என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

தாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' !




இவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளில், மிகச் சிறப்பாக பின்னூட்டங்கள் அளித்துவருபவரும், ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்தில் பெரும்பாலான திங்கட்கிழமைகளில் அடிக்கடி தோன்றி மறையும் ’சமையல் சக்ரவர்த்தி’யுமான இவரை நம் வலையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 

இன்று 12.11.2018 ”திங்க”க்கிழமைகூட - ’தித்திக்கும் லட்டு - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி’  என்ற தலைப்பில் மிகவும் அசத்தலான லட்டு போன்றதொரு பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு இதோ:    https://engalblog.blogspot.com/2018/11/blog-post_12.html 
  
இந்த நெல்லைத் தமிழன் என்கிற புனைப்பெயரினில் வலையுலகில் புகழ் பெற்றுள்ள திரு. முரளி N சேஷன் அவர்களுடன் எனக்கு கடந்த ஒருசில வருடங்களாக நல்ல பரிச்சயம் உண்டு. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் இதுவரை சந்தித்தது இல்லையே தவிர, தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், என் பதிவு + மற்றவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள், பின்னூட்டங்களுக்கு மறுமொழிகள் முதலியவற்றின் மூலம் தினமும் பலமணி நேரங்கள் தொடர்பில் இருந்து நெருங்கிப் பழகி, எங்களுக்குள் மிகவும் ஆச்சர்யமான நட்பினை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.  

நாளைய 13.11.2018 ஸ்ரீரங்கம் பெருமாளை தரிஸிக்க வேண்டி, இன்று 12.11.2018 திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் தங்கியுள்ள இவர் தன் மனைவியுடன் திடீரென்று என் இல்லத்திற்கு, இன்றே விஜயம் செய்து மகிழ்வித்தார். 

இரவு 9.05 மணிக்கு, ஸ்ரீரங்கத்திலிருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். ”இப்போது வந்து உங்களை, உங்கள் இல்லத்தில் சந்தித்தால் தங்களுக்கு ஏதும் தொந்தரவாக இருக்குமா?” என்று கேட்டார். 

”வாருங்கள் ஸ்வாமீ, அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை. விடிய விடிய விழித்துக் கொண்டுதான் இருப்பேன். விடியற்காலம் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் தூங்கவே ஆரம்பிப்பேன். பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது” என்ற உண்மையை உண்மையாக ஒத்துக்கொண்டு, அவரின் வருகைக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டேன். 

இரவு 9.30 மணி சுமாருக்கு, நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்) என் இல்லத்திற்கு எழுந்தருளினார்.  

என் இல்லத்திற்கு பேரன்புடன் வருகை தந்த உத்தம தம்பதியினர் எனக்கு மிகவும் பிடித்தமான, ஒஸத்தியான ஸ்பெஷல் மில்க் ஸ்வீட்ஸ்களை ஏராளமாகவும் தாராளமாக வாங்கி வந்ததுடன், அதனுடன் பழம் புஷ்பம் முதலியவற்றை வைத்து என்னையும் என் மனைவியை விழுந்து நமஸ்கரித்து சேவித்துக்கொண்டனர்.  இரவு 11 மணி வரை, நாங்கள் எங்களுக்குள் ஆசைதீர பேசி மகிழ்ந்தோம்.   பிறகு பிரியாவிடை பெற்றுச் சென்றனர். 

நம் வலையுலகில், நான் அவசியமாக சந்திக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்த மிக முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு வேளையில், ‘உடனே உதித்த உத்தமர்’ ஆக திடீரென வருகை தந்ததால் என்னால் அவர்களை, என் திட்டப்படி + என் வழக்கப்படி சரிவர கவனிக்க முடியாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது.  இருப்பினும் எப்படியோ ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல’  ஓரளவுக்கு ஏதோ சமாளித்து மரியாதை செய்து அனுப்பி வைக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. 

தன்னிடம் மிகத் தீவிரமான பக்தி கொண்ட பாகவதனான ’பிரகலாதன்’ என்ற சிறு குழந்தையைக் காக்க வேண்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு ’நரசிம்ஹ’ அவதாரம் எடுத்தார். தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியை ‘உடனே உதித்த உத்தமர்’ எனச் சொல்வதுண்டு. இதுபற்றிய மேலும் விபரங்கள் ‘காவேரிக் கரையிருக்கு! கரை மேலே ____________இருக்கு!!’ என்ற என் பதிவினில் உள்ளன. http://gopu1949.blogspot.com/2011/12/blog-post_28.html  

ஏற்கனவே பல்வேறு தொடர்புகளால் எங்களுக்குள் ஊடுறுவிப் போய் இருந்த மிக ஆழமான நட்பினாலும், பாசத்தினாலும் புதிய நபர் ஒருவரை முதன் முதலாக சந்திக்கிறோம் என்ற எண்ணமே எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படவில்லை.  எங்களின் சந்திப்பு மிகவும் இனிமையாகவும், மனது பூராவும் ஒரே மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தியாகவும் அமைந்தது.

இருவர் தரப்பிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், ’நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’யின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு புகைப்படங்கள் எதையும் நான் வெளியிடவில்லை. 

இருப்பினும் அவர் அன்புடன் என் வீட்டாரிடம் கொடுத்துச் சென்ற மிகச் சுவையான மற்றும் மிகத்தரமான  ஸ்வீட்ஸ் + பழங்களை மட்டும் இங்கு பதிவேற்ற விரும்புகிறேன்.  ஏனெனில் அவைகள் தின்று தீர்ந்து விட்டால் பிறகு அவற்றை மறந்துவிட வாய்ப்பு உண்டு அல்லவா! பதிவினில் காட்டிவிட்டால் அதன் சுவையை நான் மட்டுமல்ல நீங்களும் நினைத்து நினைத்து, என்றுமே மகிழலாம்தானே !!  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !!!


எத்தனையோ நேர நெருக்கடிகளுக்கு இடையில், தூய்மையான அன்புக்காக மட்டுமே, வெளியூரிலிருந்து திருச்சிக்கு தன் மனைவியுடன் வருகை தந்து, என்னை என் இல்லத்தில் சந்தித்துச் சென்ற அருமை நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமீ அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லைத்தமிழன் அவர்கள்
இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
44-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:

பகுதி-4 க்கான இணைப்பு:

பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html


பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:

பகுதி-5 க்கான இணைப்பு:

பகுதி-6 க்கான இணைப்பு:

பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 ......... 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6

42-ஆவது பதிவர் சந்திப்பு
ஹனிமூன் வந்துள்ள பதிவர்!

43-ஆவது பதிவர் சந்திப்பு
’விமர்சன வித்தகியின் வியப்பளிக்கும் விஜயம்’


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]







118 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. Angel November 13, 2018 at 2:36 AM

      Firsssssssssssssst :)

      YES..... YOU ARE ONLY ALWAYS 'FIRST & BEST' :)))))))

      நீக்கு
    2. தாங்க்யூ தாங்க்யூ :)அங்கே தேம்ஸ் கரையில் தொபுக்கடீர்னு சத்தம் கேட்டுதாம் :)

      நீக்கு
    3. https://goo.gl/images/gPqJL6

      கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுத்தள்ளும் பூனையாரைக் காண பயமாக உள்ளது.

      அந்த ‘அஞ்சு’ என்ற தங்கமான மங்கை திரும்பவும் இங்கு கருத்தளிக்க வராதது, நேக்கு ஒரே கவலையாகவும், சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும் உள்ளது. :(((((

      நீக்கு
  2. ஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ 1ச்ட்டூ இல்ல மீ 1ஸ்ட்டூ இல்ல... கோபு அண்ணன் முதல்ல இருந்து போஸ்ட் போடுங்கோ மீ 1ஸ்ட்டா வருவதற்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானி:) அதிரா November 13, 2018 at 2:41 AM

      //ஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ 1ச்ட்டூ இல்ல மீ 1ஸ்ட்டூ இல்ல... கோபு அண்ணன் முதல்ல இருந்து போஸ்ட் போடுங்கோ மீ 1ஸ்ட்டா வருவதற்கு:)//

      ஆசையே அலைபோலே ...........
      நாமெல்லாம் அதன்மேலே ......... :)

      நீக்கு
    2. https://goo.gl/images/AGFJbB

      பூனையார் ஓர் மொட்டை மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்துள்ளாரே! அது தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ள மரமா? அப்போ தேம்ஸில் குதித்து விடுவாரோ? அல்லது
      வழக்கம்போல, பயத்தில், மனசு மாறி, தரையில் இறங்கி ஓடி ஒளிந்துகொண்டு விடுவாரோ?

      மொட்டை மரத்தில் பூனை ஏறியதா? அல்லது பூனை ஏறியதால் மரம் மொட்டை ஆனதா? :)

      நீக்கு
  3. அகஸ்மாத்தா :) லட்டு போஸ்டுக்கு ரிப்லை வந்துதான்னு பாக்க போனா அங்கே சைடில் உங்கள் பதிவு :)
    இதோ அரைவ்ட் நான்(நாங்கள் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா லட்டு இப்போ எங்களிடம் மாட்டீஈஈ:)

      நீக்கு
    2. அடியேன் நித்திரை வராமல் தவித்த நேரத்தில், பத்திரை மாத்துத் தங்கமாக இருவர் என்னிடம் மாட்டீஈஈஈஈ :)))) மிக்க நன்றீங்கோ.

      நீக்கு
  4. என்னாதூஊஊ நெல்லைத் தமிழன் திருச்சிக்கோ வந்தார்ர் அவ்வ்வ்வ்வ்வ் ஜொள்ளவே இல்ல:).. பிரயாணத்தில் இருக்கிறேன் என்றார்:) இதுதான் விஷயமோ... இருப்பினும் மீ நம்ப மாட்டேன்ன்ன்ன் :).. ஆரைச் சந்திச்சாலும் ஆதாரத்தோடுதானே போஸ்ட் போடுவீங்க:) இதென்ன இம்முறை புயுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் ஆதாரம் :) ஸ்வீட்ஸ் படங்கள் போட்டிருக்காரே :)

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர் எங்கு போனாலும் என் கையைப் புடிச்சுக் கூட்டி வருவா, ஆனா வந்தபின்பு எடிர்க்:) கட்சிக்கே சப்போர்ட் பண்ணுவா கர்ர்ர்ர்ர்:)... நெல்லைத்தமிழனின் படம் போட்டால்தானே கரீட்டூ:).. சுவீட்ஸ் ஐ கோபு அண்ணனே கோபால் அண்ட் கோ வில வாங்கி வச்டிருக்கலாமென மீக்கு ஜந்தேகமாக் கிடக்கூஊஊஊ:)

      நீக்கு
    3. ஞானி:) அதிரா

      // இருப்பினும் மீ நம்ப மாட்டேன்ன்ன்ன் :).. ஆரைச் சந்திச்சாலும் ஆதாரத்தோடுதானே போஸ்ட் போடுவீங்க:) இதென்ன இம்முறை புயுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...//

      ஆதாரம் இல்லையம்மா ..... ஆறுதல் சொல்ல .....

