என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஸ்நான மந்த்ரங்கள்

தினமும் ஸ்நானம் செய்யும் போது 
அனைவரும் அவசியம் சொல்ல வேண்டிய
 ஸ்நான மந்த்ரங்கள்




[புனித கங்கை]



 கங்கே ச யமுனே சைவ 
கோதாவரி ஸரஸ்வதி !

நர்மதா ஸிந்து காவேரி 
ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!




புண்ணிய நதியாம் காவிரி 
அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம்



அல்லது 

 அதிக்ரூர மஹாகாய 
கல்பாந்த தஹநோபம !

பைரவாய நமஸ்துப்யம் 
அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி!!

ஸ்நானம் என்பது வேறு, குளியல் என்பது வேறு. புண்ணிய நதிகளில் நம் தலைமுடி முதல் உடம்பின் அனைத்துப் பகுதிகளும் முழுவதுமாக நனையும்படி, அமுங்கிக்குளித்தல் தான் ’ஸ்நானம்’ என்று புனிதமாகச் சொல்லப்படுகின்றது. 

சிலர் நேரமின்மை, சோம்பேறித்தனம், உடல்நிலை சரியில்லாமை, அடர்த்தியான தலைமுடிப்பிரச்சனை, தலைமுடியில் நீர் பட்டாலே ஒத்துக்கொள்ளாமை போன்ற பல்வேறு காரணங்களால் தினமும் ஸ்நானம் செய்யாமல் இருந்து வருகின்றனர். 

சிலர் தங்கள் தலைமுடியில் நீர் படாமல் கழுத்தோடு மட்டும் குளிப்பார்கள். சிலர் முகம் கைகால்களை மட்டும் கழுவிக்கொள்வார்கள். 

உடல்நலமின்மையால் படுத்தபடுக்கையாக இருந்த ஒருசில ஞானிகள், தங்கள் உடல் முழுவதும் பஸ்மத்தால் [பசுஞ்சாணியால் செய்யப்பட்ட சாம்பல்] பூசி பஸ்ம ஸ்நானம் செய்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.

’கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக்கட்டு’ என்பது போல, முடிந்தவர்கள் தினமும் ஸ்நானம் செய்வதே நல்ல ஆரோக்யத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.      


நதிகளில் ஸ்நானம் செய்யும் போது தண்ணீர் எங்கிருந்து புறப்பட்டு வருகிறதோ அந்த திசையை நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். மேற்கிலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி பாய்கிறது என்றால், நாம் மேற்கு நோக்கித்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.

வீட்டில் பாத் ரூமிலோ, கிணற்றடியிலோ ஸ்நானம் செய்யும் போதும் மேற்கு திசை நோக்கி நின்று கொண்டு ஸ்நானம் செய்தல் நல்லது. 

ஸ்நானம் செய்தபின் உடம்பைத் துண்டினால் துவட்டும் போது, முதலில் நம் முதுகுப்புறத்தை துடைக்க வேண்டும், அடுத்தது முகம், மூன்றாவதாகத் தலைமுடி, அதன் பிறகே மற்ற பகுதிகளில் உள்ள ஈரத்தைத் துடைக்க வேண்டும். 


எப்போதுமே எல்லோருமே அவரவர்களின் முன்னோர்கள் வழக்கப்படி, நெற்றியில் விபூதியோ, நாமமோ, கோபிச்சந்தனமோ, குங்குமமோ இட்டுக் கொள்ள வேண்டும். தீட்டு நாட்களைத்தவிர மற்ற நாட்களில், யாரும் பாழும் நெற்றியுடன் தோன்றக்கூடாது

ஸ்நானம் செய்த பிறகு, பூஜைசெய்ய பஞ்சக்கச்சம் அல்லது மடிசார் புடவை அணிபவர்கள், அவற்றை அணிந்து கொண்ட உடனே ஞாபகமாக, மேற்கு திசை நோக்கித் திரும்பிக்கொண்டு, தங்கள் கால் பாதங்கள் இரண்டையும் மட்டும் மீண்டும் ஒருமுறை, அலம்பி விட வேண்டும். இவ்வாறு கால்களை அலம்பிய பிறகே,  பூஜை, த்யானம் முதலியவற்றில் ஈடுபட வேண்டும்.

யார் எப்போது எதற்காகக் கால் கழுவினாலும், ஒரு காலால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புவது கூடவே கூடாதாம். 

தாளிடப்பட்ட தனி குளியறையாகவே இருப்பினும், உடம்பினில் துணிகள் ஏதும் அணியாமல் ஸ்நானம் செய்தல் கூடவே கூடாதாம். 

