என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 9 பிப்ரவரி, 2019

ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி [12.02.2019 செவ்வாய்க்கிழமை]


’மூக பஞ்ச சததி’யில் 
ஓர் முக்கிய ஸ்லோகம்!




’மூக பஞ்ச சததி’ என்பது, முற்பிறவியில் கவி காளிதாஸனாகப் பிறந்தவரும், இப்பிறவியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 20-ஆவது பீடாதிபதியாக சுமார் 39 ஆண்டுகள் விளங்கியவரும், கி.பி. 437 இல், கோதாவரி நதிக்கரை அருகே ஸித்தி அடைந்தவருமான  ‘மூக சங்கரர்’ என்ற பிறவி ஊமையால், அம்பாளின் அருள் பெற்று, சதகம் ஒன்றுக்கு 100 ஸ்லோகங்கள் வீதம், ஐந்து சதகங்களில் மொத்தம் 500 ஸ்லோகங்களாக, அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் மீது பாடப்பட்டதாகும்.     

இதில் கடாக்ஷக சததத்தில் வரும் 45-வது ஸ்லோகம் மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இதனை தினமும் தனியாகவோ, கூட்டாகவோ, தனக்காகவோ, பிறருக்காகவோ வேண்டிக்கொண்டு, பாராயணம் செய்துவர அனைத்து *ஸ்ரேயஸ்*களும் ஏற்படுவதுடன், நினைத்துப்பார்க்கவே முடியாத அற்புதங்கள் (MIRACLES) நிகழும் என இதனைப் பாராயணம் செய்து கண்கூடாக பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். 

*ஸ்ரேயஸ்* = நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், சந்தோஷம், நல்ல புத்தி, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் மற்றும் மன நிம்மதி போன்ற அனைத்து விதமான செளக்யங்களுமாகும்.

இதோ அந்தப் பொக்கிஷமான 45-வது ஸ்லோகம்:

மாத: 
(மாதஹா)
க்ஷணம் ஸ்னபய,
மாம் தவ வீக்ஷிதேன  
மந்தாக்ஷிதேன
ஸுஜனை: 
(ஸுஜனைஹி)
அபரோக்ஷிதேன !
காமாக்ஷி, கர்ம, திமிரோத்கர,
பாஸ்கரேண, ஸ்ரேயஸ்கரேண,
மது, பத்யுதி, தஸ்கரேண !!

ஸ்லோகத்தின் பொருள்:

அம்பாள் காமாக்ஷி தேவியே ! ஒரு மலரிலிருந்து தேனைத் திருடிக்கொண்டு வேறு மலருக்கு, ரீங்காரமிட்டுக்கொண்டு,  மிகவும் ஜொலிக்கும் வெளிச்சத்துடன் பறந்து செல்லும்  பொன் வண்டினைப்போன்ற, காந்த சக்தியுள்ள, உன் கடைக்கண் பார்வையை, புன்னகையுடன், ஒரு க்ஷண நேரம் (கண் இமைக்கும் நேரம்) என் மீது திருப்பி, என் ஜன்மாந்தர பாபங்களாகிய மன அழுக்குகளைக் குளிப்பாட்டி நீக்கி, ஸதா ஸர்வ காலமும் உன்னையே நினைத்து வழிபடும் ஞானிகளுக்கு அருள் செய்வதுபோலவே, என்னையும் அக்ஞானம் என்ற இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அருள வேண்டும் தாயே !!      

  



ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி 
12.02.2019 செவ்வாய்க்கிழமை

வரும் 12.02.2019 செவ்வாய்க்கிழமை சூர்ய பகவானுக்கு உரிய ரத ஸப்தமியும், பீஷ்மருக்கு உரிய பீஷ்மாஷ்டமியும் சேர்ந்து ஒரே நாளில் வருகின்றன. அன்று ஸ்நானம் செய்யும்போது, ஆண்கள் + பெண்களால் சொல்லப்பட வேண்டிய மந்திரங்களும், அன்று ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய மிகச்சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் உள்ளன. அவற்றைத் தனியாகக் குறித்து வைத்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சூர்ய பகவானுக்காகச் செய்ய வேண்டிய, மிகச் சுலபமான ரத ஸப்தமி ஸ்நான மந்திரங்களும், ரத ஸப்தமி தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்களும் தெரிந்துகொள்ள இதோ ஓர் பதிவு:    http://gopu1949.blogspot.com/2012/01/blog-post_31.html




குருக்ஷேத்ர யுத்த பூமியில், மஹா பாரதப் போர் முடிந்து, உத்தராயண புண்யகாலத்தில் தனது மரணம் நிகழ வேண்டும் என எதிர்பார்த்து,  அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்ம பிதாமஹர், பஞ்ச பாண்டவர்களுக்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் முன்னிலையில், முதன் முதலாக எடுத்துச் சொன்னதுதான் ’ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என்ற மஹா மந்திரமாகும். பீஷ்மாஷ்டமி புண்ணிய காலத்தில் பீஷ்மப் பிதாமஹருக்காக ஆண்கள் அனைவராலும் செய்யப்பட வேண்டிய, மிகச் சுலபமான தர்ப்பண (நீர்க்கடன்) மந்திரங்கள் இடம் பெற்றுள்ள பதிவு இதோ:   http://gopu1949.blogspot.com/2012/01/31012012.html







2011 முதல் 2015 வரை நான் என் வலைத்தளத்தில் 
வெளியிட்டுள்ள அனைத்து 806 பதிவுகளுக்கும், 
அன்புடன் வருகைதந்து, 
அழகாகப் பின்னூட்டங்கள் அளித்துள்ளவரின் 
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்.   

  

 09.02.2019 
 மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி 


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

 வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]

தொடர்புடைய பழைய பதிவுகள்:
கண்ணீர் அஞ்சலி :(

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(

http://gopu1949.blogspot.com/2018/02/09022018.html
நினைவு நாள் : 09.02.2018


 
  
    
    
9
    
2
    
  
  
  
   
19
 
நினைத்துப் பார்க்கிறேன்

                        https://gopu1949.blogspot.com/2014/10/blog-post.html
                       2014 போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

                   

சாதனையாளர் விருது - 2015

 

அன்றும், இன்றும், என்றும்
நீங்காத நினைவுகளுடன்


பதிவர்களாகிய நாங்கள். 


 


[ வை. கோபாலகிருஷ்ணன் ]
 

18 கருத்துகள்:

  1. //*ஸ்ரேயஸ்* = நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், சந்தோஷம், நல்ல புத்தி, வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் மற்றும் மன நிம்மதி போன்ற அனைத்து விதமான செளக்யங்களுமாகும்.

    இதோ அந்தப் பொக்கிஷமான 45-வது ஸ்லோகம்://

    ஓ இப்படியும் ஒரு ஸ்லோகம் இருக்கோ.. சொல்ல முயற்சிக்கிறேன்.

    //ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி
    12.02.2019 செவ்வாய்க்கிழமை
    ///
    ஓ அடுத்தடுத்து நிறைய விசயங்கள் வருதே..

    பதிலளிநீக்கு
  2. அதுக்குள் ராஜேஸ்வரி அக்காவின் மூன்றாவது ஆண்டு வந்துவிட்டதோ.. அனைத்தும் நேற்றுப்போலவே இருக்கு:(.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. படுக்கையைச் சுற்றி இனிப்பு, முறுக்கு, நொறுக்குத் தீனிகளை வைத்திருப்பவருக்கு, எப்போதும் 'எறும்பு' ஞாபகம்தான் இருக்கும். அதனால் போட்டிருப்பாராயிருக்கும்.

      இதெல்லாம் நாமே கற்பனை செய்து புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

      நீக்கு
    2. ஓ சுவீட்டைத்[ ஐ மீன்ன்ன்ன்ன் சுவீட்டானோரைத்] தேடித்தானே எறும்பு வரும்:) அப்பூடி இருக்குமோ:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)). மீ ரொம்ப நல்ல பொண்ணு..:)

      நீக்கு
  4. அருமையான தகவல்கள் ..

    மூன்று ஆண்டுகள் ஆகி விட்டதா...பக்தி பதிவுகளில் அவர் தளம் போல இன்னும் வேறு ஏதும் இல்லை ..

    பதிலளிநீக்கு
  5. பொருத்தமான படங்களோடு இடுகை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்வது கஷ்டமாக இருப்பவர்களுக்கு, அதன் பொருளைப் படித்தாலும் அதே பலன் உண்டல்லவா?

    இதை நீங்க தெளிவுபடுத்தணும். நிறையபேர் சுந்தரகாண்டம் வசனங்களைத்தான் பாராயணம் பண்றாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்வது கஷ்டமாக இருப்பவர்களுக்கு, அதன் பொருளைப் படித்தாலும் அதே பலன் உண்டல்லவா?//
      நிஜமாலுமோ? இது எனக்குத்தெரியாதே....

      நீக்கு
  7. ஓ... ராஜேஸ்வரி மேடத்துக்கான அஞ்சலிப் பதிவா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ... ராஜேஸ்வரி மேடத்துக்கான அஞ்சலிப் பதிவா....//

      அப்பூடின்னும் வச்சுக்கலாம் நெல்லைத்தமிழன்:).

      நீக்கு
  8. திருமதி .இராஜராஜேஸ்வரி அர்களை மறக்க முடியுமா?
    தினம் பதிவுகள் போட்டு அந்த நாளின் சிறப்பைக் கூறி அந்த நாளை நன்னாள் ஆக்குவார்.
    அவருக்கு என் வணக்கங்கள்.
    என்றும் வாழ்வார் அவர் பதிவுகள் மூலம். மனதில் என்றும் இருப்பார் நீங்காமல்.

    பதிலளிநீக்கு
  9. http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html

    மேற்படி இணைப்பினில்,
    சமீபத்தில் ஒரு வாரம் முன்பு காலமான நம் இனிய நண்பர்
    திரு. தி.தமிழ் இளங்கோ அவர்கள்,
    பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் படத்துடன்,
    அவர்களின் மறைவு பற்றிய ’கண்ணீர் அஞ்சலி’ யை வெளியிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  10. மூக பஞ்ச சததி பற்றி அறிந்துகொண்டேன் . நன்றி .

    பதிலளிநீக்கு
  11. நம்மைவிட்டுச் சென்றவரை நினைவுகூர்ந்த விதம் நெகிழ வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  12. 16.10.1950 இல் பிறந்தவரும்,

    ’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று

    வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும்,

    வலையுலக மூத்த பதிவருமான

    ’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள்

    16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

    என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.

    அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

    அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(

    அவருடனான என் சந்திப்பு பற்றி என் வலைத்தளத்தில் அடியேன் படங்களுடன் எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றிற்கான இணைப்புகள் இதோ:

    https://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html

    https://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

    பதிலளிநீக்கு