      சோதனை மேல் சோதனை ... போதுமடா ஸ்வாமீ :)
      வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி !

      நீக்கு
  5. // பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது” என்ற உண்மையை உண்மையாக ஒத்துக்கொண்டு, //

    ஹாஹ்ஹா :) ஐ லைக் it
    இன்றைய பிரபல நடமாடும் என்சைக்ளோபீடியா /Wikipedia தல :) நெல்லைத்தமிழன் அவர்களின் விஜயம் உங்களை மட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே எனக்கு ஏனோ, நேற்று திங்கள் இரவு முழுவதும் பொட்டுத் தூக்கம் இல்லை. என் கம்ப்யூட்டரை நான் ஷட் டவுன் பண்ணிய நேரம் அதிகாலை 5.40 இருக்கும். அதன்பின் மட்டுமே தூங்கியுள்ளேன். இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :(

      இது 2014 ஜனவரி சிறுகதை விமர்சனப்போட்டி ஆரம்பம் முதல் அவ்வப்போது அன்றாடம் நடக்கும் நிகழ்வு மட்டுமே என்றாகி விட்டது.

      இனி இதனை என்னால் மாற்ற இயலுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.

      -=-=-=-=-

      மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்,
      எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
      அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
      கருமமே கண்ணாயினார்.

      (நீதி நெறி விளக்கம் ... 53-வது பாடல்)

      நீக்கு
    2. //இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :( //
      ரொம்ப தப்பு கோபு அண்ணா ..பகல் 12 வரை ,,,அப்போ காலை உணவும் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள் ..உடம்புக்கு கெட்டது ..தயவுசெய்து உடல் நலனுக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுங்க .

      நீக்கு
    3. Angel November 13, 2018 at 10:02 PM

      ** இன்றைய செவ்வாய்க்கிழமை காலைப்பொழுதை நான் காண முடியவில்லை. தூங்கி எழுந்தபோது நடுப்பகல் 12.05 மணி. :( **

      //ரொம்ப தப்பு கோபு அண்ணா .. பகல் 12 வரை ... அப்போ காலை உணவும் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள் ... உடம்புக்கு கெட்டது ... தயவுசெய்து உடல் நலனுக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுங்க.//

      தங்களின் அக்கறையுடன் கூடிய ஆலோசனைகளுக்கு நன்றி. பொதுவாக இப்போதெல்லாம் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்ட்ராங்க் காஃபி, பிறகு குளியல் முடித்ததும் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் காலை டிஃபன் + காஃபி, மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் மதிய உணவு, மாலை 6 மணி சுமாருக்கு ஒரு காஃபி, இரவு 11 மணி சுமாருக்கு இரவு டின்னராக மீண்டும் டிஃபன் + காஃபி. இப்படியாக வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.

      அன்று நெல்லைத் தமிழன் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய பிறகே, இரவு டின்னராக சுடச்சுட, மிகச் சுவையான தோசைகள் சாப்பிட்டேன். அப்போது மணி சுமார் 11.45 இருக்கும்.

      வந்தவர்கள் இரவு 8 மணிக்குள் தங்கள் டின்னரை முடித்துக்கொண்டுதான், என் இல்லத்திற்கே வந்தோம் எனச் சொல்லிவிட்டனர்.

      நீக்கு
    4. //11 மணிக்கு மேல் 12 மணிக்குள் காலை டிஃபன் + காஃபி, மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் மதிய உணவு, மாலை 6 மணி சுமாருக்கு ஒரு காஃபி, இரவு 11 மணி சுமாருக்கு இரவு டின்னராக மீண்டும் டிஃபன் + காஃபி.//

      அடடா.. இது என்ன அநியாயமாக இருக்கிறது கோபு சார்... தெரிந்திருந்தால் நான் வீட்டாரிடம் சொல்லி இதனை மாற்றச் சொல்லியிருப்பேனே (அப்புறம் உங்கள் 'அன்பான சுவாமிஜி', 'ஆபத்தான எதிரி'ஆகியிருப்பேன்)

      இரவு 7 மணிக்கு மேல், எந்தக் காரணம் கொண்டும் சாப்பிடாதீர்கள். அது உடல் நலத்துக்கு நல்லதல்ல. இரவின் கடைசி உணவு இனிப்பாக இருப்பது கூடவே கூடாது. இது பல்லுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் கேடு. இத்தனை நாள் பழக்கத்தை மாற்றிக்கொள்வது கடினம்தான்.

      சென்ற பத்து நாட்களில் மூன்று தடவைக்கு மேல் நான், 8 மணிக்குப் பிறகு உணவு சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் உங்கள் வீட்டில் இனிப்புகள் சாப்பிட்டேன். அதேபோல, 4 தடவைகளாவது 10 மணிக்குப் பிறகு வழக்கத்துக்கு மாறாகத் தூங்கியிருக்கிறேன்.

      நீக்கு
    5. https://www.youtube.com/watch?v=Mx5x5RhIob4

      பாலிருக்கும்.....
      பழமிருக்கும்.....
      பசி இருக்காது.....
      பஞ்சனையில்.....
      காற்று வரும்.....
      தூக்கம் வராது.....

      :)))))

      நீக்கு
    6. பஞ்சணையில் காற்று வரட்டும். ஆனால் இந்தப் பாட்டு 'தலைவனை' நினைத்து தலைவி பாடும் (அதுவும் திருட்டுத்தனமான சந்திப்பில்பாடும்) பாட்டல்லவோ. உங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

      இனிப்பிருக்கும்
      இசையிருக்கும்
      இன்பமிராது
      கனியிருக்கும்
      காற்றிருக்கும்
      கண் அயராது

      என்றல்லவா நீங்கள் பாடவேண்டும். பாடிப்பாருங்கள். சரியாக சந்தம் வருகின்றதா என்று.
      (இப்படிக்கு கண்ணதாசன் ஆவி)

      நீக்கு
    7. நீங்க எது வேணுமெண்டாலும் பேசுங்க ஆனா அதிராட கண்ணதாசன் அங்கிளை மட்டும் இழுக்கக்கூடா கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  6. ////
    இருவர் தரப்பிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், ’நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’யின் வேண்டுகோளுக்கு இணங்க ..........////

    கர்ர்ர்ர்ர்ர் இது அலாப்பி வெளாட்டூஊஉ:) கோபு அண்ணன் இப்போ அவருக்கு ஜாமம்:) படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே ஹா ஹா ஹா எப்பூடி என் ஐடியா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) இந்த பூனைக்குத்தான் எவ்ளோ அறிவு :)

      நீக்கு
    2. //கோபு அண்ணன் இப்போ அவருக்கு ஜாமம்:) படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே ஹா ஹா ஹா எப்பூடி என் ஐடியா:)//

      சூப்பர் ஐடியா ! இருப்பினும் எனக்கும் தோன்றிய ஐடியா மட்டுமேவாக்கும். :)

      நீக்கு
    3. //படத்தைப் போட்டுவிட்டு விடிய தூக்கி இருக்கலாமே // - பதிவு, பின்னூட்டங்களைப் படித்துவிட்டு ஒருவரைப் பற்றி நாம் கற்பனை செய்திருப்போம். அது நேரில் பார்க்கும்போது பெரும்பாலும் சரியாக இருக்காது. (உங்களுக்கு மட்டும் ஒரு உதாரணம் சொல்றேன். நான் முதல் முறையாக ஒருவரை-அவர் ஸ்ரீராம் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை- சந்தித்தபோது என் வயதை ஒத்த ஒருவரைச் சந்திப்பேன் என்று நினைத்தால், அவர் பொடிப்பையன், இளைஞன் போன்று இருந்தார். நல்லவேளை, பேச்சு, பழகியவிதம், உருவம் அவர் எழுதுவதைப் போலவே அழகாக இருந்தது) ஹாஹாஹா.

      என் படத்தைப் போட்டால், கற்பனைக்கு மாறான உண்மை தெரிந்துவிடும் என்பதால், கோபு சாருக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தேன்.

      நீக்கு
  7. /திடீரென வருகை தந்ததால் என்னால் அவர்களை, என் திட்டப்படி + என் வழக்கப்படி சரிவர கவனிக்க முடியாமல் போய் விட்டதில் //

    அந்த மொட்டைமாடி மலைக்கோயில் daytime வியூ அப்புறம் உங்க வீட்டருகில் கிடைக்கும் பஜ்ஜி :) இதை மிஸ் பண்ணிட்டார் ஆனாலும் மகிழ்வான சந்திப்பாக அமைந்துவிட்டதில் ஸந்தோஷம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த மொட்டைமாடி மலைக்கோயில் daytime வியூ அப்புறம் உங்க வீட்டருகில் கிடைக்கும் பஜ்ஜி :) இதை மிஸ் பண்ணிட்டார்//

      ஆமாம். இருப்பினும் லைட்டிங் போடப்பட்டிருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை எங்கள் கட்டட வாசலிலிருந்து காட்டி விட்டேன். பஜ்ஜிக்கடை வழக்கமாகப் போடப்படும் இடத்தை மட்டும் காட்டமுடிந்தது. பஜ்ஜிகளைக் காட்ட முடியவில்லை. அது போல கேட் சாத்தப்பட்டிருந்த ’ராமா கஃபே’+ ’ஹோட்டல் மதுரா’ ஆகியவற்றை இரவு 11.10 க்கு பார்த்ததும், ஸ்வாமீ ஒரு நிமிடம் அப்படியே கண் கலங்கி விட்டார்.