பூஜையோ தியானங்களோ செய்யும்முன் திருமணம் ஆன ஆண்கள் இடுப்பில் பஞ்சக்கச்சம் + உத்ரீயமும், அதுபோல திருமணம் ஆன பெண்மணிகள் மடிசார் புடவையும் அணிதல் மிகச்சிறப்பான பலன்களை அளிக்குமாம். 


இந்த ஆடைகளை இவர்கள் அணியும் போது, தெற்கு அல்லது வடக்கு நோக்கி நின்றபடி அணிய வேண்டுமாம். கிழக்கு அல்லது மேற்கு நோக்கி நின்று அணியக்கூடாதாம். 


இவ்வாறு ஆண்கள் பஞ்சக்கச்சமும் + பெண்கள் மடிசார் புடவையும் அணிவதால் மின்சாரம் போன்ற ஒரு காந்த சக்தி நிகழ்கிறதாம். இந்த சக்தி இடுப்புப்பகுதியை வலிமையுறச் செய்கிறதாம். 

திருமணம் ஆனவர்கள் இடுப்பில் ஒற்றை வஸ்திரத்துடனோ அல்லது ஈர வஸ்திரங்களுடனோ, பூஜை பாராயணம் முதலிய எந்த சுப கார்யங்களிலும் ஈடுபடக்கூடாது. 

அதுபோல ஒற்றை வஸ்திரம் மட்டும் அணிந்து நாம் நம்மைவிடப் பெரியவர்களை நமஸ்கரிப்பதோ, நம்மை நமஸ்கரிக்கும் சிறியவர்களை ஆசீர்வதிப்பதோ கூடாது. இரண்டாவது வஸ்திரமாக இடுப்பில் ஓர் துண்டாவது சுற்றிக்கொள்ள வேண்டும்.


நம் வீட்டுக்கு வருகைதரும் பெரியவர்களை, நமஸ்காரம் [விழுந்து கும்பிடுதல்] செய்ய விரும்புபவர்கள், வந்தவருக்கு ஆசனம் அளித்து அமரச்சொல்லி,  உடனடியாகச் செய்து விடுதல் நல்லது.  அவர் நம்மை விட்டு, விடைபெற்றுச்செல்லும் சமயம் நமஸ்காரம் செய்தல் கூடாது.


அதுபோல நாம் வயதில் சிறியவர்களாக இருந்து, எங்காவது வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் போது, வீட்டில் உள்ள பெற்றோர் போன்ற நம்மைவிட வயதான பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு, அவர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு புறப்படுவது மிகவும் நல்லது.   


காலையில் வாசலுக்கு தண்ணீர் தெளிக்காமல், யாரும் வீட்டை விட்டு எங்கும் எதற்கும் புறப்பட்டுச்செல்லவே கூடாது. 


விடியற்காலம் அவசர வேலையாக வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்பவர்கள், [ஆண்களே ஆனாலும்], கொஞ்சமாக புதுத்தண்ணீர் எடுத்து வாசல் கதவின் நிலைப்படிகள், கோலம் போடும் இடம் முதலியவற்றில் சற்றே தங்கள் கைகளால் தண்ணீரைத் தெளித்து விட்டு, பிறகே புறப்பட்டுச்செல்வது மிகவும் நல்லது.    


-ooooOoooo-





தை அமாவாசைக்குப்பிறகு ஏழாம் நாள் வரும் ரத ஸப்தமி பற்றிய மிக அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு ஒன்று, ரத ஸப்தமி நாளான 30.01.2012 அன்று பதிவர் மணிராஜ் (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ:


தலைப்பு: “நலம் தரும் ரத சப்தமி”


அந்த மிக அற்புதமான பதிவில், அந்த ரத ஸப்தமி என்ற விசேஷ நாளில் ஸ்நானம் செய்யும் போது, ஆண்கள்/பெண்கள்/குழந்தைகள் அனைவரும் தலையில் ஏழு எருக்க இலைகளை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய சிறப்பான ஸ்லோகம் ஒன்று பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அதை மட்டும் இங்கு தனியாகக் கீழே கொடுத்துள்ளேன்: 



ஸப்த ஸப்திப்ரியே தே3வி

ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம்
மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து 
ஸப்தமீ நெளமி ஸப்தமி !

தே3வி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம் 

ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன 
மம பாபம் வ்யபோஹய ! 

