்ணம் நல்லதோர் விமர்சனம்.//

   தாங்கள் எப்படியும் இந்த நூலை வாங்கிவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பீர்கள் என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 10. ஹையா நம்ம தேனக்கா கவிதைகள் ! அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் செல்ல தேனக்கா .. ..
  கோபு அண்ணா உங்கள் நூல் புகழுரை மிக அருமை ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி என் செல்ல ஏஞ்சல் :)

   நீக்கு
  2. Angelin October 31, 2015 at 5:20 PM

   வாங்கோ ஏஞ்சலின், வணக்கம்மா.

   //ஹையா நம்ம தேனக்கா கவிதைகள் ! அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் செல்ல தேனக்கா .. ..//

   :)))))

   //கோபு அண்ணா உங்கள் நூல் புகழுரை மிக அருமை ..//

   மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள்.

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
 11. தேனம்மையின் கவிதை நூலுக்கு வாழ்த்துக்களும், மதிப்புரை வழங்கிய தங்களுக்கு பாராட்டுகளும் அய்யா! இனிப்பான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.P. Senthil Kumar October 31, 2015 at 5:31 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //தேனம்மையின் கவிதை நூலுக்கு வாழ்த்துக்களும், மதிப்புரை வழங்கிய தங்களுக்கு பாராட்டுகளும் அய்யா! இனிப்பான பதிவு!//

   தேன் என்றால் அது இனிக்கத்தானே செய்யும் ! :)

   தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் ஐயா, நலமா?
  தங்கள் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர், வாழ்த்துககள் தேனம்மை அவர்களுக்கு, தங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran October 31, 2015 at 6:21 PM

   வாங்கோ, வணக்கம்.

   //வணக்கம் ஐயா, நலமா?//

   மிக்க நன்றி, நான் நலமே.

   //தங்கள் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர், வாழ்த்துகள் தேனம்மை அவர்களுக்கு, தங்களுக்கு நன்றிகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்களுக்கும், நூலாசிரியருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 13. சகோதரியின் கவிதை நூலுக்குத் தங்களின் விமர்சனம் அருமை
  நூலைத் தேடி பெற்று படிக்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்
  நன்றி ஐயா
  சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜெயக்குமார் சகோ :)

   நீக்கு
  2. கரந்தை ஜெயக்குமார் October 31, 2015 at 7:25 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //சகோதரியின் கவிதை நூலுக்குத் தங்களின் விமர்சனம் அருமை. நூலைத் தேடி பெற்று படிக்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். நன்றி ஐயா. சகோதரிக்கு வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமை என்ற அருமையான கருத்துக்களுக்கும், நூலாசிரியருக்கான தங்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 14. மிக மிகப் பணிவான வணக்கங்களும் நன்றியும் கோபால் சார்.

  தங்கள் வலைத்தளத்தில் என் நூலுக்கான புகழுரையை வெளியிட்டு அதைப் பலரும் அறியச் செய்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

  நூல் வந்ததே தெரியாமல் இருந்தது. உங்கள் வலைப்பதிவின் மூலம் அது பலரையும் சென்று அடைந்து அதற்கான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  பெண்பூக்களை வாசித்து முழுமையான அழகான விமர்சனம் தந்தோடு மட்டுமல்ல. அதன் பின்னும் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நன்றிக்கடன் சொல்லித் தீர்த்துவிட முடியும்.

  பதில் அன்பும் நன்றியும் வணக்கங்களுமே எனது தற்போதைய நிலைப்பாடு. தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வரவும், புத்தகங்கள் வெளியிடவும் உங்கள் பதிவு எனக்கு ஊக்கமூட்டுகிறது.

  மீண்டும் மனமார்ந்த நன்றிகள் கோபு சார். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan November 1, 2015 at 10:12 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   ’பெண் பூக்கள்’ என்ற நறுமணமுள்ள இந்தத்தங்களின் நூலின் வருகையினால் என்னால் 30.10.2015 வெள்ளிக்கிழமை + சங்கடஹர சதுர்த்தி நாளில் தங்களின் தேன் குரலை .... மிகவும் கம்பீரமாகவும் .... கணீரென்றும் முதன்முதலாகக் கேட்டு மகிழமுடிந்தது.

   ஏற்கனவே நீண்ட நாட்கள் பேசிப்பழகியவர்கள் போல நாம் இருவரும் மனம் விட்டு, பல விஷயங்களை சரளமாக நமக்குள் பேசி மகிழ முடிந்தது.

   நான் பிறந்ததும் செட்டிநாடு காரைக்குடிக்கு மிக மிக அருகேயுள்ள (Just 2 KMs only from Karaikkudi) கோவிலூர் என்பதாலும், தாங்கள் அன்று காரைக்குடியிலிருந்து என்னுடன் பேசியதாலும், ஏதோ விட்டகுறை தொட்டகுறை போல என் பிறந்தவீட்டு உறவினர் ஒருவருடன் நான் பேசியது போன்றதோர் இன்ப அதிர்ச்சியை நான் எனக்குள் உணர்ந்.....தேன் !!!!! :)

   Please Refer: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html [நீங்க ஏற்கனவே படித்துச் சிரித்துப் பின்னூட்டம் இட்டுள்ள பதிவுதான் இது]

   >>>>>

   நீக்கு
  2. கோபால் >>>>> ஹனி மேடம் (2)

   தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண எழுத்துநடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பேச்சு வழக்கிலேயே அனைத்துக் கவிதைகளையும் படைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்.

   முறையான படிப்பறிவே இல்லாத பாமரனுக்கும் மிகச்சுலபமாகப் புரியக்கூடியதாக, ஆத்மார்த்தமாக அவை அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

   கதையோ, கவிதையோ, கட்டுரையோ .... எந்த ஒரு ஆக்கமும் மிகச் சாதாரணமானவர்களுக்கும், மிகச்சுலபமாகப் புரியும் வண்ணம் பேச்சுத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும்.

   அவ்வாறான எழுத்துக்கள் மட்டுமே வாசகர்களிடம் நல்லதொரு வரவேற்பினை பெறக்கூடும். அதற்காகத் தங்களுக்கு என் கூடுதல் நல்வாழ்த்துகள்.

   >>>>>

   நீக்கு
  3. கோபால் >>>>> ஹனி மேடம் (3)

   எனக்கு தங்கள் நூலிலோ, அதிலுள்ள சிறப்பான ஆக்கங்களிலோ குறை ஏதும் சொல்லத் தெரியவில்லை. எனக்கு பிறரின் நூல்களைப்பற்றி இதுவரை விமர்சனம் செய்தும் பழக்கம் ஏதும் இல்லை. அதனால் இதனை ஓர் புகழுரை என்று மட்டுமே தலைப்பிட்டு என் ரசனையை, எனக்குத் தெரிந்தவரை, ஏதோ கொஞ்சமாக இந்தப்பதிவினில் எழுதியுள்ளேன்.

   இருப்பினும் தங்களுக்கு அப்பாற்பட்டதான ஒரு குறை என் கண்களை உறுத்தத்தான் செய்கிறது. அதாவது அந்த முன் அட்டையில் பிரசுரத்தாரால் வரையப்பட்டுள்ள படம். அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்க இல்லை.

   கேட்டால் ஏதாவது மாடர்ன் ஆர்ட் என்பார்கள். தங்களிடம்கூட இதைப்பற்றி கலந்தாலோசித்திருக்க மாட்டார்கள். இப்படித்தான் இவர்கள் எப்போதுமே கொஞ்சம் சொதப்பி விடுவது வழக்கம்.

   ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் மிக மிக அழகாகவும், பார்ப்போரை வசீகரிக்கக் கூடியதாகவும் இருக்கப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இவ்வாறு இல்லாது போனால் அதன் விற்பனையும் வெகுவாக பாதிக்கக்கூடும்.

   உள்ளே சரக்கு எப்படியிருந்தாலும் கூட, வெளி அட்டையில் அது பெண்ணோ அல்லது பூக்களோ மேக்கப் போட்டபடி பளிச்சென்று இருக்க வேண்டும்.

   In General, the way of presentation should be Very Attractive & Beautiful.

   Face is the Index of the Mind என்பார்கள். ஒரு நூலுக்கு அதன் மேல் அட்டையே FACE ஆக இருக்க முடியும். அது பளிச்சென்ற ஓர் படத்துடன் மின்ன வேண்டும்.

   அதுவும் ‘பெண் பூக்கள்’ என்னும் போது அது மேக்-அப் செய்த இளம் Sweet Sixteen பெண்ணைப் போலவே மிகவும் பளிச்சென்று இருக்க வேண்டும்.

   அட்டைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில், வாசகர்கள் நீண்ட க்யூ வரிசையில் நின்று புத்தகத்திற்கான தொகையினைக் கொடுத்து விட்டு, அதனை அப்படியே கொத்திக்கொண்டு செல்வது போல சூப்பராக இருக்க வேண்டும். :)

   அந்த வழவழப்பான மிகத் தரமான கலர் அட்டையில்போய், பூக்கள் என்ற பெயரில் இப்படி வேறு ஏதோ ஒரு படத்தையும் (திருஷ்டிப் பரிகாரம் போல) கலந்து போட்டு விட்டார்களே என நான் எனக்குள் நொந்து போனேன்.

   பதிப்பகத்தாரின் கவனத்திற்கும் இந்த என் கருத்தினைத் தாங்கள் தாராளமாக எடுத்துக்கொண்டுபோய் அவர்களுக்கும் இதனைப் புரியவைக்கலாம்.

   இதனால் இனி அவர்களால் வெளியிடப்படும் நூல்களிலாவது, படைப்பாளியையும் கலந்து கொண்டு, அவரின் விருப்பம் + சம்மதத்துடன், மேல் அட்டைப் படத்தை அவர்கள் தேர்வு செய்ய வழி பிறக்கும்.

   தாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் அட்டைப்படங்கள் போல இது ஜோராக அமையவில்லை என்பது தங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

   >>>>>

   நீக்கு
  4. கோபால் >>>>> ஹனி மேடம் (4)

   இந்த நூலின் உள்ளே தாங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் காட்டியிருக்கும் 57 வகையான பூக்களையும் கலர் கலராகக் காட்டியிருந்தால் பார்க்கவும் படிக்கவும் மேலும் ஜோராகத்தான் இருந்திருக்கும்.

   ஆனால் அவ்வாறு செய்தால் நூலின் அடக்கவிலை எக்கச்சக்கமாக எகிறி விடும். விற்பனை விலை ரூ 60 என்பதை ரூ 600 என நிர்ணயிக்கும் படியாக ஆகியிருக்கும். அதனால் அவ்வாறு செய்யாதது நியாயம்தான் என என்னால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

   அழகான முன்/பின் அட்டைகளில் தோன்றும் படங்கள், அதன் வடிவமைப்பு, தரமான வழுவழுப்பான, பளபளப்பான அந்த கெட்டிப் பேப்பர்களின் விலை முதலியன பொதுவாக பிரசுரத்தாரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது. அதில் இவர்கள் இவ்வாறு சொதப்பும் போது நம்மால் அதனை துணிந்து எதிர்க்கவும் முடிவது இல்லை என்பதை நானும் நன்கு உணர்ந்துள்ளேன். இதில் தங்கள் தவறு ஏதும் இல்லைதான்.

   மற்றபடி தங்களின் இந்த நூல் மிகவும் பிரமாதம். ஒரே மூச்சில், ஒரே நாளில் ரஸித்து ருசித்துப் படித்து முடித்து விட்டேன். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   மென்மேலும் பல நூல்கள் தாங்கள் வெளியிட்டு எழுத்துலகில் மேலும் ஜொலிக்க வேண்டும் என ஆசீர்வதிக்கிறேன்.

   பிரியமுள்ள கோபால்.

   நீக்கு
  5. தங்கள் மேலான கருத்துகள் அனைத்தும் உண்மை. கவனத்தில் கொள்கிறேன் கோபால் சார்.

   நானும் உங்களுடன் முதன் முதலில் தொலைபேசியில் பேசியது குறித்து மகிழ்வுற்றேன் :)

   நீக்கு
  6. Thenammai Lakshmanan November 2, 2015 at 4:29 PM

   வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.

   //தங்கள் மேலான கருத்துகள் அனைத்தும் உண்மை. கவனத்தில் கொள்கிறேன் கோபால் சார்.//

   ஓவியங்களில் கொஞ்சம் ஈடுபாடு உள்ள நான், ஏதோ எனக்கு, என் மனதுக்குத் தோன்றியதை அப்படியே வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். உண்மை என்று ஏற்றுக்கொண்ட தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி, மேடம்.

   //நானும் உங்களுடன் முதன் முதலில் தொலைபேசியில் பேசியது குறித்து மகிழ்வுற்றேன் :)//

   :))))) மிகவும் சந்தோஷம். :)))))

   நீக்கு
 15. தேனம்மையின் கவிதைகளின் ரசிகை நான்.. எனினும் இந்த நூலைப் பற்றி அவ்வளவாக அறியாமல்தான் இருந்தேன். கவிதை நூல் என்பது கூடத் தெரியாது. பெண் பூக்கள் என்ற பெயரைக்கொண்டு, சாதனை அரசிகள் மாதிரி இதுவும் பெண்களைப் பற்றி சொல்வதாக எண்ணியிருந்தேன். ஆனால் இப்படி வித்தியாசமாக மலர்களை முன்னிறுத்தியும் மையப்படுத்தியும் பின்னணியாக அமைத்தும் கவிதைகளைப் பொழிந்திருப்பார் என்பது தற்போது தங்களுடைய புகழுரை வாயிலாகத்தான் தெரிகிறது. உதாரணத்துக்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவையே மனம் வசீகரிக்கின்றன எனில் மற்றவை பற்றி சொல்லவா வேண்டும்? கதை, கவிதை, கட்டுரை சமையல், கோலம், பாரம்பரியப் பகிர்வுகள் என்று பல்பரிமாணப் பதிவுகளில் கலக்கும் தேனம்மையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரமிது.. தோழி தேனம்மைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் அவருடைய கவிதை நூலை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் தமிழகம் வரும்போது வாங்கிப் படிச்சிட்டு எனக்கு உங்க கருத்துகளை தெரிவியுங்கள் கீதா :)

   நீக்கு
  2. கீத மஞ்சரி November 1, 2015 at 11:24 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கதை, கவிதை, கட்டுரை சமையல், கோலம், பாரம்பரியப் பகிர்வுகள் என்று பல்பரிமாணப் பதிவுகளில் கலக்கும் தேனம்மையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரமிது.. //

   ஜொலிக்கும் வைரம் பதித்த வரிகளுக்கு முதலில் என் ஸ்பெஷல் நன்றிகள். :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல வெகு அழகான விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நூலாசிரியரை வெகுவாகப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 16. அழகான விமர்சனம். தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி மேம். வாசிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க :)

   நீக்கு
  2. கோமதி அரசு November 1, 2015 at 3:04 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அழகான விமர்சனம். தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.//

   தங்களின் அபூர்வ வருகைக்கும், எனது புகழுரையை அழகான விமர்சனம் எனச்சொல்லியுள்ளதற்கும், நூலாசியர் அவர்களை வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 17. கவிதைப் புததகம் 'பெண் பூக்கள்'!

  நறுமண கவிப் பாக்கள்!

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 2, 2015 at 10:45 PM

   வாங்கோ அருமை நண்பரே, வணக்கம்.

   //கவிதைப் புத்தகம் 'பெண் பூக்கள்'!

   நறுமண கவிப் பாக்கள்!

   வாழ்த்துகள்!//

   முத்தான மூன்றே வரிகளில், கவிதைபோல சத்தான பல விஷயங்களைக் கூறி அசத்தியுள்ளீர்கள்.

   தங்களின் அன்பு வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பா.

   அன்புடன் VGK

   நீக்கு
 18. முதலில் வாழ்த்துகள் தேனம்மை சகோ!

  பூக்கள் என்றால் பெண்கள் நினைவும், பெண்கள் என்றால் பூக்கள் நினைவும்// ஆஹா சரியாகச் சொன்னீர்கள் சார்...அதனால் அந்தத் தலைப்பும் மிளிர்கின்றதோ...நீங்கள் சொல்லுவது சரிதான்

  அருமையான புகழுரை...சார்...அவர்களுக்கு ஏற்றதே...சாதிக்கப் பிறந்தவர்தான். எந்த ஐயமும் இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu November 4, 2015 at 7:06 PM

   வாங்கோ, வணக்கம்.

   //முதலில் வாழ்த்துகள் தேனம்மை சகோ!

   பூக்கள் என்றால் பெண்கள் நினைவும், பெண்கள் என்றால் பூக்கள் நினைவும்// ஆஹா சரியாகச் சொன்னீர்கள் சார்...அதனால் அந்தத் தலைப்பும் மிளிர்கின்றதோ...நீங்கள் சொல்லுவது சரிதான்

   அருமையான புகழுரை...சார்...அவர்களுக்கு ஏற்றதே...சாதிக்கப் பிறந்தவர்தான். எந்த ஐயமும் இல்லை...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், நூலாசிரியரை வெகுவாகப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 19. தேன் சிந்திடும் பூக்களைப் படைத்த
  தேனம்மையின் சாதனைகளுக்கு
  தேனான புகழுரைகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 20. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 9:06 AM

  //தேன் சிந்திடும் பூக்களைப் படைத்த
  தேனம்மையின் சாதனைகளுக்கு
  தேனான புகழுரைகள்.. பாராட்டுக்கள்.. //

  வாங்கோ, வணக்கம். என் முதல் 750 பதிவுகளையும் தாண்டி தாங்கள் இன்றுவரை பின்னூட்டங்கள் அளித்து வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :) மிகவும் சந்தோஷம்.

  இருப்பினும் நடுவில் ஜூன் 2015 பதிவுகளில் 9ம்திருநாள் மற்றும் 11ம் திருநாள் முதல் 23ம் திருநாள் வரை ஆகியவற்றிலும் மேலும் ஏதோ ஒரு பதிவிலுமாக ஆகமொத்தம் ஒர் 15 பதிவுகளில் மட்டுமே தாமரைப்புஷ்பம் மலர்ந்து காட்சியளிக்காமல் உள்ளது என்பதை ஜஸ்ட் நினைவூட்டிக்கொள்கிறேன்.

  As on Date : 793 out of 793 ஆக்க நினைப்பது தங்கள் விருப்பம் போல .... மட்டுமே.

  இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 21. திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவரகளின் ‘பெண் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு நூலைப்பற்றிய திறனாய்வை படித்தேன். நீங்கள் தந்துள்ள நான்கு மலர்களைப்பற்றிய அவரது கவிதைகளின் மாதிரி துணுக்குகள் (Samples) அந்த கவிதை தொகுப்பை படிக்கத் தூண்டுகிறது. அவரது நூலை அறிமுகப்ப்டுத்க்டியமைக்கு நன்றி!

  பி.கு. சொந்த பணி காரணமாக சில நாட்கள் வலைப்பக்கத்திற்கு வரமுடியாத போனதால் தங்களது பதிவை காலம் கடந்து பார்க்கும்படியாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி November 6, 2015 at 12:33 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் ‘பெண் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு நூலைப்பற்றிய திறனாய்வை படித்தேன்.//

   திறனாய்வெல்லாம் இல்லவே இல்லை சார். ஏதோ எனக்குத் தெரிந்தவரை எழுதியுள்ள ஓர் மிகச்சிறிய புகழுரை மட்டுமே.

   //நீங்கள் தந்துள்ள நான்கு மலர்களைப்பற்றிய அவரது கவிதைகளின் மாதிரி துணுக்குகள் (Samples) அந்த கவிதை தொகுப்பை படிக்கத் தூண்டுகிறது.//

   அப்படியா ! மிக்க மகிழ்ச்சி, சார்.

   //அவரது நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   //பி.கு.: சொந்த பணி காரணமாக சில நாட்கள் வலைப்பக்கத்திற்கு வரமுடியாத போனதால் தங்களது பதிவை காலம் கடந்து பார்க்கும்படியாகிவிட்டது. //

   அதனால் பரவாயில்லை சார். இதெல்லாம் பதிவர்களாகிய நம் எல்லோருக்குமே மிகவும் சகஜம் தானே.

   நன்றியுடன் VGK

   நீக்கு
 22. நல்லதொரு நூல் அறிமுகம். தமிழகம் வரும்போது தான் வாங்க வேண்டும்.

  சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் November 6, 2015 at 6:45 PM

   வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

   //நல்லதொரு நூல் அறிமுகம்.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   //தமிழகம் வரும்போது தான் வாங்க வேண்டும்.
   சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் நூலாசிரியரை வாழ்த்திப் பாராட்டி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜி.

   நீக்கு
 23. அவசியம் வாங்கி படிக்கின்றேன் சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha M November 8, 2015 at 1:32 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அவசியம் வாங்கி படிக்கின்றேன் சார்..//

   தங்களின் அபூர்வ வருகைக்கும், நூலினை அவசியம் வாங்கிப் படிக்கிறேன் என்று கருத்துச் சொல்லி மகிழ்வித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
 24. அன்புடையீர்,

  அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

  நம் அன்புக்குரிய சகோதரி ஜெயா [திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்] உங்கள் அனைவரையும், தான் இன்று ’தீபாவளித் திருநாளில்’ வெளியிட்டுள்ளதோர் பதிவுக்கு அன்புடனும், ஆவலுடனும், ஆசையுடனும் ... விருந்துக்கு அழைத்திருக்கிறாள்.

  அது என்ன ஸ்பெஷல் விருந்து என தயவுசெய்து போய்த்தான் பாருங்கோளேன் .......... :)

  -=-=-=-=-=-=-

  இணைப்பு:
  http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

  தலைப்பு: பிறந்த வீட்டு சீதனம் ..... பகுதி-1

  -=-=-=-=-=-=-

  இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

  oooooooooooooooooooooooooooooooo

  பதிவுலக உறவுகள் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 25. தொடர்புள்ளதோர் பதிவு:

  தலைப்பு:

  திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் -
  தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

  இணைப்பு:

  http://honeylaksh.blogspot.in/2015/11/blog-post_4.html

  இது ‘சு ம் மா’ ஒரு தகவலுக்காக மட்டுமே :)

  பதிலளிநீக்கு