      //ஆனாலும் மகிழ்வான சந்திப்பாக அமைந்துவிட்டதில் ஸந்தோஷம்.//

      ஆம். வந்தவர்களுக்கும், எனக்கும் என் இல்லத்தார் அனைவருக்கும் சந்தோஷமே. :)

      நீக்கு
  8. ///இரவு 9.30 மணி சுமாருக்கு, நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்) என் இல்லத்திற்கு எழுந்தருளினார். ////

    நோஓஓ இதை நான் நம்ப மாட்டேன்ன்ன்ன்ன்ன் அவர் 9.30 க்கு மேல புளொக்குகளுக்குக் கூடப் போகமாட்டேன் என கற்பூரத்தில அடிச்சுச் சத்தியம் செய்திருக்கிறார்:) அப்படிப்பட்டவர் திருச்சிக்கு எப்பூடி?:)... ஹா ஹா ஹா யூப்பர் மாட்டீஈஈ:)... ஏன் கோபு அண்ணன் வழமையா பொன்னாடை போர்த்துதானே வரவேற்பீங்க... இம்முறை போர்க்கவில்லையோ?..

    அதிரா வந்தால் பிங் இல் வாங்கித் தாங்கோ:).. அஞ்சுவுக்கு ஆகாது பிறகு அலர்ஜி வந்திடும் புவஹாஆஅ புவஹாஆஅ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) எனக்கு பொன்னாடைலாம் வேணாம் ..கோபு அண்ணாவுக்கு தெரியும் எனக்கு விருப்பமானது என்னன்னு :) 2 கிலோ போதும் :) வச்சி வச்சி சாப்பிடுவேனாம்

      நீக்கு
    2. அதுக்குள்ள கொஞ்டம் குளூட்டன் பவுடர் போட்டு விடுங்கோ கோபு அண்ணன்:)

      நீக்கு
    3. //ஏன் கோபு அண்ணன் வழமையா பொன்னாடை போர்த்துதானே வரவேற்பீங்க... இம்முறை போர்க்கவில்லையோ?.. //

      பொன்னாடையைத் தேடி எடுத்து ரெடி செய்வதற்குள், பெருமாள் பேரெழுச்சியுடன் எனக்குள் உட்புகுந்து என்னைத் தடுத்தாட்கொண்டு விட்டாரே .... அன்பினால் என்னை அப்படியே கட்டிப்போட்டு விட்டாரே .... மேலும் அவரைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடலை லெக்கும் ஆடலையே .... நான் என்ன செய்ய? :)

      நீக்கு
    4. Angel November 13, 2018 at 3:02 AM

      ஹாஹா :) எனக்கு பொன்னாடைலாம் வேணாம் .. கோபு அண்ணாவுக்கு தெரியும் எனக்கு விருப்பமானது என்னன்னு :) 2 கிலோ போதும் :) வச்சி வச்சி சாப்பிடுவேனாம் //

      மறக்க மனம் கூடுதில்லையே ...
      http://gopu1949.blogspot.com/2017/06/2-of-8.html

      ooooOoooo
      இரண்டாம் இடத்தினைப்பிடித்துள்ள, ’கோல்ட் ஃபிஷ்’ அஞ்சுவுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டுள்ளபடி http://gopu1949.blogspot.in/2017/06/1-of-8.html சூடான சுவையான நேந்திரங்காய் சிப்ஸ் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ் சுவைத்து மகிழப்போகும் அஞ்சுவுக்கு நம் அன்பான நல்வாழ்த்துகள்.
      ooooOoooo

      தங்களுக்கும் எனக்கும் பிடித்த அதில் சுமார் 100 கிராம் அளவுக்கு மட்டும், நெல்லைத்தமிழன் தம்பதியினருக்கு ஆஃபர் செய்யப்பட்டது .... தங்களின் நினைவுடன்கூட.

      நீக்கு
    5. அதிரா - நான் முன்னமேயே சொல்லியிருந்தால் கோபு சார், என்னவெல்லாம் பண்ணணும், கேட்கணும்னு ஒரு லிஸ்ட் எழுதிவச்சிருந்திருப்பார். மறக்காது.

      ஆனால் நான் அவருக்கு அவகாசமே கொடுக்கலை. அரைமணி நேரத்துக்குள்ளாக அவர் வீட்டில் நுழைந்துவிட்டோம் (படங்கள் எல்லாம் முன்னமேயே இடுகைகளில் பகிர்ந்துகொண்டுள்ளதால், வீட்டுக்கு வழி சொல்லவேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார், ஆனால் எனக்கு அவர் வீடு எங்கு இருக்கும் என்பது பதிந்துபோயிருந்தது, காரிடார் முதற்கொண்டு)

      நீக்கு
  9. //// பிறகு எப்போது கண் விழிப்பேன் என்பது எனக்கே தெரியாது”///

    கொடுத்து வச்டிருக்கிறீங்க கோபு அண்ணன்... இதுதான் பின்யோக ஜாதகம் என்பினமே.. அதுவா இருக்குமோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுதான் பின்யோக ஜாதகம் என்பினமே.. அதுவா இருக்குமோ?:)//

      அதே அதே .... சபாபதே .... அதிரபதே .... அப்படியும் இருக்கலாம். :) தெரியவில்லை. எதற்கும் அனைத்தும் அறிந்த மஹா மஹா பண்டிதரான நெ.த. அவர்களையே கேட்போம். :)

      நீக்கு
  10. அஞ்சூஊஉ அடுத்து நீங்க போயிட்டு வாங்கோ அப்போதானே அடுத்த போஸ்ட் போடுவார் கோபு அண்ணன் ஹா ஹா ஹா:).

    அருமையான சந்திப்பு... நாமும் நேரில் வந்ததுபோல மகிழ்வாக இருக்கு , மிக்க மகிழ்ச்சி கோபு அண்ணன்... மொட்டை மாடிக்குக் கூட்டிப்போய் உச்சிப் பிள்ளையார் காட்டினனீங்களோ?.. இரவென்பதால நுளம்பு கடிச்சிருக்குமே:) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அநேகமா 50வது பதிவர் நானாக இருக்கலாம் நீங்க 45 வது இடத்தை எடுத்துக்கோங்க :)

      நீக்கு
    2. ஹா ஹா கர்ர்ர்ர்:).. நீங்கதானே என் செக்:) ச்ச்சோஒ முதல்ல நீங்கபோய்ப் பார்த்து ரோட் கிளியர் எனில்தான் மீ போவேனாக்கும்:).. ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. //மொட்டை மாடிக்குக் கூட்டிப்போய் உச்சிப் பிள்ளையார் காட்டினனீங்களோ?.. இரவென்பதால நுளம்பு கடிச்சிருக்குமே:) ஹா ஹா ஹா...//

      அங்கு போனால் நம்மை நுளம்பு கடிச்சிடும் என்று பயம் காட்டியே அவாய்ட் செய்துவிட்டேன். ஹா ஹா ஹா :) என்னிடமே..... வா.

      நீக்கு
  11. தலைப்பு தப்பூஊஊ கர்ர்ர்ர்:) தாயார் சகிதம் என்றதும்.. அவரின் அம்மாவுடன் வந்தார் என நினைச்சுட்டேன்:)... டமில்ல பொருட்பிழை விட்டால் நேக்குப் பிடிக்காதாக்கும் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி கோபு அண்ணன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /நம் பெருமாள் ஸ்வாமீ, தாயாருடன் (தனது தர்ம பத்தினியுடன்//
      கர்ர்ர் அவர்தான் க்ளியரா தர்மபத்தினியுடனு எழுதியிருக்காரே :) தமிழில் டீ குடித்த ஞானியே :)

      நீக்கு
    2. நோஓ கர்ர்ர்ர் :) தலைப்பைப் பாருங்கோ.... தலைப்பு டப்பூஊஊஊ:)

      நீக்கு
    3. ஞானி:) அதிரா November 13, 2018 at 3:06 AM
      //தலைப்பு தப்பூஊஊ கர்ர்ர்ர்:) தாயார் சகிதம் என்றதும்.. அவரின் அம்மாவுடன் வந்தார் என நினைச்சுட்டேன்:)... டமில்ல பொருட்பிழை விட்டால் நேக்குப் பிடிக்காதாக்கும் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி கோபு அண்ணன்:)..//

      தங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே! இருப்பினும், உண்மையான ’ஞானி’யாக இருந்தால் இந்த சந்தேகம் அதிராவுக்கு வந்திருக்கக்கூடாது.

      ஹிந்துக்களில், குறிப்பாக பிராமணர்களில், ஐயர் ஐயங்கார் என இரு மேஜர் பிரிவுகள் உண்டு. அவைகள் இரண்டிலும் கூட ஏராளமான உட்பிரிவுகள் உண்டு. அது இப்போது நமக்குத் தேவையில்லாத விஷயம்.

      ஐயர்கள் (நெற்றியில் விபூதி பட்டை இடுபவர்கள்) இறைவன் + இறைவியை, ’ஸ்வாமீ + அம்பாள்’ என்றோ அல்லது ஈஸ்வரன் + ஈஸ்வரி என்றோ தான் அழைப்பார்கள்.

      ஆனால் ஐயங்கார்கள், (நெற்றியில் நாமம் இடுபவர்கள்) அதே கடவுள் ஜோடியை ‘பெருமாள் + தாயார்’ என்றுதான் அழைப்பார்கள்.

      எனவே இங்கு தாயார் என்றால் பெருமாளான மஹாவிஷ்ணுவின் மனைவி என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ளணும்.

      அதாவது பக்த கோடிகள் அனைவருக்கும் அவள் தாயார் ...... ஆனால் பெருமாளுக்கு மட்டும், அவள் அவரின் பெட்டர் ஹாஃப்.

      இதைப்பற்றிய மேலும் விபரங்களை ‘நெல்லைத் தமிழன்’ ஸ்வாமி வருகை தந்து லட்டு மாதிரி புட்டுப் புட்டுத் தருவார், என நம்புவோம்.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
    4. //தங்கள் சந்தேகம் மிகவும் நியாயமானதே! //இருப்பினும், உண்மையான ’ஞானி’யாக இருந்தால் இந்த சந்தேகம் அதிராவுக்கு வந்திருக்கக்கூடாது. //

      HAAA :)) ஹாஹாஹா :) இனிமே பூனை ரெண்டு மூணு நாளுக்கு குல்ட்டுக்கு கீழேதான் :) ஒளிஞ்சி எட்டிப்பார்ப்பாங்க

      நீக்கு
    5. கோபு அண்ணா ..தாயார் சன்னதி என்று சொல்வதை (அது இறைவியை குறிக்கும் )வைச்சே நான் குழம்பாம அவர் மனைவின்னு புரிஞ்சுக்கிட்டேன் :) இந்த சிம்பிள் மேட்டர் ஞானிக்கு தெர்ல :)

      நீக்கு
    6. Angel November 13, 2018 at 3:44 AM

      //கோபு அண்ணா .. தாயார் சன்னதி என்று சொல்வதை (அது இறைவியை குறிக்கும்) வைச்சே நான் குழம்பாம அவர் மனைவின்னு புரிஞ்சுக்கிட்டேன் :)//

      உங்கள் அறிவென்ன, அழகென்ன, குணமென்ன, மணமென்ன ..... மஹா மஹா புத்திசாலி ஆச்சே ! :)

      நீக்கு
    7. //மேலும் விபரங்களை ‘நெல்லைத் தமிழன்’ ஸ்வாமி வருகை தந்து லட்டு மாதிரி புட்டுப் புட்டுத்// - பெரியோர்கள் சொன்னா அந்தப் பெருமாளே சொன்ன மாதிரி. நீங்க விளக்கினதுக்கு அப்புறம் நான் என்ன சொல்ல?

      'மீக்கு டமில் டி அல்லோ' என்று சொல்பவர்கள் மட்டும், அந்த சர்டிபிகேட்டைப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார்களா இதுவரை? ஏன் நீங்கள் இதை அவரிடம் கேட்கக்கூடாது?

      நீக்கு
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெதமிழன்:)....

      கோபு அண்ணன் பொறுத்தது போதும் பொயிங்குங்கோவன்:)... நெ தமிழன் தன் கை விரல் நகம்கூடக் காட்ட மாட்டாராம் ஆனா அதிராட சேட்டிபிகேட் வரை காட்டோணுமாம்;) இப்பூடியெல்லாம் ஜொன்னா உடனே போட்டோ வை புளொக்கில போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை என நெ தமிழன் சுனாமியை:) ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே:) சுவாமியை( உங்கட முறையில) மிரட்டி வையுங்கோ ஜொள்ளிட்டேன் :)

      நீக்கு
    9. //கோபு அண்ணன் பொறுத்தது போதும் பொயிங்குங்கோவன்:)... நெ தமிழன் தன் கை விரல் நகம்கூடக் காட்ட மாட்டாராம் ஆனா அதிராட சேட்டிபிகேட் வரை காட்டோணுமாம்;) //

      நான் உங்களுக்குக் கொடுத்துள்ள மிக அருமையானதொரு சர்டிஃபிகேட்டை மறந்தே பூட்டார் போலிருக்குது.

      Ref: Comment Box of http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html
      reproduced as under: >>>>>

      நீக்கு
    10. வை.கோபாலகிருஷ்ணன்June 15, 2017 at 2:57 PM

      V.GOPALAKRISHNAN,
      M.A., B.Com., PGD PM&IR etc., etc.,

      [Retired Accounts Officer/Cash,
      BHEL., Tiruchirappalli]

      பிரபல பத்திரிகை எழுத்தாளர் + பதிவர்
      etc., etc., etc.,

      சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

      CERTIFICATE
      =============

      அதிரா என்ற பெயருடைய இந்த அம்மா .... ஸாரி .... இந்தப்பொண்ணு மிகவும் நல்லவங்க.

      சூதுவாது ஏதும் தெரியாத மிகவும் வெகுளிப்பொண்ணு எனவும் நாம் வைத்துக் கொள்ளலாம்.

      உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாதவங்க.

      மஹா மஹா கெட்டிக்காரி.

      தன்னைத்தானே தற்புகழ்ச்சி ஏதும் செய்துகொள்ள இவர்களுக்குப் பிடிப்பதே இல்லை.

      மிகவும் ‘ஷை’ டைப்பு.

      கடந்த 48 வருடங்களாக தன்னைத் தானே ’ஸ்வீட் 16’ வயது உடையவள் மட்டுமே எனச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

      பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசுப் பேத்தி நான் எனப்பேத்திக்கொண்டு இருப்பார்கள் என நினைக்கக் கூடாது. அது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.

      அமெரிக்க அதிபரின் அந்தரங்க ஆலோசகர் நான் எனவும் அவ்வப்போது அள்ளித் தெளிப்பதுண்டு.

      ”அமெரிக்க அதிபருடன் அந்தரங்க ஆலோசனைகளுக்காகவும், ஒரு சில ஆராய்ச்சிகளுக்காகவும் அண்டார்டிக்கா போகப் போறேன், என்னை இனி யாரும் தேட வேண்டாம்” எனவும் சொல்லுவார்கள்.

      கோபம் வரும்போதெல்லாம் அடிக்கடி ”தீக்குளிக்கப் போகிறேன், தேம்ஸில் குதிக்கப்போகிறேன், புளிய மரத்தின் உச்சிக்கு ஏறப்போகிறேன், கட்டிலுக்குக் கீழேயுள்ள பதுங்குக்குழியில் ஒளியப்போகிறேன்” என்றெல்லாம் சபதம் செய்வார்கள்.

      ஆனால் பிறகு அது போலெல்லாம் செய்ய மனசு வராமலும், துணிச்சல் இல்லாமலும், மறந்துபோனதுபோல பேசாமலேயே இருந்து விடுவார்கள். :)

      அதனால் அதையெல்லாம் நாம் பெரிசாக எடுத்துக்கொண்டு பயப்பட வேண்டியது இல்லை.

      நான் துப்புத்துலக்கிய வகையில், இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்சமயம் லண்டனில் வசித்து வருவதாகவும், இவரின் கணவர் ஒரு டாக்டர் என்றும், இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பொறுப்பான பணியில் [ஆயா வேலையோ என்னவோ:)] இருப்பதாகவும், இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அறிகிறேன்.

      அதன் பிறகு, சமீபத்தில் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததாகக் கேள்விப்பட்டு நானே ஒரு பதிவினில் மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு:

      https://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      இவர்களின் தமிழ்ப்புலமை உலகறிந்த (வலையுலகம் அறிந்த) உண்மையாகும்.

      ‘டீ’ குடிப்பதை ‘ரீ’ குடிப்பது எனச் சொல்லுவார்கள். அதுபோல ‘ல’ ’ள’ ‘ழ’ போன்றவற்றை புதுமாதிரியாக எழுதி உச்சரிப்பார்கள்.

      இவர்களால் நான் படித்த தமிழே எனக்கு சுத்தமாக மறந்து போய் விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

      மோகன்ஜியாகிய தங்களுக்கு இப்போது இந்த அதிரா ரசிகையாக விரும்புவதால், தாங்கள் கேட்டுக்கொண்ட படியும், அதிரா கேட்டுக்கொண்டபடியும் இந்த சர்டிஃபிகேட் என்னால் இப்போது இங்கு வழங்கப்பட்டுள்ளது.

      E. & O.E.,

      [அதாவது இதில் Errors & Omissions Expected.]

      இப்படிக்கு அன்புடன்
      வை. கோபாலகிருஷ்ணன் [கோபு]

      நீக்கு
  12. ////நம் வலையுலகில், நான் அவசியமாக சந்திக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்திருந்த மிக முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.////

    மற்றாக்கள் ஆரெனச் சொல்லவே இல்ல:)... சரி வாணாம் விடுங்கோ:) நிட்சயம் அஞ்சுவாக இருக்காது ஹா ஹா ஹா:)..

    அவர் செய்த லட்டு எடுத்துவர மறந்திட்டாரே அவ்வ்வ்வ்வ்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றாக்கள் ஆரெனச் சொல்லவே இல்ல:)... சரி வாணாம் விடுங்கோ:) நிட்சயம் அஞ்சுவாக இருக்காது ஹா ஹா ஹா:)..//

      ஆஹா ... பத்த வெச்சுட்டயே பரட்டே .... :)

      அஞ்சுவாக இருக்குமா இருக்காதா என நம் அஞ்சுவுக்கே தெரியுமாக்கும்.

      //அவர் செய்த லட்டு எடுத்துவர மறந்திட்டாரே அவ்வ்வ்வ்வ்:)..//

      அப்போ அவர் செய்ததாக சும்மா கதை விட்டிருப்பார் என்றா சொல்றீங்கோ?

      ஆனால், நான் பார்த்தவரை அவர் மிகவும் நல்ல மனுஷ்யருங்கோ. பொய்யே சொல்ல மாட்டாராக்கும்.
      நான் சொல்லும் இதுவும் பொய் இல்லை. நம்புங்கோ. :)

      நீக்கு
  13. மொபைல்லதான் கொமெண்ட்ஸ் போடுகிறேன் அதனால படங்கள் பெரிதாக பார்க்க முடியல்ல.... இருப்பினும் கோபு அண்ணனைப் பார்க்கப் போகும்போது “குண்டா” சுவீட்ஸ் வாங்கிப் போனமைக்கு என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு ஹா ஹா ஹா வழி விடுங்கோ வழி விடுங்கோ ... மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. HAIYO HAIYO :))))))) HAAHAAA )

      குண்டா இருக்கறவங்களுக்கு தான் குண்டானு கண்ணுக்கு பட்டிருக்கு :) BECAUSE நானா அதை கண்டா னு இல்லியா படிச்சேன்

      நீக்கு
    2. இதுக்குத்தான் நைட்டில வரும்போது கண்ணாடி போட்டு வாங்கோ எனச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்:) சொல் பேச்சுக் கேட்கிறேல்லை:)..

      நீக்கு
    3. // இருப்பினும் கோபு அண்ணனைப் பார்க்கப் போகும்போது “குண்டா” சுவீட்ஸ் வாங்கிப் போனமைக்கு என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு ஹா ஹா ஹா வழி விடுங்கோ வழி விடுங்கோ ... மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:)...//

      அஞ்சுவின் http://kaagidhapookal.blogspot.in/2013/02/blog-post.html அழைப்பினை ஏற்று ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பில் ஓர் தொடர்பதிவினைச் சிறு தொடராகவே என் வலைத்தளத்தினில் எழுதியிருந்தேன்.

      அதில் இரண்டாம் பகுதியில் http://gopu1949.blogspot.com/2013/03/2.html இந்த குண்டா என்ற ஸ்வீட் பற்றியும் அதன் மேல் எனக்குள்ள காதல் பற்றியும் எழுதியுள்ளேன். அஞ்சுவும் நீங்களும் அதில் அஞ்சாமல் பல கமெண்ட்ஸ் கொடுத்துள்ளீர்கள்.

      ஒருவேளை அந்தப் பதிவினைப் பார்த்து படித்துவிட்டு நெல்லைத் தமிழன் அவர்கள் “குண்டா” ஸ்வீட்ஸ் எனக்காக வாங்கி வந்திருக்கலாம். மற்றபடி ”குண்டா” ஸ்வீட்ஸ் வாங்கி வந்தவரும், பெற்றுக்கொண்டவரும் குண்டான ஆட்கள் என்ற தவறான முடிவுக்கு தயவுசெய்து வர வேண்டாம்.

      நாங்கள் இருவரும் படு ஸ்லிம்மான ஆசாமிகள் மட்டுமே என்பதையும், அஞ்சு அடிக்கடி சொல்லும் ’குண்டு பூனை’யாரின் கவனத்திற்கு இங்கு நான் கொண்டுவந்து தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். :))))))

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! மீ...டூ எஸ்கேப் !!

      நீக்கு
    4. //என் வன்மையான கண்டனங்கள் நெ தமிழனுக்கு// - அதிரா... நான் உங்கள் கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.

      இனிப்பு என்பது உடலுக்கு மிகப்பெரிய எதிரி. அதிலும் நெய்/எண்ணெய் சேர்த்தவைகள்.

      நான் பெங்களூரில் இருக்கும்போது அவரிடம் வாட்சப்பில் படங்கள் அனுப்பி, வாங்கலாமா என்று கேட்டேன். அவர் 'குந்தா' பால்கோவாவின்மீது மிகவும் விருப்பமாக இருந்தார்.

      இதனால் நான் நிச்சயம் அவருடைய குடும்ப மருத்துவரின் கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பேன். அவருடைய துணைவியாரும் சொல்லவில்லை என்றாலும் மனதுக்குள் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று நினைத்திருப்பார். ஹாஹாஹா.

      (அதனால் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஸ்ஸ்வீவீட்ட்டுடன் வரமாட்டேன். ஒன்லி குழை சாதம்தான். ஹாஹா)

      நீக்கு
    5. அல்லோஓஒ நெ தமிழன் சுனாமி ஹையோ சே சே மன்னிச்சுக்கோங்க ஸ்வாமி( கோ அ மு) அவர் கேட்டது “குந்தா” நீங்க குடுத்திருப்பது குண்டாஆஆஆஅ நொட் குந்தா:) மீக்கு டமில்ல டி என்பதை இப்பவாவது நம்போணும் ஜொள்ளிட்டேம்ன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  14. ஓகே கோபு அண்ணா ,டைம் இன் சென்னை அதிகாலை 3 என சொல்லுது ..நீங்க TIME KU உறங்க செல்லவும் .மகிழ்வான மன நிறைவான சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

    /

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளித்து விட்டு பின் உறங்க முயற்சிக்கலாம் என நினைத்துள்ளேன். :)

      நீக்கு
    2. அஞ்டூஊஉ குறுக்க நிண்டு வழியை மறைக்காதீங்கோ.. அவர் அதிராவுக்கு என்னமோ ஜொல்ல வாறார் பிறகு மறந்திடப்போறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      நீக்கு
    3. சீக்கிரம் சொல்லுங்க :) நானும் ஆவலா இருக்கேன் என்ன சொல்லப்போறீங்க :)

      நீக்கு
  15. சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. பின்னூட்டங்களிலேயே உங்களை மறுபடி பதிவிட வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்துக்கொண்டிருந்த நெல்லைத்தமிழர் நேரில் பார்த்தபோது இதே வேண்டுகோளை மறுபடி வைத்திருந்திருப்பார். இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்த நீங்களும் மகிழ்வில் பதிவிடாமல் இருந்திருக்க மாட்டீர்கள். ராமாஞ்சனேய சந்திப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //ராமாஞ்சனேய சந்திப்பு//

      மிகவும் அழகிய + வெகு பொருத்தமான சொல்லாடல். இதில் யார் ராமர், யார் ஆஞ்சநேயர் என இருவருமே அறியாத, புரியாத வண்ணம் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்துகொள்ளத் துடித்தோம் என்பதே உண்மை.

      சுற்றிலும் நிறைய சீதாப்பிராட்டிகளாக நின்றுகொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்ததால், கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொள்ளாமல் எங்களை நாங்களே மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டோம். :)

      நீக்கு
    2. ஸ்ரீராம்... கோபுசாருக்கு அவகாசமே கொடுக்காமல், சட் என்று அரை மணி அவகாசத்தில் அவரைச் சந்தித்தேன். ஒருவேளை முன்பே சொல்லியிருந்தால் அவர் என்னை 'மதுரா உணவகம்' அல்லது 'ரமா கஃபே' போன்றவற்றிர்க்கு அழைத்துச் சென்றிருப்பார் (அனேகமா மதுரா லஞ்ச் எங்களுக்குக் கிடைத்திருக்கலாம்). இதைத் தவிர இன்னும் இரு புத்தகங்களும் கொடுத்திருப்பார்.

      இவற்றைவிட அவரிடம் (அவர் வீட்டிலுள்ளவர்களிடமும்) நிறைவாக நாங்கள் பேசிக்கொண்டிருந்ததே எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.

      நீக்கு
  17. புத்தகங்கள் எதுவும் அவருக்குக் கொடுக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் வழக்கபடி ஞாபகமாக (ஞாபகார்த்தமாக) தரப்பட்டு விட்டது. அதில் என் கையொப்பம் இருக்கா, தன் பெயர் எழுதப்பட்டுள்ளதா, தேதி போடப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் சரி பார்த்த பிறகே தன் பையில் வைத்துக்கொண்டார். நம்மாளு மிகவும் விபரமான ஆசாமி ! :)

      நீக்கு
  18. நெல்லைத்தமிழர் மிகவும் ஆழமான மனிதர் என்று புரிந்து வைத்துள்ளேன். எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர் என்பதும் அவர் பல்வேறு தளங்களிலும் இடும் பின்னூட்டங்களிலிருந்து அறிந்தும் வைத்துள்ளேன். நிறைகுடம் தளும்பாது என்பது போல அதை வெளிக்காட்ட மாட்டார். யாரையும் புண்படுத்தாத தமிழுக்குச் சொந்தக்காரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எண்ணிக் கொண்டிருக்கும்படியே மிகச்சரியான கணிப்பு ஸ்ரீராம்ஜி.

      நீக்கு
    2. //ஸ்ரீராம். November 13, 2018 at 6:52 AM
      நெல்லைத்தமிழர் மிகவும் ஆழமான மனிதர் என்று புரிந்து வைத்துள்ளேன். எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர் என்பதும் அவர் பல்வேறு தளங்களிலும் இடும் பின்னூட்டங்களிலிருந்து அறிந்தும் வைத்துள்ளேன். நிறைகுடம் தளும்பாது என்பது போல அதை வெளிக்காட்ட மாட்டார். யாரையும் புண்படுத்தாத தமிழுக்குச் சொந்தக்காரர்.//

      தாங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை. மிகப்பெரிய நிறைகுடமே தான். :)

      இவரை நான் நேரில் சந்திப்பதற்கு முன்பே இவருக்கு நான் 90% மார்க் கொடுத்து வைத்திருந்தேன். சந்தித்தபின் 100 க்கு 100 மார்க், செண்டம் கொடுத்து விட்டேன். :))

      நீக்கு
    3. ஸ்ரீராம், கில்லர்ஜி, கோபு சார் - ஓவர் பில்டப் என் உடம்புக்கு ஆகாது. எதிலும் எனக்கு முழுமையான திறமை கிடையவே கிடையாது. என்னைப்போய்....

      காரணம் புரிகிறது... இப்படி எல்லாம் சொல்லிவிட்டால், வேறு வழியில்லாமல், 'நல்லவன்' முகமூடியை அணிந்துகொள்ளாமல் உங்களை எல்லாம் என்னால் சந்திக்கமுடியாது என்ற நிலையை உண்டாக்கிவிடுகிறீர்களே....

      நீக்கு
  19. திரு நெல்லைத்தமிழன் அவர்களை வலையுலகினர் அறிவோம். அவருடனான உங்களுடைய சந்திப்பு மகிழ்வினைத் தருகிறது. நீங்கள் அதனைப் பகிர்ந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் முனைவர் ஐயா அவர்களே, வணக்கம்.

      தங்கள் வாயால் ‘பகிர்ந்தவிதம் அருமை’ என்ற பாராட்டுப் பெற்றது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  20. அன்பினில் திளைத்திருக்கும்
    நெஞ்சங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க
    ஸ்ரீவில்லி பால்கோவா சாப்பிட்ட சந்தோஷம்...

    மேன்மக்கள் மேன்மக்களே!.. என்பது மீண்டும் நிரூபணம்...

    தங்களது சந்திப்பினைப் பதிவில் தந்து
    எங்களையும் சந்தோஷப்படுத்தி விட்டீர்கள்...

    அந்த சந்தோஷமே
    சந்தனத் தென்றலாக
    எங்கெங்கும் வீசட்டும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ பிரதர். வணக்கம்.

      ஆஹா, ஸ்ரீவில்லி[யின் :)] பால்கோவா ... மேன்மக்கள் ... சந்தோஷம் ... சந்தனத் தென்றல் என ஏராளமாகவும், தாராளமாகவும் பாராட்டி அசத்திவிட்டீர்கள், பிரதர். மிக்க நன்றி.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா - ம்ம்ம்... அந்தச் சுவை காணாமல் போய், பலப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே...

      தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல், இலுப்புச் சட்டி வைத்திருக்கிறவன், பால்கோவா தயாரிப்பாளன் என்று மாறி, எல்லாக் கடைகளிலும் 'ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா' என்ற பெயரில் பாக்கெட்டுகளில், 'நெல்லை இருட்டுக்கடை அல்வா' போல் சீரழிய ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதே...

      நீக்கு
  21. தித்திக்கும் சந்திப்பு...

    நெ.த. அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  22. நெல்லைத்தமிழர் வருகையால் பதிவு.
    அருமையான இனிமையான சந்திப்பு.
    என்னதான் போனில் பேசினாலும் நேரில் சந்திந்து உரையாடுவது மகிழ்ச்சியான தருணம் தான்.

    இனிப்புகள் அன்பான சந்திப்பை தித்திப்பாய் நினைவூட்டும் நீங்கள் சொன்னது போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிமையான இதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  23. ஹை நெல்லையுடனான சந்திப்பா...ஆஹா!!

    நல்ல பல கருத்துகளை ஆழமான கருத்துகளை முன்வைப்பவர். பல தகவல்கள் அறிந்தவர். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பார். தனது அறிவை வெளிக்காட்டாதவர். பல கலைகளில் விற்பன்னர். எழுத்து, சமையல், நன்றாக வரைபவர்...நல்ல அறிவு என்று பல சொல்லலாம்...நம் எல்லோருக்கும் நல்ல நண்பர்!

    மிக்க மகிழ்ச்சி தங்களின் சந்திப்பு...மகிழ்ச்ச்யான இனிய தருணங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மேடம், வணக்கம். பல கலைகளில் விற்பன்னர் என நெல்லைத் தமிழனைப்பற்றி மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதே.... அதே.... மிக்க நன்றி.

      நீக்கு
  24. ஏஅன்புள்ள கோபு சார்...

    இன்னும் இரண்டு நாட்கள் பயணத்தில். அதனால் விரிவான மறுமொழி/பின்னூட்டத்தைப் பின்பு தருகிறேன்.

    நான் மூன்று சந்திப்புகளில் உணர்ந்தது, துளசி டீச்சர் (துளசிதளம்) எழுதும், பதிவர் சந்திப்பு என்பது முதல் முறை நேரில் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர்களைப்போல் பேச முடிவது. அதனால் சந்திக்கும் பதிவரின் அனைத்து உறவுகளும் நமக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றியது.

    நான் இதனைப் பற்றி இருநாட்களில் எழுதுகிறேன்.

    உங்கள், மற்றும் வீட்டினரின் அன்பு இயல்பானது. நன்றி சொல்வது உணர்வுகளைச் சரியாக ரெப்ரசன்ட் செய்யாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் November 13, 2018 at 3:30 PM

      //அன்புள்ள கோபு சார்...//

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இன்னும் இரண்டு நாட்கள் பயணத்தில்.//

      தெரியும். பயணத்தில் உள்ள போட்டோ படத்தைப் பார்த்தேன். அரை டிராயருடன் அட்டகாசமாக உள்ளீர்கள், ஸ்வாமீ. அந்த டீ ஷர்ட்டும் சூப்பர். குளிரூட்டப்பட்ட + அடுத்தடுத்து மிக நெருக்கமாக போடப்பட்டுள்ள டபுள் படுக்கையுடன் கூடிய [அதுவும் பட்ட பகலில் :)) ], சூப்பர் டீலக்ஸ் பஸ்ஸில் சொகுசுப்பயணம் செய்து கொண்டுள்ளீர்கள். பெருமூச்சு விட்டுக்கொண்டேன் ..... நான் இவ்வாறு சுகபோகமாகப் பயணித்தபோதெல்லாம் என்னை யாரும் இப்படிப் போட்டோ பிடிக்கவில்லையே என. :)))))

      >>>>> தொடரும் >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //அதனால் விரிவான மறுமொழி/பின்னூட்டத்தைப் பின்பு தருகிறேன்.//

      ஆஹா .... சந்தோஷம். அதற்கு இப்போ என்ன அவசரம்?

      //நான் மூன்று சந்திப்புகளில் உணர்ந்தது, துளசி டீச்சர் (துளசிதளம்) எழுதும், பதிவர் சந்திப்பு என்பது முதல் முறை நேரில் சந்தித்தாலும், நெடுநாள் பழகியவர்களைப்போல் பேச முடிவது. அதனால் சந்திக்கும் பதிவரின் அனைத்து உறவுகளும் நமக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்ற எண்ணம்தான் தோன்றியது.//

      நீங்களும் கூட (துளசி தளம்) துளசி டீச்சரை சந்தித்துள்ளீர்களா ! சபாஷ். நான் அவரை 07.02.2016 அன்று சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது (நான் நேரில் சந்தித்த பதிவர் எண்: 40). அதைப்பற்றி என் பதிவு ஒன்றில் சுட்டிக் காட்டியும் உள்ளேன். இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.com/2016/03/6.html

      //நான் இதனைப் பற்றி இருநாட்களில் எழுதுகிறேன்.//

      வெரி குட். இந்தியா மட்டுமல்லாது UK (லண்டன்) போன்ற அனைத்து வெளிநாட்டினரும் தங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

      //உங்கள், மற்றும் வீட்டினரின் அன்பு இயல்பானது.//

      நாங்கள் (நானும் என் வீட்டினரும்) எல்லோருமே மிக மிகச் சாதாரணமானவர்கள் மட்டுமே. அதனால் எங்களின் அணுகுமுறையும் அன்பும் இயல்பாக மட்டுமே இருக்கக்கூடும். வெளிவேஷம் போடத்தெரியாத அப்பாவிகளாக்கும்.

      //நன்றி சொல்வது உணர்வுகளைச் சரியாக ரெப்ரசன்ட் செய்யாது.//

      ஆம். உள்ளத்தின் ஆழத்தில் நன்கு பதிந்து போய் உள்ளவர்களின் நட்பு உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாதுதான். இதனை நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. @கோபு சார் - இந்த முறை தமிழக பாரம்பர்ய உடையில் உங்களை நாங்கள் சந்தித்தோம். கீசா மேடம், அவர் கணவரை நாங்கள், எங்கள் குலப் பாரம்பர்ய உடையில் சந்தித்தோம். (எனக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது. விசுவரூப தரிசனம் முடிந்ததும் கோவிலிலிருந்து நேராக அவர் வீட்டிற்குச் சென்றதால் உடை மாற்றவும் நேரம் இல்லை).

      ஆனால், பிறகு நினைக்கும்போது பொருத்தமான உடையில்தான் சென்றிருக்கிறோம் என்று தோன்றியது.

      இருந்தாலும் நான் அணியும் உடை என்னவென்று உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதால் அந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

      பலவும் கலந்ததுதானே வாழ்க்கை....ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. //நீங்களும் கூட (துளசி தளம்) துளசி டீச்சரை சந்தித்துள்ளீர்களா// - இல்லை. பதிவர்களில் நான் சந்தித்த இரண்டாவது நபர் நீங்கள்தான்.

      ஆனால் நிறையபேரின் பதிவுகளைப் படித்ததனால் அவர்கள் எல்லோரும் எனக்கு அந்நியமாக உணர்வதில்லை.

      நீக்கு
    5. //பதிவர்களில் நான் சந்தித்த இரண்டாவது நபர் நீங்கள்தான்.//

      அடடா, தாங்கள் நேரில் சந்தித்த அந்த முதலாம் நபர் யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டீர்களே! இது விஷயம் தெரியாமல் எங்களுக்கெல்லாம் (குறிப்பாக எனக்கும் அதிராவுக்கும்) தலை வெடித்து விடும் போலிருக்குதே!! :))

      நீக்கு
  25. உங்களையும் நெடுநாட்களாகப் பார்க்கவில்லை. பார்க்கணும் என்று நினைத்தேன். உங்களின் பதிவு என்று பார்த்ததும் மனதாலே ஓடிவந்தேன். நெல்லைத் தமிழருடன் ஸந்திப்பு என்றவுடன் அப்படியே அவரையும் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன். உணர்ச்சியில் கண்ணீர் வடிந்தது. நல்ல மனிதர். நான் என்னுடைய பிள்ளை உறவில் அவரை வைத்துள்ளேன். உங்களின் மருமான் உறவும்அதற்குக் குறைந்ததில்லை. யாவருக்கும் ஆசீர்வாதங்கள். அன்புடன் காமாட்சிமாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      தங்களின் அன்பான வருகையும், உறவு முறை கொடுத்து தாங்கள் எங்கள் மீது காட்டிவரும் பாசமும், ஆசீர்வாதங்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிக்கின்றன. மிக்க நன்றி + சந்தோஷம்,
      மாமி.

      நீக்கு
    2. காமாட்சி அம்மா, உங்கள் பின்னூட்டத்தின் மூலம் என்னை உணர்ச்சிவசப்படச் செய்கிறீர்கள்.

      உங்களின் ஆசீர்வாதத்துக்கு மிக்க நன்றி.

      நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
      நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
      குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
      இணங்கி இருப்பதுவும் நன்று

      என்ற மூதுரைதான் என் ஞாபகத்துக்கு வருகிறது.

      நீக்கு
  26. நெல்லை இங்கேயும் வந்தார். சாப்பாடு போடுவதற்காக ஒரு வாரமாக ஏற்பாடுகள் செய்தாலும் அவர் திடீரெனக் காலையே வந்து சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். அப்புறமா இலுப்பச்சட்டி தோசை வார்த்துக் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். காஃபி, டீ, எதுவும்ரே இரண்டு பேருமே சாப்பிடமாட்டாங்களாம். ஆச்சரியமான தம்பதிகள்! இங்கேயு பல ஃபோட்டோக்கள் எடுத்தார்கள். நான் அதிகம் எடுக்கவில்லை. தம்பதியரை மட்டும் எடுத்துக் கொண்டேன் என் சேமிப்பிற்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ மேடம், வணக்கம். தாங்கள் கொடுத்துள்ள கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி.

      ஓஹோ ..... அவர்களின் வருகை தங்களுக்கு மட்டும் ஒரு வாரம் முன்பாகவே தெரியப் படுத்தப்பட்டுள்ளது போலிருக்குது. சந்தோஷம்.

      நீக்கு
    2. கோபு சார்... பிறந்த நாள் அன்று அரங்கனின் விசுவரூப தரிசனத்துக்காக ஸ்ரீரங்கம் செல்வது என்று தீர்மானித்திருந்தோம். அன்றைய மதியமே பெங்களூர் செல்லணும் என்று டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். யாரையாவது சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் அது கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான் என்று எனக்குத் தோன்றியது. (பொதுவாக நீங்கள் 10 மணிக்கு மேல் எழுந்து உங்கள் நித்திய கடமைகளைச் செய்துவிட்டு, சாப்பாடு முடிய 12-1 மணி ஆகிவிடும். அதனால் அன்றைய தினம் உங்களைச் சந்திக்கமுடியாது. அப்படியே சந்திக்க முடிந்தாலும் 5-10 நிமிடங்களுக்குள் கிளம்பி, நம் இருவருக்கும் ஏமாற்றம் ஏற்படுத்தும் வேலையைச் செய்ய எனக்கு இஷ்டமில்லை.

      முந்தைய நாள் மாலை ஸ்ரீரங்கம் வருவதாகவும் பிறகு கோவில், மற்ற சீயர்களைத் தரிசிக்கும் திட்டம் எல்லாம் இருந்ததால், எதனையும் திட்டமாக தீர்மானிக்க இயலவில்லை. கோவிலுக்குப் போகும் வழி என்பதால், எப்படியும் 'ஹலோ' சொல்லிவிடலாம் என்று நினைத்து கீசா மேடம் அரங்கத்தில்தான் இருக்கிறார்களா என்று உறுதிசெய்துகொண்டேன்.

      அவர்களும், உணவு ஏற்பாடு, எங்கேயும் தங்கவேண்டாம், தங்கள் வீட்டிலேயே தங்கணும் என்று அன்புக்கட்டளையே போட்டுவிட்டார்கள். எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.

      இரவு நீங்கள் லேட்டாகத் தூங்குவீர்கள் என்பது உங்கள் பதிவுகளைப் படித்துத் தெரியும். அதனால், என் வேலைகள் இரவு 9 மணிக்கு முடிந்ததும், உங்களைக் காண ஓடோடி வந்தோம்.

      எனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.

      நீக்கு
    3. கோபு சார்... பிறந்த நாள் அன்று அரங்கனின் விசுவரூப தரிசனத்துக்காக ஸ்ரீரங்கம் செல்வது என்று தீர்மானித்திருந்தோம். அன்றைய மதியமே பெங்களூர் செல்லணும் என்று டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். யாரையாவது சந்திக்க வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் அது கீதா சாம்பசிவம் மேடம் மட்டும்தான் என்று எனக்குத் தோன்றியது. (பொதுவாக நீங்கள் 10 மணிக்கு மேல் எழுந்து உங்கள் நித்திய கடமைகளைச் செய்துவிட்டு, சாப்பாடு முடிய 12-1 மணி ஆகிவிடும். அதனால் அன்றைய தினம் உங்களைச் சந்திக்கமுடியாது. அப்படியே சந்திக்க முடிந்தாலும் 5-10 நிமிடங்களுக்குள் கிளம்பி, நம் இருவருக்கும் ஏமாற்றம் ஏற்படுத்தும் வேலையைச் செய்ய எனக்கு இஷ்டமில்லை.

      முந்தைய நாள் மாலை ஸ்ரீரங்கம் வருவதாகவும் பிறகு கோவில், மற்ற சீயர்களைத் தரிசிக்கும் திட்டம் எல்லாம் இருந்ததால், எதனையும் திட்டமாக தீர்மானிக்க இயலவில்லை. கோவிலுக்குப் போகும் வழி என்பதால், எப்படியும் 'ஹலோ' சொல்லிவிடலாம் என்று நினைத்து கீசா மேடம் அரங்கத்தில்தான் இருக்கிறார்களா என்று உறுதிசெய்துகொண்டேன்.

      அவர்களும், உணவு ஏற்பாடு, எங்கேயும் தங்கவேண்டாம், தங்கள் வீட்டிலேயே தங்கணும் என்று அன்புக்கட்டளையே போட்டுவிட்டார்கள். எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.

      இரவு நீங்கள் லேட்டாகத் தூங்குவீர்கள் என்பது உங்கள் பதிவுகளைப் படித்துத் தெரியும். அதனால், என் வேலைகள் இரவு 9 மணிக்கு முடிந்ததும், உங்களைக் காண ஓடோடி வந்தோம்.

      எனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.

      நீக்கு
    4. நெல்லைத் தமிழன் November 15, 2018 at 10:00 AM

      //எனக்கு நேர வாய்ப்பு இருந்திருந்தால் இன்னும் சில பதிவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.//

      நாம் என்னதான் நம் மனதில் திட்டம் போட்டாலும்கூட, எது எது .. எப்படி எப்படி .. எங்கு எங்கு .. நிகழணும் என்ற ப்ராப்தம் உள்ளதோ .. அதுபோல மட்டுமே, அது அது .. அப்படி அப்படி .. அங்கு அங்கு, நாம் எதிர்பாராத விதத்தில் நிகழ்ந்து விடும்.

      //எனக்கு எப்போதும் இருக்கும் கூச்சத்தினாலும் தயக்கத்தினாலும் அவரின் அன்பை ஏற்க இயலவில்லை.//

      இது விஷயத்தில் நானும் அப்படியே டிட்டோவாக உங்களைப்போலத்தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் + பெரும்பாலான முக்கிய நகரங்கள் மற்றும் உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் எனக்கும் அன்புடன் கூடிய அழைப்புகள் பலவும் வந்தாச்சு. உலக மஹா சோம்பேறியான என்னால்தான் என் இருப்பிடத்தை விட்டு எங்கும் புறப்பட்டுச் செல்ல விருப்பமில்லை.

      தூரத்துப் பச்சை மட்டுமே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணமாகும்.

      திருச்சி லோக்கலில் உள்ள ஒருசில பதிவர்களின் வீடுகளுக்கு மட்டும், ஒருசில தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில், ஒருசில மணித்துளிகள் மட்டும், சென்று வர வேண்டிய நிர்பந்தங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளன.

      நீக்கு
  27. எனது நேரக் குறைவைப் புரிந்துகொண்டு, (என்னைப் பொறுத்தவரையில், ஏனென்றால் எனக்கு இரவு 9 மணியே ரொம்ப ஜாஸ்தி) இரவு லேட்டானாலும் என்னைச் சந்திக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    உங்கள் வீட்டாரின் அன்பிற்கும் மிக்க நன்றி.

    பொதுவாக 7 மணிக்கு மேல் நான் எதையும் உண்பதில்லை. தங்களின், மற்றும் தங்கள் துணைவியாரின் வற்புறுத்தலினால் சிப்ஸ், பாதுஷா போன்ற பட்சணங்கள், சூடான ஹார்லிக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டோம். அந்த அன்பிற்கு மிக்க நன்றி.

    நான் நிறைய இனிப்புகள் சாப்பிட்டவன், சாப்பிடுபவன். என்னையே தோற்கடிக்கும் அளவு நீங்கள் வைத்துள்ள ஸ்டாக்கினைப் பார்த்து அசந்துவிட்டேன். கடவுள் உங்கள் எல்லோருக்கும் நல்ல ஹெல்த் தருவானாகுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் November 15, 2018 at 9:51 AM

      //எனது நேரக் குறைவைப் புரிந்துகொண்டு, (என்னைப் பொறுத்தவரையில், ஏனென்றால் எனக்கு இரவு 9 மணியே ரொம்ப ஜாஸ்தி) இரவு லேட்டானாலும் என்னைச் சந்திக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வீட்டாரின் அன்பிற்கும் மிக்க நன்றி. //

      நானே சந்திக்க நினைத்த V.V.I.P. ஆனவர் தாங்களாகும். தங்களுடன் ஒரு முழு நாள் தனிமையில் செலவிடணும் என்றும், மூன்று வேளைகளும் நன்கு விருந்தளித்து, பல்வேறு விஷயங்களைப் பொறுமையாகப் பகிர்ந்துகொள்ளணும் என்றும் ஆசைப்பட்டவன் நான்.

      உங்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று, ஒரு பள்ளிகொண்ட பெருமாள் (மிகச்சிறிய) விக்ரஹமும், நானே என் கையால் வரைந்த ஆஞ்சநேயர் படமும் அளிக்க ஆசைப்பட்டேன். தாங்கள் புறப்பட்டுச் சென்றபின் தான் அவைகளை எங்கு பத்திரப்படுத்தியிருந்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வந்தது. :((((

      மேலும் தங்களை, இங்கு பக்கத்தில் உள்ள எங்களின் மிக நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் கூட்டிச்சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகையை தரிஸிக்கச் செய்ய வைக்கணும் என்றும் ஆசைப்பட்டேன்.

      நேற்று 14.11.2018 என் பெரிய அக்கா + அத்திம்பேர் இருவருக்கும் விவாஹம் நடந்து 62 ஆண்டுகள் முடிந்த நல்ல நாள் ஆகும். (தற்போது என் அக்கா வயது : 80 அத்திம்பேர் வயது: 92). நேற்று நானும் என் ஆத்துக்காரியும் ஓர் ஆட்டோ வைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து நமஸ்கரிக்கச் சென்றோம். அத்திம்பேர் ஸாமவேத சாம்ராஜ்யம். அபார சம்சாரி. வாழ்க்கையை முழுமையாக, சந்தோஷமாக, முழுத் திருப்தியாக அனுபவித்து வருபவர்கள்.

      அவர்களை சந்திக்கச் சென்ற போது, வெற்றிலை-பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள், ரவிக்கைத்துணி, தேங்காய், புஷ்பங்கள், கார்த்திகை தீபத்திற்கான ஒடப்பொறந்தான் சீர் பணம், ஆத்தில் செய்த ரவா லாடுகள் + தாங்கள் கொடுத்துச் சென்ற ’குண்டா’ க்களில் சரிபாதி 50% எனக்கொடுத்து நமஸ்கரித்து விட்டு வந்தோம். எங்களுக்கும் திருப்தி. அவர்களுக்கும் திருப்தி. நன்கு வேதோக்தமாக ஆசீர்வதித்தார்கள். உங்களைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அதனால் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தில் உங்களுக்கும் பெரும் “குண்டா”ன பங்கு உண்டு. :))))

      ”வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்று சாக்ஷாத் பகவானே பகவத் கீதையில் சொல்லியுள்ளார். எத்தனை ஒரு Co-incident பாருங்கோ, ஸ்வாமீ.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //பொதுவாக 7 மணிக்கு மேல் நான் எதையும் உண்பதில்லை. தங்களின், மற்றும் தங்கள் துணைவியாரின் வற்புறுத்தலினால் சிப்ஸ், பாதுஷா போன்ற பட்சணங்கள், சூடான ஹார்லிக்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டோம். அந்த அன்பிற்கு மிக்க நன்றி.//

      எங்களின் அன்புக்காக பெரிய மனஸு பண்ணி, தங்கள் கொள்கையினை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, எங்கள் வீட்டார் அளித்த சிலவற்றை (எத்கிஞ்சித்) ஸ்வீகரித்துக்கொண்டதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      //நான் நிறைய இனிப்புகள் சாப்பிட்டவன், சாப்பிடுபவன். என்னையே தோற்கடிக்கும் அளவு நீங்கள் வைத்துள்ள ஸ்டாக்கினைப் பார்த்து அசந்துவிட்டேன்.