-oOo-



ரத ஸப்தமி ஸ்நானம் முடிந்ததும், ஆண்கள் மட்டும் சூர்யனுக்கு அர்க்4யப் ப்ரதானம் செய்யலாம்:

ஒரு பித்தளைத் தாம்பாளம் + பஞ்சபாத்திர உத்ரணியில் புது ஜலம் எடுத்துக்கொண்டு, 

”ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே” என்று சங்கல்ப்பம் சொல்லி விட்டு

ஸப்த ஸப்தி ரதா2ரூட4 !
ஸப்தலோக ப்ரகாஸக !
தி3வாகர ! க்3ருஹாணார்க்4யம்
ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !

*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்; 
*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்;  
*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம். 

என்று மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் விடவேண்டும்.  


[இடது கையால் தீர்த்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, வலது கையில் ஜலத்தை ஏந்தி தாம்பாளத்தில் *மந்திரம் சொல்லிக்கொண்டே விடுவது தான் அர்க்யம் என்பது.] 




பின்குறிப்பு:

எருக்க இலைகளை வீட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஏழு இலைகள் வீதம், ரத ஸப்தமிக்கு முதல் நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அவ்வாறு எருக்க இலைகளைப் ஒடித்துப்பறிக்கும் போது அதில் வடியும் பால் நம் கண்களிலோ, வாய் பகுதியிலோ பட்டு விடாமல் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். முக்கியமாக சிறு குழந்தைகளை கூடவே கூட்டிச்செல்பவர்கள், அதிக கவனமாக இருக்க வேண்டும். 

இவ்வாறு பறித்து வந்த இலைகளை, அவற்றின் காம்புப் பகுதியில் உள்ள பால் போக, நன்கு தண்ணீர்க்குழாயில் காட்டி கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். 


மறு நாள் ரத ஸப்தமியன்று காலை எழுந்ததும் குளிக்கப்போகும் முன்பு, ஒவ்வொருவரும் ஏழு இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு, மேற்படி ஸ்லோகத்தை உச்சரித்து, ஸ்நானம் செய்து [தலைக்கு நீர் விட்டு], அப்படியே அவற்றை முதுகுப்புறமாக விழுந்து விடும் படி செய்து விடலாம். 

வெறும் ஏழு எருக்க இலைகள் மட்டுமல்லாமல், சுமங்கலிப்பெண்கள், சிறிதளது மஞ்சள் பொடியையும்,கோமயம் (பசுஞ்சாணி) மற்றும் அருகம்புல் சேர்த்து தலையில் வைத்துக்கொள்ளவும்.  


சுமங்கலிகள் தவிர மற்ற அனைவரும், [ஆண்கள் உள்பட] மேற்படி பொருட்களில் மஞ்சள்பொடிக்கு பதிலாக கொஞ்சம் அக்ஷதை [பச்சரிசி] சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.

ஒருவர் ஸ்நானம் செய்து அவர் தலையிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு தரையில் விழுந்துள்ள இலைகள் மற்றவர் எடுத்து, தான் ஸ்நானம் செய்யப் பயன்படுத்தக்கூடாது.

-o-o-o-o-




 [ நாளை மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ]



31 கருத்துகள்:

  1. பெரிய‌வ‌ங்க‌ சொல்ற‌தைக் கேட்டு ந‌ட‌ப்ப‌தில் எத்துணை ப‌ல‌ன்க‌ள்!

    பதிலளிநீக்கு
  2. சில சடங்குகளில் விஞ்ஞானமும் இணைந்தே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஸ்நானம்,மற்றும் வஸ்திர நியமங்களைப்பற்றிய அருமையான தகவல்களை கூறியுள்ளீர்கள்.நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  4. அரிய தகவல்கள் வைகோ சார். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது சார்....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
    வணக்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. “பீஷ்மாஷ்டமி” மற்றும் "ரதசப்தமி" குறித்த பல தகவல்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்நானம் செய்தபின் உடம்பைத் துண்டினால் துவட்டும் போது, முதலில் நம் முதுகுப்புறத்தை துடைக்க வேண்டும், அடுத்தது முகம், மூன்றாவதாகத் தலைமுடி, அதன் பிறகே மற்ற பகுதிகளில் உள்ள ஈரத்தைத் துடைக்க வேண்டும்.


    இதற்கு விஞ்ஞானமுறைப்படியான விளக்கமும் உண்டு..

    அதிகநேரம் முதுகில் ஈரம் இருப்பதால் முதுகை முதலில் துடைக்கவேண்டுமாம்..

    பதிலளிநீக்கு
  9. மூட நம்பிக்கைகள்,
    விஞ்ஞான விளக்கமில்லாதவைகளை என்பிள்ளைகளிடமும் , இந்தக்கால குழந்தைகளிடமும் கூறிவிட முடியாது..

