என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 18 டிசம்பர், 2014

’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]

துபாயில் ‘சிகரம்’ என்ற பெயரில் ஓர் தமிழ் மாத இதழ் ஏற்கனவே வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவே துபாயிலிருந்து வெளிவரும் ஒரே தமிழ் மாத இதழாகும்.  

இதன் விலை AED 5 
[நமது இந்திய மதிப்பில் ரூபாய்: 85 ஆகும்].



நாங்கள் சமீபத்தில் அங்கு சென்றிருந்த சமயம் “தினத்தந்தி”யின் முதல் சர்வதேச பதிப்பாக ’தினத்தந்தி’ துபாய் பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தினத்தந்தி நாளிதழின் 17வது பதிப்பான இது 10.12.2014 புதன்கிழமையன்று வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் இதழை [மலர்-1 இதழ்-1]  துபாயில் நாங்களும் வாங்கிப்படித்து மகிழ்ந்தோம். 

முதல் இதழ்: 24 பக்கங்கள் - ஆரம்ப விற்பனை விலை: 1 திர்ஹாம் மட்டுமே. [இந்திய பணத்தில் 17 ரூபாய்க்கு சமமாகும்.]


ஏற்கனவே  இந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோயில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களிலிருந்து தினமும் வெளியிடப்படும் தினத்தந்தி  நாளிதழ் 17வது பதிப்பிடமாக அமீரகம் துபாயைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் வெளிநாடான துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது. 



தினத்தந்தி இயக்குனர் சி. பாலசுப்ரமணியன் ஆதித்தன் அவர்கள் முதல் பதிப்பினை துவங்கி வைத்தார். அவரின் மகன் பா. சிவந்தி ஆதித்தன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா*, நடிகை சிநேகா* ஆகியோர் இந்த விழாவினில் கலந்துகொண்டார்கள்.

[*நடிகர் பிரசன்னாவின் தந்தை {நடிகை சிநேகாவின் மாமனார்} என்னுடன் BHEL திருச்சியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.]

இந்த தொடக்க விழா சிறப்பு மலரில் துபாய் பற்றிய பல்வேறு சிறப்புச் செய்திகளும், வரலாற்றுச் சிறப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இனி என் பதிவுகளில் ஆங்காங்கே தொடர்ந்து அளிக்கப்படும்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



26 கருத்துகள்:

  1. தமிழ் பத்திரிக்கையான தினத்தந்து துபாயில் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. முதல் நாள் காப்பியை சேமித்து வைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. துபாய் பற்றிய செய்திகளையும், தங்களின் இனிய பயண விவரத்தினையும் அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சியான செய்தி. அந்தக் கால தினத்தந்திக்கும், இப்போதைய தினத்தந்திக்கும் எவ்வளவு வித்தியாசம்! பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வெளிநாடான துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது

    மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயம். செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நமது நாட்டின் எல்லை கடந்தும் தமிழ் தினசரி வெளி வரப் போகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. தினத்தந்தி’ துபாய் பதிப்பு துவக்கம் மற்றும் அந்த பதிப்பினைப் பற்றிய செய்திகளை, வலைப் பதிவினில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தினந்தந்திக்கும் அதை விளக்கமாக கூறிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. துபாய் பதிப்பைக் குறித்த செய்திகள் அருமை! தாங்கள் சென்றிருந்த சமயத்தில் வெளியானதில் மகிழ்ச்சி! மேலும் விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது. //

    மகிழ்ச்சி.

    முதல் காப்பி பத்திரமாய் வைத்து இருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு தமிழ் தினசரியின் கடல் கடந்த பதிப்பின் துவக்கத்தைத் தாங்கள் கண்ணுறும் பாக்கியம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. தங்கள் எழுத்துப்பணியை மீண்டும் தொடரச்செய்த தினந்தந்திக்கு நன்றி. தொடரட்டும் எழுத்துப்பணி. வாழ்த்துகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  14. துபாயில் அச்சாகும் முதல் தினசரி தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ’தினத்தந்தி’ பெற்றுள்ளது. //

    செய்தித் தாளில் படித்து மகிழ்ந்தேன். நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தீர்களா என்று சொல்லவில்லையே.

    அப்படியே அந்த ‘சிகரம்’ பத்திரிகைக்கு இரண்டு சிறுகதைகள் எழுதிக் கொடுத்திருக்ககூடாதோ. வெளி வந்தால் நாங்களும் துபாயில் உள்ள என் உறவினர்களிடம் (இப்ப சத்திக்கு தம்பி பையன் மட்டும்தான் இருக்கான்) இது எங்க கோபு அண்ணாவின் கதையாக்கும்ன்னு சொல்லிப்போமே.

    செய்திகளை தமிழகத்தின் கிராமங்களுக்கும், மூலை, முடுக்குகளுக்கும் கொண்டு சென்ற தினத்தந்தி இப்ப உலகப் பதிப்பையும் தொடங்கி விட்டது. வாழ்த்துக்கள் தினத்தந்திக்கும்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  15. தினத்தந்தி விழா பற்றிய விஷயங்கள் சூப்பர்....நீங்க அந்த விழாக்கு போயிருந்தேளா?

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சியூட்டும் தகவல்
    தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  17. மிக மகிழ்சியான செய்தி.
    தினத்தந்தி பத்திரிகையை படித்தே தமிழ் கற்றுக்கொண்ட பலர் உண்டு.
    இந்த பத்திரிகை துபாயில் வெளிவருவது துபாய் வாழ் தமிழ் படிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தருவதே ஆகும்.
    நல்ல செய்தியை பகிரிந்து கொண்டதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க அந்த விழாவில் கலந்து கொண்டூர்களா??

    பதிலளிநீக்கு
  19. தமிழ் அல்லாத இடமே இல்லை. ஒங்கட எக்ஸ்பீரியன்ஸ் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  20. தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு சந்தோஷமாகச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  21. தினத்தந்தி வெளிவரத்துவஙிகியிருப்பது அருமையான விஷயம். பகிர்வுக்கு நன்றி. சரீஈ தினத்தந்தி படிக்கிற என்விரான்மென்ட்...டீக்கடை...பெஞ்ச் இதெல்லாம் இருக்கா...??

    பதிலளிநீக்கு