      அறுசுவைகளில் இனிப்புகளுக்கும் ஓர் மிக முக்கியமான இடமுண்டு ஸ்வாமீ. நான் தினமும் காரம் நிறைய சாப்பிடுவேன். புளிப்பும் (வற்றல் குழம்பு, புளிக்காய்ச்சல் போன்றவை) எனக்கு மிகவும் பிடிக்கும். கசக்கும் சுண்டைக்காய்களை நிறைய விரும்பிச் சாப்பிடுவேன். துவர்க்கும் பாக்கு + கடுக்காய்பொடி என எதையும் வெறுக்காமல் எடுத்துக்கொள்வேன். உப்பு கலந்த ஊறுகாய்கள் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இதுபோல அறுசுவை உணவுகளையும் கலந்தடிப்பதால் ஒன்றும் கவலையே பட வேண்டியதே இல்லை.

      என்னிடம் உள்ள ஸ்டாக் எதிர்பாராமல் அடிக்கடி என் இல்லத்திற்கு வந்துபோகும் விருந்தினருக்காக மட்டுமே. ஒரு வாரம் வரை பார்ப்பேன். யாரும் வராது போனால் நானே காலி செய்துவிட்டு, புதிதாக வாங்கி வைத்து விடுவேன். :)))))

      //கடவுள் உங்கள் எல்லோருக்கும் நல்ல ஹெல்த் தருவானாகுக.//

      கடவுள் நல்ல ஹெல்த் தந்துள்ளதால்தான் அனைத்தையும், ரஸித்து, ருஸித்து, உள்ளே தள்ளிக் கொண்டு இருக்க முடிகிறது. இது புரியாமல் மருத்துவர்கள் ஏதேதோ பரிசோதனைகள் செய்து, நம்மை பயமுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அவர்களின் தொழில் தர்மம். நம்மை நம்பித்தானே அவர்களின் பிழைப்பும் நடந்து வருகிறது. :)

      எதைக்கொண்டு வந்தோம், எதைக் கொண்டு போகப் போகிறோம்? இருக்கும் வரை வாய்க்குப் பிடித்ததை வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல், நேரம் காலம் பார்க்காமல், உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கணும். அதுவே என் தனிப்பட்ட கொள்கையாகும். புரிந்தால் எடுத்துக்கொள்ளுங்கோ .... புரியாட்டி விட்டுடுங்கோ.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

      உங்களை நேரில் பார்த்ததும் எனக்கும் என் மனைவிக்கும், எங்கள் பெரிய பிள்ளையைப் பார்த்தது போலவே தோன்றியது. இருப்பினும் எங்கள் பெரிய பிள்ளை உங்களைவிட பத்து வயதுக்கு மேல் சிறியவன் மட்டுமே.

      ஆனால் உங்களைப் போலவே மூக்கும் முழியுமாகவும், அதே நிறத்துடனும், தங்களைப் போன்றே கலகலப்பாகப் பேசிக்கொண்டும், தங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் ஒத்தவனாகவும், தங்களைப்போன்றே உதார குணத்துடனும் உள்ளவன். அவனும் தங்களைப் போன்றே ’உலகம் சுற்றும் வாலிபன்’ ஆவான். அவன் போகாத நாடோ, பார்க்காத இடமோ தங்காத ஸ்டார் ஹோட்டல்களோ இந்த உலகில் கிடையவே கிடையாது. இருப்பினும் இங்கு வந்தால், வெறும் பனியன் + அரை டிராயருடன், வெறும் தரையில், கை-கால்களை நீட்டி, தன் அம்மாவின் தொடையில் தலையை வைத்துக்கொண்டு, சிம்பிளாக படுத்துக்கொள்ள விரும்புவான். எல்லாம் பகவான் செயல். :)))))

      அமைதியே உருவாக தங்கள் அருகில் அமர்ந்திருந்த தங்களின் பார்யாள் அப்படியே எங்கள் மூத்த நாட்டுப்பெண்ணை நினைவு படுத்தினார்கள் என்பதையும் கூறிக் கொள்கிறேன். தம்பதியினர் இருவரும் த்ருடகாத்ர சரீரத்துடன், தீர்க்காயுஷுடன் இருக்க பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம். தங்கள் தமிழ் பிறந்த நாளுக்கு எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அன்புடன் + நன்றியுடன் கோபு

      நீக்கு
    4. உங்கள் மறுமொழி கண்டபிறகுதான், பரமாச்சார்யார் பாதுகை தரிசனம், அதனைப் பூஜிப்பவரது தரிசனம் போன்ற பல விஷயங்கள் என் நினைவுக்கு வருகிறது.

      நமக்கு இன்னும் இதுபோன்ற சந்திப்புகள் நிகழணும், அதுவும் நிறைந்த அவகாசத்தோடு என்று நினைத்துக்கொள்கிறேன்.

      உங்களிடமும் வீட்டாரிடமும் நேரில் பேசுவதற்கு எனக்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

      மிக்க நன்றி.

      நீக்கு
    5. உங்கள் ஆசிகள் கண்டு நெகிழ்ந்தேன். மிக்க நன்றி கோபு சார்.

      நேரிலும் நீங்கள் இருவரும் எங்களை ஆசீர்வதித்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

      உங்கள் மூத்த மகன் குடும்பம் அல்லது கடைசி மகன் குடும்பம் வந்திருந்தாலும் அவர்களோடு பேச எனக்குத் தயக்கம் இருந்திருக்காது. அவர்களுக்குத்தான் என்னைத் தெரியாது. எனக்கு உங்கள் பதிவுகள் மூலம் அவர்கள் எல்லோரும் மிகவும் பரிச்சையமானவர்களே.

      நீக்கு
  28. கோபு சார்... இதனைச் சாக்காக வைத்து இனி நீங்கள் அடிக்கடி இடுகை போடவேண்டும். வலையுலகில் உங்களை அடிக்கடி காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் November 15, 2018 at 11:48 AM

      //கோபு சார்... இதனைச் சாக்காக வைத்து இனி நீங்கள் அடிக்கடி இடுகை போடவேண்டும். வலையுலகில் உங்களை அடிக்கடி காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.//

      ஆஹா ...... இப்படி என் அடிமடியில் கை வைத்து விட்டீர்களே ! :)))))

      நான் உண்டு என் வேலைகள் உண்டு என, நான் மிகவும் ஹாப்பியாக இருப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லையா?

      “சந்தித்த வேளையில் .....
      சிந்திக்கவே இல்லை ......
      தந்துவிட்டேன் என்னை .... !”

      https://www.youtube.com/watch?v=ED0bwUuSQMg&lc=UggclzpCk8HWMXgCoAEC

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. ஹையோ ஆண்டவா என்னால இதுக்கு மேலயும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது மீ த்தேம்ஸ்ல குதிக்கிறேன் என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)...

      https://goo.gl/images/AgxGY8

      நீக்கு
    3. https://goo.gl/images/AgxGY8

      இந்தப்படத்தில் அது தேம்ஸ் நதி போலவே தெரியவில்லை. படு அமைதியாக ஒரு திட்டின் மேல் அமர்ந்திருக்கும் பூனையார் குதிக்கத் தயார் ஆன மாதிரியும் தெரியலே.

      அங்கு தேங்கியுள்ள ஜலத்தில் ஃபிஷ் அல்லது கோல்டு ஃபிஷ் ஏதேனும் மாட்டுமா என்ற ஏக்கத்துடனும் பசியுடனும் இருப்பது போலத் தெரிகிறது. :))

      நீக்கு
  29. திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம், உங்களையும், ரிஷபன் அவர்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் ஒரு நாள் பயணங்களாக இருப்பதால் இயலுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bhanumathy Venkateswaran November 15, 2018 at 2:52 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம், உங்களையும், ரிஷபன் அவர்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பெரும்பாலும் ஒரு நாள் பயணங்களாக இருப்பதால் இயலுவதில்லை.//

      தாங்கள், தங்கள் மனதில் நினைப்பதையெல்லாம், இதுபோல இங்கு மிகப்பெரிய ‘தம்பட்டம்’ அடித்துள்ளதே, நேரில் உங்களைச் சந்தித்தது போன்ற சந்தோஷத்தை எனக்கு அளித்து விட்டது. :)

      முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் திருச்சியில் இருக்கிறாரா? இது எனக்கு ஓர் புதிய செய்தியாக உள்ளது.

      இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், வியப்பூட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  30. இதுவரை இத்துடன் 98 COMMENTS ஆச்சு. தற்சமயம் நித்திரையில் இருக்கும் அதிராவும் அஞ்சுவும் சும்மா இருக்க மாட்டார்கள்.

    அதிரா வந்தால் பதிவே அதிரும். 100-வது, 101-வது, 108-வது பின்னூட்டங்கள் என்றால் எங்கட அதிராவுக்கு மிகவும் பிடிக்கும். என்ன நடக்கப்போகுதோ .... பார்ப்போம். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது 109 ஆவது கொமெண்ட் ஆக்கும்:) அதனால அந்த “குண்டா” ல பாதி எனக்குத்தான் சொந்தம்:).. போஸ்ட்டில் அனுப்பி வைக்கவும்:)...

      ச்ச்ச்ச்ச்ச்சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே அதிராவைக் கொமெண்ட்ஸ் போட வச்சிடுவார் கர்ர்ர்ர்ர்ர்:)))

      ஆஆஆ கோபு அண்ணன் லாண்டட்ட்ட்ட்ட் புளொக் ஆடுதே:) மீ ரன்னிங்:)..

      நீக்கு
    2. //அதனால அந்த “குண்டா” ல பாதி எனக்குத்தான் சொந்தம்:)..//

      டூஊஊஊஊஊஊ லேட். குண்டா டப்பாக்களில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் காலியாகிவிட்டதால், காலி டப்பாக்களை மட்டும் எங்கள் ஊர் குப்பைத்தொட்டி மூலம் அனுப்பியுள்ளேன். அது அங்கு லண்டன் மஹா ராணியாரின் அரண்மனைக்கு வந்து சேருமோ சேராதோ .... நேக்குத் தெரியவில்லை.

      அதனால் நெ.த. ஸ்வாமீயையே புதிதாக ஒரு டஜன் டப்பாக்கள் குண்டா வாங்கி ’குண்டுப் பூனையாருக்கு’ போஸ்ட் பார்ஸலில் அனுப்பி வைக்கும் படி ஆணையிடுகிறேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நீக்கு