On 25th January, 2017
a Lecture Demonstration
on Ashtaavadaanam
by
Sri V.Mahalingam,
(Former AGM, UCO BANK - Retd.)
Time: 6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street,
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street,
பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை இதன் சென்ற பகுதியில் நாம் பார்த்தோம்.
பக்கம் எண்-6 [DIGITAL MEMORY DEMONSTRATION] பற்றி இப்போது நாம் பார்ப்போம்.
பக்கம் எண்-6 ஆன இதில் மொத்தம் 10 x 10 = 100 கட்டங்கள் போடப்பட்டுள்ளன.
இடது கை மார்ஜின் பக்கம் A, B, C, D, E, F, G, H, I, J என முதல் 10 ஆங்கில எழுத்துக்கள் ஒன்றன்கீழ் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு நான்கு ஸ்தான இலக்கம், எந்த ஒரு ஒழுங்கான முறைப்படியும் இல்லாமல், ஒரேயடியாக கலந்துகட்டியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்களில் ஒவ்வொருவராக கேட்க அஷ்டாவதானி, அந்தக் கட்டத்தில் உள்ள அதற்கான நம்பரை மிகச்சரியாக ஒரு கரும்பலகையில் எழுதிக்காட்டி அசத்துகிறார்.
உதாரணமாக ......
What is the Value written against G8 எனக்கேட்டால், G வரிசையில் 8-வது தலைப்பு எண்ணுக்குக்கீழேயுள்ள, நான்கு ஸ்தான எண்ணான 9467 என்பது அஷ்டாவதானி அவர்களால் அங்குள்ள கரும்பலகையில் உடனடியாக எழுதிக் காட்டப்படுகிறது.
இதுபோல அந்த, பக்கம் எண்-6 இல் உள்ள 100 நான்கு ஸ்தான எண்களையும் அவரால் மிகச் சுலபமாகச் சொல்ல முடிகிறது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.
இதுபோல அந்த, பக்கம் எண்-6 இல் உள்ள 100 நான்கு ஸ்தான எண்களையும் அவரால் மிகச் சுலபமாகச் சொல்ல முடிகிறது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.
இந்த இனிய நிகழ்ச்சியின் நிறைவாக
துக்ளக் + இந்தியா டுடே இதழ்களில்
Invitees are requested to bring each a pencil and pen and INDIA TODAY ENGLISH EDITION with Cover date 23 January 2017 and THUGLAK Tamil Magazine with Cover date 18 January 2017. This will help to understand and appreciate the skills of the ASHTAVADHANI
இதுபோன்றதொரு அறிவிப்பு அவர்களின் அழைப்பிதழிலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலானோர் மேற்படி இரு இதழ்களையும் தங்களுடன் கொண்டு வரவில்லை. அங்கிருந்த ஓரிரு பிரதிகளையே சர்குலேஷன் முறையில் பலரிடமும் வரிசையாகத் தரப்பட்டது.
அந்த இரண்டு இதழ்களிலும் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தின் எண்ணையும், ’இந்தியா டுடே’ அல்லது ’துக்ளக்’ என்பதையும் நாம் சொன்னால் போதும், அந்தப்பக்கத்தில் உள்ள முழுச்செய்திகளையும் சுருக்கமாக நமக்குச் சொல்லிவிடுகிறார் அந்த அஷ்டாவதானி.
செய்திகளோ, படங்களோ, விளம்பரங்கள் மட்டுமே உள்ள பக்கங்களோ, கேள்வி பதில் பகுதியோ, எதுவாக இருப்பினும் டாண் டாண் எனச் சொல்லி அசத்தி விடுகிறார்.
அந்த குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும், இந்தப்புறம் உள்ள முன் அட்டை முதல், அந்தப் பின்புறம் உள்ள கடைசி அட்டை வரை, அதன் பக்க நம்பர்களுடன் கரைத்துக்குடித்து மண்டையில் ஏற்றியுள்ளார் என்பது அறிய நமக்கு மிக மிக ஆச்சர்யமாகவே உள்ளது.
இவ்வாறு அடுத்த ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி முடிந்ததும், கடைசியாக ஒருசிலர், அவரால் எவ்வாறு இதுபோன்ற ஒரு தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடிந்தது என ஆர்வத்துடன் கேட்டார்கள்.
நம்பர் எண்ணிக்கைகளில் 1 to 9 and 0 ஆகிய 10 நம்பர்கள் + 26 ஆங்கில எழுத்துக்கள் + நம்பர் எண்ணிக்கைகளில் உள்ள ரோமன் லெட்டர்ஸ் போன்றவைகளை உபயோகித்து, தன் பாணியில் ஒருசில குறியீடுகளாக மாற்றிக்கொண்டு (உதாரணமாக Date of Birth of some of his Friends and Relatives, Car Registration Numbers of some of his friends போன்றவைகளை) மனதில் ஏற்றிக்கொள்வாராம். இதுபோல பழகிப்பழகி, தன் மூளையில் பலவற்றை அவர் ஓரு குறியீடாகவே (Just like Password) பதிந்து வைத்திருப்பதால், தன்னால் இவ்வாறு மேஜிக் செய்ய முடிகிறது என்று சொல்லி மகிழ்வித்தார்.
மொத்தத்தில் அன்றைய அந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது.
அஷ்டாவதானி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உங்கள் அனைவரின் பலத்த கரகோஷங்களுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
இந்த அஷ்டாவதானி திரு. V. மஹாலிங்கம் அவர்கள், சிலரால் அன்புடன் ‘மாலி’ என்றும், வேறு சிலரால் ‘மெளலி’ என்றும் அழைக்கப் பட்டு வருகிறார். எனக்கென்னவோ அதுபோல அவர்கள், அவரைச் செல்லப்பெயரில் அழைக்கும்போதெல்லாம் சமீபத்தில் எங்கள் வீட்டில் தயாரித்த ’மாகாளி’ ஊறுகாய் மட்டுமே நினைவுக்கு வருகிறது.
எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே ! :)
எல்லா அஷ்டாவதானிகளும், இதே போன்ற இவரின் இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்கள் என்று தயவுசெய்து நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான பாணியில் தங்களின் திறமைகளை நிரூபிப்பார்கள்.
ஏற்கனவே நான் பள்ளியில் படிக்கும் சிறிய பையனாக இருந்தபோது, வேறு ஒரு அஷ்டாவதானி அவர்களின் செய்முறையை நேரில் கண்டு வியந்துள்ள அனுபவமும் எனக்கு உள்ளது.
அதுபோல ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய வேறொரு அஷ்டாவதானி, வேறொரு முறையில் சாதனைகள் செய்து மகிழ்வித்திருந்தார்.
நேற்று கூட என் அன்புக்குரிய பதிவர் அண்ணா திரு. பட்டாபிராமன் அவர்கள் (’ராமரஸம்’ வலைத்தளப் பதிவர்) தனது பின்னூட்டத்தில் கொடுத்திருந்த You Tube Link .... https://youtu.be/FYwWC6F5NT4 மூலம் மேலும் ஒரு மிகச்சிறந்த நிபுணரின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றேன்.
என்னதான் நான் இவரைப்பற்றியும், இவரின் தனித்திறமைகள் பற்றியும், அபூர்வமான + அதிசயமான இவரின் நினைவாற்றல்கள் பற்றியும், என்னால் இயன்றவரை, என் சிற்றறிவுக்கு எட்டியவரை, என் எழுத்துக்களில் இங்கு வடிவமைத்து எடுத்துக் கூறியிருப்பினும், உங்களில் பலராலும் அதனை சரிவரப் புரிந்துகொண்டு, ரஸித்து மகிழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏனோ இல்லை.
இந்தத் தொடரின் பகுதி-1 க்கும் பகுதி-2 க்கும் கிடைத்துள்ள பின்னூட்ட எண்ணிக்கைகளின் வித்யாசத்தின் மூலம் இதனை என்னால் நன்கு, மிகச்சுலபமாக உணர முடிகிறது.
அதனால் இவரின் இதுபோன்ற நிகழ்ச்சிகளை, தாங்கள் அனைவருமே நேரில் சென்று கண்டு களிக்க வேண்டும். அப்போதுதான், அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு ரஸிக்கவும் முடியும்.
அடிக்கடி பல ஊர்களிலும், பல பள்ளிகளிலும், பல கல்லூரிகளிலும் இவரின் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்து வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அது சம்பந்தமாக ’THE HINDU’ போன்ற பிரபல செய்தித்தாள்களிலும், ’அன்றாட நிகழ்ச்சி நிரல்’ பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதாகவும் பிறர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.
இதற்கு நுழைவுக் கட்டணமோ அல்லது வேறு எந்த அன்பளிப்புச் செலவுகளோ ஏதும் நமக்குக் கிடையவே கிடையாது. ஆர்வமுள்ளவர் போய்க் கலந்துகொண்டு, அவரின் தனித்திறமைகளைக் கண்டு களித்து கைதட்டிப் பாராட்டினாலே போதும் ..... அவருக்கு உடனே மேலும் ஊக்கமும், உற்சாகமும், பேரெழுச்சியும் ஏற்பட்டு அவர் மிகவும் மனம் மகிழக் கூடும். நம்மையும் அவர் என்றும் மறக்காமல் தன் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளவும் கூடும்.
இதில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்தோ அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோ, தங்களின் பெயர்களை, இப்போதே பதிவு செய்து கொண்டால், அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் ஊர், நாள், இடம், நேரம் முதலியனவற்றை அவரே தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க ஏதுவாகும்.
அவரைத் தொடர்பு கொள்ள
விரும்புவோருக்காக ....
அஷ்டாவதானி
திரு. V. மஹாலிங்கம் அவர்கள்.
M.Com., L.L.B., C.A.I.I.B.,
Phone: 0431-2432340
Residing now at
Dhanraj Complex
B-6, First Floor
15, Veereswaram Main Road
Srirangam
Thiruchirappalli-620 006
எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே ! :)
gopu1949.blogspot.com/2012/12/blog-post_14.html
அடடா என்ன அழகு ..... !
அடையைத் தின்னு பழகு ..... !!
Total No. of Comments as on 29.01.2017 = 297
Total No. of Comments as on 29.01.2017 = 297
வெண்ணிலவைத் தொட்டு.....
முத்தமிட ஆசை .....
மிளகாய்ப்பொடி கொஞ்சம் .....
மீண்டும் உங்களை நான்
என் பதிவுகளில் சந்திக்கும் வரை
என் பதிவுகளில் சந்திக்கும் வரை
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)