    ஆகவே ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்..

    பதிலளிநீக்கு
  10. பெரியவர்கள் முதலில் முகத்தைத்துடைத்தால் லஷ்மி அகன்றுவிடுவாள் என்று கூறுவார்கள்..

    ஆகவே முதுகை முதலில் துடைக்கச்சொல்வார்கள்..

    பதிலளிநீக்கு
  11. நிறைய தகவல்கள் அறிந்துகொண்டோம். முன்னோர்கள் எல்லாம், காரண காரியமாய் தான் எல்லா வற்றையும் முறைப்படுத்தி கூறி இருக்கிறார்கள்.
    அதன்படி நடந்தால் நலம் பெறலாம்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்நானம் செய்வதில் இவ்வளவு ஐதீகங்கள் இருக்கின்றனவா? நல்ல விஷயங்கள். ஆனால் நடைமுறையில் சிலதுதான் சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரையிலான 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. குளிக்கறதுக்குக்கூட இவ்வலவு விஷயங்கள் கடைப்பிடிக்கணுமா? ஆனா யாரு இப்பல்லாம் இப்படி இருக்காங்க? அவசர அவசரமா பாத்ரூமுக்குள்ள போயி காக்கா குளியல் தானே போடுராங்க.

      நீக்கு
    3. பூந்தளிர் May 27, 2015 at 6:17 PM

      //குளிக்கறதுக்குக்கூட இவ்வளவு விஷயங்கள் கடைப்பிடிக்கணுமா?//

      அப்படீன்னு சாஸ்திரம் படிச்சவங்க சொல்றாங்கோ.

      //ஆனா யாரு இப்பல்லாம் இப்படி இருக்காங்க?//

      அதானே ! :)

      ஏதோ ஆயிரத்துக்கு ஒருத்தர் இவ்வாறெல்லாம் இன்றும் செய்துகொண்டிருக்கலாம்.

      //அவசர அவசரமா பாத்ரூமுக்குள்ள போயி காக்கா குளியல் தானே போடுறாங்க.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! காக்காக் குளியல் ..... நன்னாவே சொல்லிட்டேள். மிக்க மகிழ்ச்சி. :)

      நீக்கு
    4. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரை முதல் பதிமூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  13. குளியலைப் பற்றி எவ்வளவு விஷயங்கள்.

    இதையெல்லாம் எங்க பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கா.

    முடிந்தவரை கடை பிடிப்போம்.

    மைலாப்பூரில் குடி இருந்த போது பாட்டி எங்கிருந்தோ எருக்க இலை எல்லாம் தயார் பண்ணிடுவா. பாட்டிக்கு கபாலி கோவிலில் நிறைய பாட்டிகள் சிநேகிதம்.

    அப்படித்தான் தீபாவளிக்கும் மருதாணி நண்பிகளின் வீட்டில் இருந்து பறித்து வந்து அரைத்து இட்டு விடுவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

      அன்புள்ள ஜெயா,

      வணக்கம்மா !

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரை, முதல் பதிமூன்று மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  14. பதில்கள்
    1. mru October 14, 2015 at 3:18 PM

      //ஸாரி ஸாரி ஸாரி
      ஸாரி ஸாரி ஸாரி//

      ஓக்கே, ஓக்கே, ஓக்கே
      ஓக்கே, ஓக்கே, ஓக்கே :)

      நீக்கு
  15. ஒவ்வொரு விஷயங்களிலும் ஸ்லோகங்களைச்சொல்வதில மனம் ஒருமைப்பாடு அதாவது இப்ப சொல்றாப்ல மெடிடேஷன் ஆகிறது. மனக்கட்டுப்பாடு பழகமுடிகிறது. இந்த கால குழந்தைகள் வீட்டுக்கு யாரு வந்தாலும் ஒரு ஹாய. மட்டும்தான். நமஸ்காரம்பண்ணுவதெல்லாம் காணாமயே போச்

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் முடிய, என்னால் முதல் 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள பதிவு. முடிந்தவரை கடை பிடிக்கலாம்..
    காலையில் வாசலுக்கு தண்ணீர் தெளிக்காமல், யாரும் வீட்டை விட்டு எங்கும் எதற்கும் புறப்பட்டுச்செல்லவே கூடாது.// இதை சகுனம் கதையில்கூட சொல்லியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்..

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் வரை, என்னால் முதல் 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  19. அரிய பல தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
    திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 13 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. ரத ஸப்தமி ஸ்நான ஸ்லோகங்களை தங்களது பதிவின் மூலம் தெரிந்து கொண்டு ஸ்நானம் செய்தேன். தங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு